Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வராலற்று சிறப்பினைச் பதிவு செய்த தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு !

Featured Replies

  வராலற்று சிறப்பினைச் பதிவு செய்த தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு !

[saturday, 2013-05-25 17:43:54]
tgte-250513-seithy-150.jpg

ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெரும் வராலற்று சிறப்பினைச் பதிவதாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் அதனையொட்டிய இடம்பெற்றிருந்த மாநாடும் அமைந்திருந்ததென மாநாட்டின் செயற்குழு தனது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டு செயற்குழுத் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : அடிமை ஒழிப்புக்குக் குரல் கொடுத்த பெருமகன் திரு. 'தாடுஸ் ஸ்டீவன்சன்' அவர்களின் பிறப்பிடமாகிய அமெரிக்காவின் பென்சில்வேனிய மாநிலத்தின் லாங்காஸ்டர் நகரில் தமிழீழசுதந்திர சாசனம் மே-18மம் நாள் சனிக்கிழமை (18-05-2013) உணர்வெழுச்சியுடன் முரசறையப்பட்டது.

'தமிழீழ தேசம்' எனும் கோட்பாட்டை நன்கு வலியுறுத்தும் கொள்கைகளின் அடிப்படையில், பாரம்பரிய வரலாற்றுத் தகமையில் தமிழீழ மக்களுக்கு உள்ள தன்னாட்சி உரிமையினை, இறைமையை வலியுறுத்தும் இருபத்தியொரு பிரிவுகளைக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனத்தினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் முரசறைந்தார். தமிழீழ ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேற்சபைஉறுப்பினர்கள் எனப் பல்வகைப் பேராளர்கள் முன்னிலையில் தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது.

இந்தியா, அவுத்திரேலியா, ஐரோப்பா, பிரித்தானியா, கனடா, அமரிக்கா, தென் சூடான் வங்கதேசம் என உலகின் பல பாகங்களிலுமிருந்து பல்வேறுதுறை சார் அறிஞர் பெருமக்கள் பலரும் இவ்வரலாற்ற நிகழ்வில் பங்கெடுத்து கொண்டிருந்தனர். சுதந்திர சாசன முரசறைவின் போது வங்க தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவரும், 'முக்தி பாகினி' போராட்ட இயக்கத்தின் மூளை என வர்ணிக்கப்பட்டவருமான கலாநிதி நூரான் நபி அவர்கள் தமிழீழ விடுதலைக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து உரை ஆற்றினார். மேலும், அமரிக்காவின் முன்னைநாள் சட்டத்துறை நாயகமாக விளங்கிய மதிப்புக்குரிய திரு.இராம்சே கிளார்க அவர்களும் தென் சூடான் நாட்டின் பிரதிநிதியாக அதன் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னை நாள் போராளியுமான மதிப்புக்குரிய திரு.டானியல் மாயன் அவர்களும்தமிழீழ விடுதலைக்கான தங்கள் ஆதரவைத் தெரிவித்து சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்த சுதந்திரசாசன முரசறைவினை மையமாக கொண்டு இடம்பெற்றிருந்த முன்நிகழ்வு மாநாட்டில் உலகின் பல பாகங்களிலிருந்து வந்திருந்த வளஅறிஞர்கள் பலரும் தமிழீழ சுதந்திரத போராட்டத்தினை மையமாக கொண்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்திருந்தனர். பேராசிரியர்கள் ஜோசெப்அல்கவுத் (ஜேர்மனி), பீட்டர் சால்க்(சுவீடன்), சொர்ணராஜா(இலண்டன்), டேவிட் சுந்தா(இலண்டன்), வைத்திய கலாநிதி பிரையன் செனவிரட்னா (அவுத்திரேலியா), பிரடரிக் பப்பானி(பிரான்சு) சிறிஸ்கந்தராஜா(சுவீடன்), சந்திரகாந்தன்(கனடா), டேவிட்மத்தாஸ்(கனடா), இந்திய நாட்டைச் சேர்ந்த பேராசிரியர்கள்மணிவண்ணன், பால் நியுமான், திருமதி சரஸ்வதி,திரு.செய்ப்பிரகாசம்ஆகியோருடன்,பிரித்தானியாவைச் சேர்ந்த ஜெம்ஸ் சம்மேர்ஸ், கனடா நாட்டைச் சேர்ந்ததிரு. தங்கவேலு, திருமதிகள் சிறிதாஸ், உஷா சிறிஸ்கந்தராஜா, வைத்தியகலாநிதி நிம்மி கௌரிநாதன் எனப் பல வளஅறிஞர்கள் உள்ளடங்குவர்.

தமிழீழ சுதந்திர சாசனத்துக்கு வலுவூட்டும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த ஆய்வுகளின் கருத்துபரிமாற்றங்கள் இடம்பெற்றிருந்தன. அனைத்துலக மட்டத்தில் சட்டத் துறையில் புகழ்பெற்றவரும், இன அழிப்புக்கு எதிராக உலக நீதி மன்றில் போராடி வெற்றிகண்டு வரும் சட்ட வல்லுனருமாகிய திரு.பிரான்சிஸ் பொயில் அவர்கள் கலந்து பல ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கிச் சிறப்பித்திருந்தார்.

இவ்வாறு தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டு செயற்குழுத் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tgte-250513-seithy%20(1).jpg

tgte-250513-seithy%20(2).jpg

tgte-250513-seithy%20(3).jpg

tgte-250513-seithy%20(4).jpg

tgte-250513-seithy%20(5).jpg

tgte-250513-seithy%20(6).jpg

tgte-250513-seithy%20(7).jpg

நாதம் ஊடகசேவை

http://www.seithy.com/breifNews.php?newsID=83510&category=TamilNews

  • கருத்துக்கள உறவுகள்
 
பருத்தித்துறை ஊராம்
 பவளக்கொடி பேராம்
 பாவை தன்னை ஒப்பாள்
 பாலெடுத்து விற்பாள்
 
 அங்கவட்டோர் நாளில்
 அடுத்த கதை கேளீர்
 சந்தைக்குப் போம்போது
 தான் நினைத்தாள் மாது
 
 பாலை இங்கு விற்பேன்
 காசைப் பையில் வைப்பேன்
 முருகரப்பா வீட்டில்
 முட்டை விற்பாள் பாட்டி
 
 கோழி முட்டை வாங்கி
 குஞ்சுக்கு வைப்பேனே
 புள்ளிக் கோழிக்குஞ்சு
 பொரிக்குமிரண் டஞ்சு
 
 குஞ்சுகள் வளர்ந்து
 கோழியாகும் விரைந்து
 வெள்ளை முட்டை இடுமே
 முட்டை விற்ற காசில்
 
 சரிகைச் சேலை சட்டை
 மாதுளம்பூத் தொப்பி
 வாசனை செருப்பு
 வாங்குவேனே விருப்பு
 
 அரியமலர் பார்ப்பாள்
 அம்புஜமும் பார்ப்பாள்
 பொற்கொடியும் பார்ப்பாள்
 பூமணியும் பார்ப்பாள்
 
 சரிகைச் சேலை பாரீர்
 தாவணியைப் பாரீர்
 பாரும் பாரும் என்று
 பவளக்கொடி நின்று
 
 சற்றுத் தலை நிமிர்ந்தாள்
 தையல் என்ன செய்வாள்
 பாலும்மெல்லாம் போச்சு
 பாற்குடமும் போச்சு

யாரங்கே நாடு கடந்த அரசால் ஆகக் குறைந்தது ஒரு பருப்பையாவது வாங்கிக் கொடுத்து உதவப்பட்ட வன்னி மக்களது விபரத்தினையும் போராளிக் குடும்பம் ஒன்றின் பெயரையும் கொண்டு வந்து காட்டுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசு உருவான போதிலிருந்து அதற்கு என்னால்ஆன உதவிகளை  செய்து வருகின்றவன் என்ற ரீதியில் ஒரு கருத்தை வைக்கலாம் என்று  எழுதுகின்றேன்.

நான் ஒரு புலி ஆதரவாளன்  அத்துடன் ஒருங்கிணைப்புக்குழுவைச்சார்ந்தவன்.

ஆனாலும் நாடு கடந்த அரசுக்கு  ஆதரவு அளிக்கக்காரணம்

இன்னொரு வழியைத்திறக்கணும்

எல்லோரையும் அரவணைக்கணும்

மாற்றுக்கருத்தாளர்களும் சேர்ந்து செல்ல ஒரு வழி பிறக்கணும் என்பதே.

நாடு கடந்த அரசுக்கு சிறீலங்கா அரசைவிட

நாம் அதிலும் ஒருங்கிணைப்புக்குழு என்பன செய்த தடங்கல்கள் ஒருபுறமிருந்தாலும்

மற்றவர்கள் எல்லோரும் சேர்ந்து இதை ஒரு பெரும் ஐனநாயக  அமைப்பாக  கட்டி வளர்ப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால்

அவர்களும் அதை இழுத்து விழுத்துவதற்கும்  நொண்டிச்சாட்டுக்கள் சொல்லி வெளியில் நின்று பாடம் எடுப்பதற்கு மட்டுமே பாவித்துக்கொண்டார்கள். கொள்கிறார்கள்.

இவற்றையும் தாண்டி ஒரு வழியாலும் ஆதரவுக்கரமற்று ஒரு அமைப்பு பகைகளை மட்டுமே சமாளித்தபடி எவ்வாறு முன்னேற முடியும்?? எவ்வாறு எதையாவது சாதிக்கமுடியும்??? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறை ஊராம்
 பவளக்கொடி பேராம்
 பாவை தன்னை ஒப்பாள்
 பாலெடுத்து விற்பாள்
 
 அங்கவட்டோர் நாளில்
 அடுத்த கதை கேளீர்
 சந்தைக்குப் போம்போது
 தான் நினைத்தாள் மாது
 
 பாலை இங்கு விற்பேன்
 காசைப் பையில் வைப்பேன்
 முருகரப்பா வீட்டில்
 முட்டை விற்பாள் பாட்டி
 
 கோழி முட்டை வாங்கி
 குஞ்சுக்கு வைப்பேனே
 புள்ளிக் கோழிக்குஞ்சு
 பொரிக்குமிரண் டஞ்சு
 
 குஞ்சுகள் வளர்ந்து
 கோழியாகும் விரைந்து
 வெள்ளை முட்டை இடுமே
 முட்டை விற்ற காசில்
 
 சரிகைச் சேலை சட்டை
 மாதுளம்பூத் தொப்பி
 வாசனை செருப்பு
 வாங்குவேனே விருப்பு
 
 அரியமலர் பார்ப்பாள்
 அம்புஜமும் பார்ப்பாள்
 பொற்கொடியும் பார்ப்பாள்
 பூமணியும் பார்ப்பாள்
 
 சரிகைச் சேலை பாரீர்
 தாவணியைப் பாரீர்
 பாரும் பாரும் என்று
 பவளக்கொடி நின்று
 
 சற்றுத் தலை நிமிர்ந்தாள்
 தையல் என்ன செய்வாள்
 பாலும்மெல்லாம் போச்சு
 பாற்குடமும் போச்சு

யாரங்கே நாடு கடந்த அரசால் ஆகக் குறைந்தது ஒரு பருப்பையாவது வாங்கிக் கொடுத்து உதவப்பட்ட வன்னி மக்களது விபரத்தினையும் போராளிக் குடும்பம் ஒன்றின் பெயரையும் கொண்டு வந்து காட்டுங்கள். 

யாரங்கே.. இன்றும் தன்னம்பிக்கை இழக்கச் செய்யும் இப்படியான பவளக் கொடி பாடல்களைக் காவித்திரிவோரை முதலில் டக்கிளசிடம் சொல்லி சிறீதர் தியேட்டரில் காவல் கடமையில் போடுங்கள்..!

பவளக் கொடி பாடல் பாடத்திட்டத்தில் இருந்து ஒரு காலத்தில் நீக்கப்பட்டது. காரணம்.. அது தன்னம்பிக்கையை பிள்ளைகள் மத்தியில் வளர்க்கத் தவறுவதாகச் சொல்லி. அதன் பின்னர் அது பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவே இல்லை.

நா.க.த.அ வன்னி மக்களுக்கு மட்டுமல்ல.. முழுத் தமிழீழ மக்களுக்கும் சேவையாற்றி வருகிறது. வரும். பருப்பும்.. பாமாயிலும் கொடுப்பதல்ல அதன் வேலை. வன்னியில் காடு வெட்டிறவன்... மண்ணள்ளுறவனே மக்களை எதிரியிடம் மண்டியிட வைச்சிட்டு தான் வெள்ளை ஜிப்பாவில் அலைகின்ற போது... நாடு கடந்து நின்றும்.. மக்களின் எண்ணங்களை தமதாக்கி போராடும் இவர்கள் எவ்வளவோ மேல். பருப்புப் போடாவிட்டாலும் பறுவாயில்லை.. அந்த மக்கள் பறிகொடுத்த பிள்ளைகளின் கனவைச் சிதைக்காமல் இருப்பதுவே மேல்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

புலிகேசிகள் விட்டபாடில்லை :icon_mrgreen:

  • தொடங்கியவர்

புலிகேசிகள் விட்டபாடில்லை :icon_mrgreen:

அந்த லட்டை திண்ட எந்த கண்ணன்தான் பிறகு ஒருநாள் திருந்தி நடந்தவன்? அது கண்ணன்களில் அல்ல பிழை. அந்த லட்டை சுட்டவரில் இருந்த பிழை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகேசிகள் விட்டபாடில்லை :icon_mrgreen:

தனது கருத்தில் இருக்கின்ற நியாயத்தின் பெறுமதியைவிட, செவிகொள்பவர்களிடம் அந்தக் கருத்துக்கு கிடைக்கும் நம்பகத்தன்மையின் பெறுமதி பெரிதாய் இருக்க வேண்டும் என்று கவலைப்படாத 'சிந்தனை' ஒரு பைத்தியக்காறப்  பட்டத்தை வாங்க சிறப்பான தகுதியினைக் கொண்டிருக்கின்றது என்று பொருள்!

  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்தக் காலத்தில் புலிகளால் உருவாக்கப்பட்ட இடைக்கால நிர்வாக வரைபு காணாமல் போனதுபோன்று இந்த சுதந்திர சாசனமும் கிடப்பில் போகாது என்பதற்கு என்ன உத்தவரவாதம் கொடுக்கப்பட்டிருந்தது? சாசனத்தில் சொல்லப்பட்டவைகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை அடையாளம் காண்பதற்கான திட்டங்கள் ஏதாவது உள்ளதா?

சிலவேளை அடுத்த வருடம் மே 18 இல் மீண்டும் தூசு தட்டப்படலாம் என்றுதான் நினைக்கின்றேன்.

சட்டப்பக்கத்தை பற்றி அவ்வளவு விளக்கமில்லை. ஆனால் சாசதனத்தை படிக்கும் போது, அது பிரதானமாக இராஜதந்திர நடவடிக்கைக்குதான் தேவையானது போலிருக்கு. அதாவது தமிழர்கள்தான் முன்னல் வந்து பிரசாரத்தை ஆரம்பிக்க வேண்டும். ஆனாலும் நா.க.அரசு தனது செயல் திட்டங்களை மக்களுக்கு அனுப்பி வைக்க வழிகளை கண்டு கொள்ள வேண்டும். 

சாசனத்தின் தன்மை இப்படி இருக்கிறது போலிருக்கு:

ஒரு சினிமா டைரக்டரிடம் ஒரு படத்துக்கான கதை இருக்கிறது. அவருக்கு அந்த படத்தை தயாரிக்க விருப்பம். ஆனால் அவரிடம் எதுவும் இல்லை. பணம் நடிப்பு, பாடல்கள், செட்டுகள், உதவிகள் எல்லாமே தேடப்பட வேண்டியவையே.  எத்தனை பேர் இந்த உதவிகளை வழங்க முதல் கதையை முழுவத்தாக படிக்க தயாராக இருப்பார்கள்?. அதற்காக கதையுடன் டைரக்டர் ஒரு சிறு சுருக்கத்தையும் எழுதி இணைத்திருந்தார். இப்போது டைரக்டர் உதவி தேடி செல்லும் போது, முழுக் கதையையும் படிக்க வேண்டியதேவை யாருக்கும் ஏற்படாது. அவர்கள் சுருக்கம் தமது எண்ணத்தோடு ஒத்துவந்தால், தொடர்ந்து கதையை படிபார்கள், அல்லது படிக்காமலே உதவுவதா அல்லது மறுத்துவிடுவதா என்று தீர்மானிப்பார்கள். இதனால்த்தான் நாடுகளிடம் சென்று உதவி கேட்க முதல் தமது நாடு வருங்காலத்தில் எப்படி இருக்கும் என்றதை அறிவிக்க இப்படி ஒரு சாசனம் தேவையாக இருக்கிறது, அதன் மதிப்பு அதை மக்கள் ஆதரிக்கும் பங்க்கில்தான் உயரும். அதை எடுத்து செல்லும் இடங்களைப்பொறுத்து உதவி கிடைக்கும்.

எனவேதான் எடுத்து செல்லும் பாதையை தெளிவாக்கும் பொறுப்பு  நா.க.அரசுக்கு இருக்கு. அதை எடுத்து செல்வது நமது பொறுப்பு.

இதற்கே வேறொன்றும் செய்யாமல் நாலு வருடங்கள் எடுத்துள்ளனர்!

ம்.....  வரலாற்றுச் சிறப்புத்தான்!!!   :lol:

  • தொடங்கியவர்

இதற்கே வேறொன்றும் செய்யாமல் நாலு வருடங்கள் எடுத்துள்ளனர்!

ம்.....  வரலாற்றுச் சிறப்புத்தான்!!!   :lol:

நீங்கள் அவர்களுடன் கையெழுத்துபோட்ட ஒப்பந்தத்தில் எவ்வளவு காலம் கொடுத்திருந்தீர்கள் ?

அவங்க உப்பிடித்தான். பிழை விட்டிருந்திருக்கலாம்.  கண்டால் சொல்லிவிடுகிறன் நீங்கள் ஒப்பந்தத்திலை  கையெழுத்து போட்டுவிட்டு இப்போ கவலைப் படுகிறீர்கள் என்று. <_<

பெரிய கதை பேசி அறிவைக்காட்டுவதை விட இதுவரையில் எதையும் ஒழுங்காக எழுதி இல்லை. :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.