Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.பி.டி.பி கட்சியில் இருந்து விலகிய ஒருவரின் நேரடி வாக்கு மூலம்.

Featured Replies

1011848_531361970262776_1681162422_n.jpg
ஈ.பி.டி.பி கட்சியில் இருந்து விலகிய ஒருவரின் நேரடி வாக்கு மூலம்.

வணக்கம் மக்களா. நான் தவராசா தினேஷ் நான் இலங்கையின் வவுனியா பகுதியை சேர்ந்தவன் இப்போது மலேசியாவில் வாழ்கிறேன். நான் EPDP கட்சியில் இருந்து தப்பி ஓடியவன். அது கட்சி என்று சொல்வதைவிட நரகக்குழி என்று சொல்லலாம் அந்த அளவுக்கு மோசமான இடம். டக்ளசின் தலைமையில் மிகப்பெரும் சட்டவிரோத செயல்களே அங்கு நடைபெறுகிறது. இதில் இடம்பெறும் உறுப்பினர்கள் எல்லோரும் மிகப்பெரும் குற்றவாளிகள். நானும் அப்படியே இருந்தேன் இப்போது திருந்தி வாழ்கின்றேன். 

இக்கும்பலிடம் சிக்கினால் எனக்கு மரணம் தான் நான் உயிருக்கு பயப்பிடவில்லை நான் செய்த பாவங்களுக்கு தண்டனை பெறத்தானே வேண்டும் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறேன். மக்களே நான் இந்த நரகக்குழியில் 2002ம் ஆண்டு இணைத்து கொண்டேன். இந்த கும்பலோடு இணைந்து நிறைய சமுக விரோத செயல்களில் ஈடுபட்டேன் அதை நினைத்து செத்துக்கொண்டிருக்கிறேன் இந்த கும்பல் தமிழ் மக்களை எப்படிஜெல்லாம் அழித்து வளமுடியுமோ அப்படியெல்லாம் இலங்கை அரசுடன் இணைந்து அழித்து வாழ்கிறது. 

மக்களே எனக்குத்தெரிந்து நான் 2002ம் ஆண்டு இவர்களோடு இணைந்து செயற்ப்பட்ட காலத்தில் இருந்து ஏராளமான தமிழ் இளைஞர் யுவதிகளை கடத்தி LTTE என்ற பெயரில் அநியாயமாக சுட்டு கொண்டார்கள் அதற்கு நானும் உடந்தையாக இருந்தேன். LTTE என்று சந்தேகப்படுவோரை சித்திரவதை செய்து கொல்வார்கள் இல்லாவிட்டால் பணம் கப்பமாக வேண்டுவார்கள் இதற்கெல்லாம் நானும் உடந்தையாக இருந்தேன்.ஆட்களை கடத்தி பணம் கப்பமாக வேண்டினார்கள் வவுனியா யாழ்ப்பாணம் மன்னர் கொழும்பு பகுதி தமிழ் வர்த்தகர்களிடம் பணம் கப்பமாக வேண்டினோம்.

இந்தியாவில் இருந்து மன்னார் ஊடாக போதைப்பொருள் கடத்தி விற்பது இதுதான் இந்த நரகக்கும்பலின் செயற்பாடுகள் இதைத்தான் முதல் நானும் செய்தேன் இதை எதிர்ப்பவர்களுக்கு மரணம்தான். சமாதான காலப்பகுதியில் ITTE ன் செயற்ப்பாடுகள் பரந்த காணப்பட்டதால் இக் கும்பலின் செயற்ப்பாடுகள் முடங்கின ஸ்ரீலங்கா ஆர்மியின் காவலரண்களில் தஞ்சம் புகுந்தோம். 

பின்பு மீண்டும் யுத்தம் ஆரம்பித்தவுடன் எங்கள் ஆட்டம்தான். இறுதி யுத்த காலப்பகுதியில் இராணுவ பகுதியில் இருந்த LTTE யினரை படையினரிடம் காட்டிக்குடுத்து பணம் வேண்டினோம் இதனை கருணா குழுவும் சேந்து செய்தது. பின்பு இலங்கையில் யுத்தம் இறுதிக்கட்டத்தை எட்டியபோது மக்கள் இடம்பேந்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்தார்கள் அப்போது கருணா குழுவையும் எங்கள் குழுவையும் LTTE யாரும் வந்துள்ளர்களா என்று வடிகட்டும் வேலை வழங்கப்பட்டது அப்போதுதான் வவுனியா ஓமந்தை பாடசாலையில் தங்கியிருந்த மக்களை விசாரித்த போது அப்பாவி நான்கு யுவதிகளை குருமங்கட்டிலுள்ள EPDP காரியாலயத்துக்கு அழைத்து வந்து விசாரணை என்ற பெயரில் குடித்துவிட்டு லிங்கம் தலைமையில் அந்த நான்கு பெண்களையும் பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு மீண்டும் கொண்டு போய் விட்டார்கள்.

இப்படி நிறைய நடந்தது இதை கயவன் டக்கிளஸ் வவுனியா வந்தபோது நான் கூறினேன் இப்படியெல்லாம் நம்ம தோழர்கள் தப்பு செய்கிறார்கள் இது மட்டும் கூடாது என்றேன் அப்போ அவன் சொன்னான் இந்த வன்னி சனங்களுக்கு இப்படித்தான் செய்ய வேணும் என்றான். அதிலிருந்து எனது செயற்ப்பாடுகளை சிறிது சிறிதாக குறைத்து 2010 ம் ஆண்டு மலேசியா தப்பி ஓடிவிட்டேன். மக்களே இந்தக்கூட்டம் மிக மோசமானது. இவர்களால் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பம் கொஞ்சமில்லை. எப்போ நான் நாட்டுக்கு திரும்பி வருவேன் என்று கண்னுக்க என்னைய ஊத்திட்டு இருக்கங்கள். 

இந்த கேவலம் கெட்ட பிறவிகள் டக்கிளசின் அடியாட்கள்.

நன்றி...

www.eelavenkai.blogspot.com

 

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை 8 வருசம் இருந்திருக்கிறியள்.....உங்களால் நிரைய விடயங்கள் சொல்லமுடியும்.....விரிவக எழுதுங்கள்...

எட்டு முப்பதை விட கூடவா :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஆளை நம்பக்கூடாது, உவருக்கு வெளிநாட்டுக்கு அசைலம் அடிக்க ஆசைவந்திட்டிது, அதுதான் தான் நல்ல பிள்ளைக்கு ஆடுறார். எட்டு வருசமா குழந்தை பால்போச்சியோடதானாம் இருந்தது!

  • கருத்துக்கள உறவுகள்

எட்டு முப்பதை விட கூடவா :icon_mrgreen:

 

 

30 வருடங்களாக போராடி புலிகள் சாக நீங்கள் மக்களின் சோற்றை உண்டு விட்டு அவர்களுக்கே துரோகம் செய்தது வரலாற்றில் பசுமரத்தாணியில் எழுதியது போல் எழுதப்பட்டு விட்டது. தேவை எனில் வவுனியாவில் உங்கள் கும்பலின் அராஜகங்களை மக்களிடம் கேட்டறியுங்கள். டேவிட் ஐயா எந்த தூய நோக்கோடு ஆரம்பித்தாரோ (இதே வவுனியாவில்) அதனை குழி தோண்டி புதைத்து விட்டு இன்று பெரிய மனிதராக எப்படித்தான் நடிக்க முடிகிறதோ??

டேவிட் ஐயா ,டாக்டர் இராஜசுந்தரம் இருவரும் செய்த சேவை அப்போதிருந்த எந்த அரசியல் தலைமைகளும் செய்யவில்லை .70களில் கூட்டணி தலைமைகள் மேடைப்பேச்சில் ,வட -கிழக்கில் மலையக தமிழர்களை குடியேற்ற வேண்டும் என்றதை செயலில் இவர்கள் இருவரும் செயல்படுத்தினார்கள் .இதைக்கண்டு தா .சிவசிதம்பரம் பயந்து இவர்களுக்கு இடையூறுகள் விளைவித்தவர் .

PLOT இன் துரோகத்தால் ,டேவிட் ஐயா ஒதுங்கி இந்தியாவில் வாழ்கின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இவர் நெடுந்தீவு மற்றும் வேலனை போன்ற இடங்களில் இடம்பெறும் விடையங்களைக் குறிப்பிடவில்லை, அங்கு என்ன நடக்கின்றது, எப்படி எப்படி எல்லாம் கொலைகள் மறைக்கப்படுகின்றன என்ப்தை அவரது வாயாலையே கேழுங்களேன்.

அதுசரி எப்படி இருக்கிறியள், உங்களுக்கென்ன நீங்கள் பழைய இந்துக்கல்லூரி, அதுசரி இப்பவும் உங்க கனடாவில தவணை போட்டு கார்ப்பார்க் (வாகனத் தரிப்பிடம்) உடைச்சு சில்லறை பொறுக்கிறனீங்களோ. இப்ப கொஞ்சம் கஸ்டம் என்ன இப்ப அவங்கள் புது விழையாட்டெல்லம் கொண்டுவந்திட்டாங்கள்.  அதுசரி இப்ப நீங்களும் முன்னேறி மட்டையளவுக்கு வளந்திட்டியள் எண்டு நினைக்கிறன். மற்றப்படி ஊரில அந்தத் துரிசுக்காணியை நல்ல விலைக்கு விக்கவேணும் எண்டியள் எந்தளவில இருக்குது அந்தவிடையம். என்ன தான் இருந்தாலும் வாழையிலையில நல்ல இறுக்கமா சுத்திக்கட்டி சூட்டோட சூடாக கொஞ்சநேரம் யாழ்ப்பாணத்துத் தெருக்களில சைக்கிள் ஹான்டிலில் கொளுவினபடி ஒரு சுத்துச் சுத்தி வந்த சோத்துப்பார்சலை அவுக்கேக்க இருக்கும் வாசமும் அதைச்சாப்பிடும்போது இருக்கும் இதமும் கனடா வாழ்க்கை தராது. அதுசரி இப்ப புலம்பெயர் நாடுகளில் எங்களது உணவுப் பழக்கவழக்கத்தில் எதையெதையோ எல்லாம் ஊரிலிருந்து இங்கை கொண்டுவந்தாயிற்று, ஆனால் இப்ப ஒரு "ரென்ட்" வந்திருக்கு கேள்விப்பட்டனீங்களே சுடச் சுடச் சோறுகறியக் வாழையிலையிலை கட்டி கொஞ்சநேரம் வைச்சிருந்து பிறகு அவிழ்த்துச்சாப்பிடுகிறது, அந்த சிதம்பர ரகசிய ருசியை நீங்கள்தான் புலம்பெயர் நாடிகளில் அறிமுகப்படுத்தினியளோ எண்டு நினைக்கிறன். எதுக்கும் நீங்கள் வாழும் தேசத்தில் காப்பிரிமை பெற்றிடுங்கோ ஓய்வூதியம் கிடைக்கும் காலமும் அண்மிக்குது அப்ப கொஞ்சகாசு கூடுதலாக வர க்கூடிய வழிமுறை அது.

  • கருத்துக்கள உறவுகள்

எட்டு முப்பதை விட கூடவா :icon_mrgreen:

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=125021&hl=

  • கருத்துக்கள உறவுகள்

சிறிது தொலை நோக்கில் பார்த்தால் இதை எழுதியது ஈ.பி.டி.பி க்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிராளிகள் என்பது எனது கணிப்பு.

  • 2 weeks later...

எட்டு முப்பதை விட கூடவா :icon_mrgreen:

 

 இல்லை இல்லை! உங்கள் 30 ஐ விட அவரின் எட்டு குறைவு தான். கவலைப்படாதீர்கள்! :D

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.