Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிக்கிறார்கள்!- இடி இடிக்கிறார் இமானுவேல்

Featured Replies

காசு அடித்தவர்களுக்கு கடுப்படிக்கத்தான் செய்யும் .முதல் அத்தனை வியாபார நிலையங்களும் மூட வைக்க வேண்டும் .கனடாவில் அவர்களின் வானொலிக்காக இந்தவாரம் அவர்களே அடிபட தொடங்கிவிட்டார்கள் .லைசன்ஸ் புதிப்பிக்க  மறுத்தால் இல்லாமல் போனாலும் போகும்.

வெற்றி மீது வெற்றி வந்து எம்மை சேரும் .

  • கருத்துக்கள உறவுகள்

.

வெற்றி மீது வெற்றி வந்து எம்மை சேரும் .

 

அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் புலியை சேரும் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான்  இவற்றை  எங்கு பாவித்தேன்  என்று  எழுதமுடியுமா???

இன்றைய  சூழ்நிலையைப்பயன்படுத்திக்கொண்டு தாங்கள் செய்யும்  செயல்கள் மூலம்  தாங்களே  தங்களுக்கு ?துபோன்று முத்திரை குத்திக்கொண்டு

பாதுகாப்புத்தேடுவோரே  அதிகம்

அதில்  நீங்களும் இடம் பிடித்துள்ளீர்கள் இந்த வரிகள் மூலம்.

 

உங்கள்  வயதும்

எமது பொது வாழ்வின்  காலமும்  கிட்டத்தட்ட ஒன்று.

நீங்கள்  எல்லாம் அடிகளார் போன்றோரை  கேள்விப்பட்டவர்கள்

நாம் அவரோடு பயணித்தவர்கள்

அவருடைய இன்றைய பணிகளுக்கு ஒத்தாசையாக  இருப்பவர்கள்

 

ஆனால்  என்ன  பரிதாபம் என்றால்

போராளிகள்

புலிகள்

பிரபாகரன்...

இவற்றையெல்லாம் கவிதை வழி  நடாத்தியதாக நீங்கள்  குத்துக்கரணம் அடித்தபின்

எதிலும் இனி  ஒட்டாது

தங்கள் கருத்துக்களும் விதைப்புக்களும்............ :lol:

தொடருங்கள்

 

இதில் உங்களிடமிருந்தோ,அல்லது வேறு யாரிடமிருந்தோ நான் நற்சான்றுப்பத்திரத்தை எதிர்பார்க்கவில்லை ஆனால் ஒரு கருத்துக்குரிய கருத்தை எழுதுவதை விட்டு கருத்தாளனை முடக்கும் அநாகரீகரீகமான செயற்பாடுகளில் தான் ஈடுபடுகிறீர்கள் அதைத் தக்கவைக்கும் உத்தியாகத் தான் தங்கள் வயதையும்,அனுபவத்தையும் எடுத்துக்கொள்கிறீர்கள். வயதும், அனுபவமும் மட்டும் எப்போதும் சிறந்த சிந்தனைகளை விதைப்பதில்லை அதுக்கு அறிவும் முக்கியம். சின்னஞ்சிறுசுகள் எல்லாம் மிகத்திறமையான கண்டுபிடிப்புக்களில் ஈடுபடுவதும், IQவில் ஐன்ஸ்டீன்,ஒபாமா,டேவிட் கமரூனை விடவும் அதிகமாய் இருப்பது வயதாலும்,அனுபவத்தாலும் வந்த ஒன்று அல்ல.

 

கருத்துமாற்றம் என்பது நடந்துகொண்டே இருக்கும், உங்களைப் போன்றோர் எதிர்பார்ப்புக்கு அமைய உலகமும் இருக்காது ஈழத்தமிழன் நிலமையும் இருக்காது அதற்கு உதாரணமாக இப்படியானவர்களின் அறிக்கைகளையும், தாயகத்து நிலமையையும் நோக்கலாம் இதில் நீங்கள் செல்லும் பாதை சரியா இல்லை நான் செல்லும் பாதை சரியா என்பதைக் காலம் சொல்லும்.

 

அதுவரை உங்களுடன் கருத்தாடுவதையும், உங்களுடன் நட்புப் பாராட்டுவதையும் நிறுத்திக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம். :)

”பிரபாகரனி்ன் இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டியதே இப்போது முக்கியம்!'' [ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 09:48 GMT ] father-immauel.jpgஈழத்தில் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகு திக்கற்று நின்ற ஈழத் தமிழர்கள், இப்போது மிகுந்த மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் உச்சரிக்கும் பெயர்... 'ஃபாதர் இமானுவேல்’. 

கிறிஸ்துவ மத போதகரான இவர், ஈழத் தமிழர் இன ஒழிப்புக்கு எதிராக உலக அரங்கில் நீதி கேட்டுப் போராடும் அறிவாயுதப் போராளி. தன் வலி மிகுந்த‌ எழுத்தினால், ராஜதந்திர‌ப் பேச்சினால், உலக நாடுகளிடையே இவர் மேற்கொள்ளும் 'டிப்ளமேட்டிக்’ வேலைகளால், ராஜபக்ஷேவுக்கு சிம்மசொப்பனமாக மாறி இருக்கிறார் ஃபாதர் இமானுவேல். 80 வயதைத் தொட்டிருக்கும் இமானுவேல், இப் போது ஜெர்மனியில் குருமடம் ஒன்றில் வசித்து வருகிறார்... 

''எப்படி இருக்கிறீர்கள்... உங்களைக் கண்டுபிடிப்பதே பெரிய விஷயமாக இருக்கிறதே!'' 

''ஏதோ இருக்கிறேன்! எம்முடைய புலம்பெயர் வாழ்வும், பாதுகாப்பின்மையும், நீதிக்கான போராட்டமும், தொடர் செயல்பாடுகளும் பெரும்பாலும் எம‌து இருப்பை மறைத்தே வைக்க வேண்டிய அவசியத்தை உண்டாக்கி விட்டது. நான் கிறிஸ்துவ மதத்தில் ரோமிலும் கிழக்காசிய நாடுகளிலும் முக்கிய‌ப் பதவிகளை வகித்தவன். கிழக்காசிய நாடுகளின் கிறிஸ்துவ மதப் பொறுப்பாளராக இந்தியா, பாகிஸ்தான், சீனா, இலங்கை ஆகிய நாடுகளில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். 

'இலங்கை’ எமது தாய்நாடு என்றால், 'இந்தியா’ எமது தந்தை நாடு. ஆனால், ராஜ பக்ஷேவின் அரசாங்கமும் சிங்கள ஊடகங்களும் என்னைப் 'புலி ஃபாதர்’ எனத் தொடர்ந்து தவறான பரப்புரை செய்து வருகிறார்கள். இதனால் இலங்கை, இந்தியாவுக்குள் என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள். இதனாலேயே எனது நடமாட்டங்கள் சுருங்கிவிட்டன. உடல் மூப்பு காரணமாக, சுகவீனமும் அவ்வப்போது என்னை முடக்கிப் போட்டு விடுகிறது!'' 

'''புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் அமைப்புகளும் தங்கள் நலனில் அக்கறைக் காட்டுவது இல்லை’ என்ற குரல்கள் ஈழத்திலிருந்து ஒலிக்கின்றனவே?'' 

''புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் தமிழ் மக்களும் அரசியல் பேசுவது மட்டுமல்ல; தாயகத்தில் வாடும் மக்களுக்கு உதவி செய்யவும் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. செல்வாக்கு உள்ளவர்கள், அங்கு உள்ள நமது உறவுகளைக் குடும்பம் குடும்பமாகத் தத்து எடுக்க வேண்டும். சர்வ சாதாரணமாக செலவழிக்கும் ஐந்து அல்லது பத்து பவுண்ட்களைக் கூட ஈழத்துக்கு அனுப்பலாம். 'ஈழம்’ எனும் வேருக்கு நம்முடைய சிறு உதவிகள்தான் நீர் வார்க்கும் என்பதை புலம்பெயர்ந்த தமிழர்கள் உணர வேண்டும்!'' 

''இந்த இக்கட்டான சூழலில், ஈழத்தில் சாதி பிரச்னைகள் முட்டி முளைப்பதாகக் கிளம்பும் தகவல்கள் உண்மையா?'' 

''உண்மைதான். வருத்தமாக இருக்கிறது. சாதி, மதம், இனம், மொழி என எதன் பேரிலும் மனிதனை மனிதன் அடக்குதலை என்னால் ஏற்க முடியாது. பிரபாகரன், சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும், பெண் விடுதலைக்காகவும் போராடினார். 1960-களில், தமிழகத்தில் தந்தை பெரியார் என்கிற தீர்க்கதரிசி தோன்றி இன சுத்திகரிப்பு செய்தார். அவர் கடவுள் மறுப்பு பேசினாலும், நான் அவரை பெரிதும் மதிக்கிறேன். 

இந்தியாவில் அம்பேத்கர் போன்ற புரட்சியாளர்களும் சாதிக்கு எதிராக தீவிரமானப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இலங்கையில் அப்படியான தலைவர்கள் தோன்றவில்லை. இன்றைய நிலையில், ஈழத் தமிழர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நம்மிடையே இருக்கும் சின்னச் சின்னப் பிளவுகள் கூட ஈழத்தைச் சின்னா பின்னமாக்கி விடும் என்பதை எந்த நொடியும் மறந்து விடாதீர்கள்!'' 

''தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்றோர் ஆரம்பித்த அஹிம்சைப் போராட்டம், அதன் பிறகு 30 ஆண்டு கால‌ஆயுதப் போராட்டம் ஆகிய அனைத்தும் முள்ளிவாய்க்காலில் ஒரு தேக்கத்தை அடைந்தது. இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டு களாக உங்களைப் போன்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கொள்ளும் டிப்ளமேட் லாபி, பொலிட்டிகல் நெட்வொர்க்கிங் ஆகியவை ஈழப் போராட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்லுமா?'' 

''சிங்களப் பேரினவாதத்தின் முன் தந்தை செல்வாவின் அஹிம்சைப் போராட்டமும், புலிகளின் ஆயுதப் போராட்டமும் கை கொடுக்கவில்லை. இது, அநீதிகள் நிறைந்த உலகம். அதுவும் அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, புரட்சிப் போராட்டங்களின் மீது சர்வதேசத்தின் கண்ணோட்டம் மாறியிருக்கிறது. எனவே, இனி அரசியல் போராட்டமே எமக்கான விடுதலையைப் பெற்றுத் தரும் என நம்புகிறோம். 

எங்களுடைய டிப்ளமேட் செயல் பாடுகளின் சோதனை முயற்சிகள், ஐக்கிய நாடுகள் மன்றத்தில் நல்ல பலன் அளித்தது. அதன் வெளிப்பாடே அமெரிக்காவின் இரண்டு தீர்மானங்களும். கடந்த காலங்களில் நாங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, முன்னேற விரும்புகிறோம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களில் இருந்து எம்மைத் திருத்திக்கொள்கிறோம்; மன்னிப்பும் கேட்க விரும்புகிறோம். 

முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நார்வே எனப் பல நாடுகள் எங்களுக்குப் பக்கபலமாக இருக்கின்றன. எங்களின் இந்தச் செயல்பாடுகளுக்கான விளைவுகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்!'' 

''இலங்கையின் வட பகுதிகளில் நடைபெறவிருக்கும் மாகாணத் தேர்தலில், ஈழ அரசாங்கத்தின் அதிகார அழுத்தத்தை மீறி தமிழர்கள் வெற்றி பெறுவார்களா?'' 

''தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் இந்தத் தேர்தலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும் அனைவருக்கும் வாக்குரிமை, முறையான வாக்குப் பதிவு எனத் தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டால், தமிழர்கள் வெற்றி பெறுவார்கள். ராஜபக்ஷே அரசின் மீதான கோபத்தையும், தமிழர்களின் தாகத்தையும் மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்!'' 

''இந்தியா முன்மொழிந்த 13-வது சட்டத்திருத்த மசோதாவை இலங்கை ஏற்க மறுக்கிறது. அதேவேளையில் ஈழத் தமிழர்களும் அதிருப்தி வெளிப்படுத்துகிறார்கள். 13-வது சட்டத் திருத்தத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?'' 

''கடந்த சில தசாப்தங்களாக‌ தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. முள்ளிவாய்க்கால் போரில் விடுதலைப் புலிகளையும் அப்பாவித் தமிழர்களையும் கொன்று குவித்த பிறகு, பான் கீ மூனுக்கும் மன்மோகன்சிங்குக்கும் ராஜபக்ஷே பல வாக்குறுதிகள் கொடுத்தார். ஆனால், அவை எவையுமே செயல்வடிவம் எடுக்கவில்லை. லேண்ட் பவர், போலீஸ் பவர் என எதனையும் இன்று வரை வழங்கவும் இல்லை. 

இந்த நிலையில் எங்களைப் பொறுத்தவரை 13-வது சட்ட திருத்தம் முடிவும் அல்ல; தொடக்கமும் அல்ல. அது எங்களுக்கு எந்த வகையிலும் உதவாது. இலங்கை அரசின் நரித்தந்திர வேலைகளால் இந்தியாவுக்குப் பெரும் சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. சிங்களப் பேரினவாதிகள் தமிழ்மக்களுக்குக் குறைந்தபட்ச நீதியைக்கூட வழங்க மாட்டார்கள்!'' 

''நவம்பர் மாதம் இலங்கையில் காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடைபெற இருக்கிறது. 'மாநாட்டின் முடிவில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே காமன்வெல்த் நாடுகளின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக’ வதந்திகள் உலவுகின்றன... அது உண்மையா?'' 

''அந்த நிலைமை மட்டும் ஒருபோதும் நேர்ந்துவிடக் கூடாது. அது இப்போதைய ஈழத் தமிழர்களின் நிலையை முற்றிலும் மோசமாக்கி விடும். இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை அதன் உறுப்பு நாடுகள் புறக்கணிக்க வேண்டும். இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது. 'ஒருவேளை நீங்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றால், முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையில் நீங்களும் பங்கேற்றதற்கு ஒப்பாகும்’ என கனடாவிடம் விளக்கினோம். 

எங்கள் வார்த்தைகளை செவிமடுத்து, 'கனடா அந்த மாநாட்டில் பங்கேற்காது’ எனச் சொல்லி இருக்கிறார்கள். அதேபோல பிரிட்டன், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிடமும் பேசிக்கொண்டு இருக்கிறோம். அவர்களும் எமக்குச் சாதகமான முடிவை எடுப்பார்கள் என நம்புகிறோம்!'' 

''நீங்கள் பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்ததாக தகவல்கள் உண்டு. பிரபாகரன் இறந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது எந்த அளவுக்கு உண்மை?'' 

''1986-ல் நான் யாழ்ப்பாண குருமடத்தில் பேராசிரியராக இருந்தபோது ஒருமுறை பிரபாகரனைச் சந்தித்தேன். அதன் பிறகு 1991-ம் ஆண்டு என்னை அவர் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார். அப்போதும் சந்தித்தேன். அந்த இரண்டு சந்திப்புகளுமே எமது தாயகம் குறித்தும், மக்களின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதிலேயே மையம் கொண்டது. அதன் பிறகு, நான் இலங்கையில் இருந்து வெளியேறி விட்டேன். 

'பிரபாகரன் இருக்கிறாரா?’ என்ற கேள்வி எமக்கு இப்போது முக்கியமானதாகத் தெரியவில்லை. அவர் பெயரைச் சொல்லி சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள். பிரபாகரனைக் காட்டிலும், அவரின் லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே இப்போது முக்கியம்!'' 

- இரா.வினோத் 
- ஆனந்த விகடன் (07 Aug, 2013)

/puthinappalakai

 

இன்னொரு தளத்தின் தலையங்கம் 

Edited by Gari

காசு அடித்தவர்களுக்கு கடுப்படிக்கத்தான் செய்யும் .முதல் அத்தனை வியாபார நிலையங்களும் மூட வைக்க வேண்டும் .கனடாவில் அவர்களின் வானொலிக்காக இந்தவாரம் அவர்களே அடிபட தொடங்கிவிட்டார்கள் .லைசன்ஸ் புதிப்பிக்க  மறுத்தால் இல்லாமல் போனாலும் போகும்.

வெற்றி மீது வெற்றி வந்து எம்மை சேரும் .

 

நீங்கள் எல்லாம் இந்தியாவிலை நிண்டு பாட்டிகளுக்கு போன காசு எப்பிடி வந்தது எண்டதை எப்பவாவது எங்களுக்கு சொல்லி இருக்கிறீயளோ...?? 

 

6000 பேருக்கு சாப்பாடு,  இலங்கையிலை இருந்து இந்தியா போக படகு பெற்றோல் எல்லாம் நீங்கள் எல்லாம் உழைச்ச காசிலை வந்தது...??  

 

 

 

ஏன்ம்பா...?  ஒருவேளை செலவை குறைக்க தான் ஆக்களை போட்டு தள்ளினீங்களோ...?? 

Edited by தயா

போதகர் கதைப்பதும் நான் கதைப்பதும்  புலம் பெயர்ந்த கொள்ளையர்களை பற்றி.

கொஞ்சம் அறிவை வளர்க்க முயற்சி செய்தால் வாசித்து விளங்க என்றாலும்  வசதியாக இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

போதகர் கதைப்பதும் நான் கதைப்பதும்  புலம் பெயர்ந்த கொள்ளையர்களை பற்றி.

கொஞ்சம் அறிவை வளர்க்க முயற்சி செய்தால் வாசித்து விளங்க என்றாலும்  வசதியாக இருக்கும் .

 

 

உங்களுக்கு

புலிகள்

பிரபாகரன்

அதன் ஆதரவாளர்கள் மொக்கு கூட்டங்கள்

அஞ்சு சதத்துக்கு பெறுமதியற்றவர்கள்

அவர்கள் குறித்து நீங்கள்  எதற்கு இவ்வளவு அழுகின்றீர்கள்???

என்னவாவது செய்துவிட்டு போகட்டுமே..... :(

தமிழனாக அவர்களுக்கு சற்று அறிவு ஊட்டுவதும் எனது கடமை என நினைக்கிறேன்.

தமிழனின் விடிவுக்கு பெரும் தடையாக இருந்தது ,இருப்பது அவர்கள் தான் என்று நூறு வீதம் நம்புகின்றவன் நான் .

போதகர் கதைப்பதும் நான் கதைப்பதும்  புலம் பெயர்ந்த கொள்ளையர்களை பற்றி.

கொஞ்சம் அறிவை வளர்க்க முயற்சி செய்தால் வாசித்து விளங்க என்றாலும்  வசதியாக இருக்கும் .

 

நானும் சொல்லுறது புலம் பெயந்து இந்தியாவுக்கும் அதே காசிலை கனடாவுக்கும் புலம்பெயந்தவையை பற்றி தான்...   80 களிலையும் 90 களிலையும் செய்தால் பிழை இல்லையோ...??  மக்களை ஏமாத்தினதிலை எந்த பாகுபாடும் இல்லை...  

 

கொள்ளைக்காறரிலை நல்லவை கெட்டவை எண்டு இருக்கா...??  

 

மற்றவனை பாத்து கையை காட்டினால் நீங்கள் நலவராகிவிடுவீர்களோ.....  எல்லாம் ஒண்டுதான்...  ! 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அடிகளார் எதுவும் தவறாகச் சொல்லி விட வில்லை.30 வருடமாக போராட்டத்துக்காக சிலுவை சுமநத்த தலைவர் மீண்டும் வந்து போராட்டதை ஆரம்பிப்பார்.அதுவரை நாம் எதுவும் செய்யத் தேவையில்லை என்று கூறுவோருக்கான பதிலாகவும்.தலைவர் இருக்கிறாரா?இல்லையா என்ற கேள்விக்குரிய பதிலைத் தவிர்க்கும் முகமாகவுமே அந்தப்பதில் வழங்கப்பட்டிருக்கிறது.இப்பொழுது நமது வேலை தலைவரின் இலட்வியத்தை அடைவதற்குரிய இராஜ தந்திர ரீதியிலான போராட்டமாக இருக்க வேண்டும் என்பதே அந்த வசனத்தின் சாரம்சம்.மற்றும்படி தவைர் இல்லையென்றோ இருக்கிறார் என்றோ அந்தப் பேட்டியில் குறிப்பிடவில்லை.மதகுருவுக்கும் மக்களுக்காமான இடைவெளியை அதிகரிப்பதற்கான தலையங்கமே அது.சிலருக்கு அந்தத் தலையங்கம் பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை. 'பிரபாகரன் இருக்கிறாரா?’ என்ற கேள்வி எமக்கு இப்போது முக்கியமானதாகத் தெரியவில்லை. அவர் பெயரைச் சொல்லி சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள். பிரபாகரனைக் காட்டிலும், அவரின் லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே இப்போது முக்கியம்!''

  • கருத்துக்கள உறவுகள்

உடலில் காயம் பட்டால் இரண்டு வித நடவடிக்கைகளை மேற்கொள்வது வழமை. 1) காயத்துக்கு மருந்து போட வேண்டும்.. 2) மீண்டும் காயம்படுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்..

 

போரினால் பாதிக்கப்பட்ட மக்களை நிமிர்த்தி எழுப்புவது முதலாவது நடவடிக்கை.. அதற்காக இரண்டாவது நடவடிக்கை தேவையில்லை என்று அர்த்தமல்ல..

 

மீண்டும் மீண்டும் அடிவாங்கி காயம் படாமல் இருப்பதை உறுதி செய்யும் தீர்வு ஒன்று எமக்குத் தேவை.. இதற்காக இந்தியா எமக்குச் சொல்லித்தரும் தீர்வு மாகாணசபை. மாகாணசபை இருந்தால் தமிழர்கள் சம உரிமையுடன் வாழலாம் என்கிறார்கள்.. இன அழிப்பு நிகழாது என்கிறார்கள்.. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டையே ஏனைய சர்வதேச நாடுகளும் எடுத்துள்ளன.. அதாவது

 

1) 1987 இலேயே இலங்கைப் பிரசினைக்கு ஒரு தீர்வு கண்டாகிவிட்டது.. ஆனால் இடையில் புகுந்து விடுதலைப் புலிகள் அமைப்பு அதைக் குழப்பி விட்டார்கள்..

 

2) அதனால் இனங்களிடையே நல்லிணக்கம் கெட்டுவிட்டது.. அந்த நல்லிணக்கத்தை மீள் உருவாக்கிவிட்டால் பாதிப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

 

இந்தக் காலகட்டத்தில் தமிழீழமே தீர்வு என்று அடித்துச் சொல்வதற்கு எம்மிடம் அரசியல் / இராணுவ பலம் இல்லை.. ஆகவே பொறுத்திருக்க வேண்டியிருக்கிறது.. இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில்கூட சுணக்கத்தைக் காட்டி வருகிறது.. அதாவது இராணுவ பிரசன்னத்தைக் குறைத்தல் போன்றவை..

 

மாகாண சபை அதிகாரத்தைக் கூட குறைப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்கிறது.. ஆகவே இலங்கை அரசு எந்தத் தீர்வையோ, அல்லது நிவாரணத்தையோ வழங்காது என்று ஒரு கருத்துருவாக்கம் ஏற்பட்டு அதன் வாயிலாக இலங்கை குறித்த கொள்கையில் சர்வதேச மாற்றம் ஏற்பட்டால் தவிர எமக்கான பிரியோசனமான தீர்வு ஒன்று கிடைக்கப்போவதில்லை..

 

நான்காண்டுகள் கழிந்த நிலையில், நேரத்தை நன்றாகக் கடத்திக்கொண்டு வருகிறது இலங்கை அரசு.. இனப்பரம்பலை மாற்றுவது, மாகாண சபை தேர்தலை நடத்தி அதை ஒரு செல்லாக்காசாக வைத்திருப்பது.. இராணுவ பிரசன்னத்தைக் குறைப்பது போல் நாடகம் ஆடுவது போன்ற செயல்கள் தொடர்கின்றன.. இன்னும் எவ்வளவு காலத்துக்கு சர்வதேசத்தின் பொறுமையைத் தமிழர்கள் தாங்கிக்கொள்ள வேண்டும்?

 

இதற்கான சுலபமான விடை என்று ஒன்று இல்லை.. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.. நாரதர் கலகம் எப்பவும் நன்மையிலேயே முடியும்.. :D

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.