Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அக்கரை மாடொன்றின் கவிதை...

Featured Replies

8787285115_2b3772b2e4_z.jpg

பழஞ்சோற்றிலும் பழைய மீன்குழம்பிலும் இருந்த ருசி,
இங்குள்ள பீட்சாவிலும் பர்கரிலும்  இல்லை!
நாட்டுக்கோழி... நம்நாட்டு நாட்டாடுபோல...
கென்டுக்கியும் மக்டொனால்டும்  இல்லவே இல்லை!!

அழகான காரிலிங்கு  சொகுசாக சுற்றினாலும்,
ஊரிலுள்ள தெருவெல்லாம்...
சைக்கிள் மிதித்துத் திரிந்ததுபோல்
சந்தோசமாயில்லை...!
பெட்டிக்கடையில் மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டால்,
வாய்மட்டுமா இனிக்கும்...?!
முழு மனசுமே சேர்ந்தினிக்குமே!

கிடைச்ச நேரமெல்லாம்

கந்தப்புவின்ர காணியில

விளையாடி மகிழ்ந்த கிரிக்கெட்டினை

நேரடி அலைவரிசையில்

பார்க்கமட்டுந்தான் முடிகிறது...

இரசிக்க முடியவில்லை!

அதிகாலை சுப்ரபாதத்தையும்
திருவெண்பா காலச் சங்கொலியையும்
அதிகாலைத் தூக்கத்திலும்
இரசித்த மனதுக்கு ...இப்பொழுதெல்லாம்,
வேலைகெழுப்பும்  அலாரம்
அவஸ்தையாய் இருக்கிறது!

இங்கையும் கோயில் இருக்கு... !
திருவிழாவும் நடக்குது...!?
ஆனால் ஊர்க்கோயில் திருவிழாவுக்கு
ஊர்ப்பெடியளோட போனதையும்,
சாமியைப் பார்க்காமல்
சாறிகட்டி வந்த பள்ளித் தோழிகளை
பார்த்து ரசிச்சதையும்
இப்பவும் நினைச்சு   ஏங்குது மனசு...!

நல்லெண்ணெய் வைத்து நன்றாக
இழுத்துக்கட்டிய  ரெட்டைப்பின்னலிலும்
எண்ணெய் வடியும்  சிரித்த முகத்திலும்
தெரிந்த பேரழகுக்கு நிகராய்,
இங்கு அலங்காரப்படுத்தப்பட்ட முகங்கள்
அழகாய்த் தெரியவில்லை!

அரும்புமீசை முளைக்க முன்னரே
அரும்பிய முதற் காதலையும்,
கொடுக்கப்படாத காதல் கடிதங்களையும்...
காலம் எனும் கறையான் அரித்துவிட்டாலும்,
இப்பொழுதும் அரும்புகின்ற நினைவுகள்...
குறுந்தாடியை விரல்களால்
மெதுவாக வருடத்தான் செய்கின்றது.

ஊரில் பட்டம்விட்டுத் திரிந்த சின்னப்பையன்...
இன்று நூலறுந்த பட்டம்போல,
எங்கோ ஒரு தேசத்தின் மூலையில்
'அகதி' என்ற பெயரோடும்...
அழகான ஊரின் அழியாத ஞாபகங்களோடும்!

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை இது நல்ல கவிதை !

நான் இப்பொழுதும் கூட வீட்டில் நிற்கும் நாட்களில் சனிக்கிழமை நன்றாக நல்லெண்ணெய் வைத்து முழுகுவதும், தினமும் காலையில்  பழஞ்சோறு சாப்பிடுவதும் வழக்கம் ! :D   

  • கருத்துக்கள உறவுகள்

பழைய நினைவுகள் உங்கள் கவிதை கண்டு பெருமூச்சோடு வருகின்றன கவிதை.

கவிதை நல்ல கவிதை

நடந்து வந்த பாதை .......................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்கரைக்கு அக்கரை பச்சை. அங்கு இருப்பவர்களுக்கு வெளிநாடு சொர்க்கமாகத் தெரியும், இங்கை வந்த பின் ஊர் நல்லாகத் தெரியும் அப்படி இருந்தும் நாம் ஊருக்குப் போகப்போவதில்லை போனலும் நாங்கள் இருந்த காலத்தில் இருந்தது போல ஊரும்,நட்புக்களும் கூட இருக்கப் போவதில்லை. ஒரு வேளை போனால் நினைக்கலாம் இங்கை இருப்பதற்கு வெளிநாடு பரவாயில்லை என்று. ஆரம்பத்தில் இங்கு வந்தவர்களும் இங்கு பிறந்த பிள்ளைகளும் புலம்பெயர் சூழலுக்கு ஏற்ப இசைபாக்கம் அடைந்து விட்டார்கள் இடையில் வந்தவர்கள் தான் இப்படி எதுக்கும் ஒட்டாமல் இரண்டும் கெட்டான் வாழ்க்கை வாழ்க்கிறார்கள்.

எல்லாப் புகழும் அந்த இறைவனுக்கே. :rolleyes:

வாழ்த்துக்கள் நல்லதொரு விடையத்தைக் கவிதையாக்கியுள்ளீர்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆக்கம். இரண்டும் கெட்டான் மனநிலை ஆசைகள் கொண்ட எல்லா மனிதருக்குள்ளும் உள்ளது. :)

ஆரம்பத்தில் இங்கு வந்தவர்களும் இங்கு பிறந்த பிள்ளைகளும் புலம்பெயர் சூழலுக்கு ஏற்ப இசைபாக்கம் அடைந்து விட்டார்கள் இடையில் வந்தவர்கள் தான் இப்படி எதுக்கும் ஒட்டாமல் இரண்டும் கெட்டான் வாழ்க்கை வாழ்க்கிறார்கள்.

எல்லாப் புகழும் அந்த இறைவனுக்கே. :rolleyes:

வாழ்த்துக்கள் நல்லதொரு விடையத்தைக் கவிதையாக்கியுள்ளீர்கள். :)

அப்படிச் சொல்ல முடியாது. இங்கு பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளி தலைமுறை இந்தியாவிற்குத் திரும்புகிறது. பாகிஸ்தானியர்களிலும் அப்படி உண்டு.

எங்கள் தேசத்தையும்.. பிரபாகரன் போல யாரேனும் வந்து தங்களை கொடுத்து சிங்கப்பூராக ஆக்கிவிட்டால் நம்மவரும் போவார்கள்..! ஆனால் தாங்களா தங்கள் தேசத்தின் தரத்தை உயர்த்த மாட்டார்கள்..! அடுத்தவன் உயர்த்தி வைத்த இடத்தில் தங்கள் இருப்பை வசப்படுத்திக் கொள்வதில் மட்டுமே எம்மவர்கள் குறியாக இருக்கின்றனர்..!

மற்றும்படி.. இரண்டும் கெட்டான் மனநிலை ஆசையுள்ள எல்லோருக்குள்ளும் உள்ளது. வெள்ளைகள் கூட பல நாடுகளுக்கு குடிபெயர்ந்து போகிறார்கள்..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையென்பது உணர்ச்சிகளின் வடிகால் என்று கூறுவார்கள்!

நான் முதன் முதலில் வாசித்த 'கவிதையின்; கவிதையில் ,ஒரு விதமான 'இழப்பின்' ஏக்கம் தெரிந்தது!

பின்னர், அந்த இயல்பான 'ஏக்கம்' தொலைந்து போக, ஆதங்கங்களும், ஒரு விதமான இயலாமையும்,'தன்னிரக்கமும்'கவிதைகளில் பிரதிபலித்தன!

இன்றைய 'கவிதையில்' மீண்டும் பழைய கவிதையைக் காண்கிறேன்! மிக்க மகிழ்ச்சி!

தன் உணர்வுகளை, வெல்பவன் வாழ்க்கையை வென்றவனாகின்றான்! நீண்ட பயணம் எனினும், கடந்துவந்த ஒவ்வொரு காலடிச் சுவடுகளின் கீழும், வலிகள் மறைந்திருக்கும்!

காலம் வரும்போது பகிர்ந்து கொள்ளுங்கள், கவிதை!  :D

  • தொடங்கியவர்

கவிதை இது நல்ல கவிதை !

நான் இப்பொழுதும் கூட வீட்டில் நிற்கும் நாட்களில் சனிக்கிழமை நன்றாக நல்லெண்ணெய் வைத்து முழுகுவதும், தினமும் காலையில்  பழஞ்சோறு சாப்பிடுவதும் வழக்கம் ! :D   

எங்கள் ஊர் உணவு  வழக்கங்கள் ருசியானவை மட்டுமல்ல... மருத்துவரீதியாக உடலுக்கு மிகவும் உகந்தவையும் கூட.  நானும் என்னால் முடிந்தவரைக்கும் ஊர்ச் சாப்பாடு மாதிரியே இருக்குமாறு பார்த்துக்கொள்வேன்.

குத்தரிசிப் பழஞ்சோறு எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு சாப்பாடு. :)

கருத்துக்கு மிகவும் நன்றி சுவியர்! :)

  • தொடங்கியவர்

பழைய நினைவுகள் உங்கள் கவிதை கண்டு பெருமூச்சோடு வருகின்றன கவிதை.

மறக்கக் கூடியவையா அவை??? ஊர் நினைவுகள் எப்பொழுதும் பசுமையானவை அக்கா! :)

  • தொடங்கியவர்

கவிதை நல்ல கவிதை

மிக்க நன்றி கரன் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படிச் சொல்ல முடியாது. இங்கு பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளி தலைமுறை இந்தியாவிற்குத் திரும்புகிறது. பாகிஸ்தானியர்களிலும் அப்படி உண்டு.

எங்கள் தேசத்தையும்.. பிரபாகரன் போல யாரேனும் வந்து தங்களை கொடுத்து சிங்கப்பூராக ஆக்கிவிட்டால் நம்மவரும் போவார்கள்..! ஆனால் தாங்களா தங்கள் தேசத்தின் தரத்தை உயர்த்த மாட்டார்கள்..! அடுத்தவன் உயர்த்தி வைத்த இடத்தில் தங்கள் இருப்பை வசப்படுத்திக் கொள்வதில் மட்டுமே எம்மவர்கள் குறியாக இருக்கின்றனர்..!

மற்றும்படி.. இரண்டும் கெட்டான் மனநிலை ஆசையுள்ள எல்லோருக்குள்ளும் உள்ளது. வெள்ளைகள் கூட பல நாடுகளுக்கு குடிபெயர்ந்து போகிறார்கள்..! :icon_idea::)

இந்தியர்,பாகிஸ்தானியரைப் பொறுத்தவரைக்கும் அவர்களுக்கு என்று சொந்தமாக நாடு ஒன்று உள்ளது

அவர்கள் இங்கு பிறந்திருந்தாலும் தமது தொடர்புகளை ஊட்டியே வளர்க்கிறார்கள் ஆனால் எம்மவர்கள் தான் தாய்மொழியில் பேசுவதை அவமானமாகக் கருதுபவர்களே அதிகம். அதை விட அவர்கள் தம் நாடுகளுக்குத் திரும்பினாலும் கல்வி, பொருளாதாரத்தை முதலீடு செய்யக் கூடிய வாய்ப்பு உள்ளது ஆனால் இலங்கையைப் பொறுத்தவரைக்கும் இதுவரைக்கும் அப்படி ஒரு சூழல் அமையப்பெறவில்லை.

எங்களுடைய சமுதாயத்தைப் பொறுத்தவரைக்கும்  அனேகமான இடங்களில் கல்வி,திருமணம், போடும் உடைகளில் இருந்து அத்தனையும் முடிவெடுக்கும் உரிமையைப் பெற்றோர்கள் தான் வைத்திருக்கிறார்கள், அவர்களுடைய கனவுகளைச் சுமக்கும் இயந்திரங்களாகத்தான் பிள்ளைகள் வளக்கப்படுகிறார்கள். அப்பாவின் வைத்தியர் கனவு பலிக்கவில்லையாயின் அது பிள்ளைக்குத் திணிக்கப்படும் பிள்ளையாலும் முடியாவிடின் பிள்ளையின் பிள்ளைக்கு என்ற வகையில் தான் தமிழரின் வாழ்க்கைச்சக்கரம் பின்னப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்துக்கு அடுத்து இல்லை கீழ்மட்ட அரச உத்தியோகங்களை விட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெருமைக்குரியது என்று கருதும் நிலைப்பாடு மாறும் வரைக்கும்  தமிழினத்தைப் பொறுத்தவரை இந்த நிலை மாறப்போவதில்லை. அது இலங்கையோ அல்லது ஈழமோ சிங்கப்பூரென்ன அதற்கும் மேல் வளர்ந்தாலும்   நடக்கப் போவதில்லை.

எல்லா இனங்களிலும் முற்போக்குவாதிகள், தாயகம் மீதான அளவுக்கதிகமான பற்றுடைய சிலர் திரும்பவர் ஒட்டுமொத்தச் சனமும் திரும்பும் என்பது எம்மினத்தைப் பொறுத்தவரைக்கும் நடக்காத ஒரு விடையமே.

அடுத்து வெள்ளைகள் கூடப்புலம்பெயர்ந்திருக்கிறார்கள் உண்மை தான் ஆனால் அவர்கள் தமது சொந்த நாடுகளுடனான அன்னியோன்னியத்தை முறித்துக் கொண்டவ்களாக என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிய்வில்லை. அவ்ர்கள் தமது சந்ததிகளுகு தமது மொழி,கலை,கலாச்சாரங்களைக் கற்றுக்கொடுப்பதோடு தமது நாட்டவரைக் காணும் போதெல்லாம் வாஞ்சையுடன் தமது தாய் மொழியிலேயே உரையாடுகிறார்கள். உதாரணத்திற்கு இங்கு துருக்கி இனத்தவர் அதிகம் அவர்கள் தங்களை ஒரு குழுமமாகவே கட்டமைத்து வைத்துள்ளார்கள் குறித்த பிரதேசமே அவர்கள் தான் அதிகம் இருப்பார்கள் தவிரவும் அவர்கள் தமது கடைகளிலேயே பொருட்கள் வாங்குவதையும் தமது நாடினரை வளர்த்து விடுவதிலுமே முனைப்புக் காட்டுகிறார்கள், எம்மவரைப் பொறுத்தவரை இப்படியான விடையங்களில் சொல்லவும் வேண்டுமா

அதே போல இத்தாலியர் பலர் என்ன தான் அந்தந்த நாட்டு சொகுசுக்கார்கள் இருந்தாலும் தமது நாட்டு தயாரிப்பான ஆல்பாரோமியோ,பியட் போன்ற கார்களைத்தான் பாவிக்கிறார்கள்.  அவர்கள் புலம்பெயர்ந்திருந்தாலும் கூட தமது தாயகதின் நீட்சிகளாகவே இருக்கிறார்கள் அவ்ர்களை எம்முடன் ஒப்பிடுவது வேடிகையான ஒன்று அண்ணா. :icon_idea:

  • தொடங்கியவர்

நடந்து வந்த பாதை .......................

நடந்து வந்த பாதைகள் முட்கள் நிறைந்ததாகவே இதுவரையும் தொடர்ந்துகொண்டிருக்கு.

அதற்காக பூக்கள் நிறைந்த பாதைதான் வேண்டுமென்றில்லை. முட்கள் குறைவாக இருந்தாலே போதும். பார்க்கலாம் எதிர்காலம் என்ன சொல்கின்றதென்று.... :)

  • தொடங்கியவர்

இக்கரைக்கு அக்கரை பச்சை. அங்கு இருப்பவர்களுக்கு வெளிநாடு சொர்க்கமாகத் தெரியும், இங்கை வந்த பின் ஊர் நல்லாகத் தெரியும் அப்படி இருந்தும் நாம் ஊருக்குப் போகப்போவதில்லை போனலும் நாங்கள் இருந்த காலத்தில் இருந்தது போல ஊரும்,நட்புக்களும் கூட இருக்கப் போவதில்லை. ஒரு வேளை போனால் நினைக்கலாம் இங்கை இருப்பதற்கு வெளிநாடு பரவாயில்லை என்று. ஆரம்பத்தில் இங்கு வந்தவர்களும் இங்கு பிறந்த பிள்ளைகளும் புலம்பெயர் சூழலுக்கு ஏற்ப இசைபாக்கம் அடைந்து விட்டார்கள் இடையில் வந்தவர்கள் தான் இப்படி எதுக்கும் ஒட்டாமல் இரண்டும் கெட்டான் வாழ்க்கை வாழ்க்கிறார்கள்.

எல்லாப் புகழும் அந்த இறைவனுக்கே. :rolleyes:

வாழ்த்துக்கள் நல்லதொரு விடையத்தைக் கவிதையாக்கியுள்ளீர்கள். :)

உண்மைதான் ஜீவா.... ஊரிலுள்ள சில நண்பர்களுடன் ஃபோனில் பேசும்பொழுது ஊரைப்பற்றிக் கேட்டால்,

இப்போதெல்லாம் முன்னம்போல் இல்லை என்றுதான் சொல்வார்கள்.

புலம்பெயர்வுகளோடு... இப்போதைய சூழ்நிலைகளும் ஊரை முற்றுமுழுதாக மாற்றிவருகிறது. மீண்டும் ஊருக்கு போகக் கிடைத்தால், அதே பழைய இனிமை இருக்கும் என்பது சந்தேகமே.

மிக்க நன்றி ஜீவா :)

  • தொடங்கியவர்

நல்லதொரு ஆக்கம். இரண்டும் கெட்டான் மனநிலை ஆசைகள் கொண்ட எல்லா மனிதருக்குள்ளும் உள்ளது. :)

உண்மைதான் நெடுக்ஸ்... மனித மனமே இப்படித்தான். ஒன்றை விட ஒன்று சிறப்பானதாகத் தெரியும்.

கருத்துக்கு மிக்க நன்றி :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.