Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? [ சனிக்கிழமை, 18 மே 2013, 06:02 GMT ] [ புதினப் பணிமனை ] Mulli-2009.jpg« ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? » என்னும் தலைப்பில் வெளியாகும் இத்தொடர் கட்டுரையின் முதல் பகுதி இது. இதனை குணா. கவியழகன்* எழுதுகின்றார். 

எதற்காக எழுதுகிறேன்? 

மனித நேயத்தில் மையங்கொண்டே உலக அரசியல் நியமங்கள் இயங்குவதாக நம்பப்படும் இந்த நாகரீக உலகில் தம் இன அடையாளத்திற்காக ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு ஆளாகினர். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எனும் பெயரால் மனிதப் பேரழிவைக் கணக்கிலெடுக்காது இறுதி யுத்தத்தை கொடுரமாக நடத்தி முடித்தது சிறிலங்கா அரசு. 

சிறிலங்காவில் தேசிய இனப்பிரச்சினையை ஒப்புக் கொண்டு அனைத்துலகத் தலையீட்டோடு தீர்வு காணும் முயற்சி நடந்த பின்னரும் ஈழத்தமிழ் மக்களின் தலைமைத்துவமாகப் பேச்சில் ஈடுபட்ட 'தமிழீழ விடுதலைப் புலிகள்' மீது பயங்கரவாத முத்திரை குத்தி யுத்தம் தொடுக்கப்பட்டது. சமாதான முயற்சிக்கு கடமையாற்றிய கண்காணிப்புக்குழுவை - மூன்றாந்தரப்பை ஒருதலைப் பட்சமாய் வெளியேற்றிவிட்டு யுத்தத்தை சிறிலங்கா அரசால் தொடுக்க முடிந்தது. 

ஈழத்தமிழ் மக்களின் போராட்ட சக்தியை அழிப்பதற்காக நாற்பதாயிரத்திற்கு அதிகமான மக்கள் பலியாவது பற்றியோ, ஒரு இலட்சம் வரையானவர்கள் காயமுறுவது பற்றியோ எந்த ஆட்சேனையும் இன்றியே இறுதி யுத்தம் நிகழ்த்தப்பட்டது. ஒரு வகையில் ஈழத்தமிழ்மக்களின் போராட்ட முனைப்பை வேரோடு பிடுங்க மனிதப்பேரழிவு கொண்ட இந்த ‘இனப்படுகொலை’ திட்டமிடப்பட்ட தேவையாகவும் இருந்தது எனலாம். 

உலகில் தடைசெய்யப்பட்ட பேரழிவு ஆயுதங்களைப் பிரயோகித்தும், யுத்த தர்மங்களை மீறியும் போர் குரூரமாக நிகழ்த்தப்பட்டது. இருந்தும் அதை தடுக்கும் வல்லமை இந்த உலக சக்திகளிடம் இருக்கவில்லை. அல்லது தடுப்பதற்கான உளவூக்கம் இந்த உலக மனச்சாட்சியிடம் இருக்கவில்லை. 

மனித உரிமையின் மகத்துவத்தின் பேரால் உலக அரசியல் நியமங்கள் சுழல்வதாக காட்டப்படும் காட்சியின் மாயவிம்பத்தை மீண்டும் ஒருமுறை கிழித்திருக்கிறது முள்ளிவாய்க்கால் பிணவயல். 

ஒரு சிறிய அரசு தன் மக்களின் மீது புரிந்த கொலைவெறித் தாண்டவத்தை விஞ்ஞானம் தந்த செய்மதிக் கண்களால் அனைத்து உலகமும் பார்த்திருந்த போதும் அவற்றின் மனச்சாட்சியை அது உலுக்கவில்லை. சர்வசக்தி கொண்ட உலக நாடுகளால் இச்சிறிய அரசின் கொலைவெறியை தடுத்து மக்களைக் காக்க முடியவில்லை. உடன்பாட்டு மீறலை கட்டுப்படுத்த இயலவில்லை எனின் இந்த உலக அரசியல் சுற்றும் அச்சாணியே வேறு. 

புனித யுத்தம் எனும் பெயரால் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீது நடத்தப்பட்ட குருட்டுத் தாக்குதல் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரை’ பிரகடனம் செய்ய வைத்தது. அது செல்லுபடியான உலக உலக அரசியலாகவும் மாறிற்று. 

இதைவிடவும் குரூரமாக முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக அல்லது அரச பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை இந்த உலகு பிரகடனம் செய்யுமா? அப்படி ஒரு உலகஅரசியலை முன்னெடுக்குமா? 

இந்தப் படிப்பினை ஈழத்தமிழர்களுக்கு மட்டுமானதல்ல. ஒடுக்கப்படும் இனங்களுக்கான உலகளாவிய படிப்பினை. முப்பதாண்டு ஆயுதப் போராட்டம் ஈழத்தில் முறியடிக்கப்பட்டிருக்கிறது. இதில் கற்றுக்கொண்ட பாடங்கள் அனுபவத்திலிருந்து தேசிய போராட்டத்திற்கு புதிய செல்நெறிகளைக் கண்டு பிடிக்க வேண்டியது மனித உரிமைக்கான உலக அறிவியலின் கடமையும் கூட. 

மேலான ஆயுத பலமோ, அர்ப்பணிப்பும் துணிச்சலும் கொண்ட நுண்மையான போராற்றலோ, அனைத்துலக நீதி நியமங்களோ அரச பயங்கரவாதத்திடம் இருந்து ஒடுக்கப்படும் மக்களைக் காத்துவிடாது என்பது கற்றுக் கொண்ட பாடம் அனுபவத்திலிருந்து புரியப்பட்டிருக்கிறது. 

இந்த அறிவிலிருந்து ஈழத்தின் ஆயுதப்போராட்டத்தை அதன் பயணவழியை மறுவாசிப்புச் செய்யவே இந்த கட்டுரைகளின் மூலம் முயற்சிக்கிறேன். ஈழத்தமிழர்களுக்கு பிற சக்திகளால் இழைக்கப்பட்ட அநீதி பற்றி இங்கு எடுத்தாளப்படவில்லை. அவை அவையாகவே இருக்கின்றன. இந்த நியதியான அரசியலில் ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மை விடுவித்துக் கொள்ள நிகழ்த்திய போராட்டத்தில் நிகழ்ந்திருக்கக்கூடிய தீர்மானத் தவறுகளையே இங்கு கருப்பொருளாக்கியுள்ளேன். 

பயண வழியில் நிகழ்ந்த தவறை மறுவாசிப்பு செய்யும் நேர்மையின் மூலம் புதிய செல்நெறியை கண்டுபிடிக்கும் இயலுமையை வழங்குவதே இதன் உள்நோக்கம். மாறாக குற்றம் கண்டு இது அரசியல் தலைமைத்துவப் போட்டிக்கு உபயோகப்படுத்துவதற்கான ஆயுதம் அல்ல. இழைக்கப்பட்ட துரோகத்தனங்கள் ஒழிந்து கொள்வதற்கானதும் அல்ல. மக்களின் குருதிதோய்ந்த இந்தப் போராட்டத்தின் அனுபவத்தை மீதிப் பயணத்தின் பாதையை வகுத்துக் கொள்வதற்காகவன்றி சுயநல அரசியலுக்கு உபயோகப்படுத்தினால் அதுவே மன்னிக்க முடியாத அரசியல் அயோக்கியத்தனமும் ஆகும். 

இந்த வாசிப்பும் கூட ஒரு பார்வையே இதுவே முடிவான கருத்தாக வற்புறுத்தக் கூடியதல்ல. இது ஒரு தர்க்க வெளியை உருவாக்கும் நேர்மையுடனேயே எழுதப்பட்டிருக்கிறது. அவ்வாறான ஓர் ஆரோக்கிய வெளி உருவாகினால் அதுவே முதல் வெற்றி. அதில் வலிதான தர்க்கம் புதிய அரசியல் செல்நெறியை கண்டு பிடித்துத் தரும் என்பதே இந்த எழுத்தின் நம்பிக்கை. 

ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை மறுவாசிப்புச் செய்யும் இந்தப் பார்வை குறித்துப் பெருமை எதுவும் இல்லை ஆட்சேபனையும் எனக்கில்லை. இதை ஆய்வாகமட்டுமல்ல சாட்சியாகவும் கூட ஒப்புவித்திருக்கிறேன் உங்களின் முன் பயணவழியில் இன்றைய என் காலக்கடன் இதுவென. 

- குணா. கவியழகன்* 

*இக்கட்டுரையாளர் ஓர் ஊடகவியலாளர் [கொழும்பிலிருந்து வெளிவந்த ‘North east monthly’ ஆங்கில இதழில் எழுதியவர்], விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர், முள்ளிவாய்க்கால் இறுதிநாட்கள்வரை வன்னியில் வாழ்ந்தவர், தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிறார்,

 

http://www.puthinappalakai.com/view.php?20130518108284

 

Edited by nunavilan

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 01
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:24 GMT ] [ புதினப் பணிமனை ]
முன்னுரையாக..

வளர்ச்சியென்பதும் வீழ்ச்சியென்பதும் ஆயுதப்போராட்டத்தின் அமைப்புசார் கருவிசார் வளர்ச்சியோ வீழ்ச்சியோ அல்ல அது, அரசியல்சார் இயலுமையின் வளர்ச்சி, வீழ்ச்சி என்பதாகும். குணா.கவியழகன்*
 

01.

ஒரு தேசவிடுதலைப் போராட்டத்தில் முன்னெடுக்கப்படும் போரின் வெற்றி, போராட்டத்தின் வெற்றியாகி விடுவதில்லை. போரின் தோல்வியும் போராட்டத்தின் தோல்வியாகி விடுவதில்லை.

கடந்த நூற்றாண்டின் இறுதியில் பயஃபிறா [biafra]* விடுதலைப் போராட்டம் போரில் வெற்றி பெற்றது போராட்டத்தில் தோற்றுப் போனது. ஆனால் கிழக்குத் தீமோர் [East Timor]* போரில் தோற்றுப் போனது போராட்டத்தில் வெற்றி பெற்றது.

போர் என்பது பேரம் பேசும்சக்தியை உருவாக்குவதற்கான மார்க்கம், வலுவான பேரம்பேசும் சக்தி இல்லாதவிடத்து போர் அதற்கான ஓர் ஊடகமாகின்றது. பேரம் அனைத்துலக மற்றும் உள்நாட்டு அரசியல் புறநிலைகளால் தீர்மானிக்கப்படக்கூடியது வெறும் போரினால் அல்ல.

ஆயுதப்போராட்டத்தின் இலட்சியம் அரசியல் இலக்குத் தான். மிதவாத அரசியலால் தீர்க்க முடியாத அரசியல் பிணக்குகள் அரசியல் வன்முறை வடிவாக மாறுகின்றன. எழுந்த வாரியான இந்த வன்முறை வடிவம் முதிர்ந்து ஒழுங்கு பெற்று ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் கொள்கின்றது.

அரசியல் பிணக்கினால் உருவாகும் எல்லா ஆயுதப்போரினதும் இறுதி இலட்சியம் அரசியல் வெற்றியே. ஆயின் ஆயுதப்போர் அரசியலுக்கு உட்பட்டதும், அரசியல் அறிவினால் வழிநடத்தப்பட வேண்டியதும், அதன் விளைவுகள் அரசியல் அளவீடுகளினால் அளக்கப்பட வேண்டியதுமாகும்.

ஒரு மக்கள் சமூகத்தின் வன்முறை எப்போது அரசியல் கோட்பாட்டினால் வழி நடத்தப்படுகின்றதோ அப்போது அது ஆயுதப்போராட்டமாக பண்புமாற்றம் பெறுகின்றது எனலாம்.

தேசவிடுதலைகோரி முன்னெடுக்கப்படும் ஒரு ஆயுதப்போராட்டம் அதன் உள்நாட்டு அரசியலுடன் மட்டும் சம்மந்தப்பட்டதல்ல மாறாக அதன் தாக்க விளைவுகள் பிராந்திய அனைத்துலக அரசியலைப் பாதிக்கவல்லது. அதே போல அனைத்துலக அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் போராட்டத்தை பாதிக்கவல்லது. ஆயின் அது அனைத்துலக அரசியல் அதன் ஒழுங்கு என்பவற்றோடு பின்னிப்பிணைகின்றது.

02.

இங்கு தேசிய விடுதலைப் போராட்டத்தில் அதன் முன்னேற்றம், பின்னடைவு, வெற்றி அல்லது தோல்வி அனைத்துலக அரசியலுக்குட்படுகின்றது. ஊலக அரசியல் உறவுகளின் நுண்மையான அறிவுகொண்டு ஒரு விடுதலைப் போராட்டம் வழிநடத்தப்படவும் அளவீடு செய்யப் படவும் வேண்டியதாகும்.

ஒரு விடுதலைப்போராட்டத்தின் வளர்ச்சியில் உள்நாட்டுக் காரணிகள் தாக்கத்தைச் செலுத்தலாம். ஆனால் ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்று புதிய நாடு உருவாகுவதென்பது அனைத்துலக அரசியல் காரணிகளால் நிர்ணயிக்கப்படுவதாகும்.

ஆயுதப்போராட்ட அமைப்பொன்று தான் முன்னெடுக்கின்ற போரில் ஒவ்வொரு வெற்றியும் அதன் முழுமையான அரசியல் இலட்சியத்தில் பகுதி ரீதியான அரசியல் வெற்றியைப் பெறவேண்டும். போரில் பெறும் ஒவ்வொரு வெற்றியும் அதற்குரிய அரசியல் நல்விளைவைப் பெறவில்லையெனின் போரில் பெறப்பட்ட வெற்றி போராட்டத்தின் வெற்றியாகவோ, முன்னேற்றமாகவோ ஆகிவிடாது.

அரசியல் நல்வினையை அடைய முடியாத எந்தச் சமரினதும் மகத்துவமான வெற்றிக்கும் போராட்ட அர்த்தத்தில் எந்தப் பெறுமானமும் கிடையாது. ஆக, வளர்ச்சியென்பதும் வீழ்ச்சியென்பதும் ஆயுதப்போராட்டத்தின் அமைப்புசார் கருவிசார் வளர்ச்சியோ வீழ்ச்சியோ அல்ல அது, அரசியல்சார் இயலுமையின் வளர்ச்சி, வீழ்ச்சி என்பதாகும்.

தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் கடந்த நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்த உலக முக்கியத்துவம் மிக்க போராட்டமாகும். வல்லமை, ஒழுங்கு தொழிற்திறன் கொண்ட உலகின் முக்கியத்துவம் மிக்க ஆயுதப்போராட்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் இயக்கம் இருந்தது.

இப்போது அதன் முப்பது ஆண்டுகால முதிர் இயலுமை முறியடிக்கப்பட்டிருக்கின்றது. இது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல விடுதலைக்காக போராடும் சமூகங்களுக்கும் எதிர்நிலையாளர்களுக்கும் கூட முக்கிய ஆய்வுப் பொருளாகியிருக்கின்றது.

03.

அரசியல் அறிவினாலும் அரசியல் அளவீடுகளினாலும் ஈழவிடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை ஆய்வுக்குட்படுத்துகிறது இக்கட்டுரை.

செயல் என்பது விளைவில் இருந்து விளங்கிக் கொள்ளப்படுவதேயல்லாமல் செயல் காட்சிகளிலிருந்தல்ல. தமிழீழ ஆயுதப்போராட்டத்திற்கு நிகழ்ந்த விளைவை செயல் காட்சிகளிலிருந்தல்லாமல் செயலில் இருந்து வியாக்கியானம் செய்ய முற்படுகின்றது இக்கட்டுரை.

*[biafra, officially the Republic of Biafra, was a secessionist state in south-eastern Nigeria that existed from 30 May 1967 to 15 January 1970, taking its name from the Bight of Biafra (the Atlantic bay to its south).[1] The inhabitants were mostly the Igbo people who led the secession due to economic, ethnic, cultural and religious tensions among the various peoples of Nigeria. The creation of the new country was among the causes of the Nigerian Civil War, also known as the Nigerian-Biafran War.

Land of the Rising Sun was chosen for Biafra's national anthem, and the state was formally recognised by Gabon, Haiti, Côte d'Ivoire, Tanzania and Zambia. Other nations which did not give official recognition but which did provide support and assistance to Biafra included Israel, France, Portugal, Rhodesia, South Africa and the Vatican City.[2] Biafra also received aid from non-state actors, including Joint Church Aid, Holy Ghost Fathers of Ireland, Caritas International, MarkPress and U.S. Catholic Relief Services.

After two-and-a-half years of war, during which a million civilians had died in fighting and from famine, Biafran forces agreed to a ceasefire with the Nigerian Federal Military Government (FMG), and Biafra was reintegrated into Nigeria].

*[East Timor was colonised by Portugal in the 16th century, and was known as Portuguese Timor until Portugal's decolonisation of the country. In late 1975, East Timor declared its independence, but later that year was invaded and occupied by Indonesia and was declared Indonesia's 27th province the following year. In 1999, following the United Nations-sponsored act of self-determination, Indonesia relinquished control of the territory and East Timor became the first new sovereign state of the 21st century on May 20, 2002. East Timor is one of only two predominantly Roman Catholic countries in East Asia, the other being the Philippines].


*இக்கட்டுரையாளர் ஊடகவியலாளர் [கொழும்பிலிருந்து வெளிவந்த North east monthly ஆங்கில இதழில் எழுதியவர்], விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர், முள்ளிவாய்க்கால் இறுதிநாட்கள்வரை வன்னியில் வாழ்ந்தவர், தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிறார்,

http://www.puthinappalakai.com/view.php?20130522108308

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 02
[ சனிக்கிழமை, 25 மே 2013, 08:01 GMT ] [ புதினப் பணிமனை ]

 

அரசியல் பேரமாக வேண்டிய வன்முறை அரசியல் வஞ்சகமாக்கப்பட்டது - குணா.கவியழகன்*


ஈழத்தமிழ் மக்களின் நியாயமான உரிமைக்கான மிதவாதப் போராட்டம் அரச வன்முறையால் அடக்கப்பட்டது. இந்த முன்னெடுப்பில் அரச அடக்குமுறை வெற்றிகண்டதே தவிர போராட்டம் வெற்றி பெறவில்லை.

வெற்றிபெறாததற்குரிய அடிப்படையான காரணம் ஈழத்தமிழரின் மிதவாதப் போராட்டத்தினால் ஒரு பேரச்சக்தியை உருவாக்கக்கூடிய வாய்ப்பு அப்போராட்டத்திற்கு இருக்கவில்லை. அப்போராட்ட முன்னெடுப்பினால் அரசை குறுக்கீடு செய்யக்கூடிய இயலுமை காணப்படவில்லை. ஏனெனில் வடக்கு கிழக்கின் அரசியல் பொருளாதாரம் அரசை குறுக்கீடு செய்யக்கூடிய சக்தியை கொண்டிருக்கவில்லை. தவிரவும் அனைத்துலக அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடிய காரணிகளை அது கொண்டிருக்கவுமில்லை.

ஒரு புறம் உள்நாட்டில் அரசை அடிபணிய வைப்பதற்குரிய அரசியல் பொருளாதாரத்தை ஈழத்தமிழ்ச்சமுகம் கொண்டிருக்காததினால் வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்படும் போராட்டத்திற்கு அரசு அஞ்ச வேண்டியதில்லை.

மறுபுறம் அனைத்துலக அரசியலில் இப்போராட்டத்தை தத்தெடுப்பதற்கு எந்தவொரு நாட்டிற்கும் இப்போராட்டத்தினால் பெறக்கூடிய நலன் எதுவும் இருக்கவில்லை.

இந்த அடிப்படைக் காரணத்தினால் இப்போராட்டம் மிகவும் பலவீனமானதாகவும் ஒருவிதத்தில் அர்த்தம் இழந்ததாகவும் இருந்தது. இதனால் அரச ஒடுக்குமுறை வெற்றிகண்டதே தவிர போராட்டமல்ல. ஆனால் இது மறுவளத்தில் வன்முறையே போராட்டம் தெரிவு செய்வதற்குரிய வரலாற்றின் நியாய காரணி ஆயிற்று.


அரச வன்முறைக்கு எதிராக அங்காங்கே எதிர்ப்பரசியலாக வன்முறை வெடித்தது. ஈழத்தமிழ் இளைஞர்களே இதில் ஈடுபட்டார்கள். இவை மெல்ல வன்முறைக் குழுக்களாகின. இந்த வன்முறைகளை அப்போது தமிழ் மக்களின் தலைமைத்துவமாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி ஊக்குவித்தது, பரப்புரைப்படுத்தியது. அதற்கு மகிமையும் தேடிக்கொடுத்தது. அதன் மூலம் நியாய அர்த்தத்தில் இந்த வன்முறைகளின் தலைமைத்துவமாக தமிழர் விடுதலைக் கூட்டணியே திகழ்ந்தது.

கூட்டணி இந்த வன்முறைகளை அரசிற்கு எதிராக மட்டுமன்றி தனது ஏகதமிழ்த் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்தவும் பயன்படுத்திக் கொண்டது.

விடுதலைக் கூட்டணியின் அரசியல் பரப்புரை மேடைகளில் துரோகத்தனத்திற்கு முக்கியத்துவமளிக்கப்பட்டு துரோகிகள் களையப்படவேண்டும் என்ற உணர்ச்சிகள் மேலெழுப்பப்பட்டன. துரோகிகளாக சுட்டிக்காட்டப்பட்டவர்கள் விடுதலைக்கூட்டணியின் போட்டி அரசியலாளர்களே. இங்கு அவர்கள் துரோகத்தனத்தில் ஈடுபடவில்லையா என்பது வாதம் அல்ல. கூட்டணி எழுப்பிய முழக்கங்களும், சொல்தூண்டல்களும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. ஏனேனில் கூட்டணி துரோகத்தனத்திற்கு அவர்களைவிட சளைத்ததாக பின்னர் இருக்கவில்லை.

போராட்டத்தில் இறங்கிய ஆயுதக்குழுக்கள் துரோகத்தனத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் போட்டியிட்டு கொண்டு செயற்பட்டன. ஏனெனில் கூட்டணியில் இதற்கு மகிமைத்துவம் தேடித்தரப்பட்டது. இதனால் இச்செயலைப் புரியும் ஆயுதக்குழுக்கள் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைய முடிந்தது. இக்காரணம், ஆயுதக்குழுக்கள் தமக்கிடையே போட்டியிட்டு கூட்டணியின் போட்டி அரசியலாளர்களை இணையவோ முடக்கவோ தம் சக்தியை செலவழிக்க வைத்தது.

இந்த அகஅரசியற் பின்னணியில் தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழ் மக்களின் தனிப்பெரும் அரசியல் தலைமைத்துவமாக உருவெடுத்தது. 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக்கூட்டணி மாபெரும் வெற்றியை கண்டதுமட்டுமல்லாமல் இலங்கை அரசியலில் எதிர்க்கட்சியும் ஆகமுடிந்தது.

ஈழத்தமிழ் மக்களுக்கு தமது தேசியக்குரலை வெளிப்படுத்த ஏக தலைமைத்துவம் உருவாவது நன்மை தான் ஆனால் கூட்டணி அதை எதற்கு பயன்படுத்திக் கொண்டது என்பது தான் கேள்வி.

இந்த அரசுக்கு எதிரான வன்முறைகளை ஒரு பயன்படுபொருளாக உருவாக்கி அதனை ஒரு பேரச்சக்தியாக மாற்றிக் கொள்வதே அப்போதைய வன்முறை அரசியலின் வகிபாகம்.

அரசை அச்சுறுத்திய தமிழ் மக்களின் இந்த வன்முறைத் தெரிவை ஒரு அரசியல் சரக்காக்கி அரசுடன் பேரத்தில் ஈடுபட்டு போராட்டத்தை பேரத்திற்கு தகுதியான உரிமைகளைப் பெற்றுக் கொண்டு முன்னகர்த்துவதே அதற்கு தலைமைத்துவம் கொடுத்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் கடமை.

ஆனால் தலைமைத்துவம் கொடுத்த விடுதலைக்கூட்டணி வன்முறைகளை ஒரு பேரப்புள்ளியாக பயன்படுத்துவதற்குப் பதிலாக ஈழத்தமிழர்களின் மாற்று அரசியலை அழிக்கப் பயன்படுத்திக் கொண்டது.

தமழீழத்திற்கு ஆணைபெற்ற விடுதலைக்கூட்டணி ஜெயவர்த்தன அரசாங்கத்தோடு இரகசிய சமரசங்கண்டு மாவட்ட அபிவிருத்தி சபையை தீர்வாக ஒப்புக் கொண்டது. மாற்றுத் தமிழ்த் தலைமைத்துவம் முடக்கப்பட்ட நிலையில் வன்முறையால் அடையப்பெற்ற பேரத்தை கூட்டணி சுயஇலாபத்திற்காக அடகு வைத்தது.

சிங்கள அரசாங்கம், தமிழ் மக்களின் சட்ட ரீதியான ஏக தலைமைத்துவம் மாவட்ட அபிவிருத்தி சபையை ஏற்றுக்கொண்டது என்பதை நியாயப்படுத்துவதில் வெற்றிகண்டது. இவ்அபிவிருத்தி சபை தமிழ்த்தேசியத்தை கூறுபடுத்தி உடைப்பதற்கு வழிகோலுமே தவிர பலப்படுத்த அல்ல.

ஆயுதப் போராட்டத்தின் முதல் எத்தனிப்பும் கொடுக்கப்பட்ட விலையும் கூட்டணியின் கருவியாகி சுயஅழிவில் போய் முடிந்தது.

[தொடரும்..]

http://www.puthinappalakai.com/view.php?20130525108328

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 03
[ புதன்கிழமை, 29 மே 2013, 07:47 GMT ] [ புதினப் பணிமனை ]

வஞ்சக அரசியல் கதவுகளை மூடுவதாக எண்ணி அரசியல் வெற்றிடத்திற்கு கதவு திறந்தார்கள் – குணா.கவியழகன்*
 

வன்முறை அரசியலுக்கு ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு உருவாகிற்று. அரச வன்முறையால் ஆத்திரம் கொண்ட மக்களுக்கு இது வடிகாலாகியதும் அப்போதைய ஈழத்தமிழரின் தலைமைத்துவம் இதற்குரிய மகிமைமிகு பரப்புரை வழங்கியதும் இதற்குரிய காரணங்களாகின.

இதனால் வன்முறைக்குழுக்கள் மெல்ல வன்முறை இயக்கங்களாக அமைப்பு வடிவம் பெறக்கூடிய சூழல் உருவாகிற்று. அமைப்பு வடிவம் பெறும் இயக்கங்கள் தன்னியல்பில் தமக்கென அரசியலையும் உருவாக்கத் தொடங்கின.

இயக்கங்களின் இம்முயற்சியால் இதுவரை வன்முறைக் குழுக்களுக்கு அரசியல் அர்த்தத்தில் மறைமுகத் தலைமைத்துவம் வழங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைத்துவம் சிதையைத் தொடங்கியது. இது தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் உருவாகிய வன்முறை இயக்கங்களுக்குமிடையில் முரண்பாட்டைத் தோற்றுவித்தன. ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்திற்கு தலைமைத்துவம் கொடுப்பது யார் எனும் போட்டி இங்கு தலைதூக்கிற்று.

ஏற்கனவே தேசவிடுதலைப் பயணத்திற்கு முதலில் துரோகத் தனத்தை களைய வேண்டும் என கூட்டணி உருவாக்கிய பரப்புரைக்கு இப்போது கூட்டணியே பலியாக வேண்டியாயிற்று. சுயநல அரசியலை கொண்டிருந்த கூட்டணி மீது எலவே உருவாக்கப்பட்ட கருத்துப் பதிவினால் வன்முறை அமைப்புக்கள் தம் போட்டித் தலைமைத்துவமாக இருந்த கூட்டணியைத் தகர்க்க வாய்ப்பளித்தது.

ஆயுத அமைப்புக்கள் மிதவாத அரசியல் தலைமையையும் நாடாளுமன்ற அரசியலையும் புறக்கணித்தார்கள், தடைசெய்ய முற்பட்டார்கள். தலைமறைவு இயக்கங்களாக இருந்த இவை நாடாளுமன்ற அரசியலில் பங்களிக்க முடியாது. எனவே தலைமறைவு அமைப்புக்கள் தலைமைத்துவம் வழங்க வேண்டுமெனின் நாடாளுமன்ற அரசியல் தலைமைத்துவத்தை ஓரங்கட்ட வேண்டியது தவிர்க்க இயலாதது.

இதன் விளைவு, தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் நாடாளுமன்ற அரசியலை இழந்தது, அல்லது பலவீனப்பட்டது. இதனால் ஆயுதப்போராட்டத்திற்கு பாதுகாப்பாகவும், அரசை பலவீனப்படுத்தவும் கூடிய நாடாளுமன்ற அரசியற் பலத்தை ஆயுதப்போராட்டம் இழந்தது. மட்டுமல்ல ஆயுதப்போராட்டத்தை ஒரு பயன்படுபொருளாக்கி செய்ய வேண்டிய அரசியலைச் செய்வதற்கு ஒரு முன்னணி அமைப்பு அற்றுப்போனது.

இதன் விளைவால் வன்முறைகளில் கண்டடையப் பெறும் வெற்றிக்கு எந்தப் பெறுமானத்தையும் அரசியலில் தேடிக்கொள்ள இயலவில்லை. அரசியல் அர்த்தமற்ற வன்முறைகளாகவே அவை பெரும்பாலும் அமைந்தது எனலாம்.

ஆயுதப் போராட்டத்தினால் சிங்கள அரசிற்கு எந்தப் பாதிப்பையும் வழங்காத பாதுகாப்பை ஆயுதப்போராட்டத்தின் இந்த அரசியற் கொள்கையே வழங்கியது. தன்னைப் பலவீனப்படுத்தியும் எதிரியை பாதுகாத்தும் கொண்டது இக் கொள்கை. இந்த அபத்தக் கொள்கை ஈழத்தமிழர் அறிவின், ஈழத்தமிழர் ஆளுமையின் வறுமையைக் காட்டியதே தவிர வல்லமையை அல்ல.

இந்த இடத்தில் வன்முறை அரசியல் தமிழ் மக்களிற்கு இக்காலத்தில் ஒரு அரசியல் வெற்றிடத்தைப் பெற்றுக் கொடுத்ததே தவிர வெற்றியை அல்ல.

தொடரும்..
 

 

http://www.puthinappalakai.com/view.php?20130529108357

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 04
[ சனிக்கிழமை, 01 யூன் 2013, 09:37 GMT ] [ புதினப் பணிமனை ]

 

அரசியல் தகமையை பெற வேண்டிய போராட்டம் அரசியல் அநாதையாகியது – குணா.கவியழகன்


இரண்டாம் உலகமகாயுத்தம் முடிந்ததைத் தொடர்ந்து உருவாகிய உலக அரசியல் பனிப்போர் ஒழுங்கிற்கு உட்பட்டிருந்தது. பனிப்போர் உலக ஒழுங்கு தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கு பொற்காலமாக இருந்தது.

சோவியத்யூனியனதும், அமெரிக்காவும் தலைமைத்துவத்தைக் கொடுத்த இரு அணிகளின் போட்டி அரசியலே அனைத்துலக அரசியலாக இருந்தது. இக்காலம் தேசிய விடுதலைப் போராட்டங்கள் வளரவும், கனியவும் இனிய காலமாக இருந்தது.

ஆசிய ஆபிரிக்க முன்னாள் கொலணித்துவ நாடுகளில் மேற்குலக நலனிற்கேற்ப வரையப்பட்ட நாட்டின் எல்லைகளில் பல தேசிய இனங்கள் நசுக்கப்பட்டிருந்தன. இவை தம் விடுதலைக்குப் போராட இவ்விரு சக்திமிக்க முகாம்களில் ஒன்றின் ஆதரவையும், ஊட்டத்தையும் பெற்றுக் கொண்டன.

உலக அளவில் முனைப்புப் பெற்ற தேசிய விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் தான் ஈழ விடுதலைப் போராட்டமும் உருவாகிற்று. அமைப்பு வடிவம் பெறும் வன்முறைக் குழுக்கள் பெரும்பாலும் சோசலிச சித்தாந்தத்தை தமது கொள்கை அரசியலாக வெளிப்படுத்தின. சில எதிர்மறையாக இருந்தன. ஈழத்தில் சோசலிச சித்தாந்தத்தையே அமைப்புக்கள் பற்றிக் கொண்டன.

விடுதலைப் புலிகள் இயக்கமும் தமது முதற் கொள்கை அறிவிப்பு வெளியீடாக ‘சோசலிச தமிழீழத்தை நோக்கி’ என்ற கைநூலை வெளியிட்டது. இயக்க சத்தியப் பிரமாணத்திலும் பொதுவுடமையை வளர்த்துக் கொண்டது.

ஈழத்தில் சோசலிய கொள்கையை வெளியிட்ட எல்லா இயக்கங்களும் அடிப்படையில் சோசலிய வாதிகளாக இருக்கவில்லை. எல்லாமே தேசியவாதம் கொண்டவையாகவே இருந்தன.

மேலும், தமிழீழத்தில் பாட்டாளி வர்க்கமோ, முதலாளி வர்க்கமோ அதற்குரிய சமூகப்பொருளாதார அமைப்போ இருந்திருக்கவில்லை. வர்க்கப்பிரச்சினை இங்கு கிடையாது. சமூக ஒடுக்குமுறையாக சாதியப்பிரச்சினை இருந்ததே தவிர வர்க்கப்பிரச்சினை இருந்திருக்கவுமில்லை.

ஆயின் எதற்காக இயக்கங்கள் சோசலிச சித்தாந்த்தத்தை வரித்துக் கொண்டன. தேசிய விடுதலையை அடைவதற்காக பனிப்போரில் ஈடுபட்ட சோவியத் முகாமின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக அன்றி வேறு அரசியல் அர்த்த பரிமாணத்தை இதில் தேட முடியாது.

இலங்கை என்பது இந்திய உபகண்ட மண்டலத்திற்கு உட்பட்டது. இந்தியா அப்போது தன்னை அணிசேரா நாடென அறிவித்துக் கொண்டாலும் நடைமுறைகளில் அது சோவியத்தின் பங்காளித்துவ அரசியலையே அனைத்துலக அரசியலில் கொண்டிருந்தது.

ஆயினும் கூட இந்தியா உள்நாட்டிலோ தன் மண்டலத்திற்குட்பட்ட அண்டை நாடுகளிலோ தன் கம்யூனீஸ்டுக்கள் தலையெடுப்பதை விருப்பவில்லை. சோவியத்யூனியனிற்கு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இணைபிரியா நட்புச்சக்தியாக இந்தியா இருந்தது.

இந்தியாவின் இப்பிராந்திய நலன்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல சோவியத்யூனியனுக்கு முக்கியமானவை, புறக்கணிக்க முடியாதவை இந்தியாவைத் தவிர்த்து ஒரு அரசியலை இப்பிராந்தியத்தில் சோவியத் யூனியனால் சிந்திக்கக்கூட முடியாது.

இந்தியா இலங்கை இரு நாடுகளாகப் பிளவுபடுவது தன் நலனிற்கு அச்சுறுத்தலானது என வகுத்துக் கொண்டது. அதிலும் ஈழத்தமிழர்கள் தனிநாட்டை அடைவது அயலில் உள்ள தமிழ் நாட்டிலும் தென்மாநிலங்கள் பிறவற்றிலும் தனிநாட்டுக் கொள்கை ஊக்கம் பெறும் என இந்தியா அஞ்சியது. ஏற்கனவே திராவிட நாட்டுக் கொள்கையால் இந்திய ஆளும் வர்க்கம் கதிகலங்கிய அனுபவம் இந்தியாவை இன்னும் அச்சப்படுத்தியது.

தவிரவும் இரு நாடுகளாக பிளவுபட்டால் பகையுணர்வு கொண்ட இரண்டும் ஒருமித்து இந்தியாவுடன் எதிர்காலத்தில் நட்பு பாராட்டவும் மாட்டாது. எனவே ஒன்று எதிர் நிலைக்குப் போவது தவிர்க்க இயலாது. ஆக, ஈழத்தில் தனிநாடு என்று ஒன்றை இந்தியாவால் சகிக்க முடியாது.

இந்த விளக்கத்தை அப்போதே விடுதலைப்புலிகள் இயக்கம் கொண்டிருந்தது. விடுதலைப்புலிகளிடம் செல்வாக்குச் செலுத்தக் கூடிய அப்போதைய அரசியல் அவதானிகள் இக்கருத்தினை வலுப்படுத்தினர். இக்கருத்துக்கள் நூலாகவும் வெளிவந்தன.

இந்தியா தனிநாட்டு கொள்கைக்கு எதிரானது என்ற மனப்பதிவு அப்போதே விடுதலைப்புலிகளின் தலைமைக்கு இவர்களால் உருவாக்கப்பட்டது.

ஆனால் இந்த அவதானிகள் இந்தியாவிற்கு அப்பால் ஈழப்போராட்டத்திற்கான அரசியல் இல்லை என்பதைக் கண்டு கொள்ளத் தவறினர். இப்பிராந்தியத்தில் இந்திய நலனை அனுசரிப்பதே சோவியத்யூனியனின் நலன். ஆயின், சோவியத் கொள்ளையை வகுத்துக் கொண்ட ஆயுதப் போராட்டம் பனிப்போர் ஒழுங்கில் எங்கிருந்து தமக்கான ஆதரவைப் பெற்றுக் கொள்வது?

அடிப்படையில் சோசலியவாதிகள் அல்லாதவர்கள் அக்கொள்கையை எந்தக் காரணத்திற்காக வகுத்துக் கொண்டனரோ அது ஒரு அபத்த அரசியல் ஞானம் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை.

அக்கொள்கை வகுப்பால் போராட்டம் அநாதரவாகும் சூழல் இருந்ததே தவிர ஆதரவு பெறும் சூழல் இருந்திருக்கவில்லை. ஆயினும் கூட அனைத்துலக அரசியலில் அப்போதைய சிங்கள அரசாங்கத்தின் அரசியல் போக்கினால் ஆயுதப்போராட்டத்திற்கு செழுமை தரும் சூழல் உருவாகிற்று

1977ம் ஆண்டு ஜெயவர்த்தனா அரசாங்கம் பதவிக்கு வந்தது. அது இலங்கையின் வெளியிறவுக் கொள்கையை முழுமையான மேற்கு சார்பு அரசியலாக மாற்றியது. பிராந்திய நட்புக்கு அதில் இடமிருக்கவில்லை. மேற்குலக செல்வாக்குட்பட்ட நாடாக இலங்கை உருமாறி வந்தது.

இது இந்தியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. எனவே இது சோவியத்யூனியனுக்கும் அச்சுறுத்தலானதே ஜெயவர்த்தனாவின் இவ்வரசியல் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து வழிக்குக் கொண்டுவர வேண்டிய தேவை இந்தியாவிற்கு எழுந்தது. சோவியத்யூனியன் இதை ஊக்குவித்தது.

இந்தியா இதற்காக எடுத்த இராஜதந்திர முயற்சிகள் பலனளிக்காது போக ஆயுதப்போராட்டத்தை ஒரு அழுத்தப்புள்ளியாக இலங்கை மீது பிரயோகிக்க தீர்மானித்தது. இந்தியாவின் இவ்வரசியல் தெரிவு ஆயுதப்போராட்டம் அனைத்துலக அரசியலில் பிராந்திய முக்கியத்துவம் பெறத்தக்க காலத்தை கனிய வைத்தது.

இதுகூட சிங்கள அரசாங்கத்தின் கொள்கைப் போக்கினால் உருவானதே தவிர ஆயுதப்போராட்டத்தின் கொள்கை வகுப்பினால் அல்ல.

1983ல் நிகழ்ந்த இனப்படுகொலையை தொடர்ந்தும் இலங்கை இந்தியாவை அனுசரித்து நடக்காததால் இந்தியா ஆயுதப்போராட்டத்தை தத்தெடுக்க தீர்மானித்தது தனது நலனிற்காக. ஆயுதப்போராட்டம் இந்திய ஊட்டம் பெற்று முக்கியத்துவமும், செழுமையும் அடைந்தது. ஆயுதப்போராட்டத்தை அழுத்தப்புள்ளியாக பயன்படுத்தும் இந்தியத் தெரிவினால் இது வரை களமுனையில் காட்டப்பட்ட வெற்றிக்கு அளவாய் அரசியல் விளைவைப் பெறமுயலும் தருணம் உருவாகிற்று.

இந்தியா ஈழப்போராட்டத்தை இலங்கை மீதான அழுத்தப் புள்ளியாக பாவித்தாலும் ஈழப்பிரச்சனையின் பேரால் தான் அதனால் தலையிட முடியும். வடக்கு கிழக்கை தமிழர்களின் தாயகமாக ஏற்றுக்கொள்வதில் இந்தியாவிற்கு எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. தமிழர் தாயகத்திற்கு இந்திய மாநிலங்களிற்கு உரித்தான அதிகாரங்கள் வழங்கப்படுவதிலும் இந்தியாவிற்கு எந்த நலன்கேடும் இருக்கவில்லை.

ஆக, இலங்கையில் தலையிடும் இந்தியாவின் முடிவே ஆயுதப்போராட்டத்தால் அப்போது அடையப்பெற்ற களவெற்றிக்கு கிடைத்த பேரப்புள்ளியாகும். இந்தியா ஆயுதப்போராட்டம் தனது ஆளுகைக்கு உட்பட்டது என இலங்கைக்குக் காட்டியே பேரத்தை உருவாக்கியது.

எனவே ஆயுதப்போராட்டம் தன் பேரத்தை இலங்கைக்கு எதிராக மட்டுமல்ல இந்திய நலனை பாதிக்காத அடைவு வரை இந்தியாவிற்கு எதிராகவும் வைத்துக் கொள்ளலாம். இதனை ஒரு பேரச்சக்தியாகப் பயன்படுத்தி தமிழர் தாயகம் என்ற முதல் அடைவை நோக்கி முன்னேறக் கூடிய ஏதுநிலைகள் அப்போது அரசியல் அரங்கில் இருந்தது.

இதற்கப்பால் ஒரு அடைவை எட்டக்கூடிய எந்தவொருவாய்ப்பும் போராட்டத்திற்கு அகப்புற அரசியலில் இருந்திருக்கவே இல்லை. ஆனால் இந்தியா தனிநாட்டுக் கொள்கைக்கு எதிரானது ஆக, இந்தியா போராட்டத்திற்கு எதிரானது என்ற மனோபாவம் குருட்டு அரசியல் அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத் தூண்டியது.

அப்போதே ஆயுதப்போராட்டச் சக்திக்கு இணையான அரசியல் விளைவை பெற்றுக் கொள்ளக்கூடிய இயலுமைச்சூழல் இருந்த போதும் அரசியல் வங்குரோந்துக் கொள்கையால் அது கைதவறிப்போனது.

திம்புப் பேச்சுவார்த்தை குழப்பத்தைத் தொடர்ந்து ஆயுதப்போராட்டத்திற்கு கிடைத்த இந்திய ஆதரவு ஊட்டம் நிறுத்தப்பட்டது. ஆயுதப்போராட்டம் அரசியல் அநாதையாகியது. அரசியல் கொள்கையால் வழிநடத்தப்படாத போர்க் கொள்கை போராட்டத்தை அநாதையாக்கியதே தவிர, போரின் பயனான அரசியல் அடைவைப் பெற்றுக் கொடுக்கவில்லை.

தொடரும்..

http://www.puthinappalakai.com/view.php?20130601108378

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 05
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 06:38 GMT ] [ புதினப் பணிமனை ]


கொள்கைக் கோளாறுகள் கொண்டு சேர்க்கும் இடம் அரசியல் கழுமரம் – குணா.கவியழகன்

இந்திய நலனை அனுசரிக்காததனால் ஆயுதப் போராட்டம் இந்தியாவைப் பகைத்துக் கொண்டது. சொந்த நிலத்தில் தனித்து நின்று போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஈழப்போராட்டத்திற்கு உருவாகிற்று. சரியாகச் சொன்னால் மிகப்பெரும் பின்னடைவை ஆயுதப்போராட்டம் அரசியல் அர்த்தத்தில் கண்டது. ஏதிரியை பலப்படுத்தியும் போராட்டத்தை பலவீனப்படுத்திய கொள்கையாகவும் இது போய் முடிந்தது.

விடுதலைப்புலிகள் அமைப்புக் கொண்டிருந்த கட்டுக்கோப்பும் செயல் ஆற்றலும் மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தன. மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த விடுதலைப்புலிகள் இயக்கம் ஏனைய ஆயுத அமைப்புக்களை தடை செய்யும் தீர்மானத்தை எடுத்தது. இத்தீர்மானத்திற்கான அரசியல் பின்புலம் இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு உட்படாமல் புறக்கணித்ததன் விளைவாகவே உருவானது.

இந்தியா ஏனைய இயக்கங்கள் மூலமாக போராட்டத்தில் செல்வாக்குச் செலுத்தும் ஏதுநிலை இருப்பதை உணர்ந்து கொண்டது விடுதலைப்புலிகளின் தலைமை.

ஏனைய இயக்கங்களை இந்தியா அரவணைத்து ஆதரவளித்தால் களத்தில் தனித்துவிடப்பட்ட விடுதலைப்புலிகள் பலவீனமடைய வேண்டிய நிலை ஏற்படும். அரசியல் முக்கியத்துவத்தையும் இழக்க நேரிடும். இதனால் மக்கள் மத்தியில் புலிகளின் செல்வாக்கு இழக்கப்படலாம் இந்நிலை, ஆயுதப் போராட்த்திற்கான தலைமைத்துவம் மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த புலிகளிடம் இருந்து கைமாற வைக்கும். இவ்வாறு அஞ்சிய விடுதலைப்புலிகள் இயக்கம் ஏனைய இயக்கங்களை தடை செய்தது.

அநேகமாக ஏனைய இயக்கங்கள் மக்களிடம் பரந்தளவில் நற்பெயரைப் பெறுவதில் மிகவும் பலவீனமாக இருந்தன. கட்டுக் கோப்பான அமைப்பை உருவாக்குவதில் அவை போதிய வெற்றியை காணவில்லை. இதில் ஈரோஸ் ஓரளவு தனது நற்பெயரைக் காப்பாற்றிக் கொண்டது. விடுதலைப்புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் எவையும் களத்தில் யுத்த செயற்திறன் கொண்ட அமைப்புகளாக இருக்கவில்லை. இதனாலும் விடுதலைப்புலிகள் மீது மக்களிற்கு கவர்ச்சி இருந்தது. இத்தகைய பின்புலத்தைப் பயன்படுத்தி புலிகளால் ஏனையவற்றைத் தடை செய்ய முடிந்தது.

ஆனால், எமது ஒட்டுமொத்த ஆயுதப்போராட்டத்தை பரிசீலித்தால் ஈழத்தமிழர் ஆயுதப்போராட்டம் இதனால் பலவீனம் கண்டது. அதன் ஆட்தொகை பலமடங்கால் வீழ்ச்சி கண்டது. உள்நிலைக் குழப்பங்கள் உருவாகிற்று. ஒவ்வொரு இயக்கங்களும் காலூன்றி நின்ற மக்கள் சமூகம், பிரதேசம் என்பன குழப்ப நிலைக்கு உள்ளாகின.

பொதுவான வெகுசன உளவியலிலும் கூட இயக்கங்கள் தமக்குள் மோதிக் கொள்கின்றன என்ற அதிருப்தியைத் தோற்றுவித்தது. எனவே பிராந்திய வல்லரசின் ஆதரவை பகைத்து தனித்த ஆயுதப்போராட்டம் தமக்குள் மோதிக்கொண்டதால் தம்மைப் பலவீனப்படுத்தியது மட்டுமல்லாமல் சொந்த மக்களுக்குள்ளே அதிருப்தியை உருவாக்கி மேலும் பலவீனப்பட்டது.

பல இயக்கங்களைக் கொண்ட அப்போதைய ஆயுதப்போராட்டத்தின் நிலவரப்படி வசப்பட்ட தந்திரோபாயத்தை கருத்தில் எடுப்பதே முக்கியம். அதன்படி ஒவ்வொரு இயக்கமும் திரட்டும் ஆட்தொகை, மற்றும் இராணுவத் தாக்குதல்கள் மூலம் அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் அரசுக்கெதிராக இதனை ஒரு பேரப்புள்ளியாக பயன்படுத்தி அடையக்கூடிய சாத்தியமான அரசியல் உரிமையை அறுவடை செய்வது தான் போராட்டத்திற்கான பாதுகாப்பினையும் பலத்தையும் தேடும் முதற்கட்ட தந்திரோபாய நடவடிக்கையாகும். வேறு அரசியல் பலமுமற்ற போராட்டத்திற்கு தன்னைப் பாதுகாத்து முன்னேறக்கூடிய தெரிவாக இதைக் கொள்ளலாம்.

ஆனால் ஏனைய இயக்கங்களைத் தடைசெய்து உருவாகிய அகப்புற நிலைமைகளால் அத்தகைய கட்டி வளர்க்கப்பட்ட பேரச்சக்தி சிதைந்து சின்னாபின்னமாகியது. ஆயுதப்போராட்டம் இந்தியாவின் தேவையைக் கவர்ந்து உருவாக்கிய தம் பலத்தையும் பேரத்தையும் இழந்து போன நிலையில் தமக்கென இருந்த குறைந்த பட்ச இராணுவப் பலத்தால் உருவாகிய பேரச் சக்தியையும் இழந்து போனது.

ஆக அரசியலில் விடுதலைப் புலிகள் பலப்பட்டிருக்கலாம் ஆனால் புற அரசியலில் போராட்டம் பலவீனப்பட்டது.

இப்படி அரசியல் அர்த்தத்திலும், இராணுவ அர்த்தத்திலும் தனிமைப்பட்டு பலவீனப்பட்டுப்போன ஆயுதப்போராட்டம் எதிரிக்கு போதுமான பலத்தையும் நம்பிக்கையையும், சந்தர்ப்பத்தையும் வழங்கியது.

அப்போது ஓரளவு விடுதலைப்புலிகளால் இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி கட்டுப்படுத்த முடிந்தது யாழ்ப்பாணப் பிரதேசத்திலேயே. மிகச்சரியான சந்தர்ப்பத்தில் சிறிலங்கா அரசு ஈழத்தமிழர் ஆயுதப்போராட்டத்தின் அரசியல், மற்றும் இராணுவத் தலைமையமாக பயன்பட்ட யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையை தொடங்கியது.

‘ஓப்பரேசன் லிபரேசன்’ என அழைக்கப்பட்ட இம்முயற்சியின் முதல் எத்தனிப்பிலேயே வடமராட்சிப் பிரதேசம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. இது போர் நடவடிக்கையை இராணுவத்தால் முழுமைப்படுத்த முடியும் என்ற நிலையை உணர்த்தியது.

இயக்கங்களை தடைசெய்ததால் ஆட்பலத்தையும், இந்தியாவைப் பகைத்துக் கொண்டதால் ஆயுத விநியோகத்தையும் புலிகள் இயக்கம் இழந்து நின்ற தருணம் அது. கொள்கைக் கோளாறுகளினால் பலவீனப்பட்ட போராட்டம் தோற்கடிக்கவோ, பெரும் பின்னடைவை சந்திக்கவோ கூடிய ஏதுநிலையே அப்போதைய யதார்த்த நிலவரம் ஆகிற்று.

ஆனால் இலங்கை அரசு விட்ட இந்திய எதிர்ப்பு என்ற கொள்கைத் தவறினால் இந்தியா இந்த இராணுவ நடவடிக்கையைத் தடுக்க தன் சொந்த நலனிற்காக தலையிட்டது. இந்தியாவின் நேரடித் தலையீடு தன் சொந்த நலனுக்கேயாயினும் ஆயுதப்போராட்டம் பெரும் பின்னடைவையோ தோல்வியையோ சந்திப்பதிலிருந்து பாதுகாக்கப்பட்டது.

இங்கு கவனிக்கத் தக்கது என்னவென்றால் ஈழப்போராட்டம் பற்றிய இந்திய நோக்குநிலையால் இத்தருணத்தில் போராட்டம் பாதுகாக்கப்பட்டதே தவிர ஆயுதப்போராட்ட சக்தியால் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஏதுநிலை போதியளவு இருந்திருக்கவில்லை.

இந்தியாவை அனுசரித்த பின் இந்நடவடிக்கையை இலங்கை அரசு செய்திருந்தால் அப்போதைய ஆயுதப்போராட்டம் சுய அழிவைச் சந்தித்திருக்கும் அல்லது பெரும் பின்னடைவைக் கண்டிருக்கும்.

தொடரும்..

http://www.puthinappalakai.com/view.php?20130605108405

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 06
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 06:19 GMT ] [ புதினப் பணிமனை ]

முள்ளந்தண்டு முறிந்தவன் மூட்டை சுமக்கப்போன கதை – குணா.கவியழகன்

ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீடு ஆயுதப் போராட்டத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கியது. ஈழமண்ணில் இந்திய இராணுவம் நிலைகொண்டதனால் போராட்டம் திசைமாறிற்று. ஆயுதப்போராட்டம் இந்திய இராணுவத்திற்கெதிராக திரும்பி தன் பயணத்தில் தடம் புரண்டது. இந்த யுத்தம் எதிர்பார்க்கப்பட்டது என்றும் தவிர்க்க முடியாத வரலாற்று நிர்ப்பந்தம் என்ற கருத்தும் அப்போது வலுப்படுத்தப்பட்டது.

இந்தியாவிற்கு எதிராக யுத்தம் புரிந்து ஈழவிடுதலையை அடைய முடியுமா? அதன் பயணத்திற்காவது உதவுமா? ஆமெனின் அதன் நிகழ்ச்சி நிரல் என்ன? இக்கேள்விகளுக்கு பதில் தேவைப்படாமலே யுத்தம் தேவைப்பட்டது. இந்தியா ஆயுதப்போராட்டத்தின் எதிரியா? இல்லை தமிழ் மக்களின் எதிரியா?

இந்தியா அப்போதைய அரசியல் நிலவரப்படி தனி நாட்டை உருவாக்க ஒத்துழைக்காது என்பது நிஜம். இக்கருத்தை கண்டடைந்த அரசியல் அவதானிகள் விடுதலைப்புலிகளிடம் கருத்தியல் செல்வாக்கு செலுத்தக்கூடியவர்களாக இருந்தனர். இவர்களால், தனிநாட்டை ஆதரிக்காத இந்தியாவை போராட்டத்தின் எதிரியாக விடுதலைப்புலிகளின் தலைமை சிந்திப்பதற்கு தூண்டப்பட்டது. இதுவே பின்னர் போராட்டம் நந்திக்கடல் வரை பெரும் துன்பியலாக உருமாற காரணமாயிற்று.
யுத்தத்தில் நந்திக்கடல் கடைசி நாள் வரை உலகில் எந்தவொரு நாடும் முப்பது ஆண்டுகளாக தனிநாட்டுக் கொள்கைக்கு மறைமுகமாகவேனும் ஆதரவு வழங்கவில்லை. கொள்கையளவில் தானும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஆயின் உலக நாடுகள் எல்லாவற்றையும் ஆயுதப்போராட்டம் எதிரிகளாக வகுத்துக் கொள்ள வேண்டுமல்லவா!

யுத்தத்தின் கடைசி நாள் வரை உலகின் எந்தவொரு நாட்டிற்கும் ஈழம் தனிநாடாக பிரிவதற்குரிய அரசியல் நலனை அந்நாடுகள் கொண்டிருக்கவில்லை. அதே போல் இந்தியாவும் கொண்டிருக்கவில்லை. அவ்வளவு தான்.

மறுபுறத்தில் சிறிலங்கா அரசின் நோக்கு நிலையில் இந்தியா என்பது சிறிலங்காவின் நிரந்தர ஆதிக்க அச்சுறுத்தல். ஈழப்போராட்டம் சிறிலங்காவின் அரசியல் சிக்கல்.

உண்மையில் ஈழப்போராட்டம் இந்தியாவின் கருவி என்பதே சிறிலங்காவின் கொள்கை விளக்கம் எனவே சிறிலங்காவின் மெய்யான எதிரி இந்தியாவே. ஈழப்போராட்டம் தங்களின் கருவி எதிரியே அன்றி வேறில்லை என்றே சிங்களத் தலைமைத்துவம் அர்த்தம் கண்டிருந்தது. தவிரவும், இந்தியாவின் நலனின் படி ஈழத்தமிழ் மக்கள் ஒரு தேசிய சமூகமாக தம் தாயகத்தில் வாழ்வது இந்தியாவிற்கு அவசியமானது. தமிழர்களின் தேசிய இருப்பு முக்கியமானது. இந்திராகாந்தி அரசாங்கம் இதை தெளிவாகப் புரிந்தும் வைத்திருந்தது.

இந்த அரசியல் பின்புலத்தில் எதிரியின் பிரதான எதிரியை எப்படி ஆயுதப்போராட்டம் தன் எதிரியாக ஆக்கிக் கொண்டது? ஏன் ஆக்கிக் கொண்டது? இந்திய இராணுவத்தோடு மோதிக் கொள்வதால் எத்தகைய அரசியல் கோட்பாட்டின்படி ஆயுதப் போராட்டம் முன்னேறுவதற்கான வாய்ப்பிருந்தது. இது ஒரு அரசியல் அபத்தம் அன்றி வேறென்ன!

இந்திய இராணுவத்துடனான மோதலுக்கு மக்கள்முன் வைக்கப்பட்ட காரணங்கள் உணர்வுபூர்வமானவை. இதில் திலீபனின் தியாகம், குமரப்பா - புலேந்திரன் வீரமரணம் முக்கியமானவையாக அமைந்தன. இக்காரணங்கள் யுத்தத்திற்கான நிமித்த காரணங்கள். இவையே நியாய காரணம் ஆகிவிடுமா? மானத்தைக் காப்பாற்றுவது, வீரத்தைக் காட்டிக் கொள்வது என்பதுபோன்ற உணர்வுபூர்வமான சொல்லாடல்கள் அறிவுபூர்வமானவையல்ல.

இக்கட்டுரை வியாக்கியானம் செய்ய விளைவது கொள்கைத் தளம்பல்களையே அல்லாமல் கோபம் கொள்வது நியாயமா? இல்லையா? என்பதையல்ல.

மோதலின் மூலம் அரசியல் நல்விளைவைப் பெறக்கூடிய வாய்ப்புவெளி அரசியலில் இருந்ததா என்பது தான் கேள்வி. அரசறிவியலின் எந்தக் கோட்பாடும் அந்த யுத்தத்தை ஒரு முன்னோக்கிய பயணமாக நியாயம் செய்ய இயலாது.

ஈழப்போராட்டம் பயணத்தில் திசை மாறியது பின்னோக்கியது. இதற்கு "ஆயுதப் போராட்டத்தின் பயணத்திற்கு இந்திய இராணுவம் தடைக்கல்லாகியது. இதனால் யுத்தமும் தவிர்க்க முடியாதது" என்ற வரலாற்றின் முன் வைக்கப்பட்ட காரணத்தை எடுத்துக் கொள்வோம்.

இந்தியா, இராணுவத் தலையீடு செய்தால் அது ஈழப் போராட்டத்திற்கு இடையூறானது என்பது ஆயுதப்போராட்ட தலைமையின் முன் தீர்மானமாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறெனின், அதற்கான அரசியல் முன்னுணர்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கை என்ன? எடுத்த நடவடிக்கை என்ன?

ஆயுதப்போராட்டத்தை ஜெயவர்த்தனா அரசாங்கம் மீது ஒரு அழுத்தப்புள்ளியாக இந்தியா பாவிப்பதென்பது ஓர் அனைத்துலக அரசியல் யதார்த்தம். இந்தியாவின் நலன் மட்டுமல்ல, சோவியத்யூனியனின் அரசியல் நலனும் இதில் உள்ளடங்கி இருக்கிறது. இந்தியா இதன் பொருட்டே இப்போராட்டத்தை ஆதரித்து. அனைத்துலக அரசியல் பரிமாணம் கொண்ட இச்சிக்கலை ஆயுதப்போராட்ட அமைப்பு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக இந்தியா கைவிட்டு விடுமா?

இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு உட்படக்கூடாது என்ற கொள்கைத் தீர்மானம், இந்தியாவை அதன் அடுத்த தெரிவுக்கு தள்ளுவதைத் தவிர வேறு எந்த அரசியல் விளைவைத் தரும். மேலும், மாற்று இயக்கங்கள் மூலம் இந்தியா செல்வாக்கு செலுத்தும் என அஞ்சி அவற்றை தடைசெய்ததன் மூலம் இந்தியாவால் பிரயோகிக்கக் கூடிய இராஜீக முயற்சிக்கு இருந்த கடைசி நூலும் அறுக்கப்பட்டுவிட்டது.

இதனால் இந்தியாவின் இறுதித் தெரிவு நேரடி இராணுவத் தலையீடு என்று ஆகியது. அந்த இராணுவத் தலையீட்டை ஈழத்தமிழர் பிரச்சனையில் தனக்குள்ள தார்மீகக் கடப்பாடு எனும் பெயரிலேயே இந்தியாவால் மேற்கொள்ள முடியும். இது தமிழர்களின் தலைமைத்துவத்தையும், விதியையும் இந்தியாவிடம் தாரை வார்ப்பதைத் தவிர வேறு எதில் போய் முடியும். இராணுவத் தலையிட்டுத் தீர்மானம் எடுத்தது இந்தியா, எடுக்க நிர்ப்பந்தித்தது விடுதலைப்புலிகளின் கொள்கைத் தீர்மானம்.

களத்தில் அரசியல் ரீதியாகவும், ஆயுத ஆட்பல ரீதியாகவும் பலவீனப்பட்டு எதிரிக்கு சந்தர்ப்பத்தை வழங்கி அரசாங்கம் பெரும் படையெடுப்பை செய்ய வைத்தது புலிகளின் தீர்மானம். அது உருவாக்கிய பொருத்தமான சந்தர்ப்பத்தை இராணுவத் தலையீட்டுக்குப் பயன்படுத்திக் கொண்டது இந்தியா
.
இந்தியாவை இராணுவத் தலையீட்டுத் தீர்மானத்திற்கு தள்ளியதும், புலிகளின் கொள்கை நிலைப்பாடே செயலுக்கான சந்தர்ப்பத்தை வழங்கியதும் புலிகளின் கொள்கை நிலைப்பாடே.

செயல் இந்தியாவினுடையதே, ஆயினும், செயல் தூண்டல் புலிகளுடையது. அநீதி இழைத்தது இந்திய இராணுவம் எனின் அநீதியை வரவழைத்தது நாமல்லவா! இந்திய இராணுவத்துடனான மோதலால் தமிழ் வீரமும், தியாகமும் புகழடைந்தது. ஆனால் ஈழத்தமிழர் அரசியல் அறிவல்லவா மாசடைந்தது.

தொடரும்..

http://www.puthinappalakai.com/view.php?20130608108425

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 07

[ திங்கட்கிழமை, 10 யூன் 2013, 08:09 GMT ] [ புதினப் பணிமனை ]

அகப்பட்டது ஏணிப்படிகள் பயன்பட்டது இறங்குவதற்கே – குணா.கவியழகன்

கையில் இருக்கும் சீடடுக்குள்தான் மேசையில் விளையாட்டிருக்கும். இல்லாத சீட்டுக்கு விளையாட்டைக் கற்பனை செய்தால் தோல்விதான் இருக்கும்.

இந்தியா தனது இராணுவத் தலையீட்டால் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை உருவாக்கி விட்டது. யதார்த்தம் இது தான். ஆக அடுத்தது என்ன? இந்த யதார்த்தத்தைக் கையாள்வதில் சிங்கள இராஜ தந்திரமா ஈழத்தமிழர் இராஜதந்திரமா இறுதி வெற்றி காணப் போகின்றது என்பது தான் கேள்வி.

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையின் பெயரால் தான் உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழர்களின் பங்களிப்பு இல்லாமலேயே. தமிழ்த்தரப்பின் தார்மீக தலைமைத்துவமாக இந்தியாவே இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.

ஈழத்தமிழர் தலைமைத்துவத்தை இந்தியாவிடம் தாரை வார்த்துக் கொடுத்தது தவறான கொள்கைத் தீர்மானமன்றி இதற்கு வேறென்ன காரணம் கற்பிக்க முடியும்.

திம்பு பேச்சில் ஒருவர் தரப்பாக இருந்த இந்தியா இப்போது ஈழத்தமிழர்களின் தரப்பாக தானே செயற்பட்டது. இங்கு ஒரு தரப்பு என்பதற்கான தகமையையும் தமிழர்கள் இழந்துபோனமை துயரமானதே. இந்தியாவின் இச்செயல் கூறுவது என்ன?

இவ்வொப்பந்தம் இந்திய நலனிற்கானது. தமிழர்களின் இலட்சியத்தின் பேரால் இந்திய நலன்நோக்கிய நிகழ்ச்சி நிரலை குழப்பிவிட இயலாது என்பதே. இது தான் ஈழத்தமிழர் போராட்டம் உணர்ந்திருக்க வேண்டிய யதார்த்தம். இந்த யதார்த்த அரசியலை தமிழ் தலைமைத்துவத்தை விட சிங்களத் தலைமைத்துவம் சரியாகப் புரிந்து கொண்டது. அதனடி கொண்டு ஒப்பந்தத்தை அது கையாளத் தொடங்கியது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் அரசியல் கவனத்தை ஈர்க்கும் பிரதான அம்சங்கள் :

அ) வொய்ஸ் ஒவ் அமெரிக்கா, இலங்கையில் இருந்து அகற்றப்பட வேண்டும்.

ஆ) சீனன் குடா எண்ணைக்குதம் இந்தியாவிடம் கையளிக்கவேண்டும்.

இ) அந்நிய நாட்டுப் போர்க்கப்பல்களை இந்தியாவின் அனுமதியின்றி இலங்கை எல்லைக்குள் அனுமதிக்கக்கூடாது.

ஈ) யுத்த காலத்தில் திருகோணமலை துறைமுகத்தை இந்தியப் பயன்பாட்டிற்கு கையளிக்க வேண்டும்.

ஐ) இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை இலங்கை அனுசரிக்க வேண்டும்.

இவை அப்பட்டமாக இந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சரத்துக்கள்.

தமிழ் மக்களின் பெயரால் தலையிட்ட இந்தியா ஒப்பந்தத்தில் உருவாக்கியது என்ன?

மாகாண சபைத் தீர்வுத் திட்டம். இதில் கவனத்தை ஈர்ப்பது :

01. வடக்கு கிழக்கு ஒரு மாகாண அலகாக இணைக்கப்பட வேண்டும்.

02. மாகாண சபைக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

.

மேற் சொன்ன அனைத்துமே சிங்கள அரசால் சகித்துக் கொள்ள முடியாத சரத்துக்கள். ஆனால் அனைத்துலக அரசியல் புறநிலையில் தன்னை இந்தியாவிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேறுவழியில்லை என்பதைப் புரிந்து கொண்டது ஜே.ஆர் அரசாங்கம். தன்னை படையைக் கொண்டு வந்து மிரட்டிய பகையாளியை பகைத்துக் கொள்ளாமல் பணிந்து கொண்டது அது.

மேற்சொன்ன சரத்துக்களால் முழுப்பாதிப்பை அடைகிறது சிங்கள அரசு. ஆனால் ஈழத்தமிழர் தரப்பிற்கு அவ்வாறில்லை.

மேலும், ஈழத்தமிழர் பிரச்சினையின் தீர்வாக வரையப்பட்ட மாகாணசபைத் திட்டம், ஒப்பந்தத்தின் பேரால் இது ஈழத்தமிழரின் தேசியப்பிரச்சினை என்பதை ஏற்றுக் கொள்கிறது.

வடக்கு, கிழக்கு ஒரு அலகாக்கப்பட்டதன் மூலம் நடைமுறையில் ஈழத்தமிழர்களின் தாயகக்கோட்பாடு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், மாகாணசபைக்கான அதிகாரங்கள் தமிழர்கள் தம்மைச் சிங்களத் தரப்பிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளப் போதுமானவை இல்லை என்பது நிஜம். ஆனால் ஏற்றுக் கொள்ளாததால் ஏற்படும் அரசியல் துர்விளைவை விட போராட்டத்தை பாதுகாத்துக் கொள்வது அவசியமானது அல்லவா!

மேலும், திம்புவில் தமிழர் தரப்பால் முன்வைப்பட்ட தமிழர்தேசியம், தமிழர்தாயகம், தன்னாட்சி உரிமை என்ற மூன்று விடயங்களில் நடைமுறை அர்த்தத்தில் இங்கு தேசியமும், தாயகமும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன.

படையைக் கொண்டு வந்து தன் இறைமைக்கு பங்கம் விளைவித்து மிரட்டிய இந்தியாவை பகைக்காமல் பணிந்து கொண்டது சிங்கள அரசு. நாம் ஏன் எம்மை இந்தியாவின் பகையாளி ஆக்கிக்கொண்டோம்.

இந்த அரசியல் யதார்த்தத்தை மேவிய ஒரு வாய்ப்பு அப்போது ஈழப்போராட்டத்திற்கு இருந்திருக்குமென்றால் ஆயிரம் முறை இந்தியாவைப் பகைத்துக் கொள்ளும் தீர்மானத்தை தெரிவு செய்யலாம். அப்படி ஒரு யதார்த்தம் இருந்ததா? இல்லை யதார்த்தத்தை துப்பாக்கிச் சன்னங்களால் உருவாக்கிட முடியும் என்ற சந்தர்ப்பம் இருந்ததா?

போரில் முன்னேறுவதில் ஆயுதப் போராட்டம் கவனம் செலுத்திய போது. சிங்கள இராஜ தந்திரம் போரைவிட ஈழப்போராட்டத்தை பின்தள்ளுவதில் அக்கறை கொண்டது.

இதன் விளைவு, வடக்கு கிழக்கு சிங்களக் குடியேற்றத்தால் பிளவு படுத்தப்பட்டது. கிழக்கின் இனப்பரம்பல் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இதன் இழப்பு போராட்டம் தகுதியற்ற தாயகக் கோட்பாடாகிவிடும் ஆபத்திலிருந்தது.

இவ்வொப்பந்தத்தில் தமிழர்களின் தாயத்தை முதற்கட்ட அர்த்தத்தில் பாதுகாத்துக் கொள்வதற்கு வழிசமைக்க முடியும். வலுப்பெறாதிருக்கும் தேசியத்தை ஓர் அலகு நிர்வாகத்தில் வலுப்படுத்த முடியும். தனிநாட்டுக்கான போராட்டத்திற்கு இது உறுதியான பலத்தையும், தளத்தையும் அமைத்துக் கொடுத்திருக்கும்.

ஒப்பந்தம் தமிழர்களுக்கான இறுதித்தீர்வென கட்டுரை வாதிடவில்லை. ஒப்பந்தம் தமிழர் நோக்கு நிலையில் கையாளப்பட்டிருக்க வேண்டும் என்பதே வாதம். அப்போது ஆயுதப் போராட்டத்தால் கொடுக்கப்பட்ட விலைக்கு இந்த அடைவு கணிசமானதும் கூட.

தாயகத்தை பாதுகாத்து,தேசியத்தை வலுப்படுத்தி விட்ட போராட்டத்தால் சுயநிர்ணயத்தை நோக்கி முன்னேறுவது சுலபமானது அப்போது அதற்கான அரசியல் புறநிலை இல்லை. அரசியல் புறநிலை வாய்க்கும் போது இறுதி அடைவைக் காண்பது ஒப்பிட்டளவில் இலகுவானது.

ஒரு புதிய தேசத்தின் உருவாக்கம் போராட்டத்தின் பலத்தினால் அன்றி அனைத்துலக அரசியல் காரணிகளாலேயே நிச்சயிக்கப்படுகிறது என்பதை மீண்டும் இங்கு நினைவில் கொள்வோம்.

தீர்வை ஏற்றுக் கொண்ட பின் எதிர்காலத்தில் போராட்டத்தை எப்படித் தொடர்வது என்ற கேள்வி சிறுபிள்ளைத் தனமானது. அரசியல் என்பது நியாயத்தின் பேரால் நடப்பதல்ல. நலன்களின் பேரால் நடப்பது.

அனைத்துலக சக்திகளின் நலன்கள் தமிழர் சுயநிர்ணயத்துடன் ஒத்துப்போகும் போது அது தன் பேரிலேயே நியாயம் பெற்றுவிடும். தவிரவும், இந்தியாவுடன் மோத ஒரு நிமித்த காரணத்தை உருவாக்க முடியுமானால் அடிப்படையில் தமிழ்த் தேசியத்தின் எதிரியுடன் மோத ஒரு நிமித்த காரணத்தை உருவாக்க முடியாதா என்ன?

இந்தியா படையோடு வந்தால் இலங்கை பணிந்து போகும் என்பதே யதார்த்தம். அழுத்தத்தை பிரயோகிக்கும் தரப்போடு சமரசம் கண்டால் தன்னுடன் சமரசம் கண்ட தரப்பை பாதுகாக்க வேண்டியது இந்தியாவின் கடப்பாடேயல்லாமல் சண்டித்தனம் செய்யும் தரப்பையல்ல.

இந்தியாவுடன் சிங்களத் தரப்பு மட்டும் சமரசம் கண்டு, ஈழத்தமிழது தரப்பு பகைமை கொண்டால் போராட்டம் அழிவை நோக்கும். இந்தியாவுடன் சிங்களத் தரப்பு சமரசங்கண்டு, தமிழ்த்தரப்பும் சமரசங்கண்டால் போராட்டம் பாதுகாக்கப்படும்.

போராட்டம் பாதுகாக்கப்பட்டால் சிங்களத்தரப்பு தன்னியல்பில் இந்தியாவிடம் பகைமை கொள்ளும் அப்போது தமிழர்களைப் பாதுகாக்க வேண்டியது இந்தியாவின் கடப்பாடு மட்டுமல்ல அதன் நலனுமாகும். இந்த அடிப்படை போராட்டத் தலைமையால் புரியப்படாமல் போனது. ஒரு துர் விளைவே.

சிங்கள இராஜதந்திரம் தன் நிஜ எதிரியையும் கருவி எதிரியையும் மோதவிட்டுக் கொண்டதில் திருப்தி கண்டது. ஈழத்தமிழர் இராஜ தந்திரம் தன் பேரப்புள்ளியை பலவீனப் புள்ளியாக்கிக்கொண்டது.

சிங்களத் தரப்பு பலவற்றை கொடுக்கத் தயாராகி எதையும் இழக்காது பாதுகாத்தது. தமிழ்த்தரப்பு சிலவற்றைப் பெற தயாராகாததால் இருந்ததையும் இழந்து போனது.

இந்தியாவுடனான யுத்தத்தால் போர் நுணுக்கங்கள் செழுமை அடைந்திருக்கலாம். ஆனால் போராட்ட இலட்சியம் பாழடைந்தது.

தொடரும்..

http://www.puthinappalakai.com/view.php?20130610108437

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 08

[ புதன்கிழமை, 12 யூன் 2013, 08:55 GMT ] [ புதினப் பணிமனை ]

நண்பனைப் பகைவனாக்கி பகைவனுக்கு நண்பனாகிய பாதையில் குருதி வழிந்தபடி வெற்றியைத் தேடிய பயணம் - குணா.கவியழகன்

இந்திய இராணுவம் ஈழமண்ணில் நிலைகொண்ட போது தான் விடுதலைப்புலிகள் ஜரோப்பாவில் தமது கால்களை பரவலாக பதியவைத்தனர். ஜரோப்பிய நாடுகளில் புலிகள் நிறுவனமயமாகச் செயற்படத் தொடங்கியது இக்காலகட்டத்தில் தான்.

அப்போதைய பனிப்போர் அரசியலின் போட்டி காரணமாக இந்திய இராணுவம் ஈழத்தில் புரியும் அநீதியை உலகளவில் பரப்புரைப்படுத்த மேற்குலகம் தன் ஊடகக் கதவுகளை திறந்தது.

எதிர்ப்பரசியலின் காரணமாக திறக்கப்பட்ட இக்கதவுகளுக்கு புலிகள் தேவைப்பட்டனர். இப்பின்னணியில் தான் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் லண்டனில் இருந்து இயங்கவும், புலிகளின் தளபதி கேணல் கிட்டு பிரான்ஸ்சில் இருந்து இயங்கவும் முடிந்தது.

மேற்கில் புலிகள் காலூன்றியதும் தமக்கான ஒரு வலைப்பின்னலை உருவாக்கியதும் ஊடகத்தளத்தை உருவாக்க முடிந்ததும் ஈழத்தமிழர் போராட்டத்தில் ஒரு சாதகமான அடைவு தான் ஆனால் இதன் வெற்றி தோல்வி, கனிந்த இந்த சாதகத்தில் யார் யாரைப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதில் தான் தங்கி இருக்கின்றது.

சந்தர்ப்பத்தைக் கையாள்வது தான் அரசியல் தந்திரோபாயம் ஆனால் எந்த தந்திரோபாயமும் மூலோபாயத்தை அடைவதற்கான மார்க்கமாக இருந்தாலேயன்றி அது அறிவுள்ள தந்திரோபாயம் ஆகாது.

மேற்கின் கதவுகள் திறக்கப்பட்டது இந்தியாவிற்கு எதிராயேயன்றி புலிகளுக்கு ஆதரவாகவல்ல. இந்தியாவிற்கு எதிரான எதிர்ப்பு நிலை நீங்கிவிட்டால் கதவுகள் மீண்டும் மூடப்படும். எனவே திறக்கப்பட்ட கதவுகள் ஊடாகச் சென்று போராட்டத்திற்கான ஆதரவுத் தளத்தை உருவாக்கிக் கொண்டால் அது இராஜதந்திரம். இல்லையெனில், காலத்தால் கருவியாக்கப்பட்டு பின் கைவிடப்பட்ட நிலையாகிவிடும் இப்போராட்டம்.

இந்த அர்த்தத்தில் புலிகள் ஏற்படுத்திக் கொண்ட தளம் மேற்கில் புலம்பெயர் தமிழர்களிடையேயன்றி மேற்குலக சமூகத்துடன் அல்ல. ஐரோப்பிய அரசுகளின் ஆதரவையோ, உறவையோ கூட புலிகள் ஏற்படுத்தி இருக்கவில்லை. அதற்கான ஊடகச் செயற்பாடும் இருந்திருக்கவில்லை. குறைந்த பட்சம் அந்நாட்டு மக்களிடம் கூட செல்வாக்கு செலுத்த முனையவில்லை புலிகள்.

உள்நாட்டில் இந்திய இராணுவத்தின் நிலை கொள்ளலை சிங்கள பௌத்த மனங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தியா வரலாற்று எதிரி என்பதே அவர்களின் நிலைப்பாடு.

இச்சந்தர்ப்பத்தில் தான் ஜே.வி.பி [Janatha Vimukthi Peramuna – JVP] தன் இரண்டாவது புரட்சிக்கு தயாரானது. அதற்கு களம் அமைத்துக் கொடுத்தது இந்திய இராணுவத்தின் நிலை கொள்ளலே. இந்திய எதிர்ப்புக் முழக்கத்தைக் கைப்பந்தத்தில் மூட்டிக் கொண்டு ஜே.வி.பி அதை சிங்கள மனங்களில் பற்ற வைத்தது. காட்டுத்தீயென பரவியது இந்திய எதிர்ப்பு ஜே.வி.பி அசுர வளர்ச்சி பெற்றது இத்தீயின் ஒளியில்.

இதன் மூலம் ஜே.வி.பி சாதிக்க விளைந்தது எதுவெனில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஐக்கிய தேசியக்கட்சி [uNP] மீது மக்களுக்கு வெறுப்பேற்றி புரட்சியை சாத்தியமாக்கிக் கொள்வதே.

இத்தருணத்தில் தான் ஜ.தே.கட்சிக்குள் உட்கட்சி தலைமைத்துவ போட்டி நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆர் பிறேமதாசா நிலைமைகளை சரியாக எடை போட்டார். ஜே.வி.பி இன் தீப்பந்தத்தைத்தானே கையெடுக்க முடிவு செய்தார். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ராஜீவ் - ஜே.ஆர் ஒப்பந்தம் என வியாக்கியானம் செய்தார்.

மக்கள் மத்தியில் ஜே.வி.பி உருவாக்கிய ஜ.தே.க எதிர்ப்பை ஜே.ஆர் அடிபணிவு அரசியல் என விமர்சித்து தன் உட்பகையாளியை வென்றும் ஜ.தே.க வை காப்பாற்றியும் கொண்டார் பிறேமதாசா.

அத்துடன், இந்திய எதிர்ப்பலைக்கு தானே தலைமைத்துவம் கொடுக்க முன்வந்தார். தான் பதவிக்கு வந்தால் 24 மணி நேரத்தில் இந்திய இராணுவத்தை வெளியேற்றுவேன் என முழங்கினார். விளைவு, ஜே.வி.பி ஒரு கையில் பிடித்த இந்திய எதிர்ப்பு தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் மறுகையில் ஏந்திய அரிவாளால் ஜ.தே.க வை அறுக்கக் காத்திருந்தது. ஆனால் பிறேமதாசா ஜே.வி.பி விதைத்ததை தனது தலைமைத்துவ வெற்றியாக அறுவடை செய்தார்.

இந்த அறுவடைக்காக அவர் நாடியது விடுதலைப்புலிகளை. லண்டனில் இருந்த புலிகளின் ஆலோசகர் பாலசிங்கத்தை தொடர்பு கொண்டு ரகசிய உடன்பாடு கண்டார். புலிகளின் வெற்றிகரமான இராஜ தந்திரமாக இந்திய இராணுவத்தை வெளியேற்றிய பிறேமதாசா - புலிகள் ரகசிய உடன்பாடு கருதப்பட்டது.

உண்மையில் இந்திய இராணுவத்தை வெளியேற்ற ஒத்துழைப்பதாகச் சம்மதித்து பிறேமதாஸ பதவிக்கு வந்ததும் அதற்கு ஒத்துழைப்பதற்கு மாறாக இந்தியாவுடன் அனுசரித்து புலிகள் ஒரு ரகசிய ஒப்பந்தத்திற்கு போயிருந்தால் என்ன நடந்திருக்கும்?

தெற்கில் இந்திய எதிர்ப்பலைக்கு பிறேமதாசா கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் போயிருக்கும். விடுதலைப் புலிகளின் உதவியின்றி அவரால் இந்தியாவை உடனடியாக வெளியேற்ற முடிந்திருக்காது.

இந்நிலையில் ஜே.வி.பியின் கை ஓங்கியிருக்கும். தெற்கில் அரசியல் குழப்பங்கள் தலைதூக்கி இருக்கும். ஜே.வி.பி இந்திய இராணுவத்திற்கெதிரான வன்முறைகளில் ஈடுபடும். அதனை தடுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் பிறேமதாசா அரசாங்கம் திணறும். இந்திய எதிர்ப்புக் கொள்கையைக் கைவிட்டு அவரால் அரசியல் செயலாற்றவும் முடியாது போயிருக்கும்.

இச்சந்தர்ப்பத்தில் இந்தியாவிற்கு ஈழத்தில் நிலைகொள்ள புலிகளின் இன்றியமையாத ஆதரவின்றி வேறு ஆதாரம் இருந்திருக்காது. இரு தரப்பு எதிர்ப்புடன் இந்தியாவால் நிலைகொள்ள முடியாது.

இந்த இடத்தில் இந்தியாவுடன் ஒத்துழைப்பதற்கான புலிகளின் பேரச்சக்தி உச்சம் பெற்றிருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரையில் தன் இராஜீக தோல்வியை, அவமானத்தை தடுப்பதற்கு புலிகளுடன் பல விட்டுக்கொடுப்புக்களைச் செய்வதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை. இத்தகைய அடிப்படையில் இந்தியாவுடன் ஒரு இரகசிய ஒப்பந்தத்திற்கு போயிருந்தால் அத்தகைய இராஜதந்திரம் ஒப்பற்ற நல்விளைவுகளை போராட்டத்திற்கு ஏற்படுத்தியிருக்கும்.

புலிகள் இந்தியாவின் இன்றியமையா நண்பனாகவும், இலங்கை அரசு தீராப்பகையாளி ஆகவும் ஒரு அரசியல் யதார்த்தம் தோன்றியிருக்கும். வடக்கு கிழக்கையும் தமிழர்களையும் பாதுகாப்பது இந்தியாவின் பொறுப்பும், நலனுமாயிருக்கும். நடைமுறையில் சிங்களத்தரப்பு ஏற்படுத்திய பகையினால் ஈழத்தமிழரின் மாகாண அலகு இந்தியாவின் பாதுகாப்பில் தனி அலகாக செயற்பட நேர்ந்திருக்கும். நடைமுறையில் இதற்கு தனித்துவமான உரிமைகள் வந்து சேர்ந்திருக்கும் அதன் பாதுகாவலனாக தவிர்க்க முடியாமல் இந்திய இராணுவம் இயங்க நேர்ந்திருக்கும். இப்படி நேர்மறையான விளைவுகள் தொடர வாய்ப்பிருந்தது.

இதன் விளைவால் ஏலவே ஒப்பந்தத்தால் உருவாக்கப்பட்ட தாயகத்தில் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தி தனக்கான உரிமைகளை அறுவடை செய்வதை நோக்கி அரசியல் யதார்த்தத்தை நகர்த்தி இருக்க முடியும் போராட்டம் கணிசமான விளைவை அறுவடை செய்திருக்கும். இத்தகைய ஒரு நிகழ்ச்சி நிரல் புலிகளின் இராஜதந்திரம் ஆகலாம். ஆனால் நிகழ்ந்தது என்ன.

ஒடுக்குமுறை சிங்கள அடக்குமுறையாளர்களின் நிரந்தரப்பகையாளியை அவர்களின் தேவைக்காக வெளியேற்ற நாம் துணைபோனதன்றி வேறென்ன. இந்திய இராணுவத்தின் வருகையால் நெருக்கடிக்குள்ளான இலங்கை அரசியல், பின்னடைவுகளைக் கண்ட சிங்கள இராஜ தந்திரம் கேள்விக்குறியான இலங்கையின் இறைமை மீட்க எதிரிக்கே ஒத்துழைத்த தேயன்றி வேறென்ன.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவை தமிழர்களின் போராட்ட நிரந்தர எதிரியாக உருவாக்கத் தேவையான அடித்தளத்தையும் எம்மைக் கொண்டே உருவாக்கிக் கொண்டது சிங்களத் தலைமைத்துவம்.

இந்த இடத்தில் சிந்திக்கத் தூண்டுவது யார் யாரைக் கையாண்டனர்? மேற்குலகம் புலிகளைக் கையாண்டதா? புலிகள் மேற்குலகத்தைக் கையாண்டனரா? புலிகள் பிறேமதாசாவைக் கையாண்டனரா? பிறேமதாசா புலிகளைக் கையாண்டாரா? இறுதி விளைவில் இருந்து வாசகர்களே இதன் வெளிச்சத்தைக் காண இயலும்.

போராட்டத்தின் அரசியல் கொள்கையானது கையில் கிடைத்த துரும்புச்சீட்டை ஜோக்கர் ஆக்கி விளையாடியது இந்த விளையாட்டின் வெற்றியை கடவுளாலும் தரமுடியாது.

தொடரும்..

http://www.puthinappalakai.com/view.php?20130612108450

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 09

[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 06:28 GMT ] [ புதினப் பணிமனை ]

எதிரியின் கழுத்தில் இருந்த சுருக்கை கழட்டி கையில் கொடுத்து கழுத்தையும் நீட்டிய கதை - குணா.கவியழகன்

ஒரு போராட்டத்தின் பாதுகாப்பு சொந்தப் பலத்தினால் மட்டும் கிடைப்பதில்லை. அது எதிரியின் பலவீனத்தினாலும் கிடைக்கக்கூடியது. தம்மைப் பலப்படுத்துவது மட்டுமல்ல எதிரியின் பலவீனத்தைப் பலப்படுத்துவதும் கூட மிகச்சிறந்த இயலுமைதான்.

பிறேமதாசா அரசாங்கத்தோடு விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போது இந்தியா என்ற தன் மிகப்பெரும் பலவீனப்புள்ளியை சிங்கள அரசு அகற்றிவிட்டது. இந்திய பேச்சு முயற்சியில் ஈழத்தமிழர் தரப்பிற்கு குறிப்பிடக்கூடிய யாதொரு பேரப்புள்ளியும் இருந்திருக்கவில்லை. தவிரவும் சிங்கள அரசு சமரச முயற்சியில் ஈழத்தமிழர் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் உள்நோக்கத்தையும் பேச்சு முயற்சியில் கொண்டிருக்கவில்லை. விடுதலைப்புலிகளும் சமரச முயற்சியில் தீர்வுக்கான அடைவுகள் எட்டப்படும் என்ற நம்பிக்கையில் பேச்சில் ஈடுபடவும் இல்லை.

விடுதலைப்புலிகளின் உள்நோக்கம் இந்தியாவை களத்தில் இருந்து அகற்றிவிட்டு சிங்கள அரசுடன் போரைத் தொடர்வதாகத்தான் இருந்தது. அதற்கு வசதியாக, வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி வைத்து தளப்பிரதேசங்களைக் கட்டுப்பாட்டுக்குள் பேணுவதற்கான கள ஏற்பாட்டைத்தான் பேச்சுக் காலத்தில் ஏற்படுத்தினர். போர் என்பதே விடுதலைப் புலிகளின் பேச்சுக்கான உள்நோக்கமும் முன் தீர்மானமுமாக இருந்தது.

போரைத் தொடர்வதற்கு விடுதலைப் புலிகளுக்கு எந்தவொரு அனைத்துலக சக்திகளின் ஆதரவும் இருந்திருக்கவில்லை. தொடங்கப்போகும் போரிற்காக விடுதலைப்புலிகள் எந்தவொரு சிறப்பான பலத்தையும் கொண்டிருக்கவுமில்லை. சொந்த நிலத்திலும் சொந்தப் பலத்திலும் தான் போர் தங்கி நிற்கப்போகின்றது. ஆனால், இத்தருணத்தில் அரசாங்கம் மிகச்சிறப்பான பலவீனத்தைக் கொண்டிருந்தது. அது ஒன்று தான் பிரகாசமான ஒரு பலமாக போராட்டத்திற்கு இருந்தது. போரைப் போதுமானளவு எதிர்கொள்ள முடியாத அரசின் பலவீனம் போராட்டத்திற்கு ஒரு பலம் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

கொழும்பு இந்திய இராணுவத்தை வெளியேற்றி விட்டாலும் விஸ்வரூபம் கொண்டு வளர்ந்து நிற்கும் ஜே.வி.பி கொழும்பின் மிகப்பெரும் பலவீனமாகும். ஜே.வி.பி.யின் இலட்சியம் ஜ.தே.க வை ஆயுதப் புரட்சியின் மூலம் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றுவதே.

அரசின் இரண்டாவது பலவீனம், ஜ.தே.கட்சிக்குள் இருந்த உட்கட்சித் தலைமைத்துவப் போட்டி. காமினி திஸநாயக்கா, லலித் அத்துலத் முதலி போன்ற ஜ.தே.கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் தலைமைத்துவப் போட்டியில் ஈடுபட்டிருந்தனர். ஜ.தே.க உள்நிலையில் குழுமோதல்களைச் சந்தித்திருந்தது. இதனால் கட்சிக்குள்ளும் பிறேமதாசா தலைமைத்துவ நெருக்கடியைச் சந்தித்திருந்தார்.

ஜே.வி.பி.யால் ஆயுதப் புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றக்கூடிய வாய்ப்பு அப்போது இருக்கவில்லை. சிங்கள இளைஞர்களின் ஆதரவு, ஆட்பலம், ஓரளவு ஆயுதபலம் என்பவற்றைக் கொண்டிருந்த போதும் தொழிற்திறன், அனுபவம், அரசியற்புறநிலை போன்ற புரட்சியை சாத்தியமாக்கும் காரணிகளை அந்தளவுக்கு கொண்டிருக்கவில்லை.

[ஈழப்போராட்டம் வென்று அதனால் ஏற்படும் தெற்கின் அரசியல் மாற்றத்திற்காக ஜே.வி.பி காத்திருக்க வேண்டியிருந்தது.] இது பிறிதான் ஓர் ஆய்வு இங்கு அது அவசியமற்றது.

புரட்சியை சாத்தியமாக்கும் சூழல் இல்லை என்பது மட்டுமே இங்கு தேவையான பொருள். ஆக, ஜே.வி.பி புரட்சியை முன்னெடுக்க பலம் கொண்டிருந்தது. புரட்சியை வெல்ல பலம் கொண்டிருக்கவில்லை.

மறுபக்கத்தில் உட்கட்சி தலைமைத்துவ போட்டி பிறேமதாசாவுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்தது. பிறேமதாசாவின் இன்னொரு பலவீனப்புள்ளி இது. ஆயினும் கூட சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறையில் போட்டித்தலைமைத்துவங்களால் ஆறு ஆண்டு ஆட்சிக்காலம் முடியுமுன்பு அதிபரை கவிழ்க்க முடியாது. ஆக தலைமைத்துவத்திற்கு தொல்லை கொடுக்கலாம். நெருக்கடி கொடுக்கலாம் பிறேமதாசாவை பதவியில் இருந்து உடனடியாக அகற்ற முடியாது.

இந்தப் புறநிலையில் சிறிலங்கா அரசு கொண்டிருக்கக்கூடிய படையியல், அரசியல் பலவீனத்தில் ஈழத்தமிழரின் ஆயுதப்போர் மிகக் கணிசமானளவு முன்னேறியிருக்கலாம்.

பேச்சுவார்த்தையில் இராணுவ முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்த இராணுவத்தினரில் பெரும் பகுதி தென்பகுதிக்கு மீளப் பெறப்பட்டிருக்கக்கூடிய நிலையில் அம் முகாம்களை வெற்றி கொள்வது விடுதலைப்புலிகளுக்கு கடினமாக இருந்திருக்காது. ஈழத்தமிழர் தாயகத்தின் பெரும் பகுதிகள் மீட்கப்பட்டிருந்தால் அதனை மீளக்கைப்பற்றுவதற்கான ஒரு படைப்பலத்தை அரசு பெற்றிருக்கவும் முடியாது.

இந்தியாவைப் பகைத்துக் கொண்ட அரசாங்கம் இந்திய உதவியை நாடவும் முடியாது. இந்தியாவைப் பகைத்துக் கொண்டு பிறிதொரு நாடு இலங்கைக்கு நேரடிப்படை உதவியை வழங்கவும் முடியாது.

அறிவின் கண் கொண்டு பார்த்திருந்தால் ஈழத்தமிழ் மக்களிற்கான ஓர் அற்புதக்கனி அரசியல் மரத்தில் தொங்கியிருந்ததை அதுவும் தானாகக் கனிந்ததை பக்குவமாகப் பறிக்கத் தெரியாமல் பாழாக்கிக் கொண்டது ஆயுதப்போராட்டம்.

ஜே.வி.பியை வளர்ப்பதற்குப் பதிலாக ஜே.வி.பியை ஒழிப்பதற்கு விடுதலைப்புலிகள் பிறேமதாசா அரசாங்கத்தோடு ஒத்துழைத்தனர். ஜே.வி.பியை ஒழிக்கும் விதமாக பேச்சு என்ற பேரில் அரசோடு நட்பு பாராட்டப்பட்டது. விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்புடன் மிகமூர்க்கத் தனமாக பிறேமதாசா சிங்கள இளைஞர்களின் புரட்சியை அடக்கினார். அந்த வெற்றி அரசிற்கு நம்பிக்கையும், பலத்தையும் கொடுத்தது. பிறேமதாசாவின் பிடரியின் பின்னால் ஒளிவட்டம் சுற்றியது.

அடுத்து இருந்தது உட்கச்சி தலைமைத்துவ போட்டி அதையும் கூட பின்வந்த காலத்தில் ஒழித்துக்கட்ட விடுதலைப்புலிகள் துணைபோயினர். பிறேமதாசா கட்சிக்குள்ளும் புறமும் சர்வ பலம் பெற்றார்.

பின்வந்த காலத்தில் ஆயுதப்போர் சந்தித்த பின்னடைவுகளுக்கும் இறுதித் தோல்விக்கும் இதுவே முக்கிய திருப்புமுனை ஆயிற்று எனலாம். கண்களால் உருவாவது காட்சிகளே பார்வை அறிவால் உருவாவது தேவைப்பட்டது பார்வையே அல்லாமல் காட்சிகள் அல்ல.

தொடரும்..

http://www.puthinappalakai.com/view.php?20130615108470

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 10

[ புதன்கிழமை, 19 யூன் 2013, 07:50 GMT ] [ புதினப் பணிமனை ]

 

உடைவாளையுருவி எதிரியிடம் எறிந்து விட்டு போருக்கு ஊதிய சங்கு - குணா.கவியழகன்

முரண்பாட்டை கையாள்வது தான் அரசியல் சாணக்கியத்தின் அடிப்படையும் ஆயுதமும் ஆகும். முதலில் முரண்பாட்டை சரியாக கண்டடைய வேண்டும். அதில் நட்பு முரண்பாடு எது பகை முரண்பாடு எது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். நட்பு முரண்பாட்டை பகை முரண்பாடாக கண்டடைந்தால் அரசியல் முன்னெடுப்பு பின்னடைவைக் காணும். பகை முரண்பாட்டை நட்பு முரண்பாடாக கண்டு கொண்டால் அரசியல் வஞ்சகத்திற்கு ஆளாகும்.

தன் பலவீனங்களைக் களைவதற்கும் மேலும் தன்னை ஆயுத, ஆட்பல ரீதியில் செழுமைப் படுத்திக் கொள்வதற்கும் விடுதலைப்புலிகளைக் கருவியாக்கிக் கொண்டார் பிரேமதாசா.

விடுதலைப்புலிகளோ தம் எதிரி தன்னை தன் நெருக்கடிகளில் இருந்து விடுவிக்கும் வரை பொறுத்திருந்தது போல் நடந்து கொண்டனர். அரசு தன் அகச்சிக்கல்களைத் தீர்த்துக் கொண்டதும் புலிகள் போரைத் தொடங்கினர்.

அரசு தன் கவனத்தை கிழக்கில் குவித்தது. ஈழத்தமிழர்களின் தாயகக்கோட்பாட்டைச் சிதைப்பதற்கு போராட்டத்தின் பலவீன அங்கமான கிழக்கைக் கைப்பற்றுவது இன்றியமையாததும் இலகுவானதும் ஆகும்.

கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை இராணுவம் கைப்பற்றியது. கிழக்கில் போராட்டம் காடுகளுக்குள் பதுங்க நேர்ந்தது. கிழக்கில் போரை முன்னெடுப்பதற்கும் போராட்டத்தை வளர்ப்பதற்கும் ஒரு தளப்பிரதேசம் அற்றுப் போனது.

ஜ.தே.க அரசாங்கம் வகுத்துக் கொண்ட இராணுவ மூலோபாயக் கொள்கை இந்த இடத்தில் முக்கியமான விடயம். கிழக்கைக் கைப்பற்றி இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் பேணுவது. எஞ்சிய இராணுவ பலத்தின் இயலுமைக்கேற்ப வடக்கில் போர் முயற்சிகளை வளர்த்து வெற்றி காண்பது. இதன் மூலம் வடக்கில் புலிகள் சில சமர் வெற்றிகளைக் கண்டாலும் அது போரில் புலிகள் முன்னேறி வருவது போல் தோற்றினாலும் நீண்ட கால நோக்கில் போராட்டத்திற்கு அடிப்படையான அழிவைக் கொடுத்துவிட முடியும் என்பதே இந்த இராணுவக் கொள்கையின் நோக்கம்.

கிழக்கை நிரந்தரமாக இராணுவம் ஆக்கிரமித்து கட்டுப்படுத்தி இனப்பரம்பலை மாற்றியமைக்கும் போது தாயகக்கோட்பாடு சிதைக்கப்பட்டுவிடுகிறது. எதிர்காலத்தில் எந்தவொரு அனைத்துலகச் சக்தி போராட்டத்தை ஆதரித்தாலும் கூட தாயகக்கோட்பாட்டிற்கு ஈழத்தமிழர்கள் தகுதியற்றவர்களாக கிழக்கை மாற்றியமைப்பதே இந்த மூலோபாயத்தின் அரசியல் நோக்கம்.

இந்த நூட்பமான அரசியல் கொள்கையால் வழிநடத்தப்பட்ட சிங்கள இராணுவக்கொள்கை பூரண வெற்றியைக் கொடுத்தது.

சிங்கள அரசு அரசியல் உள்நோக்கத்திற்கேற்ப இராணுவக் கொள்கையை வகுத்து செயலில் இறங்கிய போது விடுதலைப்புலிகள் இஸ்லாமிய தமிழர்களை விடுதலைப்போராட்டத்தின் தடைச் சக்திகளாகவோ, பகைச் சக்திகளாகவோ கண்டடைந்தனர். இஸ்லாமியத் தமிழர்களுடன் ஏற்பட்ட நட்பு முரண்பாட்டை பகை முரண்பாடாக எண்ணி விடுதலைப்புலிகளை கையாள வைத்ததில் சிங்கள அரசு மிகப்பெறுமதியான வெற்றியைக் கண்டது.

அரசாங்கம் விரித்த வலையில் ஆயுதப்போராட்டம் இலகுவாக வீழ்ந்தது. தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதற்கான அடுத்த மார்க்கம் முஸ்லிம்களை தனி இனமாக உணரவைப்பதே. அதற்கு முதல் தேவையானது தமிழ்-முஸ்லீம் பகையை உருவாக்குவது.

‘தந்தை’ செல்வநாயகத்தின் அரசியல் முனைப்பில் ஏற்பட்ட ஒரு தளமான தமிழ்பேசும் மக்களின் தாயகம் என்ற தேசிய நிலைப்பாட்டை ஆயுதப் போராட்டத்தைக் கொண்டு சிதைக்கத் தூண்டியது சிங்கள அரசு.

தமிழ்த்தேசியத்தின் அங்கமான இஸ்லாமியர்களை மதத்தின் பேரால் பிறிதொரு இனமாக நடக்கவும், நடத்தவும் தூண்டிய அரசின் சதிவலைக்குள் அகப்பட்டு புலிகள் முஸ்லீம்களை தமது கட்டுப்பாட்டு நிலப்பரப்புக்குள் இருந்து வெளியேற்றினர். இதன் மூலம் இலங்கையில் முஸ்லீம் அரசியல் தனி அரசியலாவதற்கும், முஸ்லீம் மக்களையும், முஸ்லீம் அரசியலையும் தமிழ் போராட்டத்திற்கு எதிராக திருப்புவதிலும் அரசு வெற்றி கண்டது.

முஸ்லீம் மக்களின் தலைமைத்துவம் தூரநோக்கற்றும், சுயநலம் கொண்டும் தம் மக்களின் தலையில் தாமே மண்ணை வாரி இறைத்தனர். ஆனால் அது இங்கு முக்கியமல்ல ஆயுதப்போராட்டத்தின் தவறுகளே இங்கு அவதானிப்புக்கு உரியவை.

ஆயுதப் போராட்டத்தலைமை எடுத்த இத்தீர்மானம் மூலம் தன் சவக்குழியை தானே வெட்டிக் கொண்டது.

இதன் பின் கிழக்கு இராணுவத்தால் கட்டுப்படுத்தப்படும் பிரதேசம் மட்டுமல்ல கிழக்கு என்பது தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் வாழும் பல்லினச் சமூகத்தின் வாழிடம் என்றாகிறது. மேலும் வடக்குக் கிழக்கில் பரந்து வாழும் முஸ்லீம்களை போராட்டத்தின் எதிர்நிலைச் சக்திகளாக அரசு பயன்படுத்தவும் வழியமைத்தது.

தமிழ்த் தேசியத்தை இரண்டாகப்பிளக்கும் திட்டத்திற்கு தன் எதிரிக்கு தானே அரிவாள் எடுத்துக் கொடுத்தது ஆயுதப் போராட்டம். எதிர்காலத்தில் போர் முன்னெடுப்புக்கள் கிழக்கில் சிக்கலாகவும், போரும் போராட்டமும் வடக்கிற்குள்ளும், தமிழர்களுக்குள்ளும் சுருங்கிப் போகவும் இது அடிகோலியது.

எற்கனவே ஒடுக்கப்பட்ட மலையக மக்களின் உதவியை நாடாத இப்போராட்டம். இப்போது மேலும் பலவீனமாகிற்று. மலையக அரசியல், முஸ்லீம் அரசியல் என இவையாகி சிங்கள அரசியலில் பக்கத்துணையாகின.

ஆனால் சிங்கள மக்களுக்குள் இருந்த சிங்கள பௌத்தத்தின் கிறிஸ்தவ முரண்பாட்டை ஆயுதப்போராட்டம் கையாளவில்லை. சிங்கள தேசத்தில் தொடங்கப்பட்ட ஆயுதப்புரட்சியையும் கையாளவில்லை. சிங்கள இடதுசாரி மிதவாத அரசியலையும் பயன்படுத்தவில்லை.

அரசியல் கொள்கையினால் வழிநடத்தப்படும் போரிற்கும், போரின் தேவைகளுக்கு உட்பட்டு கையாளப்படும் அரசியலுக்கும் உள்ள வினைதிறன் இடைவெளியை இங்கு காணலாம்.

தொடரும்..

http://www.puthinappalakai.com/view.php?20130619108501

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 11
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 08:15 GMT ] [ புதினப் பணிமனை ]

 

விவேகத்திற்கு வசப்படக்கூடியதே இராஜதந்திரம் வீரத்திற்கு அல்ல - குணா.கவியழகன்

நீதி, அநீதியை அளந்து ஏற்படுத்திக் கொள்வதல்ல அரசியல் உறவு. தேவை நலனை ஆராய்ந்து உருவாக்கிக் கொள்வதே அரசியல் உறவு.

அமெரிக்கா – சோவியத் யூனியன் இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்த காலகட்டத்தில் உலக அளவில் தேசிய விடுதலைப்போராட்டங்கள் அநாதைகள் ஆகின. அல்லது சாதகமாகவோ, பாதகமாகவோ முடித்து வைக்கப்பட்டன.

ஈழப்போராட்டத்திற்கும் உலக அரசியல் புறநிலை வாய்க்கவில்லை. மேலும் உள்நிலைப் பகையாளிகளையும் தேடிக்கொண்டது போராட்டம்.

இந்த இடத்தில் முரண்பாட்டை தெரிந்து வகைபிரித்துக் கையாள்வதில் மற்றொரு குழப்பம் நிகழ்ந்தது.

இந்தியாவுடன் ஈழப்போராட்டத்திற்கு ஏற்பட்டது ஒரு நட்பு முரண்பாடு, அது பகை முரண்பாடல்ல. அந்த முரண்பாட்டை பகை நிலைக்குத் தள்ளாமல் சீர்செய்து கொள்வதே போராட்டத்தின் எதிர்காலத்திற்கு இருந்த பிரதான வழி.

ஈழப்போராட்டத்தில் பாதகமாக முடிவெடுக்க முடியாத இந்தியாவின் பலவீனம் தமிழ்நாடு. தமிழ்நாடு ஈழத்திற்கு அருகே உள்ள ஒரே இன ஒரே மொழி கொண்ட மாநிலம்.

ஈழப்போராட்டத்தை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், மக்களும் ஆதரித்து நின்றனர். ஆயுதப்போராட்டத்திற்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையில் மோதல் ஏற்பட்ட போதும் கூட தமிழ்நாட்டு மக்கள் தம் அரசை ஆதரிக்கவில்லை. ஈழப்போராட்டத்தையே ஆதரித்தனர் இந்த யதார்த்தத்தை அனுபவரீதியிலும் இந்திய அரசு புரிந்து கொண்டது.

இந்திய அரசுடன் ஆயுதப்போராட்டத்திற்கு ஏற்பட்ட முரண்பாட்டை சீர் செய்து கொள்வதற்கு தமிழ் நாடு ஒரு பாதையும் ஒரு பேரமுமாகும். இந்திய இராணுவத்துடன் மோதல் ஏற்பட்ட காலத்திலும் தமிழ்நாட்டைத்தான் போராட்டத்தின் பின் தளமாக புலிகள் பயன்படுத்தி வந்தனர். மருத்துவம், வெடிமருந்து, பரப்புரை, நிதிசேகரிப்பு என்பவை குறிப்பிடக் கூடியளவு தமிழ் நாட்டிற்கு ஊடாகத்தான் நடைபெற்றது.

1991ல் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு விடுதலைப்புலிகள் காரணமாகியதுடன் இந்திய உறவில் போராட்டத்திற்கு நிரந்தர விரிசல் ஏற்பட்டது. சமன் செய்ய முடியாத உறவாகிற்று.

முரண்பாடு பகைநிலையை அடைந்தது. அரசியல் நலனில் மட்டுமல்ல உணர்ச்சி பூர்வமாகவும் இந்தியா புலிகளை எதிரியாக கருத வாய்ப்பளித்தது.

இந்திய இராணுவம் ஈழத்தில் புரிந்த அநீதி, இந்தியா புலிகளை ஒடுக்க அல்லது ஓரம்கட்ட எடுத்த முயற்சி இவற்றுக்கு பழிவாங்கும் ஒரு அரசியல் கொலையாகவே ராஜீவ்காந்தி கொலை நிகழ்ந்தது.

தவிரவும், ராஜீவ் காந்தி அரசாங்கம் பதவியில் இருந்தால் மீண்டும் ஈழப்போராட்டத்தில் தலையிடும். அத்தலையீடு போராட்டத்திற்கு பாதகமானது என்ற மனப்போக்கும் விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்திடம் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது.

தமிழ்நாட்டில் வைத்து தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடு நிகழ்த்தப்பட்ட இவ்வரசியல் கொலை போராட்டத்தின் எதிர்காலத்திற்கு நிரந்தர எதிர்மறை விளைவைக் கொண்டு வந்தது.

ஈழப்போராட்டம் குறித்த சுதந்திரமான தீர்மானத்திற்கு இந்தியாவின் குறுக்கீடாகவும், பலவீனமாகவும் இருந்தது தமிழ்நாடு தான். மத்திய அரசு தமிழ்நாட்டு அரசியலை புறமொதுக்க முடியாது அனுசரிக்க வேண்டியிருந்தது. இந்தப்படுகொலை மூலம் தமிழ்நாட்டு மக்களே அதிருப்தி அடைந்தனர். இந்திய அரசு சுதந்திரமாக தீர்மானம் எடுப்பதற்குரிய ஒரு வெளியை இது ஏற்படுத்திற்று.

தமிழ் நாட்டில் புலிகளுக்கு ஆதரவான எல்லாச் சக்திகளையும் முடக்கவும் தமிழ்நாட்டை புலிகள் பயன்படுத்துவதை நிரந்தரமாக நிறுத்தவும் மத்திய அரசு சட்டரீதியிலும், செயல்ரீதியிலும் நடவடிக்கை எடுத்தது.

ஈழத்திற்கு வெளியே ஒரு ஆதரவுச் சக்தி ஈழப்போராட்டத்திற்கு இருந்ததென்றால் அது தமிழ்நாடு ஒன்று தான். ராஜீவ் கொலை மூலம் இந்த இந்த ஆதரவுச்சக்தியை இழந்தது மட்டுமல்ல இலங்கைக்கு வெளியே ஒரு அந்நிய அரசு முதன்முதலாக விடுதலைப்புலிகளை தடைசெய்யவும் பாதையாகிற்று.

வாய்ப்பான உலக அரசியல் புறநிலையும் இன்றி, அகநிலையில் தேசிய சிக்கலையும் கண்டு, தமிழ் நாடென்ற பின்தளத்தையும் இழந்ததோடல்லாமல் போராட்டம் எப்போதும் இலங்கையின் அரசியலில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய புவிசார் அரசியல் ஆளுமையைக் கொண்டிருந்த இந்தியாவை பகையாளியும் ஆக்கிக் கொண்டது.

பலவீனத்தில் மேல் பலவீனம் காணும் போராட்டத்தை ஒடுக்குவதற்காக பிறேமதாசா அரசாங்கம் பலத்தின் மேல் பலம் தேடிக் கொண்டது.

மாற்று இயக்கங்கள் புலிகளால் தடைசெய்யப்பட்ட நிலையில் அவை இந்திய இராணுவ காலத்தில் இந்திய ஆதரவோடு இயங்கின. இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின் எழுந்த சூழலில் பிறேமதாசா அரசாங்கம் அவர்களுக்குப் புகலிடம் கொடுக்க முன்வந்தது. இதன் மூலம் ஈழத்தமிழர் போராட்டத்திற்கு எதிரான அரசியலுக்கும், புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இராணுவத் தேவைகளுக்கும் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டது.

முன்னாள் விடுதலைப் போராட்ட இயக்கங்கள் போராட்டத்திற்கு எதிரான அரசியலுக்கு மட்டுமல்ல இராணுவத் தேவைகளுக்கும் ஒத்துழைத்த துரோகத்தனம் மன்னிக்க முடியாததே. ஆனால், மாற்று இயக்கங்கள் தொடர்பான கையாளல்களில் விடுதலைப்புலிகளின் தூரநோக்கற்ற பார்வையும் சகிக்க முடியாததே. அது தந்த எதிர்மறை விளைவுகள் சாதாரணமானதல்ல.

இந்திய விடயத்தில் ஏற்பட்ட கொள்கைத் தவறினால் இருந்த ஆதரவுத் தளத்தையும் இழந்து போனது ஆயுதப்போராட்டம். ஆனால் பிறேமதாசா அரசாங்கம் சிங்கள அரசுக்கு எதிராகப் போரிட்ட ஆயுத அமைப்புக்களை அரவணைத்துக் கொள்வதென்ற துணிச்சலான கொள்கையினால் ஈழத்தமிழர் போராட்டத்திற்கு எதிரான ஆதரவுத் தளத்தை தேடிக்கொண்டது.

தொடரும்..

http://www.puthinappalakai.com/view.php?20130622108526

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 12
[ புதன்கிழமை, 26 யூன் 2013, 06:04 GMT ] [ புதினப் பணிமனை ]

 

சிறப்பான அரசியற் தீர்மானம் திறமையான முன்னுணர்வாலேயே நிகழும் - குணா.கவியழகன்

1991ன் பின்னரான மிகச்சிக்கலான ஆயுதப்போராட்டச் சூழலில் சிங்கள அரசாங்கம் பல வெற்றிகளைக் கண்டது. வவுனியா மன்னார், முல்லைத்தீவுக் கரையோரங்கள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு வந்தன.

யாழ் குடாநாட்டுக்கான தரைவழிப் பாதைகள் கைப்பற்றப்பட்டு யாழ் குடாநாடு இராணுவ பொருளாதார முற்றுகைக்குள்ளானது. இப்பின்னணியில் யாழ்ப்பாணம் முழுமையாக கைப்பற்றப் படுவதற்கான ஆயத்தங்களில் அரசு ஈடுபட்டிருந்தது.

யுத்த ரீதியாக ஒப்பு நோக்கினால் போரை எதிர் கொள்வதற்கான வளப்பற்றாக்குறைக்குள் புலிகள் இயக்கம் சிக்கிக் கொண்டது.

தமிழ்நாடு என்னும் பின்தளம் அறுந்து போராட்டம் ஈழத்திற்குள் முற்றுகைப்பட, வடக்கின் எல்லைகளைக் கைப்பற்றிய இராணுவம் வடக்கை முற்றுகையிட்டு, மேலும் குடாநாட்டின் தரைவழிப் பாதைகளை அடைத்து இறுகிய முற்றுகைக்கு ஆளாகிற்று. வடக்கு பொருளாதார முற்றுகையால் திணறிக்கொண்டுமிருந்தது.

அரசு ஏவப்போகும் போர் நடவடிக்கையை மதிப்பீடு செய்த விடுதலைப்புலிகள் தம் இயலுமையுடன் கணக்கிட்டு மாற்றுவழியின்றி இப்போரை எதிர்கொள்ள இயலாதென்பதை தெரிந்து கொண்டனர். எதிர் நிலையாளரின் நிகழ்ச்சி நிரலைக் குழப்புவதே அவர்களின் ஒரே தெரிவாகிற்று.

1992ல் சிறிலங்கா இராணுவத்தலைவர்கள் போர் ஏவப்படுவதற்கு முன்னதான சூழலை இறுதி (உறுதி) செய்வதற்காக தீவுப்பகுதியை பார்வையிட வந்தபோது துல்லியமான வேவு கொண்ட தாக்குதல் மூலம் விடுதலைப்புலிகள் அவர்களைக் கொன்றனர். ஆனால் வெகுநாள் தாக்குப்பிடிக்க அது போதுமானது அல்ல. எனவே அரசியலில் நிகழ்ச்சியை குழப்பும் பொருட்டு பிறேமதாசாவை படுகொலை செய்யும் தீர்மானத்தை விடுதலைப்புலிகள் எடுத்தனர்.

இப்பின்னணியில் 1994 வந்த பொதுத்தேர்தலில் ஜ.தே.கவின் தலைமைத்துவம் பலவீனப்பட்டிருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பாக சந்திரிக்கா ஏனைய இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவோடு சமாதானத்தை மையக்கருப்பொருளாக்கி ஆட்சியைக் கைப்பற்றினார்.

புதிய அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பித்தது. நாடு முழுவதும் சந்திரிக்காவின் சமாதானம் பெரும் கவர்ச்சியை உருவாக்கிற்று.

சந்திரிக்கா நாடாளுமன்றத்தைக் கைப்பற்றிய போதும் அதிபராக எதிர்க்கட்சியை சார்ந்தவரே இருந்தார். வரவிருக்கும் அதிபர் தேர்தலில் அதிபர் பதவியைக் கைப்பற்றுவதே சந்திரிக்கா நாடிய சமாதானத்தின் உடனடி உள்நோக்கம் எனலாம்.

தான் அமைத்த அரசாங்க காலத்தில் புலிகள் போர் வெற்றியெதனையும் பெற்றால் அதிபர் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரும். விடுதலைப்புலிகள் மாவீரர் நாளையொட்டி பெரும் தாக்குதலைத் செய்வது வழமை. ஆதலால் அத்தாக்குதலை நிறுத்த வேண்டிய தேவை சந்திரிக்காவிற்கு உடனடித்தேவையாகியது.

தவிரவும் சமாதானத்தை கவர்ச்சிப் பொருளாக்குவதே அவரால் அப்போதைக்கு முன்னெடுக்கக்கூடிய அரசியலாகவும் இருந்தது. இதைவிடவும் சிறுபான்மையினர் ஆதரவின்றி அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதும் மிகக்கடினமானது. இக்காரணங்களுக்காக விடுதலைப்புலிகளின் ஒத்துழைப்பும் சமாதானமும் சந்திரிக்காவிற்கு தேவைப்பட்டது. மறுவளத்தில் சந்திரிக்காவைப் பலவீனமான தலைவராகக் கணக்கிட்ட விடுதலைப்புலிகள் அவரைப் பதவிக்கு கொண்டுவர ஒத்துழைத்தனர்.

அப்போதைய அனைத்துலக அரசியல் நிலைமையைக் கணக்கிட்டால், மேற்கு நாடுகள் இலங்கையில் அமைதி உருவாக வேண்டும் என்ற நலனை கொண்டிருக்கத் தொடங்கிய காலகட்டம் அது.

பனிப்போரின் பின்னான காலத்தில் புலிகள் மேற்கால் ஆதரவளிக்கப்படாவிடினும் இடையூறு செய்யப்படாது விடப்பட்டனர். காரணம் பனிப்போரின் பின்னான மேற்குத் தலைமை கொண்ட உலக ஒழுங்கில் இந்தியா கடைப்பிடிக்க உள்ள அரசியல் கொள்கை தெளிவாகும் வரை புலிகள் அமைப்பிற்கு இடையூறு விளைவிக்க மேற்கு விரும்பவில்லை எனலாம்.

இந்தியாவில் நரசிம்மராவ் அரசாங்கம் தனது அரசியல் பொருளாதாரக் கொள்கையை மேற்கின் நட்பு நோக்கித் திருப்புவதற்கான அடியை எடுத்து வைத்தது. அதிலிருந்து மெல்ல புதிய உலகப்போக்கைப் புரிந்து கொண்டு இந்தியா மேற்குடன் ஒத்துழைக்கும் அரசியற் கொள்கையைக் கடைப்பிடிப்பது தெளிவாகிற்று. இந்நிலை உருவானதும் புலிகளின் தேவை சிறிதளவும் அப்போது மேற்கிற்கு இல்லாது போயிற்று எனலாம்.

இதைவிட முக்கியமாக சீனாவின் எழுச்சியும், கொங்கொங் மீண்டும் சீனாவின் கைகளுக்கு செல்ல இருந்தாலும் கொங்கொங்கிற்கு மாற்றீடாக இப்பிராந்தியத்தில் ஒரு பொருத்தமான விநியோகத் தளமாக இலங்கையையே மேற்கு அடையாளம் கண்டிருந்தது. மேலும் வரவிருக்கும் சீனாவின் வளர்ச்சியை முடக்கும் நிகழ்ச்சி நிரலில் தென்னாசியப் பிராந்தியம் அதிமுக்கியத்துவம் மிக்கதாயிற்று. எனவே இலங்கையில் யுத்தம் முடித்து வைக்கப்பட்டு அமைதியான இலங்கையில் மேற்கு சார்பு அரசாங்கம் உருவாக்கப்படும் தேவை மேற்குலகிற்கு அப்போதே உருவாகிற்று.

உருவாகும் பாதகமான அனைத்துலகப் புறநிலையை விடுதலைப்புலிகள் ஆரம்பத்திலேயே கணக்கிடத் தவறினர். போராட்டத்தை பாதுகாப்பதற்கு பொருத்தமான அரசியற் கொள்கையை பின்பற்றத் தவறினர் என்றே தோன்றுகின்றது.

மேற்கு போராட்டத்திற்கு எதிர் நிலையில் தன் ஆதரவை வழங்கப்போகிறது என்பதும் அதனால் எழக்கூடிய கடினமான சூழலையும் கணக்கிடத் தவறினர். கணக்கிட்டிருந்தால் அதிபர் தேர்தலை விடுதலைப்புலிகள் வேறு விதமாக கையாண்டிருக்க முடியும்.

நாடாளுமன்றத்தைக் கைப்பற்றிய சந்திரிக்காவால் அதிபர் பதவியை கைப்பற்ற முடியாமல் போயிருந்தால் தெற்கில் பெரும் அரசியற் குழப்பம் ஏற்பட்டிருக்கும். நாடாளுமன்றத்தில் ஒரு கட்சியும், நிறைவேற்று அதிபராக எதிர்க்கட்சியைச் சேர்ந்தவரும் இருக்கும் பட்சத்தில் இலங்கை அரசியலே பெரும் சிக்கலுக்கு உள்ளாகி சிங்களத் தரப்பை அகமோதலுக்கு உட்படுத்தி இருக்கும். இது போராட்டத்திற்கு நல்வாய்ப்புக்களைப் பெற்றுத்தந்திருக்கும்.

போராட்டத்தைப் பாதுகாக்கவும் முன்கொண்டு செல்லவும் வாய்ப்பான வாசல் உருவாகும் ஏதுநிலை இருந்தது. நாடாளுமன்றத்தில் இருக்கும் அரசாங்கத்திற்கு புலிகளின் ஒத்துழைப்பு சமரசம் இன்றியமையாததாக இருந்திருக்கும். புலிகள் தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் இராணுவ பொருளாதார நெருக்குவாரங்களை குருதி சிந்தாமல் விடுவித்திருக்கலாம்.

ஆனால் விடுதலைப்புலிகளின் எதிர்மறையான கொள்கைத் தீர்மானத்தினால் சந்திரிக்கா அதிபராகப் பதவிக்கு வந்தார். 17 ஆண்டுகளின் பின் ஜ.தே.கவிடம் இருந்து கைப்பற்றிய ஆட்சியைப் பாதுகாக்க ஒரு கவர்ச்சி மிக்க அரசிலைக் காட்சிப்படுத்த வேண்டிய தேவை சந்திரிக்காவிற்கு இருந்தது.

ஆனால் பொருளாதார நிலைமைகள் கவர்ச்சியான அரசியலுக்கு வாய்ப்பளிக்கவில்லை. இங்கு சந்திரிக்காவிடம் இருந்த தெரிவு சிங்கள மக்களின் கவனத்தை யுத்தத்தின் பக்கம் திருப்புவதும் யுத்தத்தின் வெற்றிகளை அரசியல் கவர்ச்சியாக்குவதுமே ஆகும். எனவே அரசாங்கத்தின் முழுப்பலப்பிரயோகமும் போராட்டத்திற்கு எதிராக திரும்ப இது வழிகோலிற்று யுத்தம் மிகவும் மூர்க்கமாக மாறிற்று.

சந்திரிக்கா யுத்தத்தை மக்கள் மயப்படுத்தினார். வடக்கைக் கைப்பற்றுவதே அவரின் கவர்ச்சி மிக்க அரசியல் முன்னெடுப்பு. அதற்காக யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் முயற்சியில் அவர் வெற்றியும் கண்டார். போராட்டத்தில் கேந்திர மையம் ஒன்று இழக்கப்பட்டு பெரும் பின்னடைவைப் புலிகள் சந்தித்தனர்.

அனைத்துலகப் புறநிலை புலிகளுக்கு சாதகமில்லாத சூழலைச் சரிவரப்புரிந்து கொண்ட சந்திரிக்கா மேற்குலகின் ஆதரவையும் அனுசரணையையும் யுத்தத்திற்காக பெற்றுக்கொண்டார். மேற்கு நாடுகள் புலிகளைத் தடைசெய்தன. இராணுவ ரீதியாகவும் அரசுடன் கைகோர்த்து நின்றன. வன்னியில் முடக்கப்பட்ட புலிகள் மிகஇக்கட்டான போரை சந்திக்க வேண்டியாயிற்று.

விடுதலைப்போர் கண்ட தோல்வியின் திருப்புமுனைப் புள்ளி இங்கிருந்து தான் உருவாகியது. இதை முன்னுணர்ந்து தீர்மானம் எடுப்பதில் நிகழ்ந்த தவறு பெரும் அனர்த்தங்களுக்கு வழிதிறந்துவிட்டது.

தொடரும்..

http://www.puthinappalakai.com/view.php?20130626108554

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 13

[ சனிக்கிழமை, 29 யூன் 2013, 08:25 GMT ] [ புதினப் பணிமனை ]

 

தப்பான மதிப்பீடு தருவது தவறான தீர்மானத்தையே - குணா.கவியழகன்

வன்னியில் போர் என்றுமில்லாதவாறு தீவிரமடைந்தது. யாழ் குடாநாட்டு இடப்பெயர்வால் மக்கள் பெரும் அவல வாழ்வை எதிர் கொண்டிருந்தனர். வன்னியிலும் தொடர் இராணுவ நடவடிக்கைகளால் மக்கள் மீண்டும் மீண்டும் நிலைகொள்ள முடியாத இடப்பெயர்வுக்கு ஆளாகி அவல வாழ்வுச் சூழலில் அகப்பட்டனர்.

அனைத்துலக ஆதரவுடன் சந்திரிக்கா மூர்க்கமாக யுத்தத்தை முன்னெடுத்தார். தனித்து விடப்பபட்ட புலிகள் இயக்கம் அரசியல், இராணுவ பொருளாதார ரீதியாக தொடர் பின்னடைவைச் சந்தித்து வந்தது. சிறிலங்கா அரசை அக மோதலுக்குள் சிக்க வைப்பதற்கான வாய்ப்பை தவறவிட்டு சந்திரிக்காவை பலவீனமான தலைவராக கருதி எடுத்த அரசியல் தீர்மானத்தினால் இந்நிலை உருவாகிற்று.

வரலாற்றுச் சிக்கலான நெருக்கடிக்குள் போராட்டம் அகப்பட்ட போதும் விடுதலைப்புலிகளின் தலைமை தனது செயல் மூர்க்கத்தாலும், போர் வல்லமையாலும், யுத்தத்திறன் ஆற்றலாலும் வன்னிப்போரின் இறுதித்தருணத்தில் வெற்றியைப் பெற்றுக்கொண்டது.

வன்னியைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்திற்கு தரைவழிப்பாதை திறக்கும் அரசின் போர் நடவடிக்கை ஒரு கனவு போல் சிதைந்தது.

இதற்காக ஈழத்தமிழர் வன்னியில் கொடுத்த விலை சாதாரணமானதல்ல. ஒரு மக்கள் படையை உருவாக்கி குடிமக்களை ஆயுதம் ஏந்தி களத்தில் போரிடவைத்து அரசின் போர் நிகழ்ச்சி நிரலைத் தவிடுபொடியாக்க முடிந்தது புலிகளால். அரசியல் தீர்மானத்தில் ஏற்பட்ட தவறினால் கண்ட பின்னடைவை தம் செயல் ஓர்மத்தால் ஓரளவு நிவர்த்தி செய்து கொண்டனர் புலிகள்.

இந்த யுத்தத்தின் தொடர்ச்சியில் வடக்கின் முக்கியத்துவம் மிக்க இராணுவக் கேந்திரமான ஆனையிறவுக் கூட்டுத்தளத்தையும் விடுதலைப்புலிகள் கைப்பற்றிக் கொண்டனர். இலகுவில் கைப்பற்ற முடியாத, நிலைகொள்பவருக்கே சாதகமான புவியியல் அம்சத்தைக் கொண்டிருந்த ஆனையிறவுத் தளத்தைப் புலிகள் தமது சிறந்த போர் தந்திரத்தாலும், அசாத்திய திறனாற்றலினாலும் கைப்பற்றிக் கொண்டமை ஒரு யுத்த சாகசமே. புலிகளின் சந்தேகத்திற்கிடமற்ற யுத்த ஆளுமையே.

போரின் இறுதிக்கட்ட நெருக்கடிக்குள் இருப்பதாக நம்பப்பட்ட புலிகள் மிகக்குறுகிய காலத்திற்குள் நிகழ்த்திய அபாரப் போர் வெற்றி அரசைக் கிலிகொள்ள வைத்தது. தவிரவும் யாழ்ப்பாணத்திற்கான பிரதான நுழைவாயிலான ஆனையிறவும் மற்றும் தாளையடி, பூநகரி, சங்குப்பிட்டி ஆகிய பிற நுழைவாயில்களையும் புலிகள் கைப்பற்றியதோடு யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த நாற்பதாயிரம் வரையிலான இராணுவத்தினரின் இருப்பு நிச்சயமற்றதாகியது. யாழ்ப்பாணம் கைமாறுவதும் உறுதியென்று எண்ணியது அரசு. புலிகளின் போர் மூர்க்கம் அரச தரப்பை பெரும் அச்சத்திற்குள்ளாக்கியது.

தென்திசையில் சிங்கள மக்களின் குடியிருப்பினைப் பாதுகாக்கும் பொருட்டு மதவாச்சியில் முன்னேற்பாடான காவலரண் தொடரை அமைக்க அரசு முடிவு செய்தது. இந்தியாவிடம் இராணுவ உதவி கேட்கவும் சம்மதிக்காத பட்சத்தில் திருகோணமலையை இந்தியாவிற்கு கையளிப்பதை பேரமாகக் கொண்டு உதவிகோருவது என்றும் கூட அரசதரப்பில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் உண்டு. இந்தளவிற்கு அரசு புலிகள் தொடுத்த போரில் அச்சம் கொண்டிருந்தது. இத்தருணத்தில் தான் சிறிலங்கா அரசு புலிகளுடன் இரகசிய உடன்பாடு காணவேண்டி சில முயற்சிகளை எடுத்தது.

ஜரோப்பாவில் இருந்த புலிகளின் பிரதிநிதிகளோடு அரசு தொடர்பு கொண்டு யாழ்ப்பாணத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும் இராணுவத்தினரைத் தாங்கள் பின்வாங்கிக் கொள்வதாகவும் இதற்கான அனுமதியையும் உத்தரவாதத்தையும் கேட்டது. களத்தில் போர் தீவிரம் பெற்றிருந்த சமயம் இத்தொடர்பாடல் நிகழ்ந்தது. இச்செய்தி புலிகளின் தலைமைப்பீடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது அவசரமாக.

இங்கு விளங்க வேண்டியது என்னவென்றால் அரசாங்கம் யாழ்ப்பாண இராணுவத்தினரின் உயிர்களில் அக்கறை கொண்டு புலிகளோடு பின்வாங்கும் உரையாடலுக்கு வரவில்லை. தனக்கு ஏற்படப்போகும் அரசியல் நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கே இத்தகைய உரையாடலுக்கு வந்தது.

புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற யுத்தம் தொடுத்தால் பெருமளவு இராணுவத்தினர் சிறைப்பிடிக்கப்பட்டே தீருவார். இச்சிறைப்பிடிப்பு பெரும் அரசியற் குழப்பத்தை தெற்கில் ஏற்படுத்தும் தொடர் யுத்தத்தில் காணாமல் போனதாக கணக்கிடப்பட்ட இராணுவத்தினரின் உறவினர்கள் கொழும்பின் தெருக்களில் இறங்குவர் இதனை எதிர்க்கட்சி வாய்ப்பான தருணமாக பயன்படுத்திக் கொள்ளும். புலிகள் சிறைப்பிடித்த இராணுவத்தை பேரப்புள்ளியாக பயன்படுத்தினால் அரசு ஏற்கவும் மறுக்கவும் இயலாத நெருக்கடிக்குள் அகப்பட்டுக் கொள்ளும் இதற்கு மாறாக பிற (மிகுதி) இராணுவத்தை மீட்டுக் கொண்டால் ஒரு தந்திரோபாயப் பின்வாங்கலை அரசு செய்து கொண்டதாக வியாக்கியானம் செய்து கொள்ளலாம். இந்த இராணுவத்தைக் கொண்டு பிறிதொரு பிரதேசத்தில் குறிப்பிடக்கூடிய இராணுவ வெற்றியை பெற்று அதனை பெரிது படுத்தி அரசியலாக்கவும் வாய்ப்புண்டு. இந்த நோக்கம் கருதியே அரசு இந்த உரையாடலுக்கு வந்தது.

இங்கு சந்திரிக்கா தன் அரசியலைப் பாதுகாக்க வேண்டி வந்தாரே அல்லாமல் இராணுவத்தினரின் உயிர்களைப் பாதுகாக்க அல்ல. இந்த உள்நோக்கத்தைப் புலிகள் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது. இதனால் ஏற்பட்ட தீர்மானத் தவறு பெரும் பின்னடைவுக்கு வழி திறந்தது.

சந்திரிக்காவின் இந்த இரகசிய வேண்டுகோளுக்கு, இராணுவத்தினர் தமது படைத்தளபாடங்கள் அனைத்தையும் விட்டுச் செல்ல வேண்டும் எனப் புலிகள் பதிலளித்தனர். அதாவது ஆயுதங்களைக் கையளிக்க வேண்டும் என்பதாக நிபந்தனை விதித்தனர். இதற்கு சந்திரிக்கா சம்மதித்தால் அது பின்னடைவுக்குச் சமமானது. சரணடைவு என்ற கருப்பொருள் தரக்கூடிய விளைவு இராணுவத்தோல்வி என்பதைவிடவும் அரசியல் அவமானமாகவே அர்த்தப்படும். இதற்கு சந்திரிக் சம்மதிக்க ஒரு போதும் வாய்ப்பில்லை. ஏனேனில் அவர் காப்பாற்ற நினைத்த தன் அரசியல் இதற்கு சம்மதித்தால் அரசியல் தற்கொலையாக முடியுமே அன்றி வேறெதுவாகவுமல்ல.

விடுதலைப்புலிகள் இந்த அரசியல் கணக்கை சரிவரப்புரிந்து கொண்டிருந்தால் இத்தகைய ஒரு விவேகமற்ற நிபந்தனையை விதித்திருக்க வாய்ப்பில்லை.

ஒருவேளை உண்மையாக விடுதலைப்புலிகளால் அரசாங்கம் பயந்தது போல் யாழ்ப்பாணத்தை சுலபமாகக் கைப்பற்றக்கூடிய இயலுமை இருந்திருக்குமென்றால் புலிகளுக்கு பல வாய்ப்பான கதவுகளை அது திறந்திருக்ககூடும். ஆனால் விடுதலைப்புலிகளின் அக நிலைமை அப்படியும் இருக்கவில்லை.

தொடர் போர் நடவடிக்கைகளால் புலிகள் வெற்றிமேல் வெற்றியைக் குவித்துக் கொண்டாலும் அதனால் இழக்கப்பட்ட ஆளணியை நிவர்த்தி செய்ய உடனடியாக புலிகளால் இயலவில்லை. ஆளணி வளப்பற்றாக்குறை மிகப்பாரதூரமாக இருந்தது. சிறு அவகாசம் இராணுவத்தினருக்கு கொடுத்தாலும் திருப்பித் தாக்கும் நிலையை இராணுவம் அடைந்தால் கைப்பற்றிய இடத்தை தக்கவைப்பதற்கே புலிகளிடம் ஆளணி வளம் இருக்கவில்லை.

தவிரவும் இராணுவத்திற்கு தப்பியோடுவதற்கு ஒரு தரைவழிப் பாதையும் இருக்கவில்லை. பின்வாங்க வழியில்லாத இராணுவத்தினர் இறுதிவரை போரிடுவதை உயிர்பிழைப்பதற்கான தெரிவாகக் கொண்டால் அந்த யுத்தம் மூர்க்கமாக இருக்கும். அதை எதிர்கொள்வதோ, அதில் வெற்றியைப் பெறுவதோ கூட அப்போதைய நிலைமையில் சாத்தியமும் இல்லை.

இதற்கான புற நிலைமையாக அரசு அனைத்துலக உதவியை நாடி நின்றது. இந்தியாவிடம் இருந்து உதவியைப் பெற்றுக் கொள்வதில் தீவிர முயற்சி எடுத்தது அரசு. இந்தியா யாழ்ப்பாணம் புலிகள் கையில் விழுவதை விரும்பப்போவதும் இல்லை.

அரசு நாடிய இரகசிய உடன்பாட்டின் உள்நோக்கத்தை புரிந்து கொண்டிருந்தாலோ, அல்லது தமது அக நிலைமையை கருத்தில் எடுத்திருந்தாலோ, அல்ல புற அரசியல் நிலைமையை கணித்திருந்தாலோ புலிகள் இப்படியோரு நிபந்தனையை விதிக்காமல் பின்வாங்கலுக்கு இராணுவத்தை அனுமதித்திருக்க முடியும்.

தப்பான அரசியல் கணக்கால் எடுத்த தீர்மானத்தினால் எல்லாமே தலைகீழாகிப் போனது. இராணுவத்தினரின் உயிர்காக்க வேண்டி ஆயுதங்களை அரசு விட்டுச்செல்ல உடன்படும் என எண்ணியிருந்தால் அவ் அரசியல் கணக்கின் தவறு சாதாரணமானதல்ல. இதனால் யாழ்ப்பாணம் என்ற ஈழப்போராட்டத்தின் அரசியல் கேந்திரம் அன்று கைதவறிப் போனது.

மட்டுமல்ல புலிகளால் கைப்பற்றப்பட்ட யாழ் தென்மராட்சிப் பிரதேசத்தை இராணுவம் சுலபமாக மீளக்கைப்பற்றிக் கொண்டது. இது புலிகளிடம் இருந்த ஆளணிவளம் பற்றாக்குறையை ஊர்ஜிதம் செய்கிறது. தவிரவும் வடக்கின் இராணுவக் கேந்திரத்தை (ஆனையிறவு) தக்க வைப்பதற்காக புலிகள் தமது படைவளத்தை பளைப்பகுதியில் ஒருமுகப்படுத்த வேண்டியாயிற்று. இது புலிகளை பிற போர் நடவடிக்கையில் கவனம் செலுத்த முடியாதவாறு வளத்தை உறிஞ்சும் நிலமாயிற்று.

பின்நாளில் உருவாகிய சமாதான முயற்சியின் போது யாழ்ப்பாணம் கைவசம் இல்லாத தமது நிலை பலவீனமானதென்றும் புலிகள் எண்ணத் தலைப்பட்டனர். யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின் பேச்சு வார்த்தையை முன் கொண்டு செல்ல முடியும் என்றும் எண்ணினர். சமாதானம் முறிந்து போனதற்கு இதுவும் முக்கிய காரணமாகியது. ஆக போரின் இறுதித் தோல்விக்கு அன்று அரசின் இரகசிய உடன்பாட்டை புரிந்து கொண்டு தீர்மானம் எடுக்காமையும் காரணம் ஆகிற்று எனலாம்.

தொடரும்..

http://www.puthinappalakai.com/view.php?20130629108572

சிறப்பான அரசியற் தீர்மானம் திறமையான முன்னுணர்வாலேயே நிகழும் - குணா.கவியழகன்

 

கவியழகன் (பவா, அரசியல்துறை அரசியல் கல்விக்குழுப் பொறுப்பாளர், ஈழநாதம் பத்திரிகையின் பொறுப்பாளராக 2005 வரை செயற்பட்டவர் ) சொல்கின்றார்  ”சிறப்பான அரசியற் தீர்மானம் திறமையான முன்னுணர்வாலேயே நிகழும்” என்று.

 

பவா நீங்கள் சொல்வது நல்லவிடயம், ஆனால்  நீங்கள் போராட வந்ததும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்டதும் தங்களது தனிப்பட்ட அரசியல் தொடர்பான தீர்மானமே. அப்படியாயின் தனிநபராக ஒரு சரியான அரசியல் பாதை எது என்று சிறப்பான அரசியல்த்தீர்மானம் எடுக்கத்தெரியாத  முன்னுணர்வற்ற நீங்கள் எப்படி விடுதலைப்புலிகளின் தீர்மானத்தை விமர்சிப்தற்கு தகுதியானவராவீர்கள்.

 

நிற்க, 1998 காலப்பகுதியில் என்று நினைக்கின்றேன் தீவிர அரசியல் பேச்சாளராகவும், அரசியல் துறைப் போராளிகளை அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்கும் பணியிலும் பின்னர் ஈழநாதம் பத்திரிகையிலும் பல அரசியல் கட்டுரைகளை எழுதிய, பொறுப்பாயிருந்த நீங்கள் சொல்லுகிறீர்கள் ”விடுதலைப்புலிகள் அமைப்பு 1990 ஆண்டிலிருந்தே பல அரசியல்தவறுகளைச் செய்தது என்று”.

 

அப்படியாயின் நீங்கள் நேர்மையானவரா? தவறான திசையில் விடுதலை இயக்கம் சென்று கொண்டிருப்பதை முன்னுணர்ந்திருந்தால் ஒன்று  அதைச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும், அல்லது அந்த விடுதலை இயக்கத்தில் இருந்து விலகி சரியான முன்னுணர்வு அரசியல் வழியில் பயணித்திருக்க வேண்டும்.

 

இவற்றையெல்லாம் விடுத்து விடுதலை இயக்கத்தில் பொய்யனாக, சுயநலத்திற்காக, செயற்பட்டது மட்டுமல்லாமல் மக்களுக்கும் போராளிகளுக்கும் தவறான கருத்தை விதைத்துவிட்டு தற்போது புலம்பெயர்ந்து வந்து தூய்மைவாதியாக வேஷம் போடும் வேடதாரியாக இருக்காதீர்கள். 

 

உங்களைப்போல தீராணியற்ற, நேர்மையற்ற, முதுகில் குத்துகின்ற, சந்தர்ப்பவாத தன்மையான பலரால் தான் போராட்டம் பின்னடைவைச் சந்தித்ததேயன்றி வேறுகாரணங்களைத் தேடாதீர்கள்.

 

நீங்கள் ஒரு நேர்மையான சமூகப்போராளியாய் இருந்திருந்தால் விடுதலைப்போராட்டத்தின் தவறுகளை அப்போதே சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்  அல்லது அமைப்பில் இருந்து வெளியேறி சுயகருத்தை வைத்திருக்கலாம். அல்லது குறைந்தது தவறான பாதை யில் பயணிப்பதை தவிர்த்திருக்கலாம். ஒன்றையும் செய்யாத நீங்கள்! தற்போது  விடுதலைப்புலிகளை விமர்சிப்பதற்கு தகுதியற்றவர் ஆகிறீர்கள். உங்களின் கருத்துக்கள் ஒன்றும் புதியவையல்ல. 

 

தற்போது நீங்கள் விடுதலைப்புலிகளுடன் இறுதிவரை செயற்பட்டவர் என்ற அடையாளத்தில்  புதிய பானையில் பழையகள் என்பதைப்போல் மீட்டுகின்றீர்கள்.

 

உங்களின் சந்தர்ப்பவாதத்தனத்தின் வெளிப்பாடு உப்புச்சப்பின்றித்தான் இருக்கின்றது ஏனெனில் “உப்பிட்டவரை உள்ளவரை நினை“ என்ற பழமொழியின் இங்கிதம் தெரியாத உங்களைப்போன்றவர்களை முன்னுணராததே விடுதலைப்புலிகளின் தோல்வியாகும்.

Edited by காளமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

கவியழகனின்ரை கதையை ஒருத்தருமே  படிக்கேல்லை போலை கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

 

 

உங்களின் சந்தர்ப்பவாதத்தனத்தின் வெளிப்பாடு உப்புச்சப்பின்றித்தான் இருக்கின்றது ஏனெனில் “உப்பிட்டவரை உள்ளவரை நினை“ என்ற பழமொழியின் இங்கிதம் தெரியாத உங்களைப்போன்றவர்களை முன்னுணராததே விடுதலைப்புலிகளின் தோல்வியாகும்.

 

இதை இங்கு வந்து போறவர்கள் வாசிக்கிறார்களோ என்னமோ???

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 14
[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 11:36 GMT ] [ புதினப் பணிமனை ]

 

சமாதானத்தின் முதல் வெற்றியும் முதற்கோணலும் - குணா.கவியழகன்

எந்தவொரு விடுதலைப் போராட்டமும் அனைத்துலக அரசியல் காரணத்தை ஈர்த்துத்தான் தன் இறுதி வெற்றியைக் காணமுடியும்.

2001 செப்ரம்பர் 11 அமெரிக்கா மீதான அல்கொய்தாவின் தாக்குதலை அடுத்து உருவான அனைத்துலக அரசியல் ஈழப்போராட்டத்தின் மீது கவனம் கொண்டது.

சீனாவிற்கான 'முடக்கற் கொள்கை'யை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையில் அமெரிக்கா இருக்க அதற்கான செயற்கதவுகளைத் திறந்துவிட்டது இத்தாக்குதல்.

அமெரிக்கா உலகளாவிய ரீதியில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு அறைகூவியது.

அமெரிக்காவின் பிரதான இலக்கு இங்கு மத்திய கிழக்கே. அடிப்படைவாத முஸ்லீம் அரசுகளை ஒடுக்கி அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி மத்திய கிழக்கின் எண்ணெய் வளக்கட்டுப்பாட்டை தம் கைகளில் மீளுறுதிப் படுத்துவதே அவர்களின் பிரதான நோக்கம்.

இதன் மூலம் இந் நாடுகளில் சீனா ஏற்படுத்திவரும் இரகசிய உறவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும், சீனாவை பொருளாதார ரீதியாக பின்னடைய வைப்பதும், முஸ்லீம் அடிப்படைவாத நாடுகளுடன் சீனா கூட்டுச் சேர்ந்து பலம் பெறுவதை தடுப்பதுமே மேற்குலகின் தேவையாகும்.

அடுத்து, ஆசிய நாடுகளுடனான உறவை புதிய உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கேற்ப மறுசீராக்கம் செய்ய அமெரிக்கக் கொள்கைத்திட்டம் வகுக்கப்படுகிறது.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற அறைகூவலில் உலக நாடுகள் தம் சிக்கல்களை கையாள ஒன்று சேர்ந்தன.

நவீன யுகத்தில் யுத்தம் ஒரு முழு அளவிலான யுத்தமாக உருவெடுக்க வாய்ப்புக்கள் மிகமிக அரிது. ஏனெனில் அணுகுண்டு தொழில் நுட்பமும், ஏற்படக்கூடிய பொருளாதார அழிவும் முக்கிய காரணங்களாக உள்ளன. எனவே வல்லரசுகள் தமக்கிடையே ஒரு நேரடி யுத்தத்தை மூட்டிக் கொள்ளப்போவதில்லை. மாறாக அரசு சாராத ஆயுத அமைப்புக்கள் மூலம் அவை எதிராளியை மறைமுகமாகத்தாக்கி பின்னடைய வைக்கவே எத்தனிக்கும். எனவே அரசு சாராத அமைப்புக்கள் போட்டி அரசுகளால் கையாளப்படலாம் எனவும் வல்லரசுகள் அஞ்சுகின்றன.

சாத்தியக் கூறான இத்தகைய யுத்த வடிவத்தைத் தவிர்ப்பதானால் உலகில் அரசு சாராத எந்த ஒரு ஆயுத அமைப்பும் இருப்பதை இன்றைய உலகத் தலைமைகள் விரும்பவில்லை. குறிப்பாய் அனைத்துலக வலைப்பின்னலைக் கொண்ட எந்தவொரு ஆயுத அமைப்பும் எந்நேரத்திலும் அச்சுறுத்தலாகலாம் என்பதே அவற்றின் கணக்கு. எனவே அவற்றை முடிவுக்குக் கொண்டு வருவது பாதுகாப்புக் கொள்கையின் மிகமுக்கிய அம்சமாகும்.

இந்தக் கண்ணோட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் அனைத்துலக வலைப்பின்னலை மிகத் திறமையாகக் கொண்டிருந்த இயக்கம். எனவே இதன் இருப்பும் உலக அரசியல் தலைமைகளுக்கு அச்சுறுத்தலானது. புலிகளின் அமைப்பு வடிவம் ஒரு முன்மாதிரியாக இருந்து விடவும் கூடாது.

இதைவிட முக்கியமானது மத்திய கிழக்கு மீதான யுத்தத்திற்கு ஆப்கானிஸ்தான் புவியியல் அமைப்பு சாதகமாகக் கொண்ட படை ஏவுதளம். இது ஒரு முஸ்லீம் நாடாக இருப்பதனால் ஒரு மாற்றுத் தளத்தை ஏற்படுத்திக் கொள்வது யுத்தத்திற்கு முக்கியமானது. அத்தகைய ஒரு மாற்றுத்தளம் இப்பிராந்தியத்தில் இலங்கை ஒன்று தான். எனவே மேற்குலகிற்கு தம் சார்பு அரசியலும் நிரந்தர அமைதியும் இலங்கையில் அவசியமானது.

அடுத்து இந்திய மாக்கடல் பிராந்திய நாடுகளுக்கான விநியோகத் தளமாக இலங்கை பயன்பட வேண்டி இருந்தது. இதற்கும் இலங்கையில் நிரந்தர அரசியல் அமைதி தேவைப்பட்டது. ஒட்டு மொத்தத்தில் இலங்கையில் இனி ஆயுதப்போராட்டம் தொடர்வதற்கான ஏதுநிலைகள் அனைத்துலக அரசியலில் திட்டவட்டமாக இல்லாது போயிற்று.

விடுதலைப்புலிகள் இயக்கம் கொண்டிருந்த வலையமைப்பு, கட்டமைப்பு, போர்த்திறன் என்பவற்றிற்காகவும், அடிப்படைவாதக் கண்ணோட்டம் எதனையும் போராட்டம் கொண்டிருக்காததனாலும், அடிப்படைவாத உலக ஆயுத அமைப்புக்களுடன் எந்த உறவையும் போராட்டம் பேணாததனாலும், மேலும் தமிழர்களின் தார்மீக நியாயத்தின் பேராலும் ஒரு சமரச வழிமூலம் அமைதியை இலங்கையில் உருவாக்கும் தெரிவை அனைத்துலக சமூகம் எடுத்தது.

வன்னி யுத்தத்தில் அரச படைகள் பாரதூரமான தோல்வி முகம் கண்டிருந்த நிலையில் ஆட்சி மாறிக்கொண்ட அரசாங்கத்திற்கும் அமைதி தேவைப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கும் போர் முனையில் பெற்ற வெற்றியை புதிதாக எழுந்த அனைத்துலக பாதக அரசியல் சூழலில் இருந்து பாதுகாக்க அமைதி தேவைப்பட்டது.

இத்தகைய பொருத்தமான புறநிலையில் இருதரப்பு சமாதான ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. புலிகள் இயக்கம் போர் முனையில் தம் வலிமையால் ஏற்படுத்திய இராணுவ சமநிலை, சமதரப்பு தகமைகொண்ட ஒப்பந்தம் உருவாகவும், கட்டுப்பாடு எல்லைக் கோடுகள் ஏற்றுக் கொள்ளப்படவும். புலிகள் கொண்டிருந்த நடைமுறை அரசை ஏற்றுக்கொள்ளவும் வழிசமைத்தது.

தொடரப்போகும் சமரசப் பேச்சுக்கான வலுவான அடித்தளத்தைப் புலிகள் ஏற்படுத்திக் கொண்டனர் என்று சொல்லலாம். மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமும், அனைத்துலகக் கண்காணிப்புக்குழுவும் இதற்கு மேலும் வலுவுட்டின.

ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்திற்கு நிச்சயமாக எழுந்த பாதகமான அனைத்துலக புறநிலைகளை விடுதலைப்புலிகள் சாதகமாகக் கையாள்வதில் முதற்கட்ட வெற்றியைப் பெற்றனர். போராட்டத்தை உரிய தகமைடன் அனைத்துலக அரங்கிற்கு கொண்டு போவதில் இது ஒரு நிர்ணயமான வெற்றி என்பதில் சந்தேகமில்லை.

அனைத்துலக சக்திகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற அரசியல் முன்னெடுப்பில் தனிநாட்டுக் கோரிக்கை என்ற அடைவு இப்போதைக்கு தமிழர்களுக்கு சாத்தியமில்லை. அதைவிட யுத்தத்தைத் தொடர்வது மிக நிச்சயமாகச் சாத்தியமில்லை.

இந்நிலையில் அகநிலைச் சுயநிர்ணய உரிமையுடன் சுடிய சமஷ்டித் தீர்வை பரிசீலிப்பதாக இணங்கிய இருதரப்பும் நோர்வே பேச்சில் இதனைப் பிரகடனம் செய்தன. இதைவிட சிறப்பான அணுகுமுறை அப்போது புலிகளுக்கு இருக்கவில்லை.

இந்த சமஷ்டித் தீர்வுப் பிரகடனத்தாலும் தொடர்ந்து நடக்கவுள்ள சமஷ்டிப் பேச்சுக்களாலும் சிக்கல்களை எதிர்கொள்ளப் போவது இலங்கை அரசாங்கம் தான். சமஷ்டி என்ற தீர்வை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை இனவாதிகள் ஒரு போதும் சிங்கள மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கவில்லை.

தவிரவும் அதிபர் தேர்தலை எதிர்கொள்ளப்போகும் அரசாங்கம் இதற்கு ஓப்புக்கொண்டு பேச்சில் ஈடுபடுவது அதை மிகவும் பலவீனப்படுத்தும். எனவே சமஷ்டித் தீர்வுப் பேச்சில் இருந்து பின்வாங்க எத்தனிக்கப்போவது நிச்சயமாக சிறிலங்கா அரசாங்கம் தான்.

இதனால் பேச்சு மேசையில், அனைத்துலக அரங்கில் அனைத்துலக சமூகத்தின் ஆதரவு, நியாயம் தமிழர் பக்கம் திரும்பவே வாய்ப்புக்கள் இருந்தன. அனைத்துலக சமூகத்தைப் பொறுத்தவரை இனமோதலுக்கான தீர்வில் சமஷ்டி என்பது மிகவும் குறைந்தபட்ச நியாயபூர்வமான தீர்வே. அரசாங்கம் இதிலிருந்து பின்வாங்கினால் அனைத்துலக சமூகம் ஒருபோதும் அதை ஆதரித்து நிற்காது.

அனைத்துலக சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு முறுகலை ஏற்படுத்துவதற்கான சரியான அணுகுமுறையாக இதைக் கொள்ளலாம். அரசாங்கத்திற்கான ஒரு பொறியாகவும் இதைக் கொள்ள முடியும்.

ஆனால் விடுதலைப்புலிகளின் தலைமை தனிநாட்டுக் கொள்கைக்காக போராடிய தமது அமைப்பில் அகநிலைக் குழப்பங்கள் ஏற்பட்டுவிட்டதைக் காரணம் காட்டி பேச்சின் தலைவர் அன்ரன் பாலசிங்கத்திடம் அதனை பின்வாங்கக் கோரியதும் பின்வாங்கியதும் சமாதானத்தின் முதல் தவறாயிற்று.

அரசாங்கத்திற்கு ஏற்பட இருந்த சிக்கலைத் தாமே விடுவித்துக் கொண்டது மட்டுமல்லாமல் தம்மைத்தாமே அனைத்துலக நெருக்கடிக்குள் தள்ளினர். மேற்கு நாடுகள் புலிகளை விசனத்தோடு அணுகத்தலைப்பட்டன.

நோர்வேயை நண்பனாக்கி நோர்வே மூலம் மேற்கு நாடுகளை அனுசரித்துக் கொள்வது என்ற உள்ளதில் சிறப்புமிகு தெரிவான அணுகுமுறை ஆட்டங்கண்டது. அப்போதைய அனைத்துலகப் புறநிலையில் இத்தெரிவை அனுசரிக்காத மாற்று நடைமுறைகள் சாத்தியமானதாக இருக்கப் போவதில்லை என்பதை உணர்வதில் வறுமைநிலையே இருந்தது. இது தொடரப்போகும் சமாதானத்தில் விழுத்திய முதற்கோணல் ஆகிற்று.

அனைத்துலக உறவில் நேர்விளைவு காணவேண்டிய அணுகுமுறை எதிர்மறை விளைவைக் கண்டு சிறிலங்கா அரசாங்கத்திற்கு சார்பாக மாறியது.

தொடரும்..

http://www.puthinappalakai.com/view.php?20130701108584

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 15
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 09:13 GMT ] [ புதினப் பணிமனை ]

வழிகளைக் காணாத பயணம் இலக்கைப் போய்ச் சேராது - குணா.கவியழகன்

நோர்வே பேச்சுவார்த்தையில் சமஷ்டி பற்றி எட்டப்பட்டது உடன்பாடோ பிரகடனமோ இல்லை, அது சமஷ்டியை பரிசீலிப்பதான உரையாடல் மட்டுமே என புலிகள் அறிவித்தனர். ஆயினும் பேச்சு முயற்சியில் தாம் பற்றுறுதியுடன் இருப்பதாகவும் சமாதான வழியில் முன்னேறுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் இருந்து யுத்தத்திற்குத் திரும்புவதற்கான புறநிலை இல்லை என்பது அப்போது புலிகளுக்குத் தெரிந்து தான் இருந்தது. எனவே வேண்டியது ஒரு அரசியல் பயணம் என்றபோது அந்தப் பயணத்திற்கு தேவையான வழிகளை அமைக்கவும், தடைகளை அறுக்கவும் வேண்டியது முன் நிபந்தனையாகும்.

பேச்சு வார்த்தையில் முன்னேறியே ஆகவேண்டும் என்பது ஒரு வகை நிர்ப்பந்தமான தெரிவு. மீதமுள்ள பயணத்தை இவ்வழியில் முன்னெடுப்பதற்கு இரண்டு நிபந்தனைகளை புலிகள் பூர்த்தியாக வேண்டியிருந்தது. ஒன்று இந்தியாவுடனான தமது உறவை மறுசீரமைத்துக் கொண்டு அனுசரிப்பது. இரண்டாவது வடக்கு கிழக்கின் தேசிய பிரக்ஞையை வலுப்படுத்தி ஒரு வெகுஜனப் போராட்டத்திற்கு மக்களையும் அமைப்பையும் தயார்படுத்திக் கொள்வது.

இலங்கைத்தீவில் இந்தியா என்ற பிராந்திய வல்லரசை மீறி அனைத்துலக நாடொன்று தீர்வைத் திணித்துவிட முடியாது. தவிரவும் புதிய உலக ஒழுங்கில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான உறவு மிகமிக வலுவானது.

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான யுத்தத்தை எதிர்பார்த்திருக்கும் அமெரிக்காவிற்கு இந்தியாவின் ஆதரவும் அனுசரணையும் அவசியமானது. சீனாவிற்கு எதிரான முடக்கற் கொள்கையை நடைமுறைப்படுத்த இந்தியா அமெரிக்காவின் இணைபிரியா பங்காளியாக இருக்கிறது. இந்தியா அனைத்துலக அரசியலில் தனக்கான முக்கிய வகிபாகத்தைத் தேடும் பொருட்டு அமெரிக்காவுடன் அனுசரிக்கும் அரசியற் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் விருப்பு வெறுப்புக்களை மீறி இலங்கைப் பிரச்சினையில் தீர்மானம் எதனையும் எடுத்துவிட முடியாத அளவிற்கு மேற்குலகம் இந்தியாவுடன் கேந்திர உறவைக் கொண்டிருந்தது. எனவே இந்தியா புலிகளைக் குரோதக் கண்கொண்டு பார்க்கும் நிலைளை மறுசீர் செய்தே ஆகவேண்டிய கடப்பாடு புலிகளுக்கு இருந்தது.

பேச்சு முயற்சி தொடங்கிய காலகட்டத்தில் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் தன் உடல்நிலை கருதி இந்தியாவின் தமிழ்நாட்டில் தங்கியிருந்து இப்பேச்சுக்களில் ஈடுபடுவதற்கான வேண்டுகோளை விடுத்தார். இதன் மூலம் புலிகள் இந்தியாவுடன் உறவை மறுசீரமைக்கும் சமிக்ஞையைத் தெரிவித்தனர். இந்தியா இதனை ஒத்துக்கொள்ளவில்லை.

கிடைத்த சந்தர்ப்பத்தில் மூடிய கதவுகளை மீண்டும் திறந்து புலிகளை அனுமதிக்க இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் அஞ்சினர். விடுதலைப்புலிகளும் இந்தியாவிற்கு ஒரு சந்தர்ப்பம் அளித்து அதை இந்தியாவே புறக்கணித்த நிலையை உருவாக்கி விட்டதோடு நிறுத்திக்கொண்டனர். சமாதான முயற்சியில் இனி இந்தியா மூக்கை நீட்டுவதற்கான முகாந்திரம் இல்லை என்பதே புலிகளுக்கு ஆறுதலளிக்கும் அரசியல் கணக்காக இருந்தது. திருப்தியும் பட்டுக் கொண்டனர்.

இந்தியா இப்பேச்சு முயற்சி நீண்டு நிலைக்கும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கவில்லை என்றே தெரிகிறது. ஆனால் மேற்குலகம் இதில் தீர்மானமாக இருந்து பேச்சை முன்னெடுத்துச் செல்லும் சூழலில் இந்தியா திட்டவட்டமான கொள்கையை இதில் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று.

இதனால் பின்னைய நாட்களில் யதார்த்தத்தை உணர்ந்தது இந்தியா. பலிகளுடன் தொடர்பாடலைப் பேணவும் தீர்மானத்திற்கு வரவும் முயற்சி செய்தது. ஆனால் புலிகளின் பக்கத்தில் இருந்து இம்மாதிரியான ஒரு முயற்சி எடுக்கப்படவில்லை. அக்கறை காட்டப்படவும் இல்லை. இறுதியில் சமிக்கைகளுக்கு போதிய பொறுப்புணர்வான பதில் அணுகுமுறைகூட புலிகளால் காட்டப்படவில்லை என்றே தெரிகிறது.

இந்தியாவின் கோரிக்கைகளோ, அணுகுமுறையோ விரும்பத்தக்கதாக இல்லாதபோதும், சந்தேகம் தருவனவாக இருந்தாலும்கூட இந்திய உறவில் போதிய அக்கறை காண்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் மீதமுள்ள பயணத்திற்கு இவ்வுறவு பூர்த்தி செய்யப்படுவது ஒரு வகையில் முன்நிபந்தனையாகும்.

இது விடயத்தில் போதிய விழிப்புணர்வை எடுத்துக் கொள்ளாமையின் விளைவு சமாதானம் நெருக்கடிக்குள்ளாவதற்கு இந்தியாவின் மறைகரங்கள் கணிசமானளவு காரணமாயின.

புலிகள் மீதுள்ள இந்தியாவின் சந்தேகங்கள், அச்சங்கள், பகையுணர்வு சீர்செய்யப்படாமல் புலிகள் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக இப்பேச்சு முயற்சியில் வெற்றி பெறுவதையோ அதிசுரத்தைக் கைப்பற்றுவதையோ இந்தியா விரும்பியிருக்கவில்லை.

இரண்டாவது விடயம் வடக்குக் கிழக்கில் தேசிய பிரக்ஞையை வலுப்படுத்துவதும், வெகுசனப் போராட்டத்திற்கு மக்களைத் தயார் செய்து கொள்வதும் தொடர்பானது.

சமாதானப் பயணத்திற்கு அகப்பலம் பூரணப்படுத்தப்படுவது இன்றியமையாதது. இதற்கு போதாமையுடன் காணப்பட்ட தேசிய பிரக்ஞையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு போதிய அக்கறை காட்டப்படவில்லை.

பேச்சுக்கான ஒப்பந்தத்தில் வடக்குக்கிழக்கை இணைக்கும் மணலாற்றின் ஊடான வீதியை திறக்க கோரிக்கை விடப்படாதது பெரும் தவறாக இருந்தது. இலகுவில் திறந்திருக்கக்கூடிய இயலுமையைப் புலிகள் கொண்டிருந்தபோதும் இது தொடர்பான போதிய விழிப்புணர்வை எடுத்துக் கொள்ளாதது தவறாயிற்று.

இரு மாகாணங்களுக்கிடையிலான தொடர்பாடலை எல்லா நிலையிலும் வலுப்படுத்தி தேசிய பிரக்ஞையை பலம் பெற வைப்பதற்கான அரசியல் சமூக வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும். வசதியும், வாய்ப்பும், அவகாசமும் போதியளவு இருந்தபோதும் இத்தகைய வேலைத்திட்டம் ஒன்றை புலிகள் வகுத்துக் கொள்ளவில்லை.

இதனால் கிழக்கு ஒரு பலவீனப் புள்ளியாகவே நீடித்தது எனலாம். கருணாவின் பிரிவைத் தொடர்ந்து கருணாவை அரசு அரசியலிலும் பயன்படுத்த முடிந்ததென்றால் இப்பலவீனத்தைக் கருத்தில் கொண்டுதான்.

ஆயுதப்போராட்டத்திற்கான வாய்ப்புக்கள் அரசியலில் மறைந்தவிடத்து பேரத்தை பேணுவதற்கான அழுத்தப் புள்ளியை உருவாக்கிக் கொள்வது அவசியமானது.

இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கான தீர்வை வழங்குவதில் இதயபூர்வமாக இல்லை என்பது மிகவும் வெளிப்படையானதே. ஆனால் ஆயுதப்போரைத் தொடர்வதற்கு வாய்ப்பற்ற போது அடையப்பட்ட இலக்கில் இருந்து முன்னேறுவதற்குத் தேவையான வழிகளை ஏற்படுத்திக் கொள்வது தலைமைத்துவத்தின் கடமையாகும். அனைத்துலக தலையீடு என்ற அம்சத்தில் வெகுசன போராட்டத்தை தயார்செய்ய வேண்டிய தேவை புலிகளுக்கு இருந்தது.

இத்தகைய ஒரு வெகுசனப் போராட்ட இயக்கத்தை உருவாக்கி இருந்தால் அதனை இப்பேச்சுவார்த்தையில் அனைத்துலக சமூகத்திற்கு எதிராகவும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் ஒரு அழுத்தப்புள்ளியாக பயன்படுத்தியிருக்க முடியும். மட்டுமல்ல, புலிகள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களுக்கு பாதுகாப்பரணாகவும் பயன்படுத்தியிருக்க முடியும்.

'பொங்கு தமிழ்' இயக்கம் இதற்கான நல்ல தொடக்கமாகவும் முயற்சியாகவும் இருந்தது. வெற்றிகரமான வெகுசன மக்கள் இயக்கமாக இருந்த பொங்குதமிழ் இயக்கம் புலிகளின் ஏகதலைமைத்துவத்தை ஜனநாயக வழியில் காட்சிப்படுத்தவும், புலிகளின் அரசியல் நிலைப்பாட்டை நியாயப்படுத்தவும் முயன்றதோடு சுருங்கிப்போனது.

இது மாதிரியான சொந்த வெகுசன இயக்கமே மீதமுள்ள பயணத்திற்கு புலிகளுக்கு தேவைப்பட்டது. விடுதலைப்புலிகள் கண்ட வலுச்சமநிலையை ஆதாரமாகக் கொண்டு எழுந்த சமரச ஒப்பந்தத்தில் பேச்சு முயற்சியில் தொடர்ந்து முன்னேறக்கூடிய போராட்டவடிவமாக வெகுசன இயக்கம் ஒன்றே பொருத்தமான தெரிவாக இருந்தது.

ஆனால் அத்தகைய ஒரு இயக்கம் புலிகளால் தொடக்கப்பட்டும் கூட போதிய விழிப்புணர்வு இன்மையினாலும் குறுகிய கொள்கைக்குள் சுருங்கிப்போனதாலும் அது தொடரப்படவில்லை. அல்லது மீதமுள்ள பயணத்தை வெகுசன போராட்ட வடிவமூடாக தொடரலாம் என்றோ அவ்வாறு தொடர முடியும் என்றோ புலிகள் நம்பிக்கை கொள்ளவில்லை.

மொத்தத்தில் இந்திய உறவை மீள் சீராக்கம் செய்வது, வெகுசன போராட்ட இயக்கத்தை உருவாக்குவது என்ற இரண்டு முக்கிய விடயத்தில் புலிகள் அடியெடுத்து வைத்தபோதும் குறுகிய கொள்கை மனப்பாங்கால் அல்லது அநாவசியமான அச்சங்களினால் அது சரியான வளர்ச்சிக்கு முன்னெடுக்கப்படாமல் போனது.

சமாதானத்தில் தொடர்ந்து முன்னேறக்கூடிய வாய்ப்புக்களை கைதவற விட்டதற்கு இது ஒரு முக்கிய காரணமாகிற்று.

தொடரும்..

http://www.puthinappalakai.com/view.php?20130703108599

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 16
[ சனிக்கிழமை, 06 யூலை 2013, 05:38 GMT ] [ புதினப் பணிமனை ]

 

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிந்த கதை - குணா.கவியழகன்

அரசுகளுக்கிடையில் அரசுகளுடனான உறவுகள் வகைப்படுத்தப்பட்டே பேணப்படுகின்றன. வகை பிரிக்கப்படும் உறவுத் தன்மைக்கேற்ப அணுகுமுறைகளும் மாற்றமுறும். இது இன்று நேற்றுத் தொடங்கிய நவீன கல்வியல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.

அர்த்தசாஸ்திரம் மற்றும் த பிறின்ஸ் என்ற மேற்கத்தைய நூல்களிலும் இவை காணக்கிடைக்கின்றன. இன்றைய அரசியல் உறவு இந்த அடிகளிலிருந்து மிகவும் செழுமையடைந்துவிட்ட நுண்மையான அறிவாகிவிட்டது.

அரசியலில் சந்தேக உறவு எப்போதும் இருந்தே வந்திருக்கிறது. இனியும் இருக்கும். சந்தேகம் கொள்ளும் அரசுடன் ஏன் உறவைப் பராமரிக்க வேண்டும். அவ்வரசுடன் உறவை முறித்துக் கொள்வதனால் உண்டாகக்கூடிய எதிர்மறையான விளைவுகள் தெளிவாகுமிடத்து அவ்வுறவு பராமரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. எச்சரிக்கையுடன் கூடிய தவிர்க்கவியலாத உறவாக இது அமையலாம்.

டோக்கியோ மாநாடு இனப்பிரச்சினைப் பேச்சு வார்த்தையில் மிகமுக்கிய மைல்கல். இலங்கையில் சமாதானம் என்பது அனைத்துலக நலன் ஆகிவிட்டபோது பேச்சின் நிகழ்ச்சி நிரலும் அதனுடையதாவது தவிர்க்க இயலாதது.

இருதரப்பும் யுத்தத்திற்கு திரும்பவியலாத கட்டத்தை அடைவதே பேச்சில் அனைத்துலகம் கொண்டிருக்கும் முக்கியமான திருப்புமுனையாகும். பரஸ்பரம் இரு தரப்பும் கொண்டிருக்கும் பகைமை, சந்தேகம் என்பவற்றிலிருந்து சுமூகநிலையை ஏற்படுத்தி இருதரப்பும் தலைமை தாங்கும் தம் மக்கள் சமூகத்திற்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய சூழலை உருவாக்குவதே முதல் கட்டப் பேச்சுக்களின் இலட்சியம்.

இந்நிலை உருவாகியதும் யுத்தத்திற்கு திரும்பவியலா கட்டத்திற்கு இரு தரப்பையும் இட்டுச் சென்று அனைத்துலகத்திற்கும் பொறுப்புக் கூற வைப்பதே முதலாவது திருப்புமுனை எனலாம். அதற்கான எல்லாநிலைத் தயார்ப்படுத்தலாகவே முன்னதான பேச்சுக்கள் சந்திப்புக்கள் அமைக்கப்பட்டன. இங்கு டோக்கியோ மாநாடே யுத்தத்திற்கு திரும்பவியலா மைல் கல்.

டோக்கியோ மாநாடு என்பது முடிவான ஒரு தீர்வை நோக்கி முன்னேறுவதற்கான நிகழ்ச்சித் திட்டத்திற்கு இரு தரப்பும் உடன்பட்டு கைச்சாத்திடும் ஒரு மாநாடு. உடன்படும் நிகழ்ச்சித் திட்டத்தில் இருதரப்பும் பரஸ்பரம் பொண்டிருக்கும் மறுதரப்பின் மீதான சந்தேகம் அச்சம் என்பவற்றிற்கு அனைத்துலக சமூகமே பொறுப்பு நிற்கும் நிகழ்ச்சியாகும்.

அதே வேளை எட்டப்படும் நிகழ்ச்சி நிரலில் முன்னேறுவதற்கு இருதரப்பும் அனைத்துலக சமூகத்திற்கு பொறுப்புக்கூற கடமைப்பாடுடையது. இவ்வாறே இம்மாநாட்டின் சாராம்சம் அமைக்கப்பட்டது.

இறுதித்தீர்வாக சமஷ்டியை எட்டுவதென்ற இலட்சியத்தில் முன்னேறுவதும் அதற்கு முன் இறுதித்தீர்வின் இணைபிரியா அங்கமாக இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்துவதும் இடைக்கால நிர்வாகம் நடைமுறைக்கு வரும் நேரத்தில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை படிப்படியாக மூன்றாம் தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும். என்பதும் உடன்பாட்டின் முக்கிய உள்ளடக்கங்கள்.

இணைத்தலைமை நாடுகள் தலைமையில் பல உலகநாடுகள் பங்கேற்கும் இம்மாநாடு அனைத்துலக சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும். இங்கு எட்டப்படும் உடன்பாட்டிலிருந்து பின்வாங்காமல் இருக்க தரப்புக்கள் அனைத்துலக சமூகத்திற்கு பொறுப்புக்கூற கடமைப்பட்டது. அதே நேரம் மறுதரப்பு பின்வாங்காமல் பாதுகாக்க அனைத்துலக சமூகம் கடமைப்பட்டது. மொத்தத்தில் இங்கு எட்டப்படும் உடன்பாடு பின்வாங்க முடியாததாக அமைய வேண்டும் என்பதே அனைத்துலகத்தின் நிலைப்பாடு.

இலங்கையில் அமைதியாக அரசியல் என்பது இன்றைய உலகத் தலைமையினதும் பங்காளிகளினதும் கட்டாய நலன். இருதரப்பையும் ஒரு பொதுநிகழ்ச்சித் திட்டத்திற்குப் உட்படுத்துவதும் அதற்கு தாம் பொறுப்பு நிற்பதும் அனுசரணை வழங்குவதும் அவற்றின் அரசியல் அணுகுமுறை.

இந்நிகழ்ச்சியிலிருந்து பின்வாங்கும் தரப்பு அனைத்துலக சமூகத்தில் பகைக்கு ஆளாகும். உலகளாவிய அதன் நிகழ்ச்சி நிரலுடன் பின்னிப்பிணையும் இச் சமாதானத்தை முறிக்கும் தரப்பு உலகத்தலைமை நாடுகளின் அரசியல் நலனையும் முறிக்கும் தரப்பாகும்.

டோக்கியோ மாநாட்டின் பின் யுத்தத்திற்கு திரும்புவது இலகுவானதல்ல என்பது விடுதலைப்புலிகளுக்கு தெரிந்திருந்தது. சிங்கள இனவாத அரசு சமஷ்டி என்ற தீர்வைத்தருவது கூட மனமொப்பி நடக்க கூடியதல்ல. அனைத்துலக சமூகத்திற்கு இலங்கையில் தேவைப்படுவது பூர்த்தி செய்யப்பட்டுவிட்டால் போராட்டம் யுத்தத்திற்கு திரும்பவியலாக் கட்டத்திற்குள் நுழைந்த பின்னர் ஏமாற்றப்படும் சமயத்தில் செய்வதற்கு எதுவும் இருக்காது. தீர்வில் நலன் அற்ற அனைத்துலக சமூகத்தை நிர்ப்பந்திக்க வழியும் இருக்காது என புலிகள் அஞ்சினர்.

போதாதற்கு பலஸ்தீனம் பேச்சு ஒரு கெட்ட முன்னுதாரணமாக கண்முன் இருந்தது. இந்த நியாயமான அச்சம் காரணமாக புலிகள் டோக்கியோவைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்தனர்.

இச்சந்தேகம் நியாயமானதாக இருந்தாலும் கூட இச்சந்தேக உறவைப்பேண வேண்டியதும் அதில் புதிய வழிகளை புதிய அணுகுமுறைகளைக் கண்டடைய வேண்டியதுமே புலிகளின் தெரிவாக இருந்திருக்க வேண்டும்.

அனைத்துலகம் பொறுப்பேற்கும் இச்சமாதானத்தில் இவ்வுறவை முறித்துக் கொள்வதனால் எவ்வகையிலும் ஆயுதப்போராட்டம் முன்னேற வாய்ப்பிருக்காது. அத்தகைய தெரிவு அனைத்துலகத்துடனான மறைமுகப் போராகி பேரழிவைச் சந்திக்கும் என்பதே புலிகள் புரிந்து கொள்ளவேண்டியிருந்த யதார்த்தமாகும்.

அரசும் கூட சமஷ்டியைத் தீர்வாகத் தந்து விட மனமொப்பி வரவில்லை. அனைத்துலக சமுகத்தை பகைக்க முடியாது என்பதும் இப்பாதையில் தான் வெற்றிபெற புதிய வழிகளைக்கண்டு பிடிப்பதே தனக்கிருக்கும் ஒரே தெரிவு என்பதுமே மாநாட்டில் கலந்து கொள்ளும் அரசின் நிலைப்பாடு.

ஆனால் அரசுடன் ஒப்பிடுகையில் இத்தகைய ஒரு பேச்சு முயற்சி போராட்ட அமைப்புக்கே அதிக ஆபத்தான விளையாட்டு என்பது மறுப்பதற்கு இல்லை. இருந்தும் புரிந்து கொள்ளப்படவேண்டியது. என்னவென்றால் அனைத்துலக சக்திகளின் நலன்சார்ந்த நிகழ்ச்சி நிரலை முறிப்பது மீண்டும் யுத்தத்திற்கு திரும்புவது அனைத்துலகத்துடன் மறைமுகப் போருக்குப் போவதற்கு ஒப்பானது.

தவிரவும் அப்போது உருவாகிய அனைத்துலக அரசியல் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற அச்சாணியில் சுழல்கிறது. இது சர்வ வல்லமை கொண்ட அரசியலாகவும் ஆயிற்று. இதைக் கருத்திற் கொள்ளாத தீர்மானம் எதுவும் கன்றுக்குட்டித் தீர்மானமாகவே அமையும்.

புலிகளின் டோக்கியோ புறக்கணிப்பை அனைத்துலகம் எதிர்பார்க்க வில்லை. இதனால் அனைத்துலகம் புரிந்து கொண்டது என்னவென்றால் புலிகள் தனிநாட்டைத் தவிர எதையும் ஏற்கப்போவதில்லை, போரையும் கைவிடப்போவதில்லை, புலிகள் பேச்சுக்கு வந்தது சூழ்நிலைத் தந்திரமே. இந்தப் புரிதலால் அனைத்துலகம் புலிகளை கடுமையாகக் கையாளும் நிலையை நோக்கி அடியெடுத்து வைத்தன. அமெரிக்கா, ஜரோப்பிய யூனியன் மீண்டும் புலிகளை தடை செய்தது.

தீர்வுக்குப் பொறுப்புக் கூறும் தரப்பாகவும், புலிகளின் நட்புச் சக்தியாக உறவை வளர்த்துக் கொள்ளத் தயாராகவும் இருந்த மேற்குலகு தம் கதவுகளை அடைத்து புலிகளுக்கு துர் சமிக்ஞை கொடுத்தது.

பிரத்தியேக சந்திப்புக்கள் மூலமாகவும் புலிகளுக்கு வரப்போகும் ஆப த்தை எடுத்துரைத்தன. பேச்சில் இருந்து பின்வாங்க முடியாது என்பதையும் யுத்தம் சாத்தியமில்லை என்பதையும் அவ்வாறு முயற்சித்தால் இரக்கமற்று போராட்டம் ஒடுக்கப்படும் என்பதையும் நோர்வே எடுத்துரைத்தது.

புலிகள் எதையும் புரிந்து கொள்ளவில்லை. விட்டுக் கொடாமையே தமது பலம் என ஒப்பினர். காண்காணிப்புக்குழுவில் வகித்த இருநாடுகள் புலிகளின் தடையை ஆதரித்ததனால் அவ்விரு நாடுகளையும் கண்காணிப்புக்குழுவில் இருந்து அகற்றக்கோரி நிறைவேற்றியும் கொண்டனர். புலிகள் பகையை வளர்த்தனரே தவிர தணிவித்தார். இல்லை.

அனைத்துலக சமூகம் விடுத்த தூர் சமிக்கைஞைகளை புலிகள் கண்டுகொள்ள மறுத்தனர். அனைத்துலகத் தலைமைச் சக்திகளின் பயங்கர வாதத்திற்கு எதிரான போர் என்ற நிகழ்ச்சி நிரலில் ஈழப்போராட்டம் உட்படுத்தப்படாமல் இருக்க அனைத்துலகச் சமூகம் எடுத்த முயற்சிகளை புலிகளே ஒரு வகையில் தோற்கடித்தனர் எனலாம். தொலைநோக்கற்ற தீர்மானம் இதற்கு காரணமாயிற்று.

புலிகளிடம் இருந்த தியாகம், வீரம் நேர்மைக்குணம் என்பவற்றிற்கு இத்தீர்மானம் சான்றாகலாம். ஆனால் அரசியல் விவேகத்திற்கு இத்தீர்மானம் சான்றாகவில்லை.

தொடரும்..


http://www.puthinappalakai.com/view.php?20130706108614

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 17
[ புதன்கிழமை, 10 யூலை 2013, 08:12 GMT ] [ புதினப் பணிமனை ]

 

தாவீது கோலியாத்தை வென்றிருக்கலாம் அதற்காக இன்னொருமுறை அழைக்கக்கூடாது - குணா.கவியழகன்

ஓர் அரசுக்கும் ஏனைய அனைத்துலக அரசுகளுக்கும் இடையில் உள்ள உறவைப்போல் ஓர் அரசுசாரா அமைப்புக்கும் அரசுகளுக்குமிடையில் உள்ள உறவு பலமானதாக அமையும் என்று கொள்வதற்கில்லை. அனைத்துலக உறவில் அரசுக்குள்ள ராஜதந்திர செயல்வெளி போல் அரசு சாரா அமைப்புக்கு இருக்காது என்பதும் உண்மை.

தமிழர்களின் தாயக உரிமை மீது அனைத்துலகத்திற்கு உடனடி நலன் எதுவும் இல்லாத வாய்ப்பற்ற சூழலில் ஒரு போராட்ட அமைப்பு அனைத்துலக உறவை மேம்படுத்துவது சாத்தியமானதல்ல. அதை போதிய பலமாக கொள்வதும் நம்பிக்கையானதல்ல என விடுதலைப்புலிகள் உணர்ந்தனர். எனவே தமது அகப்பலத்தை மேலும் மேம்படுத்தி விட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது பாதுகாப்பானது என எண்ணினர்.

இங்கு புலிகளால் புரியப்படாமல் போனது எதுவெனில் அனைத்துலக அரசியல் சாதகமற்ற சூழலில் ஒர் அரசு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயங்கக்கூடிய இராஜதந்திர செயல் வெளி போல் அரசுசாரா அமைப்புக்கு இருக்காது என்பது தான்.

அதுவும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்ட ஓர் ஆயுத அமைப்பு பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற கருத்தாக்கத்தில் மையம் கொண்டியங்கும் அனைத்துலக அரசியல் சூழலிலிருந்து அனைத்துலகச் சக்தியின் நலன்களுக்கு முரணாக இயங்க முனைவது பாதுகாப்பானதல்ல.

ஆனால் புலிகள் தமது கண்ணோட்டத்தில் போராட்டத்தை முன்னகர்த்த முனைந்தனர். புலிகளின் பார்வையில் ஈழத்தமிழர் போராட்டத்தின் முக்கிய கேந்திரங்கள் இரண்டு. வடக்கின் யாழ்ப்பாணம் அரசியல் கேந்திர முக்கியத்துவம் கொண்டிருந்தது. கிழக்கில் திருகோணமலை இராணுவக் கேந்திர முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. இவை இரண்டுமே புலிகளின் கையில் இல்லை.

ஆக நான்கு இலட்சத்திற்குட்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட வன்னிப் பிரதேசமே தளப்பிரதேசமாக இருந்தது. கிழக்கில் நகர்ப்பிரதேசம் தவிர்ந்த கிராமப்பிரதேசங்கள் கையில் இருந்தன. எனினும் இவை மீண்டும் ஒரு போரில் இலகுவில் இராணுவத்தினரின் கையில் விழக்கூடிய புவியியல், குடியியல் அமைப்பைக் கொண்டவை. எனவே யுத்தத்திற்கு திரும்பவியலா நீண்ட பேச்சில் புலிகள் பலமற்று ஈடுபட அஞ்சினர்

இதன் பொருட்டு இவ்விரு கேந்திரங்களையுமோ குறைந்தது ஒன்றையேனுமோ உடனடியாகக் கைப்பற்றிவிட்டு சமாதானத்திற்குத் திரும்புவது பாதுகாப்பான தீர்மானம் என எண்ணினர். அகப்பலத்தையாவது மேம்படுத்திக் கொள்வது கட்டாயம் என உணர்ந்தனர்.

ஒருவேளை ஒப்பந்தத்தில் எட்டப்பட்ட விடயங்களின் படி தொண்ணூறு நாட்களில் வடகிழக்கில் நிகழவேண்டிய படைவிலகல்கள் மற்றும் ஏனைய பிற அம்சங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுத்ததை அரசு நிறைவேற்றியிருந்தால் புலிகளுக்கு இத்தகைய அச்சம் ஏற்பட்டிருக்காது போயிருக்கலாம்.

ஆனால் உடன்பாட்டில் எட்டப்பட்ட ஆரம்ப அடிப்படை விடயங்கள் கூட நிறைவேற்றப்படாததனால் புலிகளின் அச்சம் ஒருவகை நியாயமானதாகிற்று. அமைப்புக்குள்ளும் மக்கள் மத்தியிலும் இத்தீர்மானம் நியாயமானதாகக் தோன்ற வழிசெய்தது.

அச்சம் கொண்ட இப்பேச்சில் இருந்து பின்வாங்கும் உத்தியாக அரசாங்கத்தை மாற்றும் முயற்சியைப் புலிகள் எடுத்தனர். அதிபர் தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதன் மூலம் ஜ.தே.க வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க பதவிக்கு வருவதைத் தடுத்து ராஜபக்சவை பதவிக்குக் கொண்டு வந்தனர்.

அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் அரசாங்கம் மாறவேண்டியாயிற்று இனவாதிகளில் கூட்டணியாக இருந்த இவ்வரசாங்கம் தம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியின் படியும் விருப்பின் படியும் சமாதானத்தை முறித்துக் கொள்ளும். எனவே சமாதானத்தை முறித்த குற்றம் அரசைச் சாரும். இடையில் ஏற்படும் இவ்வரசியல் சூழலில் தமது இலக்குகளைக் கைப்பற்றி அகப்பலத்தை மேம்படுத்தி விடலாம் என புலிகள் கணித்தனர்.

புலிகள் கணிக்கத் தவறியது எதுவெனில் சமாதானத்தை முறித்துக் கொண்டது அரசே என வாதம் செய்வதற்கு அனைத்துலக அரசியல் ஒன்றும் பட்டிமன்ற மேடையல்ல. இதனை அனைத்துலக சமூகம் சமாதானத்தை முறிக்கும் புலிகளின் சதியால் விளைந்தது என்றே புரிந்து கொள்ளுவது மட்டுமல்ல, மேற்குலகில் நிகழ்ச்சி நிரலையும் குழப்பியதற்கான கோபத்தையும் இவ் ஆட்சிக்கவிழ்ப்பு ஏற்படுத்தும், இக் கண்கொண்டே அவை புலிகளைக் கையாளவும் தலைப்படும் என்பதையே.

யுத்தம் தொடக்கப்பட்டால் மேற்குலக எவ்வாறு அதைக் கையாளும்? யுத்தம் தொடர்ந்து இலங்கையில் இழுபடும் விவகாரமாக இருப்பது மேற்குலகின் நலன் அல்ல. எனவே யுத்தமே ஒரு கருத்துப் பரிமாற்றமாகி ஒரு பக்க வலுச்சமநிலையை நிரூபிக்க வேண்டும். புலிகள் யுத்தத்தில் வெற்றி முகம் கண்டால் புலிகள் தனிநாட்டுக் கொள்கையில் இருந்து இறங்கிவருவது நிர்ணயமாக சாத்தியமற்றுப் போகும்.

தனிநாடு அனைத்துலக நாடுகளுக்கு ஒத்திசைவானதல்ல. மாற்றுத் தீர்வுக்கு புலிகளைக் கையாள்வது மேலும் கடினமாகும். அதே நேரம் இத்தகைய சூழலில் இதனை விரும்பாத இந்தியாவையும் கையாள்வது கடினமாகும். இலங்கை அரசியலில் இனவாதிகள் தலையெடுக்க வழி செய்யும் தெற்கின் அரசியலைக் கையாள்வதும் கடினமாகும். எனவே மேற்கு புலிகளுக்கான தம் கதவுகளை மூடுவது மட்டுமல்ல தம்மறை கரம் கொண்டு புலிகளை முற்றுகையிடும். தாம் விரும்பாத அரசாங்கமேயாயினும் அதற்கு தம் மறுகரங்களால் ஆதரவு செய்யும்.

யுத்தத்தை இந்தியா எவ்வாறு கையாளும்? தமிழர்களின் தலைமைத்துவமாக புலிகள் இருப்பதையும் அத்தலைமையின் தீர்வு எட்டப்படுவதையும், மேற்குலக புலிகள் இதற்குள் இழுத்து வந்ததையும் விரும்பாத இந்தியா இந்த யுத்தத்தில் இலங்கை அரசு வெற்றி முகம் காண்பதையே விரும்பும். வெறும் விருப்பம் மட்டுமல்ல அதன் உடனடி நலனுமாகும். மேலும் ராஜபக்ச அரசாங்கம் இந்தியாவை அனுசரிப்பது தவிர்க்க இயலாது. எனவே ராஜபக்ச அரசாங்கத்திற்கு எல்லாவகையிலும் யுத்தத்திற்கு உறுதுணையாவதே இந்தியாவிற்கு இருக்ககூடிய தெரிவு.

இந்த யுத்தத்தில் சீனாவின் பார்வை என்ன? ராஜபக்ச அரசாங்கம் மேற்கின் கூட்டணியல்ல. ராஜபக்ச தன் அரசியலுக்காக சீனசார்புவெளியுறவுக் கொள்கையில் மேலும் இறங்கி வருவது தவிர்க்கவியலாதது.

இனவாதிகளின் இவ்வரசு யுத்தத்தில் இறங்கும் யுத்தம் இலங்கையை சீனாவின் பக்கம் அதிகமாக சாயவைக்கும். யுத்தத்தில் சீனாவுக்கான கதவுகள் இலங்கையில் மேலும் அகலத் திறக்கப்படும். சமாதானம் முறுகலடைந்த காலத்தில் சீனாவின் சில நவீனரக ஆயுதங்களின் கறுப்புச்சந்தை புலிகளுக்காக திறக்கப்பட்டது யுத்தத்தை ஊக்குவிக்க முயலும் சீனாவின் அரசியற்சதியே. யுத்தம் சீனாவிற்கு அவசியமானது ஆனால் யுத்தத்தில் சீனாவின் ஆதரவு இலங்கை அரசுக்கே.

ராஜபக்ச செய்யக்கூடியதும் வசதியானதும் அரசியல் யுத்தமே. யுத்தத்திற்கு சீனாவின் உதவி தாராளமாகக் கிடைக்கும் சீனாவின் நுழைவை விரும்பாத இந்தியா இலங்கை அரசுக்கு அதிக ஆதரவு காட்ட நேரிடும். இதனால் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான பேரத்தில் இலங்கையின் கை பலமாகும். இந்தியாவை யுத்திற்குள் இழுத்து விட்டால் வெற்றிக்கான பொறுப்பு இந்தியாவுடையதாகும். ராஜபக்ஷ அரசாங்கத்தின் பாதுகாப்பும் இந்தியாவுடையதாகும்.

மேற்கு புலிகளின் போர் வெற்றி முகத்தை விரும்பாது புலிகளைப் பலவீனப்படுத்த மேற்கு தன் மறைகரங்களைப் பயன்படுத்தும். ஆக யுத்த அரசியல் தனக்கு தோல்வி தராது என ராஜபக்ச புரிந்து கொண்டார்.

ஆனால் விடுதலைப்புலிகளின் சாணக்கியத்தவறு முழு உலகையும் ஏறத்தாள எதிரணியில் நிறுத்தி போரைத் தொடங்கியது அரசியற் தற்கொலைத் தீர்மானமாகிற்று.

தொடரும்..

http://www.puthinappalakai.com/view.php?20130710108642

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 18
[ திங்கட்கிழமை, 15 யூலை 2013, 07:36 GMT ] [ புதினப் பணிமனை ]

 

இன்று போய் போருக்கு நாளைவா எனச் சொல்லலாம் கேட்க முடியாது - குணா.கவியழகன்

யுத்தம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. புற அரசியல் யுத்தத்திற்குப் பாதகமாக இருந்தபோதும், புற அரசியல் யுத்தத்தில் எதிரிக்கே ஆதரவு தரும் என்று ஆகிவிட்டபோதும் கூட யுத்தம் நிச்சயிக்கப்பட்டு விட்டது.

இந்த யுத்தத்தில் அகப்பலம் ஒன்றே புலிகளுக்கு எஞ்சியிருந்த ஒரே ஒரு துணை சொந்த மக்கள். ‘மக்கள் யுத்தத்திற்கு சாதகமாக இருந்தாலேயொழிய யுத்தத்தின் வெற்றி நிச்சயமானதல்ல' என்பது ஒரு போரியல் விதியும் கூட. ஆனால் புலிகளின் முனைப்புக்கள் தம் சொந்தக்களப்பலத்தை மோசமாகச் சீரழிப்பதாகிற்று.

கிழக்கில் மட்டு அம்பாறைத் தளபதி கருணாவுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் கிழக்கின் படைபலம் கணிசமானளவு இழக்கப்பட்டு விட்டது. புலிகளின் ஆளணிப்பலத்தை மேம்படுத்தும் கிழக்கின் படைபலம் பெரும் பலவீனமாகிற்று.

தவிரவும் கருணா தப்பியோடி அரசியல் தஞ்சம் அடைந்ததும், அரசு கருணாவை அரசியல் இராணுவ விடயங்களில் இணைத்து இயங்க முடிவு செய்ததும் மேலும் சிக்கலாகிற்று.

இதனால் கருணா தன் பிரிவுக்கு பிரதேசவாதத்தை காரணமாக கற்பிக்கவும் பிரதேசவாதத்தை தூண்டவும் முடிந்தது. போராட்டத்தில் கிழக்கு அரசியல் பலவீனமாகிற்று கிழக்கு மக்கள் குழப்பத்திற்குள்ளாகினர். அமைப்புக்குள்ளும் படைசார் பலவீனம் மட்டுமல்ல உளவியல் பலவீனமும் வருவாகிற்று.

சந்திரிக்கா அரசாங்கம் முன்னெடுத்த வன்னிப்போர் காலத்தில் உக்கிரமானதும் மீகநீண்ட தொடர் சமரிலும் புலிகள் முகம்கொடுத்து இறுதி வெற்றியை தமதாக்கினர். வரலாற்றில் இது ஓர் அசாத்திய வெற்றி, படையியல் சாதனை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்த யுத்தத்தில் ஒப்பீட்டு ரீதியில் புலிகள் போதிய மரபுப்போருக்குரிய ஆயுத வளத்தையோ, ஆளணி வளத்தையோ கொண்டிருக்கவில்லை. புலிகளிடமிருந்த நூதனமான போர்த்தந்திரோபாயமே புலிகளின் பிரத்தியேக பலமாயிற்று. இல்லாத ஆயுத ஆட்பல இடைவெளியை புரிந்து கொள்ள முடியாத புலிகளின் போர்த்தந்திரமே இட்டுநிரப்பி வெற்றியைப் பெற்றுத் தந்தது.

அப்பாதுகாப்புச் சமரின் ஒருங்கிணைப்பு கட்டளைத் தளபதியாகவும் புலிகளின் பிரதம தளபதிகளில் ஒருவராகவும் இருந்த கருணா இப்போது அரச அணியில் அங்கம் வகிக்கின்றார். அவரின் துணை கொண்டு பல முடிச்சுக்களை அரசால் அவிழ்க்க இப்போது முடியும்.

மரபு சார் போர் கற்கை நெறிகளுக்கு உட்படாததும் மரபு சார் போர் அறிவினால் புரிந்து கொள்ள கடினமானதுமாக இருந்து புலிகளின் போரியல் உத்தி கருணாவினால் முடிச்சவிழ்க்கக் கூடியதாகிற்று.

எனவே புலிகளின் நூதன பலத்திற்கு எதிராக வியூகம் அமைப்பது இப்போது அரசபடைகளுக்கு கடினமானதல்ல. விநியோகங்களுக்கு ஏற்பட்ட முற்றுகையால் ஆயுதபலமும் இன்றி, ஆட்பலமும் போதியளவின்றி இருந்த நிலையில் பிரத்தியேக போர் நுணுக்கமும் பலம் இல்லை என்றாகியது.

கருணாவுடன் ஏற்பட்ட முரண்பாட்டை போராட்டத்தின் நன்மை கருதி தற்காலிகமாகவேனும் சீர்செய்து கொண்டிருக்க வேண்டியது அவசியமானது. புனிதங்களின் பேரால் பலவீனப் படுவதைவிட நலன்களுக்காக சமரசம் கண்டிருக்க வேண்டியது அவசியப்பட்டது. ஆனால் கெடு வாய்ப்பாக அது நிகழாமல் போயிற்து.

ஆட்பலத்தை மேம்படுத்தும் பொருட்டு புலிகள் தம் தளப்பிரதேசமான வன்னியில் கட்டாய இராணுவ சேவையை அறிவித்தனர்.

நடந்த சமாதானத்தில் புலிகள் மீதான முக்கிய குற்றச்சாட்டாக அனைத்துலகம் சிறுவர் ஆட்சேர்பையே முன்னிறுத்தியது. புலிகளுக்கு அங்கிகாரம் வழங்க புலிகள் சிறுவர் ஆட்சேர்ப்பை கைவிட வேண்டும் என வற்புறுத்தியது.

அனைத்துலக முரண்பாட்டுப் பட்டறிவில் சிறுவர் ஆட்சேர்ப்பைத் தடுத்தால் அரசு சார போராட்ட அமைப்பு பலவீனப்படும் என்பது அவற்றின் பட்டறிவு ஞானம். ஊலகளாவிய ரீதியில் அரசுகளே படைக்கு ஆட்சேர்க்கும் விடயத்தில் நெருக்கடிகளைச் சந்திக்கின்றன. இராணுவப்பள்ளிகளை நிறுவி சிறுவயதிலேயே அதற்குள் உள்வாங்கி பின் பதினெட்டு வயதில் படைப்பயிற்சியை அளித்து வருகின்றன வல்லரசுகள் கூட.

புலிகள் கட்டாய இராணுவ சேவையை அறிவித்தபோது சமாதானத்தின் இணைத்தலைமை நாடுகள் கூட எதிராக அழுத்தம் பிரயோகிக்கவில்லை அல்லது சமாதானத்திற்கு அனுசரணை வழங்கிய நாடுகள் மறைமுகமாக இதனை ஆதரித்தன. அவற்றின் அறிவில் தெரிந்திருந்தது கட்டாய படைச்சேவை சொந்த மக்களுக்குள்ளேயே போராட்ட அமைப்பு பகைமையடைந்தது பலவீனப்படும் என்று.

தாமாக வலையில் விழுந்தது போல் புலிகள் கட்டாய இராணுவச் சேவையை நடைமுறைப்படுத்த முனைந்து சொந்த மக்களின் பகைக்கு ஆளாகினர். களத்திலும் மக்களின் பகையை சம்பாதித்தனர்.

முன்னதாக வன்னிச்சமர்க் காலத்தில் குடிமக்கள் படையை உருவாக்கி ஆட்பலத்தை தேட முயன்ற போது மக்கள் பெருந்தொகையில் ஆயுதப்பயிற்சி பெற முன்வந்தனர். குடிமக்கள் படையான எல்லைப்படையில் பெருந்தொகையில் பங்களித்தனர். வலிந்த தாக்குதல்களிலும் குறிப்பிடக்கூடியளவு பங்காற்றினர். வன்னிச்சமரின் வெற்றியை குடிமக்கள் படையினரே தமது ஆட்பல நிரப்பீட்டால் ஒருவகையில் சாத்தியப்படுத்தினர். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகிற்று.

இப்படைச் சேர்ப்பால் கீழ்நிலைப் போராளிகளுக்குள்ளும் குழப்பம் உருவாகிற்று. தம் சகோதர, சகோதரிகள் வலுக்கட்டாயமாக போரிற்கு அழைத்து வரப்படுவது அவர்களுக்கு மனஅழுத்தத்தைக் கொடுத்தது. திரட்டப்படும் இப்படை எனவே இருக்கும் போராளிகளை விட பலமடங்கு பெரும்பான்மையை கெண்டிருந்தது. சிறுபான்மை போராளிகளால் பெரும்பான்மை கெண்ட இக்கட்டாயச் சேவைப் படையை கட்டுப்படுத்தி வழிநடத்துவதும் இயலக்கூடியதல்ல. புலிகள் படையின் எஞ்சிய மனோதிடம் இதனால் மோசமாகச் சீரழிந்தது.

யுத்தம் தொடங்கிய காலத்தில் அரசுப்படைகள் யாழ்ப்பாணத்தில் மோசமான இனந்தெரியாத கொலைகளை தொடர்ந்து செய்து யாழ்ப்பாணத்தின் குரல்வளையை நசுக்கியது.

புலிகளின் ஆதரவை எந்த வகையில் வெளிப்படுத்தினாலும் மரணம் உடனடியானது என்ற நிலை உருவாக்கப்பட்டது. இக் கொலைகளால் யாழ்ப்பாணம் கிலி கொண்டது. தவிரவும் கட்டாயச் சேவை கூட யாழ்ப்பாண மக்கள் மத்தியில் புலிகள் யாழ்ப்பாணத்திலும் இதனைத் தொடரக்கூடும் என்ற அச்சத்தை குறிப்பிடக்கூடியளவு தோற்றுவித்தது. புலம்பெயர் தமிழர்களுக்கும் புலத்தில் தமது குடும்பத்தினர் கட்டாயப் படைச்சேவைக்கு அழைக்கப்படுவதில் மனக்குழப்பத்தைத் தோற்றுவித்தது.

இப்படி தமக்கிருக்கக் கூடிய அகப்பலத்தை பலவீனப்படுத்தினர். புலிகள் கிழக்கின் படை வளத்தை இழந்தது, கிழக்கின் அரசியற்குழப்பம், யாழ்ப்பாணம் இயங்க முடியாமல் நசுக்கப்பட்டது, வன்னியில் மக்களிடம் தேடிய பகைமை, போராளிகளுக்குள் ஏற்பட்ட மனக்குழப்பம் மனோதிட வீழ்ச்சி, எல்லாவற்றிற்கும் மேலாக கருணா எதிர் அணியில் இருந்து புலிகளின் புரியாத இரகசியங்களை முடிச்சவிழ்த்தது என எல்லாம் இணைந்து எஞ்சிய அகப்பலத்தையும் பொருளற்றதாக்கியது.

அகப்பலம் புறப்பலம் எதுவுமற்று வெறுங்கையுடன் நிற்கும் புலிகள் யுத்தத்தின் மாற்றுவழிகளை தேடாமல் தாவீது மீண்டும் கோலியாத்தை யுத்தத்திற்கு அழைக்கும் செயலுக்கு உவமானம் ஆகினர்.

தொடரும்..

http://www.puthinappalakai.com/view.php?20130715108671

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 19
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 06:54 GMT ] [ புதினப் பணிமனை ]

மாற்றுவழிகளை பரிசீலிக்காத தாவீது தன் கூழாங்கற்களுடன் போரில் நின்றான் - குணா.கவியழகன்

அனைத்துலக சக்திகளுடன் உருவாக்கிக் கொண்ட அரசியல் பகை, ஆயுத விநியோகத்தைப் பெறமுடியாமை, சொந்த மக்களுடன் ஏற்பட்ட உறவு விரிசல், அமைப்புக்குள் ஏற்பட்ட குழப்பம், யுத்தத்தில் அனைத்துலக நாடுகள் எதிரணியில் நிற்க வேண்டியிருந்தமை, கருணாவால் முடிச்சவிழ்க்கப்பட்ட இரகசியங்களினால் காலாவதியாகிப் போன யுத்த தந்திரம் என எல்லாம் இணைந்து புலிகளை வெறுங்கையினராக ஆக்கியது.

எனினும் சமாதானத்தில் அச்சம் கொண்ட புலிகள் யுத்தத்தின் மூலம் அகப்பலத்தை மேம்படுத்திவிட முடியும் என்று நம்பிக்கை கொண்டனர். ஆயினும் மாற்றுவழிகளில் யுத்தத்தை முன்னெடுக்கவோ, அல்லது போராட்டம் அழிவை நோக்கும் இறுதித் தருணங்களில் போராட்டத்தைப் பாதுகாக்கத் தேவையான நகர்வுகளையோ மேற்கொள்வதில் போதிய அறிவை அல்லது முன் ஆயத்தத்தை புலிகள் கொண்டிருக்கத் தவறினர்.

மகிந்த அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வந்த புலிகள் யுத்தத்திற்கு திரும்பாமல் சமாதானத்தை தொடர்வதில் பற்றுறுதியோடு இருந்திருந்தால் மகிந்த நெருக்கடிக்குள் அகப்பட்டிருப்பார். அவர் யுத்தத்திற்கு முனைந்திருந்தால் மேற்கின் பகைக்கு ஆளாகியிருப்பார்.

ஜெனிவா-2 பேச்சை முறிக்கும் நிலைக்குப் போயிருக்காமல் தவிர்த்திருக்கலாம். புலிகளின் பேச்சுவார்த்தைக் குழு நோர்வேக்குச் சென்று குற்றம் சுமத்தி சமாதானத்தை முறிக்கும் தொனியில் தம் கொள்கை நிலைப்பாட்டை அறிவிக்கத் தேவையிருக்கவில்லை.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் ஒரு தற்செயல் தவறை தாம் இழைத்துவிட்டதாக ஒப்புக்கொண்டு மேற்குலக நிகழ்ச்சி நிரலோடு ஒத்துழைக்கும் அறிவிப்பை விடுத்திருக்கலாம். இதன் மூலம் மேற்குலகுடனான உறவை சீர்செய்து வளர்க்க முடியும். மேற்குலகு விரும்பாத மகிந்த அரசாங்கத்தை மாற்றுவதற்கோ, வழிக்குக் கொண்டுவருவதற்கோ புலிகள் அவசியம். எனவே மேற்குலகுடனான பேரம் மேம்படும். இதனால் அனைத்துலக உறவை மேம்படுத்தியிருக்கவும் மகிந்தவின் மேற்கு உறவை பலப்படுத்தியிருக்கவும் முடியும்.

சரி யுத்தம் தொடங்கப்பட்டுவிட்டது. தொடங்கப்பட்ட சில காலத்திலேயே கேந்திர மையங்கள் எதனையும் உடனடிக்குக் கைப்பற்றும் வாய்ப்பு இல்லை என்பதை கணித்திருக்க முடியும்.

ஐ.தே.க அனைத்துலக அரசியல் சக்திகளின் ஆதரவுடன் ஆட்சியைக் கவிழ்க்க காத்திருக்கிறது. மகிந்த ராஜபக்சவோ அரசாங்கத்திற்குள்ளும் குடும்ப அரசியலால் உட்பகையைக் கொண்டிருக்கிறார். மகிந்த யுத்தத்தில் வெற்றிமுகம் கண்டு அரசியலைப் பலப்படுத்துவதை ஐ.தே.க விரும்பாது. எனவே ஐ.தே.கவுடன் ரகசிய உடன்பாட்டிற்கு போயிருக்க முடியும். ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு தேவையான முயற்சிகளை தாம் எடுப்பதாகவும் ஐ.தே.கவை மீண்டும் பதவிக்குக் கொண்டுவர தயாராக இருப்பதாகவும் உறுதியளித்திருக்கலாம்.

அவ்வாறு முனைவதற்கு சித்தமாக இருந்திருந்தால் அனைத்துலக சமூகம் ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கு தேவையான அரசியல், பொருளாதார, ஊடக முயற்சிகளை தானே எடுக்க முன்வந்திருக்கும் ஐ.தே.கட்சியும் அகநிலையில் ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கு தேவையான விடயங்களில் ஒத்துழைத்திருக்கும். இத்தகைய ஒரு முயற்சியில் மேற்குலகு மற்றும் ஐ.தே.க ஆகியவற்றிக்கு எதிரான புலிகளின் பேரத்தையும் உயர்த்தியிருக்கும். அனைத்துலக நலன் சம்மந்தப்பட்ட இம் முயற்சிக்கு அனைத்துலகம் முனைந்து நின்றிருக்கும்

இவ்விடத்தில், ஏலவே ஒப்பந்தத்தில் காணப்பட்ட அம்சங்கள், குறித்த காலத்தில் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு உத்தரவாதத்தை பெற்றிருக்க முடியும். வடக்கு கிழக்கில் படைவிலகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு நிறைவேற்ற இப்பேரத்தை பயன்படுத்தியிருக்கலாம். ஐ.தே.க மற்றும் அனைத்துலக ஆதரவுடன் ஆட்சியைக் கவிழ்க்க தேவையான அரசியல் இராணுவ வெளி இருக்காமல் இல்லை.

இத்தகைய ஒரு நிகழ்ச்சி நிரலில் யுத்த வழியில் அணுகினால் கூட மேற்கினதும், ஐ.தே.கவினதும் ஆதரவு கிடைத்திருக்கும். ஆனால் புலிகளின் ஆதரவின்றி ஆட்சியைக் கவிழ்க்க அவர்களிற்கு எந்த வழியும் இருக்கவில்லை. யுத்தத்தின் சத்தமின்றி, ரத்தமின்றி கேந்திர நிலங்களில் தமது அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டியிருக்க புலிகளுக்கு வாய்ப்பிருந்தது. கெடுவாய்ப்பாக அது நிகழாமல் போயிற்று. அதுமட்டுமல்ல யுத்தத்தில் தனிமைப்பட்டு உலகின் முழுச் சக்திகளுக்கு எதிராகவும் களத்தில் போர்புரிய வேண்டியாயிற்று.

இப்போரில் அனைத்துலக சக்திகள் புலிகளின் ஆயுத விநியோகத்தை முற்றுகையிட்டு முறித்துவிட்டன. ஆட்பலமும் கிழக்கின் குழப்பத்தால் பலவீனப்பட்டது. போரின் தொடக்கத்தில் முகமாலையில் அரசபடைகள் ஆனையிறவைக் கைப்பற்றுவதற்காகவும், புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்காகவும் நடந்த முதற்சமரிலேயே மரபுசார் யுத்தத்திற்குத் தேவையான போதிய ஆயுத, ஆட்பல வளம் இன்றி யுத்தத்தில் வெற்றி முகம் காண்பது கடினம் என்பதைப் புரிந்து கொண்டிருக்க முடியும். எனவே மரபுசார் போர்முறைக்குப் பதிலாக யுத்தத்தில் மாற்றுத் தெரிவுகளை புலிகள் நாடியிருக்க வேண்டும். அதுவே பொருத்தமானதுங்கூட.

நாடளாவிய ரீதியில் சிவில் சமூகத்திற்கு உயிர்ச்சேதம் இன்றி கேந்திர முக்கியத்துவமான கொமாண்டோத் தாக்குதல்களை நிகழ்த்தும் போர் அணுகு முறையைப் புலிகள் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஏற்கனவே இத்தகைய சில தாக்குதல்கள் மூலம் புலிகள் தமக்கு அதில் உள்ள திறமையை வெளிப்படுத்தியும் இருந்தனர். இதற்கு புலிகளின் ஆயுத, ஆட்பலம் போதுமானதும் கூட.

தெற்கில் நிகழ்த்தப்படும் சிறு தாக்குதலும் பெரும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தும். தெற்கைக்கூட பாதுகாக்க முடியாத தலைவராக மகிந்த ஆகியிருப்பார். இதனால் அனைத்துலகமோ, ஐ.தே.காவோ மறைமுக உற்சாகம் அடையுமே தவிர எதிராக நிற்கப்போவதில்லை. பெரும் அரசியல் நெருக்கடிக்குள் அரசாங்கம் அகப்பட்டிருக்கும்.

கருணாவின் துணை கொண்டும் இத்தகைய தாக்குதலுக்கு பாதுகாப்பு வியூகம் அமைப்பது கடினம். இதில் அரசின் படைக்கவனம், பலம் தெற்கை நோக்கி திருப்பப்பட்டிருக்கும். இம்முயற்சி புதிய அரசியல் வெளிகளைத் திறந்திருக்கும். மேற்கு, மற்றும் ஐ.தே.க வுடனான ரகசிய உடன்பாடுகள் மேலும் வலுச்சேர்த்து வாய்ப்புவெளிகளைத் திறந்திருக்கும்.

மகிந்த அரசை தோல்வி அரசாக ஆக்கக்கூடிய வகையில் கொழும்பை நிலைகுலைய செய்யக்கூடிய போதிய மாற்று முயற்சிகளை புலிகள் கொள்ளவில்லை. அல்லது அதற்கான முன்னாயத்தங்களை புலிகள் செய்திருக்கவில்லை. நிகழ்த்தப்பட்ட ஓரிரண்டு தாக்குதல்கள் கூட போதிய அரசியலாக்கப்படவில்லை. இதனால் இத்தாக்குதல்கள் உதிரித் தாக்குதல்களாக ஆகியதே தவிர முழுமையான யுத்த முயற்சியின் பகுதியாகவில்லை.

எந்த ஒரு தாக்குதலும் முழுமையான யுத்த மூலோபாயத்தின் பகுதியாகவில்லை எனின், அது எந்த விளைவையும் காணமுடியாமல் அர்த்தமிழந்து போகும். விடுதலைப்புலிகள் மேற்கொண்ட சில தாக்குதல்கள் இவ்வாறே விளைவைப் பெற முடியாமல் அர்த்தமிழந்தன.

மல்லாவி, முழங்காவில் பகுதிகள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு கிளிநொச்சி ஏறத்தாழச் சுற்றிவளைக்கப்பட்ட நிலைமையில் அதுவரையான புலிகளின் பாதுகாப்புச்சமர் பொறிமுறை தோல்விகரமானது என்பதை உணர்ந்திருக்க முடியும். படையினரைத் திசைதிருப்பும் பொருட்டேனும் ஒரு வலிந்த தாக்குதலை புலிகளால் செய்ய முடியவில்லை.

இத்தருணத்தில் தான் பட்ஜெட் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்திற்கு வந்தது. ஆளுங்கட்சிக்குள் குடும்ப அரசியல் காரணமாக அகநிலைக்குழப்பங்கள் மேலோங்கியிருந்தன. ஜே.வி.பி இரு அணிகளாக பிரிந்தன. மகிந்தவுடன் இணைந்த விமல்வீரவன்ச அணியை அரசியல் தோல்விகாண வைப்பதற்காக சோமவன்ச அணி ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஊக்கம் கொள்ளும் என்பது யதார்த்தமானது. ஐ.தே. கட்சியிலிருந்து பிரிந்து ஆளுங்கட்சிகளுடன் இணைந்த ஜி.எல்.பீரிஸ், மிலிந்த மொறகொட அணியிலேயே அரசாங்கம் தொங்கி நின்றது. புலிகள் கூட்டமைப்பின் துணைகொண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்கு இவ்வணியினரைப் பயன்படுத்தியிருந்தால் ஆட்சியைக் கவிழ்க்க வாய்ப்பிருந்தது.

மேற்குலகுடனான உடன்பாடு ஒத்துழைப்பு, மற்றும் ஜ.தே.கட்சியுடனான ரகசிய உடன்பாடு இவ் ஆட்சிக்கவிழ்ப்புக்கு உறுதுணை வழங்கியிருக்கும். அவற்றின் பலமான இயலுமைகள் ஆட்சிக் கவிழ்ப்பைச் சாத்தியப்படுத்தியிருக்கும். ஆனால் மாற்று அணுகுமுறைக்கு அரசியல் வெளிகளைப் பயன்படுத்த புலிகள் முனையவில்லை. ஒருவேளை, ஒப்பந்தத்தை மீறி அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக நோர்வேயை வெளியேற்றி யுத்தம் செய்ததனால் யுத்தத்திற்கு முன்னான நிலைமைக்கு படைகள் பின்வாங்கப்பட வேண்டும் என்று விடுதலைப்புலிகள் வைக்கக்கூடிய கோரிக்கை கூட சாத்தியப்பட்டிருக்கும். ஆட்சி மாற்றத்தில் அனைத்துலகம் அத்தகைய கேந்திரமான நலனைக் கொண்டிருந்தது. ஆனால் புலிகள் அத்தகைய ஒரு அரசியல் வெளியை பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றியதும் அதுவரை அனைத்துலக சமூகம் யுத்தத்தை நிறுத்தி சமாதானத்திற்கு மறுபடி திரும்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டை மாற்றி புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானத்திற்கு வரவேண்டும் என அறிவித்தன. இந்தியாவும் இதே அறிவிப்பை விடுத்தது. இந்தியாவின் ஆதரவையும் பாதுகாப்பையும் பலமாகக் கொண்டு நடத்தப்பட்ட இவ்யுத்தத்தில் இந்தியாவும் மேற்குலகமும் ஒரு கோட்டில் சந்தித்த தருணம் இது.

கிளிநொச்சியும் இழக்கப்பட்ட நேரத்தில் யுத்தத்தில் சாதகமான புதிய திருப்பங்களை நிகழ்த்துவது சாத்தியமான ஒன்றல்ல என்பது புலிகளால் புரிந்துகொள்ளப்படாமல் இருந்திருக்காது. இத்தருணத்தில் அனைத்துலக சமூகத்தின் வேண்டுகோளுக்கு இணங்குவதாக அறிவித்து சமாதானத்திற்கு திரும்ப இணங்கியிருக்கலாம். யுத்தத்தை உடனடியாக நிறுத்த அதாவது படைகளின் மூர்க்கமான முன்னேற்றத்தை நிறுத்த இவ்வழி சிறந்த பாதுகாப்பு பொறிமுறையாக விளங்கியிருக்கும்.

சமாதானம் பற்றிய பேச்சு வார்த்தைகளில் உருவாகும் புதிய நிலைமைகளில் புதிய வழிகளைக் கையாண்டிருக்க பின்வரும் நிலைமைகள் உதவியிருக்கும். இத்தகைய வெளித்தரப்பு வேண்டுகோளுக்கான புலிகளின் பதில்கள் போதிய இராஜதந்திரத்துடன் அமையவில்லை. வறட்டுத்தனமான கௌரவங்களை காப்பாற்ற முனைந்த அணுகுமுறைகள் அவமானகரமான தோல்விமுகம் நோக்கிப் போராட்டத்தை கொண்டு சென்றது. அரசியல் வெளியில் கிடைத்த அரிதான ஒரு யுத்தப்பாதுகாப்பு பொறிமுறையை புலிகள் தவறவிட்டுவிட்டனர்.

இதற்கு கிளிநொச்சியைக் கைப்பற்றுவதோடு அரசாங்கம் படை நடவடிக்கையை நிறுத்திக்கொள்ளும். “ஏனெனில் புலிகளின் அழிவு இந்திய நலன்களை பாதுகாக்குமே தவிர சிங்கள பௌத்த நலன்களை அல்ல” என்ற புலிகளின் கணக்கு காரணமாயிருக்கலாம். வன்னியில் இருந்த புலிகளின் ஆதரவு பெற்ற அரசியல் அவதானியால் இக்கருத்து புலிகளுக்கு ஊட்டப்பட்டிருந்தது.

இந்தியாவே மகிந்த அரசாங்கத்தினதும், யுத்தத்தினதும் பாதுகாவலன். எனவே இந்திய நலன்கள் யுத்தத்தில் முக்கியமானவை. தவிரவும் மகிந்தவின் அரசியல் ஆளுமை ஒற்றைச் சிந்தனையுடையது. தன் வம்ச அரசியலை பாதுகாக்கும் பொருட்டு அரசியல் மூர்க்கம் கொண்டிருந்தாரே தவிர அரசியல் விவேகம் கொண்டிருக்கவில்லை. தவிரவும் சமாதானத்திற்குத் திரும்பினால் மேற்குலகு தன் ஆட்சியைக் கவிழ்க்காமல் விடாது என்பது திட்டவட்டமாக அவரிற்கு தெரிந்திருந்தது. இவற்றை புலிகள் சரியாக புரிந்துகொள்ளவில்லை.

தர்மபுரத்தை கடந்து படைகள் முன்னேறியபோது ஆனையிறவும் புலிகளால் கைவிடப்பட்டிருந்தது. யுத்தம் திகைப்பான ஒரு நெருக்கடியை புலிகளுக்கு தந்தது. இதன் பின்னரான நிலைமையில் வெல்லமுடியாத ஒரு யுத்தத்தில் புலிகள் இயங்கிக் கொண்டிருப்பதே யதார்த்தமாகிற்று.

வள்ளிபுனம், சுதந்திரபுரம் பகுதிகளை மக்களுக்கான பாதுகாப்பு வலயமாக அறிவித்த அரசு மக்களுக்கு பேரவலத்தையே அங்கு கொடுத்தது. நான்கு மாவட்ட மக்கள் அப்பகுதிக்குள் நெருக்கப்பட்டனர். இத்தகைய பாதுகாப்பு வலய அறிவிப்புக்கள், யுத்த தந்திர கண்கொண்டு அறிவிக்கப்பட்டதே தவிர மனிதாபிமானக் கண்ணோட்டம் எதுவும் இங்கு சிறிதளவேனும் இருக்கவில்லை. இது அரசாங்கத்திற்கு அரசியல் பரப்புரைக்கும் உதவிக்கொண்டது.

பீதிகொண்ட மக்கள் உயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டு தேவையற்று இடம்பெயர்ந்தனர். புலிகளாலும் இதனை தடுக்க முடியவில்லை. புலிகளின் தோல்விமுகம் மற்றும் அரசின் மக்கள் மீதான இரக்கமற்ற தாக்குதல் என்பவை மக்களை பாதுகாப்பு வலயம் என்ற மாயப் பிரதேசங்கள் மீது இடம்பெயர ஊக்குவித்தன. இதனால் படைத்தரப்பு மேலும் இலகுவாக பிரதேசங்களைக் கைப்பற்றி முன்னேற முடிந்தது.

பாதுகாப்பு வலயங்களில் மக்கள் படைத்தரப்பின் திட்டமிட்ட தாக்குதலால் மோசமான அழிவுகளைச் சந்தித்தனர். அங்கு ஒதுங்கிய மக்கள் அரசை நம்பவில்லை ஆனால் அனைத்துலக சமூகத்தை நம்பினர். இது ஓர் அப்பாவித்தனமான நம்பிக்கை என்பதை விளங்க மக்களுக்கு சக்தியிருக்கவில்லை.

கடைசியில் அதையும் கைவிட்டு தம் காவலர்களான புலிகளுக்கு பின்னால் ஓடினர். எஞ்சியிருந்த நிலப்பரப்பான இரணைப்பாலை மாத்தளன் பகுதியில் தஞ்சம் கொண்டனர். மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு மட்டுமல்ல தமிழ் மக்களின் முப்பது ஆண்டு போராட்டத்தைப் பாதுகாக்கும் பொறுப்பும் புலிகளிடமே இருந்தது. இத்தருணத்தில் யுத்தம் இறுதி நிலையிலும் இருந்தது.

இப்போது தான் இந்தியா புலிகளின் தமிழ்நாட்டு ஆதரவுத் தலைவர் ஒருவரூடாக தகவல் அனுப்பியது. இந்தியாவிடம் இருந்து என்ன உதவி வேண்டும் என்பதே அத்தகவல். அதாவது இந்தியாவின் பேராண்மையை புலிகள் ஏற்றுக்கொள்கின்றனரா? இல்லையா? என்பது தான் அதன் அரசியல் பரிபாசை. உணவும் மருந்தும் அவசரமாக வான்வழியாக கிடைக்க வழிசெய்யவும் என பதில் தகவல் அனுப்பியிருந்தால் இந்தியாவின் மேலான்மையை அங்கீகரிக்கிறோம். முன்னர் விட்ட தவறை திருத்திக் கொள்கிறோம் என்பதற்கான பரிபாசையாக அது அமைந்திருக்கும். கேடுகாலமாக புலிகள் அதனைச் செய்யவில்லை.

புலிகளின் அரசியல் தலைவர் ஐ.நா செயலாளருக்கு வணங்காமண் கப்பலை உதவி கொண்டுவர அனுமதிக்குமாறு அப்போது கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். இந்தியாவின் இத்தகவல்கள் புலிகளின் தலைவருடன் பகிர்ந்து கொள்ளப்படாமலே அரசியல் பொறுப்பாளரால் கையாளப்பட்டதாகவே சில தகவல்கள் மூலம் தெரியவருகின்றது. அரசியல் அறிவுச் சூனியத்துடன் அணுகப்பட்ட இந்தியாவுடனான தொடர்பாடல் இறுதி அழிவை நோக்கி மக்களையும், போராட்டத்தையும் தள்ளிற்று.

கடந்த அரை நூற்றாண்டில் இந்த உலகம் கண்டிராத யுத்த அவலத்தை, மனித அழிவை தமிழ் மக்கள் கண்டனர். உணவில்லாமல், மருந்தில்லாமல் மக்கள் வீணே இறந்தனர். உலகில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களால் மக்கள் உயிரழிவைச் சந்தித்தனர். மனிதாபிமானம் நாகரீக உலகில் அர்த்தமற்றதாகியது.

புலிகளின் இந்தியாவுடனான தவறான தொடர்பாடலால் மேற்குலகு யுத்தத்தை நிறுத்த ஏப்ரல் கடைசியில் எடுத்த முயற்சியை மகிந்த அரசு இந்தியாவின் துணை கொண்டு ஓரம் கட்டியது.

யுத்தத்தின் இறுதிவாரத்தில் தெருக்களில் பிணங்களும், மக்களும் அநாதைகளாக நின்ற இறுதி உப்பு நிலத்தில் காலம் இறுதி அரசியல் வெளியை புலிகளுக்கு வழங்கியது. ஐ.நா செயலாளர் யுத்தத்தில் அகப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டி அனைத்துலக சமூகத்தின் அழுத்தத்தை வழங்கிய போது அரசாங்கம் மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தாம் தயார் என பதில் வழங்கியது. கோத்தபாய இத்தவறை விட்டார் என்றே சொல்லலாம். புலிகளும் இதற்கு தாமும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றத் தயார் என அறிவித்திருந்திருந்தால் தலையிடக் காத்திருந்த அனைத்துலக சமூகத்திற்கு இந்தியாவையும் தாண்டி ஒரு கதவைத் திறந்திருக்கலாம்.

புலிகளின் இறுதி அழிவு பொருத்தமான தெரிவல்ல என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்த மேற்குலகத்திற்கு இக்கதவைத் திறந்துவிட்டிருக்க முடியும். மக்களை வெளியேற்றுவது என்ற பேச்சை மூன்றாம் தரப்பான அனைத்துலக சமூகத்துடன் தொடக்கி நிலைமைகளை வளர்த்துச் சென்றிருக்க வாய்ப்பிருந்தது. கேடுகாலம் இதனை உணரவோ, கையாளவோ கூடிய சூழலோ, அறிவோ இல்லாமல் புலிகள் திகைத்து நின்றனர்.

நந்திக்கடல் கரையில் எல்லாத் தவறுகளினதும் விளைவாக ஈழப்போராட்டம் ஆயுதவழிப் போரின் இறுதி அழிவைச் சந்தித்தது. இலட்சியத்திலிருந்து கடைசிவரை விலகாத நேர்மையுடனும் வீரத்துடனும் தலைவர் பிரபாகரன் வீழ்ந்தார் என வரலாறு தகவலாக்கிக் கொண்டது.

ஆனால் வரலாற்று அறிவு தமிழர்களை தம் பயண வழியை மறு பார்வைக்கு வற்புறுத்திற்று.


தொடரும்..
http://www.puthinappalakai.com/view.php?20130720108706

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 20
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 08:35 GMT ] [ புதினப் பணிமனை ]


அறிவையும் உழைப்பையும் விலையாகக் கேட்கிறது மூன்றாம் கட்டம் - குணா.கவியழகன்

முடிவுரை:


தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் கடந்த நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்த மாபெரும் ஆயுதப்போராட்டம்.

தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கு பல முன்னுதாரணங்களைக் கொடுத்த போராட்டம். தேசிய விடுதலைக்கான ஆயுதப் போருக்கு புதிய போர் உத்திகளை, நம்பிக்கைகளை கற்றுக்கொடுத்த போராட்டம்.

அரசியலில் பேரப்பலம் இல்லாதவிடத்து போர் வல்லமையை வளர்த்து பேரத்தை உருவாக்கிட முடியும் என்ற ஒரு நம்பிக்கையை கொடுத்தது ஈழப்போராட்டம் தான்.

போராட்டத்திற்கு எழும் அரசியல் இடையூறுகளை போர் வலிமையாலும் அதற்கான அர்ப்பணிப்புக்களாலும் கடந்திட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதும் இப்போராட்டந்தான்.

ஒரு உள்நாட்டுப் பிரச்சினையை போர்வல்லமையினால் அனைத்துலக பெறுமானத்திற்குக் கொண்டுவந்திட முடியும் என்ற யதார்த்தத்தை உருவாக்கியதும் விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் தான்.

அனைத்துலக அரசியல், விடுதலைக்கு எதிர்க்காரணியாகின்றபோது அது சமன் செய்யப்படாது விடின் அதன் எல்லா இயலுமைகளும் இரக்கமற்று முறியடிக்கப்பட்டுவிடும் என்பதை நவீன வரலாற்றில் கற்றுத் தந்த போராட்டமாகவும் இது அமைந்துவிட்டது.

இது இன்றைய உலகில் தேசிய விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்ற கேள்விக்கு விடைகாண்பதற்கான மறு ஆய்வுக்கு உட்பட்டிருக்கிறது.

தேசிய அரசுகள் உருவாகிய நவீன வரலாற்றில் ஒரு புதிய தேசம் உருவாவது அனைத்துலக அரசியல் காரணிகளால் நிர்ணயிக்கப்படுவதேயன்றி உள்நாட்டு அரசியற் காரணிகளால் அல்ல.

அனைத்துலக அரசியற் காரணிகள் உலகின் சக்திமிக்க நாடுகளின் நலன்களால் உருவாகும் உறவுகளினால் மலர்பவை. இவ்வுறவே உலகின் அரசியற் போக்கைத் தீர்மானிக்கிறது.

கொலணித்துவ நாடுகளாக இருந்து விடுதலை பெற்ற உலகின் எல்லா அரசுகளினதும் இனப்பரம்பல், தேச எல்லை என்பவை உலகை ஆதிக்கம் செலுத்தும் வல்லமை கொண்டிருந்த அரசுகளின் எதிர்கால நலன்களுக்கமைவாகவே உருவாக்கப்பட்டவை. இவற்றின் எல்லைகள் இனம், மொழி, கலாச்சாரம் என்ற எந்தவொரு அடிப்படையிலும் இயல்பாக முகிழந்தவையல்ல.

தன்னியல்பில் முகிழாததும் ஆதிக்க அரசுகளின் நலன்களுக்கமைவாய் வகுக்கப்பட்டதுமான இத்தேசிய அரசுகளின் எல்லைக்குள் தேசியப் பிணக்குகள் இருப்பது தவிர்க்க இயலாததே.
தேசிய இனங்கள் அழிக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் வருவதற்கான மூலகாரணி இத்தேசிய அரசுகளின் எல்லைகள் தன்னியல்பானவை அல்ல என்பதே.

உள்நாட்டு அரசியற் சூழலுக்கேற்ப இவைகள் நசுக்கப்படுவதன் விகித அளவீடுகள் மாறுபடலாம். பிணக்குகளின் தன்மையும் வேறுபடலாம். ஆனால் பிணக்குகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.

ஒடுக்கப்படும் இனம், அழிக்கப்பட்டுவரும் இனம் தன் விடுதலைக்காக போராடுவது இயல்பான பிரக்ஞையே. ஆயினும் தனித்துவமான ஒரு தேசத்தை உருவாக்குவது என்பது, உலக அரசியல் போக்கில் மாற்றம் நிகழ்ந்து, வல்லாண்மை நாடுகளின் நலன்களில் அத்தேசம் உருவாவதற்குரிய தேவை எழுந்தாலேயொழிய தேசிய விடுதலை சாத்தியமானதல்ல.

உருவாகிய புதிய தேசங்கள் எல்லாமே, மாற்றமுறும் உலக உறவுகளின் குழந்தைகளாய்த்தான் பிறந்தன. அவற்றின் உள்ளார்ந்த முயற்சிகள், இயலுமைகள் மட்டும் விடுதலையை ஒரு போதும் சாத்தியப்படுத்தியிருக்கவே இல்லை.

பனிப்போர் உலகப்போக்கின் முடிவோடு செங்கடலின் முக்கியத்துவம் கருதி எதியோப்பியாவிடம் இருந்து பிரித்து எரித்திரியா தனி நாடாக்கப்பட்டது.

சீனா போட்டித் தலைமைத்துவமாக தலையெடுத்துவரும் நிலையில், மேற்குலகினுடைய கீழைத்தேசப் பங்காளியான அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக் கருதி, பெரும் முஸ்லீம் நாடான இந்தோனேசியாவிடம் இருந்து கிழக்குதீமோர் பிரித்து தனிநாடாக்கப்பட்டு அவுஸ்திரேலியாவின் தடுப்பரணாக்கப்பட்டது.

மேற்கின் போட்டித் தலைமைத்துவ நாடுகள், ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்து ரஷ்யாவின் இராணுவ வலிமையை பயன்படுத்தி ஐரோப்பாவை அச்சுறுத்தக்கூடாது என்பதற்காக ஐரோப்பாவின தடுப்பரணாக கொசோவோ தனிநாடாக்கப்பட்டது. இவை கடந்த நூற்றாண்டில் இறுதி உதாரணங்கள்.

இவை எவற்றினதும் விடுதலை அந்நாடுகளின் உள்நாட்டுக் காரணிகளாலோ, போராட்ட அமைப்பின் இயலுமைகளாலோ தீர்மானிக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக உலகப்போக்கில் நிகழ்ந்த மாற்றங்களின் தவிர்க்கவியலாத பிறப்பாகவே உருவாகின.

ஒடுக்கப்படும் இனம் தன் உரிமையை நிலைநாட்ட அரசியலில் வேறு அரசியல் பேரம் இல்லாதவிடத்து வன்முறையைத் தெரிகிறது. வன்முறை ஒரு அரசியல் வடிவமாகிறது. இவ்வடிவம் பேரத்தை உருவாக்குவதற்கான மார்க்கமாகவே கொள்ளப்படவேண்டும்.

உள்நாட்டு அரசியல் சூழ்நிலைக்கேற்றவாறு உருவாக்கப்படும் பேரத்தின் அளவுக்கேற்ப அரசியல் அடைவுகளை அதாவது அரசியல் வெற்றிகளை போராட்டம் அடைந்து செல்ல வேண்டும். ஆனால் எந்தவொரு அடைவும் விடுதலையை நோக்கிய படிநிலையாகவே அமைய வேண்டும். இவ் அடைவுகள் விடுதலையை அடைவதற்கான மூலோபாயத்தின் பகுதி ரீதியான வெற்றிகளை கண்டு செல்ல வேண்டும்.

உலகப்போக்கில் விடுதலையை சாத்தியப்படுத்தக் கூடிய தருணம் வாய்க்கும் வரை தேசிய இருப்பை பலப்படுத்தவும், போராட்ட பிரக்ஞையை தக்க வைக்கவும், பேரப் பலத்தை மேம்படுத்தவுங்கூடிய அடைவுகள் முன்னோக்கிய பாதையே.

இவ்வாறல்லாமல் சொந்தப் பலத்தினால் மட்டும் தேசிய விடுதலையை அடையும் இலட்சியத்தோடு நடத்தப்படும் போராட்டங்கள் காலத்தால் நீர்த்துப்போகும் கதிக்கு ஆளாகும். அல்லது, உலகப்போக்கின் பாதகமான மாற்றத்தினால் போராட்டமே அழிவுக்குள்ளாகும் நிலைக்கு ஆளாகலாம். காரணம், விடுதலையை சாத்தியப்படுத்தக்கூடிய உலகப் போக்கின் மாற்றம் என்பது கால நிர்ணயமற்ற நீட்சிக்குரியது.

ஈழவிடுதலைப் போராட்டம் அக அரசியல் காரணிகளால் ஆயுதப்போராட்டமாக பரிணாமம் பெற்ற ஒன்று. ஆயினும் மிகச்சிறந்த போர்க் கட்டமைப்புடன் போரியல் பலம் பெற்று, அசாத்திய போர் வளர்ச்சி பெற்றபோதும் அது போராட்டத்தின் வளர்ச்சிப் படிகளை நோக்கத் தவறிற்று.

போரின் முன்னேற்றம், வளர்ச்சி மூலம் விடுதலையை சாத்தியப்படுத்தி தேசிய அரசை உருவாக்கிவிட முடியும் என்ற பிழையான கருத்தாக்கம் தமிழர்களிடையே வளர்ந்ததனால் போரின் வளர்ச்சி போராட்டத்தின் வளர்ச்சியாகப் புரிந்துகொள்ளப்பட்டது.

முப்பதாண்டுகளுக்கும் மேலான போராட்டத்தில் போராட்டம் முன்னோக்கிய வெற்றிகளைக் காண வாய்ப்பு வாய்த்தபோதும் போரின் வளர்ச்சி மூலமே இறுதி வெற்றியை காணமுடியும் என்ற தவறான கொள்கையினால் வாய்ப்புக்கள் கை தவறிப்போயின.

போருக்கான மனோநிலை சிதைவடையும், போரை வளர்ப்பதற்கான வாய்ப்புக்கள் அற்றுப்போகும், போரற்ற காலம் விரையமான காலமாகும் என்ற அச்சங்கள் போராட்டத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய படிநிலை வெற்றிகளை தவிர்க்க வைத்தன. அப் படிநிலைகளில் ஏறி முன்னேறுவதற்கான தீர்மானத்திற்கு துணிச்சலற்றும் போனது.

பல தடவைகள் தவறான இக்கொள்கைத் தீர்மானத்தினால் போராட்டம் மோசமாகப் பின்னோக்கிய போதும் போரை முன்னேற்றி அது போராட்டத்தின் முன்னேற்றமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் இத்தகைய சரிவுகள் தோல்விகளாக புரிந்து கொள்ளப்படாமலும் போயின.

கொள்கைக் கோளாறுகள் காரணமாக ஆயுதப்போராட்டத்திற்கு அவ்வப்போது வாய்த்த வளத்துணைகளை கருவிகளாக்கிக் கொண்டு முன்னேற முடியவில்லை. தெற்கின் அரசியல் முரண், இலங்கை - இந்திய முரண், அனைத்துலக தலையீடு ஆகியன இதற்கான உதாரணங்கள். மாறாக போராட்டந்தான் பலமுறை பலருக்கு கருவியாகி வலுவிழந்துபோனது. விடுதலைக் கூட்டணிக்கு, இந்தியாவிற்கு, பிறேமதாஸாவிற்கு, மேற்குலகிற்கு என இது தொடர்ந்தது.

சிறிய இனத்திற்கு இருக்கக்கூடிய சிறிய பலத்தைக் கூட போராட்டத்தின் தவறான கொள்கைக் கண்ணோட்டம் தன் பலவீனமாக்கிக் கொண்டது. தமிழ் மிதவாதிகள், மாற்று இயக்கங்கள், இஸ்லாமியமக்கள் தொடர்பான விடயத்தின் கொள்கைத் தளம்பல்கள் சொந்தப் பலவீனங்களாகின. மட்டுமல்ல எதிரிக்குப் பலம் சேர்த்தும் கொடுத்தன.

ஆயுதப் போராட்டம் எப்போதும் போராட்ட அமைப்பினுடையதாகவே இருந்து வந்தது. மக்கள் போராட்டத்தின் பங்காளர்களாக்கப்படவில்லை. மக்கள் போராட்டத்தின் வளத்துணையாக அவ்வப்போது பயன்படுத்தப்பட்டார்களேயொழிய பங்காளர்களாக அல்ல. இதனால் தேசியப் போராட்டத்திற்குரிய அடிப்படை பெறுமானமான தேசியப் பிரக்ஞை முழுமையடையவில்லை.

ஆயுதப்போராட்டத்தின் திறமையான போர்க் கொள்கை போரில் வெற்றிகளைத் தந்தன. ஆனால் தவறான அரசியல் கொள்கைகளின் விளைவால் போர் வெற்றிகள் அரசியல் வெற்றிகளைத் தரத்தவறின.

ஈழவிடுதலைக்குரிய அனைத்துலக புறநிலை இன்று வரை வாய்க்கவில்லை. எனினும் சுயநிர்ணயத்தை நோக்கிய தாயகம், தேசியம், அகநிலைச் சுயநிர்ணயம் என்பவற்றை அடைவதற்குரிய அனைத்துலகப் புறநிலையில் வாய்ப்புவெளி அவ்வப்போது வாய்த்தபோதும் கொள்கைத் தளம்பல்களால் அவை அடையப்படவில்லை. அல்லது அவ்வழியிலான முயற்சித்தல் புறந்தள்ளப்பட்டது.

அரசியல் அர்த்தத்தில் முன்னேறி பலம் பெற்று விடுதலைக்கு காத்திருக்க வேண்டிய போராட்டம் பாரதூரமாகப் பலவீனப்பட்டு இறுதியில் சுய அழிவுக்கு ஆளானது.

நீண்டகால அரசியல் கண்ணோட்டத்தோடு போராட்டம் தன் அரசியல் நண்பன் யார்? பகைவன் யார்? என அடையாளம் கண்டு, தனக்கான வெளியுறவுக் கொள்கையினை வகுத்து முன்னேறத் தவறியது. இந்தக் கொள்கைக் குழப்பமே இருந்த நட்புச் சக்திகளை பகைச் சக்திகளாக்கி இறுதி அழிவுப்பாதை வரை போராட்டத்தைக் கொண்டுபோனது.

ஒரு சிறிய இனத்தின்மீது அனைத்துலக வல்லரசுகள் ஒன்றுசேர்ந்து தம் மறைகரங்களால் போரிட்டு அழிய வைத்ததும் இதனாலேயே. சிங்கள அரசு உலகின் போர்த்தர்மங்களை மீறியும், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களால் குரூரமாக தாக்கியும் இனப்படுகொலை புரிந்து போராட்டத்தை நசுக்க முடிந்ததும் இதனாலேயே.

மறுவளத்தில், ஆயுதப் போராட்டம் முப்பதாண்டுகளுக்கும் மேல் தனக்கு எதிராக எழுந்த எல்லா வாய்ப்பற்ற சூழலையும் எதிர்த்துப் போராடி, தமிழ் மக்களின் போராட்டத்தை பாதுகாத்து நின்றமை வியப்புக்குரியதே. துணிச்சல், அர்ப்பணிப்பு, விலைபோகாத நேர்மை இவற்றின் மூலம் விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் போராட்டத்தை பாதுகாத்து போரில் முன்னேறி வந்தனர்.

கடந்த நூற்றாண்டின் இறுதிவரை, அரசியல் பாதகமான சூழல் குறுக்கீடு செய்யினும் போரில் பலம் பெற்று முன்னேறுவதன்மூலம் அப்பாதகமான அரசியல் சூழல்களைக் கடந்திட முடியும் என்பதற்கான ஒரு உலக முன்னுதாரணமாகக்கூட விடுதலைப்புலிகள் திகழ்ந்தனர். அசாத்திய போராற்றல் இதற்குத் துணைபுரிந்திடும் என்றே நம்பிக்கையை வளர்த்தது.

எடுக்கப்பட்ட தீர்மானங்கள் முன்னோக்குவதற்காகத் தான் எடுக்கப்பட்டன. எந்தத் தீர்மானமும் அநீதி இழைப்பதற்காக எடுக்கப்பட்டிருக்கவில்லை. ஆயினும், தீர்மானத்தில் நேர்மையிருந்தளவு அறிவார்த்தம் இருக்கவில்லை என இப்போது காலத்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே தவறுகள் நேர்ந்தன் அதற்காக அவை குற்றங்கள் ஆகிவிடா.

பாதைகள் கடந்துவிட்டபின்பே பயணத்தின் வழுக்களை மறு ஆய்வுக்குட்படுத்தி மனித சமூகம் முன்னேறிவந்திருக்கிறது. கற்றுக்கொண்ட பாடங்கள், அனுபவங்களிலிருந்து தவறுகளை அடையாளம் காண்பது குற்றம் காண்பதாகாது.

அனைத்துலக அரசியல் போக்கில் ஏற்பட்ட 2001ம் ஆண்டிற்குப் பின்னான திடீர் மாற்றத்தில் போராட்டம் தன்னை சமன்செய்வதில் தவறியது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பதாகையின் கீழ் முன்னெடுக்கப்பட உலக அரசியல் சூறாவளியில் போராட்டம் தன்னை நிலைப்படுத்த முயற்சித்த தீர்மானத் தவறு சமநிலையை வேரோடு அறுத்தது. மேற்குலகு, சீனா, இந்தியா என்ற முக்கோண சுற்றிவளைப்புக்குள் ஈழப்போராட்டம் மூழ்கடிக்கப்பட்டது. இதுவும் உலகப் போராட்டங்களுக்கான நவீன முன்னுதாரணமாயிற்று.

கொள்கை நேர்மையுடன் இறுதிவரை புலிகள் போரிட்டு தமிழ் மக்களின் போராட்டத்திற்கு அனைத்துலகப் பெறுமானத்தை உருவாக்கி, அனைத்துலக தலையீட்டைச் சாத்தியப்படுத்தி மடிந்து போனார்கள். அவர்களின் மகத்துவமான அர்ப்பணிப்பும் வீரமும் மாசற்றவை. நந்திக்கடல்வரை வீழ்ந்த உடல்கள் தமிழ்மக்களை நோக்கி “உங்களுக்காக நாங்கள் இங்கே வீழ்ந்துமடிகிறோம்” என்றே பறைசாற்றி நின்றன.

ஆரம்பகால தமிழ்மக்களின் சாத்வீகப் போரில் அரச ஒடுக்குமுறைதான் வெற்றிபெற்றது. சாத்வீகப் போர் தோற்றுப்போனது. ஆனால் அதன் போராட்டம் தோற்கவில்லை. ஒடுக்குமுறை பெற்ற வெற்றியே, ஆயுதப் போராட்டத்தை பெற்றெடுத்து அது வளர்வதற்குரிய அக - புறக் காரணிகளைத் தந்தது. இதுவே, பின்னாளில் தமிழ்மக்களின் போராட்டத்துக்கு அகப் பலத்தையும், போராட்டத்திற்கு அனைத்துலகப் பெறுமானத்தையும் பேரப்பலத்தையுங்கூட பெற்றுத் தந்தது. மிதவாதப் போரில் வென்ற அரச தரப்பு போராட்டத்தில் தோற்றுப் போன பாடம் இது.

இப்போது ஆயுதப் போரில் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள்; ஆனால் போராட்டத்தில் அல்ல. ஆயுதப்போர் தன் இயலுமைகளால், அர்ப்பணிப்புகளால் இறுதிப் பயணத்திற்கான முன்னேற்றப் பாதைகளை திறந்துவிட்டிருக்கிறது. மீதிப்பயணம் நிறைவேற வேண்டும்.

ஈழப்போராட்டத்தை அதன் பயணவழியின் அடிகொண்டு மூன்று கட்டங்களாக வகுக்கமுடியும்.

முதற்கட்டம், தந்தை செல்வாவினால் முன்னெடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்டம். அது தமிழர்களிடையே தேசிய பிரக்ஞையை உருவாக்கி விடுதலைக்கான அரசியல் விழிப்புணர்வைத் தந்து ஆயுதப்போராட்டத்தை முகிழ்க்க வைத்தது.

அதனிடம் ஓடுகோலைப்பெற்ற ஆயுதப்போராட்டம் தலைவர் பிரபாகரனால் முன்னெடுக்கப்பட்டது. இதுவே இரண்டாம் கட்டம். இவ்வாயுதப் போராட்டமே இலங்கை இனச்சிக்கலை அனைத்துலகப் பெறுமானத்திற்கு தரமுயர்த்தி, தமிழர்களுக்கு பேரப்பலத்தைத் தந்தும் உலக அரசியலை இலங்கை இனப்பிரச்சினையை நோக்கி குவியவைத்தும் போனது.

இந்த ஓடுகோலைப் பெற்று தொடர்ந்து ஓடவேண்டிய ராஜதந்திரப் போராட்டமே மூன்றாம் கட்டம். இரண்டாம் கட்டம் அர்ப்பணிப்பையும் இரத்தத்தையும் விலையாகக் கேட்டது. மூன்றாம் கட்டமோ அறிவையும் உழைப்பையும் விலையாகக் கேட்கிறது.

அரசியல் அறிவு கொண்டு, அனைத்துலக அரசியலில் உருவாகும் வாய்ப்பான காரணிகளைக் கையாளவும், தேவையான அகப்பலத்தை உருவாக்கவும், பொருத்தமான பொறிமுறைகளை கட்டமைக்கவும் தமிழீழப் போராட்டம் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

படிநிலை வெற்றியை அடைவது எதுவும் இலட்சியத்திலிருந்து விலகிப்போனதாகாது. ஆனால் எந்தவொரு வெற்றியும் இறுதி இலட்சியத்திற்கான மூலோபாயத்தின் பகுதி ரீதியான வெற்றியாக அமைய வேண்டும். இல்லையெனில் அரை நூற்றாண்டுப் போராட்டத்தை அரைக்காசுக்கு விற்ற கதியே நேரும்.

மூன்றாம் கட்டம் முடிவை நோக்கும் கட்டம். அனைத்துலக அரசியல் சக்திகளின் போட்டி இலங்கை அரசியலுடன் பின்னிப்பிணைந்து கிடக்கிறது. இனச்சிக்கலும் இந்தச் சக்திகளின் அரசியல் கருப்பொருளாகி உள்ளது. இவற்றிற்குள் தான் போராட்டத்திற்கான வாய்ப்புவெளி விரிந்துகிடக்கிறது. இதிலிருந்துதான் போராட்டத்திற்கான பயணவழியை கண்டுபிடிக்கவேண்டும். பேரத்தைப் பேணுவதற்கான அகப்பலத்தை மேம்படுத்த வேண்டும். கூட்டாளுமையையும் கூட்டு முயற்சியையும் மூன்றாம் கட்டம் முன் நிபந்தனையாக்கியுள்ளதை புரிந்துகொள்ளவும் வேண்டும்.

இறுதிச் சுற்றின் ஓட்டக்கோலைத் தாங்கி தமிழர்கள் வெற்றிகரமாக ஓடினால், ஓடுவதற்கான தலைமை சரியாக வழங்கப்பட்டால், இறுதிப் பயணத்தில் தமிழர் போராட்டம் வெற்றியை நோக்கும். அப்போது, சிங்கள பௌத்த இனவாத அரசின் இன்றைய போர் வெற்றியே நாளைய அரசியல் தோல்வி ஆவதை வரலாறு காலம் கடந்து கற்பிக்கும்.

தொடர் நிறைவுற்றது.

http://www.puthinappalakai.com/view.php?20130724108729

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தொடரைப் பலர் படித்திருப்பார்கள் என்றே நினைக்கின்றேன். சிலவேளை நீண்ட கட்டுரைகளாக இருப்பதால் உள்ளடக்கம் புரியாமலும் இருக்கலாம்.

 

கவியழகன் புலிகள் அமைப்பில் இருந்தபோது அரசியல் தவறுகளைச் சரி செய்ய முனைந்தாரா அல்லது பேசாமல் இருந்தாரா என்பதெல்லாம் தெரியாது.  சிலவேளை எங்களைப் போலவே விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்று தனி நாடு கிடைக்கும். அதன் பின்னர் உள்ளக அரசியல் விழிப்புணர்வைப் பார்க்கலாம் என்று இருந்திருக்கலாம்.

 

அரை நூற்றாண்டுப் போராட்டத்தை அரைக் காசிற்கு விற்றுவிட்டார் என்று இருக்கும் பட்டங்களில் ஒன்றை அவருக்கு வழங்கிக் கெளரவிக்கலாம் என்று சிலர் யோசிக்கலாம். ஆனால் அதற்கு முன்னர் இந்த நீண்ட கட்டுரைத் தொடரைப் பொறுமையாகப் படித்தால் சிலவற்றைப் புரிந்துகொள்ளலாம். அதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.