Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் அரசியலை திரும்பிப் பார்த்தல் - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அரசியலை திரும்பிப் பார்த்தல் - யதீந்திரா

 

 

aa3f1520-64d6-46c8-83a6-9a78ee8406f51.jp

 

 

 

இன்று வடக்கு மாகாணசபை தொடர்பிலான விவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற சூழலில், இத்தகையதொரு தலைப்பு மிகவும் பொருத்தமான ஒன்றாக அமையக் கூடும். எனினும், இது மிகவும் விரிவாக ஆராயப்பட வேண்டியதொரு தலைப்பு என்பதை கருத்தில் கொண்டே இப்பத்தி சில விடயங்களை பதிவு செய்ய முயல்கிறது. இது குறித்து விரிவாக ஆராய வேண்டுமென்னும் அக்கறையுள்ளவர்கள் மத்தியில் இப்பத்தி ஒரு தூண்டுகோலாக அமையுமாயின் அது மகிழ்ச்சியே!

 

கடந்த அறுபது வருடகால தமிழர் அரசியலை உற்றுநோக்கினால், அது அர்ப்பணிப்புக்களாலும், மயிர்கூச்செறியும் திறமைகளாலும், பல்வகை கோட்பாட்டு விவாதங்களாலும் நிரம்பிக்கிடப்பதை காணலாம். உலகின் பல பாகங்களிலும், பல்வேறு காலகட்டங்களில் பலவகையான அரசியல் இயக்கங்கள் உருவாகியிருக்கின்றன. ஆனால் இந்தளவு தூரம் அர்ப்பணிப்புக்களையும், திறமைகளையும் பதிவுசெய்த இயங்கங்களை வரலாற்றில் நாம் வேறு எங்குமே காண முடியாது.

 

இதுவரை உலகில் வெளித்தெரிந்த அரசியல் ஆயுதம்தரித்த இயக்கங்களிலேயே, விடுதலைப்புலிகள் ஒன்றுதான் விமானப்படை வைத்திருந்த இயக்கம். விடுதலைப்புலிகளின் தாக்குதல்களை உலகம் வியந்து பார்த்தது. ஆனால் அந்த வியப்புத்தான் பின்னர் ஆபத்தாகவும் மாறியது. உலகின் வெறுப்பு முதலில் வியப்பிலிருந்துதான் உருவாகிறது. இன்றைய மேற்குலக அணுகுமுறைகளை இவ்வாறுதான் நாம் விளங்கிக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறோம். இன்று சாகசங்கள் ஓய்ந்துபோன வெளியொன்றில் தமிழர் அரசியல் தரித்து நிற்கிறது. இணக்க அரசியலை நோக்கி செல்வதா அல்லது தொடர்ந்தும் தீவிரவாத நிழலில் ஒதுங்குவதா என்பதில் தமிழர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

 

ஆனால் இந்த வீர சாகசங்களுக்காக ஒரு தலைமுறை தன்னை மாய்த்திருக்கிறது. தனது சாராசரி மனித ஆசைகளுக்கு தீ முட்டி, தன்னைத் தானே அழித்திருக்கிறது. இந்த அர்ப்பணிப்புக்களுக்கு சொந்தக்காரரான தலைமுறை மீது எத்தகைய விமர்சனங்கள் இருப்பினும் அது தன்னலமற்றது என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. மதில்மேல் பூனையாக வாழ்ந்த ஒரு தமிழ் தலைமுறை, நல்ல கல்விக்காகவும், கௌரவமான வாழ்வுக்குமாக உழைத்துக் கொண்டிருந்தபோது, பிறிதொரு தலைமுறையோ தனது இரத்தத்தை தாங்கள் தாங்கிநின்ற சுலோகங்களுக்காக அபிசேகம் செய்திருக்கிறது. தங்கள் பிள்ளைகளை வைத்தியராக்கும், பொறியலாளராக்கும் கனவுகளுடன் ஒரு தலைமுறை தன் நேரத்தை திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது, பிறிதொரு தலைமுறையோ, எல்லாவற்றையும் புறம்தள்ளி காடுகளுக்குள் முடங்கிக் கிடந்தது. ஒரு தலைமுறைக்கு அரசியல் என்பது தங்களின் உயிரை வைத்து ஆடும் சதிராட்டமாகத் தெரிய, பிறிதொரு தலைமுறைக்கோ அரசியல் என்பது நாளாந்த செய்தித்தாள்களும், தொலைக்காட்சிப் பெட்டியுமாக இருந்தது. இத்தனை அர்ப்பணிப்புக்களாலும், சாகசங்களாலும் ஆனதென்ன என்று பார்த்தால் எதுவுமேயில்லை. இந்த இடத்தில்தான் தமிழர் அரசியலை நாம் திரும்பிப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இது ஒவ்வொரு சிந்திக்கும் தமிழனதும் கடமையாகிறது.

 

ஏன் இந்த நிலைமை? தமிழர் அரசியல் மிதவாதிகளின் தலைமையில் கட்டுண்டு கிடந்த காலத்திலும், பின்னர் ஆயுதம் தரித்த இயக்கங்களில் கட்டுண்டு கிடந்த காலத்திலும், இருபகுதியிலும் திறமைக்கு பஞ்சமிருக்கவில்லை. கடந்த அறுபது வருடகால தமிழர் அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கினால், மிகவும் ஆற்றல் வாய்ந்த பல தலைவர்கள் தோன்றியிருக்கின்றனர். சிறந்த அரசியல் சிந்தனையாளர்கள் தோன்றியிருக்கின்றனர். எதிர்காலத்தை உணர்ந்து, செயலாற்றும் திறன் அவர்களுக்குள் இருந்திருக்கிறது.

 

இதற்கு ஒரு உதாரணம் - விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால தலைவராகவும் பின்னர் புளொட் இயக்கத்தின் தலைவராகவும் இருந்த உமாமகேஸ்வரன் தொடர்பில் அறிந்ததொரு விடயம் வியப்பை ஏற்படுத்தியது. இந்தளவிற்கெல்லாம் தமிழர்கள் யோசித்திருக்கின்றனர். 1988ஆம் ஆண்டு, புளொட் இயக்கம் மாலைதீவை கைப்பற்றும் நோக்கில் ஒரு படையெடுப்பை மேற்கொண்ட தகவலை இன்று பலரும் மறந்திருப்பர். ஒரு தேசிய இனத்தின் அரசியலை முன்னிறுத்தி இயங்கிய ஒரு தீவிரவாத இயக்கம், பிறிதொரு நாட்டை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்ட வரலாறும் தமிழர் அரசியலில் மட்டும்தான் உண்டு. அன்று இதன் பின்னால் இந்திய உளவுத்துறை இருந்ததாகவே பரவலாக கூறப்பட்டது. ஆனால் இதற்கும் இந்திய உளவுத்துறைக்கும் எந்தவிதமான தொடர்பும் இருந்திருக்கவில்லையென்பது பின்னர் தெளிவானது.

 

ஏனெனில், புளொட் இயக்கத்தின் மேற்படி முயற்சியை தடுத்தி நிறுத்தி, அவர்கள் அனைவரையும் கைது செய்ததே இந்தியாதான். இந்திய கடற்படை இந்த தாக்குதலுக்கு 'கள்ளிச்செடி நடவடிக்கை' (Operation Cactus) என்று பெயரிட்டிருந்தது. இலங்கையை தளமாகக் கொண்டிருந்த மாலைதீவு வியாபாரியான அப்துல் லுதுபீ (Abdulla Luthufee) என்பவரது முயற்சிக்கு புளொட் உதவ இணங்கியதே மேற்படி தாக்குதல் திட்டம். மாலைதீவின் அப்போதைய தலைவராக இருந்த மைமூன் அப்துல் கையூமின் (Maumon Abdul Gayoom) ஆட்சியை கைப்பற்றுவதே மேற்படி தாக்குதல் படையெடுப்பின் நோக்கம். புளொட்டின் மேற்படி உதவிக்காக மாலைதீவில் புளொட் இயக்கத்திற்கு ஒரு பின்தளம் அமைப்பதற்கு கிளர்ச்சியாளர் லுதுபீ இணங்கியிருக்கிறார். இவ்வாறு உமா மகேஸ்வரன் சிந்தித்ததன் பின்னாலிருந்த காரணம்தான் இங்கு வியப்புக்குரியது. ஒருவேளை, இந்தியாவில் செயற்பட முடியாத நிலைமை ஏற்படின், புளொட் இயங்குவதற்கு பிறிதொரு பின்தளமாக மாலைதீவை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த எண்ணம்தான், மேற்படி மாலைதீவின் ஆட்சி மாற்றத்திற்கு உதவும் திட்டத்தை உமா வகுத்ததற்கான காரணமாகும். இம்முயற்சி தோல்வியடைந்தது. மேற்படி திட்டத்தின் சூத்திரதாரியான லுதுபீ கடந்த வருடம் விடுதலைசெய்யப்பட்ட பின்னர், இது தொடர்பில் விரிவானதொரு நேர்காணலை வழங்கியிருக்கின்றார்.

 

இப்பத்தி, இங்கு குறித்துரைக்க விரும்பும் விடயம் உமாமகேஸ்வரன் பற்றியதல்ல. இந்தியாவில் நிலைகொண்டு செயற்பட முடியாதவிடத்து, பிறிதொரு பின்தளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்று எண்ணியதுதான். அந்தளவிற்கு அவரால் சிந்திக்க முடிந்திருக்கிறது. ஆனால் இந்தியா போன்றதொரு பிரமாண்டமானதொரு நாடு அருகில் இருக்கும் போது, அதனை மீறி இவையெல்லாம் சாத்தியமா என்று அவர் யோசித்திருக்கவில்லை. இவ்வாறான சம்பவங்களை உற்றுநோக்கும் போது ஒரு கேள்வி எழுகிறது. தமிழர் அரசியலில் துணிவும், ஆற்றலும் இருந்தளவிற்கு நிதானமான அணுகுமுறை இருந்திருக்கவில்லையா? இன்று இந்த மயிர்கூச்செறியும் விடயங்களை படிக்கநேரும் இன்றைய தமிழ் தலைமுறைக்கு, ஏதோ சாண்டில்யனின் 'கடல்புறா' வீரம் போன்றே இவை தெரியக் கூடும். ஆனால் இவற்றுக்கெல்லாம் பின்னால் இருந்த உழைப்பு, அர்ப்பணிப்பு சாதாரணமானதல்ல. இறுதியில் இன்று தமிழர் அரசியலை திரும்பி பார்க்கும் ஒருவர், அனைத்து அர்ப்பணிப்புக்களும், அறிவுத் தேடல்களும் விழலுக்கு இறைத்த நீராகியிருப்பதையே காண முடியும்.

 

ஆனால் இத்தனைக்கு பிறகும் தமிழர் அரசியல் ஒரு நிதானமாகவும், காலத்தை விளங்கிக் கொண்டும் நகருகின்றதா என்பதை சிந்திக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்குமுண்டு. இன்று வரப்புக்குள் நின்றவாறு அரசியல் பேசும் நிலை இல்லை. அப்படியொரு நிலை 2009வரை இருந்தது உண்மை. அவர், இவர் என்றெல்லாம் கோசங்கள் எழும்பும் நிலைமை இப்போதில்லை. இதுதான் தமிழர் அரசியலை திரும்பிப் பார்க்க சரியான தருணம். இங்கு திரும்பிப் பார்த்தல் என்பது வெறுமனே விடுதலைப்புலிகளின் தவறுகளை மட்டும் பேசுவது என்பதல்ல பொருள். தமிழர் அரசியலை கடந்த அறுபது வருடங்களாக பிரதிநிதித்துவம் செய்த அனைத்து தரப்பினரும் தங்களது அரசியலை திரும்பிப் பார்க்க வேண்டிய பொறுப்புக்குரியவர்களாக இருக்கின்றனர்.

 

மக்கள் நலனை முன்னிறுத்தி சிந்தித்தால், விமர்சனங்களை முன்வைக்கவும், அதனை எதிர்கொள்ளவும் அஞ்ச வேண்டியதில்லை. இத்தகையதொரு திரும்பிப் பார்த்தல் இன்றைய காலத்தில் மிகவும் அவசியமானது. மீண்டும் அழிவுகளுக்கு ஆராதனை செய்யும் கூட்டத்தினர் கையில் அரசியல் சிக்கிவிடுவதை தடுக்க வேண்டுமாயின், அத்தகையதொரு திரும்பிப் பார்த்தல் கட்டாயமான ஒன்றாகும். ஏனெனில் சமீபத்தில் ஒரு ஆய்வாளர் சுட்டிக்காட்டியிருந்த போன்று எங்கள் அனைவரது கையிலும் இரத்தக்கறை உண்டு. ஏனெனில் எங்களது இத்தனைவருட கால, அரசியல் கோசங்களுக்காக விலை கொடுத்தவர்கள் அனைவரும் சாதாரண மக்களாவர். நாங்கள் போதியளவு திறமையை காண்பித்திருக்கிறோம், போதியளவு தன்னலமற்ற அர்ப்பணிப்பை நிரூபித்திருக்கிறோம். ஆனால் இறுதியில் அழிவுகளுக்கு விளக்கவுரை எழுதிக் கொண்டிருக்கிறோம். ஆகவே இப்போது திரும்பிப் பார்க்க வேண்டியதுதான் பிரதானமான தமிழர் அரசியலாக இருக்கிறது.

 

 

மேற்படி கட்டுரையாளர்  யதீந்திராவின் கட்டுரைகளை தொடர்ந்து வாசிப்பீர்களானால் ஒரு விடயம் தெரியும். தோல்வியடைந்து நிர்கதியாகியிருக்கும் தமி்ழ்மக்களின் மீது மட்டுமே தொடர்ந்தும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகிறார்.  அதிகார வர்க்கங்களால் தமிழ் மக்களின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அக்கிரமகங்கள் அநீதிகளைப்பற்றி மறந்து தானும்  ஒரு கட்டுரையிலும் கண்டங்களையோ விமர்சனங்களையோ இவர் பதிவு செய்யவில்லை. தமிழ் தரப்புகளின் மீது இவர் தெரிவிக்கும் விமர்சனங்கள் சில சரியானது என்பதை ஏற்று கொள்ளும் அதேவேளை நிர்கதியாக உள்ள தமிழ் மக்க்களை நிரந்தர அடிமைகளாக்கும் தனது நீண்டநாள் திட்டத்தை இனவெறி அரசு துரிதகதியில் நிறைவேற்றி வருவதைப்பற்றியோ அதை இந்தியா தனது கள்ள மெளனத்தின் மூலம் ஆசீர்வதிப்பதைப்பற்றியோ ஏனோ  எழுத மறுக்கிறார்.   அப்படியே எழுதினாலும் அதற்கும் தமிழ்தரப்பின்மீது பழியை போடுகிறார்.

 

அனாதை குழந்தைமீது எப்படி திட்டினாலும் கேட்க ஆளைல்லை என்ற ராஜதந்திரம் தெரிந்த புத்திஜீவி எழுத்தாளர் ஜதீந்திரா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யதீந்திராவின் மீது நிறைய விமர்சனங்கள் வைக்கமுடியும். ஆனாலும் அவரது கட்டுரைகளில் உள்ள நியாயமான கேள்விகளைகளையும் தட்டிக் கழிக்காது அல்லது அதற்கு இடம் கொடுக்காது அரசியல் வேலைகளை தமிழர் தரப்பு செய்யவேண்டும்.

அரசியலில் முன்னேற்றம் எதுவும் இல்லாமல் தேங்கிய குட்டை நீரைப் போன்று இருந்தால் நாற்றம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

விமர்சனத்தை ஏன்  ஒரு அமைப்பு மீது வைக்கிறார்கள்  என்பதை விளங்கிக் கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் திவிர தமிழ்த்தேசிய பற்று இடம்கொடுக்கவில்லை.( எனக்கில்லை) 

நீங்கள் கிணற்றுகள் விழுந்துவிட்டால் ஏணியோ அல்லது கயிறோ இல்லாத போது வெளியே வருவது இலகு அல்ல. சுதந்திரத்தை வெள்ளைக்காரர். சிங்களவருக்கு மட்டும் கொடுத்துவிட்டு நம்மை போராடி பெற்றுகொள்ள விட்டுவிட்டார்கள்.

 

யத்தீந்திரா மாதிரி படிக்கட்டில் ஆறுதலாக அமர்ந்து இருந்து, காலை ஆட்டிகொண்டு முட்டாளே வெளியே வருவதற்கு இவ்வளவு நேரம் எடுக்கிறதாத என்று கேட்டுக்கொண்டிருப்பது கஸ்டமான தொழில் இல்லை.

 

முக்குளிப்பவன் "அண்ணை ஒரு கயிறு தேட முடியுமா என்று கேட்டால்" யத்தீந்திரா கொறிப்பதற்கு தன்னுடன் கொண்டுவந்திருக்கும் அவலில் ஒரு பிடியை எடுத்து வாய்குள் போட்டுவிட்டு "நீ தான் நான் சொன்ன புத்திமதிகளை கடந்த ஒரு மணித்தியாலமாக கேட்கிறாய் இல்லை. கயிறு எதற்கு, கிணற்று மலையில் ஏற்றி திரும்ப திரும்ப சறுக்குகிறாய். உனக்கு எத்தனை தடவை சொல்லிவிட்டேன் சறுக்காமல் கிணற்று மலையில் பிடித்து ஏறப்பழகு" என்கிறார்.

 

யதீந்திரா வழமையில் கூட்டமைப்பு, நா.க.அரசு, புலிகளின் பழை சரித்திரத்தை மட்டும் தான் நக்கல் அடிப்பார். அப்போ அரிசுன் புலிகளை எதிர்ப்பதற்காக மட்டும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து காப்பாற்றுவார். இன்று தன்னை பலதையும் ஆய்பவராக காட்ட POLT இன் மாலைதீவுத் தாக்குதலை ஆய்கிறார். அதனால் அரிசுன்னை இந்த பக்கம் காணவில்லை. இதுவெல்லாம் தேவையா யத்தீந்திராவுக்கு?

 

இன்றைய காலத்தில் மிகவும் அவசியமானது. மீண்டும் அழிவுகளுக்கு ஆராதனை செய்யும் கூட்டத்தினர் கையில் அரசியல் சிக்கிவிடுவதை தடுக்க வேண்டுமாயின், அத்தகையதொரு திரும்பிப் பார்த்தல் கட்டாயமான ஒன்றாகும்.

எவ்வளவோ சோடனை வசங்களுக்கு பின்னர் SJV தொடக்கம் இன்றைய கூட்டமைப்பு வரையும் இதை செய்வதாகத்தான் அவரின் வாதம். 

 

பாட்டெழுத்தி பரிசில் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். யதீந்திரா மாதிரி குற்றம் கண்டு பிடித்து பரிசில் வாங்க முயல்பவர்களும் பாட்டு எழுதுவது மாதிரி சும்மா அக் பண்ணுகிறார்கள்.

 

உண்மையில் யந்தீந்திரரா இதில் அடுத்து என்ன செய்யலாம் என்று ஒரு சொல்லு எழுதியிருக்கிறாரா?

 

அதன் பின் எதற்கு அவலை மென்றுகொண்டு திரும்பி பார் என்கிறார் இந்த பண்டிதர்.

Edited by மல்லையூரான்

யதீந்திராவின் எல்லா கட்டுரையிலும் தமிழ் தரப்பு மீது பாரிய கண்டனங்களும் விமர்சனங்களும் வைக்கபட்டிருக்கும். ஆனால் எந்த கட்டுரையிலாவது அதற்கு என்ன தீர்வு அதாவது தற்போதைய நிலையில் என்ன நடவடிக்கைகளை எடுப்பது தமிழ் தரப்பிற்கு நன்மை பயக்கும் என்ற வழிகாட்டுதல் வைக்கப்ப்டிருக்காது. ஏனெனில் தமிழ் தரப்பு தற்செயலாக அந்த வழிகாட்டுதலை பின்பற்றினால்  அடுத்த கட்டுரையில் தமிழ் தரப்பை சகட்டு மேனிக்கு தாக்க முடியாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை. இருப்பினும் யதீந்திரா அவர்கள் சுட்டிக்காட்டிய  தமிழ் தரப்பின் பலவீனங்களை தமிழ் தரப்பு நன்கு விளங்கி தம்மை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளுகிறேன். 

 

தனிப்பட்ட விரோதம் தலையடுத்துவிட்டால் கொண்டகொள்கையை உதறித்தள்ளிவிட்டு அல்லது கொள்கையை  அடகு வைத்து தனிப்பட்ட பழி தீர்ப்பது தமிழ் தரப்பின் மிகப்பெரிய பலவீனம். இப்படிப்பட்ட பலவீனங்களை தமக்கு தமிழின எதிரிகள் பயன்படுத்தினர் என்பது யதார்த்தம். இவ்வாறு பயன்படுத்தி ஈழத்தமிழரை நசுக்கும் ஈனச்செயலில் சிறிலங்காவை விட மிக மும்முரமாக ஈடுபட்டது இந்தியா என்பது எல்லோரது மனச்சாட்சிக்கும் தெரியும். தற்போதைய கையறு நிலையில் இவ்விடயத்தை தூக்க்கிப்பிடிப்பது ராஜதந்திரமல்ல என்ற யதீந்திராவின் வாதம் நியாயமானது.  ஆனால் இந்தியா தமிழினத்திற்கு மீட்பராக வந்தது தமிழர் தரப்பு தான் அதை கெடுத்தது என்று யதீந்திரா ஒரு கட்டுரையில் கூறுவது எம்மை ஏமாற்றும் வேலை. தமிழ் தரப்பு என்று அவர் கூறியது விடுதலைபுலிகளை.

 

ஒரு வாதத்திற்காக அதை ஏற்றுக் கொண்டாலும் புலிகள் வீழ்ச்சியடைந்து நான்கு வருடங்கள் ஆகியும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிராகாரம் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் உரிமை இருந்தும் ஸ்ரீலங்காவிற்கு என்னால் கட்டளையிட முடியாது என்று இந்தியா சொல்வது  என்ன நியாயம். நான்கு வருடங்காகியும் தமிழ் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபையை கைப்பற்ற கூடாது என்று என்று இரகசியாமாக அல்ல பகிரங்கமாகவே ஸ்ரீலங்கா செயற்ப்பட்டு வருகையில் அதை வேடிக்கை பார்க்கும இந்திய மனநிலையை பார்க்கும்போது விடுதலை புலிகள் இந்திய இலக்கை ஒப்பந்தத்தை எதிர்க்க கூறிய காரணங்களை சரிதான் என்று நினைக்க தோன்றுகிறது. இந்திலையில் இந்தியா பற்றிய உரைகல் என்ற யதீந்திராவின் கட்டுரையில் இந்தியாவிற்கு மிகவும் வக்காலத்து வாங்கிய யதீந்திரா தமிழ் தரப்பை மட்டும் தொடர்ந்து குற்றம் சொல்வது எந்த வகையிலும் நியாயமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர், தமிழர் தரப்பு என்பது ஒரு கருத்தியல். நடைமுறையில் அவ்வாறு ஒரு கட்டுமானம் இல்லை. அதைக் கட்டவும் முடியாது. நடைமுறையில் இருப்பது சாதியம் சார்ந்த மக்கள் கூட்டம். மதம் சார்ந்த மக்கள் கூட்டம். பிரதேசவகையிலான மக்கள் கூட்டம. பல்வேறு சுய ஆதிக்கம் கொண்ட மக்கள் கூட்டம். இவை எக்காலத்திலும் இனமாக இருந்ததில்லை இனிமேலும் இருக்க ஒரு துளி வாய்ப்பும் இல்லை. அப்படி பொய்யாக இருக்கமுயன்றால் அது தற்கொலைக்கு சமம். எப்படி இயக்கங்களாக குழுக்களாக தங்களை தாங்களே அழித்தார்களோ அப்படி மீண்டும் ஒரு முறை நடக்கும். சிங்களவர்களே இவ்வாறு பல்வேறு தளத்தில் இருக்கும் மக்கள் கூட்டத்தை தமிழர் என்று அடிபோட்டார்கள். அந்த முட்டாள்தனத்தை சிங்களம் இனிமேல் செய்ய வாய்ப்பில்லை. தமிழர் தரப்பு அப்படி செய்தால் விடுதலை அடைந்திருக்கும் இப்படிச் செய்தால் விடுதலை அடைந்திருக்கும் அல்லது இப்போது இந்த வழியில் போனால் விடுதலை கிடைக்கும் அந்தவழியில்போனால் விடுதலை கிடைக்கும் என்பது ஒரு கருத்தியல் தளத்தில் நடக்கும் கற்பனாவாதம். இனம் என்ற ஒரு கட்டுமானமே இல்லாமல் இனவிடுதலை என்பது சுத்த கோமாளித்தனம். அந்த கோமாளித்தனத்தை எப்படி செய்வது , எப்படி செய்திருக்கலாம் என்ற ஆய்வுகள் அமர்வுகள் முரசறைவுகள் சொல்கின்றது.

தமிழர் தனித்துவம் தனியரசு என்ற பினாத்தல்களை விட்டு மனிதாபிமானிகளாக மனிதநேயமுள்ளவர்களாக போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே பொருத்தமானது. உண்மையை சொல்லப்போனால் சாதி மதம் பிரதேசம் வர்க்கம் என்ற சாக்கடையில் இருந்து ஒரு இனம் உருவாக முடியாது. அதிலிருந்து உயிரைக்கொல்லும் கிருமிகளே உருவாகும். அதுவே நடந்ததும் கூட. இது சுத்தப்படுத்த முடியாத சாக்கடை. தமிழர் தமிழர்தரப்பு என்ற விரமர்சனம் சாக்கடைக்குள் இருந்து தடால் என்று தலையை தூக்கி கத்திவிட்டு மீள சாக்கடைக்குள் மூழ்குவதைப்போன்றது.

தமிழர், தமிழர் தரப்பு என்பது ஒரு கருத்தியல். நடைமுறையில் அவ்வாறு ஒரு கட்டுமானம் இல்லை. அதைக் கட்டவும் முடியாது.

 

 

 

உண்மையை சொல்லப்போனால் சாதி மதம் பிரதேசம் வர்க்கம் என்ற சாக்கடையில் இருந்து ஒரு இனம் உருவாக முடியாது. அதிலிருந்து உயிரைக்கொல்லும் கிருமிகளே உருவாகும். அதுவே நடந்ததும் கூட. இது சுத்தப்படுத்த முடியாத சாக்கடை. தமிழர் தமிழர்தரப்பு என்ற விரமர்சனம் சாக்கடைக்குள் இருந்து தடால் என்று தலையை தூக்கி கத்திவிட்டு மீள சாக்கடைக்குள் மூழ்குவதைப்போன்றது.

 

 

யார் தாக்கப்பட்டார். அவருக்கு யார் ஏன் உதவேண்டும்? 

 

தீயில் விழுந்து எரிந்த பிக்குவிக்கு யார் உதவ போகிறார்கள்?

 

முஸ்லீம்கள் சதிமத பேதத்தை மறந்து கலாலை கைவிட்டு, பசுவதையை நிறுத்தி சிங்களவரை முஸ்லீம்களாக மாற்றுவதை இல்லாதொழிப்பார்களா? 

தமிழர், தமிழர் தரப்பு என்பது ஒரு கருத்தியல். நடைமுறையில் அவ்வாறு ஒரு கட்டுமானம் இல்லை. அதைக் கட்டவும் முடியாது. நடைமுறையில் இருப்பது சாதியம் சார்ந்த மக்கள் கூட்டம். மதம் சார்ந்த மக்கள் கூட்டம். பிரதேசவகையிலான மக்கள் கூட்டம. பல்வேறு சுய ஆதிக்கம் கொண்ட மக்கள் கூட்டம். இவை எக்காலத்திலும் இனமாக இருந்ததில்லை இனிமேலும் இருக்க ஒரு துளி வாய்ப்பும் இல்லை. அப்படி பொய்யாக இருக்கமுயன்றால் அது தற்கொலைக்கு சமம். 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123408&p=901889

 இதே தத்துவத்தில் வைத்து மேற்காடிய திரியிற்கும் சென்று சண்டமாருதன் பதில்களை வழங்கினால் கொஞ்சம் விளக்கமாக இருக்கு,

 

எதற்காக முஸ்லீம்கள் இன அடையாளதை வைத்துக்கொள்ள முயலக்கூடாது என்றதை அந்த திரியிலும் விளங்க வைத்தால் அவர்களுக்கு அது ஆறுதலாக இருக்கும்.

தமிழர், தமிழர் தரப்பு என்பது ஒரு கருத்தியல். நடைமுறையில் அவ்வாறு ஒரு கட்டுமானம் இல்லை. அதைக் கட்டவும் முடியாது. நடைமுறையில் இருப்பது சாதியம் சார்ந்த மக்கள் கூட்டம். மதம் சார்ந்த மக்கள் கூட்டம். பிரதேசவகையிலான மக்கள் கூட்டம. பல்வேறு சுய ஆதிக்கம் கொண்ட மக்கள் கூட்டம். இவை எக்காலத்திலும் இனமாக இருந்ததில்லை இனிமேலும் இருக்க ஒரு துளி வாய்ப்பும் இல்லை. அப்படி பொய்யாக இருக்கமுயன்றால் அது தற்கொலைக்கு சமம். எப்படி இயக்கங்களாக குழுக்களாக தங்களை தாங்களே அழித்தார்களோ அப்படி மீண்டும் ஒரு முறை நடக்கும். சிங்களவர்களே இவ்வாறு பல்வேறு தளத்தில் இருக்கும் மக்கள் கூட்டத்தை தமிழர் என்று அடிபோட்டார்கள். அந்த முட்டாள்தனத்தை சிங்களம் இனிமேல் செய்ய வாய்ப்பில்லை. தமிழர் தரப்பு அப்படி செய்தால் விடுதலை அடைந்திருக்கும் இப்படிச் செய்தால் விடுதலை அடைந்திருக்கும் அல்லது இப்போது இந்த வழியில் போனால் விடுதலை கிடைக்கும் அந்தவழியில்போனால் விடுதலை கிடைக்கும் என்பது ஒரு கருத்தியல் தளத்தில் நடக்கும் கற்பனாவாதம். இனம் என்ற ஒரு கட்டுமானமே இல்லாமல் இனவிடுதலை என்பது சுத்த கோமாளித்தனம். அந்த கோமாளித்தனத்தை எப்படி செய்வது , எப்படி செய்திருக்கலாம் என்ற ஆய்வுகள் அமர்வுகள் முரசறைவுகள் சொல்கின்றது.

தமிழர் தனித்துவம் தனியரசு என்ற பினாத்தல்களை விட்டு மனிதாபிமானிகளாக மனிதநேயமுள்ளவர்களாக போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே பொருத்தமானது. உண்மையை சொல்லப்போனால் சாதி மதம் பிரதேசம் வர்க்கம் என்ற சாக்கடையில் இருந்து ஒரு இனம் உருவாக முடியாது. அதிலிருந்து உயிரைக்கொல்லும் கிருமிகளே உருவாகும். அதுவே நடந்ததும் கூட. இது சுத்தப்படுத்த முடியாத சாக்கடை. தமிழர் தமிழர்தரப்பு என்ற விரமர்சனம் சாக்கடைக்குள் இருந்து தடால் என்று தலையை தூக்கி கத்திவிட்டு மீள சாக்கடைக்குள் மூழ்குவதைப்போன்றது.

 

முஸ்லிம், முஸ்லிம் தரப்பு என்பது ஒரு கருத்தியல். நடைமுறையில் அவ்வாறு ஒரு கட்டுமானம் இல்லை. அதைக் கட்டவும் முடியாது. நடைமுறையில் இருப்பது முஸ்லிம் மதவெறி சார்ந்த மக்கள் கூட்டம். மதம் சார்ந்த மக்கள் கூட்டம்.

 

கள்ளக்காணிகளை  பிடித்து வைத்திருக்கும் மக்கள் கூட்டம. பல்வேறு சுய ஆதிக்கம் கொண்ட மக்கள் கூட்டம். இவை எக்காலத்திலும் இனமாக இருந்ததில்லை இனிமேலும் இருக்க ஒரு துளி வாய்ப்பும் இல்லை. அப்படி பொய்யாக இருக்கமுயன்றால் அது தற்கொலைக்கு சமம்.

 

எப்படி இயக்கங்களாக குழுக்களாக தங்களை தாங்களே ஆப்கானிலும் பாகிஸ்தானிலும் அழித்தார்களோ அப்படி மீண்டும் ஒரு முறை நடக்கும். சிங்களவர்களே இவ்வாறு பல்வேறு தளத்தில் இருக்கும் மக்கள் கூட்டத்தை முஸ்லிம் என்று அடிபோட்டார்கள். அந்த முட்டாள்தனத்தை சிங்களம் இனிமேல் செய்ய வாய்ப்பில்லை. முஸ்லிம் தரப்பு அப்படி செய்தால் விடுதலை அடைந்திருக்கும் இப்படிச் செய்தால் விடுதலை அடைந்திருக்கும் அல்லது இப்போது மகிந்தவுக்கு கழுவினால் விடுதலை கிடைக்கும், கோத்தாவுக்கு  கழுவினால்   விடுதலை கிடைக்கும் என்பது ஒரு கருத்தியல் தளத்தில் நடக்கும் கற்பனாவாதம்.

 

இனம் என்ற ஒரு கட்டுமானமே இல்லாமல் இனவிடுதலை என்பது சுத்த கோமாளித்தனம். அந்த கோமாளித்தனத்தை எப்படி செய்வது , எப்படி செய்திருக்கலாம் என்ற ஆய்வுகள் அமர்வுகள் முரசறைவுகள் சொல்கின்றது.

முஸ்லிம் தனித்துவம் தனியரசு என்ற பினாத்தல்களை விட்டு, மனிதாபிமானிகளாக மனிதநேயமுள்ளவர்களாக கள்ளக்காணிகளை  பிடிக்காமல், போதைப் பொருள் வியாபாரம் செய்யாமல், நேர்மையாக உழைத்து வாழ நினைப்பதே பொருத்தமானது.

உண்மையை சொல்லப்போனால் முஸ்லிம் மதவெறி, முஸ்லிம் பிரதேசம், முஸ்லிம் வர்க்கம் என்ற சாக்கடையில் இருந்து ஒரு இனம் உருவாக முடியாது. அதிலிருந்து உயிரைக் கொல்லும் கிருமிகளே உருவாகும். இதனால் தான் உலகமே இன்று முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக கணித்துள்ளனர். இந்த முஸ்லிம்கள் சுத்தப்படுத்த முடியாத சாக்கடை. முஸ்லிம், முஸ்லிம் தரப்பு என்ற விமர்சனம் சாக்கடைக்குள் இருந்து தடால் என்று தலையை தூக்கி கத்திவிட்டு மீள சாக்கடைக்குள் மூழ்குவதைப்போன்றது.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தனித்துவம் தனியரசு என்ற பினாத்தல்களை விட்டு மனிதாபிமானிகளாக மனிதநேயமுள்ளவர்களாக போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே பொருத்தமானது.

உண்மையை சொல்லப்போனால் சாதி மதம் பிரதேசம் வர்க்கம் என்ற சாக்கடையில் இருந்து ஒரு இனம் உருவாக முடியாது. அதிலிருந்து உயிரைக்கொல்லும் கிருமிகளே உருவாகும். அதுவே நடந்ததும் கூட.

இது சுத்தப்படுத்த முடியாத சாக்கடை. தமிழர் தமிழர்தரப்பு என்ற விரமர்சனம் சாக்கடைக்குள் இருந்து தடால் என்று தலையை தூக்கி கத்திவிட்டு மீள சாக்கடைக்குள் மூழ்குவதைப்போன்றது.

 

உங்களுடைய  கருத்துக்களில் பெரும் குழப்பங்கள் உங்களுக்கே.

முதலில் நீங்கள் தெளிவு பெறணும்.

அதுக்குப்பின்தான் வகுப்பெடுக்கணும்.

 

இப்போ இந்த 2 கருத்தையும் பாருங்கள்

அப்படியான ஒரு இனத்தில் பிறந்தவர்களிடம் இரக்க குணத்தை எப்படி எதிர்பார்க்கின்றீர்கள்???

 

அப்படித்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இரக்க குணம் இருந்தால்

அது அவரவர் சாதி மதம் என்று இருக்குமே

அப்போ எவரெவர் எவரெவருக்கு உதவி  செய்யணும் என்றும் நீங்கள் சொல்லணும் இல்லையா? :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் என்று ஒரு இனம் நடைமுறையில் இல்லை. தமிழர் தரப்பு என்பது நடைமுறைக்கு புறம்பான கருத்தியல். அக் கருத்தியலால் சாதி மத வர்க்க பிரதேச பேதங்களை கடந்து இனம் என்பதை நடைமுறையில் கட்டியெழுப்ப முடியாது. தமிழர் தரப்பு என்ற புலம்பெயர் தேசத்து கருத்தியல் சாதி மத வர்க்க பிரதேசம் என்ற தளத்தில் இயங்குவது. இஸ்லாமிய அடிப்படைவாத கருத்தியல் மதத் தளத்தில் இயங்குவது. எங்கும் இனம் என்ற பொதுத்தளத்தில் அதுசார்ந்த கருத்தியல் இல்லை ஏனெனில் இனம் என்பது நடைமுறையில் இல்லை. இக் கருத்தை மல்லையூரும் (இனம் என்ற தளத்தை இல்லாமல் செய்வதில் ஊர்வாதமும் அரும்பணிசெய்கின்றது) சயனியும் மேலும் வலுப்படுத்தியுள்ளனர். இஸ்லாம் என்ற ஒன்று இல்லை என்று அவரும் இருக்கிறது என்று அவர்களும் சண்டைபிடித்துக்கொண்டிருக்கலாம் தவிர இரண்டுபேரும் சேர்ந்ததுதான் இனம் என்பது நடைமுறையில் இல்லை. அவ்வாறுதான் வடக்கு கிழக்கு பிரதேசவாதமும் சாதிய நடைமுறைகளும் புலம்பெயர் வக்க ஆதிக்கப்போட்டிகளும். மேலும் குழுவாதங்களும் அமைப்புகளும் அதற்குள்ளான அதிகாரப்போட்டிகளும். எங்கும் இனம் என்ற கட்டுமானத்தை நடைமுறையில் காணமுடியாது. அதற்கான முயற்ச்சியையும் காணமுடியாது. ஆகவே இல்லாத ஒரு இனக்கட்டுமானத்துக்கு விடுதலை என்பது கோமாளித்தனம். அக் கோமாளித்தனத்துக்கு இவ் உலகின் எந்த ஒருவனும் அனுசரணையாக இருக்கமாட்டான்.

மனிதாபிமான உணர்வு என்பது சாதி மத வர்க்க பிரதேச சாக்கடைக்கு அப்பாற்பட்ட ஒன்று. அது பொதுவான ஒரு உணர்வு. அது கூட சாதி மதம் சார்ந்துதான் இருக்கும் என்கின்றார் விசுகு அவர்கள். இதுதான் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ புலம்பெயர் அமைப்புகள் மறுப்பதற்கு அடிப்படைக் காரணம். இதையும் கடந்து மிகச் சிறு அளவில் தனிமனிதர்கள் மனிதபிமானத்துடன் உதவுகின்றார்கள். அது ஒன்றுதான் பிரதானமானதும் முக்கியமானதும் என்பதே எனது கருத்து.

தமிழர் தரப்பு என்ற புலம்பெயர் தேசத்து கருத்தியல்

 

 

 

இருப்பதை யாரும் மறுத்து முன்னால் போவதில்லை.

 

மல்லையூர் என்று ஒன்று இருந்தால் அங்கே பிறந்தவர் தான் பிறக்கவில்லை என்று கூறிக் கொள்ள முடிடையாது. அந்த ஊரில் பிறந்தவர் தான் அதை மறைக்க முடியாது. அது ஒரு உண்மை(Fact). அதை மறைக்கும் படி நிந்தாட்சனை செய்வது தான் துவேசம். அது அந்த ஊரில் பிறந்தவன் மீது ஏற்படும் கவனத்தால் உண்டான  பொறாமையின் நிமித்தம் எழும் வலிந்துரை.  இது பெண்கள் தங்களை மூடி மறைக்க மொட்டாக்கு போடவேண்டும் என்பதற்கு சமன்.

 

இந்த குழப்பம் இந்து சமயத்ததுவங்களை அறிந்திராமையே. அதன் படி "சண்டமாருதன்"  என்று ஒருவர் தன்னைத்தான் அழைக்க முயல்வது துவேசம். அது நான், எனது என்ற ஆணவத்திலிருந்து எழும் துவேசம் என்பதே. இதை விட தனது என்பதை மறைது தன் ஊர் என்பது பரந்து பட்ட உணர்வு. மானிடம் என்று கூறாமல் சண்ட்மாருதன் மிருகங்களுக்காக பிக்குவுடன் சேர்ந்த்து தனக்குதான் தீ மூட்டியிருந்தால் மட்டும்தான் சண்டமாருதன் மனித உயிர் துவேசி இல்லை என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்.

 

தமிழரை 1948 இல் வாக்குரிமை பறித்ததுதான் துவேசம். சிங்களவரும் முஸ்லீம்களும் 1915 மோதுபட்டுக்கொண்டமை துவேசச் செயஸ்ப்பாடு. இருவரையும் வழக்கு பிடித்து மறித்துவிட்டது இனப்பாகுபாட்டற்ற இராமநாதனின் நிலை. இப்படி சண்டையை நிற்பாடியதயே சாத்தித்துவமாக, மேட்டுக்குடியாக, காட்ட முயல்வது தொடர்ந்து வெறுப்பை காறி உமிழும்  இனத்துவேச செயல்.

 

மேலும்:

யார் தாக்கப்பட்டார். எங்கே தாக்கப்பட்டார்? அவருக்கு யார் ஏன் உதவேண்டும்? (தென் சூடானில் யாராவது தாக்கப்பட்டர்களா?)

 

தீயில் விழுந்து எரிந்த பிக்குவிக்கு யார் உதவப் போகிறார்கள்?

 

சோமாலியாவில், எத்தியோப்பியாவில் இருப்போருக்கு உதவ மறுப்பது ஏன். அவர்களுக்குகாக யாழில் இவர்கள் இன்னமுமேன் எழுதாமல் தாயகத்தில் தாக்கபட்டவர்களுக்கு உதவுங்கள் என்று இனத்துவேசமாக எழுதுகிறார்கள். இவர்களுக்கு இனத்துவேச "தாயகம்" என்ற வார்த்தை விட்டுபோகாதா? சோமலியருக்கு உதவுங்கள் என்னாமல் எப்படி சாக்கடையில் அமிழ்ந்து தாயகத்து தமிழருக்கு புலம் பெயர் தமிழர் உதவ வேண்டும் என்கிறார்கள். சோமாலியர் என்றால் அது அமெரிக்கரை குறிக்குமா அல்லது அகிலம் முழுவதையும் குறிக்குமா?

 

எதற்காக சர்வதேசம், அகிலம், எல்லாமே புலம் பெயர் தமிழருக்கு உதவேண்டும் என்று கூறி இனத்துவேசத்திற்கு எதிராக கதையாமல் புலம் பெயர் தமிழர் என்றவர்கள் தாயகத்து தமிழருக்கு உதவவேண்டும் என்கிறார்கள். அவுஸ்திரேலியாவில் இவர்கள் படும் பாட்டை பற்றி அவுஸ்திரேலிய அரசுக்கு ஒரு கடிதம் எழுத தாயயாரில்லை, 5 சதம் உழைத்தவனிடம் பறித்து அரசுக்கு தானம் கொடுக்கும் முயற்சியா இது. இந்த மாதிரி தொடர்ந்து புலம் பெயர் கதை எழுதுவது?

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

 

இருப்பதை யாரும் மறுத்து முன்னால் போவதில்லை.

 

மல்லையூர் என்று ஒன்று இருந்தால் அங்கே பிறந்தவர் தான் பிறக்கவில்லை என்று கூறிக் கொள்ள முடிடையாது. அந்த ஊரில் பிறந்தவர் தான் அதை மறைக்க முடியாது. அது ஒரு உண்மை(Fact). அதை மறைக்கும் படி நிந்தாட்சனை செய்வது தான் துவேசம். அது அந்த ஊரில் பிறந்தவன் மீது ஏற்படும் கவனத்தால் உண்டான  பொறாமையின் நிமித்தம் எழும் வலிந்துரை.  இது பெண்கள் தங்களை மூடி மறைக்க மொட்டாக்கு போடவேண்டும் என்பதற்கு சமன்.

 

இந்த குழப்பம் இந்து சமயத்ததுவங்களை அறிந்திராமையே. அதன் படி "சண்டமாருதன்"  என்று ஒருவர் தன்னைத்தான் அழைக்க முயல்வது துவேசம். அது நான், எனது என்ற ஆணவத்திலிருந்து எழும் துவேசம் என்பதே. இதை விட தனது என்பதை மறைது தன் ஊர் என்பது பரந்து பட்ட உணர்வு. மானிடம் என்று கூறாமல் சண்ட்மாருதன் மிருகங்களுக்காக பிக்குவுடன் சேர்ந்த்து தனக்குதான் தீ மூட்டியிருந்தால் மட்டும்தான் சண்டமாருதன் மனித உயிர் துவேசி இல்லை என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்.

 

தனது என்பதை மறைத்து தனது ஊர் என்பது பரந்துபட்ட உணர்வாயின் அதற்கும் மேலாக தனது நாடு தனது இனம் என்பது அதைவிட பரந்துபட்ட உணர்வு. ஆனால் ஊரே அதி மேலான பரந்துபட்ட உணர்வாக இருப்பது பிரதேசவாதம். அப் பிரதேசவாதமே இருக்கின்றது தவிர நாடு இனம் என்ற அடிப்படை இல்லை. தனிமனிதன் தனக்கென ஒரு பெயர் இருக்கும் போது தனது ஊரை மையமாக வைத்து தான் இந்த ஊரான் என்பதற்கு என்ன காரணம்? ஊர்வாதம் சிக்கலானது ஏனெனில் பிரதேசவாதம் நிலுவையில் இருக்கும் பிரச்சனை. அப்பிரச்சனை இல்லையாயின் ஊரை அடைமொழியாக வைப்பது பெரியவிடயம் இல்லை. இது குறித்து இங்கு பல சர்ச்சைகள் நடந்துள்ளது. முன்னர் இக்கருத்தை வைத்தபோது என்னுமொருவர் தனது ஊரின் சிறப்புகளையும் எழுதி தனது ஊரில் விதைப்பது புல்லாக முளைக்காது என்றும் சொன்னார். அதன் உள்ளர்த்தம் மற்ற ஊரில் துரோகம் அதாவது புல்லு முளைக்கும் என்பதாகும். உர்வாதம் ஊர்சாரந்த ஒன்றியங்கள் குழுக்கள் பல்கிபெருகின்றது. இதற்கு அடிப்படை பிரதேசவாதம். பிரதேசவாதத்தின் மீது தேசம் என்ற கட்டுமானம் சாத்தியம் இல்லை. வடக்கு கிழக்கு யாழ்பாணம் மட்டக்கிளப்பு பிரபாகரன் கருணா எல்லாம் சேர்ந்து புலியாக தமிழீழமாக சாத்தியமானதா? பிரதேசவாதத்தின் மீதான தேச கட்டுமானங்கள் இடிந்து தரைமட்டமானது. ஊர்வாதம் குழுவாதம் எல்லாம் அடியோடு துடைத்தெறியப்படவேண்டிய விசயங்கள். அந்தவகையில் ஊரை பெயராகவோ அடைமொழியாகவோ கொண்டிருப்பதற்கு எதிராக தொடர்ந்து கருத்தை முன்வைக்கின்றேன்.

எனக்குத் தெரிந்தது சைவசமயம். இந்துசமயம் என்ற ஒன்று கிடையாது. அது கற்பிதம். ஏற்றதாழ்வுகளை கட்டியெழுப்பவும் தீண்டாமையை நிலைநிறுத்தி ஏழைகளின் இரத்தத்தை குடிக்கும் ஒரு அரக்க வழிமுறைக்குப் பெயரே இந்துத்துவம். தமிழும் சைவமும் என்ற ஆன்மீகத்தை கொண்டுபோய் இந்து இந்தியம் பார்ப்பானியம் என்றதுக்குள் போட்டுவிட்டு இந்து சமயமாம் ! அதுக்கு வேறு தத்துவங்கள் !

  

தனது என்பதை மறைத்து தனது ஊர் என்பது பரந்துபட்ட உணர்வாயின் அதற்கும் மேலாக தனது நாடு தனது இனம் என்பது அதைவிட பரந்துபட்ட உணர்வு. ஆனால் ஊரே அதி மேலான பரந்துபட்ட உணர்வாக இருப்பது பிரதேசவாதம். அப் பிரதேசவாதமே இருக்கின்றது தவிர நாடு இனம் என்ற அடிப்படை இல்லை. தனிமனிதன் தனக்கென ஒரு பெயர் இருக்கும் போது தனது ஊரை மையமாக வைத்து தான் இந்த ஊரான் என்பதற்கு என்ன காரணம்? ஊர்வாதம் சிக்கலானது ஏனெனில் பிரதேசவாதம் நிலுவையில் இருக்கும் பிரச்சனை. அப்பிரச்சனை இல்லையாயின் ஊரை அடைமொழியாக வைப்பது பெரியவிடயம் இல்லை. இது குறித்து இங்கு பல சர்ச்சைகள் நடந்துள்ளது. முன்னர் இக்கருத்தை வைத்தபோது என்னுமொருவர் தனது ஊரின் சிறப்புகளையும் எழுதி தனது ஊரில் விதைப்பது புல்லாக முளைக்காது என்றும் சொன்னார். அதன் உள்ளர்த்தம் மற்ற ஊரில் துரோகம் அதாவது புல்லு முளைக்கும் என்பதாகும். உர்வாதம் ஊர்சாரந்த ஒன்றியங்கள் குழுக்கள் பல்கிபெருகின்றது. இதற்கு அடிப்படை பிரதேசவாதம். பிரதேசவாதத்தின் மீது தேசம் என்ற கட்டுமானம் சாத்தியம் இல்லை. வடக்கு கிழக்கு யாழ்பாணம் மட்டக்கிளப்பு பிரபாகரன் கருணா எல்லாம் சேர்ந்து புலியாக தமிழீழமாக சாத்தியமானதா? பிரதேசவாதத்தின் மீதான தேச கட்டுமானங்கள் இடிந்து தரைமட்டமானது. ஊர்வாதம் குழுவாதம் எல்லாம் அடியோடு துடைத்தெறியப்படவேண்டிய விசயங்கள். அந்தவகையில் ஊரை பெயராகவோ அடைமொழியாகவோ கொண்டிருப்பதற்கு எதிராக தொடர்ந்து கருத்தை முன்வைக்கின்றேன்.

எனக்குத் தெரிந்தது சைவசமயம். இந்துசமயம் என்ற ஒன்று கிடையாது. அது கற்பிதம். ஏற்றதாழ்வுகளை கட்டியெழுப்பவும் தீண்டாமையை நிலைநிறுத்தி ஏழைகளின் இரத்தத்தை குடிக்கும் ஒரு அரக்க வழிமுறைக்குப் பெயரே இந்துத்துவம். தமிழும் சைவமும் என்ற ஆன்மீகத்தை கொண்டுபோய் இந்து இந்தியம் பார்ப்பானியம் என்றதுக்குள் போட்டுவிட்டு இந்து சமயமாம் ! அதுக்கு வேறு தத்துவங்கள் !

மேலே நான் எழுதியிருப்பது தமிழில் என்று நினக்கிறேன். விளங்கிக்கொள்ள முடியாமல் இருப்பதை கண்டு மன வருத்தம்.

 

நான் எழுதியிருக்கும் இந்து மதத்துக்கும் தாங்கள் பாண்டியத்துவம் அடைந்திருப்பத்தாக சொல்லும்  சைவமதத்திற்கும் இடையில்,  ஒருவன் தன்னை முன்னிலைப்படுத்தி அகங்காரங்களை காட்டுவதில் கொண்டிருக்கும் வித்தியாசங்களை எடுத்துவைத்தால் நான் அதை படிக்கத் தயாராக இருக்கிறேன். தெரியாதை தெரியும் மாதிரி நடித்தால் தங்களைத்தான் ஏமாற்றுகிறீர்கள். எத்தனையோ முஸ்லீம்கள் சைவத்தை பற்றி ஆழ்ந்த அறிவு வைத்திருக்கிறார்கள். ஆனால் இங்கே வெளிக்காட்டுவது ஒன்றும் சாராத ஏமாற்று. வெறும் மதத் துவேசத்தால் இந்து மதத்தை தூற்ற முயலும் செயல். சைவ மதத்தைப் பற்றி அறியாதவர் ஏன் அப்படி தெரியும் போல் நடிப்பான். இந்துமத வேதாந்ததிற்கும் சைவமத சித்தாங்களுக்குமிடையில் நான் சொன்ன கருத்து சம்பந்தமாக காணப்படும் முரண்களை தாங்கள் எடுத்து சொல்ல முடியாவிட்டால் வெறும் சளாப்பலுக்காகவல்லவா இப்போது இந்துமத, சைவ மத வேறுபாடுகளின் திசையில் திரியை திருப்ப முயல்வது?    மெய்கண்ட சாத்திரத்தில் அல்லது திருவருட்பயனில் இருந்து ஒருமேற்கோளை காட்டி நான் சொல்லியிருப்பது, தாங்கள் பாண்டித்தியம் கண்ட சைவத்தில் இல்லை என்று காட்ட முடியுமா? அதுவல்ல,  சைவ சித்தாந்தத்தை  போதிக்கும் மெய்கண்ட சாத்திர நூல்களான திருவருட்பயன் , திருக்களிற்றுப்படியார், சிவஞான சித்தியார், உண்மை விளக்கம், வினாவெண்பா, கொடிப்பாட்டு , நெஞ்சுவிடுதூது , சங்கற்ப நிராகரணம் ,திருவுந்தியார், சிவஞானபோதம்  எதுவாகிலும் ஒன்றிலிருந்து ஒரு உதாரணம் எடுத்து நான் சொல்வது பிழை என்று காட்ட முடியுமா?

 

நான் கிராமத்தை பற்றிகூறவில்லை. அது தங்களுக்கு தமிழைப் படித்து கருத்தை விளங்கிக்கொள்ள ஆற்றல் இல்லமையால் அப்படி பிழையாக தெரிகிறது.  தாங்கள்தான் பெண்கள் தங்கள் அடையாளத்தை பெண்கள் என்று காட்ட தலை முடி வளர்க்கக் கூடாது,சேலை கட்டக்கூடாது,ஆண்கள் கால்சட்டை போடக்கூடாது, முடி வெட்டக்கூடாது  என்று வாதாடும் சப்பி வாதாட்டத்தை முன் வைக்கிறீர்கள் . பெண்களை ஆண்கள் பார்க்ககூடாது என்று மொக்காடு போட நிர்பந்திக்கும் குணம்தான் அது.  மேலும் வேறு யாரோ சத்தி எடுத்ததாக அள்ளிக்கொண்டு வந்து அதை என்னுடைய வாக்குள் தள்ளப்பார்கிறீர்கள். அதன் பொருள், முன்னரும் யாரோ விளங்கவைத்தும் விளங்காமல் இன்னமும் அவலப்படுவதை எனக்கு சொல்ல வருகிறீர்கள்.

 

நான்கிராமத்தை தான் முன் வைத்தேன் என்கிறீர்கள் அப்போது நாட்டை வைப்பது தானே பரந்துபட்டது என்று நான் போட்ட வாதாட்டத்தில் தூங்க ஆரம்பிக்க முதல் நாடு என்றால் என்ன; கிராமம் என்றால் என்ன? என்ற வரைவிலக்கணத்தை இங்கே எழுத முடியுமா? அவற்றுக்கிடையிலான வித்தியாசம் என்பது வெறும் நிலப்பரப்பென்ற பரிமாணமே என்ற அறியாமையை நீக்கிக்கொள்ள முடியுமா? அதன் பின்னர் கிராமத்தை நாட்டுடன் தொடுக்கும் பேதமையை நிறுத்த முடியுமா?  நீங்கள் கூற முயலும் சொறிலங்கா என்று நாடு இருப்பதை யார் ஏற்றுக்கொண்டார்கள் என்றதைக் கூற முடியுமா? யார் அதை ஆக்கிவைத்தார்கள்?  அதை விட நீங்கள் இருக்கும் புலம் பெயர் நாட்டை விட்டு விட்டு, அந்த நாட்டு பிரச்சனைகளுக்கு முன் உரிமை கொடுக்காமல் சொறி லங்காவை துக்கிபிடிக்க முயல்வதை விட இனத்துவேசம் இருக்க முடியுமா?

 

இன்று சிவாஜிலிங்கமும் அரசுக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறார். அரசு ஒழுங்காக தேர்தலை நடத்தாவிட்டால் தாம் தேர்தலில் நிற்கமாடோம் என்றும் அதன் பின்னர் சொறிலங்கா நாடுக்கு என்ன வாகும் என்றதை அரச சர்வாதிகாரிகள் விரைவில் உணர வேண்டிவரும் என்றும். இதை அரசரின் சில மந்திரிகளும் துணிச்சலாக அவரின்முகத்துக்கு நேரே கூறிவிட்டார்கள். ஆனால் கொட்டேல் சோபா கழுவைக்கும் பீரிசு போன்ற கோளைகள்தான் மகிந்தாவின் கருத்தை எதிர்த்துக் கருத்துகூறமுடியால் அதை ஏற்றுக்கதைக்கிறார்கள்.  விரைவில் சீனா நுரச்சோலையைக்கைப்பற்றி, அமெரிக்கா சவூதியூடாக சபுகஸ்கந்தையைக்கைப்பற்றி, இந்தியா சாம்பூரை கைப்பற்றி, சொறி லங்கா நாடு முடிந்துவிடும். உலகிலேயே சரவதேசத்தால் ஐ.நாவில் வைத்து நெருக்கப்படும் ஓரிரு நாடுகளில் சொறிலங்கா என்பது ஒன்றேன்ற பின்னரும் அப்படி ஒரு நாடு எனப்து இருக்கா? (ஐ.நாவில் 190 நாடுகளுக்குமேல் சுயாட்சி நாடுகள் இருக்கின்றன)

 

ஒருவன் தனக்கு ஒரு பெயரை வைத்து ஏன் தன்னை மற்றவனில் இருந்து விலத்திக்கொள்ள வேண்டும் ? சுகன் என்ற பெயரை ஒருவர் சண்டமாருதன் என்று மாற்ற முயன்றால் அதில் தனது அப்பட்டமான  சண்டமாருத மேற்குடித்தனத்தை பறைசாற்றி தனது முக்கியத்துவதை அவர் எழுப்ப முயன்றதை மூடிமறையக்க முடியுமா? சண்டமாருதன் என்ற பெயர் தனது மேட்டுக்குடித்தனத்தை பறை சாற்றவில்லையா? தனது மேட்டுக்குடித்தனத்தை பறைசாற்றத்தான் சுகன் என்ற பெயர் கைவிடப்பட்டது என்பது உண்மை இல்லையா? ஒரு ஆண் சேலை கட்டாமல் கால்சட்டை போடால் அவன் ஆண்வர்க்க மேட்டுக்குடி இயல்பு  என்பதை நீங்கள் ஒருவர்தான் விக்கி விக்கி விளங்க வைப்பதை பார்த்திருக்கிறேன். அந்த நினைவு உள்ள ஒருவர் கால்ச்சட்டை போடுகிறார் ஆயின் அவர் கட்டாயம் வீட்டில் தான் அணியும் காலச்சட்டையால் மட்டும் அல்லாமல் மனத்தாலும் ஆணாதிக்கம் பிடித்தவராகத்தான் நடந்தும் கொள்வார். அவர் அதை ஒழிக்க இன்றுமுதல் சேலைகட்டி வெளியில் போவதுதான் மனத்தை பண்படுத்தும். 

 

முதல் தடவையில் நான் எழுதியிருப்பது விளங்காவிட்டால் திரும்ப ஒரு தடவை நான் மேலே எழுதியிருப்பதை வாசிக்கவும். நான் எனது கருத்துக்களை நாடு, இனம்,மதம்,அகிலம், என்று எதற்குள்ளும் முடக்காமல் எழுதிருப்பது விளங்கும். அதை தவிர்ப்பதற்க்காகவே எதிலும் ஒட்டிக்கொள்ளகூடாது என்று போதிக்கும்  தூய நிர்வாண  இந்து சமய வேதாந்திலிருந்து கருத்துக்களை வைக்க முன்வந்தேன்.  இனிதன்னும் விளங்காவிட்டால் இவ்வளவு விளக்கக்குறைவுடன் யாழில் யாரும் கருத்து எழுதுவதில்லை என்பதால் யாழின் அங்கக்துவத்தை ரத்து செய்தால் மற்றய அகந்தவர்களின்மானம் காக்கப்படும்.  

 

இதுவரையில் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் வரவில்லை.

 

தமிழர் தரப்பு என்ற புலம்பெயர் தேசத்து கருத்தியல்

 

எந்த சாக்கடைத்தத்துவம் இதைக் கண்டு பிடித்தது? 
 

யார் தாக்கப்பட்டார். எங்கே தாக்கப்பட்டார்? அவருக்கு யார் ஏன் உதவேண்டும்? (

 

தீயில் விழுந்து எரிந்த பிக்குவிக்கு யார் உதவப் போகிறார்கள்? அவர் மிருகங்களுக்காக  மேட்டுக்குடி மானிடத்தை எதிர்த்து போராடவில்லையா? இனி முஸ்லீம்கள் அசைவ சாப்பட்டை தவிர்ப்பார்களா?  

நாடு என்றால் என்ன? கிராமம் என்றால் என்ன?

 

இந்து சமயத்திலும், சைவ சமயத்திலும், அஞ்ஞானி ஒருவன் தான் பரப்பிரமத்துடன் கலந்திருப்பதை உணர்ந்துகொள்ள முடியாமல் நான் என்று தன்னை  தன்னைத்தான்  உணர்ந்துகொள்ளும் பிரக்ஞையான அகங்காரத்தில் காட்டப்படும் பேதமாக தாங்கள் சொல்லவரும் வித்தியாசம் என்ன?  

 

 

பதிலுக்கு காத்திருக்கிறேன். 
  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமான உணர்வு என்பது சாதி மத வர்க்க பிரதேச சாக்கடைக்கு அப்பாற்பட்ட ஒன்று.

அது பொதுவான ஒரு உணர்வு.

அது கூட சாதி மதம் சார்ந்துதான் இருக்கும் என்கின்றார் விசுகு அவர்கள்.

இதுதான் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ புலம்பெயர் அமைப்புகள் மறுப்பதற்கு அடிப்படைக் காரணம்.

இதையும் கடந்து மிகச் சிறு அளவில் தனிமனிதர்கள் மனிதபிமானத்துடன் உதவுகின்றார்கள்.

அது ஒன்றுதான் பிரதானமானதும் முக்கியமானதும் என்பதே எனது கருத்து.

 

நீங்கள் தமிழர்கள் எதுக்கும் உதவாதவர்கள்.  சாக்கடை   என்கின்றீர்கள்

அதற்கே எனது கேள்வி இருந்தது

 

நீங்கள் எதை எழுதினாலும் எந்த முடிவை எடுத்தாலும்

ஒரு தோல்வியை  முன் வைத்து தங்கள் ஆய்வுகளை  முன் எடுக்கின்றீர்கள்

 

மாறாக நான்

இந்த இனத்திடமிருக்கும்  ஒரு பகுதி தியாக மற்றும் வீரத்தை வைத்து பார்க்கின்றேன்

ஒரே நேரத்தில்

மகனாக

அண்ணனாக

தம்பியாக

கணவனாக

அப்பாவாக

பேரனாக..............  ஒரு மனிதனால் இருக்க முடியுமாயின்

அவன் 

எந்த சாதியாகவும்  இருந்து கொண்டு

எந்த மதமாகவும் இருந்து கொண்டு

எந்த ஊராகவும் இருந்து கொண்டு....

தமிழன் என்ற பொதுப்படையை சிந்திக்கலாம் என்பது தான் எனது கருத்து.

 

அதற்கு அத்தாட்சியாக

எம்  கண் முன்னால் செய்து காட்டினார்களே மாவீரரும் போராளிகளும்

அளப்பெரும் தியாக வேள்வி.

அது உலக வரலாற்றிலேயே கிடையாத பெரும் வரலாற்றுப்பதிவுகள்.

அவை இந்த இனத்திலிருந்து தான் வந்தவை. இனியும் வரும்.

சிலர் தங்கள் அடிவருடித் தனங்களை மறைக்க தமிழ் மக்களின் சாதிய போர்வைக்குள் மறைகிறார்கள். இதற்கு இன்றைய மேல்நாட்டு கம்யூனிஸ்டுக்களின் ஏட்டுசுரைக்காயான "மேட்டுகுடி" வசனத்தை பறை அறைகிறார். இந்த கிப்போகிறேசி பாண்டித்தியதை எதிர்த்த ஆராச்சிகள் தான் இந்துமத வேதந்தமும், சைவ சிந்தாந்தமும். அதை தெரிந்தால் தான் ஏன் இந்து மதத்தை எதிர்க்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

 

இன்றை அரசு அடிவருடிகள் போன்ற சுய நலமிகள் அன்று இந்து மதத்தில் திணித்துதான் சாதித்துவம்.  வென்றவர்கள் பக்கம் திரும்பி ஓடிப்போய் நின்று அப்பாவி மக்களை அடிமையாகியவர்கள்தான், சிவனிலிருந்து தோன்றிய சிவாச்சாரிய தொண்டர்களின் பேரில் தங்களை தாங்கள் பிராமணர் ஆக்கி மக்களை ஏமாற்றும் தத்துவங்கள் போதித்தவர்கள்.  இவர்களேதான் தங்கள் எஜமானார்களுக்காக தமிழர் கண்டு பிடித்து வைத்திருந்த தத்துவங்களை இருக்கு வேதத்தில் திணித்தவர்கள்.

 

இவர்கள் முதலில் ஆரம்பிப்பது இந்த வசங்களில் தான்."ஏய் முட்டாளே நீ உன்னை நீ அழித்துக்கொள்கிறார். நான் அறிவாளியாக இருக்கிறேன். ஆகையால் நான் தபித்து விட்டேன். நீ சாக்கடைக்குள் உழல்கிறாய. நான் சாமரம் வீச சிங்காசனத்திற்கு அருகில் இருக்கிறேன். நீ எனது சொல்லை கேட்டு இன்று முதல் நடந்து கொள்".

 

இந்த மேட்டு குடித்தன போதனைகள் வரும்போதே தெரிந்து கொள்ளவேண்டும் இந்த கதைகாரர்கள் யாருடையவோ எடுபிடிகள் மட்டும்தான் என்பது. உதவ வருபவன் ஆரம்பிக்கும் கதைகள் இதுவல்ல. யாரோ ஒருவன் தெருவில் அடிபட்டுக்கிடந்தால் அவனுக்கு, அவன் எப்படி போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்கு சிறை செல்ல வேண்டும் என்றா அங்கு போகும் மருத்துவ முதல் உதவியாளர்கள் பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.  பல்லாயிரக்கணகான மக்கள் இருக்க இடம் உணவு இன்றி அலையும் போது இது உங்களின் சாக்கடை சாதித்துவத்தால் வந்தது என்று அவர்களை ஏளமை பண்ணி அவர்களின் வெந்த புண்ணில் குத்துகிறார்கள். அவர்களின் உறவுகளான புலம் பெயர் நாடுகளில் இருந்து உதவினாலும் என்று அதற்கேற்ற சட்டங்களை போட்டு அவர்களுக்கு அனுப்ப முயலும் பணங்களை சூறை ஆடுகிறார்கள். இந்தியா கட்டிக்கொடுக்க முயலும் வீடுகளை கூட எந்த நாட்டிலும் போடாத சட்டங்களை போட்டு சிங்கள முஸ்லீம் மந்திரிகள் தங்களுக்கு கொள்ளை அள்ளுகிறார்கள். 

 

இப்படி மந்திரிகள் கொள்ளை அடிப்பதுதான் தமிழ் மக்களின் சாத்தித்துவத்தை திருத்த சரியான பாதையாக இந்த பண்டிதர்கள் யாழில் போதனை வைக்கிறார்கள்.

 

வடமாணதேர்தலில் அரசு கட்டிய வேட்டியும் கழன்று விழ ஓடப்பொகிறதென்பததால் அதை தடுக்க சாதியக் கதைகளால் தமிழரை பிரிக்க முயல்கிறார்கள்.

 

இவர்கள் அரசை எதிர்த்து யாழில் ஒரு வசனம் எழுத முடியாமல் தவிப்பது திரும்ப திரும்ப பார்த்தது. அந்த திரிகளுக்கு எத்தனை முறை அனுப்பி வைக்க முயன்றாலும் அங்கு சென்று எழுதுவதில் தப்பி ஒழிந்து வாழ்கிறார்கள். இதை விட கீழான மேட்டுக்குடித்தனம் இருக்க முடியுமா?  எழுத முடிந்த ஒன்று சாதித்துவத்தை பற்றியது. எந்த நம்பிக்கை அழிந்த நிலையிலும் ஒற்றுமை போதிப்பத்தாக நடித்து சாதித்துவத்தை வைத்து பிரித்து அழித்துவிடவேண்டும் என்பது இவர்களின் இலக்கு.

 

அரச குடும்பம் அடிக்கும் கொள்ளையால் அரசு கடனில் முழுகிவிட்டது. அதற்கு வருமானம் தேட புலம் பெயர் மக்கள் தாயக மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். கோடிக்கணக்கான மக்கள் ஒரு நேர உணவின்றி அலைய, சீனாவிடம் சுதிக்கு தொலைக்காட்சி பெட்டி பார்ப்போருக்கு  சனல்கள் அனுப்ப வங்குரோத்தாகிய நாட்டை மேலும் கடனுக்குள் தள்ளி அரசு தொலைத்தொடர் செய்மதிகளில் பணம் கொட்டுகிறது. இந்த பணத்தை சிங்கள மக்களுக்கு தன்னும் அவர்களின் மின்சார கட்டனத்தை குறைக்க பாவித்திருக்கலாம் என்று இவர்கள் எழுதுவதில்லை. மின்சாரம் இல்லாமல் எப்படி டிவி பார்க்க சாதாரண மக்களுக்கு முடிய போகிறது? அது சிங்கள மக்களுக்கா எழுதுவதாயினும் அது அரசை எதிர்த்து எழுதுவதென்பதால் அதை செய்ய மறுத்துவிடுகிறார்கள்.

 

இதை எல்லாம் மூடி மறைக்க கண்டு பிடிப்பது,  கஸ்டப்பட்ட சனத்திடம் போய் பழைய கதைகள் கதைக்கும் பிரதேசவாதம் பிரச்சாரமாக அகப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

 

நீங்கள் தமிழர்கள் எதுக்கும் உதவாதவர்கள்.  சாக்கடை   என்கின்றீர்கள்

அதற்கே எனது கேள்வி இருந்தது

 

நீங்கள் எதை எழுதினாலும் எந்த முடிவை எடுத்தாலும்

ஒரு தோல்வியை  முன் வைத்து தங்கள் ஆய்வுகளை  முன் எடுக்கின்றீர்கள்

 

மாறாக நான்

இந்த இனத்திடமிருக்கும்  ஒரு பகுதி தியாக மற்றும் வீரத்தை வைத்து பார்க்கின்றேன்

ஒரே நேரத்தில்

மகனாக

அண்ணனாக

தம்பியாக

கணவனாக

அப்பாவாக

பேரனாக..............  ஒரு மனிதனால் இருக்க முடியுமாயின்

அவன் 

எந்த சாதியாகவும்  இருந்து கொண்டு

எந்த மதமாகவும் இருந்து கொண்டு

எந்த ஊராகவும் இருந்து கொண்டு....

தமிழன் என்ற பொதுப்படையை சிந்திக்கலாம் என்பது தான் எனது கருத்து.

 

அதற்கு அத்தாட்சியாக

எம்  கண் முன்னால் செய்து காட்டினார்களே மாவீரரும் போராளிகளும்

அளப்பெரும் தியாக வேள்வி.

அது உலக வரலாற்றிலேயே கிடையாத பெரும் வரலாற்றுப்பதிவுகள்.

அவை இந்த இனத்திலிருந்து தான் வந்தவை. இனியும் வரும்.

நீங்கள் கூறுவது போல் தமிழனாக இருக்க முடியாது என்பதை வரலாறு சொல்கி்ன்றது.போராளிகள் மாவீரர்கள் அப்படி இருந்தார்கள் ஆனால் முடிவு என்ன? இனத்தின் இருப்பே கேள்விக்குறியாக இருக்கின்றது. மதவாதம் சார்ந்த பிளவுகள் ஏறக்குறைய பாதித்தமிழர்களை பிளந்தது. கருணா கையில் எடுத்த பிரதேசவாதம் பாரிய பின்னடைவை சந்திக்க வழிவகுத்தது. வர்க்க ரீதியாக வசதியுள்ளவனின் நாழுவல்கள் அது சார்ந்த புலப்பெயர்வுகள் தேசம் என்பதற்குப் பதிலாக வெளிநாடு என்ற தேர்வை உறுதியாக முன்வைத்து இன்றும் நிற்கின்றது. இனம் சிதிலமடைநது இருப்பையே கேள்விக்குறியாக்கி நிற்கின்றது. நீ்ங்கள் எதெதெல்லாம் வைத்துக்கொண்டு இனமாக இருக்க முடியும் என்று சொல்கின்றீர்களோ அவைகள் இருக்கும் வரை இனம் என்ற கட்டுமானமே சாத்தியம் இல்லை. மல்லுக்கு நின்று சாத்தியம் என்பது தற்கொலை. என்னுமொரு முள்ளிவாய்க்கால். இதைத்தான் வரலாறு சொல்கின்றது.

மனிதகுலத்துக்கு விரோதமான சாதி மதம் பிரதேசவாதம் ஊர்வாதம் வர்க்கபேதங்களை தூக்கிப்போட முடியாதவர்களுக்கு நாடு தேவையில்லை. அரசு தேவையில்லை. சுயாட்சி அதிகாரம் தேவையில்லை. அதிகாரத்தில் உள்ளவர்களை அண்டி நக்கிப்பிழைப்பார்கள்! அடிமையாய் செத்தொழிவார்கள், நாகரீக உலகில் மனிதாபிமானமற்றவர்களாகவும் கோட் சூட் போட்ட காட்டுமிராண்டிகளாகவும் நாடற்று இனமற்று மொழியற்று சுய அடயாளமற்று அனைத்து அவமானங்களையும் சந்திக்கும் இழிவானவர்களாக அழிந்துபோவர்கள். வினை விதைத்து தினை அறுக்க முடியாது. மனிதனாக நகரீகமடைந்தால் மட்டுமே தமிழனாக உயரமுடியும்.

கருணா கையில் எடுத்த பிரதேசவாதம் பாரிய பின்னடைவை சந்திக்க வழிவகுத்தது.

 

கருணா தமிழருக்கு உதாரணமா? தமிழரில் இருக்கும் புல்லுருவிகளுக்கு உதாரணமா?

 

கருணாக்களை களையெடுக்க வேண்டும் என்பதில் தமிழருக்கு சாதித்துவ கருத்து வேறுபாடு இருகிறது என்பதா இப்போது விவாதம்?

 

யார் தடுக்கிறார்கள் யாராவது கருணாக்களை களை எடுக்க முன்னால் சென்றால்.

 

இனிமேலைய எழுத்துக்களில் இந்த கருணாக்கள்தான் தமிழரை அழித்தவர்கள் என்று எழுத வந்தால் நாங்கள் உற்சாக மூட்ட போவதேயல்லாமல் எதிர்க்கப் போவதில்லை.

 

ஆனால் நடந்த உண்மை, கருணா பிரதேச வாதத்தை ஆரம்பித்து அல்ல இயக்கத்தை விட்டு போனவர். சுயநல நடத்தைகளை வைத்து இயக்கத்தை கெடுத்துவிட்டு அதற்கு தண்டிக்க முயன்றபோது புலிகளுக்கு பிரதேசவாதம் என்று கதை கட்ட முயன்றவர்.

 

அதையேதான் யாழின் சுயநலமிகளும் செய்கிறார்கள். தாங்கள் அரசிடம் பெறும் நன்மைகளை நியாப்படுத்த தமிழர்கள் மேட்டுக்குடி என்கிறர்கள்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.