Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை கண்டித்து தீக்குளித்த வாலிபர் மரணம்

Featured Replies

இலங்கையை கண்டித்து தீக்குளித்த தமிழர் விடுதலை இயக்கத்தை சேர்ந்த பிரமுகர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், இலங்கையை கண்டித்து சென்னையை அடுத்த நெற்குன்றத்தில் தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் நேற்றிரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. 
 
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த இந்த இயக்கத்தை சேர்ந்த வாலிபர் விக்ரம், திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, இலங்கையில் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கோஷமிட்டப்படி உடலில் தீவைத்துக் கொண்டார்.
 
இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து விக்ரம் உடலில் பரவிய தீயை அணைத்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த விக்ரம் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 

ஆழ்ந்த அஞ்சலிகள்

 

இந்த முறையில் வேண்டாமே சகோதரங்களே, இழந்த இழப்புகளே போதும்

 

மாணவர்களுடன் சேர்ந்து உங்கள் ஆதரவை தெரிவித்திருக்கலாம்.

 

உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்

ஆழ்ந்த அஞ்சலிகள். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவரை இழந்து வாடும் உறவுகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களும்,விக்ரத்திற்கு இதயம் கனத்த அஞ்சலிகளும்!

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் பசங்களா.. சும்மா சும்மா தீக்குளிர்ச்சு உயிரை விட்டா.. சனத்தொகையில ஒன்று குறைஞ்சிட்டு என்று உலகம் ஏப்பம் விட்டுக்கிட்டு இருக்குமே தவிர.. இப்படியான போராட்ட வடிவங்களுக்கு இன்றைய உலகம் மதிப்பளிப்பதில்லை.

 

ஆகவே உங்கள் திறமைகளை முடிந்தால்.. ஒரு அணுகுண்டு.. இல்ல ஏவுகணைகள் தயாரிப்பதில் செலுத்துங்க. அதுக்களுக்குத்தான் இப்ப உலகில் மரியாதை..!

 

இந்த உலகின் நடைமுறை தெரியாமல் மீண்டும் மீண்டும் அப்பாவித்தனமா இனமானம் கொண்டு.. உயிர் விடும் உறவுகளுக்கு.. கண்ணீரஞ்சலிகள். :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞன் விக்ரமுக்கு அகவணக்கம்..! அவரை இழந்து தவிக்கும், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

 

நெடுக்ஸ் சொன்னதுதான்..! உங்கள் இருப்பு என்பது மிகவும் அவசியம்..! தொடர்ச்சியான உங்களது எழுச்சி வடிவமே விடுதலை விருட்சத்தைத் தாங்கி நிற்கும் விழுதுகள்...! மறந்துவிடாதீர்கள்..!!

ஆழ்ந்த அனுதாபங்கள் !

 

 

எமது சக உறவு புரட்சி கூறியது போன்று நாமும் இந்த அநியாய உயிர் இழப்பு  வேண்டாம் என்கிறோம், ஆனால் தொடர்கின்றது.


காரணம் இந்திய நடுவண் அரசு.

 

அது தமிழர்கள் அபிலாசைகளை உயிர்களை மதிப்பதில்லை.

734082_425983754158053_1557686044_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்..

 

 

இந்த முறையில் வேண்டாமே சகோதரங்களே, இழந்த இழப்புகளே போதும்

 

மாணவர்களுடன் சேர்ந்து உங்கள் ஆதரவை தெரிவித்திருக்கலாம்.

 

உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன் ....

Vikram-210313-450-seithy-0001.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.