Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமக்கு தேர்தலில் ஆணை வழங்கினால் பலாலியில் குடியேற்றம் - டக்ளஸ் தேவானந்தா!

Featured Replies

எமக்கு தேர்தலில் ஆணை வழங்கினால் பலாலியில் குடியேற்றம் - டக்ளஸ் தேவானந்தா! 

[saturday, 2013-06-01 20:34:36]
duglas%20devananda-050213-seithy-150.jpg

'வடக்கு மாகாணசபைத் தேர்தலை மக்கள் சரியாகப் பயன்பத்தி எமக்கு ஆணை வழங்கினால் மூன்று தொடக்கம் 5 ஆண்டுகளில் வடமாகாணத்தை வளமிக்க செல்வமிக்க மாகாணமாக மாற்றிக் காட்டுவோம் என்பதுடன உயர் பாதுகாப்பு வலயமான பலாலி பிரதேசத்தில் மக்களை சென்று குடியேற்றமுடியும்' என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 'நாய் குரைத்தாலும் வண்டிபோகவேண்டிய இடத்தைப் போய் சேரும்'என்ற பழமொழிக்கு இணங்க அரசாங்கத்திற்கு எதிராக பல விமர்சனங்கள், எதிர்ப்புக்கள் வந்தாலும் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தேவையானவற்றைச் செய்யும்' என்றும் அவர் தெரிவித்தார்.

  

யாழ்.மாவட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட சமூர்த்தி உத்தியோகஸ்தர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'பொதுமக்கள் துன்பத்துடன் இருக்கவேண்டும் என்பதே கூட்டமைப்பின் நோக்கமும் சிந்தனையுமாக இருக்கின்றது. இந்த அரசாங்கத்துடன் எமது பிரச்சனையை பேசித் தீர்வுகாணமுடியும் என்று நான் நம்புகின்றேன். யுத்தத்தினால் எமது மக்கள் பல பாதிப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்திருக்கின்றார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்து மக்களிற்கு சமாதானத்தை ஏற்படுத்தியிருக்கின்றார். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட திவிநெகும திட்டத்தினை கூட்டமைப்பினர் எதிர்த்தார்கள். இந்த திட்டத்தின் மூலம் 1 இலட்சம் பேர் நன்மை அடைந்திருக்கின்றார்கள்.

தமிழ் மக்கள் துன்பத்தில் இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடனும் சிந்தனையுடனும் கூட்டமைப்புச் செயற்பட்டு வருகின்றது. 'நாய் குரைத்தாலும் வண்டி போகவேண்டிய இடத்தைப் போய் சேரும்'என்ற பழமொழிக்கு இணங்க அரசாங்கத்திற்கு எதிராக பல விமர்சனங்கள், எதிர்ப்புக்கள் வந்தாலும் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தேவையானவற்றைச் செய்யும். இது நான் அரசாங்கத்துடன இணைந்திருப்பதால் சொல்லவில்லை.

வடக்கு மாகாணசபைத் தேர்தலை மக்கள் சரியாகப் பயன்பத்தி எமக்கு ஆணை வழங்கினால் மூன்று தொடக்கம் 5 ஆண்டுகளில் வடமாகாணத்தை வளமிக்க செல்வமிக்க மாகாணமாக மாற்றிக் காட்டுவோம் என்பதுடன உயர் பாதுகாப்பு வலயமான பலாலி பிரதேசத்தில் மக்களை சென்று குடியேற்ற முடியும். அரசியல் ரீதியாக எங்களைப் பலப்படுத்தி பாதுகாத்து அதனூடாக உங்களையும் பாதுகாப்பதன் ஊடாக எதிர்காலத்தை நோக்கி பயணிக்க முடியும்' என்று அவர் தெரிவித்தார்.

http://www.seithy.com/listAllNews.php?newsID=84076&category=TamilNews&language=tamil

 

மகிந்தா தேர்தலை இழுத்தடிக்கிறார் ஏன் எனில் குத்தி வடமாகாணத்தை வளம் கொழிக்கும் மாகாணமாகிவிடுவார் என்பதால். குத்தியில் அவ்வளவு பொறாமை அந்த ஆளுக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்புக்குட்டி,

இப்ப வைத்திருக்கிற மினிஸ்டர் பதவியை வைத்துகொண்டு உதுகளை இப்ப செய்ய முடியாதோ?

 

  • கருத்துக்கள உறவுகள்
போர் முடிந்து 4 வருடம் ஆகி விட்டது. கொள்ளை அடிக்க நேரம் காணாத போது செல்வம் கொழிக்க எப்படி செய்வது?  சில மாதங்களுக்கு முன் பாதுகாப்பு வலயத்தில் மக்களை குடியேற்றப்போவதாக வாக்குறுதி அளித்தது என்னாச்சு? காற்றோடு போயாச்சா?? இப்போ செல்வம் கொழிக்க செய்யப்போவதாக அடுத்த பம்மாத்து. 
 தங்களூக்கு இடைஞ்சலாக புலிகள் உள்ளார்கள் என சில காலம் புசத்திய டக்ளஸ் தற்போது தமக்கு இடைஞ்சலாக கூட்டமைப்பு உள்ளார்கள் என நொண்டிச்சாட்டு சொல்கிறார்.
 
அது சரி டக்ளஸ் பூஸ்வா வர்க்கத்தை சேர்ந்தவரா??  :icon_mrgreen:  :icon_mrgreen:

சிலவேளை சிங்களகுடியேற்றத்தை குறிக்கின்றானோ?

 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவு சிங்கப்பூர் ஆகின மாதிரித் தான், இதுவும் இருக்கும்! :o

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது இவரிடமிருக்கும்

உள்நாட்டு வெளிநாட்டு முதலீடுகளின் தொகைக்கு வடக்கு கிழக்கை முழுமையாக அபிவிருத்தி செய்யமுடியும்.

ஆனால் 

நாய்க்கு நக்குத்தண்ணிதான் என்றளவில்

இவரது கடிவாளம் மகிந்தவிடம் உள்ளது.

அதற்கு வடக்கு கிழக்கை விற்பதற்கே இம்முயற்சி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயலலிதா சொன்ன 40 சீட்டு கதைதான்....உதுவும்....

டக்கிக்கு தெரியும்.... சனம் ஆணை குடாதெண்டு....

அதான் பப்பிளிக்கில சொல்லுது.... :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.