Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சாதியம் தொடர்பான ஒரு ஆவணப்படம் - வேர் களை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சாதியம் தொடர்பான ஒரு ஆவணப்படம். ​வேர் களை ( VER KALAI)
    

மாதினி -விக்னேஸ்வரன் (இலங்கை)

 

 

இலங்கையின் வடக்கு கிழக்கில்  உள்ள சாதியமைப்பபுர் பற்றி விரிவாக  இந்த ஆவணப்படம் பேசாவிட்டாலும் ஓரளயவுக்கு பேசியுள்ளது என்றே கூறலாம் சாதியமைப்பினால் தனித் தனி கோயில்கள் வெவுறான சமூகம் என பிரிக்கப்பட்டுள்ளதை இந்தப் ஆவணப்படம் எடுத்துக்காட்டியுள்ளது.   கொழும்பு பல்கலைக்கழக இந்து மன்றத்தினால் பலகலைக்கழக பீடங்களுக்கு  நடாத்தப்பட்ட ஆவணப்படப்போட்டியில் முதலாம் இடத்தையும் சிறந்த வசன அமைப்புக்காக பரிசும் பெற்றுள்ளது .இம் முயற்சி வரவேற்கத்தக்கதே மாணவர்களுக்கு எமது பாராட்டுக்கள்

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டத்தக்க முயற்சி, மாதினி விக்னேஸ்வரனுக்கும் மற்றவர்களுக்கும் நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

எது முக்கியமோ.. அதைச் செய்யாதேங்கோ உதுகளைச் செய்யுங்கோ..!!!!

 

சாதி மதம் வேறுபாடின்றி தமிழனை அழிச்சதற்கு சாட்சி சொல்ல வெளிநாட்டவன் ஆவணப்படம் எடுக்கனும்.. நாங்களோ.. அன்று தொட்டு இன்று வரை குழலுக்க புட்டுத்தான் அவிப்பம்..!!! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

பழைய குப்பைகளை இப்ப கிளறுவது ....புது மெருகுடன் ..எம்மினத்தை இன்னும் படுகுழியில் தள்ள....எம்மை அழித்தவர்கள்...சாதிபார்த்தா அழித்தார்கள்....இது விளங்காத சனம் னம்முடையது...அதுமட்டுமல்ல இப்ப சிலர் கம்யூனிச கொள்கைகளை தூக்கி பிடித்து...விழாவெடுத்து...அவற்றில் சந்தோசமும் கண்டு..தம்மை பெரியவராக காட்டவும் முனைகிறர்கள்...எல்லோரிடமும் போதுவாக கேட்டுக் கொள்வது இதுதான்..இந்த பிரச்சினைகள்..40வருடத்திற்கு மேற்பட்டவை......இப்ப  சிங்களர் சாதிபார்த்து அழிக்கவில்லை...இனத்தையே அழிக்கிறர்கள்.....அதற்காக போராடுவோம்...போராடுபவர்களை ஆதரிப்போம்....உதவுவோம் என்பதே...

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தாயகத்தில் சாதியம் இல்லையென கருதுகிறீர்களா? அல்லது இப்போது தேவையில்லை என்கிறீர்களா?

 

இளையவர்களின் சிந்தனையில் இவ்வாறான முயற்சிகள் வரவேற்கப்படவேண்டும். நமது அடுத்த அடுத்த தலைமுறையினரிடம் ஒரு தெளிவு உண்டாக்கப்படவேண்டும்.

 

எங்களது அப்பனதும் பாட்டனதும் தலைமுறையில் அது கூடாமற்போனது. ஆனால் எங்களது தலைமுறையினால் நிச்சயம் கூடும். :)

  • கருத்துக்கள உறவுகள்

மாதினிக்கும் அனுஜாவுக்கும் என்னுடைய நன்றிகளும் வாழ்த்துக்களும்.                                                                                                                                                                                              

 

கீழ்சாதி மேல்சாதி என்ற பதங்களுக்குப் பதிலாக கீழ்படுத்தப் பட்ட சாதி/ சமூகம் ஆதிக்க சாதி/சமூகம் என்று இருந்திருக்க வேணும். முடிவுரையில் ஏன் இந்த தடுமாற்றம்? சாதி உருவான நோக்கமும் தவறானது  என்று திருத்துங்கள். 

 

நெடுந்தீவு என் தந்தைவழி + தாயின் தந்தைவழி ஊர். கடைசித்ந்தடவை நான் கனடா சென்றபோது வெட்க்கக்கேடான வகையில் நெடுந்தீவுச் சங்கம் சாதி அடிப்படையில் பிழவுபட்டிருந்தது. உடுவில் என் அன்னையின் அன்னை வழி ஊர் அங்குதான் என் அன்னையும் நானும் பிறந்தது. ஒரு சந்திப்பில் கனடாவில் ஏன் உடுவிலை சேர்ந்தவர்கள் சங்கம் அமைக்கவில்லை என்ற பேச்சு எழுந்தது. அதற்க்கு ஒரு so called பெரிய மனிதர்   அருவருக்கத்தக்கவகையில் ”உடுவில் சங்கம் அமைத்தால் கண்ட சாதியளும் வந்து பூந்திடுங்கள்” என சொன்னார்.  இதுதான் இன்றய யாழ்பாணச் சமூகத்தின் அவல நிலை.                                                                                

 

இந்தத் தலைமுறையிலாவது எங்கள் இனத்தின் சீழ்பிடித்து நாறும் சாதிப் புற்று நோய்க்கு அறுவச் சிகிட்ச்சை செய்தாகவேண்டும். 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தாயகத்தில் சாதியம் இல்லையென கருதுகிறீர்களா? அல்லது இப்போது தேவையில்லை என்கிறீர்களா?

 

இளையவர்களின் சிந்தனையில் இவ்வாறான முயற்சிகள் வரவேற்கப்படவேண்டும். நமது அடுத்த அடுத்த தலைமுறையினரிடம் ஒரு தெளிவு உண்டாக்கப்படவேண்டும்.

 

எங்களது அப்பனதும் பாட்டனதும் தலைமுறையில் அது கூடாமற்போனது. ஆனால் எங்களது தலைமுறையினால் நிச்சயம் கூடும். :)

 

நாங்கள் அறியாதவை எல்லாம் இதில் விபரிக்கப்பட்டுள்ளன.

 

சரி.. இப்படியான விபரணங்கள் மூலம்.. அடையக் கூடிய.. உடனடி இலக்குகள் என்ன.. நீண்ட கால இலக்குகள் என்ன.. என்பதை ஒருக்கா சொல்லுங்கோ..???!

 

சாதி பார்க்கும் பல சமூகங்களிடையே.. யாழ்ப்பாணச் சமூகமே சாதிப் பாகுபாட்டுக்கு  எதிராகவும் அதிகம் குரல்கொடுத்துள்ளது. அதற்கான விலையையும் கொடுத்துள்ளது.

 

மேலும்.. மேற்கு நாடுகளில் உள்ள வகுப்பு வாதச் சித்தாந்தம் யாழ்ப்பாணத்திலும் இருக்கிறது. சிறீலங்காவிலும் உள்ளது. அது இங்கு திட்டமிட்டோ.. தற்செயலாகவோ மறக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு.. சாதியம் என்ற எண்ணக் கருவுக்கு தேவையற்ற முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

 

கொழுப்பு பல்கலைக்கழகத்தின் உயர்மட்டங்கள் பற்றி நேரடியான அனுபவம் எங்களுக்குள்ளது. அங்கிருந்து தான் முக்கிய சிங்களப் பேரினவாத மூளைகள் பிறப்பெடுக்கின்றன. அவை நிச்சயம் இவற்றை ஊக்குவிக்கும்..!

 

சாதிய விருட்சத்தை எமது போராட்டம் வீழ்த்தி இருக்கிறது. ஆங்காக்கே  சிந்தி தகாத காலத்துள் இருந்த அந்த விருட்சத்தின் மிச்சசொச்ச.. எச்சங்களான.. அவற்றின் வித்துக்களுக்கு இப்போ.. முளைவிடும் காலம் போல..! அவற்றிற்கு இன்று பலர் பல்வேறு தேவைகளின் அடிப்படையில் நீர் ஊற்றி வளர்க்க முனைகின்றனர்..!

 

இந்த விருட்சம்.. விசம் கொண்டது. எம்மினத்துள் மீள முடியாத பிரிவுகளுக்கு இது தூண்டுதலாக அமையும்.

 

எமது முன்னைய வலதுசாரி.. இடதுசாரி.. அரசியல்வாதிகள்.. எல்லோரும்.. இந்தச் சாதியச் சாயலோடு தான் அரசியல் செய்தனர். அந்த வழியில் இப்போதும் நிற்க விரும்புகின்ற பழைய சித்தாந்தவாதிகள் சாதி அழிப்பு என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு அதனை இன்னொரு தலைமுறைக்குள் திணித்துவிடும் நாசச் செயலை செய்யக் காத்திருக்கின்றனர். இவ்வாறான ஆக்கங்கள் அவற்றிற்கு உபயோகப்பட்டால் அதுவே இவற்றின் முக்கிய பாதகமான விளைவுகளாக இருக்கும்.

 

அடிப்படையில்.. ஒரு உண்மைச் சம்பவம்..

 

யாழ் நகரில் ஒரு புத்தகக் கடையில்.. பிரபல சாதி எதிர்ப்பு படைப்பாளி ஒருவர்.. இன்னொருவரோடு பேசிக் கொண்டிருக்கிறார்.. (அது விடுதலைப்புலிகளின் காலம்..!).. என்ன தான் நான்.. சாதி எதிர்ப்பைப் பற்றி எழுதினாலும்.. அந்தச் சாதி எதிர்ப்பு தான் என்னை என்ன சாதிக்காரன் என்றும் அடையாளப்படுத்தி நிற்குது என்று. வெளிப்படையா சொல்ல முடியாததை சாதி எதிர்ப்புக்குப் பின்னால் இருந்து சொல்ல முடியுது என்று.  இப்படியான தந்திரக் குள்ள நரிகள் எம்மினத்தில் பல..! இவர்கள் மீதான.. எச்சரிக்கையே வெளிப்படையா சாதியை ஒரு விபரமும் இல்லாமல் சொல்லிக்கிட்டு திரியுறதைகள் காட்டிலும் கூடுதலாக இருக்க வேண்டும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எது முக்கியமோ.. அதைச் செய்யாதேங்கோ உதுகளைச் செய்யுங்கோ..!!!!

 

சாதி மதம் வேறுபாடின்றி தமிழனை அழிச்சதற்கு சாட்சி சொல்ல வெளிநாட்டவன் ஆவணப்படம் எடுக்கனும்.. நாங்களோ.. அன்று தொட்டு இன்று வரை குழலுக்க புட்டுத்தான் அவிப்பம்..!!! :lol::D

 

குழலுக்க புட்டு மட்டும் தான் அவிக்கலாம் நெடுக்ஸ். :lol: :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

குழலுக்க புட்டு மட்டும் தான் அவிக்கலாம் நெடுக்ஸ். :lol: :lol:

 

 

குழலுக்க வைச்சு மிசைல்ஸ்சும் அடிக்கலாம்..! புட்டே அவிச்சுப் பழகினவைக்கு அதைவிட்டு வெளிய வர மனசு வராது தான்..! தெரிஞ்ச விசயம் தானே அக்கா..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அறியாதவை என்ற கருத்து ஏற்புடையதல்ல, ஒருவேளை இந்தக் கோயில் இன்னாருக்கு என்பதைக் குறிப்பாய் அறியாமல் இருக்கலாம், ஆனால் யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்ட் சமூகங்களுக்கு எனக் கோயில்கள் இருக்கு என்பதனை எல்லோரும் அறிவார்கள்.

 

இந்தச் சாதி ஒழிப்பு விடயம் விடுதலைப் புலிகளால்கூட சரியாகக் கையாளப்படாமல் விடப்படது. அதில் அவர்கள் வெற்றிபெறவும் இல்லை. அவர்களது உயர்மட்டங்களிலேயே இந்தப் பிரச்சினைகள் இருந்திருக்கின்றன். ஏனெனில் போராட்ட அமைப்பு என்ற நிலையில் இருந்து ஒரு தனி அரசாக எழுச்சிபெற்ற போது பலரையும் உள்வாங்கி அரவணைத்துப் போகின்ற போக்கு இருந்தது.

 

குறுகியகால இலக்காக எமது அடுத்த தலைமுறைக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதாக இவ்வாறான முயற்சிகள் இருக்கும்.

தொடர்ச்சியான வகையில் தகுந்த படைப்புக்கள் வருகின்றபோது அது நிச்சயம் ஒரு தலைமுறை மாற்றத்துக்கு வழிபிறக்கும்.

நாகபாம்பு விடம் உள்ளது என்பதற்காக அதை நல்ல பாம்பு என மங்கலமாக அழைப்பார்கள். எப்படி அழைத்தாலும் விடம், விடம் தான்.

 

ஆகவே இப்படி ஒரு பிரச்சினை இல்லை என்று எங்களை நாங்கள் மங்கலப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் உண்மை சமுகத்தைச் செல்லாக அரித்துப் பாழாக்கிவிடும் என்பதே நடைமுறை உண்மை

 

இப்பொழுது அழுகிப்போன விடயங்களை சிங்கள இராணுவ புலனாய்வு கையில் எடுத்து எம்மை பலவீனமானவர்களாக்க முயலுகின்றது

 

The Sinhala military intelligence officer has circulated his news version to various agencies and psyops outfits of the occupying SL military.

 

 

SL_mil_psyops_aavarangkaal.jpg

 

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=36189

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அறியாதவை என்ற கருத்து ஏற்புடையதல்ல, ஒருவேளை இந்தக் கோயில் இன்னாருக்கு என்பதைக் குறிப்பாய் அறியாமல் இருக்கலாம், ஆனால் யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்ட் சமூகங்களுக்கு எனக் கோயில்கள் இருக்கு என்பதனை எல்லோரும் அறிவார்கள்.

 

இந்தச் சாதி ஒழிப்பு விடயம் விடுதலைப் புலிகளால்கூட சரியாகக் கையாளப்படாமல் விடப்படது. அதில் அவர்கள் வெற்றிபெறவும் இல்லை. அவர்களது உயர்மட்டங்களிலேயே இந்தப் பிரச்சினைகள் இருந்திருக்கின்றன். ஏனெனில் போராட்ட அமைப்பு என்ற நிலையில் இருந்து ஒரு தனி அரசாக எழுச்சிபெற்ற போது பலரையும் உள்வாங்கி அரவணைத்துப் போகின்ற போக்கு இருந்தது.

 

குறுகியகால இலக்காக எமது அடுத்த தலைமுறைக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதாக இவ்வாறான முயற்சிகள் இருக்கும்.

 

தொடர்ச்சியான வகையில் தகுந்த படைப்புக்கள் வருகின்றபோது அது நிச்சயம் ஒரு தலைமுறை மாற்றத்துக்கு வழிபிறக்கும்.

 

நாகபாம்பு விடம் உள்ளது என்பதற்காக அதை நல்ல பாம்பு என மங்கலமாக அழைப்பார்கள். எப்படி அழைத்தாலும் விடம், விடம் தான்.

 

ஆகவே இப்படி ஒரு பிரச்சினை இல்லை என்று எங்களை நாங்கள் மங்கலப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் உண்மை சமுகத்தைச் செல்லாக அரித்துப் பாழாக்கிவிடும் என்பதே நடைமுறை உண்மை

 

நிறைய விடயங்கள் அறியப்படாதவை. தலைமுறைகள் சிலவற்றோடு செத்துவிட்ட விடயங்களை இப்போ மீண்டும் சிலர் தூக்கிப் பிடிக்கின்றனர் என்று தான் நான் திடமாக நினைக்கிறேன்.

 

விடுதலைப்புலிகள் சாதி ஒழிப்பை பறைசாற்றி நிற்கவில்லை. தமிழ் மக்களிடையேயான வேறுபாடுகளை இயன்றவரை இல்லாமல் செய்வதையே குறியாகக் கொண்டிருந்தனர். அதில் சாதியம்.. வர்க்கம்..வகுப்பு..  பிரதேசம்.. என்று பல அடங்கும்..!

 

உலகில் எல்லா மக்களிடமும் சில பாகுபாட்டு நிலைப்பாடுகள் உள்ளன. அண்மையில் பிரித்தானிய பிரதமரை சொந்தக் கட்சி பெண் உறுப்பினர் ஒருவர் இவருக்கு ஒரு பைண்டு பால் விலை என்னென்றே தெரியாது என்று அவரின் உயர் வகுப்பு.. பிரபுத்துவ பின்னணி வாழ்வியல் குறித்து..மறைமுகமாகச் சாடி இருந்தார்.

 

அவற்றின் அடிப்படையில்.. எங்கும் எதனையும் பூரணமாக அழித்தொழிக்க முடியாது. ஆனால் கட்டுப்படுத்துவதன் மூலம்.. அழிந்து போகும் தலைமுறைகளுக்களோடு இதனை அருகச் செய்யலாம். புதிய தலைமுறைக்குள் பல்வேறு வடிவங்களிலும் இதனைப் புகுத்தி எமது இனத்தை மேலும் மேலும் பலவீனப்படுத்துவதிலும் பார்க்க..!

 

இவை தொட்டுணர முடியாத மனித எண்ணங்கள். அந்த வகையில்.. அவற்றை காவுவதில் இருந்து தடுப்பது கூட அவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்த உதவலாம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.