Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்பவில்லை – டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்புவதில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாட்டின் பிரச்சினைகளுக்கோ அல்லது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கோ தீர்வுகளை வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைப்பு காட்டத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டால் தங்களது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியாது என்ற காரணத்தினாலயே, கூட்டமைப்பு இவ்வாறு நடந்து கொள்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தங்களது அரசியல் இருப்பிற்காக பிரச்சினைகளை நீட்டிக்க வேண்டுமென்றே கூட்டமைப்ப விரும்புகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தமிழ் மக்கள் சமாதானமாக வாழ்வதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விரும்பவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு எதிர்ப்பை வெளியிட்டது, தற்போது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
காணிக் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சிங்கள மக்கள் எதிர்ப்பை வெளியிடுவர் எனவும், அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் தமிழ் மக்கள் எதிர்ப்பை வெளியிடுவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென நாட்டின் சகல தமிழ் மக்களும் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92485/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சரி, இப்ப என்னெங்கீறீக!

சூளைமேடு வழக்கை வச்சிண்டு, சென்னை பொலீஸ்காரங்க எம்புட்டு காலமா அல்லாடிட்டு இருக்காங்க.

அதுக்கு ஒரு தீர்வு குடுத்திடுங்க , தலைவா.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்பவில்லை – டக்ளஸ்

அது  இருக்கட்டும்

இருக்கும்  இடத்துக்கு வாடகை கொடுப்பதை  எப்பொழுது  நீங்கள் பழகுவீர்கள்

கோடிக்கணக்கான சொத்திருந்தும்  இன்னொருவனின் வீட்டில் அதுவும் அடாத்தனமாக குடித்தனம் பண்ணும் ஒருவருக்கு தமிழரின் பிரச்சினை எப்படி புரியும்???

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு காலத்தில் புலிகள் தான் பிரச்சனை என்றீர்கள். இப்போ கூட்டமைப்பு பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என்கிறீர்கள். கடந்த 4 வருடத்தில் நீங்கள் அமைச்சராக இருந்து தீர்த்த பிரச்சனைகள் எத்தனை. அவை நீங்கள் உருவாக்கிய பிரச்சனைகளை விட கூடவா அல்லது குறையவா?
 
ஏன் காணி இழந்தவர்களுக்கு முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிடுகிறீர்கள்?? உங்களை தட்டி கேட்க யாருமில்லையா??
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசை எதிர்த்துத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்த

அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகசேவையாளர்கள்

எத்தனை பேரை ஒட்டுக்குழுக்கள் கொலை செய்திருப்பார்கள்

அத்தனைக்கும் மத்தியிலும் கூட்டமைப்பு ஈழத்தில் அரசியல் செய்வது

பாராட்டப்படவேண்டியது.

சரி ஐயா டக்கிளஸ் அவர்களே நீங்கள் தான் அடுத்த முதலமைச்சர்

என்றால் எல்லாத்தையும் சரிப்பண்ணி விடுங்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்புவதில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாட்டின் பிரச்சினைகளுக்கோ அல்லது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கோ தீர்வுகளை வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைப்பு காட்டத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
நாட்டிலோ அல்லது தமிழ் மக்களுக்கு இல்லாதா பிரச்சனைகளை உருவாக்கிவிட்டு, அதற்கு தமது பக்கமாக தீர்வைவைக்க முனைபவர்கள், கூட்டமைப்பை தீர்வுகளை விரும்ப வில்லை என்பதில் நியாயம் இருக்கிறது. இந்த பிரச்சனைகளில் நாம் சிங்களவருடன் தீர்க்க எதும் இல்லை.  சிங்களவர் தான் எமக்கு பிரச்சனை கொடுக்கிறார்கள். அதிருலிருந்து எம்மை  தான் நாம்  எம்மை விடுவிக்க முயல்கிறோம்.
 
பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டால் தங்களது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியாது என்ற காரணத்தினாலயே, கூட்டமைப்பு இவ்வாறு நடந்து கொள்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தங்களது அரசியல் இருப்பிற்காக பிரச்சினைகளை நீட்டிக்க வேண்டுமென்றே கூட்டமைப்ப விரும்புகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
கூட்டமைப்பு அல்ல தனது இருப்பை தக்க வைக்கிறது. அரசுதான் கூட்டமைப்பின் இருப்பை நிச்சயம் செய்து வைத்திருக்கிறது.  அதை செய்வது அரச பக்கம். தனி நாடு ஒன்று இருந்தால் சமபந்தர் பதவியில் இருக்கமாட்டர். உண்மையான பொருளாதாரம் விளங்கியவர்களை தமிழ் மக்கள் தெரிந்திருப்பார்கள். விடுதலை கிடைக்காத்தால்த்தான் தமிழ் மக்கள் விடுதலை என்று கூறும் கூட்டமைப்பை ஆதரிக்கிறார்கள் தமிழ்மக்களை அடக்கி ஒடுக்கி தமிழ் மக்களின் அரசியல் கட்சிகள் எல்லாவற்றுக்கும்  இருக்க தக்க ஒரே ஒரு கொள்கையாக விடுதலையை மாற்றியதாலேயே இன்று கூட்டமைப்பு உயிர் வாழ்கிறது. விடுதலை கிடத்திருந்தால் கட்சிகள் உடைந்து போய் தங்களின் அபிவிருத்திக்கொள்கைகளை முன் வைத்து ஆழும்கட்சி, எதிர்கட்சிகள் என்ற நிலைக்கு வந்துவிடும். 
 
தமிழ் மக்கள் சமாதானமாக வாழ்வதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விரும்பவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு எதிர்ப்பை வெளியிட்டது, தற்போது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
13ம் திருதத்திற்கு ஆதரவாக கூட்டமைப்பு கருத்து வெளிவிடவில்லை. அரசாங்கம் 13ம் திருத்தத்தை நடை முறைப்படுத்தாவிட்டால் கூட்டமைப்பு அதை நடை முறைப்படுத்தும் படி கேட்கவும் போவதில்லை.  ஆனால் இன்று அரசாங்கம் அதை அழிக்க முயல்கிறது. அது இருக்கும் சொற்ப நற்ப அதிகாரத்தையும் பறிக்கும் முயற்சி என்பதால் அதை கூட்டமைப்பு எதிர்க்கிறது.  கொளையாளி ஒருவன் அயல் வீட்டனை கொல்ல வந்தால் இந்த வீட்ங்க்காறன்  கொலையாளியை ஓட்டத்தான் முயல்வான். அதானல் அடுதத வீட்டானும் இந்த வீட்டானும் நண்பகர்களோ, உறவுகளாகத்தன்னும் ஆகிவிடார்கள்.  அவர்கள் தங்களுக்கு பகைவர்களாக இருக்கலாம். ஆனல் கொலையாளி ஆபத்தானவன் என்றதால் இந்த வீட்டான், அடுத்தவீட்டானுடன் கொலையாளியை ஓட்டுவதற்கு இணைகிறான்.  கொலையாளி போய்விட்டால் அவர்கள் நண்பர்கள் ஆகிவிடார்கள்.  13ம் திருத்தத்தை நீக்குவதைத் தடுத்துவிட்டால் அதன் பின்னர் அதை தீர்வாக ஏற்று கூட்டமைப்பு அதை அமூல்படுத்த கேட்காது.
 
காணிக் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சிங்கள மக்கள் எதிர்ப்பை வெளியிடுவர் எனவும், அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் தமிழ் மக்கள் எதிர்ப்பை வெளியிடுவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சிங்களவர் காவல்துறை, காணி அதிகாரங்களை வழங்க மறுத்தால் அதன்பின் இருப்பது 13ம் திருத்தம் அல்ல. அது தேவநந்தவால் திருத்தப்பட்ட 20ம் திருத்தம். தேவானந்தாவின் 20 திருத்ததில் தமிழ் மக்களுக்கோ, கூட்டமைபிற்கோ ஆர்வம் இல்லை.
 
13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென நாட்டின் சகல தமிழ் மக்களும் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
அப்போ எதை சிங்களமக்கள் எதிர்க்கிறார்கள்? 13ம் திருத்தமில்லையா காணி, காவல்த்துறை அதிகாரங்களை பற்றி பேசுவது.  13ம் திருத்தத்தை தமிழ் மக்கள் ஆதரித்தால் எதற்காக,  கடந்த காலங்களில் அதை எதிர்க்கும் கூட்டமைப்புக்கு அதை எதிர்த்த பின் கடந்த வடக்கு கிழக்கு உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களித்தார்கள். 
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92485/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.