Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பௌத்த பேரினவாதத்தை தோலுரிக்கும் ரைம் சஞ்சிகை சிறிலங்காவில் தடுத்து வைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த பேரினவாதத்தை தோலுரிக்கும் ரைம் சஞ்சிகை சிறிலங்காவில் தடுத்து வைப்பு
[ சனிக்கிழமை, 29 யூன் 2013, 00:55 GMT ] [ தா.அருணாசலம் ]

மியான்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்குத் தலைமை தாங்கும்,பௌத்த பிக்குவான விராது மற்றும் அவரது பௌத்தம் 969 என்ற அமைப்புடன் பொதுபல சேனாவை ஒப்பிடும் கட்டுரை தாங்கிய ரைம் சஞ்சிகை சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

மியான்மாரில், முஸ்லிம்களுக்கு எதிராக, பௌத்த பிக்குகள் தலைமையில் நடத்தப்படும் இனவாத, மதவாதத் தாக்குதல்களைக் கண்டித்து, அதற்குத் தலைமை தாங்கும் விராது பிக்குவின் அட்டைப்படத்துடன், பௌத்த தீவிரவாதத்தின் முகம் என்ற அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டுள்ளது நியுயோர்க்கில் இருந்து வெளியாகும் ‘ரைம்‘ சஞ்சிகை.

இந்தக் கட்டுரையில் சிறிலங்காவில் தலைதூக்கும் பௌத்த பிக்குகளின் பேரினவாதம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, பௌத்த பேரினவாத அமைப்பான பொதுபல சேனாவுடன், விராது பிக்குவின் பௌத்தம் 969 என்ற அமைப்பு ஒப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரை வெளியாகியுள்ள ரைம் சஞ்சிகையின் ஜுலை மாத இதழ், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் இது சிறிலங்காவில் விநியோகிக்கத் தடை விதிக்கப்படலாம் என்று தெரியவருகிறது.

எனினும் இது தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாத என்று சிறிலங்காவின ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20130629108570

இப்படி பௌத்தத்தை தோலுரிக்கும் கட்டுரை சர்வதேச அளவில் வெளிவர இருக்கு என்ற அசுமாத்தம் அரசுக்கு ஏற்கனவே தெரிந்திருக்காலம். இந்த பத்திரிகைகள் தாங்கள் பிரசுரிக்கும் கட்டுரைகளை நேரே சம்பந்தப்பட்டவர்களிடம் காட்டி கருத்து கூறச் சொல்லி கேட்பார்கள்.  இதனால் அரசபக்கம் இதை தெரிந்து வைத்திருந்திருக்கும். ஆனாலும் அரசு இந்த அறிவை இலங்கையில் ஏற்படக்கூடிய சலசலப்பை அடக்க இலங்கை பாவிக்கிறது போலிருக்கு. யாழில் பலநாட்களாக புத்தம், கரணம், கச்சாமியை சில முஸ்லீம் ஊதுகுழல்கள் போல நடந்து கொள்பவர்களால் தொடர்ந்து ஊதப்படுகிறது.

 மேலும் எதிர்கட்சிகள் பாரளுமன்றத்தில் இந்த பொதுபல சேனையால் நாட்டுக்கும் மதத்திற்கும் கழங்கம் ஏற்பட்டுவிட்டது என்றும், அரசுக்கு  இந்த கட்டுரை பற்றி ஏற்கவே தெரியுமாஎன்றும், அதற்கு அரசு என்ன பரிகாரம் செய்தது என்றும் கேட்க போகிறார்கள்.  இதை உள் நாட்டில் சூடுபிடிக்கவிடாமல் எதிர்க்கட்சிகளின் பொய்ப்பிரசாரம் என்று தட்டிகழிக்க அரசு பத்திகையை தடுக்குகிறது. ஆனால் எதிகட்சிகளின் விவாதம், புத்தம் நல்லதா, கெட்டதா என்பது அவர்களுக்கு உள்நாட்டில் தெரியும் என்றும் அரசு வெளியில் பொது பல சேனாவால் ஏற்பட்ட களங்கத்தை துடைக்கிறதா என்றும் கேட்பார்கள்.

மேலும் ராசபக்ஷா திரும்ப திரும்ப "man of the year" ஆக வர முயற்சிப்பதால் தாங்கள் வலிய இலங்கையை பற்றியும் ஆராய டைம்ஸ்சை அழைத்திருக்கிறார்கள். அதிலும் பார்க்க பகிடி என்ன என்றால் பொதுபல சேனா தனது கிளைகளை நியூயோர்க்கில் இரண்டு மாதத்திற்கு முன்னர் தான் திறந்த்தது. இது சரியாக டைம்ஸ் பத்திரிகைக்கு அப்ப குதிருக்குள் இல்லை என்பது போலாகியிருக்கிறது. ஆனால் அரசு இவற்றைக்கண்டு மிரளாது. எனவே பொதுபல சேனாவுக்கு வெளிநாட்டில் கிளை அல்லது தூதுவராலயம் திறக்க பணம் எப்படி வருகிறது என்றதை பற்றி எதிர்க்கட்சிகள் ஆராயாமல் விட்டால் அவர்கள் பல கஸ்டங்களை பின்னாளில் சந்திப்பார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

கதிரவனைக் கைக்குடையால் மறைக்க முயல்கிறது, இலங்கை அரசு! :D

  • கருத்துக்கள உறவுகள்

The Time magazine’s cover story featuring Burmese monk Ashin Wirathu as “The Face of Buddhist Terror,” has been banned by the Myanmar government in order to prevent further religious conflict. The highly controversial article has resulted in much anger from the Buddhist community with a Facebook page titled “ We Boycott Time magazine for their choice of Wirathu as “Buddhist Terror” being set up following the release of the article with over 14,000 supporters.

Radical monks in Myanmar have embarked on a campaign against Muslims; boycotting Muslim-owned businesses, calling for Buddhist women to be banned from marrying men of other religions and acts of violence carried out on many of the country’s Muslims through the “969 campaign.”

Muslims are like the African carp. They breed quickly and they are very violent and they eat their own kind. Even though they are minorities here, we are suffering under the burden they bring us,” Wirathu claimed. With regards to the article he states, “Editors and reporters from a world-renowned magazine in a so-called human rights champion country committing such a serious human rights violation and I am very surprised.”

It is not only in Burma that violence against Muslims is being carried out, “In Sri Lanka, where a conservative, pro-Buddhist government reigns, Buddhist nationalist groups are operating with apparent impunity, looting Muslim and Christian establishments and calling for restrictions to be placed on the 9% of the country that is Muslim,” the magazine says.

ரகு அண்ணா இதில் சின்ன சிக்கல், சிங்கள பேரினவாதம் கிறிஸ்த்தவர்களையும், இஸ்லாமியரையும் தாக்குகின்றது என்று கூறும் இந்த பத்திரிகை, 200,000 தமிழ் மக்கள் அழிக்கபட்டதை பற்றி வாய் திறக்கவில்லை பார்த்தீர்களா?

டைம்சும் "முஸ்லீம்கள் மீது திருப்பப்பட்ட இனத்துவேசமாகத்"த்தான் பேசுகிறது. ஆனலும் இது மிகக்கப்பாரிய மாறுதல் அமெரிக்காவில் பௌத்தம் என்றால் தேவமதமாக அப்பிப்பிராயம். அது மாற்றினால்தாம் நாமும் நம்மை தாக்கப்பட்டவர்களாக காட்டலாம். அதே நேரம் நாம் இந்த திருப்பட்ட சொல்லை நீக்க பார்க்க வேண்டும்.

டம்ஸ்சின் கருதுக்கள் கல்ஃப் நியூசில் எழுதியவரின் கருத்துக்களை பிரதி பலிக்கிறது. அவர் ஒரு கிறிஸ்தவன். எனவே கிறிஸ்த்தவ முஸ்லீம் கதைகளை மட்டும்தான் வைக்கிறார். ஆனாலும் இது இன்றைய சில சந்தர்ப்பவாத முஸ்லீம்களாளால் அவருக்கு கொடுக்கப்பட்ட அப்பிப்பிராயம்.

அவர் பேட்டி கண்டிருப்பது முஸ்லீம் பிரஜைகளையே. இதனால் தமிழ் முஸ்லீம் ஒற்றுமையை வளர்க்கலாம் என்பது உண்மையல்ல. இந்த புதிய பிரச்சரத்தில் டைம்ஸ் இறங்கவும் இல்லை. ஆனால் பிரச்சரிகள் தமிழ்-முஸ்லீம் கதைகளின் மூலம் மறை முகமாக முயல்வது 13ம் திருத்தம் மீது நடந்துகொண்டிருக்கும் தாக்குதல்களை திசை திருப்புவதாகும். வேறு எதையாவது திசை திருப்ப வேண்டுமாயின் 13ம் திருத்தத்தை எடுப்பார்கள். இப்போது அதிலிருந்து கவனத்தை திருப்ப புதிய முயற்சிகள். ஆனால் டைமஸ் விட்ட பிழையில் ஒரு பகுதி கவலையீனப் பிழையும்.   

பிக்கு ஒருவர் தாக்கியதில் இரு பிள்ளைகளின் தந்தை பலி : பிக்கு கைது!

Written by Tamil   // June 30, 2013   //

1Arrestaad.jpgகாலி, லபுதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் லபுதுவ பிரதேச விகாரைக்கு வருகை தந்த நபரை இவ் விகாரையின் பிக்கு ஒருவர் தாக்கியுள்ளதாகவும், கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர், நேற்றிரவு உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

44 வயது நிரம்பிய இரு பிள்ளைகளின் தந்தையான, முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும், காலி பொலிஸார் குறித்த பிக்குவை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://news.tamilstar.com/archives/39310

  • கருத்துக்கள உறவுகள்

ரகு அண்ணா இதில் சின்ன சிக்கல், சிங்கள பேரினவாதம் கிறிஸ்த்தவர்களையும், இஸ்லாமியரையும் தாக்குகின்றது என்று கூறும் இந்த பத்திரிகை, 200,000 தமிழ் மக்கள் அழிக்கபட்டதை பற்றி வாய் திறக்கவில்லை பார்த்தீர்களா?

உண்மைதான், நானும் கவனித்தேன். பிரச்சினை என்னவென்றால் தாமும் சேர்ந்தே அழித்த தமிழினத்தைப்பற்றி அவர்களே கதைக்க முடியாதல்லவா?/ அதனால்த்தான் அப்படியொன்றே நடவாதமாதிரி இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

65 ஆண்டுகளாக பெளத்த சிங்களவர்களால் தமிழ் இந்துக்கள் பாதிக்கப்படுபவதை குறிப்பிடாமல்.. முஸ்லீம்களும் கிறீஸ்தவர்களும் மட்டும் பாதிக்கப்படுவதை ரைம்ஸ் குறிப்பிட்டுள்ளமை அதன் ஓரவஞ்சகத்தன்மையையும் இனங்காட்டுகிறது.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.