Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டிஷ் மகாராணியாரின் உதாரணத்தைப் பின்பற்றுக! இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போர் நடைபெற்றபோது குறுகிய நேரத்தில் உண்ணாவிரதம் இருந்து நாடகம் ஆடிய கருணாநிதி தற்போது பொதுநலவாய நாடுகளின் கூட்டத்திற்கு இந்தியா போகக்கூடாது என்றால் இந்திய மத்திய அரசாங்கம் கேட்கும்தான் போங்கள்!

  • தொடங்கியவர்
இலங்கையரசு அமெரிக்கா,பிரித்தானியாவிற்கு தெரியாமல் அவர்கள் உதவி இல்லாமல் தான் யுத்தத்தை நடத்தி முடித்தது இல்லையா மருதங்கேணி அதனாலே மகாராணிக்கு ஏற்பட்ட கோபத்தினாலே அவர் இலங்கைக்கு போக மறுத்து விட்டார்.
 
பாராளுமன்றம்,அவட அரண்மனை அந்த வீதியில் நின்று ஒரு மாதம் ஆர்ப்பாட்டம் செய்யேக்குள்ள கூட திரும்பி பார்க்காத ராணிக்கு இப்பத் தான் தெரியுமாக்கும் வன்னியில் இவ்வளவு பெரிய அழிவு நடத்திருக்குது என்று :(

இறுதிப் போர் நடைபெற்றபோது குறுகிய நேரத்தில் உண்ணாவிரதம் இருந்து நாடகம் ஆடிய கருணாநிதி தற்போது பொதுநலவாய நாடுகளின் கூட்டத்திற்கு இந்தியா போகக்கூடாது என்றால் இந்திய மத்திய அரசாங்கம் கேட்கும்தான் போங்கள்!

 

 

பழைங்கதை பேசுவதில் பெருமை உள்ளவர்களாமல் முற்போக்காக சிந்திக்க வேண்டும்.

 

உண்ணா விரத்தின் பின்னர் தான் பலவற்றை கருணாநிதி செய்தாக காட்டியிருக்கிரார்.  அவரை நம்பாதவன். அதே மாதிரி அதையும் கேட்டு நடப்பத்தாக் காங்கிரசும் நாடகம் ஆடியிருக்கிறது. நான் அவற்றை இங்கே பட்டியல் போட்டு அவர்களை நியாயப்படுத்த முயவில்லை. நான் அவர்களை நம்பவில்லை. ஆனால் அது வல்ல நாம் போகும் பாதை.

 

இதுவரை செய்திகளில் ராணி மகிந்தாவை சந்திப்பதை தவிர்க்கும் படி ஆலோசனை செய்யப்பட்டத்தாக செய்திகளில் வந்திருக்கு. ராணி கருணாநிதி மாதிரி சுதுமாத்தல்ல. யானையை குருடர் தடவிப்பார்த்த்து போல் அரசியல் எழுதுவதை தவிர்க்க வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொத்து கொத்தாகப் படுகொலையாகக் காரணமான மகிந்தவின் இரத்தக்கறைகள் படிந்த கரத்தை கைலாகு கொடுக்க விரும்பாத காரணத்தாலும், இலங்கையில் மனித உரிமைகள் நிலை நாட்டப்படவேண்டும் என்பதில் அக்கறை உள்ளதாலும், பிரித்தானியச் சாம்ராஜ்யத்தின் பெருமையை நினைவுபடுத்தும் பொதுநலவாய அமைப்பின் தலைவியாக மகாராணியார் இருந்த போதிலும், இலங்கையில் நடக்கவுள்ள மாநாட்டில் கலந்துகொள்ளாமல் அமைதியாக எதிர்ப்பைக் காட்டியுள்ளார் என்று எழுதி வாசிக்க நன்றாகத்தான் இருக்கின்றது.

முதலில் இலங்கையில் இந்த பொதுநலவாய நாடுகளின் கூட்டம் நடக்கவுள்ளது இலங்கையரசிற்கு இராஜதந்திர ரீதியில் பெரிய வெற்றி என்பதையாவது ஒப்புக்கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த ராணி இப்ப செல்லாகாசு...54 பொதுநல நாடுகளின் தலைவர்கள் மகிந்தாவுடன் கைகுழுக்கி படம் எடுக்க வேணும் என்று நிற்கினம் .... ஒன்றா ...54ஆ.....மனித உரிமை செயல்பாட்டாளர்களின் முயற்சியை இந்த பொதுநலமாநாடு தோற்கடித்துவிட்டது ...வெற்றி மகிந்தருக்கே....அதாவது மனித உரிமைசெயட்பாட்டளர்களுக்கும் மனித உரிமை மீறியவர்களுக்கும் இடையில் நடந்த போட்டியில் மனித உரிமையை மீறியவர்கள் வெற்றியடந்துள்ளார்கள்.....சிறிலங்காவில் 71 ஆம் ஆண்டும் மனித உரிமை மீறப்பட்டது 74ஆம் ஆண்டு பொதுநல அமைப்பின் மாநாடு நடைபெற்றது அப்பொழுது சுதந்திரகட்சி இப்பொழுதும் சுதந்திரகட்சி.....
  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொத்து கொத்தாகப் படுகொலையாகக் காரணமான மகிந்தவின் இரத்தக்கறைகள் படிந்த கரத்தை கைலாகு கொடுக்க விரும்பாத காரணத்தாலும், இலங்கையில் மனித உரிமைகள் நிலை நாட்டப்படவேண்டும் என்பதில் அக்கறை உள்ளதாலும், பிரித்தானியச் சாம்ராஜ்யத்தின் பெருமையை நினைவுபடுத்தும் பொதுநலவாய அமைப்பின் தலைவியாக மகாராணியார் இருந்த போதிலும், இலங்கையில் நடக்கவுள்ள மாநாட்டில் கலந்துகொள்ளாமல் அமைதியாக எதிர்ப்பைக் காட்டியுள்ளார் என்று எழுதி வாசிக்க நன்றாகத்தான் இருக்கின்றது.

முதலில் இலங்கையில் இந்த பொதுநலவாய நாடுகளின் கூட்டம் நடக்கவுள்ளது இலங்கையரசிற்கு இராஜதந்திர ரீதியில் பெரிய வெற்றி என்பதையாவது ஒப்புக்கொள்ளவேண்டும்.

 

பணச் செலவுக்கும் கிடைத்த வெற்றி தான்.

 

அவுஸ்திரேலியாவில் நமக்கு செய்ய ஒன்றும் இருக்க வில்லை. நாமலும் , கோத்தாவும் தேவையான பணத்தை செல்வழித்துதான் பெற்றிருந்தார்கள். அதில் இந்தியாவின் வெளியுறவு செயலாலர் நிறையச் செய்திருந்தார். கமேஸ் சர்மா நிறை செய்கிறார், உங்கள் விவாதம் எல்லாம் அந்த பழங்கதைகளில்தான் தங்குகிறது.

 

இது ஒரு அரசுக்கும், உலகால் கழிக்கப்பட்ட ஒரு இனத்திற்கும் ஆன போட்டி. கிறிக்கெட்  மாதிரி ஒவ்வொரு அடிக்கும் ஒரு சிக்கசர் கிடைக்கும் என்பது ராஜதந்திரம் அல்ல.

 

இலங்கையின் ராஜதந்திரம் எவ்வளவோ பணம் செல்வழித்து அம்பாந்தோட்டையில் மகாநாடு நடத்த போகிறது ஆனால் அரராப் எயர் அந்த ராஜதந்திரத்திற்க்கோ எடுபடவில்லை. அது, இங்கேயும் இலங்கை தொடர்ந்து பணம் கொடுத்தால் வி.ஐ.பி. கள் போக அங்கே தனது விமானகளை போக விடும்.

 

அமெரிக்க கம்பனிகளை 40% பங்கு மூலம் தடுத்த அரசு அதை நீக்கி விட்டது. பணம் கடித்தால் இலங்கையின் ராஜாதந்திரமும் கடிக்கிறது. இதில் தோல்வியியும் வெற்றியும் இ்ங்கைக்கும் மேற்கு நாடுகளும் மட்டுமே. எனவே அந்த ராஜதந்திரங்களை உங்களில் ஒருவருக்கும் ஆராயும் அரசியல் அறிவு இது வரையில் காணப்படவில்லை.  நீங்கள் ஒருவரும் அதை பற்றி எழுதவில்லை.

 

இங்கே நாம் கருத்தில் எடுக்க வேண்டியது திருமா, கடுமையாக இலங்கைக்காக உழைத்து, அங்கே பொது நல வாயத்தை நடதும் இந்திய காங்கிரசை, இராணி போகதபடியால் இந்தியா அங்கே போகத்தேவை இல்லை என்று சொல்லி தடுக்கலாமா இல்லையா என்பது. இதில் திருமாவை எதிர்க்க ஒன்றும் இல்லையாமல் திரியை இழுத்தடிப்படி தோல்வியை கண்டு மருண்டு போய் இருக்கும் தோல்வி மனப்பான்மை. இதை திருத்த முயல்வது இதுவரையில் தோல்வியாகத்தான் இருக்கிறது. திருமா தனது பழைய தோல்விகளை கண்டு தௌவண்டால் அரசியலில் இறங்கி இருக்க மாட்டர். இந்த வக்கலாத்து விவாதங்களை கண்டு தமிழ் அமைப்புக்கள் துவண்டால் பொதுநலவாயத்தை நிறுத்துவதை தொடர்ந்து முயற்சிக்க முடியாது.

 

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு பிரதி உபகாரமாக மாநாட்டில் அவுஸ்திரேலியா பங்கு பற்றாமல் விடுமா??

 

....

தமிழன் மட்டும் அகதியாக வரவில்லை வேறு தேசத்தவர்களும் கப்பலில் வந்து இறங்குகின்றனர் ...அதைவிட பொதுநலநாடுகளின் கூட்டு முக்கியம்

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

 

இங்கே நாம் கருத்தில் எடுக்க வேண்டியது திருமா, கடுமையாக இலங்கைக்காக உழைத்து, அங்கே பொது நல வாயத்தை நடதும் இந்திய காங்கிரசை, இராணி போகதபடியால் இந்தியா அங்கே போகத்தேவை இல்லை என்று சொல்லி தடுக்கலாமா இல்லையா என்பது. இதில் திருமாவை எதிர்க்க ஒன்றும் இல்லையாமல் திரியை இழுத்தடிப்படி தோல்வியை கண்டு மருண்டு போய் இருக்கும் தோல்வி மனப்பான்மை. இதை திருத்த முயல்வது இதுவரையில் தோல்வியாகத்தான் இருக்கிறது. திருமா தனது பழைய தோல்விகளை கண்டு தௌவண்டால் அரசியலில் இறங்கி இருக்க மாட்டர். இந்த வக்கலாத்து விவாதங்களை கண்டு தமிழ் அமைப்புக்கள் துவண்டால் பொதுநலவாயத்தை நிறுத்துவதை தொடர்ந்து முயற்சிக்க முடியாது.

உங்களைக் குஷிப்படுத்த கருத்து எழுதவேண்டும் என்று சொல்ல வருகின்றீர்கள்.

திருமா சொல்லி இந்திய அரசு கேட்குமளவிற்கு திருமாவுக்கு எந்த அரசியல் செல்வாக்குமில்லை. எனவே அவரது பேச்சை சட்டை செய்யவேண்டியதில்லை.

முள்ளிவாய்க்காலில் மக்களும் புலிகளும் அழிந்து சிறிது காலத்தில் கொழும்பு போய் அவர் சாதித்தது இன்னமும் நினைவில்தான் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தொழில் அவரவர் சார்ந்தது..

ரைலர் என்றால் துணி தைக்க வேணும்..

முடித்திருத்தம் செய்பவர் என்றால்  அதை வெட்ட வேண்டும்..

லாஜிக்கு பிறகாறம்

அரசியல் வியாதி என்றால் அறிக்கை விடணும்... அதை தவிர வேறு ஒன்றும்  இதில் இல்லை..


டிஸ்கி:

அவரவர் கோவணம் அவரவர் கையில்தான் இருக்கு .. அதை காப்பாற்றி கொள்ள அவர்கள்தான் போராட வேண்டும்   நாளைக்கே தமிழீழ மக்கள் உங்கள் சொந்த முயற்சியில் தமிழீழம் வென்றாலும்..  தமிழீழம் வென்ற தலைவனே என்று இங்க போஸ்டர் அடிச்சு ஒட்டி விடுவான்..

 

அதான் தொழில் (thats professsional)

 

அப்ப பார்கிறவன் எல்லாம் பேக்கு(மெண்டல்)....   

 

புரோட்டா சாப்பிட்டு தூங்குகப்பா..
 

 

 

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்

 

உங்களைக் குஷிப்படுத்த கருத்து எழுதவேண்டும் என்று சொல்ல வருகின்றீர்கள்.

 

திருமா பலவழிகளால் காங்கிரசை இடிக்க முயன்றால் அதை தோல்வியில் தான் போகும் என்று வாதாடுவது, அரசியல் ராஜதந்திரம் என்றால் தொழில்ச்சாலையில் செய்து வரும் இரும்பு உபகரணம் ஒன்றாக்கும் என்று நினப்பவர்களின் அரசியல் அறியாமை.  அரசு பொதுநலவாய கூட்டங்களில் சொல்வது பொய். கொடுப்பது உலகறிந்த லஞ்சம். துணை நடிகைகளை அனுப்பித் திசை திருப்புவது.  சிறிலங்கா பல பொய்களை சொல்லி தங்களை ஏமாற்றியததாக அமெரிக்க காங்கிரசில் கூறப்பட்து. அதைதான் இங்கே பலர் இரவு பகல் சிறிலங்காவின் ராஜதந்திர வெற்றி என்கிறார்கள்.

 

திருமா சொல்வது பொய் அல்ல. ஆனால் எழுத்தில் அத்தாட்சிப்படுத்தாத விடையம். அரசின் பொய்கள் நேரம் வரும் போது தட்டி விடப்படும். குறந்த பட்டசம் காங்கிரசின் அரசு  இந்த கோடையில் கவிழ்ந்தாலே பொதுநலவாயத்தில் பல மாற்றங்கள் நடைபெறும்.

 

அறிந்தவர்கள் பொதுநலவாயம், ஐ.நா போன்றவை செயற்படுவது அங்கத்தவர்களுக்கவே மட்டும் என்றதை அறிந்து வைத்திருக்கிறார்கள். அங்கத்தவர்களின் கூட்டு அவர்களை வெளியிருந்து பாதுகாத்துகொள்வதும் ஆகும். இது வலிமையான சட்டத்தரணி கோடு ஒன்றில் ஏற்கனவறெழுதி வைக்கப்பட்ட சட்டங்களை வைத்து வழக்கு வெல்வது போல அல்ல. களவு எடுத்த கள்ள்வர்கள் தமக்குள் ஒற்றுமையாக பங்கு போட்டுக்கொள்வதை ஒத்தது.  இதை அறியாதவர்கள் அங்கு அங்கத்துவம் இல்லாத தமிழ் அமைப்புகள் அங்கததுவ நாடு ஒன்றை 1:1 ஆக போட்டிகளில் வெல்லவில்லை என்பது அவர்களின் அரசியல் அமைப்புக்களை விளங்கிக்கொளும் ஆற்றலைக் காட்டுகிறது. 

 

தயவு செய்து எழுதுவதை விளங்கினால் மட்டும் எழுதுங்கள். இதில் யாரும் யாரையும் குஷிப்படுத்தவில்லை. அப்படியான ஒரு பிழையான அனுமானம் தான் திருமாவின் கோரிக்கை மீதும் இருக்கிறது. இதில் எதையாவது வைத்து நான் குஷிப்படுகிறேன் என்று வாதாட முயல்வது சொல்ல கருத்து இல்லமையால். எனது கருத்தும் ஒன்றும் அப்படியான அநுமானத்திற்கு கிஞ்சித்தேனும் இடம் கொடுக்கவில்லை. 

 

அது அரசியல் முரடுகளின் வசனம்.  இது தோல்வி மனப்பான்மையை சுட்டிக்காட்டினால் குரங்கு குருவியுடன் நடந்து கொணடது மாதிரி ஒரு முரட்டு நடத்தை.  

 

திருமா சொல்லி இந்திய அரசு கேட்குமளவிற்கு திருமாவுக்கு எந்த அரசியல் செல்வாக்குமில்லை. எனவே அவரது பேச்சை சட்டை செய்யவேண்டியதில்லை. 

 

அது மிகத் தாழ்வான தோல்வி மனப்பான்மை. 

 

திருமா தவறுவிட்டவர். ஆனால் கருணாநிதி அல்ல. காங்கிரசுடன் சில ஒப்பந்தங்களில் கூட்டு சேர்ந்த திருமா தன்னைத்தான் அடிமையாக நடத்தாமல், எல்லோரும் எதிர்த்த, போர்க்காலத்தில் மௌனமாக இருந்தது போன்ற கடந்த கால தவறுகளை செய்யாமல், தனக்கு சில உரிமையான பங்குகளை கேட்டு பெற நினப்பது மிக சரியான நடத்தை.  அவர்கள் இது வரை வாய் திறக்க வில்லை என்றவர்கள் அவர்கள் வாய்திறந்தவுடன் அடைத்து மூட நினப்பது நிச்சயமாக அவர்களின் மீது இருக்கும் வெறுப்பாகத்தான் இருக்கலாம். பங்குகளுக்காவேதான் தான் கூட்டு சேர்வது.

 

இதில் திருமா தனியாகவும் இல்லை. அது, என்னை குஷிப்படுத்தி விடுமோ என்று பயந்து செய்திகளைக் கழித்துவையாமல் , எல்லா செய்திகளையும் வாசித்திருந்தால் விளங்கியிருக்கும். காங்கிரசை திருமாமட்டும்தான் பொது நலவாயத்திற்கு போக வேண்டாம் என்று கேட்கிறார் என்பது செய்திகளில் வாசித்தை விளங்கிக்கொள்ளாமையே. அவரின் முயற்சி சிறு துளி ஒரு பெரு வெள்ளமாக தேவையானது. தோற்பார் என் நினைத்து ஆதர்வாளர்கள் தமது கட்சிக்காரரருக்கு வாக்களிக்கமல் விடுவதில்லை. இது பொது தத்துவம். இதில் நான் குஷிப்படுகிறேன் என்று கூறிவது நிச்சயமாக ஒரு பகிடிக்கதை  .  

முள்ளிவாய்க்காலில் மக்களும் புலிகளும் அழிந்து சிறிது காலத்தில் கொழும்பு போய் அவர் சாதித்தது இன்னமும் நினைவில்தான் இருக்கின்றது.

 

இந்த பழைய கதையையும் தோல்வி மனபான்மையையும்  விட ஒன்றும் கிடைக்கவில்லை. அதை பார்க்க பரிதாபம். இருந்தாலும் இதற்கு நான் ஏற்கனவே, இந்த திரியில்  முன்னர் எழுதியவைகளில் பதில் எழுதியும் இருக்கிறேன். அதை வாசித்து கொண்டு வந்து எழுத  பஞ்சியாக இருக்கிறது போல் இருக்கு. இப்படி எழுத இல்லாமல் பொழுது போக்குக்கு எழுதுவோருக்கு எப்படி இனி  அடித்து அப்பம் தீத்த முடியும்? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
 

 

putthan, on 10 May 2013 - 09:17 AM, said:
அவுஸ்ரேலியா பிரதிநிதிகள் சொன்னவர்கள் தாங்கள் சிறிலங்காவை புறக்கணித்தால் சிறிலங்கா தனிமைப்படுத்தப்பட்டுவிடுமாம்...மனித உரிமை மீறல்களை விட பொதுநல நாடுகளின் கூட்டு பிரதானமானது என்பது இதிலிருந்து தெரிகிறது. மகாராணி அடுத்த பொதுநலநாடுகளின் கூட்டதில் பங்கு பற்றினால் நாங்கள் சொல்லலாம் மனித உரிமை மீறல்கள் நடந்தபடியால் சிறிலங்காவில் பங்கு பற்றவில்லை என்று. எது எப்படியோ சார்ள்ஸ் பங்குபற்றும் முதலாவது பொதுநலநாடுகளின் மாநாடு மனித உரிமை மீறல் நடந்த ஒரு நாட்டில் நடைபெறுகிறது.....அது சரி பன்டாரவன்னியன் ராஜராஜசோழன்,விக்கிரசிங்கன் அவர்களின் மக்களை கொலை செய்து மனித உரிமை மீறல்களை செய்தவர்கள் இவர்களின் பாட்டன், பூட்டன்மார்தேனே....
 

 

 

 

இந்த ராணி இப்ப செல்லாகாசு...54 பொதுநல நாடுகளின் தலைவர்கள் மகிந்தாவுடன் கைகுழுக்கி படம் எடுக்க வேணும் என்று நிற்கினம் .... ஒன்றா ...54ஆ.....மனித உரிமை செயல்பாட்டாளர்களின் முயற்சியை இந்த பொதுநலமாநாடு தோற்கடித்துவிட்டது ...வெற்றி மகிந்தருக்கே....அதாவது மனித உரிமைசெயட்பாட்டளர்களுக்கும் மனித உரிமை மீறியவர்களுக்கும் இடையில் நடந்த போட்டியில் மனித உரிமையை மீறியவர்கள் வெற்றியடந்துள்ளார்கள்.....சிறிலங்காவில் 71 ஆம் ஆண்டும் மனித உரிமை மீறப்பட்டது 74ஆம் ஆண்டு பொதுநல அமைப்பின் மாநாடு நடைபெற்றது அப்பொழுது சுதந்திரகட்சி இப்பொழுதும் சுதந்திரகட்சி.....

 

gr_ner_punkt.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் மட்டும் அகதியாக வரவில்லை வேறு தேசத்தவர்களும் கப்பலில் வந்து இறங்குகின்றனர் ...அதைவிட பொதுநலநாடுகளின் கூட்டு முக்கியம்

 

அப்பிடிப் போடுங்கோ புத்தன் அண்ணா. அவுசில இல்லாத ஆக்கள் அவுசில நடக்கிறதப் பற்றி எப்பிடி அறியினமோ தெரியாது. விலாவூட்டிட போய்ப் பாத்தா தெரியும் எத்தின சூடான், இராக்கி சனம் அகதியா வருகுது எண்டு. திருமாவை யார் இப்போ சட்டை செய்வது? தமிழ் நாட்டில எத்தின பேருக்கு இவரைத் தெரியுமோ தெரியாது. பச்சோந்திகளை நம்புவது தான் தமிழர்களின் பலவீனம்.

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை ஐயாவின் கதைகளை வாசிக்க மதம் பரப்ப வாசலில் வந்து கதவைத் தட்டியவர்கள்தான் நினைவுக்கு வருகின்றார்கள்.

பின்வரும் கேள்விகளுக்கு இலகுவான ஆம்/இல்லை என்று பதில் வந்தால் என்ன நிலைப்பாடு என்று புரியும்.

1) தமிழர்கள் ஆயுதப் போரில் தோல்வி அடைந்துவிட்டார்கள் என்று கூறப்படுகின்றதே.

2) தமிழர்களின் அரசியல் உரிமைப் போரில் எதுவித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.

3) தமிழர்களின் அரசியல் (புலம்பெயர்/தாயக) அமைப்புக்களில் ஒற்றுமை என்பது அறவே கிடையாது.

4) தமிழ் அமைப்புக்களின் இராஜதந்திர செயற்பாடுகள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எதுவித பலன்களையும் தரவில்லை.

5) தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள், அழுத்தங்கள் எதுவும் இலங்கையின் அரசியல் நிலைப்பாட்டில் எதுவித மாற்றங்களையும் உருவாக்கவில்லை.

இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன. இருந்தாலும் மேற் குறித்த கேள்விகளுக்கு எனது பதில் "ஆம்" என்பதால் எனது கருத்துக்கள் தோல்வி/விரக்தி மனப்பான்மையில் உள்ளன என்று சொல்லுவதைப் பற்றி வருத்தமடையவில்லை.

தோல்வியை ஒப்புக்கொண்டவன்தான் வெற்றியை நோக்கிச் செல்ல வழிகளைச் சிந்திக்கமுடியும்.

  • தொடங்கியவர்

மல்லை ஐயாவின் கதைகளை வாசிக்க மதம் பரப்ப வாசலில் வந்து கதவைத் தட்டியவர்கள்தான் நினைவுக்கு வருகின்றார்கள்.

அடுத தடவை தயவு செய்து சரியான கரைக்காண உதாரணத்தை எடுங்கள். நண்பனுக்கான உதாரணத்தை நண்பணுக்கும், எதிரிக்கான உதாரணத்தை எதிரிக்கும் எடுங்கள்.  உங்கள் மனத்தில் சில பகை மதங்களை காண்கிறீர்கள். அவர்கள் உங்களை வந்து பேசி ஏமாற்றுவததாக காண்கிறீர்கள். போராடும் அமைப்புக்களை "பிரிந்து போனவர்கள், தோற்றுப்போனவர்கள்" என்று தூற்றுகிறீர்கள். அவைகள் வந்து, உங்களை, பிரச்சார உத்தியை பாவித்து எமாற்றிவிடும் என்று பயப்படுகிறீர்கள். இதை பகை மதப்பிரசாரிகளுக்கு சமன் ஆக்குறீர்கள். அப்படியாயின் நீங்கள் உங்களை சிங்கள அரசுடன் இணைத்து  கண்டுகொள்வதால சிங்கள அரசை எதிர்ப்போரை தரங்கெட்ட மதப்பிரசாரிகளுக்கான இழுக்கான நிலையில் வைத்து உங்கள் மனம் கணிக்கிறது.

 

பிரசாரிகளால் வாங்கப்படுவதும், அதே பிரசாரத்தை திருப்பி வைப்பது பழக்கம் உள்ளவர்கள், பிரச்சாரிகளை கண்டு நகைப்பது போல் நடந்து கொள்வது நகைப்புக்குஇடம். 

பின்வரும் கேள்விகளுக்கு இலகுவான ஆம்/இல்லை என்று பதில் வந்தால் என்ன நிலைப்பாடு என்று புரியும்.

 

பல இக்கட்டான(constraints)  நிலைமைகளுக்கு நடத்தி முடிக்கப்படும் பள்ளிப்பரீட்சைகளில் கூட ஆம்/இல்லை கேள்விகள் தங்கள் மகத்துவத்தை இழந்து வரும் நேரத்தில் ஜனநாயக ரீதியான சுயாதீன விவாதங்களுக்கூடாக பயணிக்கப்பட வேண்டிய அரசியல் கேள்விகளுக்கு  ஆம் இல்லை கேள்வி பதில்களை தெரிந்து, அதில் ஆம் பதில் வரத்தக்கத்தாக கேள்விகளை வளைத்தும் இருப்பது சுவாரசியமானது.  இது கனகரத்தினம், K.P. யாழ் பல்கலை கழக மாணவர்கள் போன்றவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்பி எடுக்கும் போது சிலவற்றை ஏற்றுக்கொள்ளப்பண்ண பாவிக்கும் முறை.  மேலும் மூளைச்சலவை அமர்வுகளில் இலகுவாக பயிற்றப்படத்தக்க விடைகளும் இவைதான். உதாரணமாக ஒரு மூளை சலவை அமர்வுகளுக்கு சென்றவர் ஒருவரை அதை மறைத்து வெளியே பாதுகாப்பாக அனுப்பு வைக்க வேண்டுமாயின், "நீ மூளை சலவை அமர்வுகளில் பங்கு பற்றியிருக்கிறாயா" என்று ஒருவர் கேட்டால் அவர் இலகுவாக "இல்லை" என்று பதில் சொல்ல பயிற்றுவது இலகு. இதில் கேள்வி விளக்க கேள்விகளையோ அல்லது எதிர்க்கேள்வி கேட்பதை எற்றுக்கொள்ளப்பழக்குவத்தில்லை. 

 

அப்படியானவர்களுக்கும் தமது கேள்விகளுக்கும் ஆம்/இல்லை பதிகளை கேட்க விருப்பமாக இருக்குமேயல்லமால் ததுவாஅர்த்தமான விவாதங்களை உள்வாங்குவதில் சிக்கல் இருக்கும்.

1) தமிழர்கள் ஆயுதப் போரில் தோல்வி அடைந்துவிட்டார்கள் என்று கூறப்படுகின்றதே.

(சுதந்திர போராட்டத்தில், தமிழர்களால் ஏற்றுகொள்ளப்பட்ட புலிகள் என்ற இயக்கம் ஆயுதப்போராட்டம் நடத்தியது. அந்த இயக்கம் கொடுத்த விளக்கம் புலிகள் ஆயுதங்களை மௌனித்தார்கள் என்பது. நான் அவர்களின் வெறும் ஆதரவாளன் என்ற முறையில் அவர்களின் பதிலை நான் ஏற்கிறேனேயல்லாமல் எனது பதிலலாக அவர்கள் தோற்றுவிட்டார்கள் என்பதை அவர்களுக்கு சொல்ல விழைந்ததில்லை. ) ஆனால் பிரசாரிகளாள் மாற்றப்பட்டவர்களை ப் பொறுத்தளவில் பிரசாரிகளால் மாற்றபட்டவர் என்றவகையில் தாங்களுக்கு "ஆம்" சொல்லவைக்கப்பட்டு, அதில் இருந்து மீள்விடாமல் மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் எனக்கு பங்கும் கிடையாது. இந்த நிலையை நான் ஏற்றுகொள்ளவும் இல்லை. அண்மையில் அமெரிக்க தூதுவர் போர் திரும்ப மூளலாம் என்றிருந்தார். இதையே ஆனந்தவிகடனுக்கு தனது பேட்டியில் கூறியதால் அசாத் சாலி பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அரசின் விளக்கம் அப்படி கூறுவதால் போர் திரும்ப மூள இடம் இருக்கென்பதே. அதாவது பெரிய இடங்களில் போர் இன்னமும் விலத்தப்ட்டதொன்றல்ல. அதேபோல நீங்கள் சொல்லவரும் பதிலையும் நான் கேட்க தயாராக இருந்தாலும் புலிகளுக்காக  உங்கள் பதிலை நான் பிரதியிடவும் முடியாது

 

2) தமிழர்களின் அரசியல் உரிமைப் போரில் எதுவித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.

பிரசாரிகளால் மூளை சலவை செய்யப்பட்டதால் ஏற்பட்ட முன்னேற்றங்களை கண முடியாமல் தடுக்க கப்பட்டிருப்பவர்கள் உண்டு. ஆனால் முன்னேற்றம் இல்லை என்பதில்  உண்மை இல்லை.

அ). 2009ல் இலங்கைகாக வெற்றி வாழ்த்துப்பிரேரணையை நடத்திய இந்திய படப்பாயத்திற்கு தன்னும் மூன்றாவது பிரேரணையில் சர்வதேச விசாரணையை கொண்டுவரகேட்டது, அதை அமெரிக்கா, அங்கத்துவ நாடுகளின் ஆதரவு இல்லை என்று சொல்லி,  கொண்டுவரவில்லை.

ஆ) ஐரோப்பா GSP+ நிறுத்திவிட்டது.

இ) கனடா பிர்தமர் பொது நலவாயத்திற்கு  போகவில்லை.

ஈ). ஐ.நா இரண்டு விசாரணை அறிக்கைகளையும் மனித உரிமைகள் சபை ஒரு பரிந்துரையுடன் கூறிய அறிக்கையும் வெளீவிட்டுவிட்டது.

உ) 2009 மே வரையும் அரசுக்குக்காக பிரசாரம் செய்துகொண்டிருந்த ICG, International amnesty ய்ன்று அரசுக்கு எதிராக மட்டும்தான் பிரசாரம் செய்கின்றன. 

 

.............

..............

.............

இதையெல்லாம் "காற்றில் படுத்திருந்த பெண் பிள்ளைற்றாள்  கதை" என்று சொல்லி தட்டிக்கழித்துப் பிரயோசனம் இல்லை. இது தமிழரின் உழைப்புக்களால் நடந்தது. அண்மையில் மார்கத்தில் திறந்த பாதையின் புதுப்பெயர் "வன்னி வீதி" கூட தமிழரின் உழைப்புத்தான் என்று அரிச்சுன் வாழ்த்தியிருந்தார்.

 

 

3) தமிழர்களின் அரசியல் (புலம்பெயர்/தாயக) அமைப்புக்களில் ஒற்றுமை என்பது அறவே கிடையாது.

தமிழருக்கிடையில் இருக்கும் ஒற்றுமை வெள்ளைக்காரர் போகும் வரை எப்படி இருந்தது என்பதை ஆராய்ந்தால் உதவியாக இருக்கும். அதன் பின்னர் சிந்தனை வலிமை குறந்தவர்களை சிங்கள தலைமைகள் பிரச்சார உத்திகளை பாவித்து மூளைச் சலவை செய்து பிரிக்கிறார்கள்.  இதை விளங்கும் ஆற்றல் கொண்டவர்கள் இது உண்மையில் இருப்பதாக நினத்து எங்கும் பயந்தோடவில்லை

 

சிலர் புலம் பெயர் நாடுகளில் தம்மை அறியாமல் பலர் இரையாகிறார்கள். அதைத்தடுக்க முடியாது. இவை ஜனநாயக நாடுகள் என்பதால் இப்படி நீங்கள் பிரிந்து இருக்கிறீர்கள் என்று கூறிக்கொண்டே பிரிந்து போபவர்கள் கழித்துவிடப்பட வேண்டியவர்களே.  

இது பிரச்சாரிகளின் பிரசாரங்களால் மூளை சலவை செய்யபட்டவர்கள் பிரிந்து நின்று பிரசாரம் செய்து கொண்டு அதையே பின்னர் பிரசாரமாகும் தந்திரத்தையும் பாவிக்கிறார்கள். 

 

இது  போரினால் சிதைந்து போன இனம் ஒன்றில் இல்லாத இயல்பாக காண வேண்டிய தேவை இல்லை.  பல இடங்களில் வெறுமனே "பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும்" என்ற பழமொழி உண்மையானதாக நிரூபிக்கப்படுகிறது. 

 

மேலும் 1956 வரையும் பொருளாதார அர்சியல் சுபீட்டம் இருந்த நாட்டை தம்முள் சிங்களவர் ஒற்றுமையாக சிதைத்துக்கொண்டு வருகிறார்கள். அந்த உதாரணத்தை பிரச்சாரிகள் தமிழருக்கு படிப்பிக்க வேண்டிய தேவையும் இல்லை.  பிரித்து வைத்திருக்கும் போது கிழக்கு யேர்மனியும் மேற்கு யேர்மனியும் மோதிக்கொண்டன. பிரிக்கும் சக்திகள் பிரிந்தவுடன் ஜேர்மனியர்கள் தாம் ஒற்றுமையானவர்கள் என்பதை நிரூபித்தார்கள். இன்று அதுவே கொறியாவிலும் காணப்படுகிறது.  கம்யூனிச கைப்பொம்மை கிம் யன்ங் உன் குடும்பம் இல்லாவிட்டால் ஒரு கொறியா  க்கள் ஒருவர் மீது ஒரு ஏவுகணைகளை ஏவ தயார் செய்ய மாட்டார்கள்.

4) தமிழ் அமைப்புக்களின் இராஜதந்திர செயற்பாடுகள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எதுவித பலன்களையும் தரவில்லை.

நீங்கள் தமிழர் அமைப்புகளின் ராஜதந்திரமாக சிலவற்றை அனுமானிக்கிறீர்கள். அவை தோற்றதாக உங்கள் திசையில் முடிவு எடுக்கிறீர்கள்.  தமிழ் அமைப்புகள் செய்யும் ராஜாயதந்திரம் அரசுகளை நேராக வளைத்து போடுவது என்று நினக்கிறர்கள். அது அப்படி அல்ல. அரசுகளுடன் சேர்ந்து இயங்கத்தக்க ராஜாதந்திரகளை உபயோகிக்க அவர்கள் தொடர்ந்து தம்மை அரசுகள் ஏற்றுக்கொள்ளும் நாளை எதிர்பார்த்து செயலாற்றியும் வருகிறார்கள். ஆனால், அதை விட, அவர்களின் ராஜதந்திரங்கள் சரியான பாதையில் இயங்குகிறது. 

5) தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள், அழுத்தங்கள் எதுவும் இலங்கையின் அரசியல் நிலைப்பாட்டில் எதுவித மாற்றங்களையும் உருவாக்கவில்லை.

அது நமக்கு மிக தேவையானது. மகிந்தா தொடர்ந்து தமிழக கோரிக்கைகளை அசட்டை செய்ய வேணும். கிந்திய காங்கிரஸ் தொடர்ந்து தமிழகத்தைப் புறக்கணிக்க வேண்டும். காங்கிரஸ் ஆடும் நாடகத்தை தமிழக மக்கள் தெளிவாக உணர வேண்டும். இதனால் தமிழகத்தில் கிடைக்கும்  40 பிரதிதித்துவமும் மத்திய அரசை எதிர்க்கத் துணிச்சல் உள்ள கட்சி ஒன்றுக்கு கிடைக்க வேண்டும். 40ம் ஒருகையில் இருந்தால் மட்டுமே கிந்திய அரசு தமிழகத்துக்கு கடமை படும். 2009 ல் நடந்த தேர்தலில் 33 ஆக இருந்த கருணாநிதியின் ஆதரவது உண்ணாவிரத நாடகத்தால் 18 ஆக சுருங்கிய பின்னரும் கருணாநிதியை வைது காங்கிரஸ் தமிழரை அழித்து மாநிலத்தேர்தலில் இரண்டும் மண்கவ்வின. இது தமிழரின் ராஜதந்திரம் சரி என்பதை காட்டுகிறது. நெப்பொலியன் மொஸ்கோவுக்கு படை எடுத்த போது நெப்போலியனை பூரண வேற்றியடைய ரூசிய தளபதி குட்டிஜோவ் ஆயத்தங்கள் செய்து கொடுத்திருந்தார். அந்த வெற்றியின் பின்னர், எதிரி ஒரு ஆயுமும் தூக்காமல் ,ஒரு லட்சம் படையுன் சென்ற நெப்பொலியன், தான் ஒருவனாக மீண்டிருந்தான். இப்போது மகிந்தா அரசு காங்கிரசை மிரட்டி தமிழ்கத்தை அடக்குவிப்பது "மா புளிப்பது அப்பத்திற்கு நல்லது" போன்ற மிக அடிப்படை ராஜதந்திரம்

இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன. இருந்தாலும் மேற் குறித்த கேள்விகளுக்கு எனது பதில் "ஆம்" என்பதால் எனது கருத்துக்கள் தோல்வி/விரக்தி மனப்பான்மையில் உள்ளன என்று சொல்லுவதைப் பற்றி வருத்தமடையவில்லை.

 

மேலே திரியில் போயிருந்த எந்த கருத்தையும் ஏற்றோ எதிர்த்தோ இதுவரையில் கருத்துக்கள்  வைக்கவில்லை.  யாராவது எதையாவது செய்ய முயன்றால் அதனால் தீமைதான் வரும் என்று நினைத்து குலை நடுக்கத்தை காட்டி வருவதை விட இது வரையில் எந்த மாற்றுத்திட்டம் ஒன்றையும் யாழில் தன்னும் வைத்து அதை நாளும் பொழுதும் உயர்த்தி, பரம்ப வைக்கும் வழி முறைகளை கையாண்டதில்லை.

 

"அற நனைஞ்சால் குளிர் என்ன கூதல் என்ன."  நீங்கள் சிலவற்றை பற்றிக் கவலைப்படும் இறுக்கமான மனபலத்துடன் இல்லை என்பது புரிகிறது. கேள்விகள் மட்டும்தான் உங்களிடம் இருக்கும் பலம் ஒன்றாக பல தடைகள் காட்டிவிட்டீர்கள்.  அவற்றில் பல, தமிழரின் தோல்வியாக படுபவற்றை பெருதுபடுத்த என்றும் ஒரு பக்கமாக வளைக்கப்பட்டவை. அந்த கேள்விகளை பற்றி சுயாதீன சிந்தனையான மனத்தர்க்கம் ஒன்றை உருவாகி உண்மைகளை ஆராயும் நிலையில் உங்கள் மனம் இல்லை. அந்த வளைக்கபட்ட கேள்விகளிற்கு "ஆம்" என்ற பதிலை அளித்துவிட்டு பயப்பிராந்தி என்ற போர்வையை மனம் இழுத்துப் போர்த்திக்கொள்கிறது.

தோல்வியை ஒப்புக்கொண்டவன்தான் வெற்றியை நோக்கிச் செல்ல வழிகளைச் சிந்திக்கமுடியும்.

 

இதில் மற்றயவை எல்லாவற்றிலும் இருக்கும் அதே வழமையான சிந்தனைத் தவறு இருக்கிறது. 

 

தோல்வி என்பது ஒரு முடிவு. ஒருதவவையில் வெற்றி கிடையாதவன் எல்லோரும் தான் தோற்று விட்டதாக ஒத்துக்கொள்வதில்லை. தோல்வி என்பது எதிரி வென்றதாக ஏற்றுக்கொள்வது. அந்த முடிவுக்கு வந்தவன் அடுத்து செய்ய தக்கது எதிரியின் மேலாண்மையை ஏற்றுக்கொள்வது.  அவன் தொடர்ந்து போராடுபவன் அல்ல.  " நான் வென்றாக வேண்டும், நான் இன்னமும் தோற்கவில்லை,"  என்று சிந்திப்பவன் தான் தொடர்ந்து போராடுபவன்.  முதலில் வாளை ஏந்தியிருந்தால் தனக்கு வெற்றி கிடையாத போது கதையை எடுப்பான். கதையை எடுத்திருந்தால் தனக்கு வெற்றி கிடையாத போது அம்பை எடுப்பான். பலதடவையில் ஆயுத போரில் தான் தோற்றதாக ஏற்றுக்கொள்ளாத சொலமன் ஏழாவது முறை வெற்றியீட்டினான். இதுதான் சொலமனின் கதையில் சொல்லப்படும் தத்துவம்.  (நெடுக்கர் தனது திரியில் பதியும் விவேகானந்தரின் குறிப்புகளை படிக்கவும். அவைதான் பிற்காலம் சுபாஸ் சந்திரபோஸ் போன்ற சரித்திர புருஸ்சர்களை ஆக்கிவைத்த தோல்வி மனப்பான்மை எதிரான போதனைகள்)

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ தெரியவில்லை.

நாங்கள் கொஞ்சம் மனசு சந்தோசப்பட்டாலும் பலருக்கு எரிச்சல் வருகுது....... :(

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை ஐயா எழுதியவற்றை படித்ததில் இருந்து நான் புதிதாக எதையும் அறிந்து கொள்ளவில்லை. புரியும் அளவிற்கு எனக்கு அறிவு போதவில்லை என்பதை ஒத்துக்கொள்கின்றேன். :D  ஆம்ஸ்ரர்டாம் போகவுள்ளேன். சில "சுத்து"க்களைப் பத்தினால் எனக்கு கட்டாயம் எல்லாம் சரியாக விளங்கும் என்று நம்புகின்றேன். :icon_mrgreen:  இதை புத்தன், ஏசு, அல்லா, சிவன், விஷ்ணு, பிரமா எல்லார் மீதும் பாரம் போட்டுச் சொல்கின்றேன் :lol:



என்னமோ தெரியவில்லை.
நாங்கள் கொஞ்சம் மனசு சந்தோசப்பட்டாலும் பலருக்கு எரிச்சல் வருகுது....... :(


மனசு சந்தோஷமாக இருக்க புதிதாக வந்திருக்கும் Star Trek படம் பார்க்கலாம் விசுகு ஐயா.
 

திருமா விட்ட அறிக்கையை நாம்தான் படித்தோம். இந்திய அரசு ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை.

  • தொடங்கியவர்

மல்லை ஐயா எழுதியவற்றை படித்ததில் இருந்து நான் புதிதாக எதையும் அறிந்து கொள்ளவில்லை.

  :D திருமா விட்ட அறிக்கையை நாம்தான் படித்தோம். இந்திய அரசு ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை.

 இதில் புதிதாக அறிந்துகொள்ளப்பட பலவிடையங்கள் அடங்கியிருக்கு. நாம் இதை பலதவைகள் திரும்ப திரும்ப படித்து அவற்றை விளங்கிக்கொள்ள முயலவிருக்கிறோம். :D

 

 

  ஆம்ஸ்ரர்டாம் போகவுள்ளேன். சில "சுத்து"க்களைப் பத்தினால் எனக்கு கட்டாயம் எல்லாம் சரியாக விளங்கும் என்று நம்புகின்றேன். :icon_mrgreen:  இதை புத்தன், ஏசு, அல்லா, சிவன், விஷ்ணு, பிரமா எல்லார் மீதும் பாரம் போட்டுச் சொல்கின்றேன் :lol:

 

வரும் போது நமக்கும் சில சுருட்டுக்கள் வாங்கி வந்து தந்துதவ முடியுமா?

:lol:  :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தில் முன்னுதாரணம் என்று சொல்லப்படும்(பிரசிடன்ற்)ஒரு வாய்ப்பை அவுஸ்திரேலியா வழங்காது, ஏற்கனவே இலங்கையில் பிரச்சனை இல்லை என்று கூறி ஆட்களை திருப்பி அனுப்புகையில் இப்போது இலங்கை ஒரு மனித உரிமை மீறல் நாடு என்று கூறி மகா நாட்டிற்கு போகாமல் விட்டால் பொல்லை கொடுத்து அடிபட்டது போல் ஆகி விடும்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.