Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுள் துகள் அல்லது கடவுளின் துகளின் உள்நோக்கு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சில காலங்களுக்குமுன் சுவிற்சலாந்து சேர்ண் கடவுள்த் துகள் ஆராய்ச்சி மையத்தில் பெரு வெடிப்புக் கொள்கையை வாய்ப்புப் பார்த்ததன் மூலம் அணுக்களுக்கு நிறையைக் கொடுப்பது என இவ்வளவு காலமும் கொள்கையளவில் கருதப்பட்ட  ஹிக்ஸ்போசான் என்னும் அணுக்கூறொன்றைக் கண்டுபிடித்த்திருப்பதாக விஞ்ஞானிகள் குழுவொன்று அறிக்கை வெளியிட்டது நினைவிருக்கலாம்.

திணிவேயில்லாது வெறும் சக்கி மயமாகவிருந்த பிரபஞ்சத்தின் ஆரம்பக் கட்டத்தில் சக்தித் துணிக்கைகளுக்குத் திணிவைக் கொடுத்தது இந்த ஹிக்போசான் துணிக்கைகள்தான் அதனால்த்தான் பிரபஞ்சத்தில் அணுக்களை அடிப்படையாகக் கொண்ட சடப்பொருள் உருவானது.  ஆகவே இவைதான் கடவுள் அல்லது கடவுளால் பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது அவர்  பாவித்த அடிப்படை மூலப்பொருள் என்று கருதக் கூடியதாயிருப்பதால் அவற்றை கடவுட் துணிக்கைகள் என்று பெயரிட்டார்கள். ஆக மொத்தத்தில் கடவுளை அல்லது அவர் எதைக்கொண்டு தனது சிருஷ்டிப்பு நாடகத்தை நிகழ்த்தினார் என்பதை அறிவியல் கண்டுபிடித்திருக்கிறது.

அறிவியல் இவ்வாறு கடவுளை அணுகியது இதுவே முதல்தரமல்ல. டால்டன் என்னும் விஞ்ஞானி சடப்பொருளின் அடிப்படைக் கூறுகளான அணுக்களைக் கண்டுபிடித்த போதும் கடவுளுக்குக் கிட்ட ஒருதடவை நாம் சென்றுவந்தோம்.  சந்திரனில் காலடியெடுத்து வைத்தபோதும் அவரை அணுகினோம். நிலவுலாவிய நீல் ஆம்ஸ்ட்ரோங்கும் சந்திரத் தரையில் தான் கால் வைத்தபோது பாங்குச் சத்தத்தைக் கேட்டதாக அரபு நாடுகளில்போய் ரீல் விட்டார். டிஎன்ஏ மூலக்கூற்றின் வடிவத்தையும் உள்க்கட்டுமானங்களையும் கண்டுபிடித்தபோதும் அவருக்குக் கிட்ட நெருங்கிச் சென்றோம். செவ்வாய்க் கிரகத்தில் இறங்கினாலும் நாம் அங்கு உயிரினங்களைத் தேடுவது, முடிந்தால் அந்த உயிரினங்களின் மூலமாகக் கடவுளைப்பற்றி விசாரிக்கத்தான்.  வேற்றுக் கிரக வாசிகள் நமது பூமிக்கு வந்தாலும் நமது பிரதான தேடல் கடவுளைப் பற்றியதாகத்தான் இருக்கும்.

இப்போது கிட்டத்தட்ட 99.99 வீதம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது கடவுட்துணிக்கையே என்று உறுதிப்படுத்தக் கூடியதாயிருப்பதால் நாம் கடவுளைத் துணிக்கை ரூபத்தில் அல்லது அவர் சிருஷ்டிப்புக்குப் பாவித்த மூலப்பொருளைக் கண்டுபிடித்திருக்கிறோம். ஆனால் எப்போது அறிவியல் சாட்சாத் கடவுளை அவருடைய நிஜ ரூபத்தில் கண்டுபிடித்துச் சொல்லப் போகிறதோ தெரியவில்லை.

உலகின் சமயங்கள் எல்லாமே கடவுளை நம்புகின்றன (பௌத்தம் கூடக் கடவுளை மறுக்க வில்லை). அறிவியலும் இப்போது கடவுளைத் தேட ஆரம்பித்திருக்கிறது.  ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் கடவுளைப் பற்றிய கருதுகோள்களை வைத்திருக்pன்றன.

யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் போன்ற மத்திய கிழக்கில் தோன்றிய சமயங்கள் கடவுளை இந்த உலகைப் படைத்தவராகக் குறிப்பிடுகின்றன. ஆனால் அவருக்கு உருவம் கொடுக்கப்படவில்லை. எனினும், அவர்களது புனித நூல்களில் கூறியுள்ளபடி கடவுளால் அனுப்பப்பட்டவர்களையும், அவர்களின் வழிகாட்டல்களையும் அவை நம்புகின்றன.

இந்தியாவில் தோன்றிய அல்லது வளர்ந்த சமயங்கள் கடவுட் கொள்கையில் பல்வேறுபட்ட கொள்கைகளை வைத்திருக்கின்றன. அதாவது சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம் போன்ற அகச்சமயங்கள் வேதகாலக் கருத்துக்களை அடிப்படையாக வைத்துக் கடவுளுக்கு பல்வேறு உருவங்களைக் கொடுக்கின்றன. பிரமனைப் படைத்தவனாகக் கூறுகின்றன. வேதத்தை ஏற்றுக் கொள்ளாத சமணம் பௌத்தம் சீக்கியம் போன்ற புறச்சமயங்கள் தத்துவ ரீதியில் கடவுளை அல்லது படைத்தவரை அணுகுகின்றன.  இதைவிட, இந்தியாவுக்கு வெளியே தோன்றிய சௌராஷ்டிரம், சீன கன்பூசியனிஸம், தாவோயிஸம், ஜப்பானிய சின்ரோனிஸம் போன்றவை கடவுட் கொள்கையைப் பற்றிப் பேசாமல் வாழ்க்கை ஒழுக்கங்களை வலியுறுத்துபவையாகவே காணப்படுகின்றன.

சமயங்களையும் அவற்றின் கடவுள் தொடர்பான அணுகுமுறையையும் மிகச் சுருக்கமாக மேற்கண்டவாறு எடுத்துக் கூறமுற்பட்டாலும் பல முரண்பாடுகளும் இதில் தோன்ற இடமிருக்கிறது. குறிப்பாக இந்து சமயத்தை எடுத்துக் கொள்ளும்போது வேதங்களும், அவற்றின் பின்வந்த உபநிடதங்களும் கடவுள் பற்றிய கூற்றில் பல்வேறு வகையான கருத்துக்களைத் தெரிவித்தாலும், இந்து சமயத்தைப் பின்பற்றிய அக்கால ஞானிகளிடம் கடவுள் பற்றிய மிகத்தெளிவான கொள்கைகள் உருவாகியிருப்பதை அவதானிக்கக் கூடியதாயுள்ளது.

அவற்றில் முக்கியமானவை 'தத்வமஸி', 'அகம் ப்ரமாஷ்மி' என்னும் இரண்டு கூற்றுக்களுமாகும்.  தத்வமஸி என்பது 'அது நீதான்'; என்ற வாதத்தையும் அகம் பிரமாஷ்மி என்பது 'நானே அந்தப் பிரமன்'; என்பதையும் வலியுறுத்தும் வாசகங்களாகும்.

 

சைவசித்தாந்த நெறி நின்ற மணிவாசகர் இறைவனை, 'தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே....' என்கிறார். நாவுக்கரசர்  'விறகில் தீயினன் பாலில் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவுக் கோல்நட்டு உணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே', தேடிக் கண்டுகொண்டேன் தேடிக் கண்டு கொண்டேன்....தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன் என்கிறார்.  'பாலாழி மீனாளும் பான்மைத் தருளுயிர்கண் மாலாழியாழு மறித்து' என்கிறது திருவருட்பயன். 'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்....தௌ;ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்...'  என்கிறது திருமந்திரம். இன்னும் பல எண்ணிலடங்கா ஞானியர்களின் கூற்றும் இறைவனை எமது அகத்திலேயிருக்கும் அருட்சக்தியாகவே காட்டுகின்றன.
பேரருள்மிக்க அன்பே வடிவான இறைவன் இந்தப் பிரபஞ்சத்தையும் எம்மையும்  படைத்து உழல விட்டு விட்டு எம்மீது இரக்கமேயில்லாமல் ஒளிந்திருந்து வேடிக்கை பார்க்கச் சாத்தியமேயில்லை, அவன் இங்கேதான் எங்கோ இருக்கவேண்டும் என்ற மிகத்தீவிரமான தேடலின்; பெறுபேறாக நம்முள்ளத்திலேயே இறைவன் உள்ளான் என்ற பேருண்மையை எமது ஞானியர் கண்டு பிடித்தனர். கையிலே நெய்யிருக்க ஊரெல்லாம் வெண்ணெய்க்கு அலைவது போன்றே மனிதர் இறைவனைத் தேடி அலைகின்றனர் என்பதைக் குறிக்க கைவல்ய நவநீதமென்று ஒரு நூலே இயற்றப்பட்டிருக்கிறது.  

 

இவற்றிலிருந்து படைப்பு எவ்வாறு நிகழ்கின்றது என்பதற்கான விடையை எமது ஞானியர் உணர்ந்து கூறினர் என்பது புலனாகின்றது.  அதாவது இப்பிரபஞ்சமானது எமக்குள்ளேயே படைக்கப்பட்டிருக்கிறது. நம் கண்முன் பரந்துள்ள பிரபஞ்சம் என்னும் பேராகாயம், எம் உள்ளத்திலுள்ள சித்தாகாசமான சித் அம்பரத்திலிருந்தே தோற்றம் பெறுகிறது என்பதாலேயே சிதம்பர ரகஸ்யத்தில் திறந்த வெளியான ஆகாயத்தையே காட்டி இதுவே இறைவனின் தோற்றமென்று முடித்துவிடுகிறார்கள். 'நாமில்லையென்றால் அதாவது நமக்கு உயிர் இல்லையென்றால் இப்பிரபஞ்சமுமில்லை. நமது ஐம்புலன்களும் தொடர்பு படாதவிடத்து பிரபஞ்சமும் நமக்கில்லை. மொத்தத்தில் எமது அகத்திலேயே பிரபஞ்ச இயக்கம் நிகழ்கிறது.' என்பது இந்திய தத்துவவியலின் முடிந்த முடிபான வாதம்.

 

இந்த மறுக்க முடியா உண்மை மேற்குலகில் வழக்கத்திலிருந்த சமயங்களிலுள்ள கடவுள்பற்றிய கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணானதாகக் காணப்படலாயிற்று.  குறிப்பாக சுவாமி விவேகானந்தர் போன்ற ஞானிகள் தங்கள் கடவுட் கொள்கை பற்றி மேற்குலகில் செய்த பிரச்சாரத்தினால் இந்திய தத்துவத்தின்மீது மேற்குலகினரின் ஆர்வம் ஏற்பட்டதனால், இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல் அறிவியலின் மீது அந்தப் பொறுப்புப் போடப்பட்டது.  
திணிவேயில்லாது சக்திமயமாகவிருந்த பிரபஞ்சத்தில் திணிவைக் கொடுக்கும் ஹிக்ஸ்போசான் துணிக்கைகள் அல்லது வயல் பரவியிருந்து அவற்றில் ஏனைய அணுத்துணிக்கைகளான புரோட்டான் நியூத்திரன் இலத்திரன் மற்றும் ஒளித் துணிக்கையான போட்டோன் போன்றவை வௌ;வேறு மட்டத்தில் அமிழ்ந்திருப்பதாலேயே திணிவுடைய சடப்பொருள் உருவாகியுள்ளது என்னும் கொள்கையை அறிவியல் மூலம் வெளிவிடும்போது, ஓர் புறச்சக்தியே பிரபஞ்ச சிருஷ்டிக்குக் காரணமென்னும் வாதத்தை அறிவியல் மூலமாக வலுப்படுத்தலாமென்று மேற்குலக சமயவாதிகள் எண்ணவும்கூடும்.

 

அதனாற்தானோ என்னவோ சேர்ண் ஆய்வு மையத்தினர் பாப்பாண்டவரைப் இரகசியகமாகச் சந்தித்து அவரது ஆசியையும் பெற்றிருக்கின்றனர்.
 

அறிவியல் பிரபஞ்சத்தோற்றத்திற்கான மூலவிசை எதுவென்று இதுவரை கூறவில்லை. இயங்கியல் பொருண்முதல்வாதப் பார்வையில் காரணகாரியத் தொடர்புகளை அது ஆராய்ந்துகொண்டே போகிறது.  அதன்படி, தற்போதைக்கு வெற்றிடமே பிரபஞ்சத்தின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. மேற்கத்திய சமய வாதிகளுக்கு இது ஏற்புடையதல்ல.  அவர்களது சமயக் கொள்கையின் நம்பகத்தன்மை விவிலியம் கூறும் கடவுளின் சிருஷ்டிப்பால் பிரபஞ்சம் தோன்றியதென்பது நிறுவப்படுவதிலேயே பலம் பெறமுடியும்.   
அறிவியல் அதற்கு உடன்படும்போது நாம் மேற்சொன்ன தத்வம் அஸிக் கொள்கையை உலகத்தில் பின்தள்ளி விடலாமென்னும் தப்புக்கணக்கோடுதான் ஆய்வுகள் போய்க் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.  அதாவது பிரபஞ்ச சிருஷ்டிக்கு ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளமே காரணமென்னும் பேருண்மையை விஞ்ஞானம் தோற்கடிக்க முயற்சிப்பதால், உலகின் கவனம் திசை திருப்பப்பட்டு சில குறித்த சமயங்களின் கொள்கைகளுக்கே முக்கியத்துவம் கிடைக்கும் என்னும் எண்ணத்தில் அறிவியல் அந்த வழியை நோக்கிச் செல்கிறதோ தெரியவில்லை.  அதனால் இதற்குள் சமய அரசியலும் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.  எதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by karu

பல்வேறு அறிவியல் தளங்களைத் வருடிச்செல்லும் ஆக்கம்.
 
பாராட்டுகள் S.K. Rajah
 
மத அரசியல் வலுப்பெற்றுள்ள இன்றைய சூழலில் இப்படியான சந்தேகங்கள் வருவது தவிர்க்க முடியாது. 
  
ஆனால் சில விசயங்கள் இந்த சந்தேகங்களுக்கு பதில் தரலாம்.
 
இந்த ஹிக்ஸ் என்பது ஒரு புலம் [ Field ]. இந்த புலத்தின் இருப்பை நிரூபிப்பதன் மூலம் திணிவுக்கான காரணம் கிடைக்கிறது. திணிவு, சடப்பொருளை அடிப்படையாக் கொண்ட பிரபஞ்சத்தை தோற்றுவிக்கிறது. ஆகவே இந்த பிரபஞ்சத்திற்கு அடிப்படையானதாக ஹிக்ஸ் புலம் ஆகின்றது.
 
இந்தப் புலம் பிரபஞ்சம் எங்கும் வியாபித்து இருக்கின்றது. 
 
ஒரு மின்காந்த்தத்தின் மூலம் உருவாகும் காந்தப்புலத்தை நிறுத்தினால் அதனால் இயக்கப்படும் போட்டார் நின்றுவிடும். அப்படியானால் இந்த ஹிக்ஸ் புலத்தை நிறுத்தினால் இந்தப் பிரபஞ்சம் ஒரு நொடியில் மறைந்த்து விடும்.
 
அப்படியானால் இந்த ஹிக்ஸ் புலத்தை தொடர்ந்து இயக்குவது யார் ?
 
இதற்குப் பதில் கடவுள் என்றால்.. அவரின் படைப்பு இன்னும் முடியவில்லையா ?
 
இது பைபிள் / குர்ரானிற்கு முரனாகாதா ?
 
 
*‍‍‍‍‍‍‍‍‍‍‍********************************************************************************************************
   
இந்த ஹிக்ஸ் புல நிரூபனம், சடம் உண்மையில் சடமல்ல என்பதையல்லவா நிரூபிக்கின்றது. அதாவது, சடம் எனப்படுவது ஒரு புலத்தின் செல்வாக்கால் தான் சட இயல்பைப் பெறுகின்றது.  ஆகவே அது உண்மையற்றது . மாயை.
எக்கணம் புலம் நிற்கிறதோ அக்கணமே சடம் மறைந்து விடும். 
 
எப்போது மாயை, ஊண்மையற்றது என்னும் வார்த்தைகள் எழுகின்றனவோ அக்கணமே படைப்புக் கொள்கை சுக்கு நூறாகிவிடுகின்றது. 
 
 
இப்படி இந்த போஸோன் ஆய்வு படைப்பை அடிப்படையாகக் கொண்ட மதங்களை தொடர்ந்து பலவீனப்படுத்தவே செய்யும்.
 
(இங்கே சொன்ன இந்த இரண்டு காரணங்களை விட இன்னும் பல காரணங்களைச் சொல்ல முடியும்.)
 
 
 
http://www.youtube.com/watch?v=IElHgJG5Fe4
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈசன்

உங்கள் பதில் இன்னும் மேலதிக விளக்கத்தைக் ஹிக்ஸ் போசானுக்குக் கொடுக்கிறது.  ஆனால் நீங்கள் அதனை ஓர் துகள் வடிவிலில்லாமல் புலத்தின் வடிவில் விளக்குகிறீர்கள்.  அந்தப் புலத்தில் நமக்குத் தெரிந்த அடிப்படைத் துகள்கள் ஆழ்ந்திருக்கும் அளவைப் பொறுத்தே திணிவு தோன்றுகின்றது என்னும் திசையில் ஆய்வுகள் போகுமாயின் அதன் விளைவாகப் படைப்பை மையப்படுத்திய மதங்களின் சிருஷ்டிப்புக் கொள்கை பலவீனப்படுத்தப்பட வாய்ப்பிருக்கின்றது என்பது உண்மையே.  ஆனால் ஹிக்ஸ்போசானுக்குத் துகள்வடிவைக் கொடுத்து அதனுடன் எந்த அளவுக்கு அடிப்படைத்துகள்கள் இணைந்திருக்கின்றன என்பதைப் பொறுத்தே திணிவு தோன்றுகின்றது என்னும்போதுதான் ஹிக்ஸ்போசான் கடவுள் துணிக்கையாகிவிடுகிறது.  அதாவது பிரபஞ்சத்தின் அடிப்படை புலமல்ல படைக்கப்பட்டவோர் சடமே என்பதை நிரூபிக்க இந்தத் துணிக்கை வடிவமே பெரும் உதவியைச் செய்ய முயல்கிறது.

 உண்மையில் ஹிக்ஸ்போசானை கண்டுபிடித்தவர்கள் அதனை ஓர் புலமாக(வயலாக)வன்றி துணிக்கை வடிவினதாகக் காட்டவே முயல்கிறார்கள் போலத் தெரிகிறது.  அதனாலேயே அதற்குக் கடவுட் துணிக்கை என்ற பட்டப்பெயரையும் கொடுத்திருக்கிறார்கள்.  அல்லாவிடில் கடவுள் வயலென்று அதனைக் கூறியிருக்கலாம்.  இங்குதான் சந்தேகம் வலுப்படுகிறது.  இந்தச் சந்தேகத்துடன் அவர்கள் பரிசுத்த பார்ப்பரசரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதையும் சேர்த்து நோக்கும்போது இதில் ஏதோ உள்நோக்கமிருக்கின்றது என்று எணண்ணத் தோன்றியது. அதன் விளைவே இந்தக் கட்டுரை.

 இந்தத் துறையில் மேலும் அறிவுபெற்ற தங்களைப் போன்ற பலரின் கருத்துக்களையும் அறியும்போதுதான் பலவிடயங்களையும் புரிந்து கொள்ளமுடியமென எண்ணுகிறேன். முடிந்தால் ஹிக்ஸ்போசான் ஆய்வு, படைப்புக் கொள்கையை எதிர்க்கப் பயன்படப்போகும் ஏனைய காரணங்களையும் முன்வைத்தீர்களானால் பலரும் அறிய உதவியாயிருக்கும்.
 

Edited by karu

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளின் துகள் என்று தோண்டத் தோண்டிக் கொண்டிருக்கும் நிலை தான் உள்ளதே தவிர....... முடிவு அவ்வளவு சீக்கிரம் அமையுமாத் தெரியல்ல.

 

சிம்பிளாச் சொன்னா.. சிவராத்திரி தான் ஞாபகம் வருகிறது. பிரம்மாவும் விஷ்னுவும் அடி முடி தேடி.. கடைசியில்............ அதேபோல்.. விடை காண முதலே மனித இனம்.. இருக்குமோ தெரியல்ல..! ஆனாலும் எங்களைப் போல நித்திரை முழிக்கிறதோட அறிவியல் நிற்காது. அறிவியல் தேடலை விடாது. தேடலின் இடையில் வரும் விளைவுகளை வியாபாரம்.. போராயுதம்.. மனித வசதிகளுக்குப் பயன்படுத்தாமலும் இருக்காது..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
Neutrinos from the cosmos hint at new era in astronomy.

http://www.bbc.co.uk/news/science-environment-22540352

Higgs boson: The poetry of subatomic particles. (நாம நம்ம அணுவைத் துளைத்த ஒளவையாரை இந்தளவுக்கு முன்னிறுத்துறமோ தெரியல்ல. ஆனால் வெள்ளைக்காரன் செய்திடுறான். வரலாற்றில்.. அறிவியலில்..பதிவு செய்துடுறான்.) தமிழ் இலக்கியம் என்று சொல்லி சாதியும்.. மதமும்.. புலி எதிர்ப்பு வாந்தியிசமும் பேசுறதுகள்.. இப்படியான தமிழ் இலக்கிய அறிவியல் பற்றி பேசுங்களா..??! அறிவு இருந்தால் தானே பேச..!

http://www.bbc.co.uk/news/magazine-18708741

  • கருத்துக்கள உறவுகள்

பிரபஞ்சம் பற்றியும், கடவுள்கள் பற்றியும் ஆராச்சிகளை தற்போது மேற்கொள்வதால் தமிழனுக்கு எந்தப் பயனும், பெருமையும் வந்துசேரப் போவதில்லை. சொந்த மண்ணின்றி, நாடின்றி, அரசின்றி அனாதைகள் ஆக்கப்பட்டுள்ள இன்றைய தமிழினம் அவற்றை மீளப்பெறுவதற்கான வழிகளை அமைத்துக் கொடுப்பதற்கே அறிவியல் ஆராச்சியையும், வல்லமையுடைய அறிவுடைத் தமிழர்கள் இன்று பயன்படுத்துதல் வேண்டும். இல்லையேல், உண்டி கூழுக்கழும்போது, கொண்டை பூவுக்கழும் கதையாகவே தமிழனின் கதை முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யூதர்கள் இனப் படுகொலைக்குள்ளாகி தேசம் தேசமாய் ஏதிலிகளாய் அலைந்து கொண்டிருந்த காலப்பகுதியில்த்தான் யூதரான ஐன்ஸ்டைன் பிரபஞ்ச ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். யாரும் அந்த மாமனிதரைக் குறைகூறவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கரு.. நல்ல ஒரு திங்கிங்.. தொடர்ந்து இப்படியான ஆக்கம்களை தாருங்கள்.. வானியலும்,பிரபஞ்ச தோற்றம் பற்றிய ஆராய்ச்சியும் தேடத்தேட முடிவுறாதவை.. காலம் நேரம் மறந்து இவை பற்றிய கட்டுரைகளிலும் வீடியோக்களிலும் அமிழ்ந்து கிடக்க கிடக்க காலம் போவதே தெரிவதில்லை.. இவற்றில் அமிழும்போது இவ்வுலகின் தோற்றம்பற்றிய உண்மைகளை அறியும்போது ஞானிகளும் சித்தர்களும் போன அதே பாதையை இன்னொரு வளத்தால் பின் தொடர்ந்து போகிறேனோ என்று நான் ஜயுறுவதும் உண்டு.. :unsure:

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

யூதர்கள் நாடற்று அகதிகளாக இருந்தபோது, அவர்களுக்கு பல ஐரோப்பிய நாடுகளோடு, உலகெங்கும் பிரித்தானியர்கள் வாழும் பெரும்பாலான நாடுகளும், பின்னாளில் ஐக்கிய நாடுகள் சபையும் ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருந்துவந்துள்ளன. பாதுகாப்பு இருந்தால் ஆராச்சி என்ன, பெரும் மேடைகட்டிப் பாட்டுடன், ஆட்டமும் போடலாமே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈசன், காளான், நெடுக்ஸ், பான்ச், சபேஸ் ஆகியோருக்கு நன்றி.

இந்தக் கட்டுரை மெய்யெனப்படுவது என்னும் கருத்துக்களத்தில் மெய்யியல் துறைசார்ந்து எழுதப்பட்டது. விடயத்தைத் திசைதிருப்புவது இங்கிதமாகாது. முடிந்தால் விரும்பினால் அவரவர் தாம் அறிந்தவற்றை எழுதி இந்தத் துறையில் அறிவையும் ஆய்வையும் விரிவுபடுத்துவதே நோக்கம்.  யாழ்களத்தில் தனியே அரசியலை மட்டுமே எழுதிக் கொண்டிருக்க வேண்டுமென்றால் ஏனைய பிரிவுகள் எதற்கு.  கிட்டத்தட்ட தொண்ணூற்றியொன்பது வீதம் அரசியலை எழுதுபவர்கள் சில வேளைகளில் கொஞ்சம் களைப்பாற அறிவியலையும் அணுகுவதுண்டு.  அந்தவகையைச் சேர்ந்ததுதான் இதுவும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கரு,

 

திசைதிருப்ப முயன்றதை மறுக்கவில்லை. அதனை இங்கிதமாகச் சுட்டியதை வெறுக்கவுமில்லை. இறக்குமுன் தமிழனுக்கு என்றோர் அரசைக் காணவேண்டும் என்றொரு அவதிதான்.

Edited by Paanch

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈசன்,

 

திசைதிருப்ப முயன்றதை மறுக்கவில்லை. அதனை இங்கிதமாகச் சுட்டியதை வெறுக்கவுமில்லை. இறக்குமுன் தமிழனுக்கு என்றோர் அரசைக் காணவேண்டும் என்றொரு அவதிதான்.

 

நீங்கள் அவதியில் குழம்பிப் போயுள்ளீர்கள் போலத் தெரிகிறது.  இங்கிதமாகச் சுட்டியது ஈசனல்ல, கரு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Neutrinos from the cosmos hint at new era in astronomy.

http://www.bbc.co.uk/news/science-environment-22540352

Higgs boson: The poetry of subatomic particles. (நாம நம்ம அணுவைத் துளைத்த ஒளவையாரை இந்தளவுக்கு முன்னிறுத்துறமோ தெரியல்ல. ஆனால் வெள்ளைக்காரன் செய்திடுறான். வரலாற்றில்.. அறிவியலில்..பதிவு செய்துடுறான்.) தமிழ் இலக்கியம் என்று சொல்லி சாதியும்.. மதமும்.. புலி எதிர்ப்பு வாந்தியிசமும் பேசுறதுகள்.. இப்படியான தமிழ் இலக்கிய அறிவியல் பற்றி பேசுங்களா..??! அறிவு இருந்தால் தானே பேச..!

http://www.bbc.co.uk/news/magazine-18708741

 

நெடுக்ஸ்!  அவ்வையின்காலத்தில் அணுவென்னும் சொல் தமிழில் நாம் தற்போது குறிப்பிடும் அற்றம் அல்லது அணுவென்னும் பொருளில் கருதப்படவில்லையென்பதை அறிவீர்கள். முதலில் கபிலர் கடுகைத் துளைத்து அதில் எழுகடலை உள்ளடக்கியதென்று குறளைக் குறிப்பிட்டபோது, அவ்வையார் அதனிலும் சிறிதான மிகச்சிறிய பிரிக்க முடியாத துகள் அணுவெனத் தமிழில் வழங்கியதால் 'அணுவைத் துளைத் தேழ் கடலைப் புகட்டி....' என்று மேலும் குறளுக்குப் பெருமை கூட்டினார். அவ்வளவே.  உண்மையில் தமிழில் அணுவென்பது பிரிக்க முடியாதது.  ஆனால் டால்ட்டனின் அற்றமோ பிற்காலத்தில் உடைக்கப்பட்டுவிட்டது.  அதனால் நாம்தான் அவசரப்பட்டு 'அற்றம்' இற்கு அணுவெனப் பெயரிட்டுவிட்டோம்.  பிரிக்கவே முடியாத இறுதித் துணிக்கைதான் தமிழில் அணுவாகும்.

ஓர் கடுகை நாம் தூளாக்குகிறோமென்று வையுங்கள். அந்தத் தூளிலொன்றை மேலும் தூளாக்கி அதிலொன்றை இன்னும் தூளாக்கி..... இப்படிச் செய்து கொண்டே போனால் என்னவாகும்? கடைசியில் ஒன்றுமேயில்லாத வெறும் சூனியமாகி விடுமல்லவா? ஆக, வெற்றுச் சூனியத் துகள்கள் ஒன்றாகச் சேர்ந்துதான் அந்தக் கடுகு தோன்றியுள்ளது.  அதாவது ஒன்றுமேயில்லாத வொன்றின் கூட்டுத்தான் அந்தக் கடுகு.  இவ்வாறுதான் வெறும் வெற்றிடத்திலிருந்து இந்தப் பிரபஞ்சமும் தோன்றியிருக்கின்றது.  இதனைச் சிந்தித்து உணர்ந்துகொண்ட எம் முன்னோர் பிரிக்க முடியா இறுதித் துணிக்கைக்கு அணுவென்று பெயரிட்டார்கள்.   அதனாலேயே படைப்பின் மூலப்பொருளானதும் பிரிக்க முடியாததுமான அணுவின் வடிவாக இறைவனை நம் முன்னோர் உணர்ந்தனர்.  ஓர் உதாரணமாக: 'உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்த ஒண்சுடரே...'  என்கிறது கருவூர்த் தேவரின் திருவிசைப்பா. அதாவது: தேவர்களாலும் அறியமுடியாது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து மேலும் பிரிக்கவே முடியாத, இந்தப் பிரபஞ்சத்தின் அடிப்படைக் கூறே அணுவாகும். ஆனால் நம்மவரோ தற்போது அணுவென்னும் பெயரில் வேறொன்றைக் குறிப்பிடுகிறோம்.   

மேற்குலக விஞ்ஞானிகளெல்லோரும் அற்றமைப் பிளந்து அதற்குள் திணிவைக் கொடுத்து அதனைச் சடமாக மாற்றிய பொருள் எதுவென்று தேடிக் கண்டுபிடிக்க முயல்கையில்  நாமோ நமது மொழியில் பிரிக்கவே முடியாத பொருளுக்கு பிரிக்கக் கூடியதான அர்த்தத்தைத் தரும் அணுவெனும் பெயரைக் கொடுத்துத் தவறான புரிதலை ஏற்படுத்திவிட்டோம்.   

உண்மையில் நாம் தற்போது அணுவெனக் கூறும் சொல்லுக்குப் பதிலாக வேறு சொல்லைப் பாவித்து அணுவெனும் சொல்லைச் சரியான வழியில் பயன்படுத்தும்போது எமது விஞ்ஞானமும் மெய்ஞானமும் இந்த விடயத்தில் ஒரு சேரக் கைகோர்த்துச் செல்லவும் அறிவியலில் எமது புரிதல் மேம்படவும் வழியுண்டாகும்.

Edited by karu

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் ஏனைய பிரிவுகள் எதற்கு என்ற நண்பர் கரு அவர்களின் கூற்றின் உண்மை என்னைத் தொட்டதால் அவர் வழியே நான் அறிந்ததையும் இங்கே பதிவதில் என் மனமும் சற்று இளைப்பாறுவதை உணர்கிறேன்.

 

http://puthiyathalaimurai.tv/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A

 

இந்த ஹிக்ஸ் புல நிரூபனம், சடம் உண்மையில் சடமல்ல என்பதையல்லவா நிரூபிக்கின்றது. அதாவது, சடம் எனப்படுவது ஒரு புலத்தின் செல்வாக்கால் தான் சட இயல்பைப் பெறுகின்றது.  ஆகவே அது உண்மையற்றது . மாயை.
எக்கணம் புலம் நிற்கிறதோ அக்கணமே சடம் மறைந்து விடும். 

 

தானாக, சுயமாக இயங்க முடியாத ஒன்றையே சடம் (சடப்பொருள்) என்கிறோம்!

தப்பா ஈசன் அண்ணை ?

அடிப்படையில் பிரபஞ்சத்தில் நாலுவித புலங்கள் இருப்பதாகவும், அவை ஏதோ ஒருவகையில் சடப்பொருட்களில் இருந்து தோன்றுவதாக எங்கோ படித்த ஞாபகம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்!  அவ்வையின்காலத்தில் அணுவென்னும் சொல் தமிழில் நாம் தற்போது குறிப்பிடும் அற்றம் அல்லது அணுவென்னும் பொருளில் கருதப்படவில்லையென்பதை அறிவீர்கள். முதலில் கபிலர் கடுகைத் துளைத்து அதில் எழுகடலை உள்ளடக்கியதென்று குறளைக் குறிப்பிட்டபோது, அவ்வையார் அதனிலும் சிறிதான மிகச்சிறிய பிரிக்க முடியாத துகள் அணுவெனத் தமிழில் வழங்கியதால் 'அணுவைத் துளைத் தேழ் கடலைப் புகட்டி....' என்று மேலும் குறளுக்குப் பெருமை கூட்டினார். அவ்வளவே.  உண்மையில் தமிழில் அணுவென்பது பிரிக்க முடியாதது.  ஆனால் டால்ட்டனின் அற்றமோ பிற்காலத்தில் உடைக்கப்பட்டுவிட்டது.  அதனால் நாம்தான் அவசரப்பட்டு 'அற்றம்' இற்கு அணுவெனப் பெயரிட்டுவிட்டோம்.  பிரிக்கவே முடியாத இறுதித் துணிக்கைதான் தமிழில் அணுவாகும்.

ஓர் கடுகை நாம் தூளாக்குகிறோமென்று வையுங்கள். அந்தத் தூளிலொன்றை மேலும் தூளாக்கி அதிலொன்றை இன்னும் தூளாக்கி..... இப்படிச் செய்து கொண்டே போனால் என்னவாகும்? கடைசியில் ஒன்றுமேயில்லாத வெறும் சூனியமாகி விடுமல்லவா? ஆக, வெற்றுச் சூனியத் துகள்கள் ஒன்றாகச் சேர்ந்துதான் அந்தக் கடுகு தோன்றியுள்ளது.  அதாவது ஒன்றுமேயில்லாத வொன்றின் கூட்டுத்தான் அந்தக் கடுகு.  இவ்வாறுதான் வெறும் வெற்றிடத்திலிருந்து இந்தப் பிரபஞ்சமும் தோன்றியிருக்கின்றது.  இதனைச் சிந்தித்து உணர்ந்துகொண்ட எம் முன்னோர் பிரிக்க முடியா இறுதித் துணிக்கைக்கு அணுவென்று பெயரிட்டார்கள்.   அதனாலேயே படைப்பின் மூலப்பொருளானதும் பிரிக்க முடியாததுமான அணுவின் வடிவாக இறைவனை நம் முன்னோர் உணர்ந்தனர்.  ஓர் உதாரணமாக: 'உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்த ஒண்சுடரே...'  என்கிறது கருவூர்த் தேவரின் திருவிசைப்பா. அதாவது: தேவர்களாலும் அறியமுடியாது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து மேலும் பிரிக்கவே முடியாத, இந்தப் பிரபஞ்சத்தின் அடிப்படைக் கூறே அணுவாகும். ஆனால் நம்மவரோ தற்போது அணுவென்னும் பெயரில் வேறொன்றைக் குறிப்பிடுகிறோம்.   

மேற்குலக விஞ்ஞானிகளெல்லோரும் அற்றமைப் பிளந்து அதற்குள் திணிவைக் கொடுத்து அதனைச் சடமாக மாற்றிய பொருள் எதுவென்று தேடிக் கண்டுபிடிக்க முயல்கையில்  நாமோ நமது மொழியில் பிரிக்கவே முடியாத பொருளுக்கு பிரிக்கக் கூடியதான அர்த்தத்தைத் தரும் அணுவெனும் பெயரைக் கொடுத்துத் தவறான புரிதலை ஏற்படுத்திவிட்டோம்.   

உண்மையில் நாம் தற்போது அணுவெனக் கூறும் சொல்லுக்குப் பதிலாக வேறு சொல்லைப் பாவித்து அணுவெனும் சொல்லைச் சரியான வழியில் பயன்படுத்தும்போது எமது விஞ்ஞானமும் மெய்ஞானமும் இந்த விடயத்தில் ஒரு சேரக் கைகோர்த்துச் செல்லவும் அறிவியலில் எமது புரிதல் மேம்படவும் வழியுண்டாகும்.

 

ஒளவையார் ஆய்வுசாலை வைத்து ஆராய்ந்து..அணு என்பதைச் சொல்லவில்லை. அவர் பொருட்கள் சிறிய துணிக்கைகளால் ஆனது என்பதை உணரத்தலைப்பட்டிருக்கிறார். அதன் படி தான் அந்தப் பொருள்பட கவி புனைந்துள்ளார். அதுவும் துணிக்கைகள் பற்றிய அறிவு இல்லாத ஒரு காலக்கட்டத்தில். அது ஒரு ஆய்வுக்கான hypothesis உருவாக்கப் போதுமானது. ஆனால் நம்மவர்கள்.. அதனை கவிதையாகப் பேணுவதோடு மட்டும் நிறுத்திவிட்டார்கள்.

 

அணு என்ற அந்த அடிப்படை சிந்தனையில் இருந்து தான்.. இன்றைய கடவுளின் துகளுக்கான தேடல் வரை பெளதீகவியல் வந்துள்ளது.

 

இன்றைய பல கண்டுபிடிப்புக்களுக்கான hypothesis கள் பல .. லியனாடா டாவின்சியின் ஓவியங்களில் இருந்து பெறப்பட்டவை என்றால் மிகையல்ல. அந்த ஓவியங்களை வெறும் அழகுணர்ச்சியோடு பார்க்காமல் அறிவியலோடு பார்க்கும் பண்பு இருந்தது போல.. எம்மவரிடம் இல்லை என்பது தான் எனது ஆதங்கம்..! இருந்திருந்தால் நாம் அறிவியலிலும்.. எங்கையோ போயிருப்பம்..!

 

அறிவியலில் நாம் மற்றவர்கள் கீறிய வட்டத்திற்குள் தான் இன்னும் வட்டம் அடிச்சுக் கொண்டிருக்கிறோம். தாண்டிப் போகும் நிலையில் இல்லை..! :icon_idea:

 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.