Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் இந்த முருகதாஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா சளாப்பல் கதையள் வேண்டாம். உங்கள் போராளித் தோழனான அம்புறுஸ் அவர்களுடன் உங்கள் முரண்பாட்டின் காரணத்தை வெளிப்படுத்துவீர்களா?

சாத்திரியுடன் எனக்கு கொடுக்கல் வாங்கல்கள் இல்லை. ஆரம்பத்தில் இருந்தே சாத்திரியின் எழுத்துகளுடன் முரண்பட்டே நிற்கிறேன். நீங்கள்தான் சாத்திரியுடன் சேர்ந்து பேட்டி எடுத்த கதையை சொல்லவா.... பல பதிவுகளுக்கு ஒத்து ஊதிய கதையை சொல்லவா? இப்போது என்ன உங்கள் ஊடக தோழன் சாத்திரியுடன் முறிவு, தடம்மாறி ஓட்டம்.

இதன் காரணங்களையும் உண்மையுடன் வெளிப்படுத்தினால் என்ன?

அபிராம் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். அதுவரை அவருக்கு வாழ்த்துக்கள். உங்களுக்குதான் அடிமனதில் கோபம் இருக்கலாம் அபிராம் மீது.

கழிவு ஒயிலை போட்டு நீங்கள் உருண்டாலும் உங்கள் எழுத்துகளால் சிலரைதான் மயக்கமுடியும். ஏனெனில் உங்கள் பழைய எழுத்துகள் உங்களையே திரும்பி கேள்விகேட்கின்றன என்பதே உண்மை. இதற்கு அபிராம் எழுதியதில் தொக்கிநிற்கும் உண்மைகள் சாட்சி.

(கோவத்தில் உளறாதீர்கள் நிதானமாக யோசித்து எழுதுங்கள் அக்கா)

நியானி: ஊகத்தின் அடிப்படையிலான கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

அவர்தான்  இப்ப தேசியத் தலைவியாம்.. :lol: :lol:

  • Replies 100
  • Views 8.9k
  • Created
  • Last Reply

சாத்திரியார் சொன்ன தேசியத்தலைவி சாந்தியக்காவிற்கு........!!!!!!

அம்புறுஸ் எற்றவரை பொட்டு அம்மான் தும்புக்கட்டையால் அடிச்சதென்று சொல்லி ஒரு போராளியை பொறுப்பான ஒருவர் தும்புதடியால் அடித்தது என்று பொட்டமானை இழிவுபடுத்திவிட்டீர்கள். நான் கேள்விப்பட்டவரை கீழ் நிலைபோராளி ஒருவரின் தவறிற்காக கதவின் பார் தடியால் அடித்து அவர் கையிற்கு ஒருமாதம் புக்கைகட்டி இருந்ததாகத்தான். 

அது சரி சாத்திரி அவர்கள் உங்களை கேட்டமாதிரிதான் “நாயை பற்றி எழுத சொன்னால் நாய்க்கு நலமடித்தவருக்கு நாலுகால்.......” கதைதான். உங்கள் பதிவில் நீங்கள் போராளி தோழனாக மறைமுகம் காட்டி பின் அம்புறுஸ் என வெளிப்படுத்தியது ஏன் என கேட்டால் அம்புறுசிற்கு தும்புத்தடியால் அடித்த கதை எழுதறியள். மன்னிக்கவும் பார் தடியால். சாத்திரியையும் என்னையும் கொடுக்கல் வாங்கல் என்கிறீர்கள். அபிராமை நான் துரோகியாக்கியதாய் சொல்கிறீர்கள். எல்லாம் ஒருபடி மேலே போய் அபிராமை உள்வீட்டு பிள்ளை என முழுதாக உரிமை கொண்டாடுறியள், கண்டிக்கிறியள். அடேயப்பா என்ன வார்த்தை விளையாட்டுக்கள். 

ஒருகாலத்தில் ”கடவுள் போல் நடக்கப்போவதை சொன்னவன்” பின்னர் உங்கள் பார்வையில் ”போட்டுக்கொடுத்தவராக” மாறிய கதைதான் என்ன?

யாழ் நிர்வாகத்திற்கு... சாந்தியக்கா எது போட்டாலும் அப்படியே போடுறியள். எனது கருத்தில் cut செய்து போடுறியள். அப்படி என்றால் சாந்தியக்கா யாழின் தேசியத் தலைவி ஆகிவிட்டாவா? ஈழநாதம் ஒருபக்க சார்பான கருத்துகளையும், செய்திகளையும் வெளியிட்டதுபோல் யாழும் ஒருபக்க சார்பாக இயங்குகிறதா?????

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியை வாசிக்கும் போது தமிழர்களின் நிலை இத்தனை கேவலத்துக்குரியதாகிவிட்டதா?? என்னும் மனச் சங்கடம் தான் ஏற்படுகிறது. சாத்திரி முருகதாசன் பற்றி எழுதியதிலிருந்து வருகிறேன். முருகதாசனின் மரணத்தின் பின் முருகதாசன் நாட்டிலிருந்து புலிகளால் அனுப்பப் பட்டவர் என்றும் அந்த நேரத்தின் தேவை கருதி அவர்கள்கேட்டுக்கொண்டதற்கிணங்க தற்கொடைப் போராளியானார் என்பது சிலருக்கு 2009 ம் ஆண்டே தெரிந்துதான் இருந்தது. ஆனாலும் அதை ஒருவரும் பெரிதுபடுத்தவில்லை. காரணம் ஒரு போராளி தேசத்தின் நன்மை கருதி தன்னை ஆகுதியாக்கியது தவறல்ல என்பதால். என்போன்றவர்களுக்கே இந்த விடயம் முப்பே
தெரிந்திருக்கிறதெனில் சாத்திரி போன்றோருக்கும் மற்றும் சிலருக்கும் முன்பே தெரிந்தே இருக்கும்.

மூன்று ஆண்டுகளின் பின் இப்போது சாத்திரி ஏன் இந்த விடயத்தை இழுக்கிறீர்கள் என்றுதான் புரியவில்லை. இதை மற்றவர்களுக்குப் பரப்புவதனால் இப்பொழுது என்ன இலாபம்?? உன் பிள்ளை என்றால் விடுவாயா? என்று கேட்பவர்களுக்கு என் பிள்ளையை நான் விடவில்லைத்தான் ஆனால் விடவேண்டிய நிலைமை வந்திருந்தால் விட்டுத்தான் இருப்பேன்.

சாத்திரியின் துணிவான எழுத்துக்களில் எனக்கு ஈடுபாடு உண்டெனினும் பழைய போராளி என்று கூறிக்கொண்டிருப்பவரின் வேலை இது தானா?? நாம் எவ்வளவோ நாட்டுக்குச் செய்தோம். இனி ஒன்றும் செய்ய மாட்டோம் என்றால் யாரோ சிலர் வடக் கயிறு பிடித்து தேரிழுக்க முற்படுகையில் யார் இழுத்தாலும் தேர் நகராது என்று கூறி இழுக்க முற்படுபவர்களை தடுப்பது போன்றதே சாத்திரியின் செயல்.

இதை நான் சாத்திரிக்கு எதிரான அல்லது மற்றவர்க்கு சாதகமான எழுத்தாகவோ எண்ணாது ஒரு தமிழ் பெண்ணின் ஆதங்கமாகக் கொள்ளுங்கள். விடுதலைப் போராட்ட வரலாறுகளை எடுத்துக் கொண்டால் இதிலும் விட மோசமானவை எல்லாம் நடந்திருக்கின்றது என்பதை இதில் கருத்தெழுதும் எல்லோருமே உணர்ந்துதான் இருப்பீர்கள். அப்படியிருக்க உங்கள் அறிவை, நேரத்தை எம் தேசத்தின் மீட்புக்காகவோ அன்றி அங்கு துன்பப் படும் மக்களுக்காகவோ செலவிட்டாலே எவ்வளவோ சாதித்திருக்கலாம்.

அதை விடுத்து ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் சாடுவதில்  எப்பயனும் நேரப் போவதில்லை.தமிழனிடம் உள்ள கேடு கெட்ட குணம் நடந்து முடிந்ததை, பயனற்றதைப்  பற்றியே திரும்பத் திரும்பப் பேசுவதும் எதிர்மறையாகவே எதையும் யோசிப்பதுவும், பயனற்று தம் காலத்தை விரயம் செய்வதுமாகும்.
நான் சாத்திரிக்கும் மற்றவர்க்கும் எதிரானவளும் இல்லை. மற்றவர்க்கு ஆதரவானவளும் இல்லை. என் அறிவுக்கு உள்ளத்தில் எழுந்ததை  பதிந்துள்ளேன் அவ்வளவே.

யாழ் நிர்வாகத்திற்கு... சாந்தியக்கா எது போட்டாலும் அப்படியே போடுறியள். எனது கருத்தில் cut செய்து போடுறியள். அப்படி என்றால் சாந்தியக்கா யாழின் தேசியத் தலைவி ஆகிவிட்டாவா? ஈழநாதம் ஒருபக்க சார்பான கருத்துகளையும், செய்திகளையும் வெளியிட்டதுபோல் யாழும் ஒருபக்க சார்பாக இயங்குகிறதா?????

நிர்வாகம் பக்கச்சார்பாக நடப்பதில்லை.

"ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்" எனும் களவிதிக்கு ஏற்ப தங்கள் ஆதாரமில்லாத கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

களவிதிகளை மீறும் கருத்துக்களை நிர்வாகத்திற்கு முறைப்பாட்டு முறைமூலம் தெரியப்படுத்தினால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நிர்வாகம் சம்பந்தமான கருத்துக்களை திரிகளில் பதிவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

நன்றி

பரதேசி படம் பார்த்துவிட்டு இருந்த மனுஉழைவு யாழில் கருத்து எழுதுபர்களை பார்த்ததும் நாடு பொருளாதாரத்தில் முன்னேற வேண்டுமென்றால் இப்படியெல்லாம் செய்யத்தான் வேண்டும் எழுதுவார்களோ என்று எண்ணதோன்றியது .

எப்படியாவது பிழைத்து போங்கள் .

நியானி: சீண்டும் வரிகள் தணிக்கை

Edited by நியானி

நாங்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்தவர்கள் (விடுதலைப் புலிகள் இயக்கம் தற்பொழுது இல்லை என்பதால் நிகழ்காலத்தில் எழுத முடியாது) அவர்களின் சாதனைகள் பற்றி பெருமைப்பட்டிருக்கிறோம். இன்றைக்கும் பெருமைப்படுகிறோம். நாளை எங்களின் சந்ததிக்கு "நாங்கள் தமிழீழத்தில் வாழ்ந்தவர்கள்" என்று பெருமையாகச் சொல்வோம். அவர்கள் வாய் பிளந்து பார்த்து நிற்க கொழும்பிற்கு விமானத்தில் போய் குண்டு போட்ட கதையையும் சொல்வோம்.

பெருமைப்படுவது போன்று இப்படியான நேரங்களில் வெட்கமும் அடைகிறேன். தலையைக் குனிந்து நிற்கிறேன். ஆனால் அதற்காக உண்மைகளை மூடிமறைக்கவும் வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தோடா..... இவர் நல்லது மாதிரி சொல்லி....விடுதலை புலிகளை ஆதரித்தற்காக தலை குனிகின்றராம்......

முப்பது வருட காலத்தையும் தங்களது இளமையையும் தொலைத்து மண்ணும் மக்களும் அதன் சார்ந்த விடுதலையும் என்று இருந்த விடுதலைப்புலிகள் உங்களை போன்றவர்களை நம்பியதை இட்டு தான் தலை குனிய வேண்டும்.....

சூப்பர்டா தம்பி ................இந்தப்பார்வை, சிந்தனை  ஒவ்வொரு இளையோருக்கும் வரவேண்டும் .............அப்புறம் வாந்தி எடுப்போரே உங்களுக்கு ஐயோ கேடு .ஏனனில் உங்களுக்கு வாந்தி எடுக்க  வாய் இருக்காது :D

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் போராடுறதை விட்டிட்டு ஜேர்மனிக்குப் போய் கட்டுரை எழுதினதுமட்டும் நியாயமா என்று கேளுங்க சார்..! :D

நாங்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்தவர்கள் (விடுதலைப் புலிகள் இயக்கம் தற்பொழுது இல்லை என்பதால் நிகழ்காலத்தில் எழுத முடியாது) அவர்களின் சாதனைகள் பற்றி பெருமைப்பட்டிருக்கிறோம். இன்றைக்கும் பெருமைப்படுகிறோம். நாளை எங்களின் சந்ததிக்கு "நாங்கள் தமிழீழத்தில் வாழ்ந்தவர்கள்" என்று பெருமையாகச் சொல்வோம். அவர்கள் வாய் பிளந்து பார்த்து நிற்க கொழும்பிற்கு விமானத்தில் போய் குண்டு போட்ட கதையையும் சொல்வோம்.

பெருமைப்படுவது போன்று இப்படியான நேரங்களில் வெட்கமும் அடைகிறேன். தலையைக் குனிந்து நிற்கிறேன். ஆனால் அதற்காக உண்மைகளை மூடிமறைக்கவும் வேண்டாம்.

வேண்டுமென்றே புலிகளை பற்றி பெருமைப்பட்டோம் என்று இறந்த காலத்தில் எழுத்துவது இவர்களின் இன்றை நிலையை காட்டுகிறது. வருங்காலம் என்றுமேதான் தமிழர்  புலிகளின் திறமைகளைபற்றி பெருமைப்படுவார்கள்.  சபேசனின் வருங்கால சந்ததியார் கூட வருங்காலத்தில் பெருமை படுவார்கள் என்று அவரே ஒத்துக்கொள்கிரார். ஆனால் தனக்கு மட்டும் அது இறந்தகாலத்துடன் முடிவடைந்து விட்டதாக விளங்கப்படுத்துகிரார். வலிந்த விளக்கத்தால் தானது முதாவது வரியை இரண்டாவது வரியில் முரனுகிரார். 

இன்றைய அவர்களின் நிலையை அவர்கள் மூடி மறைக்க முயல்வதற்காக மற்றவர்கள் சரித்திரத்தை மூடி மறைக்க முயல்வதாக சொல்கிறார்கள். 

இதுவெல்லாம் கொண்ட வேறு ஒரு உள் நோக்கத்தை மூடிமறைக்கும் செயல்.

எழுதுவதை படித்து முன்னால் போக மறுப்பது உள்நோக்கம் கொண்டதாகத்தான் எடுத்துகொள்ள வேண்டும்.

சுமே அக்காவின் கருத்திலிருந்து நான் விளங்குவது "முகதாசின் தியாகம் பற்றி விபரம் தெரிந்துதான். மூன்று வருடத்தின் அந்த விப்ரம் போரட்டத்தை குழப்புகிறது".  சபேசனின் அந்த கருத்தை  உண்மைகளுக்கு மூடி பொட்டு மறைக்க முயல்வதாக கூறுவது உள்நோக்கம் கொண்டதாக மட்டும்தான் இருக்க முடியும். 

அதேநேரம் புலிகளின் நோக்கத்தை ஆதரிக்காத, ஆனல் அவர்களின் திறமைகளை மட்டும் புகழுவதாக காட்டும்  சபேசனின் வசன அமைப்பு ஏமாற்றம் தருவதும் கூட. நாங்கள் ஒரு காலத்தில் மட்டும்தான் ஆதாரித்தவர்கள் என்று கூறி தனது இன்றைய எதிர்ப்பை இந்த இடத்தில் சூசகமா வெளிவிடுவது உள்நோக்கத்தை வெளியே கொண்டுவருகிறது. சபேசன் முருதாசின் விபரத்தை அபிராம் போட்டுடைத்தாக ஆரம்பத்தில் எழுதியவர். இப்பொது நிலையை மாற்றி சுமே அக்கா வரையும் மூடி போட்டு மறைப்பதாக எழுதுகிறார். விபரத்தை சாத்தியார் சரியாக எழுதாததற்கு அபிராம் விபரத்தை எழுதி "முட்டாள்தனமாக வலையில் சிக்குண்டு போட்டுடைத்தார்" என்று சபேசனிடம் பெயர் வாங்கினார். சுமே அக்க இதுவெல்லாம் தெரிந்தது தானே என்று எழுத்தியதற்கு நீங்கள் மூடிமறைக்க முயல்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுகிறார். பின்னர் புலிகளால் தான் வெக்கித் தலைகுனிவத்தாகவும் எழுதுகிறார். உண்மையில் இப்படி கதிர்காமர் போன்றதொரு நிறமூர்த்தம் தமிழரில் இடை இடை காணப்படுவதையிட்டு தமிழர் எல்லோரும்தான் வெக்கித்த்லை குனிய வேண்டும்.  

போராட்டம் முடிந்து ஆயுதம் கைவிட்டு ராஜதந்திர போரில் ஈடுபாடிருபவர்கள் மீது அவநம்பிக்கை ஏற்படுத்த போராளிகள் இயக்கம் ஒருவனை தியாகச் செயலுக்கு அனுப்பியதை திரும்ப கூறி தங்கள் நோகத்தை அடையலாம் என்று பார்க்கிறார்கள். இது மாணவர் போராட்ட நேரம் கிளறப்பட்டதின் ஓரே நோக்கம் தாங்கள்  "லையோலா கல்லூரி போராட்டம் தோற்கும், இந்த மாணவர்கள் உண்மையும் இல்லை, ஒரு சங்கல்பம் செய்துகொள்பவர்களுமில்லை" என்று எழுதிய எதிர்வு கூறலானது அன்று அவர்கள் ப்டுக்கைக்கு போக முதலே பொய்துவிட்டத்தை கண்டு மன வெதும்பி "மாணவர் போராட்டம் எல்லாம் முருகாதசன் தேடித்தந்தது போல வெக்கித்தலை குனியச் செய்யும் செயல்ப்பாடுகளே" என்று ஒரு புதிய விவாத்தை ஆரம்பித்து வைக்கவே.  அவர்கள் செய்வது கதிர்காமர் புலிகளை பயங்கரவாதிகளாக பட்டம் கட்டிய செயலுக்கு ஒத்த செயல் என்றும் அதை அவர்கள் மூடி மறைக்க பார்கிறார்கள் என்றால் அதை ஒத்துகொள்ள ஆயத்தமாக இல்லை. 

உண்மையில் கரும்புலிகள் இறந்தை யாரும் மூடி மறைக்க வில்லை. விமானத்தில் பறந்தவர்களும் தியாகக் கரும்புலிகளை ஒத்தவர்கள் தான் முருகதச்சனும் அதே இனம்தான். ஆனல் "விமானத்தில் பறந்தவர்களை மட்டும் வீரபுருசர்களாக,தியாகிகளாகச் சொல்லிவைப்போம் ஆனால் தீயில் ஆகுதியானவர்களை பயங்கரவாதிகளாக, முடிச்சுமாறிகளாகத்தான்  சொல்லி வைப்போம். அதை ஏற்க மறுப்பவர்களை சரித்திரத்திரத்தை மூடி மறைப்பவர்களாக காட்டி வைப்போம்" என்று பொருள் பட எழுதுவது அவர்கள் தங்களைத்தாங்கள் மூடி மறைக்க முடியாமையால் மட்டுமே. 

பரதேசி படம் பார்த்துவிட்டு இருந்த மனுஉழைவு யாழில் கருத்து எழுதுபர்களை பார்த்ததும் நாடு பொருளாதாரத்தில் முன்னேற வேண்டுமென்றால் இப்படியெல்லாம் செய்யத்தான் வேண்டும் எழுதுவார்களோ என்று எண்ணதோன்றியது .

எப்படியாவது பிழைத்து போங்கள் .

நியானி: சீண்டும் வரிகள் தணிக்கை

பொழுத்து போக்குக்காக போராட போய்விட்டு அதில் இருந்த fun முடிந்தவுடன் தனது இயக்கத்தையே காட்டிக்கொடுத்துவிட்டு வந்து,   பொழுத்து போக்குக்காக "தியாகம், தத்துவம், நியாயம் எல்லாமே இது ஒன்றுதான்" என்று நினத்துக்கொண்டு ஒற்றை வரி நக்கல் அடித்துவிட்டு படத்தை மட்டும் பார்த்து, போத்தலை மட்டும் திறந்து தங்களை மட்டும் கவனிப்போர், எல்லோரும் கூட பிழைத்துப்போ என்று கொடுக்கும் உயிர்ப்பிச்சையில்தான் முன்னேற வேண்டும் என்று தமிழரின் போராடங்களின் தலைவிதி. 

(போத்தலை கீழே வையையா. கீழே வைச்சிட்டு தமிழனுக்கு உயிர் பிச்சை கொடுக்கும் போக்கிரி தனத்தை விட்டுவிட்டு வன்னியில் போய் அந்த ஆமியிடம் பிடிபட்டு அல்லல்படும் மக்களுக்காக அவர்களின் ஏரையாவது இழயா) <_<

Edited by மல்லையூரான்

தம்பிகளா! நீங்கள் புலம்பெயர் அமைப்பில் அரசியல் படித்தவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டாம். அவர்கள்தான் சொன்ன கருத்தில் பாதகமானதை மட்டும் தூக்கிப்பிடித்துக் கொண்டு திரிவார்கள். புலிகள் பற்றி என்றைக்கும் பெருமையாகவே இருந்திருக்கிறேன்.

முஸ்லீம்களை துரத்திய போது வெட்கப்பட்டேன். சில கொலைகளின் போது வேதனைப்பட்டேன். முருகதாஸ் தீக்குளிப்பு போன்ற நாடகங்கள் பற்றியும் வெட்கப்படுகிறேன்.

இது இயல்பானது. மனிதம் சார்ந்தது. அதை விட முக்கியம் நாங்களும் இதில் ஒரு அங்கம் என்பது. இது பெரும்பாலனவர்களுக்கு இருக்கும். காலத்தின் தேவைக்காய் நாங்கள் மௌனமாய் இருந்தோம்.

புலிகளின் 90 விடயங்களுக்கு பெருமைப்பட்ட நாம், ஆதரவளித்த நாம், 10 விடயங்களுக்கு வெட்கப்பட்டோம் என்று சொன்னால், அதை சரியாக விளங்காது புலம்பெயர் பூசாரிகள் மாதிரி கதையை மாற்ற முனையாதீர்கள்.

மல்லை!

நான் சங்கிலியதை ஆதரிக்கிறேன் என்று இன்றைக்கு சொல்ல முடியுமா? நான் பண்டார வன்னியனை ஆதரிக்கிறேன் என்று சொல்ல முடியுமா? சங்கிலியன் அன்றைக்கு வெள்ளையரை எதிர்த்து போராடியது சரி என்று சொல்ல முடியும். அப்படி புலிகளும் சிங்கள அரசை எதிர்த்து போராடிய செயற்பாடு சரியானது. அவ்வளவுதான்.

இன்றைக்கு புலிகள் இயக்கம் செயற்பட்டுக்கொண்டிருந்தால், நிகழ்காலத்தில் அவர்கள் பற்றிய நிலைப்பாடு பற்றி பேசமுடியும். புலிகள் இல்லாத நிலையில் "அவர்கள் இருந்த காலத்தில் அவர்களை நான் ஆதரித்தேன்" என்றுதானே சொல்ல முடியும். சிங்கள அரசுக்கு எதிரான அவர்களின் போராட்டம் சரியானது என்று நான் இன்றைக்கும் கருதுகிறேன். இது நிகழ்காலம். ஆனால் ஆதரவை தொடர்ந்தும் வழங்குவதற்கு அவர்கள்தான் இல்லையே! நான் என்ன செய்ய முடியும்?

Edited by சபேசன்

ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக செயல்பட வேண்டிய இந்த கணத்தில் உங்களது உண்மையான பிரச்னை என்னா சபேசன் ??.................புரியல ??.......................

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக செயல்பட வேண்டிய இந்த கணத்தில் உங்களது உண்மையான பிரச்னை என்னா சபேசன் ??.................புரியல ??.......................

நான் சொல்வதை எல்லாரும் கேட்க வேண்டும்.. எழுதுவதை வாசிக்க வேண்டும்..! இல்லாவிட்டால் எதிர்க்கட்சிக்குப் போய் கவனத்தை என்பக்கம் திருப்புவேன்..! :D இதுதான் கொள்கை..!! <_<

மல்லை!

நான் சங்கிலியதை ஆதரிக்கிறேன் என்று இன்றைக்கு சொல்ல முடியுமா? நான் பண்டார வன்னியனை ஆதரிக்கிறேன் என்று சொல்ல முடியுமா? சங்கிலியன் அன்றைக்கு வெள்ளையரை எதிர்த்து போராடியது சரி என்று சொல்ல முடியும். அப்படி புலிகளும் சிங்கள அரசை எதிர்த்து போராடிய செயற்பாடு சரியானது. அவ்வளவுதான்.

இன்றைக்கு புலிகள் இயக்கம் செயற்பட்டுக்கொண்டிருந்தால், நிகழ்காலத்தில் அவர்கள் பற்றிய நிலைப்பாடு பற்றி பேசமுடியும். புலிகள் இல்லாத நிலையில் "அவர்கள் இருந்த காலத்தில் அவர்களை நான் ஆதரித்தேன்" என்றுதானே சொல்ல முடியும். சிங்கள அரசுக்கு எதிரான அவர்களின் போராட்டம் சரியானது என்று நான் இன்றைக்கும் கருதுகிறேன். இது நிகழ்காலம். ஆனால் ஆதரவை தொடர்ந்தும் வழங்குவதற்கு அவர்கள்தான் இல்லையே! நான் என்ன செய்ய முடியும்?

நான் இவ்வளவு நாளும் இலக்கணம் தெரியாமல் எல்லோருக்கும் சங்கிலியனை ஆதரிக்கிறேன், பண்டாரவன்னியனை  ஆதரிக்கிறேன் என்று கூறிவந்தேன்.  இனிமேல் நிறுத்திவிடுகிறேன். <_<

பிழைத்துப் போனதை கையைவிட்டு விட்டால் போய்விடும். மூடிமறைக்க 9 பொய் வேண்டும்.

புலிகளை பற்றி 90% பெருமைப்படுகிறார்களோ இல்லையோ நான் பார்த்த 100% எழுத்துக்களும் எழுதப்பட்டது வெக்கித்தலை குனிவதாக கூறுக்கொள்ளும் நேரங்களில் மட்டுமே. வரவேண்டிய மிச்ச 900 % மனதுக்குள் மட்டுமாக இருக்கலாம். யாருக்குத்தான் தன் மனதை மூடி மறைக்க முடிகிறது?

Edited by மல்லையூரான்

நான் சொல்வதை எல்லாரும் கேட்க வேண்டும்.. எழுதுவதை வாசிக்க வேண்டும்..! இல்லாவிட்டால் எதிர்க்கட்சிக்குப் போய் கவனத்தை என்பக்கம் திருப்புவேன்..! :D இதுதான் கொள்கை..!! <_<

ஐயோ முடியல ....................போத்தலை திறக்காவிடின் என் ஆன்மா திருப்தியடையாது தோழா .... :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே அண்ணை தமிழர் ஒருங்கிணைப்பு குளுவிளையும் பாத்து கீத்து ஒரு பதவிய ஒரு அரசியல் பொறுப்பாளர் இல்லது ஊடக பொறுப்பாளர் என்று எதாச்சும் போட்டு தந்திங்கள் எண்டா அப்புறம் பாருங்க என்னோட வீச்ச....:D

மல்லை!

நான் சங்கிலியதை ஆதரிக்கிறேன் என்று இன்றைக்கு சொல்ல முடியுமா? நான் பண்டார வன்னியனை ஆதரிக்கிறேன் என்று சொல்ல முடியுமா? சங்கிலியன் அன்றைக்கு வெள்ளையரை எதிர்த்து போராடியது சரி என்று சொல்ல முடியும். அப்படி புலிகளும் சிங்கள அரசை எதிர்த்து போராடிய செயற்பாடு சரியானது. அவ்வளவுதான்.

இன்றைக்கு புலிகள் இயக்கம் செயற்பட்டுக்கொண்டிருந்தால், நிகழ்காலத்தில் அவர்கள் பற்றிய நிலைப்பாடு பற்றி பேசமுடியும். புலிகள் இல்லாத நிலையில் "அவர்கள் இருந்த காலத்தில் அவர்களை நான் ஆதரித்தேன்" என்றுதானே சொல்ல முடியும். சிங்கள அரசுக்கு எதிரான அவர்களின் போராட்டம் சரியானது என்று நான் இன்றைக்கும் கருதுகிறேன். இது நிகழ்காலம். ஆனால் ஆதரவை தொடர்ந்தும் வழங்குவதற்கு அவர்கள்தான் இல்லையே! நான் என்ன செய்ய முடியும்?

.

எனக்கு அம்மா இருந்த பொது அவர் மீது அன்பு இருந்தது இப்ப அவரும் இல்லை அன்பும் இல்ல அப்பிடித்தானே சபேஷ்

அப்பிடியே அண்ணை தமிழர் ஒருங்கிணைப்பு குளுவிளையும் பாத்து கீத்து ஒரு பதவிய ஒரு அரசியல் பொறுப்பாளர் இல்லது ஊடக பொறுப்பாளர் என்று எதாச்சும் போட்டு தந்திங்கள் எண்டா அப்புறம் பாருங்க என்னோட வீச்ச.... :D

அதுதான் சுண்டல் பிரச்னை ...................அவரவர் திறமையை   ,நிலையை [உன்னை நீயே அறிவாய்] இவர்கள் உணர்ந்திருந்தால் இன்று இப்படியான பிரச்சனைகள் ,கட்டுரைகள்  வந்திருக்காது.......என்ன செய்வது ........ :D

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் இப்ப விடுதலைப்புலிகள் இல்லை என்று சொன்னார் அது தான் மிகப்பெரிய காமடி :D

யாழ்அன்பு! அம்மா மீதான அன்பும் ஒரு இயக்கத்தின் மீதான ஆதரவும் ஒன்றல்ல. தமிழ் ஒரு பொல்லாத மொழி. பொதுவாக நாங்கள் ஆதரவு என்பதை இயங்கிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் மீதுதான் கொடுக்கிறோம். அல்லது கொள்கைகளுக்கு வழங்குகின்றோம். நாங்கள் தமிழினத்தின் விடுதலையை நேற்று ஆதரித்தோம். இன்றைக்கும் ஆதரிக்கிறோம்.

அமைப்பு என்று பார்த்தால் நேற்று தமிழர்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள். இன்றைக்கு அவர்கள் கைகாட்டி விட்ட கூட்டமைப்பை ஆதரிக்கிறார்கள். நாளை வேறொரு அமைப்பை ஆதரிப்பார்கள். அமைப்புக்கள் மீதான ஆதரவு மாறுகின்ற போதிலும் ஆதரவுக்கான காரணமான "தமிழர் விடுதலை" என்பது அது கிடைக்கும் வரை நிரந்தரமானது.

உறவுகள் மீதான அன்பு, இயக்கங்கள் சார்ந்த ஆதரவு, கொள்கைகளுக்கான ஆதரவு என்பவைகள் வேறுவேறானவை. பிரித்துப் பார்க்கத் தெரிய வேண்டும்.

சுண்டல்! இப்படி தமிழ் எழுதினால் எப்படி ஊடகப் பொறுப்பை தரமுடியும்? அவர்களின் பதவிக்கு இது எதுவும் தேவை இல்லை என்கிறீர்களா?

உங்களது கருத்தில் எனக்கும் உடன்பாடுண்டு

அதில் சிவப்பால் குறிப்பிட்ட வரிகள் முக்கியம்

நாம் புலிகளை  ஆதரித்தோம் என்பதற்கு பின்னால் தமிழரின் பெரும் சுயநலமுண்டு.  இதை நீங்கள் ஏற்கிறீர்கள். எனக்கும்  உடன்பாடுண்டு.  அப்படியே  தமிழரின் போராட்டத்தை   எவர் முன் நகர்த்துகிறார்களோ அவர்களை நோக்கி  ஓடும் கூட்டம்தான் நானும் நீங்களும்.  இதில் புலிகள் அப்பாவிகள் என்பதில் மட்டும்தான் நாம் வேறு படுகின்றோம்.  புலிகளை முழுமையாக நாம் பாவித்துவிட்டோம் இனி  விட்டுவிட்டு வேறு வழிகளை  அல்லது வேறு ஆட்களை  அல்லது நாமே ஏதாவது வழியை தேடுவோமே என்பது நான்.  ஆனால் நீங்கள் அவற்றில் மயிர் புடுங்கி அவர்களை முழுமையாக ஒழிக்கணும் அல்லது ஒதுங்கவைக்கணும் அல்லது முன்னர் செய்தவற்றிற்கு காட்டியாவது கொடுக்கணும் என்று எழுதுபவர்.

இப்போ நானும் நீங்களும் எடுக்கவேண்டிய  முடிவு.

தமிழருக்கான அடுத்தவழியா?

புலிகளுக்கான குழி தோண்டுதலா????

புலிகளுக்கான முடிவுரை தான் எமது அடுத்தகட்டத்துக்கு தேவை  என்றால் இனி போராட எவரும் வரப்போவதில்லை. தமிழகத்திலும் புலிகளே முன் நிறுத்தப்பட்டு போராட்டம் முன் நகர்த்தப்படுகிறது. எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒரு தியாக அமைப்பை இத்தனை வீதம் சரியில்லை சீர்திருத்தம் செய்கின்றோம் என்ற தங்களது எழுத்துக்கள் போராட்டத்தை முற்றுமுழுவதுமாக அவநம்பிக்கைக்கு உள்ளாக்கிவிடும் என்பதைக்கூடவா தங்களது கட்டுரை ஞானங்கள் சொல்வதில்லை.

இன்று என்ன தேவை ஆதை மட்டும் முன்வைப்பீர்களாக.......

(உண்மையில் புலிகள் காலத்தில் காலத்தின் தேவையறிந்து எழுதியதாக தாங்கள் சொல்வது உண்மையானால்)

  • கருத்துக்கள உறவுகள்

ஓ உங்களை மாதிரி மாத்தி மாத்தி எழுதினா பதவி கிடைக்காது எண்டு தெரிஞ்சு போச்சா?

அது சரி சபேசன் அண்ணா one question

உங்களுடைய அதிரடி கரந்தடி ஆய்வுல டெசோ இல்லாமல் மாணவர்கள் போராட்டம் ஜெஜிக்காது.....அரசியல் பின்னணி வேணும் அது இது என்றெல்லாம் ஊதி விட்டிங்க.....

இப்ப தமிழகமே கிளர்ந்து எழுந்து நிக்குது

அது ஏன் நீங்க என்ன ஆய்வு செய்தாலும் பொய்யா போகுது?

வரேல்ல எண்டா விட வேண்டியது தானே?

எதுக்கு இந்த கொலை வெறி?:D

விடுதலைப்புலிகள் பொல்லாத இயக்கமாகி இப்ப தமிழ் மொழியையும் பொல்லாத மொழி ஆகிட்டார்.. இனி போக போக லிஸ்ட் ல என்ன எல்லாம் வரபோகுதோ.....:D

சுண்டல்! தமிழ் மாணவர் போராட்டம் பற்றி நான் எதுவும் அபசகுனமாக சொல்ல விரும்பவில்லை. இரண்டு வாரங்கள் கழித்து இதற்கு பதில் சொல்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.