Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் களத்து உள் ஆய்வு......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  விதமாக முன்னாள் நீதிபதி  விக்கினேசுவரன் அவர்கள் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக வந்துள்ளார்.  இது பற்றி  யாழ் களத்தில் பலமுறை  பேசியுள்ளோம்.  பேசிக்கொண்டிருக்கின்றோம்.  அவர் என்ன  சொல்லப்போகின்றார் என்ற கேள்விக்கும் தமிழ் மக்களின் நலன்களுக்காக பாடுபடுவேன் என சொல்லியுள்ளது இன்று வெளி  வந்துள்ளது.

 

இந்தநிலையில்

தமிழரின் உரிமைப்போராட்டம் பலவாறு வீறு  கொண்டு எழுந்து  இன்று எதுவும் கைகூடாதநிலையில்

ஒவ்வொருவரையும் நம்பி எல்லோராலும் ஏமாற்றப்பட்டு  எந்த ஒரு நம்பிக்கையுமற்று படுகுழியில் கிடக்கும்  இவ்வேளை இது போன்ற சில முடிவுகளை  தமிழர் தரப்பு எடுப்பது முக்கியம் பெறுகிறது. 

 

முன்னாள் நீதிபதி என்ன   இறைவனே  வந்தாலும் மசியாது அடக்கும் சிங்களத்தின் கபட ஆட்சியின் முன்னால் இந்த சட்டத்துக்குள் செயற்படப்போகும் நீதிமானால் என்ன அறுவடை செய்யமுடியும்  என்பது நாம் அறிந்ததே.  அதுவும் மாகாணசபையை  வைத்து.  எதிர்பார்ப்புக்களை  வளர்ப்பது நாமே அன்றி  அவர்களது தப்புக்கள் இதில் இல்லை.

 

ஆனால் இந்த முடிவு தமிழர்களுக்கு தேவைப்பட்டிருக்கிறது.  அது பலராலும் வரவேற்கப்பட்டடிருக்கிறது. வரவேற்கப்படவேண்டிய  நிலையில் தமிழர் தரப்பு நிற்கிறது என்று சொன்னால் மிகையாகாது. இதில் புலிகள் மக்கள் புலிஎதிர்ப்பாளர்கள் அனைவரும் இந்த முடிவுக்கு வந்திருப்பது தெளிவாகிறது.

 

இங்கே யாழ் களத்தில் கூட பலராலும் அதிலும் புலிகளை  முழுமையாக ஆதரிப்போர்  கூட இவரது வரவை எதிர்பார்த்து ஆரம்பத்திலேயே  எழுதியதுடன் தற்பொழுது வரவேற்றும் எழுதி  வருகின்றனர்.  இதைப்பார்க்கும் போது புலிகளது ஆதரவாளர்கள் பெரும் மாற்றம் ஒன்றை உலகுக்கு காட்ட முயல்வது தெரிகிறது. பயங்கரவாதப்பட்டியலில் உள்ள  புலிகள்  சாதாரணநிலைக்கும் அப்பால் சென்று  நீதிபதியை தலைவராக்கியபடி உலகுக்கு விடும் செய்தி கனதியானது.   நாம் தற்பொழுது சட்ட வரையறைக்குள் நிற்கின்றோம்.  எம்முடன் பேச உங்களுக்கு  இனி எந்த இடைஞ்சலுமில்லை என்பதே அதுவாகும்.

 

புலிகள் இறங்கினார்களா?

தமிழர்கள் தமது தாகத்தை மறந்தார்களா?  என்பதற்கு அப்பால் உலகுக்கு என்னவழி தேவை என்பதை தமிழர்கள் தெரிவு செய்துள்ளனர்  என்பதே செய்தியாகும்.

 

நாம் யாழ்களத்தில் தொடர்ந்து ஒட்டி வெட்டி எழுதத்தான் போகின்றோம். அவரது செய்கைகளை  நடவடிக்கைகளை பேச்சுக்களை ஒற்றுக்கேட்டு  பார்த்து பந்தாடத்தான் போகின்றோம்.  ஆனால்  இவரைக்கொண்டு வந்தவர்கள் நாமே என்பதை மனதில் கொள்வோம்....

 

யாழ் கள அனுபவத்தினூடக விசுகு........

உண்மைதான் விசுகு  அண்ணா இந்த சந்தர்ப்பத்தையும் சிறிது பொறுத்து பார்ப்போம். நாம் வட மாகாண  தேர்தலை புறக்கணித்தால் ஒட்டுக்குழுக்கள் வெற்றி அடைந்து விடுவார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு வடிவத்தை எடுக்கவேண்டிய  தேவை  இருந்தது

அது தற்பொழுது நடந்திருக்கிறது

பார்க்கலாம்

 

நன்றி

கருத்துக்கும் நேரத்திற்கும்

உண்மைதான் விசுகு  அண்ணா இந்த சந்தர்ப்பத்தையும் சிறிது பொறுத்து பார்ப்போம். நாம் வட மாகாண  தேர்தலை புறக்கணித்தால் ஒட்டுக்குழுக்கள் வெற்றி அடைந்து விடுவார்கள்.

 

 

உண்மை யாழ் அன்பு புறக்கணிப்பது எமக்கு நாமமே வெட்டும் குழியாகிவிடும் .

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவடைந்து

பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

 

தேர்தலில்  நின்று வென்றவர்களே  இது மாபெரும் வெற்றி  என்பதன் மூலம்

அவர்களே இதை எதிர்பார்க்கவில்லை என்றும்  தெரிகிறது.

 

மக்களின்  தீர்ப்பைப்பார்த்தால்

பலவிடயங்கள்  புரிகிறது

 

முதலாவது தெரிவாக முதலமைச்சரே வரவேண்டும்

அப்பொழுது தான்   அவரது பதவிக்கும் குரலுக்கும்  மரியாதை  இருக்கும் என்பதும்

அடுத்தது

புலியாக  இருக்கணும் என்பதும்

3வது ஒற்றுமையாக இப்படியே  இருந்து காரியமாற்றுங்கள் என்பதற்காக சித்தார்த்தனுக்கும்  போடப்பட்டுள்ளது

இது ஒரு பெரும் படை  நடவடிக்கை  என்றால் மிகையாகாது.

அவரவர் மேல் சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை  அவரவர்   கொடுக்கப்பட்டபடி சுமந்தால்

வெற்றி  நிச்சயம்.

 

இதில்  விக்கினேசுவரனுடைய  முகமே  எல்லோர் கண்ணுக்குள்ளும்.

அவர் புதிது என்பதும்  நீதிபதி  என்பதும்

சிங்களவர்களோடு குடும்ப உறவு உள்ளவர் என்பதும்

கம்பை எடுக்கக்கூடியவரல்ல என்பதும் 

காலில்  விழுந்துவிடுவாரோ என்பதும்

நேரடிச்சூட்டுக்கு ஆளாகியுள்ளது.

 

பாவம்

இத்தனையையும்  அவர்  எதிர்பார்த்திருக்கமாட்டார்.

அதைவிட

பெரு வெற்றி  மூலம் பெரும் சுமையை  தன் மீது சுமத்திவிட்டார்கள் என்று அவரே வியப்பதைப்பார்த்தால்

அவருக்கே தற்பொழுதுதான்

தமிழர்களின்  சுயநலம் புரியத்தொடங்கியுள்ளது தெரிகிறது.

ஆனாலும் இனி  ஒரு அடியும் பின்னால்  வைக்கமுடியாது என்பதை படித்த படிப்பும் செய்த தொழிலும் உணர்த்தியிருக்கும்.

 

இப்போ

தமிழ் மக்கள்  எதற்கு இவ்வளவு பெருவாரியாகச்சென்று வாக்களித்தார்கள்...

 

தேர்தலுக்கு 2 நாட்கள் முன்

ஒவ்வொரு வருடமும்

6 மாதம் பிரான்சிலும்

6 மாதம் தாயகத்திலும் நிற்கும் ஒரு இளைப்பாறிய  அதிபரைச்சந்தித்தேன்.

தேர்தல்  பற்றிக்கேட்டபோது........

 

மக்கள்  பெருமளவில்  அக்கறை  காட்டமாட்டார்கள்

அதிலும் யாழில்  தற்பொழுது உள்ளவர்கள் அநேகமானவர்கள் வயதானவர்கள்.

அவர்களால் தேர்தல்  சாவடிகளுக்கு வரமுடியாது

முன்னர் இளைஞர்கள்

பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள்

சைக்கிள்களில் ஓட்டோக்களில் அழைத்துச்சென்று விடுவார்கள்

ஆனால் தற்பொழுது அவர்களும் கண்காணிப்புக்கு உள்ளாகியிருப்பதால் அதைச்செய்யமுடியாது.

எனவே கடினம்  என்றார்.

 

ஆனால் மக்கள் சென்று தெளிவான செய்தி  ஒன்றைச்சொல்லியுள்ளனர்.

ஆனால் இந்தச்செய்தி  யாருக்கு???

என்ன  பிரயோசனம்????

 

1- உலகத்தமிழர்களை உலுக்கி  எடுத்து தட்டி எழுப்பியுள்ளது. (தமிழகம்  புலம் உட்பட)

2- மகிந்தவுக்கும் எடுபிடிகளுக்கும் நாம்  ஒன்றுக்கும் மயங்கவில்லை என்பதையும் எமது பாதையையும் மீண்டும் சொல்லியுள்ளது.

3- உலகத்துக்கு நீங்கள் கேட்டபாதையில் நீதிபதியை  முன்னிறுத்தி  ஆனால் அதே லட்சயத்தோடு வருகின்றோம் என்றும் சொல்லியுள்ளது.

 

இங்கு பாதை மற்றும் நிறங்கள் மாற்றமடையவில்லை

பேசும  மொழியே அவர்களுக்கு புரியும்படி மாற்றப்பட்டுள்ளது

மற்றும்படி

பேசப்போறவர்களுக்கும் புரியும்

இது மாவீரர்களாலும்  பிரபாகரனாலும் வந்தது என்று.

முன்னிருந்து  பேசுபவர்களுக்கும் தெரியும்

பேசுவது  பிரபாகரனின் தொடர்ச்சி  என்று.............

 

பதிவீற்கு நன்றி அண்ணா!

 

தேர்தல் அறிவிக்கபட்ட பின்னர் இணையத்தளங்கள் முகநூல் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது வைக்கப்பட்ட கடும் விமர்சனம் குறித்த எனது ஆதங்கத்தையும் பதிவு செய்திருந்தேன். காரணம் இந்த விமர்சனங்கள் ஆளும் கட்சிக்கும் அதனை அண்டிப் பிழைப்பவர்களுக்கும் சார்பானதாக அமைந்து விடுமோ என்ற கவலைதான்.

 

காரணம் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பதை ஓரளவு ஊகிக்கக் கூடியதாக இருந்தாலும் இத்தகைய ஒரு மகத்தான வெற்றியை அனேகர் ஏன் ஒருவருமே எதீர்பார்த்திருக்கவிலலை என்று சொல்லலாம். இதற்கான காரணம் மக்கள் மீதான நம்பீக்கையீனமல்ல. மாறாக தனது படை, பண, அதீகார பலதத்தின் மூலம் அரசாங்கம் மக்களை அச்சுறுத்தி தேர்தல் தில்லுமுல்லுகள் மூலம் முடிவுகளில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்ற அச்சமே.

 

ஆனால் தற்போது தேர்தல் முடிவடைந்து தமிழ் மக்கள் தமது தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில் தமிழ் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் காத்திரமான விமர்சனங்கள்  தொடர்ந்து முன்வைக்கப்பட வேண்டும். ஆனால் அவை எழுந்தமானமான விமர்சனங்களாக அல்லாமல் காத்திரமான விமரசனங்களாக இருக்க வேண்டும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பெரிதாக அரசியல் தெரியாது! :D

 

அது எங்களுக்கு அப்பவே  தெரியும் என நீங்கள் கொடுப்புக்குள் சிரிப்பதும் எனக்குத் தெரிகின்றது! :o

 

ஆனால் ஒரு சிறிய சம்பவத்தை மட்டும் சொல்ல விரும்புகின்றேன்! எனது வெள்ளை நண்பன் ஒருவன் அப்போது லண்டன் பி.பி.சி இல் வேலை செய்தான்!

 

அப்போது யோகி, தனது துப்பாக்கியை எடுத்து, ஆயுதக்கையளிப்புக்கு அடையாளமாக மேசையில் வைத்ததைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் அவனிடம் நான் சொன்னேன்! எங்களது பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வருகின்றன போல உள்ளது, நண்பனே என்று!

 

 கதைக்கும் போது, சுருட்டுக்கூடக் கீழே விழாமல் கதைக்கும் ஆங்கிலத்தில், அவன் சொன்னது, இவ்வளவும் தான்!

 

லெட் அஸ் வெயிற்  அண்ட் ஸீ, மை பிரென்ட்!

 

எவ்வளவு தீர்க்கதரிசனமான வார்தைகள் அவை என எனக்கு அப்போது புரியவில்லை! :o

 

அதனால் இப்போதெல்லாம் துள்ளிக் குதிப்பதில்லை!

 

ஆனால் அடிமனதில் ஒரு நம்பிக்கை ஆழமாக வேரூன்றி உள்ளது! ஒரு நாள் நிச்சயம் வெல்வோம்! :icon_idea:

வெளியால் தெரிவது ஒன்று.
 
உள்ளுக்குள் நடப்பது இன்னொன்று.
 
எப்படியோ...  நீண்ட காலங்களுக்குப் பிறகு எம்முடைய நலன்களும் இந்தியாவின் நலன்களும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.
 
 
இந்த ஒழுங்கில் போகலாம்...
 
 
1. மாகாணசபைத் தேர்தல்கள்
 
2. அதிகாரப் பரவலாக்கம்
 
3. இந்திய இலங்கை ஒப்பந்தம் அமுல்படுத்தல்.
 
4. இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படாத சூழ்நிலைகள் திருமலை உள்ளிட  இலங்கையின் பகுதிகளில் உருவாதல்.
 
தற்சமயம் முதலாவது முடிந்துள்ளது. 2‍  -> 3  -> 4 ஆவது படிகள்  நடந்தேற மாகாணசபைகளின்(விக்னேஸ்வரனின்)  பின்பலமாக இந்தியா இருந்து கொள்ளும்.
 
இந்த தேர்தல் நடந்தது ஒரு பெரிய தடைதாண்டல். அதைவிடப் பெரிய தடைதாண்டலாக அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளல் இருக்கப் போகிறது.
 
2 ஆவதில் இந்தியாவின் ராஜதந்திரம் பெரும் பின்பலமாக இருந்தாலும் அதைக் களத்தில் நெறியாள்கை செய்யப் போவது விக்னேஸ்வரனே. இதற்கு அவரை விடப் பொருதமானவர் இல்லை எனலாம்.
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே குணதாச அமரசேகர வழக்குப் போட்டுவிட்டாராம்..! :rolleyes: அதாவது கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒரு சட்டமீறல் என்று..

இதை உடன் கவனத்தில் கொள்ளும் மோஹான் பீரிஸ் ஆவன செய்வார்.. இந்தியாவுக்கு செடில் குத்தி இழுக்கப் போகிறார்கள்..

கடைசியில் கலைபடும் என்றுதான் நினைக்கிறேன்.. :rolleyes:

 

 

கடைசியில் கலைபடும் என்றுதான் நினைக்கிறேன்..  :rolleyes: 

நடந்தால் நல்லது  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.