Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவுக்கு கச்சத்தீவு வேண்டுமா? 842323 இந்திய தமிழர்களைஇந்தியாவுக்கு அழைத்துச் செல்லடட்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேயிலைத் தோட்டங்களுக்கு சீனா வியட்நாமில் இருந்து பௌத்த மத யுவதிகளை அழைத்துவருவோம் -

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கச்சத்தீவு மீண்டும் பெற்றுக்கொள்ளும் தேவை ஏற்பட்டிருக்குமாயின், அந்த தீவை மீண்டும் இந்தியாவுக்கு கொடுக்குமாறும், அத்துடன் ஒரு நிபந்தனையை மாத்திரம் இந்தியாவுக்கு முன்வைக்குமாறும் லக்பல சேனா அமைப்பின் தலைவர் மருத்துவர் சுதத் மல்லிக்காராச்சி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள 8 லட்சத்து, 42 ஆயிரத்து 323 இந்திய தமிழர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய அரசாங்கம் இதற்கு விருப்பம் தெரிவித்தால், தாமதமின்றி, அந்த நடவடிக்கைகளை எடுக்குமாறும், தேயிலை தோட்டங்களில் வேலைக்கு ஆட்கள் தேவையாக இருந்தால், தென் சீனாவின் யுவான் மாகாணத்தில் அல்லது வியட்நாம் அல்லது லாவேஸ் ஆகிய நாடுகளில் ஒன்றில் இருந்து பௌத்த மதத்தை சேர்ந்த யுவதிகளை இலங்கை அழைத்து வருமாறும் மல்லிக்காராச்சி மேலும் கூறியுள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90125/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மலையக மக்கள் கட்டியெழுப்பிய சிறீலங்காவின் பொருண்மியத்தையும் அவர்களிடம் சிங்களம் கையளிக்கும் பட்சத்தில் அந்த மக்கள் இந்தியா போவது பற்றிப் பிரச்சனை இல்லை. அதேபோல் சிங்களம் தமிழ் மக்களின் வடக்குக் கிழக்கில் இருந்தும் உடனடியாக வெளியேறி விட வேண்டும். கச்சதீவு  தமிழர்களின் கைக்கு வந்து.. மலைய மக்கள் வெளியேறிய அடுத்த கணத்தில் இருந்து சிங்களம் சிறீலங்காவின் தெற்கு மேற்குக்குள் முடங்கி விட வேண்டும். எப்படி வசதி.. முடிஞ்சா செய்யுங்கோ பார்க்கலாம்.

 

சிங்களவர்கள் இன்னும் 1952 ம் ஆண்டில நிற்கிறாங்க போல...! இது 2013 ராசாக்கள்..! முள்ளிவாய்க்கால் தமிழர்களின் முடிவல்ல. :(:rolleyes:

Edited by nedukkalapoovan

ஐ. பி. எல். கிரிக்கெட்  போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்வதை தமிழ் நாட்டு  அரசியல் வாதிகள் அரசியல் ஆக்கக் கூடாது. தமிழ் நாட்டில் உள்ள இலங்கையர்கள் மீதான வன்முறை அதிகரித்தால் இலங்கையிலுள்ள தமிழ் நாட்டவர்களை  நாட்டைவிட்டு வெளியேற்றுவோம் என பொதுபலசேனா அமைப்பின் பிரதான செயலாளர் கலபொடஹத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
 
தமிழ் நாட்டில் இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்பட்டுவரும்  நடவடிக்கைகள் குறித்து  கேட்டபோதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.


இது  பற்றி அவர் மேலும் கூறுகையில் ;

தமிழ் நாட்டு அரசியல்  வாதிகள் இன்று  நேற்றல்ல காலங்காலமாக இலங்கை அரசிற்கு இடையூறாகவே இருந்து வருகின்றனர். இலங்கை ஒரு தனிநாடு என்பதை இந்திய அரசாங்கமும் தமிழ் நாட்டு அரசாங்கமும்  மறந்துவிட்டன போலும்.  அதனால்  தான் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிட்டு வருகின்றது.

 

இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் இந்தியா தலையிடுவதை பௌத்த  சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்ற வகையில் நாம் எமது கண்டனத்தைத்  தெரிவிக்கின்றோம்.

 

தமிழ் நாட்டு   அரசியல் வாதிகள் மேலும்  மேலும் இலங்கை மக்களுக்கு இடையூறு விளைவித்தால் இலங்கையில் உள்ள தமிழ் நாட்டு மக்களை நாட்டிலிருந்து விரட்டி விடுவோம்.

 

அதுமட்டுல்லாது தமிழ் நாட்டில்  உள்ள  பிரதான விமான நிலையங்களை இலங்கையர்கள் பயன்படுத்தக் கூடாது என்ற பிரசாரத்தை எமது மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நட்புறவு இல்லையெனக் கூறும் தமிழ்நாடு எமக்குத் தேவையில்லை.

 

சென்னையில் நடைபெறவுள்ள ஐ. பி. எல்.  போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கெடுக்கக்கூடாது என தமிழ்நாட்டு அரசியல் வாதிகளும், மாணவர் அமைப்புகளும் தெரிவித்து வருகின்றன.

 

தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு முக்கியமான அறிவுரையொன்றை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

 

நாடுகளுக்கு இடையிலான அரசியல் பிரச்சினைகளை விளையாட்டில் புகுத்த வேண்டாம். விளையாட்டு என்பது பிரச்சினைகளை நிவர்த்தி செய்து ஒற்றுமையை கற்றுக்கொடுக்கும் பாடமாகும்.  அதனை சுயலாபத்துக்காக அரசியலாக்க வேண்டாமெனவும் தெரிவித்தார்.

 

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=3659:2013-03-27-18-17-52&catid=54:local&Itemid=458

என்னத்தை சொன்னாலும் கேட்க மாட்டாங்களாம்.. வரவேண்டாமேண்டால் போகவேண்டாமா மக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்குச் சொந்தமான கச்சதீவை, இந்திய அரசிடம் இலவசமாக பெற்றுக் கொண்ட, ஸ்ரீலங்காவுக்கு வாய்க்கொழுப்பு அதிகம்.

இதுவும் ஒரு தென்னாபிரிக்க நிலமை...    சிறுபான்மை வெள்ளையர்கள் பெரும்பான்மை கறுப்பர்களை அடக்க முயண்றது போல தான் இதுவும்... 

 

இதை சிங்களம் உணர தலைப்பட்டு இருக்கு...   அதன் தாக்கம் தான் இலங்கயில்  இருக்கும் தமிழர்களின் எண்ணிக்கையை  மேலும் குறைக்க வேண்டும் எனும் எண்ணம்..

சோம்பேறி சிங்களா.

.தங்களுடைய கடின உழைப்பால் இலங்கையை வளமாக்கியவர்கள் மலையகத்தமிழர்கள் .அவர்களை வெளியே ரச்சொல்ல நீங்கள் யார் ?மற்றவர்களுடையதை அடித்து பறித்து வாழும் நீங்கள் சீனா .பர்மா ,மக்களை கொண்டுவந்து அவர்களையும் அளிப்பீர்கள். உங்கள் வரலாறு எமக்கு தெரியும் .உலகில் வெறுக்கப்படவேண்டிய இனம் சிங்களம் ......
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு திரும்பி செல்லும் பேச்சுக்கே இனி ஒருபோதும் இடமில்லை: மனோ கணேசன்

 

iMano-150x150.jpgதமிழக முதல்வர் கச்சதீவை மீளக்கோரினால் இலங்கையில் வாழும் இந்திய தமிழர்களை நாடு கடத்த வேண்டும் என்று இனவாதிகள் கூறுவதை நாம் ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது.  இது முழங்காலுக்கும், மொட்டந்தலைக்கும் முடிச்சு போடுவதாகும்.

இந்தியாவுடன் கட்டிபிடித்து உறவு கொள்ளும் போது இந்நாட்டு சிங்கள மக்களும் வங்காளத்தில் இருந்து வந்த வட இந்தியர்கள் என சொல்லுவதும்,பிறகு இந்தியாவுடன் சச்சரவு வந்தால் இந்தியா மீதுள்ள கோபத்தை இந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களிடம் காட்டி அதற்கு அவர்களை பலிக்கடா ஆக்குவதும், தொடர்ந்து நடந்து வரும் ஒரு இனவாத நாடகம். இதற்கு இனிமேல் இடம் கொடுக்க முடியாது. இந்த இனவாத நடிகர்களுக்கு பின்னால் இருக்கும் அரசாங்கம் இவர்களை கட்டுப்படுத்த வேண்டும்.

இந்த  இனவாத கூச்சல்கள் தொடருமானால், இந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களின் பிரச்சினையையும், ஐநா சபையின் கவனத்துக்கு நாம் கொண்டு செல்ல வேண்டி வரும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சட்டசபை தீர்மானங்கள் பற்றி இந்நாட்டில் சிங்கள தீவிர அமைப்புகள் தெரிவித்து வரும் கருத்துகள் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இலங்கையில் வாழும் தமிழர்களிடம் கேட்டுக்கொண்டு கச்சதீவை இலங்கைக்கு இந்திரா காந்தி கொடுக்கவில்லை. அதேபோல் இன்று மீண்டும் கச்சதீவை  திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜெயலலிதா ஜெயராம் இங்கு வாழும் தமிழர்களை, குறிப்பாக இந்தியவம்சாவளி தமிழர்களை கேட்டுக்கொண்டு முன்வைக்கவில்லை.

இந்நாட்டில் வாழும் தமிழ் தலைவர்களையும், தமிழக தலைவர்களையும் கேட்டுக்கொண்டு இலங்கை, இந்திய அரசாங்கங்கள் ஒப்பந்தங்கள் செய்வது இல்லை. எனவே இந்திய தமிழர்கள் என்ற பெயரில் இலங்கையில் வாழும் இலங்கை பிரஜைகளை இந்த கச்சதீவு விவகாரத்தில் தேவையில்லாமல் சம்பந்தப்படுத்த வேண்டாம் என கூறிவைக்க விரும்புகிறேன்.

இந்தியாவின் ஒரிசா, வங்காளம் ஆகிய பிராந்தியங்களில் இருந்தே சிங்கள இனத்தவர்கள் இலங்கைக்கு வந்து குடியேறினார்கள் என  டெல்லியில் உள்ள இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் கூறியுள்ளார். இது இன்று இந்தியாவில் சர்ச்சைக்கு உரிய கருத்தாக மாறியுள்ளது. இந்த கருத்தின் மூலம் இலங்கையில் இன்று வாழும் அனைத்து மக்களும் ஏதோ ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்து இலங்கை வந்தவர்கள் என்று உண்மை  உறுதியாகியுள்ளது.

எனவே இனியொருமுறை இலங்கை வாழ் இந்திய தமிழர்கள் என்ற இலங்கை பிரஜைகளை  நாடு கடத்த வேண்டும் என்றால், இங்கு வாழும் சிங்கள மக்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டுதான் நாம் இந்தியா செல்ல வேண்டும். இந்நாட்டின் பூர்வீக குடிகளான வேடுவர்களுக்கு நாட்டை ஒப்படைத்துவிட்டு எல்லோரும் இந்தியா நோக்கி பயணமாக வேண்டும்.  இந்த நடைமுறை நியாயமானது அல்ல. அதுபோல் கச்சதீவு என்ற விடயத்துடன் முடிச்சுபோட்டு இந்திய தமிழர்களை நாடு கடத்த வேண்டும் என சொல்வதும் நியாயமானது அல்ல.

 

http://plote.co.uk/?p=5923

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு திரும்பி செல்லும் பேச்சுக்கே இனி ஒருபோதும் இடமில்லை: மனோ கணேசன்

 

iMano-150x150.jpg

 

உண்மையான தமிழ் இரத்தம் ஓடுவது, மனோ கணேசனில் மட்டும் தான்....

ஆறுமுகம் தொண்டைமான், செல்லச்சாமி போன்ற மலையகத் தமிழர் தலைவரெல்லாம்... என்ன, செய்து கொண்டிருக்கின்றார்கள்?

நாடுகடத்தப் படவேண்டியவர்கள் நிழல் வங்காளிகளே. அவர்கள் தான் வந்தேறு குடிகள். நாம் தான் பூர்வீகக் குடிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.