Jump to content

கிருஷ்ணா + அனிதா + காதல் + கல்யாணம் + லாரி + தெருநாய்


Recommended Posts

பதியப்பட்டது

காட்சி 2 : மணி 5.30. கடற்கரையில் அனிதா தன் காதலனுக்காக காத்திருக்கிறாள்.... இருவரும் 7 வருடங்களாக காதலிக்கிறார்கள்.... பள்ளிப் பருவத்திலேயே தொடங்கி விட்ட காதல்... கிருஷ்ணா +2 படித்துக் கொண்டிருந்தான்.... அனிதா +1 படித்துக் கொண்டிருந்தாள்.... அப்போது அரும்பிய காதல் 7 வருடமாக நீக்கிறது.... கிருஷ்ணாவின் மாமன் மகள் தான் அனிதா என்றாலும் அவர்கள் குடும்பத்தில் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இயல்பாக அவர்கள் மணமுடிக்கத் தடையாக இருந்தது.... கிருஷ்ணாவும் எப்படியோ தட்டுத் தடுமாறி வாழ்க்கையில் முன்னுக்கு வந்து கொண்டிருந்தான்.... இனி இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்று தெரிந்தால் கூட குடும்பத்தில் பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை..... "சரியா 5.15 மணிக்கெல்லாம் வந்துடுவானே, டிராபிக்கில் மாட்டிக்கிட்டானா...? செல் அடிச்சாலும் ரிங் போயிட்டே இருக்கே" அனிதா கவலை அடைந்தாள்......

காட்சி 3 : மணி 6.30. ஒரு விளம்பர நிறுவனத்தின் ஸ்டுடியோ.... "எங்கேய்யா போனான் அந்த கிருஷ்ணா.... குடுத்த வேலைய முடிக்காம எப்போ பாத்தாலும் 5 மணிக்கே ஆட்டிக்கிட்டு கெளம்பிடுறான்.... வேலைய முடிச்சிக் கொடுத்துட்டுப் போய்யான்னு சொன்னா ஆறேகாலுக்கு எல்லாம் திரும்பி வந்துடரேன் சார்னு சொல்லிட்டு ஓடிட்டான்..... எம்.டி. கிட்டே போட்டுக் குடுத்துட வேண்டியது தான்"..... கிருஷ்ணா விஷுவலைசராக வேலை பார்க்கும் விளம்பர நிறுவனத்தின் ஸ்டுடியோ மேனேஜர் கத்திக் கொண்டிருந்தார்.... அவருக்கு தெரியும் பையன் யாரையோ காதலித்துக் கொண்டிருக்கிறான்.... அதனால் தான் சரியாக 5 மணிக்கெல்லாம் எஸ்கேப் ஆகிக் கொண்டிருக்கிறான் என்று.... சின்ன வயதில் இவரை யாருமே காதலித்ததில்லை.... அந்தக் கடுப்பில் உலகில் எவனுமே காதலிக்கக் கூடாது என்று மனதிற்குள் சங்கல்பம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.... இவரோட சங்கல்பம் உலகத்துக்கு புரியணுமே?

காட்சி 4 : மணி 7.30. இந்தியன் டீ ஸ்டாலில் அரட்டை களைகட்டத் தொடங்கி இருந்தது.... "மச்சான்.... கிருஷ்ணா எங்கேடா காணோம்.... இன்னைக்கு நைட் ஷோ சூப்பர்மேன் போலாம்னு சொன்னான்.... செல் அடிச்சாலும் எடுக்க மாட்டேங்கிறான்.... ஆபிஸ்ல என்னத்தைதான் 24 மணி நேரமும் புடுங்கிக்கிட்டு இருக்கானோ" கல்யாணம் புலம்பினான்.... கல்யாணம், கிருஷ்ணா, ஜோசப், சம்சுதீன் நால்வரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள்.... தினமும் சரியாக 7.30 முதல் 10.00 மணி வரை ஒன்றாகவே இவர்களைப் பார்க்கலாம்.... இந்தியன் டீ ஸ்டால் தான் இவர்களது மீட்டிங் பாயிண்ட்....

காட்சி 5 : மணி 8.30. பாபு டென்ஷனாக இருந்தார்... அவரது தங்கை மகன் தான் கிருஷ்ணா... இவர் அனிதாவின் அப்பாவும் கூட.... வேலைக்குப் போன தன் மகள் இன்னமும் வரவில்லை.... "அந்த கிருஷ்ணா பய கூட தான் பேசிக்கிட்டு இருப்பா.... வயசுப் பொண்ணு நேரம் காலம் இல்லாம வீட்டுக்கு வர்றா... போர்றா... இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு கேட்டுட வேண்டியது தான்.... சீக்கிரமா கல்யாணத்தை முடிச்சுடணும்.... ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகிடப் போகுது...." வருத்தத்துடன் நினைத்துக் கொண்டிருந்தபோதே அனிதா உள்ளே வந்து கொண்டிருந்தாள்... முகம் வாட்டமாக இருந்தது....

காட்சி 6 : மணி 9.00. சுசிலா சமைத்துக் கொண்டிருந்தார்.... "இந்த கிருஷ்ணா பய ஆபிஸ் விட்டா வீட்டுக்கு நேரா வர மாட்டானே? கண்ட தடிப்பசங்களோட சுத்திட்டு 10 மணிக்கு மேல தான் வருவான்... வந்து நேரத்துக்கு சாப்பிட்டுட்டாவது ஊர் சுத்தப் போலாமே? அந்த அனிதாப் பொண்ணு வந்து தான் இவனை அடக்கணும்.... அவ தான் இவனுக்கு சரியா தண்ணி காட்டுவா" தன் வருங்கால மருமகளும் மற்றும் அண்ணன் மகளுமான அனிதாவை நினைத்துக் கொண்டே சமைத்துக் கொண்டிருந்தார்....

காட்சி 7 : மணி 9.30. "என்னய்யா Formality எல்லாம் முடிஞ்சுதா.... அந்த லாரி நெம்பர் யாராவது நோட் பண்ணாங்களான்னு வெசாரிச்சியா.... அவன் பாக்கெட்டுலே இருந்த அட்ரசை வெச்சி தகவல் சொல்ல ஏற்பாடு பண்ணு.... நாளைக்கு காலைலே தான் முடியுமாம்.... டாக்டர் சொல்லிட்டாரு" செல்லில் பேசிக்கொண்டிருந்தார் எஸ்.ஐ. துரை....

காட்சி 8 : மணி 10.00. "இன்னமும் இந்த தறுதலைப் பயலைக் காணம்.... அவன் ஆத்தாக்காரி கொடுக்குற செல்லம் தான் இவனுக்கு.... முதல்ல இவளை நல்லா நாலு சாத்து சாத்துனா தான் அவன் திருந்துவான்" லஷ்மிபதி மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தார் தன் தறுதலை மகனை எதிர்பார்த்து....

காட்சி 9 : மணி 10.30. நாய் ஒன்று குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தது... எப்பொதும் நன்றியுணர்ச்சிக்காக தன் வாலை மெதுவாக ஆட்டும் நாய்.... அப்போது ஏனோ கொஞ்சம் கோபமாக வாலை ஆட்டிக் கொண்டிருந்தது... சரியாக 10.00 மணிக்கு தெருநாய் என்ற பாகுபாடெல்லாம் பார்க்காமல் தனக்கு உணவு வைக்கும் கிருஷ்ணா அன்று ஏனோ காணவில்லை..... வரட்டும்... அவனைப் பார்த்து நாலு குரை குரைக்கலாம்....

காட்சி 1 : மணி 5.10. காதலி மற்றும் வருங்கால மனைவியைப் பார்த்துப் பேச ஹீரோ கிருஷ்ணா ஹீரோ ஹோண்டாவில் பயணித்துக் கொண்டிருக்கிறான்.... கண்களில் எப்போதும் கனவுகள்.... வீட்டுக்கு ஒரே பையன்.... நடுத்தரக் குடும்பம்.... ஓரளவு படித்து நல்ல வேலைக்கு வந்ததால் பொருளாதரத் தன்னிறைவு.... தங்கையையும் நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்தாயிற்று.... ப்ரெண்ட்ஸ், குடும்பம், காதலி என்று நிறைவான வாழ்வு.... அடுத்த வீக்-எண்டுக்கு அனிதாவை மகாபலிபுரம் கூட்டிக்கிட்டு போகணும்.... வர்றப்போ மாயாஜால்லே பாரிஜாதம் பார்க்கணும்.... யோசித்துக்கொண்டே லேன் தாண்டி அசுர வேகத்தில் ஓட்டிய கிருஷ்ணாவை பின்னால் இருந்து வந்த லாரி முத்தமிட்டது..... காலால் உதைக்கப்பட்ட கால்பந்தைப் போல தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணா உடல் மீது அதே லாரி ஏறிச் சென்றது..... கிருஷ்ணாவின் உயிர், கனவுகளோடு பயணமானது அண்டவெளிகளைத் தாண்டி......

(www.madippakkam.blogspot.com)

Posted

என்னைய்யா நாடகம் எழுதுறா நாடகம்.. ஐயா..நீங்க எழுதிற நாடகத்தை சந்தோஷமா முடிச்சிருக்கவேண்டாமோ.. தினம் தினம் வயது 25 ரெண்டு பிள்ளைகளின்தந்தை.. வயது 30 மூன்றுபிள்ளைகளுக்குத் தகப்பன் என்டு நிஜமான கதையை சர்வசாதாரணமா எழுதி ஸ்கோர் ஷீட்டை புல்லாக்கிறான்.. நீங்களும் அவங்களோடை சேர்ந்து கற்பனையிலையே கொல்லுறீங்க..

பிகு: நாடகம் நல்லாருக்கு.. ஆனா சோகம்தான் தாங்கமுடியல்லை..

Posted

வணக்கம் பெரியவரே....

இது ஒரு போட்டிக்காக எழுதப்பட்ட சிறுகதை.... போட்டியின் தலைப்பு "மரணம்"

Posted

நன்றாக இருக்கு லக்கிலுக்..:D

Posted

வாசிக்கும் போது நல்லவேஇருந்டது கடைசியில் துன்பத்தில் முடித்து விட்டிங்களே :cry: :cry:

இருந்தாலும் நல்லா இருக்கு லக்கி வாழ்த்துக்கள்

Posted

±ýÉ Ä츢æì ºý ÊÅ£ ÊáÁ¡ Á¡¾¢Ã¢§À¡ÌÐ...

þÕó¾¡Öõ ¿øÄ¡þÕìÌ.. ..

¸£ô þð «ô ;-)

Posted

விருவிருப்பாக நன்றாக இருக்கிறது. வித்தியாசமான நடையில் கதையினைக் கொண்டு சென்றிருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள் லக்கிலுக்கு

Posted

நன்றாக இருக்கிறது கதை. இணைப்புக்கு நன்றி லக்கிலுக்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லக்கிலுக்குவினைச் சாதாரணமாக நினைத்துவிட்டேன். நல்ல கதாசிரியர் என்று நிருபித்துவிட்டார். பாராட்டுக்கள், தொடர்ந்து எழுதுங்கள். போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Posted

இணைப்புக்கு நன்றி - லக்கி!

எழுதியவருக்கு - திறமை நிறைய! 8)

எல்லாம் இருக்கட்டும்........ வெயிட் .....

இவரு ஏதோ சொல்லுறார்- கேட்கவிடுங்க!

மதிவதனன் எழுதியது :

பிகு: நாடகம் நல்லாருக்கு.. ஆனா சோகம்தான் தாங்கமுடியல்லை..

டடடடா.........

அப்பிடிங்களா?

சோகமா?

உங்களூக்கா?

டமாசு ....... டமாசு..........

சொந்த இனத்துக்கு வாற - சோகங்களையே.....

அல்வா போல நினைக்கிற உங்களுக்கு ........

கதையில வாறது ......தாங்க முடியலையா?

சும்மா -தூள் கெளப்புறீங்க போங்க - அப்புச்சி! 8)

Posted

நன்றி நண்பர்களே....

இந்தக் கதையை நான் எழுதியபோது எட்டாவதோ, ஏழாவதோ படித்துக் கொண்டிருந்தேன்.... அதனால் தான் இந்தக் கதையில் Maturity இருக்காது..... சமீபத்தில் என்னுடைய பழைய நோட்டுப் புத்தகங்களை புரட்டியபோது கிடைத்தது இது.... சுபா எழுதிய தூண்டில் கயிறு படித்ததின் பாதிப்பில் இதை எழுதினேன்.... தூண்டில் கயிறு நாவலின் ஆரம்பக் காட்சிகளின் பாதிப்பும் இந்தக் கதையில் இருக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் லக்கி அண்ணா நல்லா இருக்கு அப்பிடியே நோட்டு புத்தகங்கள புரட்டி ஏனைய படைப்புக்களையும் எடுத்து விடுறது தானே.. :(

Posted

பாராட்டுகள் லக்கி :P

என்னப்பா களத்தில கதை எழுதுறவங்க எல்லாம் சோகமாவே எழுதுறதெண்டு முடிவே கட்டிட்டீங்களா :lol:

லக்கி நீங்களாவது அடுத்து ஒரு சந்தோஸமான கதை எழுதுங்களன் :wink: :P

Posted

§º¡¸Á¡ö ¸¨¾ ±Ø¾¢È ƒÊ¡¨Å þ¨¼ì¸¡Äô À¼í¸Ç¢¨Ä þÕóÐ ¾¢ÕÊò ¾¡ý þôÀ¦ÂøÄ¡õ ¸¨¾ ±Ø¾¢È¡í¡û....«ôÀ¢Ê þôÀ¢Êò¾¡ý ¿¢ò¾¢Ä¡....

Ä츢æ쨸 Ì¨È ¦º¡øÄÅ¢ø¨Ä..

õõõ..¸¨¾ ±øÄ¡õ ÓÊïͧÀ¡îÍí§¸¡....º¢É¢Á¡ì ¸¡Ã§Ã ¸‰¼ò¾¢Ä þÕ츢Éõ..¿£í¸û ±ýÉý¼¡... ;-)

Posted

ம் .... கதை எல்லாம் எழுதுவீங்களா? ம்ம் நல்லா எழுதுறீங்க ... பாராட்டுக்கள்.... ! :P அதேன் காட்சி :1 என்பது கடைசீல இருக்கு .காட்சி : 2 என்பது முதலாவதாக இருக்கு ....? :roll: :roll:

Posted

ம்ம் பாவம் கிரிஷ்ணா..கனவுகளோட இப்படியா :cry: :cry: எண்டாலும் இப்பிடி ஆகி இருக்க கூடாது..லாறிக்காரன் எங்க கண்ணை பிரடில வைச்சுக்கிட்டா ஓடினார் :evil: :evil: :evil:

ம் .... கதை எல்லாம் எழுதுவீங்களா? ம்ம் நல்லா எழுதுறீங்க ... பாராட்டுக்கள்.... ! :P அதேன் காட்சி :1 என்பது கடைசீல இருக்கு .காட்சி : 2 என்பது முதலாவதாக இருக்கு ....? :roll: :roll:

ம்ம் அனி..கடைசி வரை இவன் கிரிஷ்ணா எங்க எண்டு அனிதா போல சகியுமெல்லோ யோசிக்க தொடங்கிட்டா :P :wink:

அதுக்குத்தான் வைச்சிருப்பாங்க போல :roll: என்ன லக்கி லுக்? நான் சொல்றது விறு விறுப்புக்காக என்பதை :wink: அபிடித்தானே :roll: :roll:

  • 3 weeks later...
Posted

இந்தக் கதைக்கு தேன்கூடு போட்டிக்காக வாக்களிக்க விரும்பும் Blog வைத்திருக்கும் நண்பர்கள் இந்தச் சுட்டியைப் பயன்படுத்தி வாக்களிக்கவும் : http://www.thenkoodu.com/survey/2006-07

வாக்களிக்க நீங்கள் thenkoodu.comல் பதிந்திருக்க வேண்டும்.....

Posted

லக்கி லுக்கு....ம்..... உங்களுக்கும் வோட் பண்ணியிருக்கேன்

எக்ஸ்ராவா.....உங்களுக்கு..கள்ளவ

Posted

நன்றி சின்னக்குடி.... உங்கள் ஒரிஜினல் ஓட்டே போதும்.... கள்ள ஓட்டு ஜனநாயகத்துக்கு எதிரானது.....

Posted

இன்றுதான் கதையினை வாசித்தேன் லக்கிலுக்

நன்றாக இருக்கின்றது... சோக கதையினை எழுதுவதை விட வாசிக்கும்போது தான் அதன் தாக்கம் நன்றாக புரிகின்றது.

பாராட்டுக்கள்.

Posted

இந்தக் கதைக்கு போட்டியில் 14 வது இடம் கிடைத்திருக்கிறது.... பரவாயில்லை 80 போட்டியாளர்களில் 14வது இடம் என்பது கொஞ்சம் கவுரவமாகத் தான் இருக்கிறது...... :lol:

Posted

வாழ்த்துக்கள் லக்கிலுக்கு......(என்னுடைய ஓட்டாலை தானே...... 15 இடத்திலை இருந்து 14 இடத்துக்கு வந்தீங்கள்) :lol:

Posted

வாழ்த்துக்கள் லக்கி..!

சொந்ததிலேயே நிறைய சோகம் உள்ளது.... ஆதனால் இனிமேல் கதைகளில் சோகம் வேண்டாம் பிளீஸ்..!

வாக்களிக்க நான் போன போது அங்கு 27/7 உடன் கடசி திகதி காலாவதி ஆகிவிட்டதாய் சொல்கிறது... காலதாமதமான நடவடிக்கை....

அதுக்காக வருந்துகிறேன்...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.