Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் : கிளிங்டன்

Featured Replies

2009 இல் பெரும் விடுதலை கிடைத்துவிட்டது .(தமிழனை தமிழன் எதிரியாக பார்த்த ).அவர்கள் இருந்தால் எதுவும் இல்லை அவர்கள் பெருமை பாடுவதை தவிர .அதுவும் ஒட்ட முடித்தது எவராலும் நினைக்க முடியாதது .

இந்த வாரம் வீரமக்கள் தினம் வவுனியாவில் நடக்குது சரியோ பிழையோ அனைவரும் அஞ்சலியில் நிற்கின்றார்கள் .அதுதான் தமிழனுக்கு முதல் தேவை .

மற்றதுகள் இனி கால போக்கில கனியும் .

டக்கி என்ன விக்கியை போட நிற்கின்றாரா?. தோற்றால் தோற்றுவிட்டு போறார் .

புலிகள் இருந்தால் தேர்தலுக்கு முதலே விக்கிக்கு அவர் பொட்டில் ஒரு பொட்டு.புலம் பெயர்ந்தவர்களுக்கு விக்கியை யாரென்றே  தெரியாமல் விசில் அடிக்க ஒரே திருவிழா தான் .

இருபது வருடமா திருவிழா தானே பார்த்தோம் .

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த இருவது வருடத்துக்கு கொஞ்சப் பேரின் திருவிழா தயாராகுகிறது என்பது மட்டும் வெள்ளிடைமலை.பார்க்கலாம்.
எப்போ தமிழருக்கு எதுவும் எடுத்து கொடுக்க லாயக்கில்லையோ அது இப்போதும் லாயக்கில்லாதவர்கள் என்ற அர்த்தத்தையே தொடர்ந்து கொண்டிருக்கும்.அதாவது ஊரில்  உழாத மாடு என்று தொடங்கும் பழமொழி இவர்களுக்கு சாலவே பொருந்தும்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல தொடர் பகிர்விற்கு நன்றி 

அந்த காலத்தில் உத்தரபிரதேச பயிற்சியை up training என்று சொல்வார்கள்.
TELO இல்தான் அங்கு பயிற்சி எடுத்தவர்கள் இருந்தார்கள்.
சாவகச்சேரி போலிஸ் நிலைய தாக்குதல்,புகையிரதம் மீதான தாக்குதலின் பின்னணியில் அவர்கள்தான் இருந்திருக்கவேண்டும். 
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு டெலோ இயக்கத்தைப் பற்றி அதிகம் தெரியாது. முதன் முதலில் தெரியவேண்டி வந்தது, என்னுடைய பாடசாலையில் (பத்திரிசியார் கல்லூரி) படித்த கத்தோலிக்கரான ஏ.பி என்பவர் டெலோ இயக்கத்தில் இணைந்துகொண்டபோதுதான். அவர் இணைந்த சிறு நாட்களில் கோண்டாவில் அன்னங்கை ஒழுங்கையில் லதா தியெட்டருக்கு கொஞ்சம் தள்ளியிருக்கும் மைதானத்திற்குப் பின்னாலிருந்த அவர் வீட்டிற்கு சிறீ சபாரத்தினமும் அவரது மெய்ப்பாதுகாவலர்களும் ஒருமுறை வந்திருந்தார்கள். இயந்திரத் துப்பாக்கிகள் சகிதம் பிக்கப் வாகனங்களில் வந்திருந்த அவர்களைப் பார்க்க கோண்டாவில் சனம் முழுவதும் அந்தச் சிறிய வீட்டினுள் அடைந்து இருந்தது இன்னும் நினைவிலிருக்கிறது. சிறி அவர்களின் சிரித்துக்கொண்டே பேசியதும்  நினைவிலிருக்கிறது.

அதற்குப்பிறகு ஒரு வருடம் இருக்கும் என்று நினைக்கிறேன், பாடசாலை முடிந்து டெம்பிள் ரோட்டால நல்லூர்க் கோயிலருகில் வரும்போது அது நடந்தது. நானும், தம்பியும், இன்னும் எனது இரு நண்பர்களும் கோயில் மணலில் சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்துகொண்டிருந்தோம், பருத்தித்துறை வீதியில், கல்வியங்காட்டுப் பக்கமிருந்து கடும் வெடிச் சத்தத்துடன் சில வாகனங்கள் யாழ்ப்பாணம் நோக்கி வெகு வேகமாக வந்துகொண்டிருந்தன. யார் சுடுகிறார்கள், எதற்குச் சுடுகிறார்கள் என்று கூடத் தெரிய முதல் நாங்கள் எல்லோரும் மணலில் விழுந்து படுத்தோம். விரைந்து சென்ற வாகனங்களில் இருந்து காயப்பட்டவர்களைக் கொண்டுபோவது தெரிந்தது. கூடச் சென்றவர்கள் சகட்டுமேனிக்குச் சுட்டுக் கொண்டு சென்றார்கள். வீதியில் போனோர்பற்றி அவர்கள் கவலைப் படவில்லை. பின்னர் அவர்கள் டெலோ இயக்கத்தின் ஒரு பிரிவினர் என்று தெரிய வந்தது. 

கடைசியாக அவர்கள் பற்றி அறிந்துகொண்டது புலிகள் அவர்களை தாக்கியபோது. கோண்டாவில் டிப்போவிற்கு முன்னால் கிட்டுவும் அவரது போராளிகளும் வாகனங்களில் வந்திறங்கி நிற்கிறார்கள். அன்னங்கை ஒழுங்கையில் அவர்கள் வாகனம் நிற்க, சுற்றிவரச் சனம் நிற்கிறது. கைய்யில் வாக்கி டோக்கீயுடன் கிட்டு, அவரைச் சுற்றி இயந்திரத் துப்பாக்கிகளுடன் போராளிகள். ஏன் நிற்கிறார்கள் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அப்படியே வீடு வந்தேன். இராணுவம் ஈடுபாடாத ஒரு சண்டையில் தமிழர்கள் அடிபட்டுச் சாக வானிலிருந்து இரு பகுதி நோக்கியும் சிங்களம் தாக்குதல் நடத்தியது. சரியாகச் சொல்லத் தெரியவில்லை, இருபாலை அல்லது கல்வியங்காட்டுப் பகுதி என்றி நினைக்கிறேன். அப்பகுதி நோக்கித்தான் ஹெலி சுற்றிச் சுற்றித் தாக்கியது. அன்றிரவு மீண்டும் மிக அருகில் இயந்திரத் துப்பாக்கிச் சத்தம். காலையில் சிறியைச் சுட்டுவிட்டார்கள் என்று கேள்விப்பட்டதும், ஏனோ அவரது அந்த சிரித்த முகம் மனத்திரையில் வந்துபோனது. கூடவே கிட்டு ஏன் அன்று பின்னேரம் அங்கு வந்திருந்தார் என்பதும் தெளிவாகியது. சிறியண்ணா பாவம் என்று நினைத்துக்கொண்டேன்.

எந்த இயக்கம் சரி, எந்த இயக்கம் பிழை என்று தெரியாத வயது அது. அவர்கள் அடித்துக்கொண்டது கவலையாக இருந்தது. பின்னர், இவர்கள்தான் நாம் பின்பற்ற வேண்டிய இயக்கத்தவர்கள் என்று பல வழிகளால் வந்த விவரங்களையடுத்து புலிகளை பின்பற்றத் தொடங்கினேன். என்னைப் போலவே பல தமிழரும் அவர்களை பின்பற்றினார்கள், நேசித்தார்கள். அதன்பிறகு அவர்கள் செய்தவற்றை நானும் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் நியாயப்படுத்தவும் தொடங்கினேன். சிலவேளைகளில் சில விடயங்கள் தவறென்று தெரிந்தும், தெரிந்தே நியாயப்படுத்தினேன். அப்போதெல்லாம் எனக்கு நானே சொல்லிக்கொண்டது, எனது விமர்சனங்கள் அவர்களையும், அவர்களுடன் இணைந்த எமது விடுதலைப் போராட்டத்தையும் பலவீனமாக்கிவிடும் என்பதே. இது ஒரு சாட்டுத்தான், உண்மையாக இருக்கவேண்டுமென்பதில்லை. ஆனால் ஒன்றுமட்டும் உண்மையென்று தெரிந்தது, புலிகள் சில தவறுகளைச் செய்திருந்தாலும் கூட அவர்களின் இலட்சியம் தமிழருக்கான விடுதலை என்பதாகவே இருந்தது. அதனால் இன்றும் அவர்களை ஆதரிக்கிறேன், நேசிக்கிறேன். அவர்கள் செய்த தியாகங்களை மதிக்கிறேன்.

சிலவேளை, அன்று புலிகள் இருந்த இடத்தில் டெலோவோ அல்லது புளொட்டோ இருந்திருந்தால்க் கூட இதுவே நடந்திருக்கும். மக்களின் ஆதரவு இருக்கும் எவரும், எந்த அமைப்பும் இறுதிவரை அவர்களுடன் வாழும் என்பது. 

தியாகிகள் தினமோ, வீர மக்கள் தினமோ மக்களால் நடத்தப்படுவதில்லை. முன்னால் உறுப்பினர்களால் நடத்தப்படும் ஒரு ஒன்றுகூடல். நிகழ்விற்கு வந்திருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையே இதற்குச் சாட்சி. ஆனால், மாவீரர் நாள் என்று ஒன்று இருக்கிறது. அங்கே முன்னால் உறுப்பினர்களோ, போராளிகளோ வருவதில்லை. வருபவர்கள் அனைவரும் அவர்களை நேசித்த மக்கள். ஒன்று இரண்டு என்றில்லாமல் பல்லாயிரக்கணக்கில் குவிகிறார்கள். இது ஒன்றே போதும், மக்கள் யாரை நேசித்தார்கள் என்பதற்கு.

புலிகளை விமர்சிக்கும் எவரும், மக்களுக்காக அவர்களோ அல்லது அவர்களது இயக்கமோ என்ன செய்தது, அல்லது ஏன் தொடர்ந்தும் மக்களுடன் இருக்கமுடியாமல் அந்நியப்பட்டுப் போனார்கள் என்பதை ஒருமுறை சிந்தித்துப் பார்க்கட்டும். வெறுமனே புலிகளைக் குற்றஞ் சாட்டாமால் உண்மையாகவே மக்கள் தங்களை நேசித்தார்களா என்பதை தங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

 இவர்கள்தான் நாம் பின்பற்ற வேண்டிய இயக்கத்தவர்கள் என்று பல வழிகளால் வந்த விவரங்களையடுத்து புலிகளை பின்பற்றத் தொடங்கினேன். என்னைப் போலவே பல தமிழரும் அவர்களை பின்பற்றினார்கள், நேசித்தார்கள். அதன்பிறகு அவர்கள் செய்தவற்றை நானும் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் நியாயப்படுத்தவும் தொடங்கினேன். சிலவேளைகளில் சில விடயங்கள் தவறென்று தெரிந்தும், தெரிந்தே நியாயப்படுத்தினேன். அப்போதெல்லாம் எனக்கு நானே சொல்லிக்கொண்டது, எனது விமர்சனங்கள் அவர்களையும், அவர்களுடன் இணைந்த எமது விடுதலைப் போராட்டத்தையும் பலவீனமாக்கிவிடும் என்பதே. இது ஒரு சாட்டுத்தான், உண்மையாக இருக்கவேண்டுமென்பதில்லை. ஆனால் ஒன்றுமட்டும் உண்மையென்று தெரிந்தது, புலிகள் சில தவறுகளைச் செய்திருந்தாலும் கூட அவர்களின் இலட்சியம் தமிழருக்கான விடுதலை என்பதாகவே இருந்தது. அதனால் இன்றும் அவர்களை ஆதரிக்கிறேன், நேசிக்கிறேன். அவர்கள் செய்த தியாகங்களை மதிக்கிறேன்.

சிலவேளை, அன்று புலிகள் இருந்த இடத்தில் டெலோவோ அல்லது புளொட்டோ இருந்திருந்தால்க் கூட இதுவே நடந்திருக்கும். மக்களின் ஆதரவு இருக்கும் எவரும், எந்த அமைப்பும் இறுதிவரை அவர்களுடன் வாழும் என்பது. 

தியாகிகள் தினமோ, வீர மக்கள் தினமோ மக்களால் நடத்தப்படுவதில்லை. முன்னால் உறுப்பினர்களால் நடத்தப்படும் ஒரு ஒன்றுகூடல். நிகழ்விற்கு வந்திருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையே இதற்குச் சாட்சி. ஆனால், மாவீரர் நாள் என்று ஒன்று இருக்கிறது. அங்கே முன்னால் உறுப்பினர்களோ, போராளிகளோ வருவதில்லை. வருபவர்கள் அனைவரும் அவர்களை நேசித்த மக்கள். ஒன்று இரண்டு என்றில்லாமல் பல்லாயிரக்கணக்கில் குவிகிறார்கள். இது ஒன்றே போதும், மக்கள் யாரை நேசித்தார்கள் என்பதற்கு.

புலிகளை விமர்சிக்கும் எவரும், மக்களுக்காக அவர்களோ அல்லது அவர்களது இயக்கமோ என்ன செய்தது, அல்லது ஏன் தொடர்ந்தும் மக்களுடன் இருக்கமுடியாமல் அந்நியப்பட்டுப் போனார்கள் என்பதை ஒருமுறை சிந்தித்துப் பார்க்கட்டும். வெறுமனே புலிகளைக் குற்றஞ் சாட்டாமால் உண்மையாகவே மக்கள் தங்களை நேசித்தார்களா என்பதை தங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும். 

100  வீதம்  எனது நிலைப்பாடும் இது தான்

நன்றி  ரகு............

ஜே ஆர் ,பிரேமதசாச,சந்திரிகா ,ரணில் ஆகியோரால் அடக்கமுடியாத பயங்கரவாத போராட்டத்தை அடக்கிய மாபெரும் தலைவன் ராஜபக்சா என்று அவன் பின்னால் சிங்களமக்கள் நிற்கின்றார்கள் .

போர்குற்றம் ,தமிழர்களுக்கு செய்த அநியாயங்கள் எல்லாம் மறந்து தனிப்பெரும் தலைவராக அப்ப அவரை ஏற்றுக்கொள்ளுங்கள் .

மக்கள் யாருக்கு பின்னால் நிற்கின்றார்கள் என்று சிறு பிள்ளைத்தனமாக சிந்திக்க கூடாது .கருணாநிதி அப்ப வை கோ வை விட நல்லவரா.

அப்படிப்பார்த்தால்  உலகின் மாபெரும்  அராஜவாதிகளுக்கு எல்லாம் உது பொருந்தும் .இன்று சர்வதேசத்தில் கிட்லர் ,பொல்பொட்,வரிசையில் தான் பிரபாகரனுக்கு இடமே ஒழிய சேகுவார ,மண்டேலா வரிசையில் அல்ல .

இரண்டு வருடங்களுடன் தமது ஆயுளை முடித்த வழியில்லாமல் அரசுடன் ஒட்டிய மற்ற இயக்கங்களையும் இருபது வருட வரலாற்று உள்ள புலிகளையும் ஒப்பிடுவதே தவறு .அதிலும் அந்த இருபது வருடங்களும் மாற்று கருத்தாளர்களை வசை பாடியதிலேயே புலிகளின் காலம் போனது .புலம் பெயர்ந்தவன், நாட்டைவிட்டு ஓடிவந்து தனது சுயநலத்திற்கு ஓடுன குதிரைக்கு பணம் கட்டியவன் .இன்று நடக்கும் நிகழ்வுகள் அதற்கான சாட்சி .

போராட்டம் சரியாக நடந்ததா ? மக்களுக்கு விடுதலை கிடைத்ததா ? ஏதும்  உரிமைகள் தானும் கிடைத்ததா ?சர்வதேச அங்கீகாரம் ஏதும் ?

எதுவுமில்லாமல் பயங்கரவாத பட்டதுடன் தாங்களும் அழிந்து மக்களையும் அழித்தவர்களை புலம்பெயர் வியாபாரிகள் தமது வியாபாரம் தொடர ஆடும் கூத்துக்களை எல்லாம் கணக்கில் வைத்து பார்த்தால் புலிகள் மக்கள் சக்திதான் .

பாவங்கள்  நாட்டில் தான் நினைவு கூர யாரும் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

யாராலும் அடக்கமுடியாத பயங்கரவாதத்தை அடக்கினான் என்று சிங்களவர்கள் சொல்வது இருக்கட்டும், நீங்களும் அப்படித்தானே சொல்லுகிறீர்கள். அவரை நாங்கள் ஏற்றுக்கொள்வதை விட நீங்கள் ஏற்றுக்கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் புலிகள் சிங்களவர்களுக்கும் உங்களுக்கும் மட்டுமே பயங்கரவாதிகள். 

மகிந்தவைப் போலவே ஹிட்லர், பொல்பொட், சேர்பியாவின் மிலோசொவிச், சதாம்  என்று பலர் இருந்தார்கள். ஆனால் இறுதியில் அந்த மக்களே அவர்களைத் தூக்கியெற்நிது காட்டிக் கொடுத்தார்கள். அதேபோல மகிந்தவுக்கும் நடக்கும், சிங்களவர்களே அவனைத் தூக்கியெறிவார்கள்.

வேறு வழியில்லாமல் அரசுடன் ஒட்டிக்கொண்டீர்களா?? எந்த அரசுடன் என்று சொல்லுங்கள். இலங்கையுடனா, இந்தியாவுடனா அல்லது மாலைதீவுடனா?? சரி, அன்றைக்கு ஒட்டிக்கொண்டீர்கள், இன்னுமேன் ஒட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?? யாருக்குப் பயந்து?

2 வருடத்தில் அப்படி என்ன நடந்தது? ஏன் புலிகளும் உங்களைப்போல அழிந்து போய், ஒழிந்துபோய் யாருக்காவது பயந்து அரசுகளுடன் ஒட்டிக்கொள்ளவில்லை??? உங்களுக்கு அவர்களுக்கும் இடையில் இருந்த வேறுபாடு என்ன?? எப்போதாவது அந்த வேறுபாடு என்னவாகத்தானிருக்கும் என்று யோசித்ததுண்டா??

குதிரை ஓடியபோது பணம் கட்டியவன் வந்தான், சரி. குதிரை இல்லாதபோது வருகிறார்களே, அது ஏனென்று எண்ணிப்பார்த்ததுண்டா??

புலிகள் போராட்டம் இதுவரை செய்தது என்னவென்று கேட்கிறீர்கள்?? அவர்களை எப்போது செய்யவிட்டீர்கள் நீங்கள். மாற்றுக்கருத்துப்பேசியேஅழித்தீர்களே?? ஒரு போராட்டத்தின் ஒரு வடிவம் அழிக்கப்பட்டால் அந்தப் போராட்டமே  தவறென்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள்?? அப்படியானால் நீங்கள் எந்தத் துணிவில் புளொட்டில் இணைந்தீர்கள்?மோ...நீங்கள் இணைந்தது மாலைதீவில் உள்ள மக்களுக்காக அல்லவா, நான் எங்கே தமிழ் மக்களுக்காகவோ என்று எண்ணிவிட்டேன். 

நீங்கள் சொல்லும் சர்வதேச அங்கீகாரத்தின்படி பார்த்தால் சிங்கள அரசைக் கூட அது சரியென்றுதானே சொல்கிறது, நீங்களும் அதை சரியென்கிறீர்களா??? சர்வதேச அபிப்பிராயம் என்பது எது ?? சிரியாவில் ஐயோ கொல்கிறான் குவிக்கிறான் என்று கூவிக்கொண்டே இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு பணமும் ஆயுதமும் கொடுத்து சிரிய அரசுக்கு நிகராக போர்க்குற்றம் செய்யத் தூண்டுகிறதே, அதுவா சர்வதேச அங்கீகாரம் ??

பயங்கரவாதப் பட்டம் கொடுத்தது உங்களைப் போன்ற ஒரு துரோகி ஆரம்பத்தில் செய்த வேலையால்த்தான்.அந்தப் பட்டத்தைக் கொடுத்தவர்கள் கூட உலகின் மிகப்பெரிய பயங்கரவாதிகள்தான். மக்களை 2009 இல் அழித்ததும், போராட்டத்தை அழித்ததும் அவர்கள்தான். அவர்களுடன் உங்கள் போன்றவர்களும்தான். நீங்கள் எங்கள் இனத்தின் சாபக்கேடு !!

நீங்களே கொன்ற உங்கள் தலைவருக்கு நீங்களே வீர மக்கள் தினம் நிகழ்த்தும் கொள்கைக் குன்றுகள் நீங்கள் !!! உங்களுக்குப் புலிகள் பயங்கரவாதிகளாகத் தெரிந்ததும் வியப்பில்லை. 

அதுசரி, 1981 இலேயே ஊரை விட்டு ஓடி அசைலம் அடிச்ச நீங்களெல்லாம் அரசியல் கதைக்க வெளிக்கிட்டால் நல்லாத்தானிருக்கும். 

"புலிகளை விமர்சிக்கும் எவரும், மக்களுக்காக அவர்களோ அல்லது அவர்களது இயக்கமோ என்ன செய்தது, அல்லது ஏன் தொடர்ந்தும் மக்களுடன் இருக்கமுடியாமல் அந்நியப்பட்டுப் போனார்கள் என்பதை ஒருமுறை சிந்தித்துப் பார்க்கட்டும். வெறுமனே புலிகளைக் குற்றஞ் சாட்டாமால் உண்மையாகவே மக்கள் தங்களை நேசித்தார்களா என்பதை தங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும்."

ஏன் தொடர்ந்தும் மக்களுடன் இருக்க முடியாமல் அன்னியபட்டு போனார்கள்?

ஏன் இப்போது மக்களோடு மக்களாக நிற்காமல் நாட்டை விட்டு ஓடுகின்றிர்கள் அல்லது அரசுடன் சேர்கின்றிர்கள் என்று முன்னாள் புலி போராளிகளை பார்த்து இதே கேள்வியை முன் வையுங்கள் .

மாற்று ஆயுத இயக்கங்கள் மட்டுமல்ல மாற்று கருத்து கொண்டவர்கள் அனைவரையுமே வேட்டை நாய்கள் மாதிரி துரத்தி துரத்தி வேட்டை ஆடினார்கள் .எத்தனை வதை முகாம்கள் வைத்திருந்தார்கள் தெரியுமா ? அவ்வளவு காலமும் மௌனமாக இருந்ததற்கும் அதற்கு சிஞ்சிஞ்ச்சா போட்டதற்குமான விளைவைத்தான் இன்று அனைவரும் அனுபவிக்கின்றார்கள் .

பிரச்சனை என்றவுடன் பெற்றோர் ,உற்றம் சுற்றம் கல்வி அனைத்தும் துறந்து ஆயுதம் தூக்கி போராட போன  அப்பாவி  இளைஞர்களை நடுவிதியில் வைத்து டயர் போட்டு கொழுத்த வேடிக்கை பார்த்த இனம் இன்னமும் அனுபவிக்க பல இருக்கு .

செல்வியை பிடித்துக்கொண்டு போனதையே நியாயாபடுத்திய புலம் பெயர் போக்கிலிகள் நாட்டில் காலடிவைக்க முடியாத விலைதான் நாம் வேண்டுவது .

அதுவே நடக்கவும் போகின்றது .

Edited by arjun

ஜே ஆர் ,பிரேமதசாச,சந்திரிகா ,ரணில் ஆகியோரால் அடக்கமுடியாத பயங்கரவாத போராட்டத்தை அடக்கிய மாபெரும் தலைவன் ராஜபக்சா என்று அவன் பின்னால் சிங்களமக்கள் நிற்கின்றார்கள் .

போர்குற்றம் ,தமிழர்களுக்கு செய்த அநியாயங்கள் எல்லாம் மறந்து தனிப்பெரும் தலைவராக அப்ப அவரை ஏற்றுக்கொள்ளுங்கள் .

அவரை ஏற்றுக்கொள்ள இல்லை எண்று யார் சொன்னது....??   சிங்கள மக்களின் கதாநாயகன் இராஜபக்ஸ....  

தெளிவில்லாமல் உளறுவது நீங்கள் தான்...  

தமிழ் மக்கள் இராஜபக்சவை ஆதரிக்க வேண்டும் எண்று உளறுவது  அரை குறைத்தனம்...   முதலிலை புலிக்காசலுக்கு மருந்து எடுங்கோ... 

"புலிகளை விமர்சிக்கும் எவரும், மக்களுக்காக அவர்களோ அல்லது அவர்களது இயக்கமோ என்ன செய்தது, அல்லது ஏன் தொடர்ந்தும் மக்களுடன் இருக்கமுடியாமல் அந்நியப்பட்டுப் போனார்கள் என்பதை ஒருமுறை சிந்தித்துப் பார்க்கட்டும். வெறுமனே புலிகளைக் குற்றஞ் சாட்டாமால் உண்மையாகவே மக்கள் தங்களை நேசித்தார்களா என்பதை தங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும்."

ஏன் தொடர்ந்தும் மக்களுடன் இருக்க முடியாமல் அன்னியபட்டு போனார்கள்?

புலிகளின் வீரச்சாவடைந்த உறுப்பினர்கள் 40 ஆயிரத்துக்கும் மேல்... இதை முதலில் ஞாபகத்தில் வைத்து பேசுங்கள்... விலகியவர்கள் கைது செய்யப்பட்டவர்கள்... இன்னும் சில ஆயிரங்கள்... ஆயிரம் உறுப்பினர் என்பது ஆயிரக்கணக்கான குடும்பங்கள்... ஆதரவே கொடுக்காமல் தான் போய் புலிகளில் இணைதார்களா...??

முதலிலை உங்கள போட்டி இயக்க மனப்பான்மையை கழட்டி போட்டு நிதர்சனத்துக்கு வாங்கோ... புலிக்காச்சலில் உளறாதீர்கள்...

ஏன் இப்போது மக்களோடு மக்களாக நிற்காமல் நாட்டை விட்டு ஓடுகின்றிர்கள் அல்லது அரசுடன் சேர்கின்றிர்கள் என்று முன்னாள் புலி போராளிகளை பார்த்து இதே கேள்வியை முன் வையுங்கள் .

அவர்களுக்கு சரியாக ஒரு தலைமை கிடைக்காமல் அப்படி செய்கிறார்கள்... ஏன் நீங்கள் எல்லாம் என்ன செய்தீர்கள் ஓடி போய் இந்தியாவின் நிண்டவர்கள் எப்போது ஊர் போய் மக்களோடு நிண்றீர்கள்...??

இராணுவத்தோடோ, அரசோடோ சேராமல் புலிகள் உறுப்பினர்கள் அங்கே இல்லை என்பது பொய்... கொஞ்சம் அறிவை பாவித்தால் அது புரிபடும்... சில விகிதமானவர்கள் இணைந்து இருப்பதை ஒட்டு மொத்தம் புலிகளும் என்பது சரியா என்று புரிபடும்...

மாற்று ஆயுத இயக்கங்கள் மட்டுமல்ல மாற்று கருத்து கொண்டவர்கள் அனைவரையுமே வேட்டை நாய்கள் மாதிரி துரத்தி துரத்தி வேட்டை ஆடினார்கள் .எத்தனை வதை முகாம்கள் வைத்திருந்தார்கள் தெரியுமா ? அவ்வளவு காலமும் மௌனமாக இருந்ததற்கும் அதற்கு சிஞ்சிஞ்ச்சா போட்டதற்குமான விளைவைத்தான் இன்று அனைவரும் அனுபவிக்கின்றார்கள் .

பிரச்சனை என்றவுடன் பெற்றோர் ,உற்றம் சுற்றம் கல்வி அனைத்தும் துறந்து ஆயுதம் தூக்கி போராட போன  அப்பாவி  இளைஞர்களை நடுவிதியில் வைத்து டயர் போட்டு கொழுத்த வேடிக்கை பார்த்த இனம் இன்னமும் அனுபவிக்க பல இருக்கு .

செல்வியை பிடித்துக்கொண்டு போனதையே நியாயாபடுத்திய புலம் பெயர் போக்கிலிகள் நாட்டில் காலடிவைக்க முடியாத விலைதான் நாம் வேண்டுவது .

அதுவே நடக்கவும் போகின்றது .

மாற்று கருத்து கொண்டவர்கள் ஆயுதங்களை வைத்து மிரட்டாமல் அரசியல் மட்டும் செய்திருந்தால் புலிகள் கைவைத்து இருக்க வேண்டி இருக்காது...

இப்போதும் சொல்கிறேன்... புலிகளின் உறுப்பினர்களின் பாதுக்காப்புக்கு பிரபாகரனே பொறுப்பு.. அப்படி ஒரு பாதுகாப்பை குடுக்க முடியாத பிரபாகரன் பின்னால் எந்த போராளியும் நிண்று இருந்து இருக்க மாட்டான்...

எனக்கு நல்ல ஞாபகத்தில் இருக்கிறது கொழும்புத்துறை மணியம் தோட்டத்தில் வைத்து ஒரு அரசியல் வகுப்பில் 1991ல் யோகி அண்ணை சொன்ன தகவல்கள்...

TELO வை புலிகள் தாக்க முன்னர் TELO இரண்டாக பிரிந்து பலவீனமாகி விட்டது... அப்போதைய TELO வில் 800 பேர் யாழ்மாவட்டத்தில் இருந்து இருப்பார்கள்... ஆனால் புலிகளின் யாழ்மாவட்ட உறுப்பினர்கள் கிட்டண்ணா உட்பட 46 பேர்... இந்திய இராணுவம் வரும் போது கொஞ்சம் பலமாக இருந்த புலிகளில் 640 போராளிகள் இருந்தார்கள்... அதில் இந்திய இராணுவத்தோடு சண்டை பிடிக்க விரும்பாதவர்கள் வீட்டை போகலாம் எண்று தலைவர் சொன்ன போது யாழ் பல்கலைக்களகத்தில் வைத்து பிரிந்து போனவர்கள் கிட்டத்தட்ட 200...

இரண்டு வருடங்களில் இந்திய இராணுவம் போகும் போது புலிகளின் மாவீரர் எண்ணிக்கை இதே 640 பேர்... புலிகளின் எண்ணிக்கை 14 ஆயிரம்... யாழ்மாவட்டத்தில் மட்டும் 5000 பேர்..

இந்த புலிகளை தான் மக்கள் ஆதரிக்கவில்லை என்கிறீர்களா...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் வீரச்சாவடைந்த உறுப்பினர்கள் 40 ஆயிரத்துக்கும் மேல்... இதை முதலில் ஞாபகத்தில் வைத்து பேசுங்கள்... விலகியவர்கள் கைது செய்யப்பட்டவர்கள்... இன்னும் சில ஆயிரங்கள்... ஆயிரம் உறுப்பினர் என்பது ஆயிரக்கணக்கான குடும்பங்கள்... ஆதரவே கொடுக்காமல் தான் போய் புலிகளில் இணைதார்களா...??

முதலிலை உங்கள போட்டி இயக்க மனப்பான்மையை கழட்டி போட்டு நிதர்சனத்துக்கு வாங்கோ... புலிக்காச்சலில் உளறாதீர்கள்...

அவர்களுக்கு சரியாக ஒரு தலைமை கிடைக்காமல் அப்படி செய்கிறார்கள்... ஏன் நீங்கள் எல்லாம் என்ன செய்தீர்கள் ஓடி போய் இந்தியாவின் நிண்டவர்கள் எப்போது ஊர் போய் மக்களோடு நிண்றீர்கள்...??

இராணுவத்தோடோ, அரசோடோ சேராமல் புலிகள் உறுப்பினர்கள் அங்கே இல்லை என்பது பொய்... கொஞ்சம் அறிவை பாவித்தால் அது புரிபடும்... சில விகிதமானவர்கள் இணைந்து இருப்பதை ஒட்டு மொத்தம் புலிகளும் என்பது சரியா என்று புரிபடும்...

மாற்று கருத்து கொண்டவர்கள் ஆயுதங்களை வைத்து மிரட்டாமல் அரசியல் மட்டும் செய்திருந்தால் புலிகள் கைவைத்து இருக்க வேண்டி இருக்காது...

இப்போதும் சொல்கிறேன்... புலிகளின் உறுப்பினர்களின் பாதுக்காப்புக்கு பிரபாகரனே பொறுப்பு.. அப்படி ஒரு பாதுகாப்பை குடுக்க முடியாத பிரபாகரன் பின்னால் எந்த போராளியும் நிண்று இருந்து இருக்க மாட்டான்...

அவருக்கு ஒரு இனத்தை அழித்தாலும்

ஒரு செல்வியின் கொலைக்கு பழி  வாங்கணும் என்ற தாகம்

எமக்கு 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகள் 

லட்சக்கணக்கான மக்கள்

கோடிக்கணக்கான  சொத்துக்களின் இழப்புக்கு ஏதாவது பெற்று அந்த மக்களை நிம்மதியாக வாழ வைக்கணும் என்ற தாகம்

இவை இரண்டுக்குமான இடைவெளி  மிகமிக  அதிகம்

ஒட்டாது. :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.