Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிக்கிறார்கள்!- இடி இடிக்கிறார் இமானுவேல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பிரபாகரன் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிக்கிறார்கள்!- இடி இடிக்கிறார் இமானுவேல்
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 02:17.57 AM GMT ] [ விகடன் ]
FatherEmmanuel.jpg
ஈழத்தில் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகு திக்கற்று நின்ற ஈழத் தமிழர்கள், இப்போது மிகுந்த மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் உச்சரிக்கும் பெயர்... பாதர் இமானுவேல். கிறிஸ்துவ மத போதகரான இவர், ஈழத் தமிழர் இன ஒழிப்புக்கு எதிராக உலக அரங்கில் நீதி கேட்டுப் போராடும் அறிவாயுதப் போராளி.

தன் வலி மிகுந்த‌ எழுத்தினால், ,ராஜதந்திர‌ப் பேச்சினால், உலக நாடுகளிடையே இவர்மேற் கொள்ளும் 'டிப்ளமேட்டிக்� வேலைகளால், ராஜபக்சவுக்கு சிம்மசொப்பனமாக மாறி இருக்கிறார் பாதர் இமானுவேல்.

80 வய தைத் தொட்டிருக்கும் இமானுவேல், இப் போது ஜெர்மனியில் குருமடம் ஒன்றில் வசித்துவருகிறார்...

கேள்வி: எப்படி இருக்கிறீர்கள்... உங்களைக் கண்டுபிடிப்பதே பெரிய விஷயமாக இருக்கிறதே!

பதில்:  ஏதோ இருக்கிறேன்!  எம்முடைய புலம்பெயர் வாழ்வும், பாதுகாப்பின்மையும், நீதிக்கானப் போராட்டமும், தொடர் செயல்பாடுகளும் பெரும் பாலும் எம‌து இருப்பை மறைத்தே வைக்கவேண்டிய அவசியத்தை உண்டாக்கிவிட்டது. நான் கிறிஸ்துவ மதத்தில் ரோமிலும் கிழக்காசிய நாடுகளிலும் முக்கிய‌ பதவிகளை வகித்தவன். கிழக்காசிய நாடுகளின் கிறிஸ்துவ மதப் பொறுப்பாளராக இந்தியா, பாகிஸ்தான், சீனா, இலங்கை ஆகிய நாடுகளில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்.'இலங்கை� எமது தாய்நாடு என்றால், இந்தியா எமது தந்தை நாடு.

ஆனால், ராஜபக்rவின் அரசாங்கமும் சிங்கள ஊடகங்களும் என்னைப் புலி பாதர் எனத் தொடர்ந்து தவறான பரப்புரை செய்து வருகிறார்கள். இதனால் இலங்கை, இந்தியாவுக்குள் என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள். இதனாலேயே எனது நடமாட்டங்கள் சுருங்கிவிட்டன. உடல் மூப்பு காரணமாக, சுகவீனமும் அவ்வப்போது என்னை முடக்கிப் போட்டுவிடுகிறது!

கேள்வி: புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் அமைப்புகளும் தங்கள் நலனில் அக்கறைக் காட்டுவது இல்லை� என்ற குரல்கள் ஈழத்திலிருந்து ஒலிக்கின்றனவே?

பதில்: புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் தமிழ் மக்களும் அரசியல் பேசுவது மட்டுமல்ல; தாயகத்தில் வாடும் மக்களுக்கு உதவி செய்யவும் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. செல்வாக்கு உள்ளவர்கள், அங்கு உள்ள நமது உறவுகளைக் குடும்பம் குடும்பமாகத் தத்து எடுக்க வேண்டும். சர்வ சாதாரணமாக செலவழிக்கும் ஐந்து அல்லது பத்து பவுண்ட்களைக்கூட ஈழத்துக்கு அனுப்பலாம். 'ஈழம்� எனும் வேருக்கு நம்முடைய சிறு உதவிகள்தான் நீர் வார்க்கும் என்பதை புலம்பெயர்ந்த தமிழர்கள் உணர வேண்டும்!

கேள்வி: இந்த இக்கட்டான சூழலில், ஈழத்தில் சாதி பிரச்னைகள் முட்டி முளைப்பதாகக் கிளம்பும் தகவல்கள் உண்மையா?

பதில்: உண்மைதான். வருத்தமாக இருக்கிறது. சாதி, மதம், இனம், மொழி என எதன் பேரிலும் மனிதனை மனிதன் அடக்குதலை என்னால் ஏற்க முடியாது. பிரபாகரன், சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும், பெண் விடுதலைக்காகவும் போராடினார். 1960-களில், தமிழகத்தில் தந்தை பெரியார் என்கிற தீர்க்கதரிசி தோன்றி இன சுத்திகரிப்பு செய்தார். அவர் கடவுள் மறுப்புபேசினாலும், நான் அவரை பெரிதும் மதிக்கிறேன்.

இந்தியாவில் அம்பேத்கர் போன்ற புரட்சியாளர்களும் சாதிக்கு எதிராக தீவிரமானப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இலங்கையில் அப்படியான தலைவர்கள் தோன்றவில்லை. இன்றைய நிலையில், ஈழத் தமிழர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நம்மிடையே இருக்கும் சின்னச் சின்னப் பிளவுகள் கூட ஈழத்தைச் சின்னா பின்னமாக்கிவிடும் என்பதை எந்த நொடியும் மறந்து விடாதீர்கள்!

கேள்வி: தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்றோர் ஆரம்பித்த அஹிம்சைப் போராட்டம், அதன் பிறகு 30 ஆண்டு கால‌ ஆயுதப் போராட்டம் ஆகிய அனைத்தும் முள்ளிவாய்க்காலில் ஒரு தேக்கத்தை அடைந்தது. இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக உங்களைப் போன்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கொள்ளும் டிப்ளமேட் லாபி, பொலிட்டிகல் நெட்வொர்க்கிங் ஆகியவை ஈழப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லுமா?

பதில்: சிங்களப் பேரினவாதத்தின் முன் தந்தை செல்வாவின் அஹிம்சைப் போராட்டமும், புலிகளின் ஆயுதப் போராட்டமும் கை கொடுக்கவில்லை. இது, அநீதிகள் நிறைந்த உலகம். அதுவும் அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, புரட்சிப் போராட்டங்களின் மீது சர்வதேசத்தின் கண்ணோட்டம் மாறியிருக்கிறது. எனவே, இனி அரசியல் போராட்டமே எமக்கான விடுதலையைப் பெற்றுத் தரும் என நம்புகிறோம்.

எங்களுடைய டிப்ளமேட் செயல்பாடுகளின் சோதனை முயற்சிகள், ஐக்கிய நாடுகள் மன்றத்தில் நல்ல பலன் அளித்தது. அதன் வெளிப்பாடே அமெரிக்காவின் இரண்டு தீர்மானங்களும். கடந்த காலங்களில் நாங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, முன்னேற விரும்புகிறோம். ஆக்கபூர்வமான விமர்சனங்களில் இருந்து எம்மைத் திருத்திக்கொள்கிறோம்; மன்னிப்பும் கேட்க விரும்புகிறோம்.

முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நோர்வே எனப் பல நாடுகள் எங்களுக்குப் பக்கபலமாக இருக்கின்றன. எங்களின் இந்தச் செயல்பாடுகளுக்கான விளைவுகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

கேள்வி: இலங்கையின் வட பகுதிகளில் நடைபெறவிருக்கும் மாகாணத் தேர்தலில், ஈழ அரசாங்கத்தின் அதிகார அழுத்தத்தை மீறி தமிழர்கள் வெற்றி பெறுவார்களா?

பதில்:  தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் இந்தத் தேர்தலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும் அனைவருக்கும் வாக்குரிமை, முறையான வாக்குப் பதிவு எனத் தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டால், தமிழர்கள் வெற்றி பெறுவார்கள். ராஜபக்ச அரசின் மீதான கோபத்தையும், தமிழர்களின் தாகத்தையும் மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்!

கேள்வி: இந்தியா முன்மொழிந்த 13-வது சட்டத் திருத்த மசோதாவை இலங்கை ஏற்க மறுக்கிறது. அதே வேளை யில் ஈழத் தமிழர்களும் அதிருப்தி வெளிப்படுத்துகிறார்கள். 13-வது சட்டத் திருத்தத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: கடந்த சில தசாப்தங்களாக‌ தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. முள்ளிவாய்க்கால் போரில் விடுதலைப் புலிகளையும் அப்பாவித் தமிழர்களையும் கொன்று குவித்த பிறகு, பான் கீ மூனுக்கும் மன்மோகன் சிங்குக்கும் ராஜபக்ச பல வாக்குறுதிகள் கொடுத்தார். ஆனால், அவை எவையுமே செயல்வடிவம் எடுக்கவில்லை. லேண்ட் பவர், போலீஸ் பவர் என எதனையும் இன்று வரை வழங்கவும் இல்லை.

இந்த நிலையில் எங்களைப் பொறுத்தவரை 13-வது சட்ட திருத்தம் முடிவும் அல்ல, தொடக்கமும் அல்ல. அது எங்களுக்கு எந்த வகையிலும் உதவாது. இலங்கை அரசின் நரித் தந்திர வேலைகளால் இந்தியாவுக்குப் பெரும் சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. சிங்களப் பேரினவாதிகள் தமிழ்மக்களுக்குக் குறைந்தபட்ச நீதியைக்கூட வழங்க மாட்டார்கள்!

கேள்வி: நவம்பர் மாதம் இலங்கையில் கொமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடைபெற இருக்கிறது. 'மாநாட்டின் முடிவில் இலங்கை அதிபர் ராஜபக்ச கொமன்வெல்த் நாடுகளின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக வதந்திகள் உலவுகின்றன... அது உண்மையா?

பதில்: அந்த நிலைமை மட்டும் ஒருபோதும் நேர்ந்துவிடக் கூடாது. அது இப்போதைய ஈழத் தமிழர்களின் நிலையை முற்றிலும் மோசமாக்கிவிடும். இலங்கையில் நடைபெற இருக்கும் கொமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை அதன் உறுப்பு நாடுகள் புறக்கணிக்க வேண்டும். இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது. 'ஒருவேளை நீங்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றால், முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையில் நீங்களும் பங்கேற்றதற்கு ஒப்பாகும்� என கனடாவிடம் விளக்கினோம்.

எங்கள் வார்த்தைகளை செவிமடுத்து, 'கனடா அந்த மாநாட்டில் பங்கேற்காது� எனச் சொல்லி இருக்கிறார்கள். அதேபோல பிரிட்டன், நியூசிெலாந்து,அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிடமும் பேசிக்கொண்டு இருக்கிறோம். அவர்களும் எமக்குச் சாதகமான முடிவை எடுப்பார்கள் என நம்புகிறோம்!

கேள்வி:  நீங்கள் பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்ததாக தகவல்கள் உண்டு. பிரபாகரன் இறந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது எந்த அளவுக்கு உண்மை?

பதில்: 1986-ல் நான் யாழ்ப்பாண குருமடத்தில் பேராசிரியராக இருந்தபோது ஒருமுறை பிரபாகரனைச் சந்தித்தேன். அதன் பிறகு 1991-ம் ஆண்டு என்னை அவர் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார். அப்போதும் சந்தித்தேன். அந்த இரண்டு சந்திப்புகளுமே எமது தாயகம் குறித்தும், மக்களின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதிலேயே மையம் கொண்டது. அதன் பிறகு, நான் இலங்கையில் இருந்து வெளியேறி விட்டேன்.

பிரபாகரன் இருக்கிறாரா? என்ற கேள்வி எமக்கு இப்போது முக்கியமானதாகத் தெரியவில்லை. அவர் பெயரைச் சொல்லி சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள். பிரபாகரனைக் காட்டிலும், அவரின் இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே இப்போது முக்கியம்!

http://www.2tamil.com/readmore.php?id=x2s203p284

இதையே நாங்கள் சொன்னால் எமது தகுதி குறித்தும், அருகதை குறித்தும் ஆராயும் அன்பர்கள் பாவம் இமானுவேல் அடிகளாரை என்ன செய்வார்களோ??? துரோகிப்பட்டியலில் ஒரு புது வரவு, பாவம் பிழைக்கத் தெரியாதவர். :(

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் பெயரை எல்லாரும் தான் பாவிக்கினம். ஒரு தரப்பு என்றில்லை. ஊரிலை அரசியல் செல்வாக்கிழந்தவனுக்கும் அவர் தான் தேவை. ஜனாதிபதியா உள்ளவனுக்கும் அவர் தான் தேவை. அசைலம் அடிக்கிறவனுக்கும் அவர் தான் தேவை. இதில் அவன் பாவிக்கிறான் இவன் பாவிக்கிறான் என்று சுட்டு விரலை.. சுழற்ற வெளிக்கிட்டால்.. அது உங்களையும் ஒருக்கால் சுட்டிவிட்டுத்தான் போகும்.

பிரபாகரன்.. ஒரு சகாப்தம். அந்த வகையில்.. அவரின் பெயரை பலரும் பலவாறு பாவிக்கிறார்கள்.. அண்டையில் உள்ள நாடு.. தனது இறையாண்மையை நினைவுபடுத்தவும் அவரைப் பாவிக்குது. அமெரிக்கா அல்குவைடாவ அடிக்கவும் அவரைப் பாவிக்குது. அது அல்ல பிரச்சனை. பிரச்சனை பிரபாகரன் தமிழ் மக்களின் விடிவுக்காகக் கொண்ட இலட்சியத்தை எவர் வெல்ல வைக்கினம் என்றது தான்..! அப்ப தான் அந்த சகாப்தத்தின் போராட்டத்திற்கு தியாகத்திற்கு அவர் விரும்பிய மக்களுக்கான சுதந்திரத்தை இலக்கை அடைய முடியும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

:

எழுத்தாளர்களுக்கும் அவர் தேவை...கருத்தாளர்களுக்கும் அவர் தேவை.....முக்கியமாக மாற்றுக்கருத்தாளர்களுக்கு அவர் இல்லாவிடில் அவர்களுக்கு கருத்தே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் பெயரை எல்லாரும் தான் பாவிக்கினம். ஒரு தரப்பு என்றில்லை. ஊரிலை அரசியல் செல்வாக்கிழந்தவனுக்கும் அவர் தான் தேவை. ஜனாதிபதியா உள்ளவனுக்கும் அவர் தான் தேவை. அசைலம் அடிக்கிறவனுக்கும் அவர் தான் தேவை. இதில் அவன் பாவிக்கிறான் இவன் பாவிக்கிறான் என்று சுட்டு விரலை.. சுழற்ற வெளிக்கிட்டால்.. அது உங்களையும் ஒருக்கால் சுட்டிவிட்டுத்தான் போகும்.

உண்மைதான் நெடுக்ஸ்,
 
அரசியல்வாதிகளுக்கு அவர் தேவை
பத்திரிகையாளருக்கும் அவர் தேவை 
ஒட்டுக்குழுக்களுக்கும் அவர்கள் பிழைப்புக்கு அவர் தேவை 
பிராந்திய அரசுகளுக்கு கூட அவர்களின் கபட அரசியலுக்கு அவர் தேவை 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரனின் பெயரை எல்லாரும் தான் பாவிக்கினம். ஒரு தரப்பு என்றில்லை. ஊரிலை அரசியல் செல்வாக்கிழந்தவனுக்கும் அவர் தான் தேவை. ஜனாதிபதியா உள்ளவனுக்கும் அவர் தான் தேவை. அசைலம் அடிக்கிறவனுக்கும் அவர் தான் தேவை. இதில் அவன் பாவிக்கிறான் இவன் பாவிக்கிறான் என்று சுட்டு விரலை.. சுழற்ற வெளிக்கிட்டால்.. அது உங்களையும் ஒருக்கால் சுட்டிவிட்டுத்தான் போகும்.

பிரபாகரன்.. ஒரு சகாப்தம். அந்த வகையில்.. அவரின் பெயரை பலரும் பலவாறு பாவிக்கிறார்கள்.. அண்டையில் உள்ள நாடு.. தனது இறையாண்மையை நினைவுபடுத்தவும் அவரைப் பாவிக்குது. அமெரிக்கா அல்குவைடாவ அடிக்கவும் அவரைப் பாவிக்குது. அது அல்ல பிரச்சனை. பிரச்சனை பிரபாகரன் தமிழ் மக்களின் விடிவுக்காகக் கொண்ட இலட்சியத்தை எவர் வெல்ல வைக்கினம் என்றது தான்..! அப்ப தான் அந்த சகாப்தத்தின் போராட்டத்திற்கு தியாகத்திற்கு அவர் விரும்பிய மக்களுக்கான சுதந்திரத்தை இலக்கை அடைய முடியும்..! :icon_idea:

நெடுக்ஸ் அண்ணா,

ஈழத்தின் வரலாற்றிலும்,போராட்ட வரலாற்றிலும் பிரபாகரனதும்,விடுதலைப்புலிகளதும் பக்கங்களைக் கடந்து எவற்றையும் எழுதிவிடமுடியாது இது அரிவரிப்பிள்ளைக்கும் தெரிந்த விடையம். இங்கு அவர் சுட்டிக்காட்டுவது அசைலம் அடிச்சவனையும், அரசியல் செய்பவனையும் அல்ல பிரபாகரன் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்தும் சிலரைப் பற்றித் தான், அவர்களுடைய நோக்கம் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த கவலையும் இன்றி, நியாயமான ஒரு அரசியல் தீர்வுக்கு எந்த விதமான பங்களிப்பும் வழங்காது முட்டுக்கட்டை போடும் சிலரைப்பற்றித் தான் குறிப்பிடுகிறார். ஒரு வரியை மட்டும் பிடித்துத் தொங்காமல் அவருடைய மொத்தக் கருத்துக்களையும் படியுங்கள் அவர் சொல்வது.

1. போரால் பாதிக்கப்பட்ட மக்களை புலம்பெயர்ந்தவர்கள் ஒரு குடும்பத்தையேனும் தத்தெடுத்தப் பார்க்க வேண்டும் என்பது.

2. சாதி,மதங்களின் மீழ் முளைப்ப்பு.

3. அரசியல் பேதங்கள் கடந்து ஒற்றுமையாக்க வேண்டிய தேவை.

4. தந்தை செல்வாவின் அஹிம்சைப் போராட்டமும், புலிகளின் ஆயுதப் போராட்டமும் குறிப்பிட்ட சில காரணங்களால் தோல்வியுற்ற பின்ன்னரான எமது பிரச்சனைகளை அரசியல் போராட்டம் மட்டுமே பெற்றுத்தரும் என்ற என்ற கருத்துருவாக்கங்களுக்கு எதிரான பிழைப்புவாதிகளையே தான் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

தேசியத் தலைவர் இருக்கிறார் அல்லது இல்லை என்ற விவாதங்களுக்கு அப்பால் புலிகள் இயக்கமே ஆயுதங்களை மௌனித்து போராட்டத்தை அடுத்த தலைமுறையிடம் விட்டுச் சென்று விட்ட பிற்பாடு பிரபாகரனின் தேவை எதற்கு? இவர்கள் எதற்குப் பிரபாகரனைக் கூப்பிடுகிறார்கள்? இன்று உலத்தின் கவனத்திற்கு ஈழத்தமிழரின் அழிவுகளையும்,அவலங்களையும் கொண்டு சென்று, ஐ.நா மனிதவுரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரச் செய்தவர்களில் முக்கியமான ஒருவரை நோக்கியே உங்கள் சுண்டுவிரல் நீழ்கிறது என்றால் நீங்கள் யாரை எதிரியாக்குகிறீர்கள்? யாரை நண்பராக்குகிறீர்க்கள்? இவர்களையெல்லாம் எடுத்தெறிந்து விட்டு என்ன மாதிரியான தீர்வைத் தமிழர்களுக்க்காகப் பிரேரிக்கிறீர்கள்? நீங்கள் நேசிக்கும் பிரபாகரன் கூட இப்படியான சி(நி)ந்தனைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுபவர்களைவிட

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க மகிந்த கொம்பனியுடன்

கூட்டுச் சேர்ந்து காட்டிக் கொடுத்து காசு பார்ப்பவர்கள் மிக மிக அதிகம்.

குரு  இம்மானுவல் கூறும் செய்தியில் பல விடயங்கள் இருக்க

தலையங்கம் மட்டும் இப்படி இருப்பதன் மயக்கம் தான் என்ன :D

இதுவும்  ஒருவகை  விபச்சாரம்

பத்திரிகை  விபச்சாரம்

மினிக்கி   துலக்கி

நின்றால்தானே  நாலு பேர்  பார்ப்பார்கள்

இது மாற்றுக்கருத்தாளருக்கு தீனி  

தேசியத்தை  நேசிப்பவர்களுக்கு குட்டல்

(செய்தி) அடிபட்டால்

காசு பார்க்கலாம்

அவர்கள்   காசு பார்த்துக்கொண்டு அதையே  இன்னொருவனுக்கு தூக்கிப்போடுகிறார்கள்

பாவம்  அந்த மனுசன் குரு  இம்மானுவல் 

அவரின்  கழுத்தை   இதற்குள்  இழுத்து வெட்டுவது  தான்  பெரும்  அநியாயம் :(  :(

பிரபாகரனின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுபவர்களைவிட

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க மகிந்த கொம்பனியுடன்

கூட்டுச் சேர்ந்து காட்டிக் கொடுத்து காசு பார்ப்பவர்கள் மிக மிக அதிகம்.

குரு  இம்மானுவல் கூறும் செய்தியில் பல விடயங்கள் இருக்க

தலையங்கம் மட்டும் இப்படி இருப்பதன் மயக்கம் தான் என்ன :D

கடைசி ஒரு இடத்தில் தான் அந்த வசனம் வருகிறது. அவர் எவ்வளவோ சொன்னார் அதில் எல்லாம் தலைப்பு வைக்க முடியல இந்த சின்ன வசனம் தான் தலைப்பு வைக்க முடிஞ்சது. வாழ்த்துக்கள் ஜீவா  :icon_idea: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரனின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுபவர்களைவிட

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க மகிந்த கொம்பனியுடன்

கூட்டுச் சேர்ந்து காட்டிக் கொடுத்து காசு பார்ப்பவர்கள் மிக மிக அதிகம்.

குரு  இம்மானுவல் கூறும் செய்தியில் பல விடயங்கள் இருக்க

தலையங்கம் மட்டும் இப்படி இருப்பதன் மயக்கம் தான் என்ன :D

இந்தச் செய்தியை நான் இணைத்தவன் என்ற வகையில் இதற்குப் பதில் சொல்லும் கடமைப்பாடு உண்டு.

இந்தச் செய்தி யாழுக்காகத் தயாரிக்கப்பட்ட ஒன்று அல்ல, இன்னொரு இணையத்தில் வந்த செய்தி அங்கு அப்படித்தான் உள்ளது. குறித்த தளத்தின் அனுமதியில்லாமல் செய்திகளை வெட்டிக்கொத்தும் அதிகாரம் எமக்கு இல்லை. அதற்காகத் தான் குறித்த தளத்தின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்வியை மூலச் செய்தியை எழுதிய தளத்திடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.

மற்றும்படி மஹிந்த கொம்பனியிடம் கூட்டுச்சேர்ந்து காசு பார்ப்பவர்கள் மிக மிக அதிகம் என்ற செய்தி

இம்மானுவேல் அடிகளாருக்குத் தெரியவில்லைப் போலும். :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா,

தேசியத் தலைவர் இருக்கிறார் அல்லது இல்லை என்ற விவாதங்களுக்கு அப்பால் புலிகள் இயக்கமே ஆயுதங்களை மௌனித்து போராட்டத்தை அடுத்த தலைமுறையிடம் விட்டுச் சென்று விட்ட பிற்பாடு பிரபாகரனின் தேவை எதற்கு? இவர்கள் எதற்குப் பிரபாகரனைக் கூப்பிடுகிறார்கள்? இன்று உலத்தின் கவனத்திற்கு ஈழத்தமிழரின் அழிவுகளையும்,அவலங்களையும் கொண்டு சென்று, ஐ.நா மனிதவுரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரச் செய்தவர்களில் முக்கியமான ஒருவரை நோக்கியே உங்கள் சுண்டுவிரல் நீழ்கிறது என்றால் நீங்கள் யாரை எதிரியாக்குகிறீர்கள்? யாரை நண்பராக்குகிறீர்க்கள்? இவர்களையெல்லாம் எடுத்தெறிந்து விட்டு என்ன மாதிரியான தீர்வைத் தமிழர்களுக்க்காகப் பிரேரிக்கிறீர்கள்? நீங்கள் நேசிக்கும் பிரபாகரன் கூட இப்படியான சி(நி)ந்தனைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

மிச்சத்தை விடுவம்.. இவற்றிற்கு பதில் சொல்லனுன்னா..

பிரபாகரன்.. தானாக ஒரு போராட்டத்தை நடத்தவில்லை. தந்தை செல்வா போன்றவர்கள் ஒப்பந்தங்கள் பேச்சுக்கள் எல்லாம் செய்து களைத்து சிங்களவர்களிடம் இருந்து எதுவுமே கிடைக்காது என்ற நிலையில்.. சிங்களம் தமிழர்களின் இருப்பை விழுங்க ஆக்கிரோசம் கொண்ட நேரம்.. தமிழர்களைக் காக்க.. கடவுளை அழைத்த நேரம்.. மாற்று வழியில் மக்களின் சுதந்திரத்திற்காக அதன் மூலம் தமிழர்களின் இருப்பைக் காக்கலாம் என்று.. சிந்தித்தவர் தான் பிரபாகரன்..!

அவரின் பின்னால் விடுதலைப்புலிகள் அமைப்பாக ஒரு பகுதி மக்கள் திரண்டார்கள். ஒரு பகுதி மக்களே போராடினார்கள். மற்றவர்கள் உலகம் பூராவும் அசைலம் அடித்தார்கள். வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் சந்தர்ப்பமாக அதைப் பாவித்தார்கள்.

இப்போ.. முள்ளிவாய்க்காலின் பின்.. புலிகள் ஆயுதங்களை மெளனித்து விட்டார்கள். பிரபாகரன் போராட்டத்தை புலம்பெயர் மக்களிடம் கையளித்து விட்டார்.. எனி அவர் இருந்தால் என்ன விட்டால் என்ன.. என்ற தங்களின் சிந்தனையோட்டம்.. மெய் சிலிர்க்க வைக்கிறது.

பிரபாகரன்... என்ற அந்தத் தலைமையை நம்பித்தான் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பும் சரி ஒரு பகுதி மக்களும் சரி போராடினார்கள். என்னையோ.. உங்களையோ.. அசைலம் அடித்தவர்களையோ அல்லது இந்தக் குருவாண்டவரையோ நம்பி அல்ல..!

இன்றும் அந்தப் பிரபாகரன் என்ற நாமம் தான் இலட்சிய உறுதியை தருகிறது. தமிழர்களுக்கு ஒரு தேசிய.. தேச விடுதலைப் போராட்டம் நடந்ததை நினைவுபடுத்துகிறது. தமிழருக்கு தாயகம் உள்ளது என்பதைச் சொல்கிறது.

தமிழீழம் கேட்டவர்கள் பலர். ஏன் அவர்களின் பெயரால் மக்களை.. ஒரு சக்தியாக திரட்டமுடியவில்லை. எதுக்குப் பிரபாகரன் நாமம் தேவைப்படுகிறது..???! தமிழீழம் இறுதித் தீர்வு என்று சொல்லி வாக்கு வாங்கின அமிர்தலிங்கத்தின் பெயரால் ஏன் யாரும் அரசியல் செய்யுறீனம் இல்லை. காசு பார்க்கினம் இல்லை..??! எதுக்குப் பிரபாகரன் என்ற நாமம்.. தேவைப்படுகுது..??!

காரணம்.. பிரபாகரன் என்ற அந்த சகாப்தம்.. மக்களிலும் சரி.. எதிரிகளிலும் சரி.. இந்த உலகிலும் சரி.. குறிப்பிடத்தக்க அளவு செல்வாக்குச் செலுத்துகிறது என்பதால் தான். செல்வாக்கற்ற ஒரு நாமத்தை வைச்சு யார் காசு பார்க்க முடியும் ?!. அப்படிக் காசு பார்த்தாலும் யார் கவலைப்படப் போகிறார்கள்..??! எவருமில்லை.

பிரபாகரன் என்ற நாமத்தை விட்டு தமிழீழம் என்பதும் சாத்தியமில்லை. தமிழர்களுக்கு விடிவு என்பதும் சாத்தியமில்லை. அவர் ஒரு வரலாறாக இருக்கிறார். அந்த வரலாற்றின் பக்கங்களை சிலர் பணம் பார்க்க விற்கிறார்கள்.. சிலர் அரசியலாக்குகிறார்கள்.. சிலர் அசைலம் ஆக்குகிறார்கள். ஆனால் வெகு சிலரே அதனைப் படித்து அதனை நீட்டிச் செல்கின்றனர். எனவே அந்த வரலாற்றைப் புறக்கணித்துவிட்டு.. தமிழர்களுக்கு விடிவு காண முடியும் என்ற தங்களின் வாதம் பெரிதும் சாத்தியப்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை.

டக்கிளஸ் தேவானந்தா.. முதல்.. ஆறுமுகம் தொண்டமான் அவரை பிரபாகரனை உச்சரித்து விட்டுத்தான் கதிரைகளில் உள்ளனர். கருணாநிதி முதல் மன்மோகன் சிங் வரை பிரபாகரனை உச்சரித்து தான் உள்ளனர். அவர்கள் செய்வதும் பிழைப்புத்தான். ஒரு கடை வைச்சிருக்கிறவன்.. பிரபாகரன் பெயரைப் போட்டு வியாபாரம் செய்தால் குமுறிற நாங்கள்.. ஏன் மேற்படி கணவான்களை இட்டு குமுறுவதில்லை. சம்பந்தன் கூட இன்றும் பிரபாகரனையும்.. புலிகளையும் வைச்சுத்தான் பிழைக்கிறார். அதில் புலிகள் என்னைக் கொலை செய்ய முற்பட்டார்கள் என்று சிங்கள மக்களிடம் அனுதாபம் தேடும் கொடூர அறிக்கைகளும் அடங்கும். இதனை எல்லாம் ஏன் நாங்க கண்டுக்கிறதில்லை. எவனோ 10,000 பவுன் சேர்க்கிறதுக்கு கத்தி முறியுற நாங்கள்.. பிரபாகரனின் பெயரால் காட்டிக்கொடுத்து.. 25 வருசம் அரசியல் செய்யுறனை.. கோடி கோடியா சம்பாதிக்கிறவனை ஏன் பாதுகாக்கிறம்..???!

இந்தக் குருவாண்டவர் கூட பிரபாகரனின் போராட்டத்தை ஆதரிக்கப் போய் தான் மக்கள் மதிப்பைப் பெற்றவர். இல்லை என்றால் இவரும்.. ஒரு சாதாரண சுவாமியாகவே கருதப்பட்டிருப்பார். இந்தப் பேட்டிக்கு இடமும் இருந்திருக்காது. இதனை ஒருவாதத்திற்காகவே சொல்கிறேன். இவர்களின் இவ்வளவு கால பற்றுறுதியை கேலி செய்யும் வகையில் அல்ல..!

எனவே பிரபாகரன்.. எல்லாத்தையும் கையளிச்சிட்டு போயிட்டார். நாங்கள் அவரை மறந்திட்டு.. நாங்க நினைச்ச படி.. ஆளையாள் திட்டிக்கிட்டு இருக்கலாம்.. அப்படி ஒரு அரசியல் செய்யலாம் என்று நினைத்தால்.. அது சாத்தியம். ஆனால் அது பிரபாகரன் முன்னெடுத்த போராட்டத்தின் இலட்சியத்தில் எதனையும் எமக்கு அடைய உதவாது. மேலும் பிரபாகரன் என்ற ஒரு சகாப்தத்தின் வரலாற்றின் தொடர்ச்சியாகத்தான் தமிழீழ விடுதலைப் போராட்டமாக இருந்தாலும்.. தமிழ் மக்களின் இருப்பாக இருந்தாலும் அமைய முடியுமே தவிர அந்த நாமம்.. இன்றி எதுவும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை உபயோகமாக அமையாது..! இதுதான் இன்றைய யதார்த்தம்..!  இதற்குள்ளால் தான் எல்லோரும் பயணித்தாகனும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடைசி ஒரு இடத்தில் தான் அந்த வசனம் வருகிறது. அவர் எவ்வளவோ சொன்னார் அதில் எல்லாம் தலைப்பு வைக்க முடியல இந்த சின்ன வசனம் தான் தலைப்பு வைக்க முடிஞ்சது. வாழ்த்துக்கள் ஜீவா  :icon_idea: 

இந்தச் செய்தி யாழுக்காகத் தயாரிக்கப்பட்ட ஒன்று அல்ல, இன்னொரு இணையத்தில் வந்த செய்தி அங்கு அப்படித்தான் உள்ளது. குறித்த தளத்தின் அனுமதியில்லாமல் செய்திகளை வெட்டிக்கொத்தும் அதிகாரம் எமக்கு இல்லை. அதற்காகத் தான் குறித்த தளத்தின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்வியை மூலச் செய்தியை எழுதிய தளத்திடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.

வாழ்த்தும் எனக்கல்ல, அவர்களைத்தான் போய்ச்சேர வேண்டும் அன்பு அண்ணா. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதில நாங்கள் யாரையும் நண்பரும் ஆக்கவில்லை.. எதிரியும் ஆக்கவில்லை. யதார்த்தச் சூழலை விளங்கிக் கொள்வது அவசியம் என்றே சொல்கிறோம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் என்ற ஒரு சகாப்தத்தின் வரலாற்றின் தொடர்ச்சியாகத்தான் தமிழீழ விடுதலைப் போராட்டமாக இருந்தாலும்.. தமிழ் மக்களின் இருப்பாக இருந்தாலும் அமைய முடியுமே தவிர அந்த நாமம்.. இன்றி எதுவும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை உபயோகமாக அமையாது..! இதுதான் இன்றைய யதார்த்தம்..!  இதற்குள்ளால் தான் எல்லோரும் பயணித்தாகனும்..!  :icon_idea:

நன்றி  ஐயா

நிறைய பேருக்கு கோபமே பிரபாகரன் பெயரை சொல்லி தங்களால் வாழ முடியவில்லை என்பதுதான்...   :D  :D  :D

எல்லாருக்கும் காசை குடுத்து ஏமாந்த ஆக்களை தெரிஞ்சவையை தெரியுது...   ஆனால் என்னை ஏமாத்தி போட்டினம் எண்டு சொல்ல ஒருத்தரையும் எப்போதும் காணக்கிடைக்குது இல்லை...  

ஒருவேளை சொல்ல வெக்கமோ...??  அப்படி இருந்தாலும் தொடர்ந்து ஏமருவார்களா...?? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் அண்ணா,

புலம்பெயர்ந்து இருப்பவர்களில் 99% ஆனோர் அசைலம் அடிச்சவர்கள் தான். நாடுகடந்த அரசுக்கு ஓட்டுப் போடுபவர்களாக இருந்தாலும் சரி, மைதானத்தில்,போராட்டத்தில் புலிக்கொடி பிடிப்பவர்களானாலும் சரி,தமிழாலயத்துக்குப் பிள்ளையை அனுப்புபவர்களானாலும் சரி,கோவில் குடமுழுக்கு, போராட்டத்துக்கு, மனிதாபிமான உதவிகளுக்கு நிதியுதவி செய்ப்பவர்களானாலும் சரி அதிகம் பேர் அசைலம் அடிச்சவர்கள் தான் இவர்களை நோக்கியா கை நீட்டுவார்? பிழைப்பு நடத்துபவர்கள் யார் என்று எமக்குத் தான் புரியாவிடினும் அடிகளாருக்குமா புரியாமல் விட்டிருக்கும்? அப்படியென்றால் இப்படியான ஒரு சந்த்ர்ப்பத்தில் இப்படியானதொரு கருத்தைத் தெரிவிக்க வேண்டிய தேவை என்ன அவருக்கு??? முடிவெடுக்கும்,முக்கியமான இடங்களில் இருக்கும் பிழைப்புவாதிகளே இங்கு முக்கியமானவர்கள். பிரபாகரனை வைத்துப் பிழைப்பு நடத்துக்கிறவர்களைத் தடுக்க்க முடியாவிடினும் பிழைப்பு நடத்துகிறார்கள் என்று தெரிந்தும் ஆதரவு அளிப்பவர்களை என்ன செய்ய? அவர்களுடைய சித்தாந்தங்களை எதிர்க்காமல் விடுதலை என்பது எப்படிச் சாத்தியம்? ஏனென்றால் அவர்களுக்குக் கூஜா தூக்கவும் எம்ம்மினத்தில் பலருண்டே.!!

  • கருத்துக்கள உறவுகள்

இதையே நாங்கள் சொன்னால் எமது தகுதி குறித்தும், அருகதை குறித்தும் ஆராயும் அன்பர்கள் பாவம் இமானுவேல் அடிகளாரை என்ன செய்வார்களோ??? துரோகிப்பட்டியலில் ஒரு புது வரவு, பாவம் பிழைக்கத் தெரியாதவர். :(

எவர்  சொன்னால்  என்ன???

என்ன  சொல்கிறார்  என்பது தான் முக்கியம்

உங்கள் நடவடிக்கைகள் மீதே உங்களுக்கே  சந்தேகம்  வரத்தொடங்கியிருப்பதன்  பிரதிபலிப்பே இத்திரி.

தொடருங்கள் :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் என்ற ஒரு சகாப்தத்தின் வரலாற்றின் தொடர்ச்சியாகத்தான் தமிழீழ விடுதலைப் போராட்டமாக இருந்தாலும்.. தமிழ் மக்களின் இருப்பாக இருந்தாலும் அமைய முடியுமே தவிர அந்த நாமம்.. இன்றி எதுவும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை உபயோகமாக அமையாது..! இதுதான் இன்றைய யதார்த்தம்..!  இதற்குள்ளால் தான் எல்லோரும் பயணித்தாகனும்..!  :icon_idea:

அதுதான் நிதர்சனம் 

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய பேருக்கு கோபமே பிரபாகரன் பெயரை சொல்லி தங்களால் வாழ முடியவில்லை என்பதுதான்...   :D  :D  :D

எல்லாருக்கும் காசை குடுத்து ஏமாந்த ஆக்களை தெரிஞ்சவையை தெரியுது...   ஆனால் என்னை ஏமாத்தி போட்டினம் எண்டு சொல்ல ஒருத்தரையும் எப்போதும் காணக்கிடைக்குது இல்லை...  

ஒருவேளை சொல்ல வெக்கமோ...??  அப்படி இருந்தாலும் தொடர்ந்து ஏமருவார்களா...?? 

கொடுத்தவனுக்குத்தெரியும்

எங்கு  கொடுத்தேன்

எதற்கு கொடுத்தேன்  என்பது.

அதனால் அவர்கள் தேடுவதில்லை.

அப்படித்தேடினாலும் போட்ட இடத்தில்   மட்டுமே தேடுவார்கள்.

உதாரணமா

நான் எனது பணம்  பற்றி  கேட்கவேண்டுமாயின்  தட்டவேண்டிய  கதவை அறிவேன்.

போடாதவர்கள் தான்

குளத்தில் போட்டோமா

ஆற்றில் போட்டோமா  என்று  தெரியாது

யாழில்  தேடுகிறார்கள்........ :D 

அவர்களது தேடுதல்  தொடரத்தானே  செய்யும்.....

இவர்கள் தேடுவதைப்பார்த்து

நாலு பேர் 

நானும் போட்டேன் என்று சேர்ந்து தேடுவது தான் உச்ச  பகிடி........... :lol:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவர் போராட்டக்களத்தில் இருந்த போதும்... அவரை வைத்துப் பலர் பலவிதமாக பிழைப்பு நடத்தினர். அவருக்கும் அவை தெரிந்தே இருந்தது. அதற்காக அவர்களை எல்லாம் திருத்தி அல்லது தண்டித்து விட்டுத்தான் நான் போராடுவேன் என்றிருந்திருந்தால்.. தேசிய தலைவரால்.. ஒரு நிழல் தமிழீழத்தைக் கூட இந்த உலகிற்கு அடையாளம் காட்டி இருக்க முடியாது. வீரப்பன் போல.. காட்டுக்குள் மரம் வெட்டி விற்றார்.. கொள்ளை அடித்தார்.. பயங்கரவாதம் செய்தார் என்ற நாமத்தோடு மாண்டு போகும் நிலையே தோன்றி இருக்கும்..! அதனை தான் ஆட்சியாளர்கள் விரும்புவார்கள்.

ஒரு போராளி போராட்டக்களத்தில் சாதிப்பது மட்டுமல்ல சாதனை அவன் தனது இலட்சியம் வெல்லப்படும் வகையில் நடந்து கொள்வது தான் சாதனை..! அதனையே தான் பிரபாகரன் விரும்பினார். அவர் தன்னை வைச்சு பிழைக்கிறவனை கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. மாறாக அமைப்புக்கு மக்களுக்கு தேவையானதை மட்டும் கணக்குப் பார்த்தார். அது தான் இன்றைய தேவை எமக்கும்..! கொள்ளைக் கூட்டத்தை கணக்குப் பண்ணப் போய் கொள்கையை கைவிடுவது அல்ல போராட்ட இலட்சியம் வெல்ல அவசியம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தி எழுதியவனையும், பேட்டி குடுத்தவரையும் விட்டு ஜீவாவின் சொந்தச் சரக்காக நினைத்து என்மீதான தத்தம் காழ்ப்புணர்வுகளைத் தான்  கொட்டித்தீர்க்கிறார்கள். வாழ்க தம் பணி. :D :D :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதையே நாங்கள் சொன்னால் எமது தகுதி குறித்தும், அருகதை குறித்தும் ஆராயும் அன்பர்கள் பாவம் இமானுவேல் அடிகளாரை என்ன செய்வார்களோ??? துரோகிப்பட்டியலில் ஒரு புது வரவு, பாவம் பிழைக்கத் தெரியாதவர். :(

செய்தி எழுதியவனையும், பேட்டி குடுத்தவரையும் விட்டு ஜீவாவின் சொந்தச் சரக்காக நினைத்து என்மீதான தத்தம் காழ்ப்புணர்வுகளைத் தான்  கொட்டித்தீர்க்கிறார்கள். வாழ்க தம் பணி. :D :D :icon_idea:

இந்த  வரிகளை  உங்களுக்கு  சார்பாக எழுதி

அதை தொடக்கியது  நீங்கள் தானே.......

பின்னர்  எதற்கு  புலம்பல்............ :lol:  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த  வரிகளை  உங்களுக்கு  சார்பாக எழுதி

அதை தொடக்கியது  நீங்கள் தானே.......

பின்னர்  எதற்கு  புலம்பல்............ :lol:  :D  :D

வழமையாக நடக்கும் ஒன்று தானே? யாழும், நீங்களும், ஒருசிலருமே இதில் சாட்சியே?

நீங்கள் எதிர்பார்க்கும் கருத்துக்களைத் தவிர வேறு எந்த வகையில் கருத்து எழுதினாலும் துரோகி,மஹிந்த,ஒட்டுக்குழு முத்திரை குத்தி ஒதுக்குவதோடு ஒவ்வொருவரையும் எதிரியாக்கும் உங்கள் போன்றவர்கள் அடிகளாரையும் இப்போது துரோகி,பஹிந்த கூட்டணி, ஒட்டுக்குழு என்ற வகைக்குள் வகைப்படுத்துவீர்களா என்ற நியாயமான கேள்வியையே நான் கேட்டேன்??? :(:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வழமையாக நடக்கும் ஒன்று தானே? யாழும், நீங்களும், ஒருசிலருமே இதில் சாட்சியே?

நீங்கள் எதிர்பார்க்கும் கருத்துக்களைத் தவிர வேறு எந்த வகையில் கருத்து எழுதினாலும்

துரோகி,

மஹிந்த,

ஒட்டுக்குழு

முத்திரை குத்தி ஒதுக்குவதோடு ஒவ்வொருவரையும் எதிரியாக்கும் உங்கள் போன்றவர்கள் அடிகளாரையும் இப்போது துரோகி,பஹிந்த கூட்டணி, ஒட்டுக்குழு என்ற வகைக்குள் வகைப்படுத்துவீர்களா என்ற நியாயமான கேள்வியையே நான் கேட்டேன்??? :(:icon_idea:

நான்  இவற்றை  எங்கு பாவித்தேன்  என்று  எழுதமுடியுமா???

இன்றைய  சூழ்நிலையைப்பயன்படுத்திக்கொண்டு தாங்கள் செய்யும்  செயல்கள் மூலம்  தாங்களே  தங்களுக்கு ?துபோன்று முத்திரை குத்திக்கொண்டு

பாதுகாப்புத்தேடுவோரே  அதிகம்

அதில்  நீங்களும் இடம் பிடித்துள்ளீர்கள் இந்த வரிகள் மூலம்.

உங்கள்  வயதும்

எமது பொது வாழ்வின்  காலமும்  கிட்டத்தட்ட ஒன்று.

நீங்கள்  எல்லாம் அடிகளார் போன்றோரை  கேள்விப்பட்டவர்கள்

நாம் அவரோடு பயணித்தவர்கள்

அவருடைய இன்றைய பணிகளுக்கு ஒத்தாசையாக  இருப்பவர்கள்

ஆனால்  என்ன  பரிதாபம் என்றால்

போராளிகள்

புலிகள்

பிரபாகரன்...

இவற்றையெல்லாம் கவிதை வழி  நடாத்தியதாக நீங்கள்  குத்துக்கரணம் அடித்தபின்

எதிலும் இனி  ஒட்டாது

தங்கள் கருத்துக்களும் விதைப்புக்களும்............ :lol:

தொடருங்கள்

விடுங்கப்பா விடுங்கோ...   !  பாட்டி எண்டா வடையை சுடுகிறதும் போட்டி எண்டால் ஆளை சுடுகிறதும் வளமைதானே... ?? :D :D :D

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கப்பா விடுங்கோ...   !  பாட்டி எண்டா வடையை சுடுகிறதும் போட்டி எண்டால் ஆளை சுடுகிறதும் வளமைதானே... ?? :D  :D :D

அதில்லையப்பா

யாழைப்பற்றி பேச  இவர்களுக்கு தகுதி  உண்டென்றால்

எனக்கு 100 வீதம்  உண்டு.

தாயகம்  பற்றி  பேச  இவர்களுக்கு உரிமை  உண்டு என்றால்

1000 வீதம் எனக்கு உண்டு

10  லட்சம் புலம்பெயர் மக்களில் 2 பேர்  செய்த  தவறுக்காக

அவ்வளவு பேரையும் கள்ளராக்குவதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்

தாயகம் பற்றிய  இவர்களது தெளிவை.  பற்றை.

யாரோ ஆட்டிவிட ஆடுகிறவரெல்லாம்

தலைவரைப்ப்பற்றி பேசுகிறார்கள் :(  :(  :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.