Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் ஈட்டப் போகும் மகத்தான வெற்றியை அடுத்து அரசுடன் பேசுவோம்: - விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  நாம் ஈட்டப் போகும் மகத்தான வெற்றியை அடுத்து அரசுடன் பேசுவோம்: - விக்னேஸ்வரன்

[Tuesday, 2013-07-30 10:53:16]
Vigneswaran-TNA-150.jpg

வடமாகாண சபைத் தேர்தல் மூலம் புதிய பயணமொன்றைத் தொடங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுவை நேற்று திங்கட்கிழமை நண்பகல் யாழ். மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்த பின்னர் அங்கு கூடிநின்ற ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சி.வி.விக்னேஸ்வரன் அங்கு தொடர்ந்தும் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்..

  

13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் வட மாகாண சபைக்கான தேர்தல் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நடத்தப்படவில்லை. வடக்கு மக்களுக்கு இப்போது அந்தச் சந்தர்ப்பம் கிட்டியிருக்கின்றது. இத் தேர்தலில் தமிழினத்தின் ஒற்றுமை வெளிப்படுத்தப்பட வேண்டும். அதன் மூலமாக எமது இலக்கை அடைய முடியும். மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.

ஒத்துழைப்பை, ஒற்றுமையினை எடுத்துக்காட்டும் போது அதனூடாக 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்த அது உதவியாக அமையும். வடக்கு மண்ணில் வாழும் அனைத்துத் தமிழ்ப் பேசும் மக்களும் தங்களது ஆதரவை எமக்கு அள்ளி வழங்க வேண்டும். நீண்ட காலமாக தமிழினத்தின் மனங்களை வென்றிருக்கும் எமது கட்சி இத் தேர்தலில் வெற்றி வாகை சூடும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் கிடையாது.

13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் விதந்துரைக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை நடை முறைச் சாத்தியமாக்கிக் கொள்வதற்கு மக்கள் ஆதரவே எமக்கு மிக முக்கியமானதொன்றாகவுள்ளது. நாம் ஈட்டப் போகும் மகத்தான வெற்றியை அடுத்து பிரச்சினைகள் குறித்து இராஜதந்திர அடிப்படையில் அரசுடன் பேசுவோம். பேச்சுவார்த்தை சாத்தியப்பாடாது போனால் அடுத்த நகர்வுகுறித்து அந்தச் சந்தர்ப்பத்தில் தீர்மானிப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

நன்றி - செய்தியிணையம்

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும்? இன்னொரு பேச்சுவார்த்தை??!

அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும்? இன்னொரு பேச்சுவார்த்தை??!

 

பாராளுமண்ற தேர்தலுக்கு பிறகு நடந்த மாதிரியே தான் எல்லாம் நடக்கும்...  

 

மாகான சபை தேர்தலுக்கு பிறகு என்ன செய்வினம்... 

 

என்ன "சந்திர சிறி"  என்ன முடிவு எடுக்க போகிறாரோ அதை செய்ய போகினம்...   மீறினால் மகிந்த மாகான சபையை கலைப்பார்...  !  முதலமைச்சருக்கு  ஆழுனரை விட அதிக அதிகாரம் ஒண்றும் கிடையாது...  

எதுவுமே நடக்க போறதில்லை. ஒட்டுக் குழுக்கள் வரமால் இவர்கள் வருவதே மேல் பற்றும்படி எந்த முன்னேற்றமும் இல்லை 

பழைய மொந்தயில் புதிய கள்ளு..
 
வழக்கம்போல குடிச்சிட்டு காய் மூய் எண்டு கத்திவிட்டு மனிசி ஏசினவுடன் குப்புற படுத்து தூங்கிவிட்டு அடுத்தநாள்  தலையிடியுடன் கக்கூஸுக்கு போகலாம்.. வேறு ஒண்டும் ஸ்பெசல் எல்லம் இல்லை...  :lol:

எதுவுமே நடக்க போறதில்லை. ஒட்டுக் குழுக்கள் வரமால் இவர்கள் வருவதே மேல் பற்றும்படி எந்த முன்னேற்றமும் இல்லை.

இதை புலம் பெயர் தமிழர்கள்தான் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். இல்லையேல் போராட்டம் முன்னால் போகாது.

 

உதவிக்கு தமிழக மாணவர்கள் போன்ற அரசியல் லாபம் தேடாத உணர்வாளர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 

ஐ.நா வை நோக்கியதாக இருக்க வேண்டும் நமது நகர்வுகள். 

 

கூட்டமைப்பு அரசுடன் பேச போகிறோம் என்ற கதையை கருத்திலும் எடுக்கக் கூடாது. ஏன் எனில் கூட்டமைப்பு  ஐந்து ஈ அமரும் இடம் கேட்டாலும் மகிந்த புலிகள் ஆயூதத்தால் கேட்டதை கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் கேட்கிறது என்றுவிடுவார்.

Edited by மல்லையூரான்

         தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது!
by JBEditor on 30th-July-2013
 

Mahinda.jpgவடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றாலும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை என்னிடம் இருந்து பறித்துக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களின் பிரதானிகளுடனான சந்திப்பொன்று இன்று (30) இடம்பெற்றது. இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டினால், பாரிய சவால்கள் ஏற்படுமா என கேட்டதற்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திலுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மத்திய அரசின் கீழ் தொடர்ந்தும் இருக்குமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இதன்போது கூறினார்.

என்றபோதிலும், தாம் எண்ணியதற்கும் மேலாக வடக்கிலுள்ள மக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மீது பாரிய நம்பிக்கை வைத்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாங்கள் நினைக்காத அளவிற்கு பிரபலமானவர்கள் பலர் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துள்ளதுடன், தமிழ் கூட்டமைப்பின் பிரதேச தலைவர்கள் கூட மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதுடன் ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வந்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

தயாமாஸ்டர் வேட்பு மனுத் தாக்கல் செய்யாதது குறித்து ஊடக அமைப்புக்களின் பிரதானிகள் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியபோது, வேட்பு மனு தொடர்பாக வேட்புமனு குழுவே தீர்மானம் எடுத்தது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

http://tamilworldtoday.com/archives/25217

நிறை குடம் தளம்பாது என்று சொல்வார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் குடமும் தளம்பாது, Sayani!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.