Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் படையினரின் உதவியில் 500 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன!

Featured Replies

வடமாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வடக்கின் எல்லை கிராமங்களில் படையினரின் சிங்கறெஜிமன் பிரிவின் உதவியுடன் 500 குடும்பங்களுக்கு அரசாங்கம் காணிகளை வழங்கியுள்ளது.

வடக்கில் முல்லைத்தீவு திருகோணமலை எல்லைக்கிராமம்,முல்லைத்தீவு வவுனியா எல்லைக்கிரமாங்களான பதவியா,பராக்கிரமபுரம் கெனியரதென்ன பகுதிகளில் படையினரின் ஆதரவுடன் 500 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளது.

சிறீலங்காப்படையிரின் சிங்கறெஜிமன் பிரிவினரால் அடிப்படை வசதிகள் மற்றும் வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.ஒருகுடும்பத்தின் வாழ்விடம் அமைத்து வசிப்பதற்காக அரைஏக்கரும் விவசாயம் செய்வதற்காக இரண்டு ஏக்கர் காணிகளும் வழக்கப்பட்டுவருவதாக சிறீலங்கா படைத்துறை தெரிவித்துள்ளது.

வடக்கில் 1500 ஏக்கர் நிலப்பரப்பினை 500ற்கும் அதிகமான குடும்பங்களுக்கு வழங்கி சிங்களவர்களின் சொந்த நிலமாக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.இவ்வாறு குடியேறியுள்ள சிங்களவர்கள் வாக்காளர் டாப்பில் பதியப்பட்டிருந்தால் அவர்கள் வடமாகாண தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா படையின் போர் நடவடிக்கை காரணமாக வடக்கில் பலஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் வாக்களிக்க தகுதியில்லாத நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கையில் திட்டமிட்டு வடக்கில் சிங்களவர்களை குடியேற்றும் நடவடிக்கையில் சிறீலங்கா படையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://goldtamil.com/?p=2914

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசமும், இங்கு புலிகளுக்கு எதிராக எழுதுபவர்களும் இவ்விடயங்களில் மௌனம் சாதிப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளுக்கு எதிராக எழுதுபவர்கள்  ஆதாயத்திற்காக எழுதுபவர்கள்.ஆதாரத்திற்கு எங்கே போவார்கள்????

ஒவ்வொரு நாளும் வந்து ஆனா ஆனா ஆனா ,ஆவன்னா ஆவன்னா ஆவான்னா எழுதிக்கொண்டிருக்க முடியாது .

சிறிலங்கா அரசுகள் சுதந்திரம் கிடைத்ததில் இருந்து என்ன செய்துகொண்டு வருகின்றார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம் .இதை நாட்டில் இருக்கும் எமது அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் அந்த அந்த காலத்தில் ஒழுங்காக பதிவு செய்து சர்வதேசத்திற்கு முறைபாடுகள் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள் .

யாழில் வந்து சிங்கள அரசின் குடியேற்றத்து எதிராக நாங்கள்  என்னதான் குத்தி முறிந்தும் ஆகப்போவதில்லை .செய்திகளாக அவற்றை பதிவதில் எதுவித தவறுமில்லை அனைவருக்கும் அவை பரப்பப்பட வேண்டும் .

அதைவிட்டு ராஜபக்சாவையோ ,கருணாநிதியையோ ,சோனியாவையோ  இங்கு வந்து சகட்டு மேனிக்கு திட்டிவிட்டு போய் படுத்துவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை .அதைத்தான் இங்கு பலர் செய்துவிட்டு விடுதலைக்கு போராடுவதாக நினைக்கின்றார்கள் .

அதைவிட்டு ராஜபக்சாவையோ ,கருணாநிதியையோ ,சோனியாவையோ  இங்கு வந்து சகட்டு மேனிக்கு திட்டிவிட்டு போய் படுத்துவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை .

 

அது சரி. ஆனால் விவாதம் வந்தால் தான் நியாயம் பிறக்கும். நாம் இங்கே விவாதித்த பின்னர் பலதடவைகளில் அரசியல்வாதிகள் அது பற்றிக் கதைத்திருகிறார்கள். 

 

நமது அபிப்பிராயம் பல இடங்களுக்கும் போகிறது. செய்தி வந்தால் அதை பதிந்து கருந்து எழுதும் போது பல புதியவை தெரியவும் வருகிறது. 

 

அறிவுடையவர்கள் என்பதால் எம்மில் ஒருவரை ஒருவர் உசுப்பேத்த தேவை இல்லை. ஆனால் கூடிக்கதைப்பது செய்வதை சரியாக செய்ய உதவும். எனவே தமிழ் மக்களின் அவலங்களை உணர்ந்து, கருத்து வைப்போர் தமிழ் மக்களுக்கு உதவத்தக்க வகையில் வைக்க வேண்டும்.

 

தமிழரின் போராட்டம் தொடர்கிறது. ஆயுத போராட்டம் முடிவடைந்து விட்டது. அதற்கும் இன்றைய ராஜதந்திர போருக்கும் தொடர்பு இல்லை. புலிகள் தாங்கள் இயங்கிய குடையில் கீழ் நின்று ராஜதந்திர போரை தொடர்ந்தால் மற்றவர்கள் அவர்களுடன் சேராலாம். சேராமல் போகலாம். ஆனால் அவர்கள் தமது மனதை இணைத்துகொள்ள தாயகத்தில் TNA இருக்கு. தமிழ் தேசிய முன்னணி இருக்கு. ஆயர் போன்ற தனி போன்ற தனி சக்திகள் இருக்கு.

 

  

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளும் வந்து ஆனா ஆனா ஆனா ,ஆவன்னா ஆவன்னா ஆவான்னா எழுதிக்கொண்டிருக்க முடியாது .

சிறிலங்கா அரசுகள் சுதந்திரம் கிடைத்ததில் இருந்து என்ன செய்துகொண்டு வருகின்றார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம் .இதை நாட்டில் இருக்கும் எமது அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் அந்த அந்த காலத்தில் ஒழுங்காக பதிவு செய்து சர்வதேசத்திற்கு முறைபாடுகள் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள் .

யாழில் வந்து சிங்கள அரசின் குடியேற்றத்து எதிராக நாங்கள்  என்னதான் குத்தி முறிந்தும் ஆகப்போவதில்லை .செய்திகளாக அவற்றை பதிவதில் எதுவித தவறுமில்லை அனைவருக்கும் அவை பரப்பப்பட வேண்டும் .

அதைவிட்டு ராஜபக்சாவையோ ,கருணாநிதியையோ ,சோனியாவையோ  இங்கு வந்து சகட்டு மேனிக்கு திட்டிவிட்டு போய் படுத்துவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை .அதைத்தான் இங்கு பலர் செய்துவிட்டு விடுதலைக்கு போராடுவதாக நினைக்கின்றார்கள் .

 

ஆனால் புலிகளுக்கு எதிராக கருத்து எழுத்தாத ஒரு நாளை உங்களால் குறிப்பிட முடியுமா??.உங்களின் வாழ் நாள் குறிக்கோளில் ஒன்று என்பதை அறிய முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு எதிராக எழுதுபவர்களால் பேசுபவர்களால் சிறீலங்கா அரசிடம் கூலி வாங்க முடியுமே தவிர சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரல்களை மாற்றக் கூடிய பலமே.. தகுதியோ எப்போதும் இருந்ததில்லை.

 

அமிர்தலிங்கம்.. எதிர்க்கட்சி தலைவரா இருந்த காலத்தில் தான் காமினி திஸாநாயக்கா.. மகாவலியை கிழக்கு நோக்கி திருப்பி விட்டுக் கொண்டிருந்தார். மகாவலி மட்டுமல்ல.. அதனோடு சேர்ந்து.. சிங்களவர்களும் கிழக்கை நோக்கி வந்தனர். கல்லோயா அபிவிருத்தித் திட்டம்.. முழு அம்பாறையையும் விழுங்கப் போகிறது என்று தெரிந்தும்.. அமிர்தலிங்கம் கூட்டணி இந்தியாவின் வாயைப் பார்த்துக் கொண்டிருந்து தங்கள் பிள்ளைகளைப் படிப்பிப்பதிலும்.. வெளிநாட்டுக்கு அனுப்புவதிலும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. கொழும்பில் சிங்கள அரசிடம்.. வீடும் வாகனமும் வசதியும் பெற்றுக் கொண்டு..!

 

அண்மையில் விக்னேஸ்வரனும் ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தார்.. எவரும் எங்கும் போய் வாழலாம் என்று. தமிழர்கள் தென்னிலங்கையில் எங்கும் போய் குடியேற முடியுமா..???! தென்னிலங்கையில் கூட.. தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகள் தவிர பிற இடங்களில் அவர்கள் குடியேற முடியாது. இதுதான் யதார்த்தம்..! அதுவும் தமிழர்களா காணி வீடு வாங்கிப் போக முடியுமே தவிர ஒரு அரசு தனது படைகளைக் கொண்டு நில ஆக்கிரமிப்புச் செய்து அதன் மூலம் இலவசக் குடியேற்றங்களை தமிழர்களுக்குச் செய்து கொடுக்காது..! விக்னேஸ்வரன் அதனைச் செய்வாரா..????! விக்னேஸ்வரன் அல்ல அவரைப் போல ஆயிரம் பேர் வந்தாலும் உந்தப் பருப்பு சிங்களவனிடம் வேகாது..!

 

விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் தவிர வேறு எதுவும் சிங்களவனின் குடியேற்றத்தை பகுதியாகவோ முழுமையாகவோ தடுத்து நிறுத்தவில்லை. ஆயுதப் போராட்ட காலத்தில் மட்டுமே குடியேற்றங்கள் மந்த கதியில் இருந்தன. சில இடங்களில் முற்றாகக் கைவிடப்பட்டும் இருந்தன. அன்று.. சிங்களம் தான் நினைத்ததை சாதிக்க முடியாத நிலை இருந்தது. ஆனால்... இன்று சர்வதேச உதவிகளோடு தமிழர்களின் நிலம் திட்டமிட்ட பறிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில்.. விக்கினேஸ்வரன் போன்ற தமிழர்கள் இராணுவ இருப்பை பற்றிக் கதைத்துக் கொண்டு சிங்களக் குடியேற்றங்களுக்கு பச்சைக் கொடி காட்டி வருவது மொத்த முரண்பாட்டிற்கும் அடையாளமாக அவர்களை இனங்காட்டியும் நிற்கிறது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.