Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்

சனி காலை பிரேம்சங்கரிடம் இருந்து போன் “CAN YOU DO ME A FAVOUR ?ஒருக்கா என்னை பிக் பண்ணி பிக்னிக்கில் விட்டுவிட முடியுமா.நான் அப்படியே SCABOROUGH இல் நின்றுவிட்டு கலைவிழாவிற்கு வந்துவிடுகின்றேன்” பிரேம்சங்கர் இருப்பது WESTEND ரிகேசலுக்கு வரும் போதும் அவனை நான்தான் போய் சப்வேயில் பிக் பண்ணுவேன்.சரி கடைசி நாள்தானே என்று அவனை போய் அவனது வீட்டில் ஏற்றிக்கொண்டு பிக்னிக் நடக்கும் MILLIKEN MILLS PARK இல் இறக்கிவிட்டேன் .பிக்னிக்கிலும் பல இந்துக்கல்லூரி மாணவர்கள் இருந்தபடியால் கலைவிழாவில் பிரேம் நடிப்பது பற்றி சொல்லி குடிக்கவிட வேண்டாம் என்று சொல்லிவைத்தேன் .கலைவிழா நடக்கும் இடத்திற்கு கிட்டத்தான் அந்த பார்க்கும் இருந்தது .புறப்படுமுன் பிரேம் பிக்னிக் முடிய போய் தங்கவிருக்கும் அப்பாட்மென்ட் விலாசமும் தொலைபேசி இலக்கத்தையும் வாங்கி வைத்துக்கொண்டேன்.

சரியாக ஐந்து மணிக்கு மண்டபத்திற்கு போனால் ஒரே சருகை சேலை மயம் ஊரில திருவிழாவிற்கு போனது மாதிரி இருந்தது. எமது நாடகம்“வேர்கள்” நாலாவது நிகழ்வாக நேரம் 8.10p.m என்று அழைப்பிதளில் இருந்தது . நாடகம் நடிப்பவர்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள்.கலைவிழா தொடங்கி நடன நிகழ்சி ஒன்று போய்கொண்டிருக்கின்றது.நேரம் எழு மணியை எட்டுகின்றது பிரேமை இன்னமும் காணவில்லை. போன் அடித்தால் எவரும் எடுக்கின்றார்கள் இல்லை .நாடகத்திற்கு நேரம் இருக்கு இருந்தாலும் என்னை போய் பிரேமை ஏற்றிக்கொண்டு வா என அக்கா சொல்லிவிட்டார்.வேம்படி கூட்டத்தை ஒருக்கா மேய்வம் என்றால் அதுக்கும் ஆப்பா என்று புறுபுறுத்தபடி காரை எடுத்துக்கொண்டு பிரேம் தந்த விலாசம் நோக்கி செல்கின்றேன் .

பிரேம் அப்பாட்மென்ட்டின் விலாசம் தந்தானே ஒழிய அப்பாட்மேன்ட் நம்பர் தரவில்லை.எப்படி அவன் இருக்கும் ரூமை கண்டு பிடிப்பது.போன் அடிக்குது எவரும் எடுப்பதாயில்லை .அனேகமாக மண்டபத்திற்கு போய்கொண்டிருப்பான் என்று மனதில் ஒரு நப்பாசை .அவனிடம் கைத்தொலை பேசியும் இல்லை .அவன் மண்டபத்திற்கு போனதும் அக்கா போன் பண்ணுவார்தானே என்ற நம்பிக்கையில் அப்பாட்மேண்டிற்கு கீழேயே காருக்குள் காத்துக்கொண்டுஇருக்கின்றேன்.எந்த வித அசுமாத்தத்தையும் காணவில்லை.பொறுமை இழந்து அக்காவிற்கு போன் பண்ண “எனக்கு தெரியாது நீ எப்படியும் பிரேமை கூட்டிக்கொண்டு வரவேண்டும் என்று விட்டு போனை வைத்துவிட்டார்..நான் மதுசிறிக்கு போன் பண்ணி பிரேம் பிக்னிக்கு போன விஷயத்தை சொல்லி தற்செயலாக நான் வர பிந்தினால் நாடக நேரத்தை பின் தள்ள முடியுமா என கேட்டேன் .மதுசிறி தான் வேம்படி பழையமாணவர் நிகழ்சி பொறுப்பாளர். சரி எப்படியும் ஆளை கொண்டுவந்து சேரும் என்று சொல்லிவிட்டார் .நானோ பிரேமின் தொலைப்பேசிக்கு திரும்ப திரும்ப அடித்துக்கொண்டே இருக்கின்றேன் .நேரம் எட்டை தாண்டிவிட்டது .

“கலோ” இம்முறை யாரோ போனை எடுத்தார்கள் .”கலோ பிரேம்”

“போன இடத்தில கொஞ்சம் கூட அடித்துவிட்டேன்,ஒரே தலயிடி அதுதான் படுத்துவிட்டேன் ,இப்ப நேரம் என்ன மச்சான் “

மனது நாயே நாயே நாயே என்று திட்டுகின்றது இருந்தாலும் காட்டிக்கொள்லாமல் “நேரம் போட்டுது ஓடிவா மச்சான் “என்கின்றேன் .கீழே இறங்கிவருகின்றான் எதுவும் உணர்ச்சி வசப்பட்டு வாயை விட்டு நடக்க போகும் நாடகத்தை சொதப்பகூடாது என்ற முடிவுடன் “பரவாயில்லை மச்சான் இப்ப போக சரி” என்கின்றேன்.

அக்காவிற்கும் போன் அடித்து பிரேமை ஏற்றியதை சொல்லி நாடகம் முடியும் வரை எதுவும் கதைக்க வேண்டாம் என கேட்டுகொள்கிறேன். இடைவேளைக்கு பின்னர் தான் நாடகம் என தாங்கள் ஏற்கனவே அறிவித்துவிட்டதாகவும் அவசரபடாமல் வரும்படியும் அக்கா சொன்னார் .

மண்டபத்திற்குள் நுழைந்து உடுப்புகளை மாற்றி வயர்லஸ் மைக்கையும் கோட்டில் கொழுவிக்கொண்டு மேடையில் முதலாவது சீன் திரை இழுக்க மனைவி மதுசிறி எனது தங்கை ராகினியை பார்த்து “நான் ஷோல்ல ஷோல்ல கேட்காமல் ஒவ்வொரு நாளும் ஸ்பெசல் கிளாஸ் என்று லேட்டா லேட்டா வாறா உங்கட ஸேல்ல சிஸ்டர் ,ஈப்டடியே விட்டா நீங்க தான் ரிக்ரெட் பண்ண வேண்டிவரும் “ மது சிறியின் எடுப்பு சாய்ப்பிற்கும் நெளிப்பிற்கும் உச்சரிப்பிற்கும் விசில் பறக்குது.

“அண்ணா .... அண்ணி இப்படிதான் எப்பவும் என்னில ஒரே கொம்பிளையின் ,நான் உங்கட செல்லம் தானே பிழை விடுவனோ “

வாசித்து கொண்டிருந்த TIME MAGAZINE ஐ மேசையில் வைத்துவிட்டு சோபாவில் இருந்து எழும்புகின்றேன் மண்டபம் நிறைந்த கூட்டம் வலது பக்கம் மதுசிறி இடதுபக்கம் ராகினி என்னை பார்த்துக்கொண்டு நிற்கின்றார்கள் .அடுத்து நான் தான் வசனம் பேச வேணும் எல்லாம் ஒரே பிளாங்காக இருக்கு, எல்லாமே விறைத்தது போன்ற உணர்வு. திரை மறைவில் நின்ற அக்காவை திரும்பி பார்க்கின்றேன் அவர் கையில் இருக்கும் கருப்பு பைலை பார்த்ததும் திடீரென .பாடமாக்கிய ஒற்றைகள் எங்கிருந்தோ பறந்து வருவது போலிருந்தது.

“ஏன் செல்லங்கள் சும்மா சண்டை பிடிக்கிறீங்கள்”

ராகினியை பார்த்து “.அண்ணி சொல்லுறதை நீ கேட்க வேணும் என்ன செல்லம்”

மதுசிறியை பார்த்து “அவள் சின்ன பிள்ளைதானே சொன்னால் கேட்பாள்” வசனங்கள் வந்து விழுகின்றன .

பலத்த கை தட்டல்களுடன் நாடகம் முடிந்து விட்டது. பார்வையாளர்களிடம் இருந்து நிறைய வரவேற்பு .எல்லோருமே நன்றாக செய்தார்கள் போன்றதொரு உணர்வு. மதுசிறியின் உண்மையான தங்கை வந்து “அத்தான் நாடகம் நல்லா இருந்தது” என்றார். நான் நேரே திரைக்கு பின்னால் நிற்கும் பிரேமிடம் போகின்றேன்.ஆறு மணியில் இருந்து எட்டுமணிவரை நான் பட்ட அவலத்திற்கு பிரேமை ஒரு பிடி பிடிக்க நினைத்துவிட்டு பின்னர் எல்லாம் நன்றாக முடிந்துவிட்டது இனி ஏன் கோபப்டுவான் என்று மனத்தை மாற்றி பிரேம் நில்லும் நிகழ்சிகள் எல்லாம் முடிய ஒரு சின்ன பாட்டி ஒன்று போடுவம் என்கின்றேன்.

“சின்னன் ஏன் பெரிசா ஒன்றை போட்டா போச்சு” என்றான். .

Edited by arjun

லட்டு நல்லாய் தான் இருக்கு, பச்சை தான் இல்லை, லட்டுத் தொடருமா அல்லது இவ்வளவும் தானா?

  • கருத்துக்கள உறவுகள்

எழுதி முடிக்க வேணும் ஏண்ட அவதியில எழுதின மாதிரி இருக்கு. முடிந்ததா அல்லது தொடருமா??

முதல் பகுதியில் வந்த சுவாரசியமான எழுத்துநடை இங்கே இல்லை.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

எழுதி முடிக்க வேணும் ஏண்ட அவதியில எழுதின மாதிரி இருக்கு.

அப்படி தான் நானும் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணாவும் , சாத்திரியும், சாந்தியும், சுமேயும்  ஓட்டைவாய்கள் என்று யாழறிந்த விடயமாச்சே, அதே போல அர்ஜுன் அண்ணாவின் பழைய லட்டுக்களும் அர்ஜுன் அண்ணா பற்றி அறிந்திருப்பினம்.

  இந்தத்  திரியில் என்னை தேவை இல்லாமல் ஏனப்பா இழுக்கிறீர் அலை :lol:

ம்ம்

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணாவும் , சாத்திரியும், சாந்தியும், சுமேயும்  ஓட்டைவாய்கள் என்று யாழறிந்த விடயமாச்சே, அதே போல அர்ஜுன் அண்ணாவின் பழைய லட்டுக்களும் அர்ஜுன் அண்ணா பற்றி அறிந்திருப்பினம்.

மச்சி லட்டுக்கை ஏனப்பா என்னையும் சேர்த்திருக்கிறீங்கள் ? :lol: புரியமாட்டேங்கு.

  • கருத்துக்கள உறவுகள்

Arjun எழுத வந்த வேகத்துக்கு ஏதோ கன புதினம் சொல்லப்போறீங்களெண்டு காத்திருக்க இப்பிடி முடிச்சிட்டீங்களே ? :lol:  ஆனாலும் லட்டுக்கதை நல்லாத்தானிருக்கு. நினைவுகள் நெஞ்சில் சுட நீங்கள் சொல்ல வந்த கதையை பந்து போய் முடிச்சமாதிரியிருக்கு. :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கடை கதை நல்லாய் இருக்கு இன்னும் எழுதுங்கோ .

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு. எழுத வந்ததை ஏதோ காரணத்துக்காக எழுதவில்லை போல உள்ளது.

வேம்படி லட்டா அல்லது வேப்பம் பூ வடகமா? :D

ஏம்பா லட்டு தின்ன என்னு கூப்பிட்டு வாய் நெறைய புளிகரச்சு வாக்கிறாங்க?

Edited by மல்லையூரான்

என்ன நடந்தது அர்சுன்? அம்பிகாபதி  லட்டு தின்னேக்கை அமராவதி குறுக்கை வந்துவிட்டாவா? :D

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.