Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதி அரசுடமையாக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Hatton National Bank கூட என்று கேள்விப்பட்டன்.. குறைச்சூட்டாங்களோ? :P

இலங்கையில் வங்கிகளில் பணத்தை ரூபாய்க்கு மாற்றி முதலீடு செய்பவர்களின் வட்டி வருமானம் சொல்லப்பட்ட வீதத்திலும் 7 முதல் 8 வீதம் குறைவானதாகும். காரணம் ரூபாய் ஆண்டு ஒன்றுக்கு 7 முதல் 8 வீதம் அதன் பெறுமதியை இழந்து வருகிறது. இந்தியா, சிங்கப்புூர், தாய்லாந்து, சீனா போன்ற வேறு எந்த நாடும் இவ்வாறு நாணயத்தின் பெறுமதியை இழக்கவில்லை. இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகள் நாணயத்தின் பெறுமதியை பல ஆண்டுகளாக இழந்து வந்திருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக இவைகளின் நாணயங்களின் பெறுமதி அதிகரித்து வருகின்றது.

சிறிலங்காவில் வட்டி 10.5 வீதம் என்றால் உங்களுடைய வருமானத்தின் உண்மையான பெறுமதி 3 வீதம் மட்டுமே.

கீழே உள்ள படம் சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி எப்படி வீழ்ச்சி அடைகிறது என்று காட்டுகிறது.

lkrusd.gif

  • Replies 118
  • Views 13.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

காலங்கடந்த வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதை தவிர்க்க வழியுண்டு - இலங்கை வங்கி உதவிப் பொது முகாமையாளர் விவரிக்கிறார்

யாழ். குடாநாட்டில் உள்ள இலங்கை வங்கிக் கிளைகளுடன் கடந்த 10 வருடங் களுக்கு மேலாகத் தொடர்பினைப் பேணாத வாடிக்கையாளர்கள் உடனடியாக அந்தக் கிளைகளுடன் தொடர்பு கொண்டு தமது சொத்துக்கள் முடக்கப்படுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கை வங்கியின் வட வலய உதவிப்பொது முகாமையாளர் பி.ஏ. அருமைநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏதாவது ஒரு வழியில் வாடிக்கையாளர் கள் தொடர்பினை மேற்கொண்டால் அவர் களின் சொத்துக்களைப் பாதுகாக்க இலங்கை வங்கிக் கிளைகள் உதவி புரியும் எனவும் அவர் தெரிவித்தார். வங்கிச் சட்ட விதி முறைப்படி 10 வருடங்களுக்கு மேலாக செயற்படுத்தப்படாத சொத்துக்கள் கைவிடப்பட்ட சொத்துக்களா கக் கருதப்படுகின்றன. வங்கிகள் இவ்வா றான கைவிடப்பட்ட சொத்து விவரங்களை மத்திய வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் அந்தச் சொத்துக்களை மத்திய வங்கி தன்வசப்படுத்திக்கொள்ளும்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பல கோடி ரூபா சொத்துக்கள் இவ்வாறு செயற் படுத்தப்படாத நிலையில் உள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. இவை பெரும் பாலும் நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகளாக உள்ளமையும் தெரியவந்துள்ளது. அத்துடன் பாதுகாப்புப் பெட்டகங்களில் உள்ள பெருமளவான சொத்துக்களும் செயற்படாத நிலையில் உள்ளன. கடந்த பல வருடங்க ளாக நாட்டில் நிலவும் போர்ச் சூழ்நிலையால் இடம்பெயர்ந்த அல்லது புலம் பெயர்ந்த தமிழர்களின் சொத்துக்களே இவை என்று கூறப்படுகிறது.

இந்தச் சொத்துக்கள் முடக்கப்படுவதை தவிர்க்கும் நடவடிக்கைகளைத் நாம் மேற் கொண்டு வருவதாகவும் அதற்கு வாடிக்கை யாளர்களின் உதவி தமக்கு பெரிதும் தேவை என்றும் இலங்கை வங்கியின் வடவலய உதவிப் பொதுமுகாமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரி வித்ததாவது:

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக எமது வங்கிக் கிளைகளில் செயற்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகளின் விவரங்களை நாம் தற்போது திரட்டி வருகின்றோம். அத்துடன் இவை முடக்கப்படாமல் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் நாம் எடுத்து வருகின்றோம். இதற்கு வாடிக்கையாளர்களின் உடனடி ஒத்துழைப்பு தேவை.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக வங்கிக் கிளைகளுடன் தொடர்புகளைப் பேணாத வாடிக்கையாளர்கள் பின்வரும் நடவடிக் கைகளில் ஏதாவது ஒன்றைச் செய்வதன் மூலம் தமது சொத்துக்கள் முடக்கப்படாமல் பாதுகாத்துக்கொள்ளமுடியும்.

அவையாவன:

* வாடிக்கையாளர்களின் கணக்கில் வைப்புகள் அல்லது மீளப்பெறுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

* முகவரி மாற்றத்தை அறிவித்தல் அல்லது வேறு எழுத்துமூலமாக ஆவணங் களை வங்கிக்கு அனுப்பிவைத்தல்.

* வைப்புப் புத்தகத்தைப் பதிவுக்குச் சமர்ப்பித்தல்

* பாதுகாப்பு பெட்டகத்திற்கான காலம் பிந்திய வாடகையைச் செலுத்தல்.உறவினர்கள் தொடர்புகொள்ளலாம்

இவைகளைச் செய்ய முடியாது போனால் வாடிக்கயாளர்களின் உறவினர்கள் வங்கி யுடன் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர் பற்றிய விவரங்களை சமர்ப்பிப்பதன் மூலமோ அல்லது சிறு தொகைப் பணத்தை அவர்களின் கணக்கில் வைப்பிலிடுவதன் மூலமோ அவற்றைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இது தொடர்பாக மேலதிக விவரங்க ளைப் பெறவிரும்புவோர் தம்முடன் நேரடியாகவோ அல்லது ஞணிஞிச்ஞ்ட்ணணீ@டணிtட்டிச்டூ. ஞிணிட் என்ற மின் அஞ்சல் முகவரியுடனோ தொடர்பு கொள்ள முடியும் என இலங்கை வங்கியின்வடவலய உதவிப் பொது முகா மையாளர் பி.ஏ.அருமைநாயகம் மேலும் தெரிவித்தார்.

- உதயன்

«ôÀ ®Æô§À¡÷ ¦À⺡¦ÅÊ.. «Åí¸û ¦º¡øÄ¢ô§À¡ð¼¡í¸û ¾Á¢Æ¨Ãì ¦¸¡ØõÀ¢Ä þÕóÐ «ÊîÍòÐÃòÐÈ ±ñÎ....

«¾É¡Ä þôÀ¢Õó§¾ ¦¸¡ØõÀ¢Ä §À¡ðʧÀ¡ðΠţΠ§ÅñÊȨ¾Ôõ ¸Åñ§ÁóÐ À¡í¸¢Ä ¸¡Í §À¡ÎȨ¾¨ÂÔõ ¾Å¢÷ôÀ¡÷¸Ç¡???

:oops: :oops: :oops:

வைப்பகம் இருக்கையில் ஏன் கவலை. :P

இரகசிய கணக்கு வைத்திருக்க வைப்பகமோ? வேற உதாரணம் கிடைக்க இல்லையோ? இதென்ன "சுவீஸ் பாங்க்" மாதிரியே??

வேற நல்ல வங்கி என்றால்தான் வைப்பகம் சரி!!!

Bank of Ceylon, Central Bank போன்றவை நல்ல நம்பிக்கையான வங்கிகள். அங்கு பிரச்சனையில்லாமல் உங்கள் சேமிப்புகளிற்கு அதி உயர் வட்டி பெற்றுக் கொள்ளலாம். அரச கூட்டுத்தாபனம் என்றரீதியில் மேலதிக பாதுகாப்பும் இருக்கும் எப்பவும்.

Bank of Ceylon என்றதிற்கு தமிழ் பதம் இலங்கை வங்கி.

ஆரம்ப செய்தியில் பாருங்கோ, அரசுடமையாக்குவதே, இந்த இலங்கைவங்கி, அதாவது ஒரு அரசவங்கி. அதுக்கப்புறம் எப்படி அரசவங்கிகளில் கணக்கு வைத்திருப்பது??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலங்கடந்த வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதை தவிர்க்க வழியுண்டு.

http://sankathi.com/content/view/3970/26/

யாழ் குடாநாட்டில் உள்ள இலங்கை வங்கிக் கிளைகளுடன் கடந்த 10 வருடங்களுக்கு மேலாகத் தொடர்பினைப் பேணாத வாடிக்கையளாளர்கள் உடனடியாக அந்தக் கிளைகளுடன் தொடர்புகொண்டு தமது சொத்துக்கள் முடக்கப்படுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கை வங்கியின் வடவலய உதவிப்பொது முகாமையாளர் பி.ஏ.அருமைநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏதாவது ஒரு வழியில் வாடிக்கையாளர்கள் தொடர்பினை மேற்கெண்டால் அவர்களின் சொத்துக்களை பாதுகாக்க இலங்கை வங்கிகள் உதவி புர்pயும் எனவும் அவர் தெரிவித்தார். வங்கிச் சட்டவிதி முறைப்படி 10வருடங்களுக்கு மேலாக செயற்படுத்தப்படாத சொத்துக்கள் கைவிடப்பட்ட சொத்துக்களாகக் கருதப்படுகின்றன. வங்கிகள் இவ்வாறான கைவிடப்பட்ட சொத்து விவரங்களை மத்திய வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும் அதன்பின் அந்தச் சொத்துக்களை மத்திய வங்கி தன்வசப்படுத்திக் கொள்ளும்.

வடக்குகிழக்கு தமிழ்மக்களின் பல கோடி ரூபா சொத்துக்கள் இவ்வாறு செயற்படுத்தப்படாத நிலையில் உள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. இவை பெரும்பாலும் நடைமுறை மற்றும் சேமிப்புக்கணக்குகளாக உள்ளன. கடந்த பல வருடங்களாக நாட்டில் நிலவும் போர்ச் சூழ்நிலையால் இடம் பெயர்ந்த அல்லது புலம்பெயர்ந்த தமிழர்களின் சொத்துக்களே இவை என்று கூறப்படுகிறது.

இந்தச் சொத்துக்கள் முடக்கப்படுவதை தவிர்க்கும் நடவடிக்கைகளைத் நாம் மேற்கொண்டு வருவதாகவும் அதற்கு வாடிக்கையாளர்களின் உதவி தமக்கு பெரிதும் தேவை என்றும் இலங்கை வங்கியின் வடவலய உதவிப் பொதுமுகாமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கடந்த 10வருடங்களுக்கு மேலாக எமது வங்கிக் கிளைகளில் செயற்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகளின் விவரங்களை நாம் தற்போது திரட்டி வருகின்றோம். அத்துடன் இவை முடக்கப்படாமல் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் நாம் எடுத்துவருகின்றோம். இதற்கு வாடிக்கையாளர்களின் உடனடி ஒத்துழைப்புத் தேவை.

கடந்த 10வருடங்களுக்கு மேலாக வங்கிக் கிளைகளுடன் தொடர்புகளைப் பேணாத வாடிக்கையாளர்கள் பின்வரும் நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்றைச் செய்வதன் மூலம் தமது சொத்துக்கள் முடக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ளமுடியும். அவையாவன.

வாடிக்கையாளர்களின் கணக்கில் வைப்புக்கள் அல்லது மீளப்பெறுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

முகவரி மாற்றத்தை அறிவித்தல் அல்லது வேறு எழுத்து மூலமாக ஆவணங்களை வங்கிக்கு அனுப்பிவைத்தல்.

பாதுகாப்பு பெட்டகத்திற்கான காலம் பிந்திய வாடகையைச் செலுத்தல்.

உறவினர்கள் தொடர்பு கொள்ளலாம்.

இவைகளைச் செய்யமுடியாது போனால் வாடிக்கையாளர்களின் உறவினர்கள் வங்கியுடன் தொடர்புகொண்டு வாடிக்கையாளர் பற்றிய விவரங்களை சமர்ப்பிப்பதன் மூலமோ அல்லது சிறு தொகைப் பணத்தை அவர்களின் கணக்கில் வைப்பிலிடுவதன் மூலமோ அவற்ரை பாதுகாத்துக் கொள்ளமுடியும்.

இது தொடர்பாக மேலதிக விவரங்களை பெறவிரும்புவோர் தம்முடன் நேரடியாகவோ அல்லது bocagmnp@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடனோ தொடர்புகொள்ள முடியுமென இலங்கை வங்கியின் வடவலய உதவிப் பொது முகாமையாளர் பி.ஏ அருமைநாயகம் மேலும் தெரிவித்தார்.

இது ஓரு பொதுவான நடவடிக்கை எந்த நாட்டிலும் 10 வருடங்களுக்கு மேல் ஒரு வங்கிக்கணக்கு தொடர்ந்து பேணப்படாமல் இருந்தால் அக்கணக்கை முடக்குவது பற்றி சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவது வழமை. இங்கு சுவிற்சர்லாந்திலேயே நான் வைத்திருந்த UBS வங்கிக்கணக்கு 10 வருடங்களுக்கு மேல் நான் பாவிக்காமல் விட்டதால் அதனை தாம் முடக்கப் போவதாக எனக்கு அறிவித்தல் வந்தது. அதனை தொடர்ந்து பேண விரும்புவதாக அறிவித்து இப்போது அக்கணக்கை தொடர்ந்து பாவித்து வருகின்றேன். அதுபோல் இலங்கையில் எந்த அரச வங்கியிலாவது பணம் வைத்திருப்போர் ஒரு வருடத்திற்கொருமுறை அல்லது இரு வருடங்களுக்கொருமுறை கணக்கு வைத்திருக்கும் வங்கியில் வங்கிப்புத்தகத்தினை உறவினர் அல்லது நண்பர்கள் ஊடாக சமர்பித்து வட்டியினைப் பதிந்து வந்தால் எவ்வித சிக்கலும் ஏற்படாது. இச்சாதாரண நடவடிக்கையை வைத்து சிலர் இங்கே பிலிம் காட்டுவது தான் வேடிக்கை.

வசம்பு மிகத் தவறான தகவல்,

பொதுவான நடவடிக்கை இவ்வாறான கணக்குகள் fரீஸ் அதாவது முடக்கம் செய்யப்பட்டு அதில் உள்ள தொகை ஒரு தற்காலிக அல்லது விசேட கணக்கில் வைத்து அந்த வங்கியால் பராமரிப்படும்.அதனை உரியவர் பின்னொரு காலத்தில் பெற்றுக் கொள்ளலாம்.ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இந்தப் பணத்தை வங்கிகளில் இருந்து கையகப் படுத்துகிறது என்பதுவே இங்குள்ள வித்தியாசம்.அதனை மீளப்பெற வேண்டுமாயின் பிற்காலத்தில் வழக்குத் தாக்கல் செய்து உரிமையாளர் இது எனது பணம் என்று நிரூபிக்க வேண்டும்.இது பற்றி லண்டன் பினான்சியல் டையிம்சில் கூட எழுதி உள்ளார்கள்.இது விலை வாசி ஏற்றதிற்கே வழிவகுக்கும் என்று.இதற்கும் அரசாங்கம் காசு அடிப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.ஆனால் இங்கு தனியார் சொத்துக்களை இழக்க சந்தர்ப்பம் ஏற்படுகிறது,அதுவும் தமிழர்களது சொத்துக்கள்.

அத்தோடு வன் செயல்காரணமாக இடம் பெயர்வுகள் புலம் பெயர்வுகள் நடந்துள்ள நிலையில் இதுவரை காலமும் இல்லாத வகையில் இந்த நடை முறை வருவதற்குக் காரணம் அரசின் நிதி நெருக்கடியே.

Central Bank to rake in Rs. 30bn from dormant accounts

By: Suresh Perera

Source: The Sunday Island - July 16, 2006

For the first time in Sri Lanka’s banking history, a whopping 30 billion rupees in dormant bank accounts is expected to be raked in by the Central Bank this year.

"We are now in the process of issuing official forms to commercial banks to declare the quantum of funds in their respective dormant accounts," a Central Bank official said last week.

Under the Banking Act, commercial banks have to report to the Central Bank accounts dormant for more than a decade, but this is the first time that declaration forms are being sent across, she said.

Asked whether the funds–running into billions of rupees, will, in turn, be transferred to the government, the official replied, "There is no such decision. The deposits will be held in a Special Account within the Central Bank."

The Central Bank has access to dormant funds under a provision of the Banking Act relating to "abandoned property", she noted.

But where articles such as gold and other valuables in "inactive" bank safety lockers and vaults are concerned, the Finance Minister will prescribe where they should be stored, she explained.

The minister has discretion under the law in this respect as sufficient storage facilities within a secure environment are vital, she elaborated.

A bank official said that deposits are initially consigned to an "unclaimed account" before being placed under the "dormant" category.

"An account holder may not have operated his account for more than 10 years, but if he had corresponded with the bank, we consider the account active," he said.

"We are strictly talking about accounts that have remained silent for more than 10 years."

The Central Bank official said that rightful owners can claim their deposits in dormant accounts at a later date, but will have to go through a legal process.

Many depositors whose holdings over a long period have been subject to automatic renewal with interest capitalised are worried their savings could be categorised "dormant" in the absence of regular transactions.

Many inquiries have been made in this regard, banking sources said.

http://www.tamilcanadian.com/pageview.php?...ID=4227&SID=501

நாரதர்

எதனை நீங்கள் தவறான தகவல் என்று சொல்ல வருகின்றீர்கள். வங்கிக்கணக்கை தொடர்ந்து பேணிவந்தால் எவ்வித பிரைச்சினையும் வர வாய்ப்பில்லையே. புலம்பெயர்ந்து வந்தவர்கள் அவர்கள் உறவினரோ அல்லது நண்பர்கள் ஊடாகவும் இதனைச் செய்யலாமே. இவ்விடயம் வேண்டுமென்றே இங்கு பெரிதாக்கப்படுகின்றது. இது சம்பந்தமாக உதவிப்பொது முகாமையாளர் பி.ஏ. அருமைநாயகம் தந்த விளக்கத்தினை மீண்டும் வாசித்துப் பாருங்கள்.

பி.ஏ. அருமைநாயகம் தந்த விளக்கம்

வாடிக்கையாளர்களின் கணக்கில் வைப்புக்கள் அல்லது மீளப்பெறுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

முகவரி மாற்றத்தை அறிவித்தல் அல்லது வேறு எழுத்து மூலமாக ஆவணங்களை வங்கிக்கு அனுப்பிவைத்தல்.

பாதுகாப்பு பெட்டகத்திற்கான காலம் பிந்திய வாடகையைச் செலுத்தல்.

உறவினர்கள் தொடர்பு கொள்ளலாம்.

இவைகளைச் செய்யமுடியாது போனால் வாடிக்கையாளர்களின் உறவினர்கள் வங்கியுடன் தொடர்புகொண்டு வாடிக்கையாளர் பற்றிய விவரங்களை சமர்ப்பிப்பதன் மூலமோ அல்லது சிறு தொகைப் பணத்தை அவர்களின் கணக்கில் வைப்பிலிடுவதன் மூலமோ அவற்ரை பாதுகாத்துக் கொள்ளமுடியும்.

இதை ஒரு சாதாரண நடவடிக்கை என்று கூறியது தான் தவறானது,இது போல் இலங்கையின் சரித்திரத்தில் இடம் பெற்றது கிடயாது என்றே சொல்லப்பட்டுள்ளது.அதுவும் வன் செயல் காரணமாக பலர் இடம் பெயர்ந்துள்ள நிலையில் இப்படியான ஒரு நடவடிக்கையை தெரிந்தே அரசாங்கம் மேற் கொள்கிறது.மக்களின் நலனில் கரிசணை இருந்தால் இவ்வாறன நடவடிக்கை ஏன்? இதில் பாதிக்கப் படப் போவது பெரும்பான்மையாகத் தமிழ் மக்களே.

இதுகால வரை இவ்வாறான கணக்குகள் தன்னிச்சையாகவே வட்டி இடப்பட்டு புதிப்பிக்கபட்டு வந்துள்ளன.அதுதான் நடைமுறையாக இருந்து வந்துள்ளது.இப்போது அரசுக்கு ஆயுதம் வாங்க ,பெற்றோல் விலை ஏற்றத்தைச் சமாளிக்க காசு தேவையா இருக்குது.

வசம்பு மிகத் தவறான தகவல்,

பொதுவான நடவடிக்கை இவ்வாறான கணக்குகள் fரீஸ் அதாவது முடக்கம் செய்யப்பட்டு அதில் உள்ள தொகை ஒரு தற்காலிக அல்லது விசேட கணக்கில் வைத்து அந்த வங்கியால் பராமரிப்படும்.அதனை உரியவர் பின்னொரு காலத்தில் பெற்றுக் கொள்ளலாம்.ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இந்தப் பணத்தை வங்கிகளில் இருந்து கையகப் படுத்துகிறது என்பதுவே இங்குள்ள வித்தியாசம்.அதனை மீளப்பெற வேண்டுமாயின் பிற்காலத்தில் வழக்குத் தாக்கல் செய்து உரிமையாளர் இது எனது பணம் என்று நிரூபிக்க வேண்டும்.இது பற்றி லண்டன் பினான்சியல் டையிம்சில் கூட எழுதி உள்ளார்கள்..

வங்கிக்கணக்கை மூடுவதற்க்கும், வங்கியில் இருக்கும் வைப்பை கையகப்படுத்துவதுக்கும் அதிகமாக வித்தியாசம் இல்லை....! :idea:

என்ன வங்கிக்கணக்கை மூடும்போது பணத்தையோ இல்லை போருளையோ திருப்பி தருவார்கள்... :wink:

இதுக்காண்டி நீங்க இங்கை பிலிம் காட்டுறது அவ்வளவு நல்லதாப்படேல்லை...! :wink: :lol::lol:

இதை ஒரு சாதாரண நடவடிக்கை என்று கூறியது தான் தவறானது,இது போல் இலங்கையின் சரித்திரத்தில் இடம் பெற்றது கிடயாது என்றே சொல்லப்பட்டுள்ளது.அதுவும் வன் செயல் காரணமாக பலர் இடம் பெயர்ந்துள்ள நிலையில் இப்படியான ஒரு நடவடிக்கையை தெரிந்தே அரசாங்கம் மேற் கொள்கிறது.மக்களின் நலனில் கரிசணை இருந்தால் இவ்வாறன நடவடிக்கை ஏன்? இதில் பாதிக்கப் படப் போவது பெரும்பான்மையாகத் தமிழ் மக்களே..

தமிழ்ச்சனம் எக்கேடு கெட்டுப்போனால் எங்களுக்கு என்ன வந்துது....???? :wink: :idea:

மற்றுக்கருத்து எண்டு இருக்கும் போது எனக்கோ சனத்துக்கோ எது போனாலும் பறவாய் இல்லை... எதிராளிகளுக்கு சகுனம்பிளைச்சால் போது...! :wink: 8) 8)

ஓம் ஓம் தாயகத்திலிருந்து ஒரு உபபொதுமுகாமையாளர் போதிய விளக்கம் தந்தும் இங்கே யார் பிலிம் காட்டிகினம் என்பது பார்ப்போருக்குப் புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழர்களின் கோடிக்கணக்கான நிதியை

சுருட்டி யுத்தத்திற்குப் பயன்படுத்தவே புதிய சட்டமூலம்

நாடாளுமன்றில் சுரேஷ் எம்.பி. சீற்றம்

அரச வங்கிகளில் வைப்பிலிடப்பட்டிருக் கும் புலம்பெயர்ந்த 10 லட்சம் தமிழர்களின் கோடிக்கணக்கான நிதியை அரச உடைமைகளாக்கி அதை யுத்தத்திற்குப் பயன்படுத்த அரசு முயற்சிக்கிறது. அதற்காகவே அரச வங்கிகளிலுள்ள இயங்காச் சொத்தை அரசு டமையாக்கும் வங்கி மற்றும் நிதி தொடர்பான சட்ட மூலத்தை அரசு அவசர அவசரமாக சபையில் சமர்ப்பித்துள்ளது.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரே மச்சந்திரன் நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வங்கி மற்றும் நிதி தொடர்பான சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றப் போவதாகக் கூறிக்கொண்டு அரசு இந்தச் சட்டமூலத்தைச் சபையில் சமர்ப்பித்துள்ளது. அரச வங்கிகளில் உள்ள இயங்காச் சொத்தை அரச உடமையாக்குவதற்காக கொண்டுவந்தி ருக்கும் இச்சட்டமூலம் தமிழர்களுக்கு எதிரானதாகவும் யுத்தத்தைத் தொடங்குவதற்கான ஏற்பாடாகவுமே உள்ளது.

அரச வங்கிகளில் வைப்பிலிட்டால் தமது பணத்திற்குப் பாதுகாப்புக் கிடைக்கும் என்ப தாலேயே தமிழர்கள் பணத்தை அரச வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்து வாழும் 10 லட்சம் தமி ழர்களின் கோடிக்கணக்கான ரூபா நிதி அரச வங்கிகளில் இயங்காச் சொத்தாக உள்ளது. இந்த நிதியைச் சூறையாடி யுத்தத்தைத் தொடங்கவே அரசு முயற்சி செய்கிறது.

இது நாட்டு நிலைமையை மேலும் பார தூரமான ஒன்றாக மாற்றும். அரசு சமாதா னத்தை ஏற்படுத்தும் நிலையில் இல்லை. சமா தானம் என்றும், சமாதானப் பேச்சு என்றும் ஜனாதிபதியும் அவரைச் சார்ந்திருந்தோரும் கூறிவருகின்றபோதிலும் அவர்களின் செயற் பாடுகள் அனைத்தும் உண்மையில் யுத்தத்தை நோக்கியதாகவே உள்ளன. தமிழர்கள் வடக்கு கிழக்கில் தினமும் கொல்லப்படுகின்றனர். இவ்வருடம் ஜனவரி முதல் 200 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அது தொடர்பாக எந்த விசாரணைகளையும் அரசு மேற்கொள்ள வில்லை. அத்தனை கொலைகளையும் செய்த வர்கள் அரச படையினரே.

படுகொலைகளை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான புறச்சூழலை ஏற்படுத் தாது பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடு களிலிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய் கிறது அரசு.

இந்த நிலையில் இந்தச் சட்டமூலம் எப் படி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றப் போகிறது? நாட்டில் சமாதானம் இருந்தால்தான் பொருளாதாரம் முன்னேற்றமடையும். ஆகவே, சமாதானத்தை நிலைநாட்ட அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

-உதயன்

தமிழ்ச்சனம் மட்டும் பாதிக்கப்படும் அளவுக்கு ஒரு சட்டம் வருகுது.... அதை தடுக்க மாற்றுவளி இருக்காம் எண்டு பெருமைப்படுகுது சனம்.....!

அப்பிடி ஒரு சட்டம் வரவேண்டிய காரணம் என்ன எண்டு சிந்திக்க, ஒரு சாரார் மட்டும் பாதிப்படையும் வண்ணம் சட்டம் ஏன் எண்டு சிந்திக்க மட்டும் மூளை போதாது....!:wink: அதனால் சிங்களவனுக்கு பாதிப்பில்லை என்பதை அறிய முடியாமல் இருக்க ஏதோ கண்ணை மறைக்கிறது.... அப்பிடி வந்தால் என்ன செய்யலாம் எண்டு ஆய்வாலர்களை கேட்டு தெரிஞ்சு மாற்றுவளி பிடிச்சு அதனூடாக சந்தோசமாய் வாளுவினமாம்....! 8) 8) 8)

இதைத்தான் சொல்லுறது துணியை நனைச்சு சுமக்கிறது எண்டு....! 8) 8) 8)

ஓம் ஓம் தாயகத்திலிருந்து ஒரு உபபொதுமுகாமையாளர் போதிய விளக்கம் தந்தும் இங்கே யார் பிலிம் காட்டிகினம் என்பது பார்ப்போருக்குப் புரியும்.

ஓம் ஓம் ஏற்கனவே இருக்கிற வழமையான நடவடிக்கைக்கு ஏன் புதிசா சட்டம் கொண்டு வர வேணும்.முகாமையாளர் தனக்கு இடப்பட்டதைக்கூறுகிறார்.அவர் இதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்ற விடயத்தைத் தான் கூறி உள்ளார்.அதற்கு மேல் ஏன் எதற்கு என்று கூறுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை, அப்படி அவர் கூறினால் அவர் வேலையும் காலி.இது ஒரு பாரதூரமான சட்டவாக்கம் சம்பந்தமான அரசியற் பிரச்சினை.இது ஒரு சாதாரண வங்கி நடமுறை இல்லை.இவ்வாறு அரசுக்குப் போகும் நிதி ஈற்றில் தமிழரைக் கொல்லவே பயன் படப் போகிறது.வசம்புக்கு அது தான் குறிக்கோள் போலுள்ளது,

இதனை வெளிப்படயாகவே சொல்லலாமே ஏன் இப்படி சாதாரண நடை முறை ,முகாமையாளர் சொல்லுறார் என்று சுத்து மாத்து?

புலம் பெயர் தமிழர் வாங்கிய வெள்ளவத்தை வீடுகளையும் அரசாங்கம் எடுப்பத்ற்கு ஒரு சட்டம் கொண்டு வந்தால் நல்லது தானே,ஏனென்றால் அவை எல்லாம் அந்நிய சொத்துக்கள் தானே

கவலைப் பட வேண்டாம் நேசன் ஏற்கனவே ஜீவிபி வெளி நாட்டவர் இலங்கையில் சொத்து வாங்கும் போது நூறுவீத வரி விதிக்கப் பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது.

விரைவில் இதுவும் சட்டமாக வரலாம்.

வசம்பு அண்ணா, ஜரோப்பிய நாடுகளில் வங்கிக்கணக்கில் காசு இல்லாமல் அதிக வருடங்கள் வெறுமையாக இருந்தால் மட்டுமே அறியதந்து மூடுவதற்கு ஒழுங்கு செய்வார்கள். ஒருசத இருந்தாக்கூட வருடம் ஒரு முறை நடைமுறைக்கணக்கு விபரம் அறிய தந்து கொண்டு இருப்பார்கள். ஒவ்வொரு கணக்காளரிடமும் இலங்கை வங்கி கணக்குகளில் நிச்சயம் காசு இருக்கும் .அவர்கள் அந்த பணத்தை அல்லது அதற்கு கொடுக்கவேண்டிய வட்டையை இல்லாம்ல் செய்வதற்காகவே தமிழருக்கு எதிரான மறைமுக நடவடிக்கையே தவிர. வேறு ஒன்றும் இல்லை.

உ-ம் 83ம் ஆண்டு வங்கிக்கணக்கில் 3000 ரூபா பணத்தை விட்டுவிட்டு அகதியாக ஓடியவர் இப்போ 2006 ம் ஆண்டு போய் பணத்தை மீளப்பெறகேட்டால் பெருந்தொகை பணம் வட்டியோடு சேர்த்து கிடைக்கும்.

அவற்றை கொடுப்பதானால் இன்றை நிலையில் வங்கிபெரும்பணத்தை இழக்கும். அதை இல்லாமல் செய்வதற்கு இப்படியான வேலைகளைத்தான் செய்ய முடியும்.

ஏற்கனவே நாடு பிச்சைஎடுக்குறது போருக்ககாக, பிறகு வட்டி போட்டு காசு தர முடியுமா?

இதென்ன சுவிஸ் வங்கியா.

விளங்குகள் எப்படி எல்லாம் உரிமைகள் பறிக்கப்படுகின்றன

இந்தா பாருங்கள் மகேஸ்வரன் கக்குகிறார் உண்மையை வசம்பு அண்ணா

யாழ்ப்பாணத்திலுள்ள மக்களின் பேணப்ப டாத வங்கிக் கணக்குகளிலுள்ள 3 பில்லியன் ரூபா பணத்தை சூறையாடுவதற்காகவே வங்கி திருத்தச்சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவர முயற்சிப்பதாக ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்ட எம்.பி. தி.மகேஸ்வரன் சபையில் தெரிவித்தார்.

நாரதர் எழுதியது:

ஓம் ஓம் ஏற்கனவே இருக்கிற வழமையான நடவடிக்கைக்கு ஏன் புதிசா சட்டம் கொண்டு வர வேணும்.முகாமையாளர் தனக்கு இடப்பட்டதைக்கூறுகிறார்.அவர் இதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்ற விடயத்தைத் தான் கூறி உள்ளார்.அதற்கு மேல் ஏன் எதற்கு என்று கூறுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லைஇ அப்படி அவர் கூறினால் அவர் வேலையும் காலி.இது ஒரு பாரதூரமான சட்டவாக்கம் சம்பந்தமான அரசியற் பிரச்சினை.இது ஒரு சாதாரண வங்கி நடமுறை இல்லை.இவ்வாறு அரசுக்குப் போகும் நிதி ஈற்றில் தமிழரைக் கொல்லவே பயன் படப் போகிறது.வசம்புக்கு அது தான் குறிக்கோள் போலுள்ளதுஇ

இதனை வெளிப்படயாகவே சொல்லலாமே ஏன் இப்படி சாதாரண நடை முறை இமுகாமையாளர் சொல்லுறார் என்று சுத்து மாத்து?

அரசு ஒரு சட்டமூலத்தை கொண்டு வந்து எதிர் காலத்தில் அரசுக்கு வரும் அந்நியச்செலவாணியை அது இளக்கவிரும்புமென்று நான் நம்பவில்லை. இது வேறு சில உள்நோக்கங்களுக்காக பாவிக்கப்படும் மிரட்டலாகவே நான் கருதுகின்றேன். இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும் அதிலிருந்து தப்பிக்க வழியிருக்கும்போது ஏன் பயப்படவேண்டுமென்பதே என் வாதம். தற்போது கையாளப்படும் கணக்குகளை அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. அதனால்த்தான் இதுவரை கையாளப்படாத கணக்குகளை உறவினர் மூலமோ அல்லது நண்பர்கள் மூலமோ கையாளப்பட்டால் அரசால் ஒன்றுமே செய்ய முடியாது.

உயிரிழப்புகள் எத்தரப்பில் ஏற்பட்டாலும் அதனை இதுவரை நான் கண்டித்தே வந்துள்ளேன். ஏதோ தமிழர் நிதியை நம்பித்தான் அரசு யுத்தம் செய்வது போலவும் அது கிடைக்காவிட்டால் யுத்தத்தை அரசு நிறுத்திவிடும் என்பது போலவும் உங்கள் கருத்து உள்ளது.

உங்கள் அளவிற்கு எனக்கு சுத்துமாத்து தெரியாது. கீழ்த்தரமான சிந்தனைகளைத் தவர்த்து கருத்தைக் கருத்தால் எதிர் கொள்ளப்பாருங்கள்.

நேசன்

ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக நான் இருக்கும் சுவிற்சர்லாந்தில் வங்கியிலிருக்கும் முழுப்பணத்தையும் நீங்கள் எடுக்க விரும்பினால் உடனடியாக உங்கள் கணக்கை மூடிவிட்டுத்தான் பணத்தைத் தருவார்கள். நீங்கள் தொடர்ந்து கணக்கை வைத்திருப்பதென்றால் குறிப்பிட்டதொகைப்பணத்தை கணக்கில் விட்டுவைத்தே ஆகவேண்டும். எக்காரணம் கொண்டும் முழுப்பணத்தை எடுத்து கணக்கைத் தொடர்ந்து வைத்திருக்க அனுமதிக்க மாட்டார்கள். இது எல்லாநாடுகளுக்கும் பொருந்தும். காரணம் உங்கள் கணக்கில் பணமில்லையெனில் அவர்களது நிர்வாகச்செலவை எங்கிருந்து எடுப்பது??

மேலும் உங்களின் ஏனைய கேள்விகளுக்கு மேலே நான் நாரதருக்குக் கொடுத்துள்ள பதிலைப் பாருங்கள். நன்றி நேசன்.

நாரதர் எழுதியது:

]அரசு ஒரு சட்டமூலத்தை கொண்டு வந்து எதிர் காலத்தில் அரசுக்கு வரும் அந்நியச்செலவாணியை அது இளக்கவிரும்புமென்று நான் நம்பவில்லை. இது வேறு சில உள்நோக்கங்களுக்காக பாவிக்கப்படும் மிரட்டலாகவே நான் கருதுகின்றேன். இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும் அதிலிருந்து தப்பிக்க வழியிருக்கும்போது ஏன் பயப்படவேண்டுமென்பதே என் வாதம். தற்போது கையாளப்படும் கணக்குகளை அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. அதனால்த்தான் இதுவரை கையாளப்படாத கணக்குகளை உறவினர் மூலமோ அல்லது நண்பர்கள் மூலமோ கையாளப்பட்டால் அரசால் ஒன்றுமே செய்ய முடியாது.

உயிரிழப்புகள் எத்தரப்பில் ஏற்பட்டாலும் அதனை இதுவரை நான் கண்டித்தே வந்துள்ளேன். ஏதோ தமிழர் நிதியை நம்பித்தான் அரசு யுத்தம் செய்வது போலவும் அது கிடைக்காவிட்டால் யுத்தத்தை அரசு நிறுத்திவிடும் என்பது போலவும் உங்கள் கருத்து உள்ளது.

உங்கள் அளவிற்கு எனக்கு சுத்துமாத்து தெரியாது. கீழ்த்தரமான சிந்தனைகளைத் தவர்த்து கருத்தைக் கருத்தால் எதிர் கொள்ளப்பாருங்கள்.

வேறு என்ன உள் நோக்கம்? முதலில் உள்ள நடைமுறை என்றால் ஏன் புதிய சட்டமூலம் தேவை?அரசுக்கு இந்தப் பணம் முக்கியமானது இல்லை என்றால் ஏன் இப்போது இவற்றைக் கைய்யகப் படுத்துவான்? நீர் சொல்வதைப் போல் செய்வதற்கு எல்லாருக்கும் நம்பிக்கையானவர்கள் அங்கு இருக்க வேண்டும்.அதோடு இடம் பெயர்ந்த எல்லாருக்கும் இப்படியான வசதி வாய்புக்கள் கிடையாது.

அரசு இன்று பலமான நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளது .அத்தோடு சீனா பாகிஸ்தானிடம் இருந்து அடுத்த யுதத்திற்கான ஆயுத தளபாட நிதியைத் திரட்ட முனைகிறது.இதற்கு நாங்கள் எதிர்ப்புக் காட்டாமல் பேசாமல் அவர்கள் நிதியை எடுக்கட்டும் என்று இருப்பதோ?

இதைப் பார்க்கவும்...

Sri Lankan Central Bank attempts to cover up deepening economic contradictions

Now that open war is closer than ever, even irrespective of whether it would happen or not, the preparedness for it means huge military expenditure with high import content.... If these additional expenditures amount to around $US1,000 million, a likely prospect, it would be almost an unbearable burden on the balance of payments and would no doubt have to be financed by borrowings and deferred payment agreements. This means that the foreign debt would rise to horrendous proportions making future development expenditure well nigh impossible. The additional fiscal deficit would destabilise the economy through the inflationary pressures that it would generate.

http://www.yarl.com/forum4/viewtopic.php?t=115

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.