Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒப்புக்கொண்டமை அரசாங்கத்தின் பிழையாகும்:ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Wickramasinghe.jpg

2006 ஆம் ஆண்டு மனித உரிமை பேரவையை வரவேற்றமை அதற்கு மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான அதிகாரங்களை வழங்க ஒப்புக்கொண்டமை மற்றும் நாட்டில் மனித உரிமைகளை பேணுவது தொடர்பாக பொறுப்பேற்றமை ஆகியவை இந்த அரசாங்கம் செய்த பிழைகளாகும் என்று எதிர்க்கட்சியின் தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டினார்.

2007 ஆம் ஆண்டு யூன் மாதம் மனித உரிமை பேரவையை உருவாக்குவது தொடர்பான தீர்மானம், 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி 60ஃ25 தீர்மானத்தை ஏற்றுக்கொண்டமை மற்றும் மனித உரிரைகளை பாதுகாப்பதில் அரச சார்பற்ற நிறுவனங்களின் வகிபாகத்தை அதிகரித்தமை போன்ற அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாகவே இவ்வருடம் மனித உரிமை அமர்வில் நாடு ஆபத்தான நிலைமைக்கு முகம்கொடுக்கவேண்டியுள்ளது என்றும் அவர் சொன்னார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் கட்சி செயற்பாட்டாளர்கள் முன்னிலையில் இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொருளாதார,சமூக, கலாச்சார அல்லது மனிதாபிமான மற்றும் உரிமைகள் போன்ற சர்வதேச பிரச்சினைகளை மொழி,சமய வேறுபாடின்றி தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டதை அரசாங்கம் அங்கீகரித்தள்ளது என்றும் அவர் கூறினார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60158-2013-03-06-14-58-16.html

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி.. இதுதான் சிங்களவனின் குணம்..

இவரை மனித உரிமைகளை விசாரிப்பார் என்று நம்பி அமெரிக்கா இலங்கையில்  பதவி மாற்றம் கொண்டுவர முயலக்கூடாது. அமெரிக்கா 65 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழரின் குடி உரிமைகளை பறித்து  அவர்களை இன்றைய நிலைகு தள்ளீயது UNP அரசு மட்டும்தான் என்பதை சரித்திரத்திலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஏன் வல்லிபுரக்கோவிலுக்கு போனீர்கள்,தெல்லிப்பளையில் உண்ணாவிரதம் இருந்தியள்....எதிர்கட்சிகளின் கூட்டணியென்று தொடங்கினியள்...போதாக் குறைக்கு சம்பந்தன் அய்யாவிடம் சிங்களக் கொடியை குடுத்தியள்.....எலக்சனிலை வெல்லத்தானே....அதுக்கிள்ளை பொறுக்காமல் ..துவேசம் கொட்டுறியள்.இதைத்தான் சொல்லுறது(சிங்களவன்ரை) நாய் வாலை நிமித்த முடியாதென்று....இப்ப விளங்குதோ...

Edited by alvayan

இரணிலை விட மகிந்தாவை தலைவராக்கியதில் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன :wub:

  • கருத்துக்கள உறவுகள்

குள்ள நரிப் புத்தியுள்ள விக்கிரமசிங்கே எப்படி ஊளையிட்டாலும்

இனியும் ஒருமுறை இவரின் தலைமையின்கீழ் ஐ தே க ஆட்சி அமைக்க முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவைக் காட்டிலும் இவர் நல்லவர் கிடையாது. ஆனால் ஒரே வித்தியாசம் , மகிந்த 2 வருடங்களில் ஒன்றரை லட்சம் பேரைக் கொன்றான். இவரோ இதை  10 வருடங்களில் செய்திருப்பார். ஆனால் முடிவு ஒன்றாகத்தான் இருந்திருக்கும். புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துப் பலவீனப்படுத்தி பின்னர் மகிந்தவின் கைகளில் கொடுத்து, இனவழிப்பைத் தொடக்கி வைத்தவரே இவர்தானே/?

  • கருத்துக்கள உறவுகள்

எம்மீது நம்பிக்கை இல்லாமல் போகும்போது எல்லோர் மீதும் நம்பிக்கை வரும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சாக்கள் நரிகள் என்றால் ரணில் குள்ள நரி மொத்தத்தில் சிங்களவங்கள் எல்லாருக்கும் இனவாத கொள்கையில் எந்த மாறுபாடும் இல்லை என்பதையே இவரின் கருத்து சுட்டிக்காட்டுகின்றது.  

குள்ள நரிப் புத்தியுள்ள விக்கிரமசிங்கே எப்படி ஊளையிட்டாலும்

இனியும் ஒருமுறை இவரின் தலைமையின்கீழ் ஐ தே க ஆட்சி அமைக்க முடியாது

ரணிலை சிங்களவர் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். வாஜ்பாய், புஸ்காலத்தில் அவர்களும் நம்பியது கிடையாது. கடந்த தேர்தலின் போது அமெரிக்கா இவரை நம்பாததால் பொன்சேக்காவுக்கு இடம் எடுத்து கொடுத்தது. இவர் பங்-கி- மூனை சந்தித்தபோது மகிந்தாவிக்கு ஆதரவகாக நடந்து கொள்ளும் மூன் சொன்னது "நிபுணர் அறிக்கை ஐ.நா.வில் எங்காவது தொலைந்து போய்விடும் என்று நினைக்காதே" என்பது. அதாவது இற்றை வரையும் மகிந்தாவை போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து காப்பாற்றி வரும் பான்-கி-மூன் அதை ஐயா சொல்லி தான் செய்வத்தாக நம்பிவிடகூடாது எனப்துதானறிவருக்கு சொன்ன செய்தி. சீனா இவரை கிட்டவும் நம்பாது. சோனியாவிடம் இவர் இதுவரையில் எதையும் சாத்தித்தது கிடையாது. 

ஆனால் எதிர்க்கட்சி த்லைவர் என்ற பெயர் இருக்கும் வரை தமிழ் மக்கள் இவருடன் பழகும் போது இழைக்கயிற்றில் நடப்பதாக எண்ணிக்கொள்ள வேண்டும்.

ரணில் ஏதாவது கதைப்பதற்கு ஒரு துண்டு கிடைத்திருக்கிறது. கதைக்கட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.