Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த ஊரில் இதுதானே முதல் தடவை.. விசயமாக்காதேங்கோ… விட்டுவிடுங்கோ..

Featured Replies

இந்த ஊரில் இதுதானே முதல் தடவை.. விசயமாக்காதேங்கோ… விட்டுவிடுங்கோ... ஒரு ஊரில் ஒரு சம்பவம். பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு நித்தமும் செல்லும் பாதை வழியே ஒரு சிறுமி நடந்து செல்கிறாள். எதிரே வக்கிர எண்ணங்களைக் கொண்ட மனித மிருகம் ஒன்று அவளை வழி மறித்து காட்டுக்குள் அழைத்துச் செல்கிறது. தனது காமப் பசி அடங்கும் வரை அப்பிஞ்சினை கதறக்கதற வன்புணர்வு செய்த பின் குற்றுயிருடன் இரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டுவிட்டு செல்கின்றது. காமப்பசிக்கு இரையாகி சிதைத்த நிலையில் 

Sexual%20Assault%20and%202.jpgபற்றைக்குள் வீசப்பட்டிருந்த பாலகியின் முனகல் சத்தம் கேட்ட ஊரவர்கள் அவளை மீட்டெடுத்து வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு உயிருக்காக போராடிக் கொண்டிருந்த அப்பிஞ்சு காப்பாற்றப்பட்டது.

இக்கொடூர செயலைச் செய்தவனைக் கைது செய்யுமாறு மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். குற்றவாளியைக் கூண்டில் ஏற்றி பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்குமாறு வீதியில் இறங்கிப் போராடினார்கள். போராட்டம் வலுப்பெற்று அவ் ஊரின் இயல்பு நிலையை ஸ்தம்பித்தது.

போராட்டத்தின் உக்கிரத்தை உணர்ந்த சிலர் அரச உயர் அதிகாரி ஒருவரை பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு தூது அனுப்பினர். தூது சென்ற அதிகாரி, ‘இந்தப் பிரச்சினை எங்கட ஊருக்கு இப்பதானே முதல் தடவை. இதைப் பெருசு படுத்தாமல் விடுங்கோ…’ எனச் சொல்லியிருக்கிறார்.

இந்தச் சம்பவம் இந்தியாவின் புதுடில்லியிலோ அல்லது அங்குள்ள ஏதோ ஒரு பின்தங்கிய கிராமத்திலோ நடந்த சம்பவம் அல்ல. இது கிட்டடியில எங்கட நாட்டிலுள்ள நெடுங்கேணி என்னும் ஊரில் நடந்த உண்மைச் சம்பவம் பாருங்கோ…

அந்த ஊரின் மக்கள் படும் துன்ப துயரங்களை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வைக் காணவேண்டிய பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் அரச உயர் அதிகாரியின் வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகள் தான் அவை.

சிறுமி ஒருத்தி மிகமோசமாக வன்புணர்வு செய்யப்பட்டு உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறாள். பெற்றவர்கள் வேதனையில் பரிதவிக்கிறார்கள். ஊரோ அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கு. இந்த நிலையில், ஊரின் பொறுப்பு வாய்ந்த பெரிய அதிகாரி அவர்களுக்கு ஆறுதலாகச் சொன்ன வார்த்தைகள் தான் மேற்சொன்ன வார்த்தைகள் பாருங்கோ..!

இந்த ஊரில் இதுதானே முதல் தடவை. இதைப் பெரிய விசயமாக்காதேங்கோ… விட்டுவிடுங்கோ. என்றால் இதன் அர்த்தம் தான் என்ன? இதே போல இன்னும் இரண்டு, மூன்று இந்த ஊரில் நடக்கட்டும் அதுக்குப் பிறகு பார்ப்போம் என்பதா…? அல்லது சம்பவத்தை மூடிமறைத்து குற்றவாளியைக் காப்பாற்றும் எண்ணமா?

நடந்த சம்பவம் என்ன சாதாரண திருட்டுக் கேஸா..? ஒரு சிறுமியின் மானம் பறிக்கப்பட்டு அவளின் எதிர்காலமே சிதைக்கப்பட்டுள்ள படுபாதகமான சம்பவம். கட்டுக்கோப்பான தமிழ் சமுகத்தின் கலாசாரத்திற்கு விழுந்துள்ள அடி.

இந்த ஜனநாயக நாட்டின் சட்டத்தை மீறிய செயல். பெண்கள், சிறுவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள சம்பவம். இதையா அந்த அரச அதிகாரி முதல் தடவை எனக் கூறி, முடிமறைக்க முயற்சித்தது ஏன்…?

இந்த நாட்டில கொலையோ, களவோ, அல்லது இப்படியான பாலியல் சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்களோ ஒன்றுக்கு மேற்பட நடக்க வேண்டும். அப்பதான் அவற்றைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமாக்கும்.! அந்தளவுக்கு இந்த நாட்டில் குற்றச் செயல்கள் அனைத்துமே சர்வசாதாரணமாகி விட்டன.

நாட்டின் நீதி நியாயச் சட்டங்கள் கூட அவற்றைக் கட்டுப்படுத்தாது போல… மனித இனத்தின் மானத்திற்கும் உயிருக்கும் இந்த அளவுக்குத்தான் இந்த நாட்டில் மரியாதையா…?

ஆனாலும் பாருங்கோ, நெடுங்கேணி மக்கள் சோர்ந்து போகவில்லை. அடக்குமுறை பேச்சுகளுக்கு பயந்து ஒதுங்கிப் போகவில்லை. குற்றவாளி கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என தொடர்ந்து போராடினார்கள்.

இதன் பயனால் குற்றவாளி இனங்காணப்பட்டார். படைச் சிப்பாய் ஒருவர் சிக்கிக் கொண்டார். படைச் சிப்பாய் தான் குற்றத்தைச் செய்தவர் என்பது பொலிஸ் தரப்பிற்கு ஏற்கனவே தெரிந்திருக்கு. ஏனெண்டால் குற்றவாளியை இனங்காட்டியது பொலிஸ் தானே… இந்த விசித்திர சங்கதியை ஒருக்கால் கேளுங்கோவேன்.

சம்பவம் நடந்த அண்டைக்கு பாடசாலை பொலிஸ் பாதுகாப்பு பதிவுப் புத்தகத்தில் கையொப்பமிடச் சென்ற அந்தப் பொலிஸை குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த ஆமிக்காரன் ஆயுதமுனையில் அச்சுறுத்திப் போட்டுதானாம் பிள்ளையை காட்டுக்குள் கூட்டிக்கொண்டு போனவன் எண்டு அவர் பொலிஸில் வாக்குமுலம் கொடுத்திருக்கிறாராம்.

அப்படியெண்டால் குற்றவாளியைப் பற்றி பொலிஸாருக்கு அன்றே தெரியும். இக்கொடிய சம்பவம் நடக்கப் போறதைப் பற்றி சிவில் பாதுகாப்பு பொலிஸ் ஒருவருக்கு அன்றே தெரியும். குற்றச் செயல் ஒன்று நடப்பதை அவர் முன்கூட்டியே அறிந்திருக்கிறார்.

நாட்டில் குற்றச் செயல்கள் நடக்க விடாது தடுக்க வேண்டியது பொலிஸாரின் கடமையல்லவா..? சிவில் பாதுகாப்புக்காரரான இவர் அப்போதே அச்சிறுமியை அக்கொடியவனிடமிருந்து காப்பாற்றியிருக்க வேண்டுமல்லவா? குற்றச்செயல் நடைபெறாமல் தடுத்திருக்க வேண்டும் அல்லவா?

ஆயுத முனையில் அச்சுறுத்திப் போட்டு சிறுமியை ஆமிக்காரன் கூட்டிச் செல்கிறான் எண்டால் அந்தப் பொலிஸ் உடனே தனது மேலதிகாரிக்கு அறிவித்து படை பட்டாளத்துடன் சென்று அச்சம்பவத்தை தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் இதனை அந்த பொலிஸ்காரன் செய்யவில்லை…?

எல்லாம் முடிந்த பின்னர் சாதாரண குடிமகன் போல் இப்போது குற்றவாளியைப் பிடிக்க வாக்குமுலம் கொடுக்கிறார். இதுவா சிவிலியன்களுக்கு வழங்கும் பாதுகாப்பு..?

வடக்கில் எல்லா அதிகாரமும் இராணுவத்தினருக்குத் தான் உண்டு என்பதைத்தான் இச்சம்பவமும் எடுத்துக் காட்டுது பாருங்கோ…

இதே போல் முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியிலும் ஒரு சம்பவம். படைச் சிப்பாய் ஒருவர் பாடசாலை மாணவியை வல்லுறவுக்காக காட்டுக்குள் பலவந்தமாக கூட்டிச் செல்லும் போது, ஊர் மக்களால் தடுக்கப்பட்டார். இந்த சிப்பாயை அவரின் உயர் அதிகாரிக்கும் இனம் காட்டினர்.

அதன்பின்னர் ஊருக்குள் சென்ற ஒருசிலர் இந்தப் பிரச்சினையைப் பெரிசு படுத்தாமல் விடுமாறு மக்களை அச்சுறுத்தியுள்ளார்கள். இப்படியாகப் பல சம்பவங்கள். பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் யுத்தக் காயங்களிலிருந்து முழுமையாக இன்னமும் மீளாத மக்கள் மீது ஆயுத முனையில் பலாத்காரக் கொடுமைகள்.

தமிழ் மக்கள் வாழும் வடக்குப் பகுதியில் இன்னமும் சிவில் நிர்வாகம் நடைமுறைக்கு வரவில்லை என்பதைத்தான் இவை காட்டுகின்றன பாருங்கோ...

வடக்கில் இராணுவத்தினரால் மக்களின் நிலங்கள் அபகரிப்பு, முகாம்கள் பலப்படுத்தல் என்பற்றோடு சிவில் நிர்வாகமும் அவர்களுக்குக் கட்டுப்பட்டதுதான் என்பதை இச்சம்பவங்களும் தற்போது தெட்டத்தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன பாருங்கோ...16_6_2007sadteddy.jpg

நெடுங்கேணி சம்பவத்தில் குற்றவாளி ஒரு படைச்சிப்பாய்தான் என்பது பொலிஸ் தரப்பினர் உடனேயே தெரிந்தும் கூட அதனை வெளிக்காட்டுவதற்கு இவ்வளவு நாட்கள் தேவைப்பட்டிருக்குப் பாருங்கோ… அந்தளவுக்க சிவில் பாதுகாப்பினருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் செல்லாக் காசாகப் போயிருக்குப் பாருங்கோ…

மக்களின் பிரச்சினைகளை முடிமறைக்க நினைக்கும் அரச அதிகாரிகள், குற்றம் நடக்கவிட்டு வேடிக்கை பார்க்கும் சிவில் பாதுகாப்புத் தரப்பினர், குற்றங்களைச் செய்து விட்டு சுதந்திரமாக உலாவித்திரியும் பாதுகாப்புப் படையினர்.

இவர்கள் தான் பாருங்கோ, இன்றைய நிலவரப்படி நாட்டின் செல்லப்பிள்ளைகள்.

-உங்களில் ஒருத்தன்

http://www.virakesari.lk/article/feature.php?vid=108

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடந்த சம்பவம் என்ன சாதாரண திருட்டுக் கேஸா..? ஒரு சிறுமியின் மானம் பறிக்கப்பட்டு அவளின் எதிர்காலமே சிதைக்கப்பட்டுள்ள படுபாதகமான சம்பவம். கட்டுக்கோப்பான தமிழ் சமுகத்தின் கலாசாரத்திற்கு விழுந்துள்ள அடி.

.

-உங்களில் ஒருத்தன்

http://www.virakesari.lk/article/feature.php?vid=108

இந்த கவனமாக வரையப்பட்ட ஆய்வுரையில் உள்ள "கறை". சம்பந்த பட்டவர்கள் கவனிப்பார்களா?

இந்த கட்டுரையில் உள்ள 99 % யும் ஏற்றுக்கொள்ளுகிறேன். ஆனால் மேலே மெர்க்கொடிடப்பட்டதர்ர்கு நாங்கள்தான் பரிகாரம் தேடவேண்டும்.

  • தொடங்கியவர்

99% மானவற்றுக்கும் பொறுப்பெடுக்க வேண்டியவர்களை போக விட்டுவிடு 1% பொறுப்பெடுக்க வேண்டியவர்களை தேடி பிடித்துக்கொள்ள முடிகிறது. இதைவிட பன்னாடைத்தனம் இருக்க முடியுமா?

மானத்தை பறிக்க என்று அரசு வெளிக்கிட்டிருக்கும் போது எந்த வகையால் அது காக்கப்படும்? மானத்தை கெடுத்து அனுப்பமட்டும் ஒரு அரசு வேண்டுமா? அதை வேண்டாம் என்று சொல்ல முடியவில்லையா?

இந்த ஊரில் இதுதானே முதல் தடவை. இதைப் பெரிய விசயமாக்காதேங்கோ… விட்டுவிடுங்கோ.

இதை சொல்பவர்கள் தங்கள் பையங்களை அந்த பிள்ளைக்கு கட்டிகொடுக்க முன் வந்தால் 

ஒரு சிறுமியின் மானம் பறிக்கப்பட்டு அவளின் எதிர்காலமே சிதைக்கப்பட்டுள்ள படுபாதகமான சம்பவம்.

இந்த சம்பவம் தமிழ்மக்களால் பொறுப்பேற்கப்பட்டுவிடும்.

எழுதியவருக்கு தலை இருக்க வால் இருக்கா என்று பாராமல் எழுதிய விடையத்தில் தலை வால் வைத்து எழுதப்பட்டிருக்கா என்று பார்க்க முடியுமா? 99% வீதம் நம்பத்தக்க செய்தியில் கூட சில குறைகளை கண்டுபிடிக்க முடிகிறது. அந்தோ பரிதாபம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு விளங்கவில்லை ஒரு காமுகன் ஒரு சிறுமியை பலவந்தப்படுத்தி சிதைத்தால் அச் சிறுமியின் மானம் போய் விடுமா :unsure:

  • தொடங்கியவர்

எனக்கு விளங்கவில்லை ஒரு காமுகன் ஒரு சிறுமியை பலவந்தப்படுத்தி சிதைத்தால் அச் சிறுமியின் மானம் போய் விடுமா :unsure:

வெளிநாட்டுக்கு வந்தால் தமிழ் ஈழத்து பாரம்பரியங்களை அறியாதவர்கள் மாதிரி நடிக்கலாம், எப்படி அரசு மானத்தை பறிக்க முடியும் என்று விவாதம் வைத்து அரசை காப்பற்றி துரோகிகளை தெருவில் உலவ விட்டாலும் இனி ஆமிகள் உலாவும் தெருவில் அந்த பெண் பிள்ளையின் உயிர் நூல் இழையில்தான்.  பாலியல் வன்முறையை ஆயுதமாக பாவித்து தமிழரை துவக்கு குண்டு கூட செலவழிக்காமல் அடக்குவதற்கு அனுப்பட்டவன் அவன். அவன் இதை செய்ய என்று அரசால் நியமிக்கப்பட்டவன். எந்த விளக்கமுமில்லாமல் அரசு மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு வைக்கப்பட வேண்டும். இது இன்னொரு பிள்ளைக்கு நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்.

மேலும் அவன் சாதாண காமுகன் கூட இல்லை. அவனை சாதாரண காமுனாக காட்டி தமிழரை ஏய்க முயல்வது அரச அடிவருடிகளின் மாய்மாலம்.

அந்த பிள்ளையை பெற்ற அப்பாவி, தமிழ் மக்கள்  கையிலே கூட அதனை கட்டுப்படுத்தும் நாணயம் இல்லாத பண்பாட்டை மாற்றத்தக்கவன் ஆக மாட்டான். புலத்து பேதமைகள்  அரசைக்காப்பாற்ற பேசும் ஏமாற்றுக்கதைகளை கேட்டு, அதை அந்த பெற்றர்கள்  திரும்ப சொல்லி அவர்களால் அதை கரை சேர்க்க முடியாது. பிள்ளைக்கு ஆமியால் நடந்த இழப்பு அளவிட முடியாத பெரியது. அதில் அதை சிறிதாக்க நடித்த அரசியல்வாதி கேடு கெட்ட துரோகி. அரசு மில்லியன் $ கணக்கில் கொடுத்து அந்த பிள்ளையின் திருமணத்தை நடத்த முன் வரவேண்டும். தமிழ் ஈழத்தில் இருக்கும் வக்கீல்கள் அரசு மீது இவற்றுக்கு வழக்கு்தொடக்க வழிகள் காண வேண்டும்.

யாரும் தான் தனியாக வாழலாம், ஆனால் பிள்ளையை பெத்தவன் அதை கரை சேர்த்து வைத்து பார்த்துவிட்டு இறக்கத்தக்க வழிகளை அரசு மறித்தால் அரசு கண்டிக்கப்படவேண்டும். அந்த பெண்பிள்ளையின் மானத்தை பறித்த குற்றத்திற்கு சம்பந்த பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் சிங்கள ஆமி செய்கிறானன் என்பதற்க்க அது தமிழர் பண்பாட்டில் தான்  இருக்கும் குறைபாடு என்ற கேணைத்தனமான விவாதங்களை கண்டு ஏமாறக்கூடாது. தமிழருக்கு என்ன பண்பாடு இருந்திருக்க வேண்டும் என்பதை அரச அடிவருகள்  சிங்கள் ஆமியால் வன்முறை நடந்த  பின் வந்து சொல்லித்தந்தால் அது ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதல்ல.

கால காலம் வாயை பொத்திக்கோண்டு அந்த பண்பாட்டில் அங்கெ இருந்து வாழ்ந்துவிட்டு, இனாமக எழுத யாழில் எழுதக்கிடைத்தால், பண்பாட்டுப்புரட்சி எழுதி பகல் நேரப் பொழுத்தை ஓட்டுவோர், சிங்கள ஆமி வன்முறை செய்தால் மட்டும், பண்பாட்டை ஒரு கணத்தில் மாற்றிவிட முடியும் மாதிரி நடித்துகாட்ட விரும்பினால் தங்களை இலங்கையில் அப்படி நிலவரங்களில் போட்டுவிட்டு பண்பாட்டை மற்றிக்காட்டலாம்.  உண்மையை சொல்லானால், இந்த பண்டிதர்கள் அதை மாற்றிக்காட்டினால், நிச்சயமாக எனது  புகழ்சியை பெறுவார்கள்.  அது எனக்கு விருப்பமானதொன்று.

ஆனால் அந்த அப்பாவி குடும்பம் அரசிடமிருந்து பெறத்தக்க நட்ட இழப்புக்களை, அந்த ஆமிக்காரன் தண்டிக்கப்படுவதை, இது என்ன பெரிய சமாசாரமா, அவன் சாதரண காமுகன் என்று கட்டுக்கதை கட்டி ஏமாற்ற இடம் அழிக்க முடியாது.

Edited by மல்லையூரான்

பாலியல் வல்லுறவு என்பது உடலை, மனதை சிதைக்கும் கொடூர வன்முறை. இந்த வன்முறை ஒரு சிறுமி மீது பிரயோகிக்கப்பட்டு இருந்தால் அதன் பாதிப்பு என்பது பல மடங்கு மோசமானது. இவ்வாறான வன்முறையை பிரயோகித்தவர் மீது அதி கூடிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

அதே போன்ற தண்டனையை விட ஒரு மடங்கு அதிகமாக பாலியல் வல்லுறவு எனும் கொடூர வன்முறைக்கு ஆளாகிய பெண்ணினைப் பார்த்து, சிறுமியைப் பார்த்து மானம் போனவள் என்று குறிப்பிட முனையும் அனைவருக்கும் கொடுக்கப்படல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ள சூழலில் நிலைமை தெரிந்த பின்னும் சிறுமியரை தனியாக ஏன் அனுப்புகின்றனர் என்றுதான் விளங்கவில்லை. விலங்குகளிடம் இருந்து தம் பிள்ளைகளைக் காப்பது பெற்றோரின் கடமைதானே. இவ்வளவு செய்யிற அரசாங்கமும் அதிகாரிகளுமா நீதியாக நடப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வல்லுறவு என்பது உடலை, மனதை சிதைக்கும் கொடூர வன்முறை. இந்த வன்முறை ஒரு சிறுமி மீது பிரயோகிக்கப்பட்டு இருந்தால் அதன் பாதிப்பு என்பது பல மடங்கு மோசமானது. இவ்வாறான வன்முறையை பிரயோகித்தவர் மீது அதி கூடிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

அதே போன்ற தண்டனையை விட ஒரு மடங்கு அதிகமாக பாலியல் வல்லுறவு எனும் கொடூர வன்முறைக்கு ஆளாகிய பெண்ணினைப் பார்த்து, சிறுமியைப் பார்த்து மானம் போனவள் என்று குறிப்பிட முனையும் அனைவருக்கும் கொடுக்கப்படல் வேண்டும்.

பாம்பு கடித்த பிள்ளையை 

பார்வையால் கொல்லும் மனிதர் நாம்

என்னத்த சொல்ல......... :(

  • தொடங்கியவர்

பாலியல் வல்லுறவு என்பது உடலை, மனதை சிதைக்கும் கொடூர வன்முறை. இந்த வன்முறை ஒரு சிறுமி மீது பிரயோகிக்கப்பட்டு இருந்தால் அதன் பாதிப்பு என்பது பல மடங்கு மோசமானது. இவ்வாறான வன்முறையை பிரயோகித்தவர் மீது அதி கூடிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

அதே போன்ற தண்டனையை விட ஒரு மடங்கு அதிகமாக பாலியல் வல்லுறவு எனும் கொடூர வன்முறைக்கு ஆளாகிய பெண்ணினைப் பார்த்து, சிறுமியைப் பார்த்து மானம் போனவள் என்று குறிப்பிட முனையும் அனைவருக்கும் கொடுக்கப்படல் வேண்டும்.

அதைவிட பல மடங்கு அந்த சிறுமிக்கு நீதிகிடைக்க கூடிய வழிகளை முடக்குபவர்களுக்கு கொடுக்க வேண்டும்.. ஒருதடவைதான் நடந்தாக கூறுபவர்களை காப்பாற்ற முயல்பவர்களையும் தண்டிக்க வேண்டும்.

வல்லுறவு வெறும் உடலை மட்டும் அல்ல பாதிக்கிறது. மேற்கு நாடுகளில் உடலுக்கும் மனத்தும் மருந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அங்க்கும் இன்றும் சமூக அந்தஸ்தை இழக்க செய்கிறது என்றதை ஏற்றுகொள்கிற்றார்கள்.

அங்கே சிறுமியின் சமூக அந்தஸ்ததை இழக்க வைத்தான் குற்றவாளி என்று கூறும் பத்திரியை மீது அவர்கள் தான் செய்தார்கள் என்று திருப்பி சாட்டமுயல்வது நிச்சயமாக அவன் சந்திக்க வேண்டிய மூன்றாவது வகை குற்றத்தில் இருந்து அவனை தப்ப வைக்கும் முயற்சியே. அந்த சிறுமி சுகம் பலம் பெற, பாடசாலைக்கு திரும்ப வேண்டும். சக சிறுமிகள் சேர்ந்து கூடி இரகசியமாக பினால் பேசப்போகிறார்கள்.  மத நம்பிக்கை உள்ள அருகில் குடியிரும் பாமரமக்கள் கழித்து வைக்க போகிறார்கள். சிறிமிக்கு மூன்றாவது இழப்பு இருக்கு என்று அதற்கு குற்றவாளி தண்டிக்கபடுவதை தடுக்க முயல்வது அந்த சிறுமியுடன் குடும்பத்தையும் நிர்க்கதிக்கு தள்ளும் நீதி.

(மேற்கு நாடுகளில் கூட தகாத உறவு வைக்காத பெண்ணை அப்படி கூறினால் அது மான நட்ட வழக்குக்கு ஒரு மூலகம். அகிலம் முழுவதிலும் உள்ள கோடுகள் இது பெண்ணுக்கு மட்டும் அல்ல தேவைப் படும் போது ஆணுக்கும்கூட ஏற்றேதான் கொள்கின்றன. அகிலம் முழுவதும் இது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும் போது அரசும் அந்த ஆமிகாரனும் சிறுமியின் மான பங்கத்துக்கு பணம் கட்டியே ஆக வேணும். தண்டணையும் பெற்றேதான் ஆகவேண்டும்.  சில அறிவிலிகள் இதை சிறுமி தேடிக்கொண்டுவிட்டதாக கட்டுரை ஆசியர் கருத்துவதாக பொருள் பட எழுதுகிறார்கள். கட்டுரையாசிரியர் சிறுமிக்கு மானம் என்று ஒன்று சமூகத்தில் இருக்கு என்றும் அதை கெடுத்தவர் குற்றவாளி என்றும் கூறுகிறார். அதை விளங்காமல்த்தான் ரதி அக்கா அதை சிறுமிதானே தான் கெடுத்தள் என்று ஆசிரியர் கூறுவதாக கேள்வி கேட்கிறார். வொல்கனோ நேராக குற்றம் சட்டாமல் கட்டுரை ஆசிரியரை தாக்குகிறார். நிழலி யாழில் தான் சட்டம் வைக்கலாம் என்பதால் தனது சட்டம் வெளியேயும் நீதியாக இருக்கும் என்று நினைக்கிறார்)

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக்கு வந்தால் தமிழ் ஈழத்து பாரம்பரியங்களை அறியாதவர்கள் மாதிரி நடிக்கலாம், எப்படி அரசு மானத்தை பறிக்க முடியும் என்று விவாதம் வைத்து அரசை காப்பற்றி துரோகிகளை தெருவில் உலவ விட்டாலும் இனி ஆமிகள் உலாவும் தெருவில் அந்த பெண் பிள்ளையின் உயிர் நூல் இழையில்தான்.  பாலியல் வன்முறையை ஆயுதமாக பாவித்து தமிழரை துவக்கு குண்டு கூட செலவழிக்காமல் அடக்குவதற்கு அனுப்பட்டவன் அவன். அவன் இதை செய்ய என்று அரசால் நியமிக்கப்பட்டவன். எந்த விளக்கமுமில்லாமல் அரசு மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு வைக்கப்பட வேண்டும். இது இன்னொரு பிள்ளைக்கு நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்.

மேலும் அவன் சாதாண காமுகன் கூட இல்லை. அவனை சாதாரண காமுனாக காட்டி தமிழரை ஏய்க முயல்வது அரச அடிவருடிகளின் மாய்மாலம்.

அந்த பிள்ளையை பெற்ற அப்பாவி, தமிழ் மக்கள்  கையிலே கூட அதனை கட்டுப்படுத்தும் நாணயம் இல்லாத பண்பாட்டை மாற்றத்தக்கவன் ஆக மாட்டான். புலத்து பேதமைகள்  அரசைக்காப்பாற்ற பேசும் ஏமாற்றுக்கதைகளை கேட்டு, அதை அந்த பெற்றர்கள்  திரும்ப சொல்லி அவர்களால் அதை கரை சேர்க்க முடியாது. பிள்ளைக்கு ஆமியால் நடந்த இழப்பு அளவிட முடியாத பெரியது. அதில் அதை சிறிதாக்க நடித்த அரசியல்வாதி கேடு கெட்ட துரோகி. அரசு மில்லியன் $ கணக்கில் கொடுத்து அந்த பிள்ளையின் திருமணத்தை நடத்த முன் வரவேண்டும். தமிழ் ஈழத்தில் இருக்கும் வக்கீல்கள் அரசு மீது இவற்றுக்கு வழக்கு்தொடக்க வழிகள் காண வேண்டும்.

யாரும் தான் தனியாக வாழலாம், ஆனால் பிள்ளையை பெத்தவன் அதை கரை சேர்த்து வைத்து பார்த்துவிட்டு இறக்கத்தக்க வழிகளை அரசு மறித்தால் அரசு கண்டிக்கப்படவேண்டும். அந்த பெண்பிள்ளையின் மானத்தை பறித்த குற்றத்திற்கு சம்பந்த பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் சிங்கள ஆமி செய்கிறானன் என்பதற்க்க அது தமிழர் பண்பாட்டில் தான்  இருக்கும் குறைபாடு என்ற கேணைத்தனமான விவாதங்களை கண்டு ஏமாறக்கூடாது. தமிழருக்கு என்ன பண்பாடு இருந்திருக்க வேண்டும் என்பதை அரச அடிவருகள்  சிங்கள் ஆமியால் வன்முறை நடந்த  பின் வந்து சொல்லித்தந்தால் அது ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதல்ல.

கால காலம் வாயை பொத்திக்கோண்டு அந்த பண்பாட்டில் அங்கெ இருந்து வாழ்ந்துவிட்டு, இனாமக எழுத யாழில் எழுதக்கிடைத்தால், பண்பாட்டுப்புரட்சி எழுதி பகல் நேரப் பொழுத்தை ஓட்டுவோர், சிங்கள ஆமி வன்முறை செய்தால் மட்டும், பண்பாட்டை ஒரு கணத்தில் மாற்றிவிட முடியும் மாதிரி நடித்துகாட்ட விரும்பினால் தங்களை இலங்கையில் அப்படி நிலவரங்களில் போட்டுவிட்டு பண்பாட்டை மற்றிக்காட்டலாம்.  உண்மையை சொல்லானால், இந்த பண்டிதர்கள் அதை மாற்றிக்காட்டினால், நிச்சயமாக எனது  புகழ்சியை பெறுவார்கள்.  அது எனக்கு விருப்பமானதொன்று.

ஆனால் அந்த அப்பாவி குடும்பம் அரசிடமிருந்து பெறத்தக்க நட்ட இழப்புக்களை, அந்த ஆமிக்காரன் தண்டிக்கப்படுவதை, இது என்ன பெரிய சமாசாரமா, அவன் சாதரண காமுகன் என்று கட்டுக்கதை கட்டி ஏமாற்ற இடம் அழிக்க முடியாது.

மல்லையூரான் இப்ப காலம் நன்றாகவே மாறி விட்டது.அந்த சிங்களவன்,அச் சிறுமியை ஒரு தடவை தான் வன்புணர்வு செய்தான்.ஆனால் நீங்களும்,உங்கள் ஊடகங்களும் அச் சிறுமி தெரிந்தே ஏதோ பிழை விட்ட மாதிரி மானம் போய் விட்டது அது,இது என்று எழுதுகிறீர்கள்.எத்தனையோ பெண்கள் தெரிந்தோ,தெரியாமலோ தங்கட பருவ வயதில பிழை விட்டாலும் அவர்களை ஒருத்தரும் ஒதுக்குவதில்லை.அவர்களை திருமணம் செய்யவும் ஆண்கள் இருக்கிறார்கள்.அப்படி இருக்கும் போது அந்த சிறுமிக்கு வாழ்க்கை கொடுக்கவும் பல பேர் இருப்பார்கள்.புலத்தில இருக்கிற உங்களை விட ஊரில இருக்கிற அந்த மக்கள் தெளிவாத் தான் இருக்கிறார்கள்.பொது இடங்களிலும்,பாடசாலையிலும் அச் சிறுமியோடு எப்படி பழகுவதென்பது அவர்களுக்கு தெரியும் 

 நான் தெருவில் நின்று நீதி கேட்கும் அந்த மக்களை, முடிந்தால், என் தோழில் காவிக்கொண்டு ஆர்ப்பாட்ட இடங்களுக்கு கொண்டு செல்லத்தயாராக இருக்கிறேன். அவர்களின் போராட்டம் ஒவ்வொரு அங்குலமும் நீதியானது. கட்டுரையாசிரியர் 100%மும் சரி.

நீங்கள் எவ்வளவோ எழுதுறீர்கள். அது அரசும் குற்றவாளியும் மன்னிக்கப்பட வேண்டும் என்ற வாதாட்டத்தைத்தான் தருகிறது. குற்றவாளி, உடல், உள்ளம், மானத்தை புண்படுத்தியத்திற்கு, குற்ற, சிவில் நட்ட இரண்டு பாதைகளாலும் தண்டிக்கப்படவேண்டும்.  தானாக தவறுவிட்ட பெண், தன் குற்றதிற்காக தண்டிக்க படவேண்டும் என்று கேட்க யாரும் இல்லை. இன்றும் இலங்கை, இந்திய கோடுகளில் திருமணம் செய்வதாக பெண்ணை ஒத்துழைக்க வைத்தால் அது வெறும் Fraud குற்றத்திற்கு மேலாகத்தான் நீதிபதிகளால் கொள்ளப்படுகிறது.

பத்திரிகைகளை  இதனால் தான் அரசு ஒடுக்குகிறது. அவர்களின் வேலை பிரஸ்தாப்பிப்பது.  பத்திரிகை தவறு விட்டிருந்தால் அரசு, குற்றவாளி, தூதுபோன அந்த துரோகி, மூன்று கூட்டமும் தனியத்தனிய அதை கோட்டுக்கு இழுக்க தயங்கியிருக்க மாட்டார்கள். தங்கள் மானம் போனதாக இன்று மில்லியன் கணக்கில் பத்திரிகையிடம் இருந்து சுறுட்ட தயங்கியிருக்க மாட்டார்கள். அங்கிருக்கு ஒவ்வொரு வக்கீலும் இந்த சிறுமியின் மானத்தை கெடுத்ததற்கு அரசிடமிருந்து அவள் பெறத்தக்க பணத்தை பெற வழி செய்ய வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களால் இவளவுதான் யோசிக்க முடியும் என்று திரும்ப திரும்ப சொன்னால் இதற்கு மேல எதுவும் சொல்ல முடியாது. இங்கே இருந்து தோளில் தூக்கி போராட வேண்டாம் "கெலிம யன்ன கோத்தபாயாட்ட "

நீங்கள் இனி அந்த வாழ்வை துலைத்த பெண் என்ன என்ன செய்யலாம் என்று சொன்னால் அவரும் கேட்பார். சாப்பிடலாமோ? உடுப்பு உடுக்கலாமோ? வீட்டில இருக்கலாமோ அல்லது என்கேயன் விடுதிகளில் விட வேண்டுமோ? (உணவு, உடை, உறைவிடம்) பிறகு பள்ளிக்கு போகலாலமோ, ஊர் பள்ளிகூடமோ அல்லாவிட்டால் கொலிச்சொ ...

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனவாதிகள் திட்டமிட்ட வகையில் ஈழத்தமிழினத்தின் மீது

தன்  வன்முறைகளைக் காலம் காலமாகவே நடாத்தி வருகின்றது.

அந்த வகையில் சிங்களத்திற்கு ஆதரவாகச் செயற்படும் ஒட்டுக்குழுக்களும் 

ஹிந்தியமும்  மேற்குலகமும் தான்  இதற்கான பதிலைத் தரவேண்டும்   

  • தொடங்கியவர்

உங்களால் இவளவுதான் யோசிக்க முடியும் என்று திரும்ப திரும்ப சொன்னால் இதற்கு மேல எதுவும் சொல்ல முடியாது. இங்கே இருந்து தோளில் தூக்கி போராட வேண்டாம் "கெலிம யன்ன கோத்தபாயாட்ட "

நீங்கள் இனி அந்த வாழ்வை துலைத்த பெண் என்ன என்ன செய்யலாம் என்று சொன்னால் அவரும் கேட்பார். சாப்பிடலாமோ? உடுப்பு உடுக்கலாமோ? வீட்டில இருக்கலாமோ அல்லது என்கேயன் விடுதிகளில் விட வேண்டுமோ? (உணவு, உடை, உறைவிடம்) பிறகு பள்ளிக்கு போகலாலமோ, ஊர் பள்ளிகூடமோ அல்லாவிட்டால் கொலிச்சொ ...

அட உந்தளவும் தெரிஞ்சநீங்கள் என்னிடமா கேட்கிறீர்கள்?

எல்லோரும் எதிர்ப்பைக் கையை விட்டு விட்டு உங்களை மாதிரி பந்தம் பிடித்திருக்கலாம். உங்களை கக்கீமை, பொன்னம்பலத்தை போல வாழ தெரியாமல் தான் 1948 தொடக்கம் அழிகிறீர்கள் என்று சொல்லிக்கொடுக்க முடியவில்லையா? யாழில் தொடர்ந்து எங்களுக்கு போதிக்கும் அதை தன்னும் உங்களாள் அவர்களுக்கும் சொல்லி கொடுக்க முடியாமல் என்னிடமா கேட்க வேண்டும்.

மானம் என்று ஒன்று எப்படி போக முடியும் என்று கேட்கும் பண்டிதர்கள் ஏன் பின்னர் அந்த ஊர் தெருவில் வந்து போராடினால் பொத்தி மூட சொல்கிறார்கள்? சுத்த கபடம் இல்லையா? உண்மையில் தங்கள் அடிதடி வெளியேதெரிய வந்து தங்கள் மானம்தான் போகிறது என்ற கவலையால் அல்லவா? இல்லை என்றால் எதற்கு அந்த துரோகி சமாதன் பிடிக்க போனான். அந்த மக்களுக்கு மட்டும் கோடு என்பது மறுக்கப்படுவதாலா? அவன் யார்? சமாதான நீதவானா?

( எதோ அந்த குடும்பம் என்ன செய்ய என்ன செய்ய என்று தங்களைதான் வந்து கேட்குதாம். தவிக்கிறார்கள் என்னத்தை சொல்லிக்கொடுக்கலாம் என்று. ஆடு நனையுது என்று ஓநாய்கள் அழுகிறது. மானம் உள்ள சனம் தெரிவிலை நிண்டு தன்னும் ஆரப்பட்டம் பண்ணிப்பார்க்குது. அதாலை உலகுக்கு தங்கடை வண்டவாளம் தெரிய வந்துவிடும் என்று பொத்தி மூடச் சொல்லி அட்வைஸ் குடுக்கிறார்கள்.)

அந்த சிறுமியை பற்றிய அக்கறையை விட அதில் தேட நினைக்கும் அரசியல் தான் எமக்கு பெரிது .

இதுவே எங்கள் வாழ்க்கையாகிவிட்டது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.