Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெலிவேரியவில் ஊடகவியலாளர்கள் பலர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டனர்

Featured Replies

 இராணுவத்தினர், வெலிவேரிய மனித வேட்டைக்கு முன்னர், ஆர்ப்பாட்டத்தை செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற ஊடகவியலாளர்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதுடன் ஊடகவியலாளர் சிலர் மீதும் தாக்குதல் மேற்கொண்டு அவர்களது புகைப்படக் கருவிகள் மற்றும் கெமராக்களை சேதப்படுத்தியுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த ஆர்ப்பாடத்தின் போது ஊடகவியலாளர்கள் சிலரும் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், காயமடைந்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் இராணுவத்தினால் சுற்றிவளைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் காரணமாக வெலிவேரிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் சிக்கியுள்ளதுடன் இராணுவம் அங்கிருந்து வெளியேறும் வரை அந்த வீட்டில் ஒளிந்திருந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் குடிநீரில் நச்சு இரசாயனம் கலப்பது தொடர்பான விவகாரம் குறித்து தீர்வொன்றைப் பெற்றுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டதத்தில் ஈடுபட்ட பிரதேச மக்கள் மற்றும் அங்கு செய்தி சேகரிப்பதற்குச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாகவும் சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளதுடன், இந்த செயலானது இலங்கை மக்கள் சமூகத்தை இராணுவமயமாக்கும் செயற்பாடுகளின் ஒரு அங்கத்தின் ஓர் கசப்பான உதாரணம் எனவும் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடக இயக்கத்தின் இணைப்பாளர் சுனுல் ஜயசேகர மற்றும் அதன் செயலாளர் குமார் அழகியவன்ன ஆகியோரினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டவை வருமாறு,

அதிகாரிகளினால் தீர்வுகிடைக்காததன் காரணமாக தமது அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஜனநாயக ரீதியில் கிடைக்கப்பெற்ற போராட்ட உரிமைக்கு அமைய ஆகஸ்ட் 1ம் திகதி வீதிகளுக்கு இறங்கி வெவ்வேறு மூன்று பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட மக்களும் மற்றும் அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களும் மிலேச்சத்தனமான இராணுவ வேட்டைக்கு ஆளாகியுள்ளனர்.

கொழும்பு கண்டி பிரதான வீதியின் ஒருதொட்ட சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை கலைப்பதற்காக முதலாவதாக தாக்குதல் மேற்கொண்டுள்ள இராணுவத்தினர் அந்த வீதியின் பெலும்மஹர சந்தியில் இரண்டாவது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

ஒருதொட்ட சந்தியிலுள்ள வீடொன்றின் கூரை மீது புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ‘அத” பத்திரிகையின் ஊடகவியலாளரை கீழே இறக்கி அவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் அவர் கடுமையாக காயமடைந்துள்ளார். அத்துடன் அவரது புகைப்படக் கருவியையும் சேதப்படுத்தியுள்ளனர்.

தொடர்ச்சியாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் உச்சக்கட்டமான ஆறாம் நாளான நேற்று வெலிவேரிய சந்திக்கு பிரவேசித்த இராணுவத்தினர் உயர்ந்த இடத்தில் இருந்து செய்தி சேகரிப்பதற்காக ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் மீது பாய்ந்து அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் அவர்களை செய்தி சேகரிக்க விடாது அந்த பகுதியிலுள்ள ஒரு வீட்டில் போட்டு அடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதான வீதியில் ஏற்பட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு உச்ச அளவில் தமது பலத்தைப் பயன்படுத்திய இராணுவம், தனது அடிப்படை கோரிக்கையான சுத்தமான குடிநீரை வழங்குமாறு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு உயிர்களைக் கொல்லுவது மற்றும் தாக்கி காயப்படுத்துவதானது, இராணுவ ஆட்சியொன்றின் அடித்தளத்தை சுட்டி நிற்பதுடன், ஜனநாயக ரீதியாக மக்களின் உரிமைகளையும் கருத்து சுதந்திரத்தையும் மதித்து நடக்கும் ஒரு ஜனநாயக ஆட்சிமுறைமையின் ஒரு வடிவமாக இது அமையவில்லை.

இந்த ஜனநாயக விரோத மனித அடக்குமுறை மற்றும் ஊடகச் சுதந்திர மீறல்களை தவிர்ப்பதற்காக இந்த நாட்டிலுள்ள அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுப்பதில் எவ்வித பலனும் இல்லையென தெரிவதுடன், இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் மற்றும் ஊடகச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் மக்களும் சிவில் அமைப்புக்களும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான காலம் தற்போது வந்துள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.http://goldtamil.com/?p=3914

வெலிவேரிய சம்பவத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர் - ஜே.வி.பி சந்தேகம்! 

[Friday, 2013-08-02 17:06:10]
Vijitha_Herath_020813_seithy_150.jpg

வெலிவேரிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் 05 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது என ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றைய சம்பவத்தில் 16 வயதான கஹந்தவ ஆராச்சிலாகே தேன் அகில தினேஷ் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பொலிஸாரும், வைத்தியசாலை தரப்பினரும் சரியான தகவல்களை வழங்குவதில்லை.

தமது உறவினர்கள், பிள்ளைகள் வீடுகளுக்கு வரும் வரை பிரதேச மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். அந்த பிரதேசத்தில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. இராணுவ தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தாக்குதலுக்கு பின்னர், வீட்டில் இருந்தவர்கள் வீதிக்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர்.

ரத்துபஸ்வல மக்கள் குடிக்க குடிநீர் கேட்டு பல நாட்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அன்றாட பவணைக்காகவும் குடிக்கவும் அவர்கள் சுத்தமான தண்ணீரை கேட்டனர். தண்ணீர் கேட்ட மக்களுக்கு அரசாங்கம் இராணுவத்தின் ஊடாக துப்பாக்கி, பெட்டன் பொல்லுகள் மூலம் தாக்குதல் நடத்தி பதிலளித்தது.

போராட்டம் நடத்திய மக்களின் கை, கால்களை உடைத்து இறுதியில் கொலை செய்துள்ளது. இராணுவம் நடத்திய இந்த மிலேச்சத்தனமான தாக்குதலையும் கொலையையும் ஜே.வி.பி வன்மையாக கண்டிக்கின்றது. அத்துடன் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்திற்கு அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறது என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=89049&category=TamilNews&language=tamil

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனைத் தாக்கி, இரத்தம் குடித்த குடித்த....
இந்தியா,சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பயிற்சி பெற்ற.. சிங்கள ராணுவம்,
தனது முகாமிற்குள் நெடுக முடங்கிக் கிடக்காது. அது, வெளியே... வந்து தன் இனத்தையே.. கடித்துக் குதறும் நாள், வெகு தொலைவில் இல்லை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை எல்லாமே சரியாகவே நடக்கின்றது, அவர்கள் தங்கள் நிகழ்சிநிரலைத் தாங்களே தயாரிக்கிறார்கள் அளவுக்குமிஞ்சி வீங்கியிருக்கும் தமிழர்க்கெதிரான இனவாதம், செல்வழிதெரியாது எதோவொரு பக்கத்தால் வெந்தபுண்ணாக சீழ்பிடித்து வெம்பி வெடிக்கின்றது. சிலவேளை இது சிகிச்சை செய்யமுடியாத வியாதியாகவுமாகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 வயதான கஹந்தவ ஆராச்சிலாகே தேன் அகில தினேஷ் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்
மீண்டும் இளைஞர்கள் பலிகாடாவாகப்போகின்றார்கள் கிழடுகள் ஜாலியாக ஜனநாயக அரசியல் நடத்தப்போகின்றார்கள்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் இளைஞர்கள் பலிகாடாவாகப்போகின்றார்கள் கிழடுகள் ஜாலியாக ஜனநாயக அரசியல் நடத்தப்போகின்றார்கள்

 

முதலில்.... தமிழ் ஒட்டுக்குழு கிழவர்களும், இளைஞர்களும் தான்... பலியாவார்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்.... தமிழ் ஒட்டுக்குழு கிழவர்களும், இளைஞர்களும் தான்... பலியாவார்கள். :icon_idea:

 

இதை தடுப்பதற்கு புலத்தில் உள்ள எம்போன்ற :D இளைஞர்கள் அணிதிரள வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இதை தடுப்பதற்கு புலத்தில் உள்ள எம்போன்ற :D இளைஞர்கள் அணிதிரள வேண்டும்

 

அணி.... திரண்டால்... போச்சுது. புத்தன்.

முதல்லை... எல்லா, ஒட்டுக்குழுக்களையும்..., தமிழனை, சிங்களவ‌னுக்கு... காட்டிக் குடுத்து, வயிறு வளர்க்காமல் இருக்க...

ஆராவது, புத்திமதி சொல்ல வேணுமே....

கடைசீலை... சிங்களவனுக்கும், சோனகனுக்கும் வக்காலத்து வாங்கிய... ஒட்டுக்குழுக்களால்... தமிழனும் கெட்டான். **************

இப்ப... முழிஞ்சு கொண்டு... புலி வாந்தி எடுக்கிறாங்கள்.

 

*****************

வாயிலை... கனக்க துப்பல் வருது....

ஆனால்.... மரியாதை நிமித்தமாக, துப்ப மாட்டேன். :D  :lol:

 

 

நியானி: சில சொற்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன

Edited by நியானி

இதை தடுப்பதற்கு புலத்தில் உள்ள எம்போன்ற :D இளைஞர்கள் அணிதிரள வேண்டும்

 

புத்தம் சரணம் கச்சாமி என்று அணிதிரள வேண்டும்.  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.