Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூர்வீகத்தில் இலங்கை ஒரு இந்து நாடு - யோகேஸ்வரன் விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

7532619133.jpg

பூர்வீகத்தில் இலங்கை ஒரு இந்து நாடு - யோகேஸ்வரன் விளக்கம்

இலங்கை நாடு பூர்வீகத்தில் இந்து நாடாகும். இந்து மதம் இலங்கையின் பூர்வீக மதமாகும் என மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். 

“இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்” எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் 2013 உயர்தரம் கற்கும் இந்து இளைஞர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் வதிவிடத்துடனான இந்து சமய மேம்பாட்டு தலைமைத்துவ பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு இன்று (17) மட்டக்களப்பு நாவற்குடா இந்து சமய கலாசார நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உயைராற்றுகையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

இலங்கை நாட்டைப் பொறுத்த வரையில் அதன் பூர்வீக மதம் இந்து மதமாகும். ஏனெனில் இலங்கையை முதன் முதலாக ஆட்சி செய்தது குபீரன். பின்னர் அவனது சகோதரன் இராவணன் ஆகும் என இதிகாசம் குறிப்பிடுகிறது. 

அதன்பின்னர் பிம்பிசேனன், இயக்கர், நாகர் ஆட்சி செய்தனர். அதன் பின்னர் வட இந்நியாவில் அவதாரம் செய்த ஆன்மீக வள்ளல் கௌதம புத்தர் இலங்கை நாட்டிற்கு விஜயம் செய்து முதன்முதலாக மஹியங்கனை பிரதேசத்திற்குச் சென்று அங்கு ஆட்சி செய்த இயக்கர்களை சுழற்காற்றினால் வீசிவிட்டு பிராமணர்களை குடியேற்றினார். பின்னர் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு யாழ்ப்பாணத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த மகோதரன், குலோதரன் உள்ளிட்ட இருவருக்கும் மாணிக்க ஆசனத்தை பெருவதில் ஏற்பட்ட சண்டையை சமாதானப்படுத்த விஜயம் செய்தார். 

பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை. அவர் பரிநிர்வாணமடைந்து 700 கூட்டாலிகளுடன் இலங்கைக்கு விஜயன் அனுப்பபட்டான் என்ற வரலாற்றை பௌத்த நூல்களான மகா வம்சம், சூள வம்சம், தீப வம்சம் உள்ளிட்ட நூல்களும் இந்து நூலான இதிகாசமும் குறிப்பிடுகின்றது. 

இலங்கையின் பூர்விக மதமான இந்து மதத்தை பின்பற்றுகின்ற எம்மிடத்தில் இந்து ஆன்மீக செயற்பாடுகள், இந்து ஒழுக்க விழுமியங்கள் அற்றுப்போயுள்ளன. 

இன்று இந்து மதத்தின் ஆன்மீகப் போதனைகள் எழுதப்பட்ட நூல்களைப் படித்து நிறைய மக்கள் இந்து மதத்தை தழுவிக் கொள்கின்றனர். 

வெள்ளையர்கள் வாழ்கின்ற அமெரிக்கா நாட்டில் நூற்றுக்கு 26வீதமானோர் இந்துக்களாக இருக்கின்றனர். 

இவ்வாறு உலகளாவிய ரீதியில் இந்து நூல்கள், தத்துவங்கள் என்பவற்றைப் படித்து கணிசமான தொகையினர் இந்து மதத்தை தழுவுகின்றனர். 

ஆனால் நாங்கள் நவீன உபகரணங்களை சுயநலத்திற்காக உபயோகித்து விட்டு சமயத்திலிருந்தும் அதன் போதனைகளிலிருந்தும் விலகிச் செல்கின்றோம். 

அவ்வாறான செயற்பாடுகள் எமது மாணவர்களிடத்தில் வரக்கூடாது. 

இந்து மாணவர்கள் தமது இந்து மதத்தினை சரியாக பின்பற்றி ஒழுக்கமுள்ள சமுதாயத்தை கட்டியெழுப்ப இவ்வாறான பயிற்சி நெறியினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

இன்று நாம் ஆடம்பரம் என சொல்லிக்கொண்டு ஆன்மீக செயற்பாடுகளை புறந்தள்ளிவிடுகின்றோம். 

ஆகவே எமது கலாசாரத்தையும் பண்பையும் பறிகொடுத்து விடாமல் சிறந்த ஆன்மீகமுள்ள நற்பிரஜைகளாக நாமும் மாறி எமது சமூகத்தையும் மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும் என மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி, இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எழில்வாணி பத்மகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

சொல்லும் வரலாற்றை ஒழுங்காக சொல்லவேண்டும்!

தெரியாவிட்டால் விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட வரலாற்று நூல்களை படிக்கலாம்.

 



இதற்குள் மகாவம்சத்தை சான்றாக இழுக்கும் போது அதன் பொய்மை பற்றி தெளிவாக குறிப்பிட வேண்டும்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது குழப்பமான கருத்து ஆகும். இந்து என்ற பெயர் சில காலமாகத்தான் உலகிற்கு தெரியும். அதற்கு முன்னமே இருந்த தமிழர் மதம் - சைவ மதம் உலகம் முழுவதும் தமிழர்களால் எடுத்துச்செல்லப்பட்டது. இயற்கையோடு இயைந்த மதமும் அதுவே. இன்றைய இந்து மதம் தங்களுக்குச் சாதகமானவைகளை மட்டும் எடுதுக்கொண்டு இயற்கையோடு இயைந்த மனித வாழ்க்கையை முற்றிலும் நிராகரித்துவிட்டது. தமிழர்கள் நாம் தமிழர் மதத்தை பின்பற்றினால்தான் நாம் முன்னேற முடியும். இந்து மதத்தை பின்பற்றினால் நமக்கு வீழ்ச்சிதான்.

 

இது குழப்பமான கருத்து ஆகும். இந்து என்ற பெயர் சில காலமாகத்தான் உலகிற்கு தெரியும். அதற்கு முன்னமே இருந்த தமிழர் மதம் - சைவ மதம் உலகம் முழுவதும் தமிழர்களால் எடுத்துச்செல்லப்பட்டது. இயற்கையோடு இயைந்த மதமும் அதுவே. இன்றைய இந்து மதம் தங்களுக்குச் சாதகமானவைகளை மட்டும் எடுதுக்கொண்டு இயற்கையோடு இயைந்த மனித வாழ்க்கையை முற்றிலும் நிராகரித்துவிட்டது. தமிழர்கள் நாம் தமிழர் மதத்தை பின்பற்றினால்தான் நாம் முன்னேற முடியும். இந்து மதத்தை பின்பற்றினால் நமக்கு வீழ்ச்சிதான்.

 

உங்கள் கருத்தும் குழப்பமாக உள்ளது. தமிழர் மதம் என்பது என்ன?

இன்று தமிழர்கள் இந்துக்களாகவும் (சைவர்களாகவும்), கிறிஸ்தவர்களாகவும் இருக்கிறார்கள். (இஸ்லாமியார் தம்மை தமிழர் என்று அழைப்பதில்லை. அவர்களின் வெறித்தனத்துக்கு இரையாகி தமிழர்களாகிய நாம் எம்மை தமிழ் பேசுபவர்கள் என்று அழைக்க முடியாது.)

எனவே தமிழ் மதம் என்ற கருத்து தேவையில்லாத குழப்பம். சைவர்களா / இந்துக்களா என்பதுவும் தேவையற்ற குழப்பம்.  இஸ்லாமிய வெறியர்கள் போல் நாமும் ஒரு மொழிபேசும் தமிழ் இனத்தையும் மதத்தையும் இணைத்து குழப்ப வேண்டாம். எமது நீண்டகால பிரச்சினை மொழி சார்ந்த இனத்தின் பிரச்சினையாகவே உள்ளது.

விடுதலைப் புலிகளும் மொழிப் பிரச்சினையின் அடிப்படையிலேயே போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அவர்கள் அதில் மதத்தைக் கலக்கவில்லை. விடுதலைப்புலிகளாக அவர்கள் எந்தவொரு மதத்தையும் சாரவில்லை. ஆனால் அவரவர் மத சுதந்திரம் விடுதலைப் புலிகள் அமைப்பில் / நிர்வாகத்தில் / ஆட்சியில் இருந்தது.

இதை நன்கு விளங்கிக் கொண்டுதான் இஸ்லாமியர்கள் தமது வெறித்தனத்தின் மூலம் குறுகிய லாபம் பெற நினைத்தார்கள். விடுதலைப் புலிகளால் தண்டிக்கப்பட்ட காமுகனுக்கும், கொள்ளைக்காரனுக்கும், கள்ளக்காணி பிடிப்பவனுக்கும்  இஸ்லாமியன் என்ற போர்வையில் தொடர்ச்சியாக பாதுகாப்பளிக்க மௌலவிகள்  முயன்றபோது தான், முன்னர் யாழ்ப்பாணத்தில் தேவையில்லாத பிரச்சினை இஸ்லாமியர்களால் ஆரம்பமாகியது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சொல்ல வந்த கருத்து என்னவென்றால், அவரவர் மத சுதந்திரம் விடுதலைப் புலிகள் அமைப்பில் / நிர்வாகத்தில் / ஆட்சியில் இருந்தது என்பதும் உண்மையே. அதைத்தான் தமிழர் மதமும் குறிப்பிடுகிறது.

 

கிமு 1000க்கு முன் ராஜராஜ சோழன் தமிழகத்தில் இருந்து - அன்றைய கடாரம் வரை ஆண்டான் இன்றைய இலங்கை உட்பட. தஞ்சை பெரிய கோவில், என்று இன்று அழைக்கப்படும் கோயிலில் யார் குருக்கள்? தமிழனா? இல்லையே. ஏன் அந்த அரசு கொடை சாய்ந்தது? சிந்திக்கவும்.

 

ஒரு கட்டத்தில் மனிதனுக்கு மதம் தேவை. அது அவனை அடிமையாக்ககூடாது. இன்றைய இந்து மதம் உங்களுக்கு முழு சுதந்திரம் தருகிறதா? இல்லையெனில் மனித வாழ்வுக்கு முழு சுதந்திரம் தரும் இயற்கையோடு இயைந்த மனித வாழ்க்கையை முற்றிலும் தருவதுதான் - தமிழர் மதம். அதன் முழு விவரம் தனி கட்டுரையாகத்தான் எழுத முடியும். முடிந்த வரை தேடுங்கள் - கிடைக்கும். பின்னூட்டத்தில் அனைத்தையும் எழுத ஆசை. முடியவில்லை மன்னிக்கவும். கிடைக்கும் விவரங்கள் பின் தருகிறேன்.

 



அக்கால சித்தர்களின் மதமே தமிழர் மதம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மண்ணில் 79 ஆண்டு காலம் வாழ்ந்து, அதில் 50 ஆண்டு காலத்தை தமிழ் ஆராய்ச்சிக்கு செலவிட்டவர் "மொழி ஞாயிறு'' தேவநேயப்பாவணர்.  உலகில் மனிதன் முதன் முதலாகத் தோன்றியது குமரிக்கண்டத்தில்தான் என்பதும், உலகின் முதல் மொழி தமிழ் மொழி என்பதும், இவர் ஆராய்ச்சியில் கண்ட அசைக்க முடியாத முடிவுகள். ஆழ்ந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்ட உண்மைகளை, 35 நூல்களில் பதிவு செய்திருக்கிறார்.  இவர் எழுதிய முக்கியமான நூல்களில் ஒன்று "தமிழர் மதம்.'' ஆதிகாலத்தில் தமிழன் வணங்கிய தெய்வங்கள் எவை, தமிழன் எம் மதத்தைச் சார்ந்தவன் என்பது பற்றி சான்றுகளோடு கூறும் பாவாணர், ஆதிகாலத் தமிழகம் பற்றியும், ஆரிய - திராவிடப் போராட்டம் பற்றியும் பல புதிய தகவல்களைக் கூறுகிறார்.

 

http://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=4&ved=0CD8QFjAD&url=http%3A%2F%2Fwww.dailythanthi.com%2Fnode%2F4164&ei=AcNvUdmaLcyhigeMsICgCg&usg=AFQjCNFynXSM4SxlR1jm-W9bBUF5Tu3fbw&bvm=bv.45373924,d.aGc&cad=rja

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D

 

தமிழர் மதம் எனும் இந்நூலானது 1972 ஆம் ஆண்டில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரால் எழுதப்பட்டது. இந்நூலிலே பழந்தமிழர் மதம், பின்பற்றிய கொள்கைகள், வணங்கிய தெய்வங்கள் என பலவற்றை இலக்கிய சான்றுகளுடன் தருகிறார் பாவாணர்.

இந்நூலின் முன்னுரையிலே மதம், சமயம் ஆகியன தென்சொல்லே (தமிழ் வேர் கொண்ட சொல்) என நிறுவும் தேவநேயர், மதம் தோன்றிய வகை, மூவகை மதம், குமரிநாட்டு மதநிலை ஆகியவற்றையும் தொட்டுச் செல்கிறார்.

பின்னர், நூலிலே மிக விரிவாக குமரி நிலையியல், இடைநிலையியல், நிகழ்நிலையியல், வருநிலையியல், முடிபுரையியல் எனும் ஐந்து தலைப்புக்களில் பண்டைக்கால வழக்கங்கள் குன்றி, வேறு பல செல்வாக்குகள் விரவினமையையும், நிகழ்காலத்தில் தமிழர் பண்பாடு பேண வேண்டிய கட்டாயத்தையும் விளக்குகின்றார்.

 



http://books.google.co.in/books/about/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html?id=4qLROwAACAAJ&redir_esc=y

 



தேவநேயப் பாவாணர் pavanar.jpg

தேவநேயப் பாவாணர் ( Devaneya Pavanar ) (பெப்ரவரி 7, 1902- ஜனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக "மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்" என்று அழைக்கப் பட்டார்.

பிறப்பு

தேவநேயர் அவர்கள் 1902 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஞான முத்தனார் என்னும் கணக்காயருக்கும், அவர் இரண்டாம் மனைவியாகிய பரிபூரணம் என்னும் கணக்காய்ச்சியருக்கும் பத்தாவது மகவாகவும் நான்காவது மகனாகவும் பிறந்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர நயினார் கோவிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவநேயரின் தந்தையார் ஞானமுத்து தோக்கசு (Stokes) அவர்களை கிறிஸ்தவ மத குருவானவர் ஒருவர் எடுத்து வளர்த்து வந்துள்ளார். ஞானமுத்து தோக்கசுவின் பெற்றோர் முத்துசாமி, திருவாட்டி. வள்ளியம்மாள் இருவரும் தோக்கசு அவர்களின் மாளிகையில் காவலர்களாக பணியாற்றி வந்துள்ளனர். அவர்களை கிறித்துவர்களாக்கி தம் பெயரையும் சூட்டி உள்ளார்.

இறுதி நாட்கள்

மதுரையில் ஒரு கூட்டத்தில் சொற்பொழிவு ஆற்றிய பின்னர் அவருக்கு மார்புவலி ஏற்பட்டது. 1981 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் இரவு 12:30க்கு தேவநேயர் உயிர்நீத்தார்.

வாழ்க்கைவரைவு

தேவநேயரின் வாழ்க்கை வரலாற்றை பாவாணர் என்னும் தலைப்பில் இரா. இளங்குமரன் நூல்வடிவில் எழுதியுள்ளார். இந்நூல் 2000ல் வெளிவந்தது. தேவநேயப் பாவாணரின் மகன் தே. மணி தம் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றை பாவாணர் நினைவலைகள் என்னும் தலைப்பில் 2006ல் ஒரு நூலாக எழுதியுள்ளார்.

தேவநேயர் ஆக்கிய நூல்கள்

   1. இசைத்தமிழ் கலம்பகம் (1966) 303 இசைப்பாக்களைக் கொண்ட நூல்
   2. இயற்றமிழ் இலக்கணம் (1940) 148 பக்கங்கள்
   3. உயர்தரக் கட்டுரை இலக்கணம் (1950) 284 பக்கங்கள்
   4. உயர்தரக் கட்டுரை இலக்கணம் இரண்டாம் பாகம் (1951) 251 பக்கங்கள்
   5. ஒப்பியன்மொழி நூல் (1940) 378 பக்கங்கள்
   6. கட்டாய இந்திக் கல்வி கண்டனம் (1937) இசைப்பாடல்கள் 35 கொண்டது. பக்கங்கள் 33
   7. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? (1968) 89 பக்கங்கள்
   8. கட்டுரை கசடறை என்னும் வியாச விளக்கம் (1937) 84 பக்கங்கள்
   9. கட்டுரை வரைவியல் என்னும் இடைத்தரக் கட்டுரை இலக்கணம் (1939, 1952) 160 பக்கங்கள்
  10. கிறித்தவக் கீர்த்தனம் (1981?) 25 இயற்பாக்கள், 50 இசைப்பாக்கள் கொண்டது
  11. சிறுவர் பாடல் திரட்டு (1925) கதை, விளையாட்டு கைவேலை பற்றிய 29 பாடல்கள் கொண்டது
  12. சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து (1943) 104 பக்கங்கள்
  13. சென்னை பல்கலைக் கழகத் தமிழகராதியின் சீர்கேடு (1961) 46 பக்கங்கள்
  14. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் (1949) 120 பக்கங்கள்
  15. தமிழ் இலக்கிய வரலாறு (1979) 326 பக்கங்கள்
  16. தமிழ் நாட்டு விளையாட்டுக்கள் (1954) 144 பக்கங்கள்
  17. தமிழ் வரலாறு (1967) 319 பக்கங்கள்
  18. தமிழர் திருமணம் (1956) 96 பக்கங்கள்
  19. தமிழர் மதம் (1972) 200 பக்கங்கள்
  20. தமிழர் வரலாறு (1972) 382 பக்கங்கள்
  21. தமிழின் தலைமை நாட்டும் தனிச்சொற்கள் (1977) செந்தமிழ்ச் செல்வியில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு (தனி நூல் அல்ல)
  22. திராவிடத்தாய் (1944, 1956) 112 பக்கங்கள். முன்னுரை, மலையாளம், கன்னடம், துளு, முடிவு ஆகிய 6 பாகமுடையது.
  23. திருக்குறள் தமிழ் மரபுரை (1969) 812 பக்கங்கள் கொண்டது.
  24. தொல்காப்பியக் குறிப்புரை (1944) (நிறைவு பெறாத நூல்)
  25. பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் (1966) 240 பக்கங்கள்
  26. பழந்தமிழராட்சி (1952) 170 பக்கங்கள.
  27. மண்ணில்விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை (1978) 250 பக்கங்கள்
  28. முதல்தாய்மொழி அல்லது தமிழாக்கவிளக்கம் (1953) 344 பக்கங்கள். குறிப்பொலிக் காண்டம், சுட்டெலிக் காண்டம் என இரு பகுதிகள் கொண்டது
  29. வடமொழி வரலாறு (1967) 350 பக்கங்கள் கொண்டது.
  30. வண்ணணை மொழி நூலின் வழுவியல் (1968) 122 பக்கங்கள்.
  31. வேற்சொற் கட்டுரைகள் (1973) 298 பக்கங்கள்.
  32. The Primary Classical Language of the World (1966) 312 பக்கங்கள்
  33. The Lemurian Language and its Ramifications (1984) 400 பக்கங்கள் (வெளியீடு தெரியவில்லை)
  34. இசையரங்கு இன்னிசைக் கோவை (1969) இசைப்பாடல்கள் 34 உள. 31 பக்கங்கள்.
  35. என் அண்ணாமலை நகர் வாழ்க்கை (1988) பதிப்பாசிரியர் பேரா. கு.பூங்காவனம். பக்கங்கள்??
  36. கட்டுரை எழுதுவது எப்படி? 36 பக்கங்கள்
  37. கடிதம் எழுதுவது எப்படி? (1984) 36 பக்கங்கள்
  38. செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி - முதன் மண்டலம்- முதற்பகுதி (1985) 574 பக்கங்கள்.
  39. பாவாணர் பாடல்கள், பாவாணர் பல்வேறு காலங்களில் இயற்றிய 320க்கும் மேலான பாடல்களை தொகுப்பசிரியர் இரா. இளங்குமரன் தொகுத்து.
  40. பாவாணர் மடல்கள், பாவாணரின் கடிதங்கள் சுமார் 600ஐத் தொகுத்து 1988ல் வெளியானது. தொகுப்பு. இரா. இளங்குமரன்.

http://senthamil.org/leaders/devaneya_pavanar.htm

 

நான் சொல்ல வந்த கருத்து என்னவென்றால், அவரவர் மத சுதந்திரம் விடுதலைப் புலிகள் அமைப்பில் / நிர்வாகத்தில் / ஆட்சியில் இருந்தது என்பதும் உண்மையே. அதைத்தான் தமிழர் மதமும் குறிப்பிடுகிறது.

 

கிமு 1000க்கு முன் ராஜராஜ சோழன் தமிழகத்தில் இருந்து - அன்றைய கடாரம் வரை ஆண்டான் இன்றைய இலங்கை உட்பட. தஞ்சை பெரிய கோவில், என்று இன்று அழைக்கப்படும் கோயிலில் யார் குருக்கள்? தமிழனா? இல்லையே. ஏன் அந்த அரசு கொடை சாய்ந்தது? சிந்திக்கவும்.

 

ஒரு கட்டத்தில் மனிதனுக்கு மதம் தேவை. அது அவனை அடிமையாக்ககூடாது. இன்றைய இந்து மதம் உங்களுக்கு முழு சுதந்திரம் தருகிறதா? இல்லையெனில் மனித வாழ்வுக்கு முழு சுதந்திரம் தரும் இயற்கையோடு இயைந்த மனித வாழ்க்கையை முற்றிலும் தருவதுதான் - தமிழர் மதம். அதன் முழு விவரம் தனி கட்டுரையாகத்தான் எழுத முடியும். முடிந்த வரை தேடுங்கள் - கிடைக்கும். பின்னூட்டத்தில் அனைத்தையும் எழுத ஆசை. முடியவில்லை மன்னிக்கவும். கிடைக்கும் விவரங்கள் பின் தருகிறேன்.

 

அக்கால சித்தர்களின் மதமே தமிழர் மதம்.

 

உங்கள் கருத்து முழு யதார்த்தையும் பிரதிபலிக்கவில்லை என்றாலும் 500, 600 வருடங்களுக்கு முற்பட்ட சூழலில் இந்தக் கருத்தில் ஓரளவு நியாயம் இருந்ததாக கொள்ளமுடியும். சித்தர்கள் மட்டுமல்ல நாயன்மார்களும் தமிழர்களின் ஓர் அங்கம் தான்.

ஆனால் இன்று தமிழர் மதம் என்று சொல்லும் சூழ்நிலை இல்லை. காரணம் பிற்காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக மதம் மாறிய கிறிஸ்தவர்களும் தம்மை தமிழராகவே கருதுகின்றனர். அவர்களும் தமிழரின் ஓர் அங்கம் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே தமிழரின் மதம் என்று இக்காலகட்டத்தில் பேசுவதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை.

எனவே இப்போது நீங்கள் கூறும் தமிழர் மதம் என்ற கருத்து குழப்பகரமானது.

இலங்கையில் உள்ள இசுலாமியர்கள்  தமது சுயநல, மதவெறி இயல்பு காரணமாக தாமாகவே முரண்பட்டு தாம் தமிழரில்லை, தமிழ் பேசுபவர்கள்  என்று கூறுவதில் பெருமை கொள்பவர்களாக உள்ளார்கள். ஆனால்  தமிழகத்தில் இந்த சூழ்நிலை இல்லை.

 

 

 

 

  

தமிழர் மதம் எனும் இந்நூலானது 1972 ஆம் ஆண்டில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரால் எழுதப்பட்டது. இந்நூலிலே பழந்தமிழர் மதம், பின்பற்றிய கொள்கைகள், வணங்கிய தெய்வங்கள் என பலவற்றை இலக்கிய சான்றுகளுடன் தருகிறார் பாவாணர்.

 

இந்நூலின் முன்னுரையிலே மதம், சமயம் ஆகியன தென்சொல்லே (தமிழ் வேர் கொண்ட சொல்) என நிறுவும் தேவநேயர், மதம் தோன்றிய வகை, மூவகை மதம், குமரிநாட்டு மதநிலை ஆகியவற்றையும் தொட்டுச் செல்கிறார்.

 

 

முதலில் உங்கள் விரிவான பதில் எழுதும் முயற்சிக்கு நன்றிகள்!

 

தமிழர் மதம் என்றில்லாமல சித்தர்களைப் பற்றிய ஆய்வுகளை  தமிழ்ச் சித்தர்கள் என்ற தலைப்பில்  வேறொரு பதிவில் இணைத்தால் அவற்றை நானும் விரும்பிப் படிக்க ஆவலாய் உள்ளேன்.

ஆனால் தேவநேயப் பாவாணர் பற்றிய கருத்தை இங்கு ஏன்  இணைத்தீர்கள் என்பதை தெளிவுபடுத்தினால் நல்லது.

மறைமலை அடிகளாருடன் தேவநேயப் பாவாணரை ஒப்பிட முடியாது.

தேவநேயப் பாவாணர்  தமிழ் மீது பற்றுக் கொண்டிருந்தார். ஆனால் தேவநேயப் பாவாணர் பல தடவைகள் மதம் மாற்றும் வெறிகொண்ட குழுவினரின் பண உதவியுடன் உண்மையை திரித்து ஆவணபடுத்துவதில் அவ்வப்போது முயன்றவர் என்பதை சில சந்தர்பங்களில் கேள்விப்பட்டுள்ளேன்.

 

ஏற்கனவே நிறுவப்பட்ட பல உண்மைகளைக் கூறி அத்துடன் சிறிதளவு விசத்தைக் கலக்கும் தந்திரத்தை மதம் மாற்றும் வெறியர்கள் அக்காலத்தில் கொண்டிருந்தார்கள் என்று கூறுகின்றனர்.

 

தேவநேயப் பாவாணர்  தமிழ் பற்று மிக்கவராக இருந்தாலும், அவ்வப்போது மதம் மாற்றும் வெறிகொண்ட குழுவினரின் பண உதவிக்காக அவர்களுடன் தொடர்புகளைப் பேணியதால் அவரது ஆக்கங்களில் உண்மைத் தன்மை அவ்வளவாக இருக்காது, சில உண்மைகளை திரிவுபடுத்தும் நோக்கம் மறைபொருளாய் இருக்கும் என்று சில ஆய்வாளர்கள் கூறக் கேட்டுள்ளேன்!  

கண்ணதாசனும் மதம் மாற்றும் வெறிகொண்ட குழுவினரின் சூழ்ச்சிகளில் சிக்காது வெளியேறி தான் பட்ட அனுபவங்களின் அடிப்படையில், இறுதிக்காலத்தில் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற தொகுதியை படைத்தார். கடந்த நூற்றாண்டில் தான் பட்டறிந்த அனுபவத்தை தத்துவங்களாக வெளியிட்டத்தில் கண்ணதாசன் முன்னிலையில் இருக்கும் ஒருவர் என்பதை உங்களில் எவராலும் மறுக்க முடியாது என நினைக்கிறேன்!

 

இதில் நீங்கள் ஆர்வம் கொண்டிருப்பதால் இந்தவிடயம் தொடர்பாக மேலும் சில கருத்துக்களை தேடிப்  பதியுங்கள்.

இன்று இந்துமதம் என்றால் சைவ+வைஷ்ணவ மதம் தான், வடஇந்தியாவில் இருந்து தமிழ்நாட்டின் எல்லாபகுதிக்குமே கடவுளை கும்பிட வருகிறார்கள், ஆனால் தென்னிந்தியாவில் இருந்து காசிக்கும், கைலாசத்திற்கும் மட்டும் தான் கடவுளை கும்பிட செல்லுகிறார்கள் , இதிலிருந்தே புரிந்து கொள்ளளாம் இந்து சமயம் என்றாள் எங்களது மதம் தான்

இந்து என்ற சொல் இடையில் வந்திருக்கலாம் அதற்காக நாங்கள் அதை பழிக்க தேவையில்லை
எங்களை பிரிப்பதற்காக தான் இந்து, பார்ப்பான், அடிமை என்று வெளியில் இருந்து வந்த மதம் பரப்பும் கோஸ்டிகள் கதைகள் பரப்பும் ,
jidlivi நீங்கள் சைவரா?
அல்லது மறுபிறப்படைந்த தூய கிருத்துவரா?

 



கிருஸ்த்தவனுகள் தமிழ் பற்று கொண்டவாகளாக காட்டிகொண்டதே மதம் பரப்ப தானே,
தங்களது பாடல்களையே, பெரியபுராணம் ராகத்தில் படித்து விட்டு பெரியபுராணம் கிறிஸ்த்துவை பற்றி பாடப்பட்டது என்று கதை கட்டிவிடுபவனுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இன்று இந்துமதம் என்றால் சைவ+வைஷ்ணவ மதம் தான்."

 

ஆக இந்து மதம் என்று ஒன்று இல்லை என ஒப்புக் கொண்டதற்கு என் நன்றிகள். தமிழரின் உயர் தெளிவான தெரிவுகளை (சைவம்+வைணவம்=தமிழின் கடனாளிகள்) கடன் வாங்கி ஆக்கப்பட்டதுதான் இந்து மதம். ஆக தமிழரின் தெளிவான தெரிவுகள் என்ன? உண்மை என்ன என்பது தெரியாமல் இருக்கும் நம் போன்ற இன்றைய தலைமுறை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லும் 'அறிவுச் சொத்துதான்' தமிழர் மதம். தமிழர் மதத்தை இப்போதாவது தேடுவோம். தமிழில் இருந்த வேதாந்தங்கள் எங்கே? அதிலுள்ள எச்சங்கள்தான் - ரிக், யசுர்......போன்ற வேதங்களில் உள்ளது.

 

உண்மை சித்தர்களிடம் இருந்தாலும் சரி, நாயன்மார்களிடம் இருந்தாலும் சரி. 500...600 வருடங்களுக்கு முன் இருந்த உண்மை இன்று பொய் ஆக முடியாது.

 

நம் தமிழரின் பண்டைய அறிவுச் சொத்துக்கள் சீனாவிலும், ஜெர்மனியிலும் முடங்கி கிடக்கிறது. யாழ் நூலகத்தை முற்றிலும் இழந்து நிற்கிறோம். அங்கே, இங்கே சிதைந்து கிடக்கும் அறிவுச் சொத்துகளை கூட்டி சேர்க்க வேண்டிய தலையாய கடமை நம் முன் நிற்கிறது.

19. தமிழர் மதம் (1972) 200 பக்கங்கள் - பாவாணரின் நூலை வாசிக்கவும்.

இன்றைய கிறித்தவ மதமானாலும் சரி, இசுலாமிய மதமானாலும் சரி - மனிதனை சுதந்திரமாக சிந்திக்க விட வேண்டும்.

 

"இந்து என்ற சொல் இடையில் வந்திருக்கலாம் அதற்காக நாங்கள் அதை பழிக்க தேவையில்லை
எங்களை பிரிப்பதற்காக தான் இந்து, பார்ப்பான், அடிமை என்று வெளியில் இருந்து வந்த மதம் பரப்பும் கோஸ்டிகள் கதைகள் பரப்பும் ,
jidlivi நீங்கள் சைவரா? அல்லது மறுபிறப்படைந்த தூய கிருத்துவரா?"

 

நான் யார்? என்ற கேள்வி நல்லது. நான் ஒரு தமிழன். மனிதன். அவ்வளவே.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நான்குபேர்.. அதில் ஒருவர் ஆதிசங்கரர்.. மற்றவர்கள் பெயர்களை மறந்துவிட்டேன். இந்த நான்குபேரும்தான் அவரவர் காலப்பகுதிகளில் பல்வேறு கடவுளரையும் இணைத்து (வடக்கில் இருக்கும் அந்த அவர்தான் தெற்கில் இருக்கும் இந்த இவர் போன்ற விளக்கங்கள்) இந்து மதத்திற்குள் எல்லோரையும் சேர்த்தார்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ள இடம் முழுக்க சிங்களவன் புத்தர்சிலையையும் அரசமரத்தையும் தாட்டுக்கொண்டு வரேக்கை இப்பிடியான அறிக்கை விட்ட யோகேஸ்வரனை கொஞ்சமாவது பாராட்டத்தான் வேணும்.அதுவும் மட்டக்களப்பிலை........பயமில்லாமல்.....

  • கருத்துக்கள உறவுகள்

இசையின் கருத்துடன் உடன் படுகின்றேன்!

 

தமிழன் என்ற தனித்துவ அடையாளத்தின் அழிவின் ஆரம்பமே, எமது மதம் தான், என்பதை உறுதிபடக் கூறுவேன்!

 

சமணமதம், என்பது ஒரு அழகிய மதம்! அதிலிருந்து தான், வள்ளுவரின் பொன்னான கருத்துக்கள் உதித்தன!

 

ஞானப்பாலுண்ட சம்பந்தன், இவர்களைப் படுத்தியபாடு கொஞ்சநஞ்சமல்ல!

 

மானினேர் விழி, மாதராய் வழுதிக்கு மாபெரும் தேவி கேள்,

பானல் வாயொரு பாலனீங்கிவன் என்று நீ பரிவெய்திடேல்!

 

மூன்று வயதுப்பாலகனுக்கு, அரசியின் விழியை வர்ணிக்கும், திமிர் அப்போதே இருந்திருகின்றதே?

 

இது தான், சோவுக்கும், சுப்பிரமணியன் சுவாமிக்கும், பிரணாப் முகர்ஜிக்கும், இந்து ராமுக்கும் இருக்கிறது!ஏனெனில் நாங்கள் இன்னும் இழிச்ச வாயர்கள்!

 

வெள்ளைக் காரரின், கிறிஸ்துவத்தை ஆபிரிக்கன் காவிக்கொண்டு திரிவது போலவே, வட இந்தியனின் தெய்வங்களை, நாங்கள் காவிக்கொண்டு திரிகிறோம்!

 

சமணர்கள், தங்கள், நம்பிக்கைக்காகக் கழுவேற்றப்பட்டார்கள்! பாண்டிய மன்னன், பிராமணர்களால் வழிநடத்தப் படுகிறான்!

 

இதே போல, ராஜராஜ சோழனும், ஆரியர்களால் வழிநடத்தப் பட்டே, அனைத்தையும் இழந்தான்!

 

இன்றும் இந்தியாவை, வழிநடத்துபவர்கள் இவர்களே!

 

யாரோ, ஒரு ராமன் என்ற கற்பனை நாதாரிக்காக, எமது இனம், எதற்குத் தொடர்ந்தும் விலை கொடுக்கவேண்டும்? :o

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள வீடுகளில் வாசலில் பிள்ளையாரின் படத்திற்கு பதிலாக ஆஞ்சநேயரின் படம் தான் தொங்குகிறது....ஆஞ்சநேயர்சிலைகள் மிகவும் பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது ...மக்களை இலகுவாக கவர்வதற்காக இருக்ககூடும்.... இன்று யாழ்மண்ணில் மொழியையும்,மதத்தையும் பரப்புவதில் மண்வாசிகள் முயற்சி செய்கிறார்கள்...எந்த மதம் எந்த மொழி நிலைக்கும் என காலம்தான் பதில் சொல்ல வேண்டும்..... சைவ கோவில்கள் எல்லாம் இன்று இந்து கோவிலாக மாற்றமடைகிறது..... அன்மையில் இந்தியாவுக்கு எதிராக பிக்குமாரால் கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பதாதைகளில் "இராவண சக்தி"என எழுதியிருந்தார்கள் அதாவது இராணவனின் வம்சம் தாம் என்று சொல்லுகிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.