Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு கொழும்பு கோட்டை நீதிபதி எச்சரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
court20111012-150.jpg

கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே எச்சரித்துள்ளதுடன் உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஏற்றவகையில் தன்னால் மனுவை விசாரிக்க முடியாது என்றும் நீதவான் தெரிவித்துள்ளார். ஹோட்டல் கட்டணத்தை செலுத்தாத பிரித்தானிய பிரஜையின் கடவுச்சீட்டை விடுவிக்குமாறு கோரி பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே நீதவான்; திலின கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த மனுவை நிராகரித்த நீதவான், உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஏற்றவகையில் வழக்கை விசாரிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். கடவுச்சீட்டை கேட்டு உரிய நபர் மனுத்தாக்கல் செய்யவேண்டுமே தவிர, உயர்ஸ்தானிகராலயம் அல்ல என்றும் நீதவான் சுட்டிக்காட்டினார். பிரித்தானிய பிரஜையான ஹெலன் ஜோன் 17202 ரூபாவிற்கான கட்டணத்தை செலுத்தாது ஹோட்டலிலிருந்து வெளியேறிவிட்டதாக கொழும்பு கிரேன் ஒரியன்டல் ஹோட்டல் முகாமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

  

ஹோட்டலிருந்து வெளியேறியவர் தனது கடவுச்சீட்டை தவறுதலாக ஹோட்டலிலேயே விட்டுசென்றுவிட்டார். அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்த பொலிஸார் அந்த கட்டணத்தை பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் செலுத்திவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த விவகாரத்தில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஹோட்டல் நிர்வாகமும் முன்வந்ததுள்ளதாக நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையிலேயே உரியவர் இன்றி உயர்ஸ்தானிகராலயத்தினால் கடவுச்சீட்டை கோரிநிற்பது சட்டத்திற்கு புறம்பான விடயமாகும் என்று தெரிவித்த நீதவான் அவ்வாறு கோரிநிற்கவேண்டாம் என்றும் எச்சரித்தார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=87124&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நீதிபதிகளுக்கு சட்டம் புரியவில்லை. நியாயம் பிளக்க தெரிகிறது.

 

ஒரு கடவுச்சீட்டு வழங்கிய அரசாங்கத்தின் சொத்து என உலகின் சகல கடவுச் சீட்டுகளிலும் பொறிக்கப் பட்டு உள்ளது.

 

அதனை வழங்கிய பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதிகளான உயர்ஸ்தானிகராலயத்தினால் கோரப் பட்டுள்ளது.

 

தான் சகலத்தையும் துளைத்து விட்டதாக கருதிய நபர்  உயர்ஸ்தானிகராலயத்தினால் வழங்கப் பட்ட வேறு அடையாளப் பத்திரத்துடன் நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் பணத்தினை அனுப்பி குறித்த கட்டணம் உயர்ஸ்தானிகராலயத்தினால் கட்டப்பட்டு விட்டது.

 

இரத்து செய்யப்பட்ட கடவுச் சீட்டினை வழங்கிய அரசின் பிரதிநிதிகள் தருமாறு கேட்க, நீதிவான் சட்டம் தெரியாமல், உரிமையாளர் வரவேண்டுமாம் என்று நடப்பு காட்டி உள்ளார்.

 

மகிந்தாவின் மாதனமுத்தா ஸ்டைல் நீதவான்களுக்கு சட்டம் படிப்பிக்க வேண்டுமே!

 

கடவுச் சீட்டினை சுட்டு மகனை லண்டனுக்கு அனுப்ப போறாரோ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டில் வெளி நாட்டுத் தூதுவராலயம் இருப்பது அந்த நாட்டுக்கு வரும்  தங்கள் நாட்டுப் பிரஜைகளின் நலன் களைக் கவனிப்பதற்கும்  என்பது தெரியாமல் உளறும் இந்தச் சிங்கள நீதிபதியைப் பதவி இறக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நீதிமன்றங்களை தரத்தாழ்வு (discrediting) செய்வதற்கு இப்படியான சான்றுடன்கூடிய நிகழ்வுகளை ஆவணப்படுத்த வேண்டும்.. பொதுவிவாதங்களின்போது பேச்சுக்காவது உதவும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பிரச்சனை, நீதி, சட்டம் பற்றியதல்ல!

 

நானும் இஞ்ச இருக்கிறன் எண்டு காட்டுற நீதிபதியின் 'ஈகோ' தான் பிரச்சனை! :D

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பிரச்சனை, நீதி, சட்டம் பற்றியதல்ல!

 

நானும் இஞ்ச இருக்கிறன் எண்டு காட்டுற நீதிபதியின் 'ஈகோ' தான் பிரச்சனை! :D

 

அரசன் எப்படியோ

ஆண்டியும்  .....................??? :(

இப்படியான நடப்புகள் மேலிடத்து ஆணைகளில் இருந்து வருவதாக இருக்கலாம். பிருத்தானியா காலிக் கொலை வழக்கில் காட்டமாக நடந்து கொள்கிறது. லண்டனின் பொது நலவாய பிரச்சனை எழுவதால் அதையும் கொழும்பு வரைக்கும் கொண்டுவருகிறது. இலங்கை அரசின் இன்னொரு புத்தகாய நாடகம்தான் இது. எப்போதும் தனது பிழையை மறைக்க இன்னொன்றை வைத்து ஊதுவது.  பானையை ஆனையாக்குவது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.