Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உறவுகளை கொச்சைப்படுத்தும் உயிர்

Featured Replies

உறவுகளை கொச்சைப்படுத்தும் உயிர்

கனவுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தனிநபர் கனவு. சமுதாயக் கனவு. சுதந்திரப் போராட்டத்தை சமுதாயக் கனவுக்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த சமுதாயக் கனவை விதைப்பதில் சினிமாவுக்கு பெரும் பங்குண்டு. அதனால்தான் வெள்ளையர் ஆட்சியில் பல திரைப்படங்கள் தடை செய்யப்பட்டன. சமீபத்தில் ‘தி டாவின்சி கோட்Õ திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும் என்ற பேச்சு எழுந்தது கூட இதனால்தான்.

எல்லா மனிதர்களிலும் மிருக உணர்ச்சி உறங்கிக் கொண்டிருக்கிறது. அது தூண்டப்பட்டால்இ அந்த மனிதனால் அவன் சார்ந்த சமூகமே சீரழியும். இது உளவியல் சொல்லும் பால பாடம். அதனால்தான் சமூகக் கனவை விதைக்கும் படைப்புகள்இ விஷத்தை விதைக்கக் கூடாது என பல அமைப்புகள் போராடி வருகின்றன.

ஆனாலும் சமீபகாலமாக வெளிவரும் திரைப்படங்கள் சமூகக் கனவை சிதைப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக ‘உயிர்Õ படம். கொழுந்தன் மீது ஆசைப்படும் அண்ணிஇ அதற்காக தன் குழந்தையையே கொலை செய்யத் துணிகிறாள். அந்த வெறியால் மனமுடைந்துஇ கணவன் தற்கொலை செய்து கொள்வது கூட அவளை பாதிக்கவில்லை. இதுதான் படத்தின் மையக்கரு. தாய்க்கு சமமாக அண்ணியை மதிக்கும் நம் சமூகத்தில் ‘உயிர்Õ அதிர்ச்சியையும்இ அருவருப்பையும் சம அளவில் சம்பாதித்திருக்கிறது. வழக்கம் போல்இ ‘இது நான் பார்த்த உண்மைச் சம்பவம்‘ என படத்தின் இயக்குனர் சொன்னாலும் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் இதை ஏற்கத் தயாராக இல்லை.

ÔÔஇப்படி ஒரு பெண்ணை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறதுÕÕ என்கிறார் சேலத்தை சேர்ந்த சுகந்தி சுதர்சனம். மகளிர் சங்கத்தலைவிஇ கர்நாடக இசைப்பாடகி என பல முகங்களைக் கொண்டவர் இவர். ‘‘சமூகத்தில் தனக்கு இருக்கும் மதிப்புஇ மரியாதை பற்றி பெண்கள் அக்கறை கொள்ள வேண்டும். எங்காவது இப்படி நடக்கலாம். அதற்காக அதை படமாக எடுத்து வெளியிடுவதுஇ அந்தமாதிரி தவறுகளுக்கு சமூக அங்கீகாரம் அளிப்பது போல் ஆகிவிடும்ÕÕ என்கிறார் சுகந்தி.

இதை ஆமோதிக்கிறார் ராஜேஸ்வரி வெங்கட்ராமன். இவருக்கு சொந்த ஊர் கோவை. சேலத்தில் வாழ்க்கைப்பட்ட இவருக்கு மச்சினர் உண்டு. அண்ணியாக இருக்கும் இவரது வார்த்தைகளில் கோபம் கொப்பளிக்கிறது. ÔÔபாதுகாப்பு இல்லாததுதான் ‘உயிர்Õ படத்தில் வரும் அண்ணியை இப்படி வெறி கொள்ளச் செய்கிறது. ஒரு நிமிடம் நிதானமாக யோசித்தால் போதும். பிரச்னை தீர்ந்து விடும். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆசான் உண்டு. சுயநலத்தை தாண்டி சரியான முடிவை எடுக்க அந்த ஆசானின் சொல்லைக் கேட்க வேண்டும்ÕÕ என்கிறார் ராஜேஸ்வரி.

சேலம் டி.எம்.எஸ்.ஐ. மருத்துவமனையின் நிர்வாகியான லட்சுமி சித்தார்த்இ அண்ணி என்ற உறவே சந்தோஷமளிக்கக் கூடியது என்கிறார். ÔÔஇரண்டு மூன்று அண்ணன் தம்பிகள் இருக்கும் வீட்டுக்கு ஒரு அண்ணி வருவதே சந்தோஷமான விஷயம். அந்த வீட்டுக்கே புத்துணர்ச்சி வந்தது போலிருக்கும். எத்தனையோ வீடுகளில் அண்ணியின் மீது மச்சினர்கள் பாசமாக இருப்பதுண்டு. அண்ணி என்பவள் அம்மாவாகவும்இ நல்ல தோழியாகவும் இருக்க வேண்டும். அண்ணனிடம் சொல்லத் தயங்கும் விஷயங்களைக் கூட அண்ணியிடம் பகிர்ந்து கொள்ள முடியும். நல்லவிதமாக பழகும் மச்சினர் அண்ணி உறவைக் கூட தவறாக பார்க்கும் கண்ணோட்டத்தை இது போன்ற படங்கள் ஏற்படுத்தும். அண்ணியின் மீதும் பாசம் காட்டுவதும்இ தோழனாக நடந்து கொள்வதும் பல வீடுகளில் உண்டு. இனிமேல் மற்றவர்கள் அவர்களை பார்க்கும் போது தப்பான எண்ணம் வரும் அபாயம் இருக்கிறதுÕÕ என்கிறார் லட்சுமி.

‘‘இது போன்ற படங்களால் பெண்களுக்கு மேலும் மேலும் ஆபத்துதான் அதிகரிக்கிறதுÕÕ என்கிறார் ஜோதி லட்சுமி. சேலம் மாவட்ட ஜனநாயக மாதர் சங்கத் தலைவியான இவர்இ ஆண்களின் வக்ர சிந்தனையே இது போன்ற படங்களை எடுக்கத் தூண்டுகிறது என்கிறார். ‘‘வாலிஇ கலாபக் காதலன் போன்ற படங்கள் ஆண்களின் வக்ர ஆசைகளுக்கு தீனி போடுவது போல் அமைந்தன. அந்தப் படங்கள் வெற்றி பெற்றதற்கு கதைக்கருதான் காரணம் என்ற மயக்கம் சிலரிடம் இருக்கிறது. ஆண்களுக்கு ஏற்படும் விபரீத ஆசைஇ ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டால் எப்படியிருக்கும் என இந்த இயக்குனர் ‘யோசித்ததன்Õ விளைவே இந்தப் படம். ஏற்கனவே மனைவி மீது சந்தேகப்படும் ஆண்கள் அதிகம். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு மேலும் மேலும் சந்தேகப்படவே செய்வார்கள். இதனால் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் அதிகரிக்கவே செய்யும். ஆண்களின் வக்ரங்களுக்கு தீனி போடுவதால் அவனைச் சேர்ந்த பெண்களுக்கு எந்த அளவு ஆபத்து இருக்கிறது என்பதை படைப்பாளிகள் ஒரு நிமிடமாவது உணரவேண்டும். அவர்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்ÕÕ என கோபமாக சொல்கிறார் ஜோதி லட்சுமி.

சோலாப்பூரில் இது போன்ற வழக்கம் இருப்பதாக அர்ச்சனா காந்தி கூறுகிறார். இவருக்கு சொந்த ஊர் சோலாப்பூர். சேலம் லேடீஸ் சர்க்கிள் தலைவியாக இருக்கும் இவர்இ ÔÔசோலாப்பூரிலுள்ள ஒரு குடும்பத்தில் நடந்த சம்பவம் இது. திருமணமாகி மூன்று மாதங்களில் கணவர் இறந்து விட அந்தப் பெண்ணை கணவரின் தம்பிக்கே திருமணம் செய்து வைத்தார்கள். அதே குடும்பத்தில் அந்தப் பெண் மீண்டும் வாழ்க்கைப்படுவதில் தவறில்லை. ஆனால் இதற்கு அந்த குடும்பம் சம்மதிக்க வேண்டும். மச்சினருக்கும் இதில் விருப்பம் இருக்க வேண்டும். குடும்பம் ஏற்றுக் கொள்ளும் திருமணத்தை சமூகமும் ஏற்றுக் கொள்ளும். இருவருமே விரும்பி திருமணம் செய்து கொள்வதை யாரும் தடுப்பதில்லை. ‘உயிர்Õ படத்தில்இ தன்னை தாயாக நினைக்கும் மச்சினரை அடைவதற்காக கொலையும் செய்வேன் என்று சொல்வது விபரீதத்தின் எல்லைÕÕ என்கிறார் அர்ச்சனா காந்தி.

ÔÔபொதுவாக பெற்றோர் தங்கள் குழந்தைகளை பொருளாதார ரீதியாக நன்றாக வளர வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். இதனால் போதுமான அன்பு அவர்களுக்கு கிடைப்பதில்லை. சிறு வயதிலேயே பாதுகாப்பின்மை மனதில் வளர்கிறது. இதுவே பின்னாளில் பிரச்னைகளுக்கு காரணம். இப்படி இருப்பவர்கள் இது போன்ற படங்களை பார்க்கும் போது அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையை மாற்ற குழந்தைகள் மீது அதிகளவு அன்பு செலுத்த வேண்டும். அப்போதுதான் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தன்னாலும் சுயமாக வாழ முடியும் என்ற எண்ணம் ஏற்படும். ‘உயிர்Õ படத்தில் வரும் அண்ணி அளவுக்கு கொடுமைக்காரியாக மாறுவதை தடுக்கலாம்ÕÕ என்கிறார் மனநல ஆலோசகர் ஆர்த்தி.

இவ்வளவு விமர்சனங்களுக்கும் காரணமான ‘உயிர்Õ படத்தின் இயக்குனர் சாமிஇ இந்தப் படத்தில் தவறு செய்து விட்டேன் என்கிறார். ‘‘எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கதையை எடுத்தேன். எனக்கு இதில் உடன்பாடு இல்லை. இந்த படத்தில் செய்த தவறுக்காக அடுத்த படங்களில் பிராயச்சித்தம் தேடிக் கொள்வேன்ÕÕ என்கிறார் அவர்.

- ஸ்ரீதேவி

படங்கள்: எஸ்.இளங்கோவன்

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: ஆமாம். அண்ணியானவள் ஓர் தாய்க்கு நிகரானவள் ஆனால் உயிர் படத்தில் :twisted: ஏன் தான் இப்படியான படங்களை பணங்களை வீணடித்து இயக்குகிறார்களோ தெரியாது :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படத்திற்கு மட்டுமல்ல முதலில் வந்த கலாபக் காதலன் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தால் உயிர் போன்ற படத்தினை எடுக்கத் தயங்கியிருப்பார்கள்.கலாபக்க

ம்ம் கலாபக்காதலனிலும் ஒரு பெண் தான். உயிர் படத்திலும் பெண் தான் உறவுகளை காம எண்னத்தால் கொச்சைப்படுத்தி இருக்கிறார்கள். பொண்ணுக சார்பில் வருத்தப்படுறேன் :twisted: ஏன் தான் இப்படி சித்தரிக்கிறார்களோ :arrow:

தவறான உறவு முறைகளை வைத்து பல படங்கள் இதற்கு முன்பும் வந்திருக்கின்றது. ஆண்கள் தவறான உறவுக்கு முற்படுவதாக காட்டப்படும் படங்களை நாங்கள் பெரிதாக கண்டு கொள்வதில்லை. அதுவே ஒரு பெண் அப்படி செய்வதாக காட்டபடும் போது அந்த பெண் செய்வது தப்பு என்று கூச்சலிடுகின்றோம். உண்மையில் ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களை வைத்து தவறாக உறவுமுறைகளை சித்தரிக்கும் படங்களை புறக்கணிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு அஜித் நடித்த வாலி படத்தில் அண்ணன் தம்பியின் மனைவியை தவறான முறையில் அணுக முயல்வதாக சித்தரிக்கப்பட்டது. இப்படி பல படங்களை குறிப்பிடலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாக்கியராய் நடித்த சி;ன்ன வீடு படமும் வெற்றிய ஓடியிருக்கனும்! இந்த காலத்தில மட்டும் இப்படி படங்ளுக்கு வரவேற்பில்லை என்டு நினைக்கிறன். முந்தியும் இருந்திருக்கு. ஆனா அதை எடுக்கிறதுக்கு தயாரிப்பாளர்கள் முன் வரவில்லை.

தவறான உறவு முறைகளை வைத்து பல படங்கள் இதற்கு முன்பும் வந்திருக்கின்றது. ஆண்கள் தவறான உறவுக்கு முற்படுவதாக காட்டப்படும் படங்களை நாங்கள் பெரிதாக கண்டு கொள்வதில்லை. அதுவே ஒரு பெண் அப்படி செய்வதாக காட்டபடும் போது அந்த பெண் செய்வது தப்பு என்று கூச்சலிடுகின்றோம். உண்மையில் ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களை வைத்து தவறாக உறவுமுறைகளை சித்தரிக்கும் படங்களை புறக்கணிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு அஜித் நடித்த வாலி படத்தில் அண்ணன் தம்பியின் மனைவியை தவறான முறையில் அணுக முயல்வதாக சித்தரிக்கப்பட்டது. இப்படி பல படங்களை குறிப்பிடலாம்.

மன்னிக்கவும் இல்லாத ஒன்றை இவர்கள் கற்பனை செய்யவில்லையே தவறான உறவுகள் அன்று தொடக்கம் இன்றுவரை தொடர்கிறதே

¡ú¸ÇòÐìÌ ÌÕÅ¢Š, Á¾¢ §À¡ýÈÅ÷¸û þÕô§À¡Ð §À¡ø º¢Ä ¦Àñ¸û þÕôÀ¡÷¸û ¾¡§É??

:P :P :P :P :P :P :P :P :P :P :P

'உயிர்' சாமியை ஒழிப்பேன் வடிவேலு

vadivelu400nf3.jpg

உயிர் படத்தை எப்படியாவது தடுத்து நிறுத்துவேன். இந்தப் படத்தை இயக்கிய இயக்குர் சாமியை ஒழித்துக் கட்டாமல் ஓய மாட்டேன். இதற்காக நீதிமன்றத்திற்கும் போகவும் தயாராக இருக்கிறேன் என்று வைகைப் புயல் வடிவேலு சீறியுள்ளார்.

vadiveluasin450yf8.jpg

உயிர் போன்ற ஒழுக்கக் கேடான படத்தை எடுத்தவர்களை தூக்கிப் போட்டு மிதிக்கணும். அவர்களை ரோட்டில் ஓட ஓட விரட்டியடிக்கணும் என்று தம்பி பட விழாவில் வடிவேலு படு ஆக்ரோஷமாக பேசினார் வடிவேலு.

இதையடுத்து வடிவேலு தறுதலைத் தனமாக பேசுவதாக உயிர் பட இயக்குனர் சாமி படு காட்டமாக பதிலடி கொடுத்தார். இந் நலையில் சாமிக்கு வடிவேலு கடுமையான பதில் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கொழுந்தன் மீது ஆசைப்படும் அண்ணியின் கதைதான் உயிர் படத்தின் கதை. அப்பன், ஆத்தா, அண்ணன், தம்பி என்று பல்வறு பரிமாணங்கள் கொண்ட தொப்புள் கொடி உறவுகளோடு, பிறந்த நானும், இந்தப் படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

நான் மட்டும் அல்ல தமிழகத்தில் பிறந்த அத்தனை பேருமே அண்ணியை அம்மாவகாத்தான் நினைக்கிறோம். ஆனால் இந்தப் படத்தில் அண்ணியை காமுகியாகக் காட்டியிருக்கிறார்கள்.

வெடிகுண்டு வைத்துப் பல பேரைக் கொல்லும் தீவிரவாதியை விட மோசமான காரியம் இது. அதை இந்த டைரக்டர் செய்துள்ளார். அவரது சிந்தனை பற்றி நண்பர்களிடம் வருத்தப்பட்டுப் பேசினேன். அந்த உணர்வுகளைத் தான் தம்பி பட விழாவில் வெளியிட்டேன்.

அய்யா, நான் படிக்காதவன்தான். நடிப்பைக் கூட இப்போதுதான் கற்றுக் கொண்டு வருகிறேன். ஆனால் இந்த மண்ணின் பாசம், பண்பு, கலாச்சாரம் எல்லாம் என் ரத்தத்தில் ஊறிப் போயிருக்கிறது. அதனால்தான் உயிர் படத்தைப் பார்த்ததும் எனது ரத்தம் கொதித்தது.

உயிர் படத்தைத் தொடர்ந்து, அந்த டைரக்டர் அடுத்து இயக்கப் போகும் படத்திற்கும் இதுபோன்ற முறையற்ற உறவு முறையை வெளிப்படுத்துவது போன்ற கதையை தயார் செய்வதாக கேள்விப்பட்டேன்.

கஞ்சா செடிக்கு இணையான சிந்தனையை அவர் வளர்த்து வருகிறார்.

vadivelu0705550of6.jpg

உயிர் படத்தை உடனடியாக தடைசெய்ய வேண்டும். தமிழ்த்தாயின் மூத்த குடிமனான கலைஞர் இதைச் செயய வேண்டும். இப்படிப்பட்ட ஆபாசமான படத்தை எடுத்தவர்களுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும்.

என்னை அரைவேக்காடு என்று கூறியுள்ளார் அந்த டைரக்டர். பம்பரக் கண்ணாலே படத்தில் நான் தவறாக நடித்ததாகக் கூறியுள்ளார். அந்தத் தவறுக்கு அடி வாங்குவது போல காட்சியும் படத்தில் இருந்தது.

ஏடாகூடமான கதையைப் படமாக்கி விட்டு அதை நியாயப்படுத்துவதை 'இந்த அரைவேக்காடு' அனுமதிக்காது.

இந்தப் பெண்கள் அமைப்புகள் இந்தப் படத்தைப் பார்க்காதது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை. நஞ்சை விதைத்துள்ள இந்த ஆளை ஒழித்துக் கட்டுவதுதான் எனது முதல் வேலை. இதற்காக கோர்ட்டுக்குப்÷ பாகக் கூட நான் தயாராக இருக்கிறேன். எப்படியாவது உயிர் படத்தைத் தடை செய்வேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார் வடிவேலு.

http://thatstamil.oneindia.in/specials/cin...vadivelu_5.html

சாபாஷ் சரியான போட்டி வடிவேலு :P :lol:

அண்ணானோட சண்டைக்கு வந்த தெரியும் தானே :twisted: :evil:

:roll: :roll:

வயது கூடின சகலகலாவல்ல நாயகி முதற்கொண்டு உள்ள துணை நடிகைகள் வரை வயது வரம்பு பார்க்காமால் சந்தோசம் கொண்டாடின வடிவேலுக்கு ..... என்ன....தீடிரென்று ஞானோதயம் உருவாகியிருக்கு....நாடி நரம்பெல்லாம் விட்டு போச்சோ... அல்லது இம்சை தந்த வெற்றி களிப்பிலை அரசியலிலை குதிக்கப்போறாரோ... :lol::lol:

þÐŨà ¾¢¨Ã측¦ÁÊÂÉ¡¸ þÕó¾ ÅʧÅÖ þô§À¡ ¿¢ƒì¸¡¦ÁÊÂÉ¡¸¢ þÕ츢ȡ÷.

¯Â¢÷ À¼õ ±ýÉ ±øÄ¡ «ñ½¢¸¨ÇÔõ «Å÷¸ÇÐ ¦¸¡Øó¾¨É ÜðÊì ¦¸¡ñÎ µ¼Å¡ ¦º¡ýÉÐ?

²§¾¡ ´Õ Å£ðÊø ¿¼ó¾ ²§¾¡ ´Õ ºõÀÅò¨¾ ¦º¡ýÉÐ.

þôÀÊ ´Õ ºõÀÅõ ܼ þÐŨà ¯Ä¸¢ø ¿¼ì¸Å¢ø¨Ä¡?

¿¼ó¾¨¾, ¿¼ó¾Ð §À¡Ä ¾¡÷ò¾Á¡¸ ¾ÕÅо¡§É ¸¨Ä? º¢É¢Á¡?

¯Â¢÷ À¼ò¾¢ø ´Õ ¦Á§ºƒ¤õ þø¨Ä, Å¡ò¾¢Â¡÷ ¸¡Äò¾¢Ä¢Õó§¾ ¾Á¢ú Áì¸û ¬¸¢Â ¿¡í¸û º¢É¢Á¡¨Å ²§¾¡ ¸£¾¡ ¯À§¾ºõ §ÃïÍìÌ À¡÷츢§È¡õ.

«¼ Å¢Çí¸¡ô ÀÂָǡ, º¢É¢Á¡ ±ýÀÐ, Àþ ¿¡ðÊÂõ §À¡Ä, ¿¡¼¸õ §À¡Ä, ´Õ ¸¨Ä¼¡ «Ð ´ýÚõ ¦Á§ºˆ ¦º¡øÖõ º¡¾Éõ þø¨Ä.

¦¸ð¼§¾¡ ¿øÄ§¾¡ «¾¢ø ¦Á§º¨ƒ ±¾¢÷À¡÷ôÀÐ ¿õÁ ¾ÅÚ.

¯Â¢÷ À¼ò¾¢ø ´Õ ¦ºýº¢ÊùÅ¡É ¸¨¾¨Â ú¡À¡ºõ ¬¸¡Áø Åø¸÷ þøÄ¡Áø ¾¢È¨Á¡¸ ¨¸Â¡ñÊÕ츢È÷¸û.

´Õ ÌòÐô À¡ðÊø¨Ä, ´Õ ÌÇ¢Âø º£ý þø¨Ä, ´Õ §¸ÅÄÁ¡É §ƒ¡ì þø¨Ä. þÃ𨼠«÷ò¾ źÉí¸û ܼ ¸¨¾Â¢ý §¾¨Å째÷À§Å À¡Å¢ì¸ô ÀðÊÕ츢ÈÉ.

´Õ ¸ÊÉÁ¡É ¸¨¾¨Â Á¢¸×õ §¿÷ò¾¢Â¡¸ ¦º¡ýÉ º¡Á¢ìÌ À¡Ã¡ðÎì¸û.

þõ¨ºìÌ Á¨È ¸ÆñΠŢð¼Ð À¡Åõ.

þ¾¢ø þÕóÐ ¦¾Ã¢ÔÐ þÅâý º¢É¢Á¡ ú¨É, ¾¨Ã Ê즸𠧸Í, þÐí¦¸øÄ¡õ §º¡Éí¸¢ ¸£§Ã¡ §ÀÍõ "(À¢)Àï(º)" ¼Âġ쨸 À¡÷òРŢº¢ÄÊì¸ò¾¡ý Ä¡ÂìÌ

அண்ணானோட சண்டைக்கு வந்த தெரியும் தானே :twisted: :evil:

:roll: :roll:

¸..¸..¸..§À¡

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

«¼ Å¢Çí¸¡ô ÀÂָǡ, º¢É¢Á¡ ±ýÀÐ, Àþ ¿¡ðÊÂõ §À¡Ä, ¿¡¼¸õ §À¡Ä, ´Õ ¸¨Ä¼¡ «Ð ´ýÚõ ¦Á§ºˆ ¦º¡øÖõ º¡¾Éõ þø¨Ä.

¦¸ð¼§¾¡ ¿øÄ§¾¡ «¾¢ø ¦Á§º¨ƒ ±¾¢÷À¡÷ôÀÐ ¿õÁ ¾ÅÚ.

கலைகளின் ஊடாக மக்களிற்கு பல தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக தமிழீழ வீதிகளிலே நடைபெற்ற நடைபெறுகின்ற தெருக்கூத்து ஓர் கலையாயினும் அதன் மூலம் மக்களிற்கு கொடுக்கப்படுகின்ற தகவல்கள் பல.

ஒரு கலையில் இருக்கும் தகவல்களைப் பெறுவது நுகர்வோரைப்பொறுத்தது. சிலரிற்கு அதில் கூறப்படுகின்ற தகவல் புரிகிறது, சிலரிற்கு புரிவதில்லை. அனைவருக்கும் புரியும் வகையில் ஓர் கலைப்படைப்பு அமையமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் இல்லாத ஒன்றை இவர்கள் கற்பனை செய்யவில்லையே தவறான உறவுகள் அன்று தொடக்கம் இன்றுவரை தொடர்கிறதே

இருக்கலாம்! ஆனால் சினிமா என்ற ஊடகம் மூலம் அது சமூகத்தில் பரப்பப்படும் போது தான் அது தப்பு! இந்தியாவில் ஈவிரிசிங் பிரச்சனைக்கு ஒரு ஊடகம் சினிமா தான் என்பது உண்மை.

ஏனென்றால் தமிழ்சினிமாவில், பார்த்தால் பல படங்களில் அது முக்கிய இடத்தை வகிக்கின்றது! ஓரிரண்டு பேர் செய்கின்றதை உலகத்திற்கு அடையாளப்படுத்துவதில் எவ்வித நியாயமும் இருக்கப் போவதில்லை!

சமூதாயத்திற்கு நல்ல கருத்துக்கள் சொல்லவேண்டிய தேவை ஏராளம் இருக்க, இப்படி சாக்கடையைத் தலையில் போடுவதை ஏன் விரும்ப வேண்டும்

இன்றுதான் உயிர் படம் பார்த்தேன். உந்தப் படம் எடுத்த சாமியைக் கண்டிக்க வேணும். இப்பிடியா போட்டு உடைக்கிறது. கட்டாயம் 25 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2006ல் உது பற்றிக் கதைத்து உந்தச் சாமியைக் கண்டிப்பார்கள் என்று நம்புவோம்.

இங்க கடந்த வருடம் குஸ்புவுக்காக வாங்கிய வக்காலத்து இருக்கு.(24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005)

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...er=asc&&start=0

  • 2 weeks later...

சீறுகிறார் "அண்ணி" சங்கீதா

அஜீத்துக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா??

தமிழ் சினிமாவில் சமீபத்திய பரபரப்பு சங்கீதா. அலைபாயும் அண்ணியாக நடித்து அனலைக் கிளப்பியிருக்கிறார். "எங்க மம்மியைக் கேளுங்க" என்று செல்லம் கொஞ்சிப் பேசும் நடிகைகளில் வித்தியாசப்பட்டு விவரமாய்ப் பேசுகிறார். இயல்பாய் இருக்கிறார்.

உங்களைப் பொறுத்தவரை அழகாகவும் இருக்கிறீர்கள். நன்றாக நடிக்கவும் செய்கிறீர்கள். அப்படியிருந்தும், உங்களால் தொடர்ந்து சக்ஸஸ்ஃபுல்லாக வலம் வர முடியாதது ஏன்?

"உண்மையில் எனக்கும் அதுக்கான காரணம் தெரியல. என்னோட அழகு, தோற்றம் மேல எனக்கே அவ்வளவு நம்பிக்கை கிடையாது. ரொம்ப அழகாக டிரெஸ் பண்ணினால் வாய்ப்புகள் அமையும் என்ற நம்பிக்கையும் எனக்கில்ல. இன்னிக்குத் தமிழ் சினிமாவுல இருக்கிற முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் பல பேர் என் நண்பர்கள்தான். ஆனாலும் வாய்ப்புகள் வரல."

இதனால் உங்களுக்கு வருத்தம் ஏற்படுவது உண்டா?

"நிச்சயமாக அந்த ஆதங்கம் இருக்கு. சில படங்களைப் பார்க்கும்போது, நாம இந்தக் கதாபாத்திரத்துல நடிச்சிருந்தால், இன்னும் அழகாக நடிச்சிருக்க முடியுமேன்னு நினைச்சுப் பார்க்கிறது உண்டு. ஜெயிக்கணும் என்ற எண்ணத்தை விட, நாம இன்னும் நல்லா பெர்ஃபார்ம் பண்ணனும் என்ற ஆசை இருக்கிறதால, வருத்தம் இருக்கு. இதை மீறியும் நான் இன்னிக்கு வரை தாக்குப்பிடிச்சிருக்கேன் என்றால், அதற்குக் காரணம் என்னோட கடின உழைப்பு மட்டும்தான். அதிர்ஷ்டம் என்பது என் வாழ்க்கையில எந்த உதவியையும் இதுவரைக்கும் செய்யல."

வயசாக ஆக அழகு குறையும்னு சொல்வாங்க. அந்தக் கவலை இருக்கா?

"நிச்சயமாக இல்ல. நான் நடிக்க வந்த புதுசில் ரொம்ப அசிங்கமாகத்தான் இருந்தேன். இப்ப போகப் போகத்தான் நீ அழகாக, கிளாமராக இருக்கேன்னு எங்கம்மாவே சொல்வாங்க. ஸ்ரீதேவி மேடம் பாருங்க. அவங்களோட பதினாறு வயசுல ரொம்ப பிரமாதமான அழகில்ல. ஆனால், இப்ப பார்த்தால் எவ்வளவு அழகாக இருக்காங்க. அதேமாதிரி, ஹாலிவுட்டுல நாற்பது வயசுக்கு மேலதான் ஹீரோயின்கள் கொடிகட்டிப் பறக்கிறாங்க. அதனால, இப்ப நடிக்காவிட்டால், வயசு ஏறிடும்; அழகு போயிடும் என்ற பயம் எனக்கு இல்ல."

"பிதாமகன்" படத்துக்குப் பிறகு நீங்கள் மீண்டும் ஒரு ரவுண்ட் வருவீர்கள் என்று எதிர்பார்த்தால்... அப்படி நடக்கவில்லையே?

"பிதாமகன்"படத்துக்கு முன்னாடி என்னை எப்பவோ பார்த்த பாலா வாய்ப்பு கொடுத்தார். என்னை மற்றொரு பரிமாணத்துல காட்டினார். அது என்னை அடுத்தகட்டத்துக்கு உயர்த்தியது. ஆனால் அதற்குப் பிறகு ஏன் எந்த இயக்குநர்களாலும் என்னைப் பழைய மாதிரி நார்மலாக, காட்ட முடியலன்னு எனக்குத் தெரியல. நிறைய இயக்குநர்கள், நீங்க மெச்சூர்டாக நடிச்சிட்டீங்க. அதனால யூத்தாக, ஹீரோயினாக நடிக்க முடியாதுன்னு சொன்னாங்க. அதுவும் ஏனென்று புரியல. அதனால பாலாகிட்டயே "நீங்களே என்னை என் வயசுக்கேத்த மாதிரி சின்னப் பெண்ணாக நடிக்க வையுங்கள்" என்று கேட்கலாம்னு இருக்கேன்". (பலமாகச் சிரிக்கிறார் சங்கீதா.)

இத்தனை வருடம் இல்லாத பரபரப்பு "உயிர்" படத்தில், கொழுந்தனுக்கு ஆசைப்படும் அண்ணி வேடத்தில் கிடைத்துவிட்டது. இதுபோன்ற அதிர்ச்சியூட்டும் காரெக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி?

"கதையை முதல்ல கேட்டபோது, எனக்கும் ஷாக்காகத்தான் இருந்துச்சு. இந்தக் கதை சம்பந்தமாக சில சைக்கியாரிஸ்டுகளிடம் கலந்து பேசினேன். அவங்கிட்ட வந்த கேஸ்களைப் பத்தி கேட்டப்ப... கதையைவிட அதிர்ச்சியான சம்பவங்கள் இருந்துச்சு. நீங்க இந்தக் கதையைப் பண்ணுங்க. அதன் மூலமாக, இப்படி ஒரு கலாசார சீரழிவு வராம தடுக்கணும்னு மக்களுக்குச் சொல்லுங்கன்னு என் நண்பர்கள் சொன்னதாலேயே நடிக்க சம்மதிச்சேன்."

"அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி. என்னையே முழுசாக எடுத்துக்கோ" என்ற வசனங்கள் சமூகத்தையே கெடுப்பதுபோல இருக்குதே. ஒரு நடிகையாக உங்களது சமூகப் பொறுப்புணர்ச்சியைக் கண்டுகொள்ளாமல் விட்டது போல தெரிகிறதே?

"ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்குங்க. என்னுடைய கதாபாத்திரத்தை நியாயப்படுத்தல. கணவரோட தம்பியைக் கல்யாணம் பண்ற மாதிரி காட்டியிருந்தால் அது தப்பு. அப்படி எதுவும் காட்டலை. சினிமாவுல, அரசியலில் நடக்கிற தப்புகளைக் காட்டுறோம். சட்டம், மருத்துவம், கல்வித் துறைகள்ல நடக்கிற தப்புகளைச் சினிமாவுல சொல்றோம். அதேமாதிரி சமூகத்துல நடக்கிற தவறான உறவுகளைக் காட்டுறதுல என்ன தப்பு இருக்கு. படத்துல பார்த்தீங்கனா எந்த இடத்திலேயும் ஆபாசக் காட்சிகள் இருக்காது.

அந்த அருந்ததி கதாபாத்திரம் என்னதான் தன்னை நியாயப்படுத்தினாலும் மக்கள் அதைத் தப்பாகத்தான் பார்க்கிறாங்க. படத்துல நான் ஹீரோயின் இல்ல. வில்லிதான். பிரபல வில்லன்களான எம்.என்.நம்பியார், பிரகாஷ்ராஜ் உட்பட எல்லா வில்லன்களும் சமூகத்துக்கு நல்லதையா சொல்றாங்க. பிரகாஷ்ராஜ் வில்லனாக சொல்ற டயலாக்குக்கு கைதட்டுறீங்க. அவர்கிட்ட, உங்களுக்கு சமூகப் பொறுப்புணர்ச்சி இல்லையா?ன்னு கேட்கிறது இல்லையே.

நான் நடித்த கதாபாத்திரம் மாதிரியே "வாலி"யில் அஜீத்தும், "ஆசை"யில் பிரகாஷ்ராஜும் பண்ணியிருக்காங்க. இவங்க நடிக்கும் போதெல்லாம், யாரும் கேட்கல. நான் நடிக்கும்போது மட்டும் ஏன் கேட்கிறீங்க. நான் ஒரு பெண் என்பதாலதானே கேட்கிறீங்க. அப்புறம் என்ன சமத்துவம்? உணர்ச்சிகள் என்பது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது. ஆம்பிளைனா ஒரு மாதிரி யோசிக்கிறதும், பெண்கள்னா இன்னொரு மாதிரி யோசிக்கிறதும்தான் தப்பு. ஆசை பொதுவானது. ஆசை சமமானது. அந்த ஆசை மற்றவர்களுக்குத் துன்பத்தைக் கொடுக்கிற மாதிரி இருக்க கூடாது."

சமீபத்தில் நடைபெற்ற "தம்பி" படவிழாவில், வடிவேலு "உயிர்" படத்தைப்பற்றிக் கடுமையாக விமர்சித்தது பற்றி உங்கள் கருத்து என்ன?

"ஒவ்வொரு படத்தையும் விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கு. ஒரு படத்தைப் பார்த்துவிட்டு பத்து பேர் படம் நல்லா இருக்குன்னு விமர்சனம் பண்ணுவாங்க. அதே படத்தைப் பார்த்துட்டு இன்னும் பத்து பேர், படம் நல்லா இல்லைன்னு விமர்சனம் பண்ணுவாங்க. இதுல ஒரேயொரு விஷயம் : விமர்சனம் என வரும்போது, அதை நல்லவிதமாகச் சொல்றதை எல்லோருமே கத்துக்கிட்டா அது ஆரோக்கியமாக இருக்கும்."

நன்றி குமுதம்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அந்த படத்தின் உடைய முடிவில் அண்ணிக்கு நேர்ந்த கதியை காட்டுகின்றார்கள் தானே....தமிழ் நாட்டில் படம் வெற்றிகரமாக ஒடி கொண்டு இருக்கின்றதே...இப்படி ஒரு சர்சைகினாலேயே...அன்னம் நிறைய பேர் இந்த படத்த பாப்பாங்க..ஒரு வகையில இதுவும் இயக்கினருக்கு கிடைத்த ஒரு வெற்றி.. :D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளைஞர்களிடத்தில் (அலைபாயும் வயசு தானே) இந்தப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்று நினைக்கின்றேன்.

சமுதாயத்தில் பிரைச்சினைகளை ஆண், பெண் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காது பொதுவான கண்ணோட்டத்தில் பார்ப்பதே முக்கியமானது.

திரைப்படத்தில் கதை நாயகியால் கேட்கப்பட்ட ஒரு முக்கியமான கேள்வி:

"ஒரு ஆணுக்கு மனைவி இறந்தால் பின்பு மனைவியின் தங்கையை கட்டி வைத்துவிடுகின்றார்கள். ஆனால் இதுவே ஒரு பெண்ணுக்கு நடந்தால் இப்படி நடப்பதில்லையே"

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இந்த படத்தை இலவசமாய் பார்க்க கிடைத்தது அதை திரைபடம் என்று பார்க்கின்றபோது அந்த அண்ணியின் காதா பாத்திரம் சும்மா சொல்ல கூடாது நடிப்பு அபாரம் அதைவிட அந்த படத்தில் உறவை விட உணர்வுகளிற்கு முக்கியத்துவம் கொடுத்து பார்த்தால் ஒரு சிறந்த படம் என்று சொல்லலாம் உறவுகளிற்கு முக்கியத்தவம் கொடுத்தால் சரியில்லைதான் ஆனால் மனிதர்கள் உறவுகளை விட உணர்வுகளிற்குதானே முக்கியத்துவம் கொடுக்கின்றனர் உணர்வுகளிற்கே மட்டும் முக்கியத்துவம் கொடுக்கின்ற மனிதர்களிடத்தில் இந்த படம் மிக பெரும் வெற்றியே எனவே என்னை பொறுத்தவரையும் இந்த படம் வெற்றியே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.