Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“WE GOT HIM” படகில் ரத்த வெள்ளத்தில் சிக்கிய பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்களில் உடல் முழுக்க ரத்தம் தோய்ந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சந்தேக நபர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

ஒருவரது வீட்டின் பின்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றுக்குள் மறைந்திருந்த நிலையில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதற்குமுன் இவரது மறைவிடத்தை சூழ்ந்துகொண்ட போலீஸ் சுமார் 30 தடவைகள் சுட்டபோது, இவருக்கு காயம் ஏற்பட்டு இருந்தது.

அந்தக் காயத்துடன் ரத்தம் சொட்டச் சொட்ட தப்பியோடி, வீடு ஒன்றின் பேக்-யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுக்குள் மறைந்த 19 வயது சந்தேக நபர் ஷோக்கர் சர்னயேவ் கைது செய்யப்பட்டார் என்பதை பாஸ்டன் போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் செசன்யா அருகே உள்ள ரஷ்ய பகுதியைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்து சிறு வயதில் கஸகஸ்தான் நாட்டுக்கு குடிபெயர்ந்து, பின்னர் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்கள். இருவரும் சகோதரர்கள். நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த சகோதரரின் பெயர், தமேர்லான் சர்னயேவ்.

போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அண்ணன் தமேர்லான் பலியானார். ஷோக்கர் தப்பியோடினார். அவரைப் பிடிக்க ஆயிரக்கணக்கான போலீசார் களத்தில் இறங்கிய நிலையில், அவர் ஃபிராங்லின் வீதியில் உள்ள வீட்டில் பதுங்கியிருக்கும் தகவல் போலீஸூக்கு கிடைத்தது.வீட்டை போலீஸ் சூழ்ந்துகொண்ட நிலையில், அவர் அங்கிருந்து தப்பியோடினார். இந்த ரெயிடின்போது சுமார் 30 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடந்த சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அத்துடன் போலீஸ் கையெறி குண்டுகளையும் வீசியதாக சொல்லப்படுகிறது.

போலீஸ் அவரது இருப்பிடத்தை சூழ்ந்து கொண்ட நேரத்தில் இருந்து 2 மணி நேரத்தின் பின்னரே, படகில் மறைந்திருந்தவரை உயிருடன் கைப்பற்ற முடிந்தது.

முன்னதாக சந்தேகத்துக்குரிய நபர்களின் படங்கள் என எஃப்.பி.ஐ. வெளியி்ட்ட போட்டோக்களில் இருந்த இருவரில் ஒருவர் கொல்லப்பட, இரண்டாவது நபர் போலீஸிடம் உயிருடன் சிக்கியுள்ளார்.

இவர் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் பாஸ்ட்டன் மேயர் டாம் மானியோ, “We got him” என ட்வீட் பண்ணியதுடன், போலீஸ் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது. இனி விசாரணை ஆரம்பமாகும். சந்தேக நபர்கள் இருவருக்கும் அல்-காய்தாவுக்கும் தொடர்பிருக்கலாம் என்று கூறப்பட்டது எந்தளவுக்கு உண்மை என அப்போது தெரியவரும்.

http://madawalanews.com/news/world/5656

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மில்லியன் அமெரிக்கர்களை வீட்டுக்குள் முடக்கி.. 25,000 அமெரிக்க படைத்துறையினரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி.. எவ் பி ஐ க்கே ஆப்படிச்சு.. ஒபாமாவே இரண்டு தடவை வந்து மக்களுக்கு விளக்கம் சொல்ல வைச்சு.. இரண்டு சின்னப் பொடியங்கள்.. செய்த இந்தச் செய்கையானது.. அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுக்கு நிச்சயம் நல்ல பாடம் ஒன்றை கற்றுக் கொடுத்திருக்கும்..!

 

வெறுமனவே ஆயுத்தால்..பயங்கரவாத உச்சரிப்பால் எதனையும் அடக்கிவிடலாம் என்று அமெரிக்கா தப்புக் கணக்குப் போட்டு வருகிறது. 10 வருடங்களாக அதுவும் 9 வயதில் அமெரிக்காவிற்கு வந்து படிச்சு.. புலமைப்பரிசிலும் பெற்று.. மருத்துவத்துறையில் கல்வி கற்கும்.. ஒரு மாணவன் இப்படி செய்யத் தூண்டப்பட்டிருக்கிறான்னா.. அதற்குப் பின்னால் மனித சமூகம் தொடர்பில் அமெரிக்காவின் அணுகுமுறைகளில் உள்ள தவறுகளையும் குறைபாடுகளையும் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் கவனமாக மீளாய்வு செய்ய வேண்டிய நிலைக்கும்.. அமெரிக்காவின் அணுகுமுறைகள்.. மனித இதயங்களை வெல்லத்தக்க வகைக்கு மாற்றப்படவும் இந்த நிகழ்வுகள் அமெரிக்காவை நிர்ப்பந்தித்து நிற்கின்றன.

 

இந்த இரண்டு இளைஞர்களுக்கும்.. குடிப்பழக்கம் இல்லை. போதைப் பழக்கம் இல்லை. கேர்ள் பிரண்டும் இல்லை..! ஆனால் ஒருவர் குத்துச் சண்டையில் திறமைசாலி. மற்றவர் படிப்பில் சுட்டி..! இவர்களின் இதயங்களில் ஒரு ஏக்கத்தை நிரந்தரப் பாதிப்பை விட்டுச் சென்ற அமெரிக்காவின் அணுகுமுறைகளே உண்மையில்.. இத்தனைக்கும் காரணம்..! அதைத் திருத்தாமல்.. இவ்வாறான சம்பவங்களை எப்போதுமே கட்டுப்படுத்தவும் முடியாது. அதனைச் செய்யாமல்.. இவர்களை தண்டிப்பது கூட நீதியும் கிடையாது.

 

செச்னிய பிரச்சனையில் அமெரிக்கா ஆரம்பத்தில் செச்சின் கிளர்ச்சிக்காரர்களை ரஷ்சியாவிற்கு எதிராக தூண்டிவிட்டு.. அவர்களை அழிவின் பாதைக்கு இட்டுச் சென்றுவிட்டு.. அப்படியே கைவிட்டு விட்டு விலகி நின்று கொண்டதும்.. உலகம் மறந்த ஒரு வரலாறு. செச்னியாவில் ரஷ்சியா மேற்கொண்ட பல மனித உரிமை மீறல்களை இனப்படுகொலைகளை ஆரம்பத்தில் கண்டித்த அமெரிக்க மேற்கு நாடுகள்.. பின்னர் அப்படியே அவற்றை கைவிட்டதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இது கூட அந்த இளைஞர்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகளை நோக்கிச் செல்ல தூண்டி இருக்கலாம்.

 

சிங்கள அரசின்.. ஈழத்தமிழ் படுகொலையிலும் அமெரிக்கா இதே நாடகத்தையே நடத்தி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவனின் தகவல்களில் தவறுகள் உள்ளன. பொஸ்ரன், மற்றும் கேம்பிரிஸ் மக்கள் தொகை என்பது 6, 7 இலட்சம் வரையிலானவர்களே. அதுவும் அவர்கள் பதுங்கியிருந்த பிரதேசத்தில் மக்கள் தொகை குறைவாகும். தேடுதலுக்காக 900 பேரையே பாவித்திருந்தார்கள். அமெரிக்காவில் படுகொலைகள், கொலைகள் என்பது எல்லா நாடுகள் போலவும் இருக்கின்றது. ஆயுதப்பாவனை என்பது எல்லோரும் வைத்திருக்கலாம் என்ற சூழலே இது. ஆயினும் அமெரிக்கா இந்த விடயத்தில் அதிக அக்கறை காட்டியது, எந்த வெளிநாட்டு சக்திகளும் இதில் ஈடுபடக்கூடாது என்பதோடு, அப்படியான செயல்கள் எனி நடக்காமல் இருக்க இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று. ஓபாமாவுக்கு இது ஒருவகை அரசியல் பிரச்சாரமும் ஆகும். அவர் புஸ் போல இஸ்லாமிய எதிர்ப்பினை வெளிப்படுத்தாமல் மென்போக்குக் கொண்டவராகச் சித்தரிக்கப்படும் சூழலில் அதை உடைக்க வேண்டிய தேவையை இச் சந்தர்ப்பத்தில் அவர் பாவித்துக் கொள்ள முயன்றார். முதலாது நபருக்கு காதலி இருப்பதாகவும், குழந்தை இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இணையத்தில் இந்தப் பெண் தான் காதலி என்றும் தகவல் பரிமாறப்படுகின்றது. http://i1-news.softpedia-static.com/images/news-700/Tamerlan-Tsarnaev-Dead-Bombing-Suspect-Was-a-Muslim-a-Boxer.png?1366382928

  • கருத்துக்கள உறவுகள்
இவர்களின் இதயங்களில் ஒரு ஏக்கத்தை நிரந்தரப் பாதிப்பை விட்டுச் சென்ற அமெரிக்காவின் அணுகுமுறைகளே உண்மையில்.. இத்தனைக்கும் காரணம்..! அதைத் திருத்தாமல்.. இவ்வாறான சம்பவங்களை எப்போதுமே கட்டுப்படுத்தவும் முடியாது. அதனைச் செய்யாமல்பொறுப்பு....
அமேரிக்கா அரசு,ரஸ்யாஅரசு,இஸ்லாமிய அடிப்படைவாதாமைப்புக்கள்,பெற்றோர்.....என்று வைத்துகொண்டாலும்... மனித உரிமைகள் மீறல் என்று வரும் பொழுது மேற்கத்தைய,(அமேரிக்காஉட்பட்ட )நாடுகளில் உள்ள தனிநபர்கள்தான் குரல் கொடுக்கின்றனர்..... .ரஸ்யா,சீனா,இஸ்லாமிய போன்ற எனைய நாடுகளில் உள்ள தனிநபர்கள் குரல் கொடுப்பதில்லை....அமெரிக்கா எதிராக குரல் கொடுப்பதுமட்டும் அவர்களது கொள்கை ....
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவனின் தகவல்களில் தவறுகள் உள்ளன. பொஸ்ரன், மற்றும் கேம்பிரிஸ் மக்கள் தொகை என்பது 6, 7 இலட்சம் வரையிலானவர்களே. அதுவும் அவர்கள் பதுங்கியிருந்த பிரதேசத்தில் மக்கள் தொகை குறைவாகும். தேடுதலுக்காக 900 பேரையே பாவித்திருந்தார்கள். அமெரிக்காவில் படுகொலைகள், கொலைகள் என்பது எல்லா நாடுகள் போலவும் இருக்கின்றது. ஆயுதப்பாவனை என்பது எல்லோரும் வைத்திருக்கலாம் என்ற சூழலே இது. ஆயினும் அமெரிக்கா இந்த விடயத்தில் அதிக அக்கறை காட்டியது, எந்த வெளிநாட்டு சக்திகளும் இதில் ஈடுபடக்கூடாது என்பதோடு, அப்படியான செயல்கள் எனி நடக்காமல் இருக்க இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று. ஓபாமாவுக்கு இது ஒருவகை அரசியல் பிரச்சாரமும் ஆகும். அவர் புஸ் போல இஸ்லாமிய எதிர்ப்பினை வெளிப்படுத்தாமல் மென்போக்குக் கொண்டவராகச் சித்தரிக்கப்படும் சூழலில் அதை உடைக்க வேண்டிய தேவையை இச் சந்தர்ப்பத்தில் அவர் பாவித்துக் கொள்ள முயன்றார். முதலாது நபருக்கு காதலி இருப்பதாகவும், குழந்தை இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இணையத்தில் இந்தப் பெண் தான் காதலி என்றும் தகவல் பரிமாறப்படுகின்றது. http://i1-news.softpedia-static.com/images/news-700/Tamerlan-Tsarnaev-Dead-Bombing-Suspect-Was-a-Muslim-a-Boxer.png?13663829

 

இது குறித்து பிபிசி மற்றும் அல்ஜஜீராவிடம் தான் விசாரணை நடத்தனும்..!

 

அமெரிக்க வரலாற்றில் நடந்த மிகப் பெரிய மனித வேட்டை என்று பிபிசியில் குறிப்பிட்டு மேற்படி தகவல்கள் சொல்லப்பட்டிருந்தன.

 

மேலும் போஸ்டன் நகரத்திற்கான போக்குவரத்து முற்றாக முடக்கப்பட்டதன் மூலமும் மக்களை வீட்டுக்குள் இருக்க கேட்டுக் கொண்டதன் மூலமும் அமெரிக்காவின் 7 வது பெரிய நகரம் முடக்கப்பட்டதாகவும் ஒரு மில்லியன் மக்கள் இதில் பாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

 

எல்லாமாக  (எவ் பி ஐ.. போஸ்டன் பொலிஸ்.. கேம்பிரிச் பொலிஸ் படை.. மற்றும் இதர படைகள்) 25,000 பேர் பாவிக்கப்பட்டதாகச்ச் சொல்லப்பட்டுள்ளது.)

 

மேலும்.. தங்களுக்கு அமெரிக்காவில் காதலிகள் கிடைக்கவில்லை என்றும்.. தங்களால் அமெரிக்கர்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்றும்.. சந்தேக நபர் 1 குறிப்பிட்டதாகச் செய்திகளில் கூறப்பட்டது.

 

இந்தச் சந்தேக நபர்கள் பற்றி ஊடகங்கள் பல அதிகாரிகளின் உறுதிப்படுத்தல் இல்லாமல் செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் குற்றச்சாட்டப்பட்டிருந்தது. அதனையும் பிபிசி சொன்னது.

 

பிபிசி இந்த நிகழ்வுகளை நேரஞ்சல் செய்து கொண்டிருந்ததால்.. நாங்கள் அவதானித்த நேரங்களில் பெறப்பட்ட செய்திகளின் தொகுப்பே மேலுள்ளது. தற்போதைய செய்திகளில் இந்த விபரங்கள் இல்லை. சந்தேக நபர் 2 குறித்தே இப்போது பேசப்படுகிறது. அந்த வகையில் மேற்படி தகவல்களை தேடிக் கண்டுபிடிப்பது அவ்வளவு இலகு அல்ல.

 

இவை குறித்த Fact files வரும் போது இங்கே இணைக்கிறேன். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது பிபிசி அப்டேட் செய்துள்ள இவர்களின் புரபைல் பற்றிய குறிப்பில்... சந்தேக நபர் 1 வெளியிட்டிருந்த படங்களில் அரைவாசி போர்த்துக்கீச மற்றும் அரைவாசி இத்தாலிய கலப்பு.. ஒருவரை பெண் நண்பி என்று குறிப்பிட்டு படம் போட்டிருந்ததாகச் செய்தி சேர்க்கப்பட்டுள்ளது... (உண்மையில் கேர்ள் பிரண்டா என்பது உறுதி செய்யப்படவில்லை.) இவருக்கு குழந்தை குட்டி உள்ளது பற்றிய குறிப்புக்கள் இல்லை.

 

He is quoted as saying: "I don't have a single American friend. I don't understand them."

 

The well-built boxer is photographed with his young "half Portuguese, half Italian" girlfriend whom he claims has "converted to Islam". He says that he is "very religious".

 

He also told the photographer that he did not drink or smoke any more - "God said no alcohol" - and expressed concern that there were "no values anymore".

 

http://www.bbc.co.uk/news/world-us-canada-22219116

 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
http://www.news.com.au/world-news/bomb-suspect-tamerlan-tsarnaev-brainwashed-his-young-all-american-bride-katherine-russell/story-fndir2ev-1226625873486 கொல்லப்பட்ட முதலாவது சந்தேகநபரின் மனைவி பற்றிய செய்தி.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.