Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல கவிஞர் வாலி காலமானார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Manushya Puthiran

வாலிக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்ற பெயரில் அவர் அவ்வப்போது நேர்ப்பேச்சில் சொன்ன குழந்தைத் தனமான சிலேடைகளை எல்லாம் அவரது கவித்துவமாக கூறி பலரும் வாலியை டேமேஜ் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு மனிதன் அவன் வாழ்நாளில் என்ன செய்தான் என்பதை தெரியமலேயே அவனை இகழ்வதும் புகழ்வதும் தமிழ்ச் சமூகத்தில் பலருக்கும் நடப்பதுபோலவே வாலிக்கும் நடக்கிறது.

இன்று புதிய தலைமுறையில் பேசிய தமிழருவி மணியன் அய்யா அவர்கள் வாலி சமுக அநீதிகளைக் கண்டு கொதித்த ஒரு சமூகப் பொறுப்புள்ள கவிஞனாக திகழவில்லை என்று விமர்சித்தார். ஒரு ஓவியனிடமோ இசைக் கலைஞனிடமோ நீ சமூக அநீதியைக் கண்டு ஏன் கொதிக்கவில்லை என்று யாரும் கேட்பதில்லை. ஆனால் தமிழ்ச் சமூகத்தில் எழுத்தாள்னிடம் மட்டும்இந்தக் கேள்வி தொடர்ந்து கேட்கப்படுகிறது. ஏன் ஒருவன் வாழ்நாளெலலம் கஸல் காதல் கவிதைகளை மட்டும் எழுதும் ஒரு கவிஞனாக இருந்தால்தான் என்ன? வைக்கம் முகமது பஷீரை ஒரு சமூகப் போராளி என்பதற்காகவா கேரள சமூகம் கொண்டாடுகிறது?

ஒரு கவிஞனையோ எழுத்தளனையோ ஏற்பதை அவனது சமூக - அரசியல் நிலைப்பாடுகள் வழியாகவே செய்ய வேண்டும் என்பது தமிழ் நாட்டில் எழுதபடாத சட்டமாக மாறிவிட்டது. இதனால் பல முக்கியமான படைப்பாளிகள் அவமானபடுத்தப்பட்டிருக்கிறர்கள். பல போலிப் படைப்பாளிகள் முன்னிறுத்தபட்டிருக்கிறார்கள்.

அரசியல் குண்டாந்தடிகளால் இலக்கிய அளவுகோல்களை உருவாக்குவதை நிறுத்தாமல் நமக்கு மீட்சியில்லை.

  • Replies 61
  • Views 8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: கவிஞர் வாலியின் பெருமை யாருக்கும வாய்க்காதது என்று கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

கவிஞர் வாலியின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

நிரப்ப முடியாத வெற்றிடம்

தமிழகத்தின் முதுபெரும் பாடலாசிரியர் காவியக் கவிஞர் வாலியின் மறைவு பாட்டுலகில் இட்டு நிரப்பமுடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது. அழைத்த போதெல்லாம் அன்பாக பேசிமகிழ்ந்த ஒரு மூத்த நண்பரை நான் இழந்து விட்டேன்.

வாலி பெற்ற சில பெருமைகள் எந்தப் பாடலாசிரியருக்கும் எளிதில் வாய்க்காதவை. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பாடல் எழுதிய பாடலாசிரியர் வாலியாகத்தான் இருக்க முடியும். எம்.ஜி.ஆர். - சிவாஜி தொடங்கி நடித்துக்கொண்டிருக்கும் நான்காம் தலைமுறை வரைக்கும் பாட்டெழுதிய பெருமை அவருக்கு உண்டு.

சுப்பையா நாயுடு முதல் ரஹ்மான் வரை...

கண்ணதாசன் என்ற கவியரசருக்கு சற்றே இணையாக நெடுந்தூரம் நடந்து வந்த சிறப்பும் வாலிக்கே வாய்த்தது. எஸ்.எம்.சுப்பையா நாயுடு முதல் ஏ.ஆர்.ரகுமான் வரை எத்தனையோ இசையமைப்பாளர்களுக்கு வரிகளால் வலிமை சேர்த்தார்.

எம்.ஜி.ஆரின் பிம்பத்தை உயர்த்திப் பிடித்ததில் வாலியின் வார்த்தைகளுக்கு பெரும்பங்கு உண்டு. திராவிட இயக்க அரசியலை சாகித்தியத்தில் கொண்டு வந்த சாமர்த்தியம் வாலிக்கு வசப்பட்டிருந்தது. "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்" என்று எம்.ஜி.ஆருக்கு எழுதியவர், கலைஞரின் மைந்தர் மு.க.முத்துவுக்கு "மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ, நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ" என்று எழுதினார்.

தனக்கு தானே இரங்கல் பாடல்

மூன்று என்ற தொடங்கும் பல்லவியை இரண்டு பேருக்கும் பயன்படுத்தி இரு சாராரின் மனம் கவர்ந்த திறமை வாலிக்கு மட்டுமே வரும் உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசாதவர்; தான் உண்டு தன் தமிழ் உண்டு என்று வாழ்ந்தவர்.

வாழ்வின் நிறைவுக்காலத்தில் நோய்களை சந்தித்தாலும் நொந்து கொள்ளாதவர். "தாய்கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை நோய்கொண்டு போகும் காலம் அம்மா" என்று எழுதிய வாலி தன் வரிகளையே தனக்கு இரங்கல் பாடலாக்கி இறந்து விட்டார்.

தமிழ் மரணம்

அவர் உயிர் பிரிந்திருக்கலாம்; உடலை ஐம்பூதங்கள் பிரித்துக் கொண்டிருக்கலாம். அவர் தமிழ் மரணம் தொடமுடியாத உயரத்தில் இருக்கிறது. அது காலமெல்லாம் அவர் புகழைப் பாடிக்கொண்டிருக்கும். இறங்கும் கண்ணீரை துடைத்து கொண்டு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

Thatstamil

1070001_610799745620280_1667055717_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் உணர்வில் எப்போதும் முனைப்புடன் இருந்தவர் கவிஞர் வாலி. தமிழ் மேடைகளைத் தேடி ஓடி வரும் அவரது தமிழ். ஈழத் தமிழர்கள் பால் இயல்பான நேச உணர்வுடன் செயல்பட்ட வாலியின் பேனா எழுதிய இந்தக் கவிதை, படிப்போர் விழி நனைக்கும்..

 

. "ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து - பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி வேறு வேறுண்டோ எனது வாய்க்கு? மாமனிதனின் மாதாவே! - நீ மணமுடித்தது வேலுப்பிள்ளை மடி சுமந்தது நாலு பிள்ளை! நாலில் ஒன்று - உன் சூலில் நின்று - அன்றே தமிழ் ஈழம் தமிழ் ஈழம் என்றது உன் - பன்னீர்க் குடம் உடைத்துவந்த பிள்ளை - ஈழத்தமிழரின் கண்ணீர்க் குடம் உடைத்துக் காட்டுவேன் என்று...

 

சூளுரைத்து - சின்னஞ்சிறு தோளுயர்த்தி நின்றது நீல இரவில் - அது நிலாச் சோறு தின்னாமல் - உன் இடுப்பில் உட்கார்ந்து உச்சி வெயிலில் - சூடும் சொரணையும் வர சூரியச் சோறு தின்றது அம்மா! அதற்கு நீயும் - அம்புலியைக் காட்டாமல் வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு, தினச் சோறு கூடவே இனச் சோறும் ஊட்டினாய்; நாட்பட - நாட்பட - உன் கடைக்குட்டி புலியானது காடையர்க்கு கிலியானது!

 

'தம்பி! தம்பி!" என நானிலம் விளிக்க நின்றான் - அந்த நம்பி; யாழ் வாழ் - இனம் இருந்தது - அந்த...நம்பியை நம்பி; அம்மா! அத்தகு - நம்பி குடியிருந்த கோயிலல்லவா - உன் கும்பி! சோழத் தமிழர்களாம் ஈழத் தமிழர்களை... ஓர் அடிமைக்கு ஒப்பாக்கி; அவர்களது உழைப்பைத் தம் உணவுக்கு உப்பாக்கி; செம்பொன்னாய் இருந்தோரை - செப்பாக்கி; அவர்கள் வாழ்வை வெட்டவெளியினில் நிறுத்தி வெப்பாக்கி; மான உணர்வுகளை மப்பாக்கி; தரும நெறிகளைத் தப்பாக்கி - வைத்த காடையரை வீழ்த்த... தாயே உன் தனயன் தானே - தந்தான் துப்பாக்கி!

 

'இருக்கிறானா? இல்லையா?" எனும் அய்யத்தை எழுப்புவது இருவர் ஒன்று - பரம்பொருள் ஆன பராபரன்; இன்னொன்று ஈழத்தமிழர்க்கு - அரும்பொருள் ஆன பிரபாகரன்! அம்மா! இந்த அவல நிலையில் - நீ... சேயைப் பிரிந்த தாயானாய்; அதனால் - பாயைப் பிரியாத நோயானாய்! வியாதிக்கு மருந்து தேடி விமானம் ஏறி - வந்தாய் சென்னை; அது - வரவேற்கவில்லை உன்னை! வந்த வழிபார்த்தே - விமானம் திரும்பியது; விமானத்தின் விழிகளிலும் நீர் அரும்பியது! இனி அழுது என்ன? தொழுது என்ன? கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள் கன்ன வயல்களை உழுது என்ன? பார்வதித்தாயே! - இன்றுனைப் புசித்துவிட்டது தீயே! நீ - நிரந்தரமாய் மூடிக்கொண்டாய் விழி; உனக்குத் தங்க இடம்தராத - எங்கள் தமிழ்மண் - நிரந்தரமாய்த் தேடிக்கொண்டது பழி!

 

(பிரபாகரன் தாயார் மறைவின்போது கவிஞர் வாலி எழுதிய கவிதை இது) 



Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/07/vaali-s-poetry-on-tamil-eelam-prabh-179441.html

  • கருத்துக்கள உறவுகள்

கண்போன போக்கிலே... வாலியின் பாடல்கள் என்று சொல்ல ஆரம்பிக்கும்போதே, முதலில் வந்து விழுவது அவர் புரட்சித் தலைவர் எம் ஜி ஆருக்காக எழுதிய கண்போன போக்கிலே பாடல்தான். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை உலகுக்கு சொல்லிக் கொடுத்த பாடல். திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் என்று ஆரம்பிக்கும் அந்த சரணம்...!

ஒரு நடிகராக மட்டுமே இருந்த எம்ஜிஆருக்கு 'நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்...' என்று எழுதினார் வாலி. நடிகர் தலைவராகி முதல்வரானார். ஏழைகள் சந்தோஷம் கொண்டார்கள். வறியவரை சந்தோஷம் கொள்ள வைத்த இரண்டு முதல்வர்களில் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர்... அடுத்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்... வாலி எழுதியதே நடந்தது!

குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லும் பாடல்களை எழுதத் தகுதியான கவிஞரும், அதை திரையில் சொல்லத் தகுதி வாய்ந்த நடிகர்களும் இருந்த காலமது. அன்று வாலி எழுதிய நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே... பாடலை இப்போது கேட்டாலும் நெஞ்சம் நிறைந்து தளும்புகிறது. என்ன வரிகள்... எத்தனை கவித்துவம்... எவ்வளவு நேர்மை... என்னே அழகு!

வாலி எழுதினார்... எம்எஸ்வி இசை தந்தார்... டிஎம்எஸ் குரல் தந்தார்.... எம்ஜிஆர் அந்த வரிகளுக்கு உயிர் கொடுத்தார். இப்படி ஒரு இணையை தமிழ் சினிமாவில் இனி பார்க்கத்தான் முடியுமா!

பத்ரகாளி படத்தில் இடம்பெற்ற பாடல் கண்ணன் ஒரு கைக்குழந்தை. ராஜாதான் இசை. எழுபதுகளில் தொடங்கி இன்று வரை, தமிழர் உலகின் ஒப்பற்ற அமுத கானம் இது.

ஒரே நாள் உனை நான்... இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் காதலர்களின் தேசிய கீதமாகத் திகழ்ந்தது. எம்ஜிஆர் கால பாடல்களிலிருந்து எத்தனை அழகான transition... அந்த வரிகளில் துள்ளும் இளமையைப் பாருங்கள்...

மழை வருது மழை வருது... இனிமை என்ற சொல்லுக்கு இனிமை சேர்த்த மெட்டு இந்த பாடலும் அதன் வரிகளும். அதை ஜேசுதாஸையும் சித்ராவையும் இளையராஜா பாட வைத்த விதம்... அம்மம்மா... வாழ்வை இனிமைப்படுத்திய பாடல். இடம்பெற்ற படம்: ராஜா கைய வச்சா.

கண்ணாலே காதல் கவிதை... இதுவும் காதலர்களுக்காக வாலி தந்த வைரமணிப் பாட்டுதான். பிரதாப் போத்தன் இயக்கத்தில் வந்த ஆத்மா என்ற படத்தில் இடம்பெற்ற பாடல். வாழ்நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாலும் அலுக்காது.

இசையும் தமிழின் மகத்துவமும் உணர்ந்த அத்தனை பேரும் அனுபவித்து ரசிக்கும் பாடல் இது. வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம் கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும் அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம் செய்வதென்ன? அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட...

இந்தப் பாடல் எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. மறைந்த நடிகர் விஜயன் இயக்கிய படம் புதிய ஸ்வரங்களில் இடம்பெற்ற உன்னதமான பாட்டு. ஓ வானம் உள்ள காலம் மட்டும வாழும் இந்தக் காதல்... இதுதான் தேவன் ஏற்பாடு... இணைத்தான் பூவைக் காற்றோடு... இந்த பாடலின் இனிமை உணர்ந்தோ என்னமோ.. அடுத்த வரியை இப்படி எழுதியிருப்பார் வாலி... ஓ கானம் உள்ள காலம் மட்டும் வாழும் இந்தப் பாடல்...!

உன்ன நெனச்சேன்... பாட்டுப் படிச்சேன்...

காதல் தோல்வியை வாலி வார்த்தைகளாக வடித்த விதமிருக்கிறதே... அது கமல் ஹாஸனையே கண் கலங்க வைத்தது இந்தப் பாடலில். இதைவிட உணர்ச்சிப் பூர்வமா எழுத முடியாதுய்யா என்று கூறி வாலி கொடுத்த இந்தப் பாடலைப் படித்து முடித்து கலங்கி நின்றாராம் கலைஞானி.

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட... பின்னொரு ஆண்டில் உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் என்ற வாலியின் வரிகளே படத் தலைப்பானது. அந்தப் படத்துக்கும் வாலிதான் பாட்டெழுதினார். அதில் ஒரு பாட்டு.. "என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி..." அதற்கு இணையான ஒரு காதல் பாடலை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா...

போவோமா ஊர்கோலம்... இது சின்னத்தம்பி பாட்டு. பாட்டுப் பைத்தியம் பிடித்துவிட்டதாடா உனக்கு என்று பார்ப்பவர் கேட்கும் அளவுக்கு இந்தப் பாடலைப் பைத்தியமாய் பாடித் திரிந்த இளைஞர்கள் பலரை பின்னோக்கி திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது வாலியின் மரணம்.

அம்மா என்றழைக்காத உயிரில்லையே... தமிழ் சினிமாவின் ஆயுள் உள்ளவரை வாழும் ஒரு பாடல் என்ற உயரிய அந்தஸ்துக்குரிய அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடலை எழுதியவர் கவிஞர் வாலிதான். அதில் ஒவ்வொரு வரியும் பசுந்தங்கம், புதுவெள்ளி, மாணிக்கம், மணி வைரம்... அபிராமி, சிவகாமி, கருமாரி, மகமாயி திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா.... அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நானுந்தன் மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே... ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா... ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா... அய்யா வாலி... இத்தனை அவசரமேனய்யா...!

Thatstamil

கவிஞர் வாலி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள் !!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரைத்துறையால் மட்டுமல்ல!! அவர் அளித்துள்ள பல படைப்பால்,,, ‘தமிழ்பால் என்னைக்குடிக்க வைத்தவர். தமிழ் அவர்பால் கொண்டுள்ள காதலோ! அவர் தமிழ்பால் கொண்டுள்ள காதலோ...வார்த்தைகள் யாவும் அவருக்குக்கட்டுப்படும்.

 

அழகுசேர்க்கும் சொற்களால் அருமையான படைப்புகள் தந்த கவிஞர் நல்ல படைப்பாளி.

 

 

தமிழ் உலகில் உள்ளத்தில் என்றும் நிலைத்து நிற்பார். கவிஞர்.

 

 

மறையவில்லை அவர். நட்சத்திரமாக மின்னிக்கொண்டிருப்பார்!.

  • கருத்துக்கள உறவுகள்

VALI5.jpg

 

MUSIC4_16-06-2010_15_0_2.jpg

Vaali_nagesh_1521231g.jpg

 

vaali_raja_1521259g.jpg

VALI7_23-11-2010_17_0_1.jpg

 

 

Vaali_rajini_1521260g.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பல அற்புதமான பாடல்களைத் தந்த கவிஞர் வாலிக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

உன்னை பிடித்து போக இந்த கவிதையும் ஒரு காரணி 

ஆழ்ந்த இரங்கல் :(

17585_493609444010377_972873213_n.jpg
நடையில் நின்றுயர் நாயகன் 

------------------------------------------------------

இவ்வுளவு பெரிய நாயகனை நான் வாழ்த்தி 

ஒரு கவிதை படிக்காவிட்டால் 

என் தமிழ் துருப்பிடித்து போகும் ...

வையமிசை வைகலன் வாடாது 

அய்யன் வள்ளுவன் வகுத்தளித்த நூல்நடை 

பால்நடை முப்பால்நடை 

அந்த நூல்நடை பால்நடை -போல் நடை 

வைகோ கால் நடை 

கால்நடை மனிதர்களை கால்நடை மூலமாகத்தான் 

மேல்நடை மனிதர்களாக மாற்ற முடியும் 

என முன்பு எண்ணியவன்...சீன சிவப்பு சிந்தனையாளன் மா.வோ . மாவோவின் மறுபிறப்புத்தான் வைகோவோ...

நீ தடந்தோள்களில் கருப்பு துண்டு...

தாங்கி நடக்கும் நெருப்பு துண்டு..

ஆயினும் நீ எதையும் அவிக்க பிறந்தவனல்ல...

தென்புலத்தார் பெருமை தென் படாமல் கவிக்க பிறந்தாரை 

கவிழ்த்து புகழ் குறிக்க பிறந்தவன் நீ ...

வைகோ பேச்சை காதில் வாங்கினால் போதும் 

வைக்கோல் கூட ஒரு தைகோள் போல 

விறைத்து நிற்கும் 

வீரம் இறைத்து நிற்கும் 

வைகோவே ...தமிழன்னை தலையில் வைக்கும் பூவே ..

நற்றமிழ் ஆங்கில நாளும் அமர்ந்திருக்கும் நாற்காலி உனது நாக்கு 

அந்த நாக்களவு கூர்மை உன் மூக்கு..

இத்தகு கூர்மைகள் கூர்த்த மதியின் குறியீடுகள் ..

நல்ல குறியீடுகளுக்கு ஏது குறுக்கீடுகள் ??

தேர்ந்த குணாளனே...

என் நாற்பது ஆண்டுகால நகல்களின் தோய்ந்தவனே 

நவிலர் தெரியதான நல்லியல்புகள் வாய்ந்தவனே

மாபெரும் மறுமலர்ச்சி பயணத்தில் 

மழையில் நனைந்து 

மதிய வெயிலில் காய்ந்தவனே

காலங்கள் பல நடந்து பாதங்கள் தேய்ந்தவனே 

நீ நடந்து வருகையில் பூமரங்கள் வீசினவாமே சாமரங்கள் ...

வைகோ ...அது உன் ‘வேர்’ வைகோ ..

நீ நடந்து வருகையில் தரை இறங்கி நின்றனவாமே

தண்ணீர் மேகங்கள் ..

வைகோ அது உன் ‘பார்’ வைகோ 

உயர்ந்த மனிதரே ...ஒன்று நிச்சயம் 

பூமி சிலிர்த்திற்கும் உன் பாதங்கள் தொட்டதாலே

நெஞ்சில் கவடுகள் இல்லாதவனின் காலடிச்சுவடுகள் பட்டதாலே..

என் நண்பனே... ஏறார்ந்த பண்பனே...

சிறைச்சாலையில் சில சாயங்கால வேளையில்

நீ பந்து விளையாடிய போது உன் நெஞ்சில் வந்து விளையாடியிருக்குமே 

என் நினைவு..

அது எப்படி என்று சொல்லவா ..

அன்று நீ ஆடிய ஆட்டம் ‘வாலி’பால் அல்லவா ...??

மக்கள் கடல் பின்தொடர ..மன்மிசை நடந்த மனித நதியே .. 

நீ பாதங்களால் எழுதியிருக்கிறாய் பூமி தாளில் ஒரு புனித விதியே ..

பூகாயம் சீர்பட அதன் கோணல்கள் நேர்பட 

வாழிய நீ பல்லாண்டு ...!!!!

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ZTU19_xn4gw

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.