Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையே நான்கு முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையே நான்கு முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்து 
[Thursday, 2013-05-30 09:13:15]
 
தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் நான்கு மிக முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்தாகவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 'த பெங்கொக் போஸ்ட்' என்ற இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தாய்லாந்தின் பிரதமர் யிங்லக் சின்வேட்ரா எதிர்வரும் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார். இந்த விஜயத்தின் போது, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், இராஜதந்திரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளது கடவுச் சீட்டுகளை வைத்திருப்போருக்கு, இரண்டு நாடுகளுக்கும் வீசா தேவையில்லை என்ற உடன்படிக்கை மற்றும் இரண்டு நகர இணைப்பு ஆகிய நான்கு உடன்படிக்கைகள் கைச்சாத்தாகவுள்ளன. இதன்படி, கண்டி நகரமும், தாய்லாந்தின் ஆயுத்தியா நகரமும் ஒன்றிணைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்து பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது, ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு உயர்மட்ட சந்திப்புகளையும் அவர் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

http://seithy.com/breifNews.php?newsID=83864&category=TamilNews&language=tamil

 

  • கருத்துக்கள உறவுகள்

1950 ஆண்டு, எழுதின ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தமே... நிறைவேறையில்லை.
அதுக்குப் பிறகு சிறிலங்கா, எத்தனை கையெழுத்து வைச்சிருக்கும்.
கடைசியாய்... பாவம், பைலட் ராஜீவ் காந்திக்கும், பிடரியில் அடி கொடுத்து, சொன்ன பின்பும்...
தாய்லாந்து... ஏன், முந்துது.
ஓ... அது புத்தர் தேசம். புத்தியும், மத்திமமாகா இருக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ சொல்வார்கள் சிறி

சுளகு

படக் படக்கென்று அடிக்குமாம்

இரு நாட்டுக்கும் அது பொருந்தும்

இரண்டு நகர இணைப்பு ஆகிய நான்கு உடன்படிக்கைகள் கைச்சாத்தாகவுள்ளன. இதன்படி, கண்டி நகரமும், தாய்லாந்தின் ஆயுத்தியா நகரமும் ஒன்றிணைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதென்ன புதுக்கதை?

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைகள் விவகாரத்தில் உலக நாடுகள் பலவற்றாலும் ஒதுக்கப்பட்டு 

 வரும் மகிந்த அரசு சிங்கள மக்களை ஒரு மாயைக்குள் வைத்திருக்க வேண்டுமானால் 

மாலைதீவு மடகஸ்கார் தாய்லாந்து போன்ற நாடுகளுடனாவது ஏதாவது ஒப்பந்தத்தில்

கையெழுத்திட்டே ஆகவேண்டும்    

 

  • கருத்துக்கள உறவுகள்

ஓ... அது புத்தர் தேசம். புத்தியும், மத்திமமாகா இருக்கும்.

 

நீங்கள் இப்படி சொல்லுகின்றீர்கள் ஆனால் தமிழ், சிங்கள முற்போக்குவாதிமார் எல்லாம் இப்படி சொல்லுயினம்..

 

வெற்றி வளைவும் வெசாக் கூடும் - நிலாந்தன்

26 மே 2013

அஹிம்சா மூர்த்தியான கௌதம புத்தரின் போதனைகளே போதும். நல்லிணக்கத்தை அங்கிருந்து தொடங்கினாலே போதும்.  

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92163/language/ta-IN/article.aspx

 

 

 

புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம் !: A.P.G சரத்சந்திர (சிங்கள மொழியிலிருந்து..)

Birthday-300x250.jpg

அன்றைய காலத்திலிருந்தே உலகத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தத்தின் இயல்பே குரூரமானது. எனினும் முன்னையவர்கள் ஒழுக்க மேம்பாடுகளுக்கமையவே யுத்தம் செய்தார்கள். ஒழுக்க மேம்பாடுகளுக்கமைய யுத்தம் செய்வது பற்றி கற்றுத் தரும் மகாபாரதம் போன்ற மகா காவியங்கள் அக் காலத்தில் எழுதப்பட்டன. இராமன், இராவணன் யுத்தமானது இராமாயணம் எழுதப்படக் காரணமானது. மகா அலெக்ஸாண்டர் அரசருக்கும் கூட யுத்த களத்தின் கௌரவங்கள், ஒழுக்க மேம்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனால் அவரும் தோல்வியுற்ற எதிரிகளை மிகவும் கௌரவத்துடன் நடத்தினார் என்று சொல்லப்படுகிறது.

எங்களது எல்லாள, துட்டகைமுனு யுத்தம் கூட மிகவும் நீதமாக நடைபெற்ற  யுத்தமொன்று. அது வெறி பிடித்த இனக் கலவரமொன்றல்ல. அரசர்கள் இருவர் தனது சேனையிலிருந்த உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள, நேர்மையாக யுத்தம் செய்து வெற்றி தோல்வியைத் தீர்மானித்தார்கள். தோல்வியுற்ற எல்லாளனுக்காக கல்லறையொன்றைக் கட்டி அதனை கௌரவப்படுத்தும்படி எல்லோருக்கும் கட்டளையிட்டார் துட்டகைமுனு மன்னன். அக் கட்டளையானது இன்றும் பின்பற்றப்படுகிறது. யுத்தத்தில் வென்ற துட்டகைமுனு மன்னன், அதன் பிறகு அமைதியாக வாழத் தீர்மானித்தார். அவர் இன்றும் கூட எங்கள் அனைவருக்கும் அமைதியாக வாழ வழி காட்டும் ருவன்வெலி மஹாசாயவைக் கட்டினார். அசோகமாலா காதல் வயப்பட்டு தனது புத்திரனை தாழ்ந்த குலத்தவருக்கே கொடுத்தார்.

எங்களை ஓரளவு மிகவும் குரூரமான அனுபவங்களுக்கு ஆளாக்கியது அஸவேதுவாவின் வெள்ளைக்கார ஆளுனர்கள். அவர்கள் இங்கு செய்த குரூரமான குற்றங்களுக்காக ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டதாக வரலாற்றில் எழுதப்பட்டிருக்கிறது. ஊவா வெல்லஸ்ஸயில் கலவரத்தை முன்னெடுத்த ப்றவுன்ரிக் ஆளுனர் எமது மக்களை மிகவும் கொடுமையாக நடத்தியமையை அவரிட்ட சட்டங்களே தெளிவுபடுத்துகிறது. அச் சட்டங்களுக்கேற்ப மனிதர்கள் மாத்திரமல்ல, மனிதர்களுக்கு நிழல் வழங்கும் மரஞ்செடி கொடிகள் கூட அழிக்கப்படக் கட்டளையிடப்பட்டிருந்தது. எனினும் அவை அவ்வாறே செயல்படவில்லையென ‘டேவ்’ சொல்கிறது. இராஜசிங்க அரசன், எஹெலபொல இளவரசியிடம் அவளது குழந்தைகளை அவளைக் கொண்டே உரலிலிட்டு இடித்ததாகச் சொல்லப்படும் கதையும் கூட ஆங்கிலேயர்களால் அரசனை அவமானப்படுத்த பரப்பப்பட்ட வதந்தி என்று இன்று கருதப்படுகிறது.

 

1983-300x212.jpg

 

.

 

- தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

 

http://inioru.com/?p=21400

 

 

Edited by putthan

இவ்வளவு நாளும் கண்டியில் சிங்களத்திகள் வெள்ளை மட்டும்தான். தாய்லாந்துடன் இணைத்த பின்னர் பஞ்சவர்ணமாகிவிடுவாளவை.

 

பொது பல சேனா 10,000 வீரர்களை முஸ்ளீம்களின்  பசுவதைக்கு தீக்குளிக்க அனுப்பப் போகுது. அதற்கு பிறகு தாய்லாந்து சப்பட்டைகளின் கண்டி - ஆயுத்தியா இணைப்புக்கு இன்னொரு 10,000 ஒதுக்க வேண்டி வரும்.  :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம்தான் உடன்படிக்கை கையெழுத்திட்டாலும் ... கிந்தியா போன்று அத்தியடி குத்தியள்களை காப்பாற்ற தனி வாய் வழி ஒப்பந்தம் ... போடப்பட்டதா இல்லையா .. ? ரெல் மீ கீலீயளி

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.