Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மருத்துவ உயிர்ப் பிரதியாக்கத்தில் ஒரு மைல் கல்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
130515173248_human_embryo_464x261_spl_no

மனிதக் கரு முட்டை ஒன்றை உயிர்ப் பிரதியாக்கம் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.

இதுவரை பிரிட்டிஷ் ஆய்வாளர்கள்தான் டோலி என்ற செம்மறி ஆட்டுக்குட்டியை 1996ஆம் ஆண்டில் உருவாக்கியிருந்தனர்.

 

அன்று முதல் அதே இனப்பெருக்க உயிர்ப் பிரதியாக்க வழிமுறைகளை பயன்படுத்தி மனித கலங்களை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர்.

மரபணுக்கூறுகள் (டி என் ஏ) அகற்றப்பட்ட ஒரு முட்டையினுள் வயதுக்கு வந்த ஒருவரின் கலத்தில் உள்ள பதார்த்தங்களை மாற்றீடு செய்ததாக ''ஒரேகொன்னை'' சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அதன் பின்னர் கருக்கட்டாத முட்டையை கருக்கட்டும் குருத்துக் கலங்களாக உருவாவதற்காக மின்சாரத்தின் உதவியுடன் தூண்டியதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தக் குருத்துக்கலங்கள் மனித உடலில் இருக்கக் கூடிய ஏனைய அனைத்து வகைக் கலங்களாகவும் மாற்றப்படக் கூடியவையாகும்.

இதயம், மூளை மற்றும் எலும்புக் கலங்களாகவும் அவை மாற்றப்படலாம்.

சேதமடைந்த தசைகளை பழுதுபார்க்கவும், நோய்களைக் குணமாக்கவும் இந்த கலங்கள் பயன்படுத்தப்படலாம் என்று இந்தச் சோதனைகளுக்கு ஆதரவானவர்கள் கூறுகிறார்கள்.

http://www.bbc.co.uk/tamil/science/2013/05/130515_humanembryo.shtml

மிகவும் சந்தோசமான விடயம்.

 

ஒருநாள் கண்டிப்பாக மனிதன் கடவுளையும் குளோன் பண்ணுவான்(ள்).

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான விடயங்களில் கருத்துப் பரிமாறும் யாழ் கள உறவுகளின் தொகை வெகு குறைவு. ஆனால் ஆங்கிலத் தளங்களில் பிச்சு மேய்கிறார்கள்.

 

மருத்துவ ரீதியில் இந்த முறை முளையக் கல விருத்தி.. பல அனுகூலங்களைத் தந்தாலும்.. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மனித உயிர் உருவாக்கி... பின்னர் அழிக்கப்படுகிறது....என்ற உண்மையும் இதன் பின்னால்.. பதிந்து போயுள்ளது..!

 

டொலி என்ற ஆடு உருவாக்கப்பட்ட முறை. இதனை adult cell cloning என்று அழைப்பார்கள்.

 

cloning-sheep.gif

 

70110-004-420D4C4C.jpg

 

 

இதில் இன்னொரு விடயம் என்னவென்றால்.. டொலி இயற்கையாகப் பிறக்கும் ஆடுகளை விட குறைந்த காலமே (கிட்டத்தட்ட 6 ஆண்டுகள்) உயிர் வாழ்ந்துள்ளது. அது இறக்கும் போது அதற்கு முதுமையில் ஏற்படும் வியாதிகள் அநேகம் இனங்காணப்பட்டுள்ளன. முதிர்ந்த உடற்கலத்தில் இருந்து பெறப்படும் டி என் ஏ கொண்ட கருக்களைப் பயன்படுத்தும் போது.. அதில் இருந்து தோன்றும் இழையங்கள்.. எந்தளவுக்கு இயற்கையான இளமையான இழையங்களுக்கு வயதொத்ததாக (காலமொத்ததாக) இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது..!!

 

இந்த ஆராய்ச்சியில் இது ஒரு தொடக்கப் புள்ளி தான். இந்தப் பாதையில்.. மனித இனம் கடக்க வேண்டிய மைல் கற்கள் பல உள்ளன.

 

இதன் மூலம்.. கடவுளைக் குளோனிங் செய்ய முடியாது. அதுக்கு அறிவியல் இன்னும்.. நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. இது உண்மையில் ஒரு வகை.. cell repair. இயற்கையில் உள்ளதை தொழில்நுட்பத்தைப் பாவித்து அங்கும் இங்கும் அகற்றி இடமாற்றி விடுதல்.. அதையே செய்கிறார்கள்..!  :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான விடயங்களில் கருத்துப் பரிமாறும் யாழ் கள உறவுகளின் தொகை வெகு குறைவு. ஆனால் ஆங்கிலத் தளங்களில் பிச்சு மேய்கிறார்கள்.

--------

 

பானையில், இருந்தால்... தானே.. அகப்பையில் வரும்.

நாங்கள் சினிமா நடிகைகளை, ஆராய்வது போல்... மற்ற இணையங்களில் ஆராய்கிறார்களா?

அவனவன் தனக்குத் தெரிந்ததைத் தானே.. எழுத முடியும். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பானையில், இருந்தால்... தானே.. அகப்பையில் வரும்.

நாங்கள் சினிமா நடிகைகளை, ஆராய்வது போல்... மற்ற இணையங்களில் ஆராய்கிறார்களா?

அவனவன் தனக்குத் தெரிந்ததைத் தானே.. எழுத முடியும். :D  :lol:

 

நடிகைகள்.. பற்றி அறிந்திருப்பது தவறல்ல. அது.. entertainment பக்கத்துக்குரியது. அதுவும் அவசியம் வாழ்க்கையை சுவாரசியமாகக் கொண்டு செல்ல. அத்தோடு..சாதாரண அறிவோடு கூட இப்படியான விடயங்களை வாசிச்சு விளங்கிக் கொள்ளவும் முனைய வேண்டும். ஆர்வம் காட்ட வேண்டும். சாதாரண மக்கள்.. ரெக்னிக்கலா ஆழமாகப் போக வேண்டியதில்லை. குறைந்தது.. ஒரு ஆராய்ச்சியின்... நன்மை தீமைகளை.. விளங்கிக் கொள்ள வேண்டியது.. அதன் சமூக.. பொருண்மியத் தாக்கங்களை உணர வேண்டியது.. அவர்களின் கடமை. :)

  • கருத்துக்கள உறவுகள்

நடிகைகள்.. பற்றி அறிந்திருப்பது தவறல்ல. அது.. entertainment பக்கத்துக்குரியது. அதுவும் அவசியம் வாழ்க்கையை சுவாரசியமாகக் கொண்டு செல்ல. அத்தோடு..சாதாரண அறிவோடு கூட இப்படியான விடயங்களை வாசிச்சு விளங்கிக் கொள்ளவும் முனைய வேண்டும். ஆர்வம் காட்ட வேண்டும். சாதாரண மக்கள்.. ரெக்னிக்கலா ஆழமாகப் போக வேண்டியதில்லை. குறைந்தது.. ஒரு ஆராய்ச்சியின்... நன்மை தீமைகளை.. விளங்கிக் கொள்ள வேண்டியது.. அதன் சமூக.. பொருண்மியத் தாக்கங்களை உணர வேண்டியது.. அவர்களின் கடமை. :)

 

இதை இப்படியும் எடுக்கலாமல்லவா  நெடுக்கு...

 

இது உங்கள் சம்பந்தப்பட்ட துறை  என்றபடியால் நீங்கள் அதில் நுளைந்து பார்க்கின்றீர்கள்

இப்போ

என்னை  எடுங்கள்

இதை தெரிந்து கொண்டு அதை பிரயோகித்துப்பார்க்க முடியுமா?

அந்த வகை ஒதுங்கலாக கூட  இருக்கலாம்

இங்கு நான் என்பது நானல்ல........... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் குளோனிங் முறையில் மனிதன்? தோல் செல்லில் இருந்து ஸ்டெம்செல் கரு முட்டை

 

 

குளோனிங் முறையில் மனிதனை போலவே மற்றொரு மனிதன், அதாவது மனித உடலில் பல லட்சம் கோடி செல்கள் உள்ளன. இவற்றையோ, நுண்ணுயிர்களையோ மணம், நிறம், குணம் மாறாமல் அப்படியே ஒரு பிரதி எடுப்பதுதான் ‘குளோனிங்’.

மனிதனின் தோல் செல்லுடன் பெண்ணின் சினைமுட்டையை சேர்த்து ஸ்டெம்செல் கருமுட்டையை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் அபார சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் சிக்கலான ஆபரேஷன்களுக்கு தேவையான ஸ்டெம்செல்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

குளோனிங் முறையில் மனிதனை ஜெராக்ஸ் எடுக்கும் முயற்சியின் முதல்கட்டம் இது என்ற பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது இந்த ஆராய்ச்சி. மனித உடலில் பல லட்சம் கோடி செல்கள் உள்ளன. இவற்றையோ, நுண்ணுயிர்களையோ மணம், நிறம், குணம் மாறாமல் அச்சு அசலாக ஜெராக்ஸ் பிரதி எடுப்பதுதான் ‘குளோனிங்’.

இதுதொடர்பான ஆராய்ச்சிகள் பல காலமாக நடந்து வந்தது. 1952-ல் முதன்முதலாக தவளை ஒன்று குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது. 1963-ல் மீன், 1986-ல் சுண்டெலி என்று ஒவ்வொன்றாக இந்த முறை நடத்தப்பட்டு வெற்றியை கண்டது. பெண் செம்மறி ஆட்டின் பால்மடியில் இருந்து செல்லை எடுத்து அதில் இன்னொரு பெண் ஆட்டின் முட்டையை சேர்த்து கருமுட்டையாக மாற்றி இதை வேறொரு செம்மறி ஆட்டின் கருப்பையில் வைத்து.. என 3 பெண் ஆடுகளின் குட்டியாக 1996-ல் ‘டாலி’ ஆடு பிறந்தது குளோனிங் ஆராய்ச்சியில் பெரும் மைல் கல் சாதனையாக இது கருதப்பட்டது.

நாமாக உயிர்களை உருவாக்குவது இயற்கைக்கு எதிரான செயல் என ஒரு பக்கம் கண்டன குரல்கள் எழுந்தாலும் பூனை, குதிரை, நாய், ஓநாய், ஒட்டகம், ஆடு என பல்வேறு விலங்குகள் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டு வந்தன. மனித செல்லையும் குளோனிங் முறையில் உருவாக்குவதற்கான ஆராய்ச்சியும் தீவிரமாக நடந்து வந்தது.

15 ஆண்டு தீவிர முயற்சிக்கு பிறகு இதில் தற்போது வெற்றி கண்டிருக்கிறார்கள் அமெரிக்காவின் ஆரிகன் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

            ஒரு ஆணின் தோல் செல்லை எடுத்து, அதனுடன் பெண்ணின் சினை முட்டையை சேர்த்து ஸ்டெம்செல் கருமுட்டையாக மாற்றியிருக்கிறார்கள்.

img1130516024_2_1.jpg
 
FILE


இதுபற்றி ஆய்வுக்குழு உறுப்பினர் டாக்டர் சுக்ரத் மிடாலிபோவ் மேலும் விளக்கம் அளிக்கையில்,

மனிதனின் தோல் செல்லை குளோனிங் முறையில் உருவாக்கும் ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதுபோல குளோனிங் முறையில் உருவாக்கப்படும் கருமுட்டையில் இருந்து ஸ்டெம்செல் உருவாக்கி அதன் மூலம் பல்வேறு வகையான திசு செல்களை உருவாக்க முடியும். உறுப்பு மாற்று ஆபரேஷன்களுக்கு இது முக்கிய பங்களிக்கும். உறுப்பு செல்களை வளர வைத்து, செயற்கை உறுப்புகள் தயாரிப்பது, தேவைப்படுவோருக்கு பொருத்துவதற்கான முயற்சிகளும் வெற்றி பெறும்.

குளோனிங் முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் மனித ஸ்டெம்செல்லுக்கு வேறு செல்கள், திசுக்கள், உறுப்புகளை வளர வைக்கிற திறன் இருப்பது உறுதியாக தெரிகிறது. பார்வை கோளாறுகள், தண்டுவட பாதிப்புகள், பார்கின்சன்ஸ் டிசீஸ் எனப்படும் மூளை முடக்குவாதம், நரம்பு மண்டல பாதிப்புகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் செல்லை எடுத்து அதை கருமுட்டையாக மாற்றி வளர வைத்தால் செல்களின் ஜெராக்ஸ் பிரதிகளை உருவாக்க முடியும்.

 

            பாதிக்கப்பட்ட செல்களை அகற்றிவிட்டு இந்த புதிய செல்களை பொருத்துவதன்மூலம் அவர்களை குணமாக்க முடியும். அதே நேரம், இந்த குளோனிங் ஸ்டெம் செல்லுக்கு இனப்பெருக்க குணம் இருக்கிறதா என்பது பற்றி

img1130516024_3_1.jpg
 
FILE

உறுதியாக தெரியவில்லை. அதில் நாங்கள் ஆர்வமும் காட்டவில்லை. இவ்வாறு மிடாலிபோவ் கூறினார்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலை ஸ்டெம்செல் துறை பேராசிரியர் மார்ட்டின் பெரா கூறுகையில்,

‘‘ஆரிகன் விஞ்ஞானிகளின் அபார சாதனையானது மரபணு வளர்ச்சியில் மைல்கல் போன்றது. ஸ்டெம்செல்களின் மூலம் பலவித நோய்களை குணப்படுத்த முடியும் என்பது விரைவில் நிரூபிக்கப்படும். ஆரோக்கியமான மனிதகுலத்தை உருவாக்கி நாம் சாதனை படைப்பதால், ஸ்டெம்செல் மற்றும் குளோனிங் சம்பந்தமான எதிர்ப்புகள் தானே மறையும்’’ என்றார். மனித செல்லை குளோனிங் முறையில் உருவாக்கும் ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்போதைக்கு இல்லாவிட்டாலும், மனிதனின் ஜெராக்ஸ் என்றாவது ஒருநாள் உருவாக்கப்படக்கூடும்.

 

http://tamil.webdunia.com/miscellaneous/health/news/1305/16/1130516024_3.htm

 

 

 

மருத்துவ ரீதியில் இந்த முறை முளையக் கல விருத்தி.. பல அனுகூலங்களைத் தந்தாலும்.. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மனித உயிர் உருவாக்கி... பின்னர் அழிக்கப்படுகிறது....என்ற உண்மையும் இதன் பின்னால்.. பதிந்து போயுள்ளது..!

 

 

 

நெடுக்கு,

 

இந்த துறை தொடர்பான அறிவும் புரிதலும் அதிகம் இல்லாமையால் கேட்கின்றேன், இது எப்படி ஒரு மனித உயிராகும்? ஒரு stemcell ஆனது ஒரு உயிராக பரிமாணம் அடைவதற்கு பல கட்டங்களை தாண்ட வேண்டும் போது எப்படி இது ஒரு 'உயிர்' என்ற வரையறைக்குள் வரும்? இதயமும், மூளையும் இல்லாத உணர்வும் இல்லாத குறிப்பிட்ட ஒரு உறுப்பாக, உடல் Tissue ஆக வளரக் கூடிய விதத்தில் தானே இது இருக்கு? (எதிர்காலத்தில் இவ் ஆராச்சியின் வளர்ச்சி மனிதனை குளோன் பண்ணுவதில் முடியும் என்பதை மறுக்கவில்லை)

 

 

இந்த ஆராச்சியிலும் ஆணின் தோலின் பதார்த்தங்களை எடுத்து பெண்ணி முட்டையில் வைத்துதானே உருவாக்கியிருக்கின்றனர். இது ஒரு உயிர் எனில் ஆணுக்கு வெளியேறும் அத்தனை இலட்சம் விந்துக்களிலும் உயிர் இருக்கு என்றும், அதே போன்று வெளியேறும் பெண் முட்டைகளுக்கும் உயிர் இருக்கு என்றும் எடுத்துக்கொள்ளலாமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.