Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவிலாறு அணைக்கட்டை கைப்பற்றும் அரை மணிநேர வலிந்த தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவிலாறு அணைக்கட்டைக் கைப்பற்றுவதற்கு, இன்று சிறீலங்கா படையினர் மேற்கொண்ட வலிந்த படை நகர்வு, தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6:15 மணிக்கு, ஆட்லறி எறிகணை சூட்டாதரவுடன், கல்லாறு காட்டுப் புறங்கள் ஊடாக, மாவிலாற்றை நோக்கி முன்னேற முற்பட்ட சிறீலங்கா படையினரை எதிர்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள், பதிலடி தாக்குதல்களை தொடுத்தனர்.

இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் மத்தியில் அரை மணி நேரத்திற்கு மேலாக உக்கிர நேரடி மோதல் இடம்பெற்றது.தமிழீழ விடுதலைப் புலிகளின் பதிலடித் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத சிறீலங்கா படையினர், ஆயுதங்களைக் கைவிட்டு, காயமடைந்த சகாக்களை தூக்கிக் கொண்டு ஓட்டமெடுத்தனர்.

இதனை தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை இலக்கு வைத்து, சிறீலங்கா படைகளால் செறிவாக எறிகணைகள் ஏவப்பட்டு வருகின்றன.

மனிதநேய அடிப்படையில், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பணிப்புரைக்கு அமைய, மாவிலாறு அணைக்கட்டை தமிழீழ விடுதலைப் புலிகள் திறந்து விட்டுள்ள போதும், யுத்த முன்னெடுப்புக்களில் சிறீலங்கா அரசாங்கம் அக்கறை காட்டி வருகின்றமை சுட்டிக் காட்டத்தக்கது.

மனித நேயத்தை..சிங்கள இராணுவத்திடம் காட்டிறது எவ்வளவு ஆபத்தானது என்பதை அனுபவ ரீதியா தெரிந்திருந்தும்...ஏதோ நடக்குது. அப்பாவி மக்கள் தான் அல்லாடுறார்கள்..! :roll: :idea:

  • கருத்துக்கள உறவுகள்

மனித நேயத்தை..சிங்கள இராணுவத்திடம் காட்டிறது எவ்வளவு ஆபத்தானது என்பதை அனுபவ ரீதியா தெரிந்திருந்தும்...ஏதோ நடக்குது. அப்பாவி மக்கள் தான் அல்லாடுறார்கள்..! :roll: :idea:

இந்த சின்னஞ்சிறு வயசிலேயே (வயசை ஒத்த) உமக்கு விளங்குது,.. சம்மந்தப்பட்ட பெரிய தரப்புகளுக்கு இது விளங்குதில்லையே... :lol: :oops: :cry: :cry:

அதுதான் பொஸ்..கேட்கிறமில்ல..!

சிங்கள மக்களின் கண்ணீருக்கு தண்ணீர் விட்டாச்சு..! எங்களின் மக்களின் கண்ணீருக்கு..பொருளாதாரத் தடை எடுத்தாச்சா...விமானத்தாக்குத

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்குத் தேவை இராஜதந்திரமல்ல..இரவில் ஒரு நிம்மதித்தூக்கம். இராஜதந்திரத்துக்காக..சொந்த மக்களை பலி கொடுப்பதா..???!

இரவில் நிம்மதி துக்கம் வேணுமெண்டால் இப்பிடி இருபத்திஅய்ந்து வருட கடின போராட்டத்தை நடத்தியிருக்க தேவையில்லை அப்பவே சொல்லியருக்கலாம் சிங்களவனிட்டை தாறதை தா எங்களை நிம்மதியா ஒரு ஓரமா படுக்கவிடு எண்டு பேசாமல் படுக்கவிட்டிருப்பான் அதுமட்டுமில்லை அப்பப்ப வந்து அவனும் படுத்திட்டு போவான் எங்களுக்கு பின்னாலை நெந்திருக்கும் ஆனாலும் துடைச்சிட்டு பேசாமல் திரும்பி படுத்திருந்திருக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிகளே நீர் எனது பசிக்கு இரையாகிவிடாதீர். றோஸ; போட்டு சாப்பிடும் படி செய்து விடாதீர்!

இரவில் நிம்மதி துக்கம் வேணுமெண்டால் இப்பிடி இருபத்திஅய்ந்து வருட கடின போராட்டத்தை நடத்தியிருக்க தேவையில்லை அப்பவே சொல்லியருக்கலாம் சிங்களவனிட்டை தாறதை தா எங்களை நிம்மதியா ஒரு ஓரமா படுக்கவிடு எண்டு பேசாமல் படுக்கவிட்டிருப்பான் அதுமட்டுமில்லை அப்பப்ப வந்து அவனும் படுத்திட்டு போவான் எங்களுக்கு பின்னாலை நெந்திருக்கும் ஆனாலும் துடைச்சிட்டு பேசாமல் திரும்பி படுத்திருந்திருக்கலாம்

சிறீலங்கா அரசுக்கும் இராஜதந்திரம் இருக்குது. ஆனால் அவர்கள் தங்கள் மக்களை சாகடிக்கிறார்களா..தமிழர்களுக

குருவிகளே நீர் எனது பசிக்கு இரையாகிவிடாதீர். றோஸ; போட்டு சாப்பிடும் படி செய்து விடாதீர்!

தூது புறாவையே சாப்பிட்ட ஆள் ஆச்சே...! :wink: :P

குருவி.. கற்பனையிலை கொஞ்ச நிபந்தனையளைப்போடும்.. ஒரு அணைக்கட்டை மூடும்.. ரெண்டு டோறாவும் அடிச்சு ஒரு பெரிய கப்பலும் தாட்டதா நினையும்..ஜெற்றியும் பிடிச்சு வெற்றிகரமா முடிச்சு பின்வாங்கிச்சென்றதா நினையும்.. முடின அணைக்கடடை திறந்துவிட்டதா ஒரு செய்தியை விடுறதா நினையும்.. இழுத்து போர்த்துக்கொண்டு படும்.. எழும்ப கையும் கணக்கும் சரியாகும்.. 25-30 வருஷமா நடக்கிறதை இப்ப நீர் ஒராள் இங்சை எழுதி ஏதாவது மாற்றலாம் எண்டு நினைக்கிறீரே? ஆனா ஓண்டு அப்ப நான் எழுதினதை இப்ப நீர் எழுதிறீர்.. அதுக்கு பாராட்டவேணும்..

:P :lol::lol:

குருவி.. கற்பனையிலை கொஞ்ச நிபந்தனையளைப்போடும்.. ஒரு அணைக்கட்டை மூடும்.. ரெண்டு டோறாவும் அடிச்சு ஒரு பெரிய கப்பலும் தாட்டதா நினையும்..ஜெற்றியும் பிடிச்சு வெற்றிகரமா முடிச்சு பின்வாங்கிச்சென்றதா நினையும்.. முடின அணைக்கடடை திறந்துவிட்டதா ஒரு செய்தியை விடுறதா நினையும்.. இழுத்து போர்த்துக்கொண்டு படும்.. எழும்ப கையும் கணக்கும் சரியாகும்.. 25-30 வருஷமா நடக்கிறதை இப்ப நீர் ஒராள் இங்சை எழுதி ஏதாவது மாற்றலாம் எண்டு நினைக்கிறீரே? ஆனா ஓண்டு அப்ப நான் எழுதினதை இப்ப நீர் எழுதிறீர்.. அதுக்கு பாராட்டவேணும்..

:P :lol::lol:

அப்ப எல்லாம் பொய் எண்டுறீர்....???? சரி அடிச்சது இறங்கமுன்னம் போய்ப்படும் நல்ல கனவு வரும்....! அடுத்தாக மாங்குளம் பிடிக்க போகவேணும் முல்லைத்தீவை கட்டுப்பாட்டில வச்சிருக்க வேணும் எல்லோ...!

அதோட மப்பிலயும் ஒரு உண்மையை சொல்லி இருக்கிறீர் நண்றி....! :wink: :P

திருமலையில் புலிகள் கொடுத்த அழுத்தம்

-ஜெயராஜ்-

மாவிலாற்று அணையைத்திறந்துவிட விடுதலைப் புலிகள் இணக்கம் தெரிவித்த போதும் சிறிலங்கா அரசாங்கம் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளது. இராணுவ நடவடிக்கை மூலம் தமது பொறியியலாளர்களைக் கொண்டே மாவிலாற்று அணைத்துருசுகள் திறக்கப்படவேண்டும் என அது கூறுகின்றது. இதற்கான பாரிய இராணுவ நடவடிக்கைக்கும் அது தயாராகியுள்ளதுஃ தாக்குதலைத் தொடங்கியும் இருந்தது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்நிலைப்பாடு பலருக்கு ஆச்சரியம் அளிக்கும் ஒன்றாகவே உள்ளது. ஏனெனில் விடுதலைப் புலிகள் இணக்கம் தெரிவித்துள்ள போதும் ஏன் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளாது இராணுவ நடவடிக்கையில் முனைப்பாகவுள்ளது? ஏன் மோதலையும் இழப்புக்களையும் எதிர்கொள்ளத் தயாராகின்றது? என்பதே அவர்களின் ஆச்சரியத்திற்குக் காரணமாகும்.

அதிலும் குறிப்பாக அரசாங்கத்தின் சில கோரிக்கைகளுடன் விடுதலைப் புலிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்திய நோர்வேயின் விசேட தூதுவர் ஹான்சன் பௌயருக்கு இது ஆச்சரியம் அளித்ததில் வியப்பில்லை. ஏனெனில் அவர் நிறைவேற்றக் கூடிய சில கோரிக்கைகளை முன்வைத்தே புலிகளுடன் பேச்சு நடத்தியதினாலேயே அணையைத் திறக்க விடுதலைப் புலிகள் உடன்பட்டார்கள்.

அடுத்ததாக விடுதலைப் புலிகள் மனிதாபிமான அடிப்படையில் அணையைத் திறக்க உடன்பட்டபோதும் அரசாங்கம் ஏன் வலிந்து தாக்குதலை மேற்கொள்ளத் தயாராகி வருகின்றது என்பதே அவருக்கு ஏற்பட்ட மற்றுமொரு ஆச்சரியம் அளிக்கும் நடவடிக்கை யாகும். ஆனால் சிறிலங்கா ஆட்சியாளர்களின் இத்தகைய நடவடிக்கைகள் எந்தவகையிலும் ஆச்சரியம் அளிக்கத்தக்கதொன்றல்ல. ஏனெனில் சிறிலங்கா ஆட்சியாளர்களின் அடிப்படைக் குணாம்சங்களே இதற்குக் காணரமாகும்.

1. சிறிலங்கா ஆட்சியாளர்கள் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக இராணுவத் தீர்வையே மனதளவில் ஏற்றுக்கொண்டவர்களாகவுள்ளனர

யுத்தம் மூலம் தீர்வு காணமுடியும் எனச் சிறிலங்கா அரசாங்கம் நம்பும் பட்சத்தில் இராஜதந்திர ரீதியில் தீர்வு காணுமாறு கூறுவது நேரத்தை வீணடிக்கும் அபத்தமான செயல் என்ற நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல்ஹெய்மின் கூற்றுக்கள் பட்டறிவின் பிரதிபலிப்பே ஆகும்.

மாவிலாற்று அணை திறப்பதற்கான இராணுவ நடவடிக்கை மனிதாபிமான தேவைக்கானது என அரசாங்கத்தால் கூறப்பட்டது. யுத்த நிறுத்த விதிமுறைகள் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு பேச்சுவார்த்தை முயற்சிகள் அனைத்தையும் ஓரந்தள்ளி விட்டு இவ் இராணுவ நடவடிக்கையை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது.

ஆனால் எதிர்பார்த்த இலக்கை இராணுவத்தால் எதிர்பார்க்கப்பட்ட காலப்பகுதிக்குள் அடையமுடியவில்லை என்பது மட்டுமல்ல, அரசாங்கம் கூறிக் கொண்டதான மனிதாபிமானப் பிரச்சினைஃ நெருக்கடி என்பனவற்றையும் தாண்டியதாக பெரும் அனர்த்ததிற்கு அரசாங்கத்தின் நடவடிக்கை வழி சமைத்தது. இந்நிலையில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சியின் அடிப்படையில் மனிதாபிமான ரீதியில் விடுதலைப் புலிகளால் மாவிலாற்று நீர் திறந்துவிட ஒப்புக்கொள்ளப்பட்டது

.

இதேசமயம் இவ் மாவிலாற்றைத் திறந்து விடுமாறும் தமிழ் மக்களின் மனிதாபிமானத் தேவைகளை நிறைவு செய்வதற்குக் கால அவகாசம் வழங்குமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையிலேயே இவ் அணை திறப்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் அரசாங்கத்தரப்பு தற்பொழுது மாவிலாற்று அணையை இராணுவ நடவடிக்கை மூலம் திறப்பதற்கு அதாவது மாவிலாற்று விவகாரத்திற்கு இராணுவ ரீதியில் தீர்வு காண்பதற்கே முற்பட்டு நிற்கின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்நிலைப்பாடானது தனியாக மாவிலாற்று விவகாரத்திற்கு மட்டும் பொருத்தப்பாடானதல்ல. இனப்பிரச்சினை தொடர்பான அனைத்து விவகாரத்திற்கும் பொருத்தப்பாடானதே. ஒருபுறத்தில் மனிதாபிமானப் பணி எனக் கூறி அரசாங்கம் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையானது தமிழர் தொடர்பான எவ்விவகாரத்திற்கும் சிறிலங்கா அரசு இராணுவத் தீர்வை நாடி நிற்பதன் வெளிப்பாடே.

அவ்வாறு இ;ல்லாதுவிடில் விடுதலைப் புலிகள் மாவிலாற்றை மனிதாபிமான அடிப்படையில் திறந்து விடுவதற்கு ஒப்புக்கொண்ட பின்னரும் கூட அதனை நிராகரித்து இராணுவ நடவடிக்கையில் அரசாங்கம் முனைப்புக் காட்டவேண்டிய தேவை ஏற்பட்டிருக்க வேண்டிய அவசியம் எழுந்திருக்க மாட்டாது.

இரண்டாவதாக சிறிலங்கா அரசாங்கம் எந்த மனிதாபிமானப் பிரச்சினை எனக் கூறிக்கொண்டு இராணுவ நடவடிக்கையில் இறங்கியதோ, அதே மனிதாபிமானப் பிரச்சினையைத் தமிழ்மக்கள் விடுத்த போது அதற்கு இராணுவத் தீர்வையே அது பதிலாகக் கூறியுள்ளது. அதாவது தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சினை எதையும் அது கருத்திற் கொள்வதாக இல்லை.

அவ்வாறு மனிதாபிமானப் பிரச்சினையை ஏற்றுக் கொள்வதாயின் மாவிலாற்று விவகாரமே ஒரு பிரச்சினையாக எழுந்திருக்க மாட்டாது. அவ்வாறு எழுந்திருப்பினும் தற்பொழுது இலகுவான முறையில் இதற்குத் தீர்வு கண்டிருக்க முடியும் ஆனால் அது சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு ஏற்புடையதாக இல்லை.

அவர்களின் பார்வையில் மனிதாபிமானப் பிரச்சினை என்பது சிங்களவர்களுக்கு மட்டுமானதென்பதாகவே உள்ளது. அதற்கும் அப்பால் இலங்கையில் வாழும் சிறுபான்மையின மக்களுக்கு அத்தகைய தொன்றும்கிடையாது அவற்றினை நிறைவுசெய்ய வேண்டிய தேவையும் அரசிற்கில்லை என்பதே அவர்களின் நிலைப்பாடாகும்.

ஆனால் மற்றொரு வேடிக்கை என்னவெனில் யாருடைய மனிதாபிமான தேவை எனச்; சிறிலங்கா அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதோ அவர்களின் மனிதாபிமானத் தேவைகளையும் மறந்து யுத்தத்திற்குத் தயாராகி நிற்பதே, இந்த வகையில் பார்க்கையில் அச்சிங்கள விவசாயிகளும் பரிதாபத்திற் குரியவர்களாகவே உள்ளனர்.

சிறிலங்கா அரசு தற்பொழுது எவ்வாறு மாவிலாற்று விவகாரத்தில் சமரச முயற்சிகளில் ஈடுபட்டவர்களை புறந்தள்ளியதோ அதை ஒத்ததாகவே இனப்பிரச்சினை விவகாரத்தில் இருந்தும் இராஜதந்திர முயற்சிகளையும் நோர்வேத் தரப்பையும் புறம் தள்ளும் என்பதை நோர்வேத் தரப்பும், ஏனையவர்களும் புரிந்து கொள்வது அவசியமானதாகும்.

இது அனுமானமோ எதிர்பார்ப்பின் அடிப்படையிலான எதிர்வு கூறுதலோ அல்ல. கடந்த கால வரலாற்றுப் பாடமாகும். இனப் பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவைச் சிக்கவைத்த பின்னர் இவ்வாறே சிறிலங்கா அரசு நடந்து கொண்டது. இதன் காரண மாகவே சிறிலங்காவால் அழைக்கப்பட்ட இந்தியா அவமானகரமாக வெளியேற வேண்டிவந்தது. இதனை நோர்வேத் தரப்பும் விளங்கிக் கொள்வது நல்லது.

நன்றி: ஈழநாதம்

http://www.tamilnaatham.com/articles/2006/.../jeyaraj/09.htm

இல்லையப்பா.. உங்கடை தேவா வாக்குக்கு மறுப்பு தெரிவிச்சுப்போட்டு இஞ்சை எழுதமுடியுமா.. அதுதான் எல்லாபக்க செய்தியளையும் வாசிச்சு என்னுடைய அனுமானத்தை அனுகூலமா தெரிவிச்சன்.. போத்தல் கிறவுஸ் நெற்றுக்கிள்ளாலை அனுப்பும்.. இரவிரவா உமக்கு பதில் எமுதிறன்..

:P

அப்ப எல்லாம் பொய் எண்டுறீர்....???? சரி அடிச்சது இறங்கமுன்னம் போய்ப்படும் நல்ல கனவு வரும்....! அடுத்தாக மாங்குளம் பிடிக்க போகவேணும் முல்லைத்தீவை கட்டுப்பாட்டில வச்சிருக்க வேணும் எல்லோ...!

அதோட மப்பிலயும் ஒரு உண்மையை சொல்லி இருக்கிறீர் நண்றி....! :wink: :P

இல்லையப்பா.. உங்கடை தேவா வாக்குக்கு மறுப்பு தெரிவிச்சுப்போட்டு இஞ்சை எழுதமுடியுமா.. அதுதான் எல்லாபக்க செய்தியளையும் வாசிச்சு என்னுடைய அனுமானத்தை அனுகூலமா தெரிவிச்சன்.. போத்தல் கிறவுஸ் நெற்றுக்கிள்ளாலை அனுப்பும்.. இரவிரவா உமக்கு பதில் எமுதிறன்..

அதுக்கு போதிய விபரம் இல்லாதவையோட் மினக்கெடலாமே....! இல்லை உமக்கும் அவைக்கும் ஒரே அளவுதானே இருக்கு...! :wink:

http://www.viduthalaipulikal.com/file/docs...6/06/130-06.pdf

ஆனால் சம்பூர் மீதான விமானத் தாக்கு

தலுக்கு இந்த நாட்டம் மட்டுமே காரணமாயி

ருப்பதாகத் தெரியவில்லை. வேட்டையாடும்

மிருகத்திற்கு வேட்டைப் பொருளின் தசை

பற்றிய பிரக்ஞை மட்டுமே இருப்பதைப் போல

உலக இராச தந்திரிகளுக்கும் ஒரு தரைப்

பிரதேசத்தின் பொருளாதார மற்றும் பாதுகாப்

புப் பெறுமானமே கருத்திற்குரியது. அந்த

வகையில் தமிழீழத்தின் உற்பத்திப் புலங்கள்

போக, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வகை

யில் முக்கியம் பெறுவது மூன்று புள்ளிகள்.

அவை காங்கேசன்துறை, ஆனையிறவு மற்றும்

திருகோணமலை. அவற்றில் சேது சமுத்திர

முக்கியத்துவம் ஏற்பட்டாலே தவிர காங்கேசன்

துறைக்குப் பாதுகாப்புப் பரிமாணம் மட்டுமே

தற்போதைக்கு உண்டு. ஆக, சம காலத்தில்

அதிமுக்கியம் பெறுபவை ஆனை யிறவும்

திருகோணமலையுமே.

இப்போது பன்னாட்டுப் பிரதிநிதிகள்

இலங்கையிலே தமிழருக்குச் சரியாசனம்

தருவதற்கான முக்கிய காரணிகளில் முதலா

வது, சிறிலங்காவின் எந்தவொரு பொருளாதார

இலக்குகள் மீதும் செல்வாக்குச் செலுத்தும்

திறனைப் புலிகள் ஒன்றுக்கு மேற்பட்ட தருண

ங்களில் நிரூபித்திருப்பது. இரண்டாவது, துறை

முகம், விமானத்தளம், தொழிற்சாலை, மீன்பிடி

மற்றும் மனிதவளம் போன்ற செல்வங் களைக்

கொண்டுள்ள குடாநாட்டின் வாசலும் பாதுகாப்

பரணுமான ஆனையிறவு புலிகளின் கையில்

இருப்பது. மூன்றாவது, திருமலைத் துறை

முகத்தின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்தும்

படை வீச்செல்லைக்குள் புலிகள் நிலை

கொண்டிருப்பது. தமிழரின் பேரம் பேசும் பலம்

என்ன என்ற உலக இராசதந்திரக் கேள்விக்கு

மேற்கூறிய விடயங்களின் அடிப்படையிலேயே

பதில் அமைய முடியும். அந்த அழுத்தங்களின்

விளைவே தென்னை மரத்தில் தேள்கொட்டி

யதற்குப் பனை மரத்தில் நெறிகட்டியது போல

படைத்தளபதி தாக்கப்பட்டதற்குப் பதிலாக

சம்பூர் சாடப்பட்டது.

சிறிலங்கா அரசின் அண்மைக்காலப்

போராயுதக் கொள்வனவை நோக்கும் போது

அதிலும் ஒரு கோலம் புலப்படுகிறது. அவற்

றில், தரைக்கண்காணிப்பு ராடர்கள், கவசத்

துருப்புக்காவிகள், கண்ணிவெடிப் பாதுகாப்பு

வாகனம், மிலான் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை

பொருத்திய ஐPப், பல்குழல் ஏவுகணை செலுத்

திகள் வு-55 டாங்கிகள் என்பனவற்றைத்

தொகுத்துப் பார்த்தால் அவை வேக நகர்வை

யும் திறந்தவெளிச் செயற்பாட்டையும் கோடி

காட்டுகின்றன. இவையனைத்தும் வான் வழி

யாக நகர்த்தப்படக் கூடியவை என்பதும்,

இவையனைத்திற்குமாகத் தரையைத் தொடா

மலேயே வினியோகிக்கும் ஆற்றல் உள்ள

ஹேர்குலிஸ் ஊ-130 விமானத்தையும் சிறி

லங்கா கொள்வனவு செய்கின்றது என்பதும்

கவனிப்பிற்குரியவை. தரையில் வேகம் குறை

வான பெரிய ஆர்டிலறிகள் தவிர்க்கப்பட்டிருப்

பதைப் போலவே கடலிலும் தரையிறங்குகலங்

கள் இம்முறை நாடப்படவில்லை. மாறாக,

கடற்கலங்களில் இருந்து ஏவக்கூடிய மோட்டார்

களும், வேகத்தாக்குதற் கலங்களும், கடற்

கண்ணிகளும் கோரப்பட்டிருக்கின்றன. கடலி

லிருந்து ஆதரவு தரக்கூடியதும் கோடை காலத்

தில் திடமான தரையாக இருப்பதுமான

ஆனையிறவை அண்டிய பெருவெளிகள்

போன்ற இடங்களில் மேற்கூறிய படைக்கலங்

கள் தொகுப்பாகப் பயன்படுத்தபடக் கூடி

யவை.

வரலாற்றின் வழித்தடத்தில் திருமலை

என்பது தமிழர்தாயக உணர்வுமையமாகவே

இருந்து வந்திருக்கிறது. உன்னதமான பல

போராளிகளையும் அவர்களைப் பெற்ற தாய்ச்ச

மூகத்தையும் உடைய திருமலையின் ஆன்மா

உள்@றக் குமுறிக்கொண்டிருக்கிறது. எழுச்

சிப் பேரணிகளிலும், உணர்வுக் கூட்டங்

களிலும், போர்ப் பங்களிப்பிலும், அண்மைத்

தேர்தலிலும் அதன் உணர்வுக் குமுறலின்

ஒலி கேட்கவே செய்தது. அதன் வேதனையை

பேச்சுவார்த்தைகள் தீர்த்து வைக்கவில்லை

என்பது வெளிப்படை.

இந்த நாட்டில் இரத்தம் சிந்துதலைத்

தவிர்க்க விரும்புபவர்கள் சிங்கள மக்களுக்கு

மூன்று உண்மைகளைக் கற்றுத்தர வேண்டும்.

முதலாவது, தமிழர் தரப்பு சிங்களப் படைதரப்

பைத் தாக்குவது ஒரு குற்றமல்ல. அது உயிர்

பிழைப்பதற்கான ஒரு உத்தி. இரண்டாவது

தமிழர் நாட்டைப் புதிதாகப் பிரிக்க நினைக்க

வில்லை. ஐரோப்பியரின் நிருவாக வசதிகரு

திய கோர்ப்பின் விளைவாக நிருவாகத்தால்

மட்டும் ஒன்றிணைந்த இரு தேசங்களில் ஒன்று

தனது விருப்பிற்கமையப் பிரிந்து செல்ல

நினைப்பதே தமிழரின் போராட்டச்செய்தி. அது

சிங்களவர்களுக்கு எதிரான யுத்தமல்ல. மூன்

றாவது, தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு அங்கு

லத்திற்குமாகப் போராடுவது அந்த மண்ணின்

மைந்தர்கள். அதை எதிர்த்து நிற்கும் உங்கள்

வீரர்கள் அந்நியர்கள். இந்த உண்மைகளைத்

துணிந்து சொல்லும் வீரம் சிங்களத் தலைவர்

களில் எவருக்கும் இருந்ததில்லை. மகிந்தரும்

அதற்கு விதிவிலக்கானவர் அல்லர்.

இன்று இலங்கையிலுள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியறிக்கையில் மாவிலாற்று அணிக்கட்டை அரசபடைகளுடன் திறந்து வைப்பதை வீடியோ படம் மூலம் காட்டப்பட்டது.

அப்ப எது உண்மை? இந்த நாட்டில உண்மையாக என்னதான் நடக்குது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவியாறின் எந்த பக்கத்தை திறந்து வைத்தார்கள்? புலிகள் ஏற்கனவே திறந்து விட்டார்கள் என்று அறிவித்த பின்பு திறந்தால் என்ன திறக்காட்டில் என்ன. பொறுத்திருந்து பாப்பம் இனி மாவிலாறு திறப்பதற்காக படைகள் சண்டை என்று செய்து வருதா என்டு. அப்ப தெரியும் எது உண்மை என்டு.

இன்று இலங்கையிலுள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியறிக்கையில் மாவிலாற்று அணிக்கட்டை அரசபடைகளுடன் திறந்து வைப்பதை வீடியோ படம் மூலம் காட்டப்பட்டது.

அப்ப எது உண்மை? இந்த நாட்டில உண்மையாக என்னதான் நடக்குது?

ஏன் இலங்கையில் ஒரெ ஒரு அனைக்கட்டு தான் இருக்குதா??? :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

seithiththokuppu.gif

09.08.2006 புதன்கிழமை

மாவிலாறு அணைக்கட்டைக் கைப்பற்றுவதற்கு, சிறீலங்கா படையினர் இன்று மேற்கொண்ட படை நகர்வு, எமது போராளிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6:15 மணிக்கு, கல்லாறு காட்டினூடாக , மாவிலாற்றை நோக்கி முன்னேற முற்பட்ட சிறீலங்கா படையினரை எதிர்கொண்ட எமது போராளிகள், பதிலடி தாக்குதல்களை தொடுத்து விரட்டியடித்துள்ளனர்.

திருகோணமலையில் உள்ள எமது நிர்வாகப் பகுதிகள் மீது சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணை தாக்குலில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இலங்கைத் தீவில் அமைதியை நிலைநாட்டுவதற்கு அமெரிக்கா அனைத்துலக சமூகத்துடன் இணைந்து முயற்சித்து வருகிறது என்று அந்த நாட்டின் ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைத் தீவில் தற்போது நீடிக்கும் மோசமான நிலைமைக்குத் தீர்வு காண்பதற்கு அமெரிக்கா உதவி வழங்கத்; தயாராக உள்ளது என்று ராஜாங்க அமைச்சின் பேச்சாளர் சீன் மக்கொமக் தெரிவித்துள்ளார்.

மூதூரில் பிரெஞ்சு தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்க அரசாங்கத்தை அதிர்ச்சியடையச் செய்து விட்டது என்றும் ராஜாங்க அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார்.

மூதூரில் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை பிரான்ஸ் அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணியாற்றி வந்த தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கோழைத்தனமானது என்றும் மிகவும் கொடூரமானது என்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்;; பிலிப் டுஸ்தே 0பிளஸி தெரிவித்துள்ளார்.

மூதூரில் தொண்டர் நிறுவனப் பணியாளர்களின் படுகொலையை ஒஸ்றேலியாவும் பலமாகக் கண்டித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் தாமதமின்றி சமாதான முயற்சியை முன்னெடுத்துச் சென்று இனநெருக்கடிக்கு நிலையான தீர்வு காண வேண்டும் என்றும் ஒஸ்றேலிய வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டௌனர் தெரிவித்துள்ளார். மூதூரிலும் ஏனைய பகுதிகளிலும் அண்மைக் கால வன்சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒஸ்றேலிய அரசாங்கம் 10 லட்சம் டொலர் உதவியை வழங்கியுள்ளது. மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் இந்த உதவி முதல் கட்டமாகவே வழங்கப்படுகிறது என்று ஒஸ்றேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 0000000 மூதூர் நகரில் பிரெஞ்சு தொண்டர் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த விபரங்களை நேரில் திரட்டும் பொருட்டு அந்த அமைப்பின் இயக்குநர் இன்று கொழும்பு செல்கிறார்.

திருகோணமலை மூதூர் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாங்களில் வாழ்ந்துவரும் மக்களுக்கு தழிழர் புனர் வாழ்வுக்கழகம் உதவிப் பொருட்களை வழங்கி வருகிறது.

வவுனியா நெடுங்கேணிப் பிரதேசத்தில், சிறிலங்காவின் ஆழ ஊடுருவும் பயங்கரவாதப் படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் மருத்துவ அவசர உதவி வாகனத்தில் சென்ற மருத்துவர் உட்பட்ட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு, ஆகியவற்றின் அதிகாரிகள், விடுதலைப் புலிகளின் வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானத்துடன், இந்தச் சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிடுவதற்காக அந்தப் பகுதிச் சென்றுவிட்டுத் திரும்பியபோது அவர்களை குறிவைத்து மற்றுமோர் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இருந்து அவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம், நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீலங்கா அரசுக்கும் இராஜதந்திரம் இருக்குது. ஆனால் அவர்கள் தங்கள் மக்களை சாகடிக்கிறார்களா..தமிழர்களுக

வணக்கம்,

ஏற்கனவே யாழ்கள நிர்வாகத்தினரால் அறிவித்தபடி, தமிழ்த் தேசித்தையும் விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாகக் கருத்துக்கள் முன்வைத்தபடியால், கள விதிகளுக்குட்பட்டு மதிவதனனும், குருவிகளும் இத்தலைப்பிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

நன்றி

வணக்கம்,

ஏற்கனவே யாழ்கள நிர்வாகத்தினரால் அறிவித்தபடி, தமிழ்த் தேசித்தையும் விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாகக் கருத்துக்கள் முன்வைத்தபடியால், கள விதிகளுக்குட்பட்டு மதிவதனனும், குருவிகளும் இத்தலைப்பிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

நன்றி

இதை என்னால் எற்ரு கொள்ள முடியாது இரண்டு உலகமாக

ஜனநாயகவதிகளை இங்கு இருந்து வெளியேற்றியது மாக சரி :P :twisted: :!:

வணக்கம்,

ஏற்கனவே யாழ்கள நிர்வாகத்தினரால் அறிவித்தபடி, தமிழ்த் தேசித்தையும் விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாகக் கருத்துக்கள் முன்வைத்தபடியால், கள விதிகளுக்குட்பட்டு மதிவதனனும், குருவிகளும் இத்தலைப்பிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

நன்றி

நண்றி...! :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.