Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியாகிகள் தினம் – பத்மநாபா தியாகி? : சுதர்சன்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பத்மாநாபா அஞசலிக் கூட்டத்தில் இனியொருவை இழுத்துத் தாக்கிய ஜனநாயக ஜாம்பவான்கள்

இன்று இந்திய அரசும் அதன் அடியாட்களும் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், மக்களுக்கான தீர்வு என்று ஒரு புறத்தில் வேடம் போட்டு பிற்றிக்கொள்ள மறுபுறத்தில் இலங்கை அரசு இனச்சுத்திகரிப்பை இந்திய அரசின் துணையோடு நடத்திவருகிறது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் வரைக்கும் இந்திய அரசின் பாதுகாப்பில் இந்தியாவில் அஞ்ஞாதவாசம் செய்திருந்த வரதராஜப்பெருமாள் என்பவர் தலைமைதாங்க பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற அமைப்பு இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் செயற்படும் அமைப்பாகும்.

எந்தக் கூச்ச உணர்வுமின்றி இந்தியாவை கை பிடித்து அழைத்துவர வேண்டும் என்று கூறுகின்ற இந்த அமைப்பு தனது பிரச்சார வேலைகளை புலம்பெயர் நாடுகளில் முடுக்கிவிட்டுள்ளது. புலியெதிர்ப்பு என்ற தலையங்கத்தில் இவர்களோடு கைகோர்த்துக்கொள்ளும் அமைப்புக்கள் அண்மையில் கனடாவிலும் பிரான்சிலும் நடத்திய பத்மநாபா நினைவுதினக் கூட்டங்களில் இனியொரு.. இணையம் தம்மீது அவதூறு செய்வதாக போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

கடந்தகால அரசியல் குறித்த விமர்சனக்கள் வெளிவரும் முன்வைக்கப்படும் போதெல்லாம் அவதூறுகளும் மிரட்டல்களும் வழமையானவை. இனியொருவிற்கு கடந்த சில நாட்களாக வெளிவரும் மிரட்டல்கள் எமது கருத்துக்களின் வெற்றியையே வெளிப்படுத்துகிறது.

கனடாவில் நடைபெற்ற பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் நினைவு தினக் கூட்டத்தில் ஈபிடிபி, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், சுரேஸ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈரோஸ். சம உரிமை இயக்கம் ஆகிய அமைப்புக்கள் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஈபிஆர்எல்எவ் இன் மீது சுதந்திரமான தமது கருத்துப் பதிவுகளை விமர்சனங்களாக முன்வைத்த பலரும் இந்திய இராணுவத்தின் பிரசன்ன காலத்தில் ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்கள் சிலர் இயக்க கட்டுப்பாட்டையும் மீறி மக்களுக்கு எதிராக செயற்பட்டனர் என்ற விடயங்கள் சம்பவ ரீதியாக எடுத்துரைத்தனர். இது தோழர் பத்மநாபாவின் ஏற்புடன் நடைபெற்றிருக்க வாய்ப்புக்கள் இல்லை என்று தாம் நம்புவதாகவும் கருத்துக்கள் தெரிவித்தனர்.

இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் இலங்கையில் வந்திறங்கி போர்க்குற்றங்களில் இந்தக் கும்பல் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது ரூபவாகினி தொலைக்காட்சியில் தோன்றிய வரதராஜப் பெருமாள் நாங்கள் இது பழை ஈ.பி.ஆர்.எல்.எப் அல்ல புதியது என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறோம் என்றார். ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர்கள் தங்கியிருந்த அசோக் கோட்டேல் அப்போது மனித கசாப்புக் கடையாக மாறியிருந்தது என்பதை யாரும் மறந்துவிடவில்லை.

நமது கடந்தகால அரசியல் நவடிகைகளைச் சுயவிமர்சனம் செய்துகொண்டு தவறுகளைத் தவறுகளாக ஏற்றுக்கொள்ளாவிட்டால் இலங்கையில் இன்னும் அழிவுகள் தவிர்க்க முடியாதவை.

http://inioru.com/?p=36346

  • Replies 192
  • Views 16.5k
  • Created
  • Last Reply

ஈபிஆர்எல்எவ் இன் மீது சுதந்திரமான தமது கருத்துப் பதிவுகளை விமர்சனங்களாக முன்வைத்த பலரும் இந்திய இராணுவத்தின் பிரசன்ன காலத்தில் ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்கள் சிலர் இயக்க கட்டுப்பாட்டையும் மீறி மக்களுக்கு எதிராக செயற்பட்டனர் என்ற விடயங்கள் சம்பவ ரீதியாக எடுத்துரைத்தனர். இது தோழர் பத்மநாபாவின் ஏற்புடன் நடைபெற்றிருக்க வாய்ப்புக்கள் இல்லை என்று தாம் நம்புவதாகவும் கருத்துக்கள் தெரிவித்தனர்.

புலிகளின் உறுப்பினர் செய்த தவறுகள் பிரபாகரனை சாரும் எனும் போது EPRLF தவறுகள் பத்மநாபாவை சாராதாம்...

இப்படியானவன் தலைமைக்கு தகுதியானவன் தானா...??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் உறுப்பினர் செய்த தவறுகள் பிரபாகரனை சாரும் எனும் போது EPRLF தவறுகள் பத்மநாபாவை சாராதாம்...

இப்படியானவன் தலைமைக்கு தகுதியானவன் தானா...??

எந்த அமைப்பு என்றாலும் அதன் உறுப்பினர்களின் நடத்தைக்கு அமைப்பின் தலைமையே எப்போதும் பொறுப்புக் கூறவேண்டும்.

தலைமைக்குத் தெரியாமல் உறுப்பினர்கள் நடந்துகொண்டார்கள் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. ஆளுமையும், பொறுப்பும், ஒழுக்கமும், அதிகாரமும் உள்ள தலைமை எப்போதும் கட்டுப்பாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் தலைமைக்குத் தகுதியற்றவர்கள் என்றுதான் கொள்ளவேண்டும்.

எனவே பத்மநாபா போன்ற தலைவர்கள் அந்த இயக்கத்தின் பிழையான நடத்தைகளுக்கு எப்போதுமே பொறுப்பாளியாவார்கள்.

புலிகளின் ஆரம்ப பயிற்ச்சி முடியும் போது சொல்வார்கள்... இயக்க கட்டுப்பாடுகள் கடுமையானவை.. நீங்கள் செய்யும் அனைத்து தவறுகளும் தலைவரே பொறுப்பேற்க்க வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்...

புலிகள் அமைப்பு போராளிகள் விட்ட தவறுகளை எப்போதுமே தட்டிக்களித்ததோ பொறுப்பேற்காமல் விட்டதோ கிடையாது... கருணா, மாத்தையா செய்தவைகள் கூட புலிகளையே சாரும்...

போராளிகளுக்கு வளிகாட்டல் சம்பந்தமாய் தலைமை குடுக்க கூடிய நம்பிக்கை அது... அப்படி நம்பிக்கை ஊட்டாத தலைமையை நீண்ட காலம் யாரும் நம்புவதில்லை...

கனடாவில் நடந்த கூட்டதிற்கு சென்றிருந்தபடியால் எழுதுகின்றேன் . இயக்க விசுவாசம் என்பது அதுதான் .யாழில் கூட பலர் நடந்த உண்மைகள் எதுவும் தெரியாமல் புலிகள் சொன்னதை வரலாறாக நினைக்கின்றார்கள் .உண்மை சொன்ன வெளிநாட்டு ஊடகங்களையே ரா அல்லது இலங்கை அரசு வாங்கிவிட்டது என்றவர்கள் இவர்கள் .

அங்கு சிலர் பத்மநாபாவை மிக காட்டமாக விமர்சித்தார்கள் . கெலிகொப்டர்களில் இந்திய அதிகாரிகளுடன் பத்மநாபா வரதராஜபெருமாள்,புஸ்பராஜா (பிரான்சில் இருந்து போய் ) இவர்களெல்லாம் இனி எவனும் எங்களை புடுங்கமுடியாது என்ற ரீதியில் தான் சுற்றியடித்தார்கள்.

இப்படியான ஒரு போக்குத்தான் புலிகளையும் அழிவுக்கு கொண்டுசென்றது .வன்னி இனி எக்காலமும் இன்னொருவர் கையில் விழாது என்று நம்பிதான் அரச ஆட்சி நடந்தது .

யாழிலேயே சில முழு புலி ஆதரவாளர்கள் அமிர் கொலை ,முஸ்லீம்கள் வெளியேற்றம் தலைவருக்கு தெரியாது என அடம் பிடித்தவர்கள் .

)இனியொருவில் வந்த கட்டுரையில் எனக்கு தெரியவே பல பிழைகள் இருக்கு .பத்மநாபா கொலை செய்யப்படும் இடத்தில் சுரேஷ் இருக்கவே இல்லை ,இனியொரு சுரேஷ் இருந்துவிட்டு எழும்பி போனவர் என்று எழுதி சுரேசும் அந்த கொலையில் உடந்தை என்பது போல படம் போடுகின்றது )

  • கருத்துக்கள உறவுகள்
சுரேஸ் அக்கூட்டத்துக்கு சமூகமளித்தவர். தாக்குதல் நடைபெற்ற வேளையில் அந்த இடத்தில் இருக்கவில்லை என்பது உண்மை தானே.சுரேஸ் அதிஸ்டவசமாக தப்பினார் என்பது தான் உண்மையாக இருக்கும்.
 
யாழில் ஒருவருக்கும் ஒன்றும் தெரியாது என்று கூறுவது சுத்த மடைத்தனம். பல இயக்கத்தில் இருந்தவர்கள் எழுதுகிறார்கள்.பலர் தொடர்பில் உள்ளவர்கள் எழுதுகிறார்கள். பலரின் உறவினர்கள், நண்பர்கள், சகோதர சகோதரிகள் இயக்கத்தில் இருந்துள்ளார்கள். இவர்கள் மூலம் உண்மை  தகவல்கள் வராமல் யார் மூலம் உண்மை வரும் என எதிர்பார்க்கிறார் அர்ஜுன்.
 
வன்னி இனி ஒருவரின் கையிலும் பிடிபடக்கூடாது என்ற நம்பிக்கையில் தான் புலிகள் செயற்பட்டார்கள். அதை விட்டு  வன்னி ஒரு நாள் யாரிடமும் பிடிபடும் என்ற நம்பிக்கையில் செயற்படுவார்களா? தோல்வி அடையும் என்று தான் கொஞ்சப்பேர் தாக்குதல்கள் செய்திருக்கினம் போல.
 
Edited by nunavilan

வன்னி மீண்டும் அரச கட்டுப்பாட்டுக்குள் எக்காலமும் வீழாது என்று புலிகள் நினைத்து இருந்தார்கள் என்று எழுதுபவர்கள் புலிகளின் ஊடகங்களையோ விடுதலைப் புலிகளின் ஊடகங்களையோ என்றுமே வாசிக்காதவர்கள் என்றுதான் நினைக்கின்றேன். விடுதலைப் புலிகளின் ஆசிரியர் சமாதான காலத்தில் அதுவும் 2005 இல் ஒரு முறை ஒரு பேட்டியின் போது சொல்லியிருந்தார் "வன்னி மீண்டும் அரச கட்டுப்பாட்டுக்குள் போனாலும், புலிகள் மீண்டும் காட்டுக்குள் போகும் நிலை வந்தாலும் தம் ஏடு ஏதோ ஒரு வடிவில் வெளியாகிக் கொண்டுதான் இருக்கும்" என்று.

இதனை ஒத்த சில கருத்துகளை பாலகுமாரனும் கூறியிருந்தார். புலிகள் இன்னொரு யுத்தம் வந்தால் தாம் பின்னடைவை சந்திக்க வேண்டி வரும் என்பதை உணர்ந்து இருந்தார்கள்  இந்திய இராணுவத்துடன் மோதும் போதும் இவ்வாறான ஒரு தெளிவுடன் தான் இருந்தார்கள். ஆனால் அவர்கள் எந்த பின்னடவை தாம் சந்தித்தாலும் மீண்டும் அதில் இருந்து மீண்டு வருவோம் என்று நம்பி இருந்தனர். அவர்கள் தம்மையும் தம் மக்களையும் (மட்டுமே) நம்பி இருந்தார்கள்.

அவர்களின் மீண்டும் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை இன்றைய சூழலிலிலும் சரிவருமா இல்லையா என்பதனை தீர்மானிக்கும் கால நீட்சி இன்னும் முடியவில்லை. மேலோட்டமாக சிந்தித்து பார்த்தால் முடியாது போன்று தோன்றினும் ஈழத்து அரசியல் சூழல் அப்படியான மீண்டு(ம்) வருதலை தோற்றுவிக்கும் காலத்தினை நோக்கித்தான் நகர்கின்றது. இதனை வெறுமனே புலி எதிர்ப்பு மட்டுமே பேசி எந்தவிதமான உருப்படியான அரசியல் விடயங்களையும் எழுதாத அர்ஜுன் போன்ற புலி எதிர்ப்பாளர்களுக்கு புரிந்து இருக்காவிடினும் சிங்களத்துக்கு நன்கு புரிந்து இருக்கின்றது. சிங்களத்தின் அனைத்து நடவடிக்கைகளும் புலி மீண்டும் வருதலை எப்பாடுபட்டாலும் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் தான் செயல்படுகின்றது. அதன் தமிழர் எதிர்ப்பு அரசியலும் சிங்கள பேரினவாத அரசியலும் புலிகளின் வருகைக்கான கட்டாயத்தினை தோற்றுவித்துக் கொண்டு இருப்பினும் அதனையும் மீறி தம்மால் தடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் சிங்களம் இன்று தன் செயல்களை திட்டமிடுகின்றது. புலிகளின் வருகை காலத்தின் கட்டாய நிகழ்வாக கண்டிப்பாக நடக்கும் என்றே நான் உணர்கின்றேன். போராட்டம் இல்லாத சரணாகதி அரசியல் கூட ஒரு இனத்தின் அழிவு என்று ஒரு இனம் உணரும் போது போராட்டம் வெடிக்காது விடாது.

இங்கு புலிகள் என்று நான் கூறுவது பிரபாகரனை தலைவராகக் கொண்டு - அவர் மீண்டும் உயிர்த்தெழுந்து - தலைமை தாங்கும் ஆயுதப் போராட்டம் அல்ல. தமிழ் மக்களின் போராட்டத்தினைத் தான் புலிகளின் போராட்டமாக அடையாளப்படுத்துகின்றேன். வரலாறும், தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தினை புலிகளின் போராட்டம் என்றுதான் பெயரிட்டு அழைக்கும்.

நன்றி  ஐயா

நாங்கள் தொடர்ந்து ஒருவருக்கு எழதுவதால் அது ஒரு குழுச்சண்டைபோல் தொடர்கிறது

நீங்களும் எழுதணும்

மற்றவர்களும் எழுதணும்

போதும் போதும்  என்றாகிவிட்டது உப்புச்சப்பில்லாத விமர்சனங்களும் நேர விரயங்களும்

ஏதாவுத நடக்கணும் என்றால் உங்களைப்போன்றோர் இது போல் பொதுவான விடயங்களை  எல்லோரும் ஏற்கும் வகையில் எழுதணும்

நாம் தூங்கலாம்

ஆனால் சிங்களம் முன்னைவிட கோரமாக நகர்கிறது

நன்றி விசுகு. ஆனால் என் பார்வையில் நீங்களும் (உங்களைப் போன்றவர்களும்), அர்ஜுனும் (அர்ஜுனைப் போன்றவர்களும்) ஒரே வகையினர்தான். 

அர்ஜுன் வகையினர் புலிகள் செய்த அனைத்துமே மக்கள் விரோதம் என்று புலி எதிர்ப்பு காச்சல் பிடித்தவர்கள். உங்களைப் போன்ற வகையினர் புலிகள் செய்த அனைத்துமே கேள்விகளுக்குட்படுத்தக் கூடாத அளவுக்கு மிகவும் சரியானவை என்ற தீவிர புலி ஆதரவாளார்கள்.

இந்த இரண்டுக்கும் நடுவில், யாதார்த்தம் என்ற ஒன்றும் இருக்கு.

நன்றி  பதிலுக்கு..

இது வேறு ஒரு இடத்தில் ஆளமாக விவாதிக்கலாம்.

புலிகள் செய்த எல்லாம் சரி  என்று எப்பொழுதும் எழுதியதில்லை.

அதை விமர்சிக்க ஒரு முறை  இருக்கணும்

எமது  முன்னையநிலையில் இருந்து  அடுத்த கட்டுத்துக்கான

உண்மையான நோக்கத்தோடு 

பொறுப்போடு

நீங்கள் எழுதியது போல் அந்த தியாகங்களின் நினைப்போடு முன் வைக்கப்படணும் என்பதே எனது வேண்டுகோள்.

எல்லாவற்றையும் மறந்து

எல்லாமே தப்பு

30  வருடமாக தப்பாகவே பயணித்தார்கள்

அழிந்தார்கள் என்பதை  முன் வைப்பவர்களுடன் எப்படி அடுத்த கட்டம் பற்றி  பேசுவது.......???

எவரும் எதையும் எழுவிட்டு போகலாம் .யாழில் வேறு எதை எதிர்பார்காலாம் .

புலிகளின் அமைப்பு போன்ற ஒன்றும் அதன்  தலைமை போன்ற ஒன்றும் இனி வரவே சாத்தியமில்லை .வரலாறுகளில் இருந்துதான் மனிதன் பாடங்கள் படிக்கின்றான் .

தாங்கள் இப்படி முடிந்து போவார்கள் என்று புலிகளும் அதன் தலைமையும்  அதன் ஆதரவார்களும் கனவிலும் நினைக்கவில்லை .வன்னியில் அவர்கள் நடந்துகொண்ட விதமே அதற்கு சாட்சி .இதை பல வெளிநாட்டு இராஜதந்திரிகள் ,பத்திரிகை நிருபர்கள் உள்பட சொல்லியிருக்கின்றார்கள் .

தலைவர் தனது குடும்பம் ,பெற்றோரை அங்கு கொண்டுபோனதே அதனால் தான் .

புலிகள் என்பது புலம்பெயர் நாடுகளில் கொஞ்ச காலத்திற்கு இருந்துகொண்டு அழிந்து போகப்போகும் ஒரு பயங்கரவாத அமைப்பு .இப்படியான ஒரு அமைப்பு இனி எமது இனத்திலிருந்து தோன்ற கூடாது என்று சிங்களவனை விட நாங்கள் தான் மிக கவனமாக இருக்கவேண்டும் .எதுவித அரசியல் அறிவும் இல்லாமல் சிலரின் சுக போக வாழ்விற்கு முழு தமிழனையும் பலி கொடுக்க இடமே கொடுக்க கூடாது .அதில் சுகம் கண்டு புரண்டவன் திரும்ப அப்படி ஒரு அமைப்பைத்தான் விரும்புவான் கட்டியமைக்க கனவு காணுவான்.பாதிக்க பட்டவனும் உறவுகளை பறி கொடுத்தவனும் அப்படி சிந்திக்கபோவதில்லை .

நாட்டில் மக்கள் மிக தெளிவாகத்தான் இருக்கின்றார்கள் .அங்கு இருந்து எழுதுபவர்களும் மிக தெளிவாகத்தான் இருக்கின்றார்கள் .

எமது எதிரி சிங்கள அரசுதானே ஒழிய சக தமிழர்கள் இல்லை என அனைவரும் உணரும் காலம் வந்துவிட்டது .புலிகளுக்கு எப்போதும் எதிரி மாற்று இயக்கங்களும் மாற்று கருத்தாளர்களும் தான் .இப்பேர்ப்பட்டவர்களை இல்லாமல் பண்ணியதுதான் எமது போராட்டத்தில் கிடைத்த முதல் வெற்றி

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நான் எழுதியதையும்

அர்யூன் எழுதியதையும் பார்த்தால் புரியும்

எவர் கை  கொடுக்க முனைகிறார்

எவர் அதை தட்டி விடுகின்றார் என...

எனவே நிழலியின் முதல் கருத்து அடிபட்டுப்போகிறது

காரணம் நாங்கள் பொறுப்பை என்றுமே மறக்காமல் எழுதுகின்றோம்..............

'' 'தமிழீழம் மலர்ந்தால், அதை ஆதரிப்பவர்கள்கூட அந்த தேசத்தில் வாழ முடியாது’ என அமெரிக்கத் தூதர் 1987-ல் செய்தி அனுப்பியதாக 'விக்கிலீக்ஸ்’ கூறுகிறதே?''

இப்படி ஒரு கேள்வியை இந்த வார ஆனந்தவிகடனில் அருள்எழிலன்  ஆரம்பகால போராளி சத்தியசீலனிடம் கேட்டிருக்கின்றார்கள்.

இப்படியான ஒரு கேள்வி எழுந்ததற்கான காரணம் முதலில் என்ன ?

எதுவித அரசியலும் தெரியாதவன் புலிகளை ஆதரித்தான் அவனை மன்னிக்கலாம் ஆனால் தங்களது சுய தேவைக்கு ஒரு இனத்தின் அழிவை பயன்படுத்த நினைத்தவர்களை எந்த நாளும்  மன்னிக்கமுடியாது .

எவரும் எதையும் எழுவிட்டு போகலாம் .யாழில் வேறு எதை எதிர்பார்காலாம் .

புலிகளின் அமைப்பு போன்ற ஒன்றும் அதன்  தலைமை போன்ற ஒன்றும் இனி வரவே சாத்தியமில்லை .

மிஸ்டர் அர்ச்சுன் அண்ண .............சத்தியெடுக்காமல் விடயத்தை மட்டும் கேளுங்கோ .........உங்களுக்கு சொல்லியும் பிரியோசம் இல்லை என்று தெரியும் ............ஆனாலும் இந்த திரியில் கூற வேண்டிய கடமை .............தமிழீழ விடுதலைப்புலிகள் போல தமிழ் மக்களால் உணரப்பட்ட எந்த ஒரு அமைப்பு வந்தாலும் ,என்னைப்போல உணர்வுள்ள ,உண்மையை பார்க்கும் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள் .அவர்கள் பின் நிற்பார்கள் ................

அந்த எதிர்பார்ப்பின் தேடல்களும்,ஆதங்கங்கலுமே ,இந்த திரியல் ஏற்பட்ட விவாதத்தின் கருப்பொருள் ..............இன்னும் மக்கள் ஓட்டுக்குழுக்களையோ ,துரோக சக்திகளையோ ....அனுமதிக்க விரும்பவில்லை என்பதே இந்த திரியின் நீட்சி .......................இதை சாதாரண தமிழ்மகன் என்ற வகையுள் என்னால் உணரமுடியும் ,உணர்த்தமுடியும் .உங்களால்.உங்கள் நிலைமையில் கொஞ்சம் கஷ்டம் என்பதையும் புரிந்து கொள்ளமுடியும் ........................சோ ............கேம் ஓவர் .....................

வன்னி மீண்டும் அரச கட்டுப்பாட்டுக்குள் எக்காலமும் வீழாது என்று புலிகள் நினைத்து இருந்தார்கள் என்று எழுதுபவர்கள் புலிகளின் ஊடகங்களையோ விடுதலைப் புலிகளின் ஊடகங்களையோ என்றுமே வாசிக்காதவர்கள் என்றுதான் நினைக்கின்றேன். விடுதலைப் புலிகளின் ஆசிரியர் சமாதான காலத்தில் அதுவும் 2005 இல் ஒரு முறை ஒரு பேட்டியின் போது சொல்லியிருந்தார் "வன்னி மீண்டும் அரச கட்டுப்பாட்டுக்குள் போனாலும், புலிகள் மீண்டும் காட்டுக்குள் போகும் நிலை வந்தாலும் தம் ஏடு ஏதோ ஒரு வடிவில் வெளியாகிக் கொண்டுதான் இருக்கும்" என்று.

இதனை ஒத்த சில கருத்துகளை பாலகுமாரனும் கூறியிருந்தார். புலிகள் இன்னொரு யுத்தம் வந்தால் தாம் பின்னடைவை சந்திக்க வேண்டி வரும் என்பதை உணர்ந்து இருந்தார்கள்  இந்திய இராணுவத்துடன் மோதும் போதும் இவ்வாறான ஒரு தெளிவுடன் தான் இருந்தார்கள். ஆனால் அவர்கள் எந்த பின்னடவை தாம் சந்தித்தாலும் மீண்டும் அதில் இருந்து மீண்டு வருவோம் என்று நம்பி இருந்தனர். அவர்கள் தம்மையும் தம் மக்களையும் (மட்டுமே) நம்பி இருந்தார்கள்.

அவர்களின் மீண்டும் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை இன்றைய சூழலிலிலும் சரிவருமா இல்லையா என்பதனை தீர்மானிக்கும் கால நீட்சி இன்னும் முடியவில்லை. மேலோட்டமாக சிந்தித்து பார்த்தால் முடியாது போன்று தோன்றினும் ஈழத்து அரசியல் சூழல் அப்படியான மீண்டு(ம்) வருதலை தோற்றுவிக்கும் காலத்தினை நோக்கித்தான் நகர்கின்றது. இதனை வெறுமனே புலி எதிர்ப்பு மட்டுமே பேசி எந்தவிதமான உருப்படியான அரசியல் விடயங்களையும் எழுதாத அர்ஜுன் போன்ற புலி எதிர்ப்பாளர்களுக்கு புரிந்து இருக்காவிடினும் சிங்களத்துக்கு நன்கு புரிந்து இருக்கின்றது. சிங்களத்தின் அனைத்து நடவடிக்கைகளும் புலி மீண்டும் வருதலை எப்பாடுபட்டாலும் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் தான் செயல்படுகின்றது. அதன் தமிழர் எதிர்ப்பு அரசியலும் சிங்கள பேரினவாத அரசியலும் புலிகளின் வருகைக்கான கட்டாயத்தினை தோற்றுவித்துக் கொண்டு இருப்பினும் அதனையும் மீறி தம்மால் தடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் சிங்களம் இன்று தன் செயல்களை திட்டமிடுகின்றது. புலிகளின் வருகை காலத்தின் கட்டாய நிகழ்வாக கண்டிப்பாக நடக்கும் என்றே நான் உணர்கின்றேன். போராட்டம் இல்லாத சரணாகதி அரசியல் கூட ஒரு இனத்தின் அழிவு என்று ஒரு இனம் உணரும் போது போராட்டம் வெடிக்காது விடாது.

இங்கு புலிகள் என்று நான் கூறுவது பிரபாகரனை தலைவராகக் கொண்டு - அவர் மீண்டும் உயிர்த்தெழுந்து - தலைமை தாங்கும் ஆயுதப் போராட்டம் அல்ல. தமிழ் மக்களின் போராட்டத்தினைத் தான் புலிகளின் போராட்டமாக அடையாளப்படுத்துகின்றேன். வரலாறும், தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தினை புலிகளின் போராட்டம் என்றுதான் பெயரிட்டு அழைக்கும்.

தமிழர் அல்லாத பலர் அண்மையில் இதே பாணியில் பேசியிருப்பதும், இலங்கை தனது இரணுவத்தைகட்டி கட்யெழுப்புவதும், இந்தியாவும் மேற்நாடுகளும் புலிகளை எதிர்ப்பதை இன்னமும் தணிக்க முடியாமல் இருப்பதாலும், இந்தியா முழு மனத்துடன் 13ம் திருத்தம் போன்ற ஒரு தீர்வுக்குத்தன்னும் இன்னும் இறங்கத்தயாராக இல்லாமல் ந்டந்து கொள்வதும் , தமிழரின் தீர்வுக்கான போராட்டம் ஆயுத போராட்டமாக திரும்பவும் புலிகளின் தலைமையில் ஆரம்பமாக சந்தர்ப்பம் ஒன்றிருக்கிறது என்பதை வெளியில் இருந்து அனுமானிக்கலாம். நான்கு வருடத்தின் பின்னர் அமெரிக்கா தனது அறிக்கையில் புலிகள் பணம் சேர்க்கிறார்கள் என்று இலங்கை சொல்வதாக சொல்கிறது. ஏன் அதில் தனது ஆய்வுகளின் முடிவை சேர்க்கவில்லை?

Edited by மல்லையூரான்

ஒன்றுமே புரியுதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மீண்டும் அரச கட்டுப்பாட்டுக்குள் எக்காலமும் வீழாது என்று புலிகள் நினைத்து இருந்தார்கள் என்று எழுதுபவர்கள் புலிகளின் ஊடகங்களையோ விடுதலைப் புலிகளின் ஊடகங்களையோ என்றுமே வாசிக்காதவர்கள் என்றுதான் நினைக்கின்றேன். விடுதலைப் புலிகளின் ஆசிரியர் சமாதான காலத்தில் அதுவும் 2005 இல் ஒரு முறை ஒரு பேட்டியின் போது சொல்லியிருந்தார் "வன்னி மீண்டும் அரச கட்டுப்பாட்டுக்குள் போனாலும், புலிகள் மீண்டும் காட்டுக்குள் போகும் நிலை வந்தாலும் தம் ஏடு ஏதோ ஒரு வடிவில் வெளியாகிக் கொண்டுதான் இருக்கும்" என்று.

இதனை ஒத்த சில கருத்துகளை பாலகுமாரனும் கூறியிருந்தார். புலிகள் இன்னொரு யுத்தம் வந்தால் தாம் பின்னடைவை சந்திக்க வேண்டி வரும் என்பதை உணர்ந்து இருந்தார்கள்  இந்திய இராணுவத்துடன் மோதும் போதும் இவ்வாறான ஒரு தெளிவுடன் தான் இருந்தார்கள். ஆனால் அவர்கள் எந்த பின்னடவை தாம் சந்தித்தாலும் மீண்டும் அதில் இருந்து மீண்டு வருவோம் என்று நம்பி இருந்தனர். அவர்கள் தம்மையும் தம் மக்களையும் (மட்டுமே) நம்பி இருந்தார்கள்.

அவர்களின் மீண்டும் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை இன்றைய சூழலிலிலும் சரிவருமா இல்லையா என்பதனை தீர்மானிக்கும் கால நீட்சி இன்னும் முடியவில்லை. மேலோட்டமாக சிந்தித்து பார்த்தால் முடியாது போன்று தோன்றினும் ஈழத்து அரசியல் சூழல் அப்படியான மீண்டு(ம்) வருதலை தோற்றுவிக்கும் காலத்தினை நோக்கித்தான் நகர்கின்றது. இதனை வெறுமனே புலி எதிர்ப்பு மட்டுமே பேசி எந்தவிதமான உருப்படியான அரசியல் விடயங்களையும் எழுதாத அர்ஜுன் போன்ற புலி எதிர்ப்பாளர்களுக்கு புரிந்து இருக்காவிடினும் சிங்களத்துக்கு நன்கு புரிந்து இருக்கின்றது. சிங்களத்தின் அனைத்து நடவடிக்கைகளும் புலி மீண்டும் வருதலை எப்பாடுபட்டாலும் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் தான் செயல்படுகின்றது. அதன் தமிழர் எதிர்ப்பு அரசியலும் சிங்கள பேரினவாத அரசியலும் புலிகளின் வருகைக்கான கட்டாயத்தினை தோற்றுவித்துக் கொண்டு இருப்பினும் அதனையும் மீறி தம்மால் தடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் சிங்களம் இன்று தன் செயல்களை திட்டமிடுகின்றது. புலிகளின் வருகை காலத்தின் கட்டாய நிகழ்வாக கண்டிப்பாக நடக்கும் என்றே நான் உணர்கின்றேன். போராட்டம் இல்லாத சரணாகதி அரசியல் கூட ஒரு இனத்தின் அழிவு என்று ஒரு இனம் உணரும் போது போராட்டம் வெடிக்காது விடாது.

இங்கு புலிகள் என்று நான் கூறுவது பிரபாகரனை தலைவராகக் கொண்டு - அவர் மீண்டும் உயிர்த்தெழுந்து - தலைமை தாங்கும் ஆயுதப் போராட்டம் அல்ல. தமிழ் மக்களின் போராட்டத்தினைத் தான் புலிகளின் போராட்டமாக அடையாளப்படுத்துகின்றேன். வரலாறும், தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தினை புலிகளின் போராட்டம் என்றுதான் பெயரிட்டு அழைக்கும்.

நன்றி நண்பா,

உனது கருத்திற்கு பச்சைப்புள்ளியொன்று போட்டுவிட்டு வெறுமனே நகர மனம் விரும்புதில்லை.

உன்னைவிடவும் என்னால் நிச்சயம் தெளிவாக எழுதவும் முடியாது.

வெறுமனே புலியெதிர்ப்புச் செய்வது அரசியலாகிவிட்ட சிலபேருக்கு யதார்த்தம் எங்கே இருக்கிறது என்பதைத் தெளிந்துகொள்ள முடியாது.

யார் செய்வினும் அது புலிகள் போராட்டம்தான் என்று சொல்லும் வரிகளில் ஆயிரம் அர்த்தங்கள். அதுவே அவர்கள் செய்த போராட்டத்தின் நியாயத்தன்மையை தெளிவுபடுத்துகிறது.  புரிந்தவர்கள் புரிந்துகொள்ளட்டும்.

இப்போதைக்கு நன்றி மட்டும்.

இவன் ரகுநாதன்.

'' 'தமிழீழம் மலர்ந்தால், அதை ஆதரிப்பவர்கள்கூட அந்த தேசத்தில் வாழ முடியாது’ என அமெரிக்கத் தூதர் 1987-ல் செய்தி அனுப்பியதாக 'விக்கிலீக்ஸ்’ கூறுகிறதே?''

இப்படி ஒரு கேள்வியை இந்த வார ஆனந்தவிகடனில் அருள்எழிலன்  ஆரம்பகால போராளி சத்தியசீலனிடம் கேட்டிருக்கின்றார்கள்.

இப்படியான ஒரு கேள்வி எழுந்ததற்கான காரணம் முதலில் என்ன ?

எதுவித அரசியலும் தெரியாதவன் புலிகளை ஆதரித்தான் அவனை மன்னிக்கலாம் ஆனால் தங்களது சுய தேவைக்கு ஒரு இனத்தின் அழிவை பயன்படுத்த நினைத்தவர்களை எந்த நாளும்  மன்னிக்கமுடியாது .

புலிகள் பகுதியில் கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்தது உண்மைதான்... அவ்வளவு அட்டூளியம் செய்தவை... அதில் கடுமையாக எதிர்க்க படவேன்டிய விடய்ங்கள் பல இருந்தன... விபச்சாரம் செய்ய முடியாது, கசிப்பு காச்ச முடியாது, கஞ்சா அடிக்க முடியாது, PLOTE அண்ணைமார் கொண்டு வந்து விற்க்க முடியாது, சாதிச்சண்டை பிடிக்க முடியாது, ஊருக்கு ஊர் பொழுது போக்காக அடிபட்டு சாக முடியாது, கோயில்களில் சாதிகுறைஞ்ச ஆக்களை உள்ளை விடவேணும், இப்படி இன்னும் நிறைய சுதந்திரத்தை பறித்த புலிகளை அழித்தது சரிதான்...

தமிழ் மக்கள் உயிர்வாழ்ந்து கஸ்ரப்பட கூடாது எண்டதுக்காக இலங்கை இராணுவத்தோடை சேர்ந்து நற்செயல்களில் ஈடுபட்ட மாற்றுக்கருத்தாளர்களான கூட்டமைப்பை புலிகள் அங்கீகரித்து கூட தங்களது சார்ப்பு உறுப்பினர்களையும் சேர்த்து உள்ளை விட்டது கூட ஒட்டு மொத்தமாக போட்டுத்தள்ள எண்றால் பாத்துக்கொள்ளுங்கோவன் எப்படியான அட்டூளியமானவை எண்டு...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.