Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அல் கெய்தாவின் மீள் எழுச்சியும் அமெரிக்காவின் அதிர்ச்சியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பின் லாடனின் கொலையில் முக்கிய பங்கு வகித்தவரும் சிஐஏயின் முன்னாள் அதிபரும் முன்னாள் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலருமான லியோன் இ பானெற்றா 2011 ஜுலையில் "We are within reach of strategically defeating AL-Qaeda" தந்திரோபாய ரீதியில் நாம் அல்-கெய்தாவைத் தோற்கடிக்கும் நிலையை அண்மித்துவிட்டோம்" எனப் பாக்கிஸ்த்தானில் வைத்துக் கூறினார்.

2011 மே மாதம் அல் கெய்தாவின் தலைவர் பின் லாடன் கொல்லப்பட்டார் ஆப்கானிஸ்த்தானிலும் யேமனிலும் பல அல் கெய்தாவின் முன்னணித் தலைவர்கள் அமெரிக்காவின் சிஐஏயின் ஆளில்லா விமானங்களால் கொல்லப்பட்டனர். அத்துடன் அல் கெய்தாவினரின் தொடர்பாடல்கள் மிகவும் தடைப்பட்டிருந்தது. அவர்களின் தொடர்பாடல் கருவிகளை வைத்து அவர்களின் இருப்பிடங்களை அறிந்து அமெரிக்கா அவர்களைத் தாக்கி அழித்தது.

ஆனால் இப்போது அல் கெய்தாவின் தாக்குதல்களுக்குப் பயந்து அமெரிக்கா ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் உள்ள தனது 19 இராசதந்திர நிலையங்களை மூடிவிட்டது. தனது குடிமக்களை வட ஆபிரிக்க நாடுகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பயணம் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளது. ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளும் தமது பல தூதுவரகங்களை மூடியுள்ளன. அல் கெய்தாவின் இரு தலைவர்களான ஐமன் அல் ஜவாஹிரியும் நாசர் அல் வுஹவ்ஷியும் செய்த தொடர்பாடலை ஒற்றுக் கேட்ட அமெரிக்க உளவாளிகள் அல் கெய்தா அமைப்பு வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்த திட்டமிட்டிருப்பதாக 04/08/2013 ஞாயிற்றுக் கிழமை அறிவித்தனர். நடத்த விருக்கும் தாக்குதல்கள் 2001 செப்டம்பர் 11-ம் திகதி நடாத்திய இரட்டைக் கோபுரத் தாக்குதல் போல் மோசமானதாக இருக்கும் என அமெரிக்க உளவுத் துறை அறிவித்தது. இந்தத் தாக்குதல் நடக்கும் இடம் போன்ற முக்கியமான தகவல்களை அமெரிக்க உளவுத் துறையால் பெறமுடியாத அளவிற்கு அவர்கள் மறைமுக வார்த்தைகள் பாவித்திருந்தனர். இப்போது அல் கெய்தா தோற்கடிக்கப்படவில்லை அதன் தாக்குதல் உத்திகள்தான் தோற்கடிக்கப்பட்டன என்கின்றனர் அல் கெய்தாவைத் தொடர்ந்து அவதானிக்கும் படைத்துறை விமர்சகர்கள். அமெரிக்க உளவுத் துறையின் அறிவிற்பிற்கு சில தினங்களுக்கு முன்னர் ஈராக்கிலும் பாக்கிஸ்த்தானிலும் பல அல் கெய்தாப் போராளிகள் சிறைகளை உடைத்துக் கொண்டு வெளியேறிவிட்டனர்.

புதிய மனித வெடி குண்டுகள்

அல் கெய்தாவினர் ஒரு புதிய வெடிகுண்டுகளை உருவாக்கியுள்ளனர் என்கிறது அமெரிக்க உளவுத் துறை. அக் குண்டுகள் ஈரமான வெடிக்கக் கூடிய பதார்த்தத்தில் தோய்த்து எடுக்கப்படும். அந்த ஆடை உலர்ந்தவுடன் அந்தப் பதார்த்தம் வெடிக்கும். இந்த வகைக் குண்டுகள் விமான நிலையங்களில் தற்போது உள்ள ஒளி வருடிகளால்(Scanners) கண்டறிய முடியாதவையாகும். இக்குண்டுகளை அல் கெய்தாவின் இப்ராஹிம் அல் அசிரி என்னும் நிபுணர் உருவாக்கியுள்ளார்.

அல் கெய்தா மீள் எழுச்சி பெற்றது எப்படி?

2011 செப்டம்பரில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவின் மிகத்தீவிரமான கண்காணிப்பில் அல் கெய்தா கொண்டுவரப்பட்ட பின்னர் அல் கெய்தாவால் எந்தவித இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகளையும் பாவிக்க முடியாமல் போனது. அவற்றை வைத்து அவர்களின் இருப்பிடங்களை அறியும் தொழில் நுட்பம் அமெரிக்காவிடம் இருந்தது. இதனால் அல் கெய்தாவின் தலைமைக்குத் தொடர்பாடல் பிரச்சனை இருந்தது. எப்போதும் கொரில்லா இயக்கத்தின் முக்கிய பிரச்சனையே தொடர்பாடல்தான். இதனால் அல் கெய்தா ஒரு புதிய உத்தியைக் கையாண்டது. பின் லாடன் இருக்கும் போதே அவர் தனது இயக்கத்தை ஒரு franchise(தன்னிச்சைக்கிளை) இயக்கமாக மாற்றிவிட்டார். அதன் படி அல் கெய்தாவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தமது நடவடிக்கைகளை தமது எண்ணப்படி மேலிடத்தின் கட்டளைக்குக் காத்திராமல் செய்ய முடியும். முக்கியமான தன்னிச்சைக் குழுக்கள்:

1. ஈராக்கில் அல் கெய்தா -Al Qaeda in Iraq (AQI),

2. அரபுக் குடாநாட்டில் அல் கெய்தா- இது யேமலின் செயற்படுகிறது. -the Yemen-based AL Qaeda in the Arabian Peninsula (AQAP),

3. இசுலாமிய மக்ரெப்பில் அல் கெய்தாAL Qaeda in the Islamic Maghreb (AQIM)

ஆகியவை தற்போது முக்கியமாகச் செயற்படும் அல் கெய்தாவின் கிளை அமைப்புக்களாகும்.

இவற்றில் 2012இல் அதிக முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக அரபுக்குடாநாட்டு அல் கெய்தா(AQAP) செயற்பட்டது. அமெரிக்க ஆளில்லா விமானங்களும் இவர்களை இல்க்கு வைத்தே அதிக தாக்குதல்களை மேற்கொண்டன. 2013இன் ஆரம்பத்தை இசுலாமிய மக்ரெப்பில் அல் கெய்தாAL Qaeda in the Islamic Maghreb (AQIM) அல்ஜீரிய பணயக் கைதிகள் மூலம் தனதாக்கிக் கொண்டது. மேற்கு நாடுகளையும் அதன் நண்பர்களையும் அது 2013 ஜனவரி மூன்றாம் வாரம் கலங்கடித்துவிட்டது. Maghreb என்பது வட மேற்கு ஆபிரிக்காக் கண்டத்தைக் குறிக்கும். இதில் எகிப்து, லிபியா, மொரொக்கோ, அல்ஜீரியா துனிசியா, மாலி ஆகியவை அடங்கும். அல்ஜீரியப் பணயக் கைதிகள் விவகாரம் அல் கெய்தா மீளவும் எழுச்சியடைந்து விட்டதா என்ற கேள்வியை எழுப்பினாலும் காத்திரமான அல் கெய்தாவின் செயற்பாடு மாலியின் வட பிராந்தியம் முழுவதையும் அல் கெய்தா இயக்கம் துவாரெக் இனக்குழும விடுதலை இயக்கமான அன்சார் டைனுடன் இணைந்து கைப்பற்றியதுடன் வெளிப்பட்டது. மாலியின் வட பிராந்தியம் முழுவதையும் அல் கெய்தா அன்சார் டைன் இயக்கத்துடன் இணைந்து கைப்பற்றியதுடன் மேலும் தெற்கு நோக்கி துரித கதியுடன் முன்னேறத் தொடங்கியது. பின்னர் பிரான்ஸ் தனது படைகளை மாலிக்கு அனுப்பி அல் கெய்தாவிடம் இருந்து பல பகுதிகளை மீட்டது. பிரான்ஸ் மாலியில் தாக்கி பின்னர் அல்ஜீரியாவில் இயற்கை வாயுத் தொழிற்சாலையில் 132 வெளிநாட்டவர் உட்பட 600 பேர் பணயக் கைதிகளா அல் கெய்தாவினால் சிறை பிடிக்கப்பட்டனர். இதில் ஆச்சரியம் கொடுக்கும் அம்சம் அல் கெய்தாவின் புனித போராளிகள் இயற்கை வாயுத் தொழிற்சாலையில் பணிபுரிந்தார்கள் என்பதே.

ஈராகில் ஜபத் அல் நஸ்ரா

ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக தீவிரவாதத் தாக்குதலை நடாத்திய அல் கெய்தா இயக்கத்தின் ஒரு அங்கமான ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினர் ஈராக்கில் இருந்து சிரியா சென்று அங்குள்ள கிளர்ச்சிக் காரர்களுடன் இணைந்து போராடுகின்றனர். இவர்கள் பல தற்கொலைத் தாக்குதல்களையும் நடாத்தியுள்ளனர். 2009இல் ஈராகில் உள்ள அல் கெய்தாவினரை முற்றாக அழித்து விட்டதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனால் அமெரிக்கா ஈராக்கில் இருந்து வெளியேறிய பின்னர் அல் கெய்தா அங்கு ஜபத் அல் நஸ்ரா என்னும் பெயரில் மீள வளர்ந்து கொண்டிருக்கிறது.

திறந்து விட்ட பாக்கிஸ்த்தான்

பாக்கிஸ்த்தானிய அரசு பல அல் கெய்தா சந்தேக நபர்களை அண்மையில் சிறையில் இருந்து விடுவித்திருந்தது. அதில் முக்கிய மாக அல் கெய்தாவின் நிபுணரும் தற்கொலைத் தாக்குதல் பயிற்ச்சியாளருமான முஹம்மட் நயீம் நூர் கானை விடுவித்தது வாசிங்டனையும் இலண்டனையும் ஆத்திரத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. இவர் கைது செய்யப்பட்ட போது இவரின் மடிக்கணனியில் பிரித்தானியாவின் முக்கிய விமான நிலையமான ஹீத்ரூவைத் தாக்கும் திட்டம் அகப்பட்டது.

அல் கெய்தாவின் விளை நிலமாகும் எகிப்து

அரபு வசந்தமும் அதனால் மூன்று ஆட்சியாளர்கள் சடுதியாக பதவியில் இருந்து அகற்றப்பட்டமை அல் கெய்தாவை மிகவும் அதிச்சிக்குள்ளாக்கியிருந்தது. குறிப்பாக எகிப்தில் அமெரிக்காவிற்கு வேண்டியவரான ஹஸ்னி முபராக்கை மக்கள் தம் எழுச்சியின் மூலம் பதவியில் இருந்து விரட்டியது அவர்கள் எதிர்பாராத ஒன்று. அரபு நாடு ஒன்றில் தங்கள் பங்களிப்பு எதுவுமின்றி பெரும் அரசியல் நிகழ்வு நடந்ததை அவர்களை அதிர வைத்தது. ஆனால் இப்போது இசுலாமிய மதவாத அமைப்பான இசுலாமிய சகோதரத்துவ அமைப்பும் அமெரிக்க சார்பு எகிப்தியப் படைத்துறையும் மோதுவதை அல் கெய்தா மிகவும் மகிழ்ச்சியுடன் அவதானிக்கின்றனர். எகிப்தியப் படைத்துறை இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் மீது வன்முறையை தொடரத் தொடர அவர்கள் தம்மைப் போல் மிகவும் தீவிரவாதிகளாக மாறித் தம்முடன் இணைவார்கள் என நம்புகிறது. இசுலாமிய சகோதரத்து அமைப்பைப் பார்த்து வாக்குச் சீட்டின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதிலும் பார்க்க புனிதப் போரின் மூலம் ஆட்சியை கைப்பற்றுங்கள் என்கிறது அல் கெய்தா.எகிப்தில் இப்போது பலர் அல் கெய்தாவில் இணையத் தொடங்கி விட்டார்கள்.

சிரியாவை ஆட்டிப்படைக்கும் அல் கெய்தா

சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களில் அமெரிக்க சார்புடையவர்களுக்கு தேவையான படைக்கலன்களை அமெரிக்கா வழங்கவில்லை. ஆனால் அமெரிக்காவிற்கு எதிரான கொள்கையுடைய கிளர்ச்சிக்காரர்களிடம் சிறந்த படைக்கலன்களும் போதிய பணமும் புளக்கத்தில் இருக்கின்றன. இதனால் பல கிளர்ச்சிக்காரர்கள் அமெரிக்காவில் அதிருப்தியடைந்து அல் கெய்தாவினருடன் இணைந்தனர்.

லிபியாவில் வளரும் அல் கெய்தா

லிபியாவில் தளபதி மும்மர் கடாஃபியை பதவியில் இருந்து விரட்டிக் கொன்ற பின்னர் பல இனக் குழுமங்களுக்கு இடையிலான மோதல்கள் வலுவடைந்துள்ளன. இதனால் பலர் அல் கெய்தாவில் இணைகின்றனர்.

துனிசியாவில் மீண்டும் கலவரம்

அரபு வசந்தத்தின் முன்னோடிகளான துனிசிய மக்கள் இப்போது மீண்டும் கிளர்ந்து எழுந்து உள்ளனர். புரட்சியைத் தொடர்ந்து அங்கு மதவாத அரசு ஆட்சிக்கு வந்ததது அது ஒரு ஆண்டுக்குக்குள் புதிய அரசமைப்பை உருவாக்கி அதன் படி தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் ஓர் ஆண்டு முடிந்து எட்டு மாதங்கள் கடந்து விட்டன. இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது துனிசிய அரசு.அங்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர். அங்கும் அல் கெய்தா தனது உறுப்பினர்களை அதிகரிக்கிறது.

நீலக் கண் அல் கெய்தா

சிரியாவில் அல் கெய்தாவில் போராடும் ஐரோப்பிய இளைஞர்கள் இருவரைப் பேட்டி கண்ட அமெரிக்க ஊடகம் ஒன்று நீலக் கண் அல் கெய்தா என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை வெளிவிட்டிருந்தது. அதில் பல ஐரோப்பாவில் பிறந்த இசுலாமியர்கள் தமது நாட்டில் இருந்து சிரியா சென்று அல் கெய்தாவில் இணைந்து போராடுகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடரும் தீவிரவாதத் தாக்குதல்கள்

அரபு வசந்தம் ஏற்பட்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சிகளும் பாக்கிஸ்த்தானில் ஆளில்லாப் போர்விமானத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டமையும் அல் கெய்தாவின் வளர்ச்சிக்கு உரமூட்டுகின்றன. இனிவரும் சில ஆண்டுகளில் பல தீவிரவாதத் தாக்குதல்கள் உலகின் பல மூலைகளில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

http://veltharma.blogspot.com.au/2013/08/blog-post_7.html?spref=fb&m=1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் போராட்டம் கூட இப்பிடி ஒருநாள் மீலெலாம் யார் கண்டது....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் போராட்டம் கூட இப்பிடி ஒருநாள் மீலெலாம் யார் கண்டது....

 

சுண்டுவும் தலைவராகலாம் யார் கண்டது :lol::icon_idea:

யாழில் ஒருவர்:- மொக்கு கூட்டம் போராடி அழிஞ்சது போதாதா?

மற்றவர் : .நீங்கள் எல்லாம் சொகுசா வெளிநாட்டில் இருந்து கொண்டு அங்குள்ள மக்களை போராட்டம் எண்டு பலி கொள்ளுங்கோ. 
அடுத்தவர்:-  இனி சண்டை எல்லாம் சரிவராது நாங்கள் இந்தியா சொல்வதை கேட்டு நடந்தா வாழலாம் 
இப்பிடியே  இந்த திரி முடிஞ்சுடும் சுண்டல்  :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

 

யாழில் ஒருவர்:- மொக்கு கூட்டம் போராடி அழிஞ்சது போதாதா?

மற்றவர் : .நீங்கள் எல்லாம் சொகுசா வெளிநாட்டில் இருந்து கொண்டு அங்குள்ள மக்களை போராட்டம் எண்டு பலி கொள்ளுங்கோ. 
அடுத்தவர்:-  இனி சண்டை எல்லாம் சரிவராது நாங்கள் இந்தியா சொல்வதை கேட்டு நடந்தா வாழலாம் 
இப்பிடியே  இந்த திரி முடிஞ்சுடும் சுண்டல்  :icon_idea:

 

 

இவை 3 தாம் ஒரு விடுதலைப் போராட்டத்தை கருவழிக்க ஆட்சியாளர்களால் பாவிக்கப்பட்டும் முக்கிய கருத்துக்கள். அதனை யாழில் பிரதிபலிக்க சிலர் இருப்பது ஒன்றும் புதிதல்ல யாழ் அன்பு. நாங்கள் தமிழர்கள் விடுதலை அடையனும் என்ற இலட்சியத்தில் உறுதியாக இருந்தாலும்.. இவ்வாறான பிரச்சாரங்களை ஆட்சியாளர்களின் அவர்களின் அடிவருடிகளின் நகர்வுகளை எல்லாம் தாண்டித்தான் அடைய முடியும்..! இவற்றைக் கண்டு மனம் பேதலிப்பது தான் ஆட்சியாளர்களுக்கு வெற்றியே தவிர இந்த 3 வகை பிரச்சாரங்களும் நம்மை நோக்கி வீசப்படுகின்றன என்ற தெளிவே மக்கள் போராட்டம் பற்றிய நல்ல தெளிவில் இருக்கிறார்கள் என்று இனங்காட்டப் போதுமானது.

 

தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் ஆக்கிரமிப்புக்களுக்குள் இருந்தும் போராடிய நீண்ட வரலாற்றைக் கொண்டவர்கள். அவ்வளவு இலகுவில்.. ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகளுக்கு பலியாகமாட்டார்கள். அதுவும் வகையான இப்படியான சூழ்ச்சிகளுக்கு..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இவை 3 தாம் ஒரு விடுதலைப் போராட்டத்தை கருவழிக்க ஆட்சியாளர்களால் பாவிக்கப்பட்டும் முக்கிய கருத்துக்கள். அதனை யாழில் பிரதிபலிக்க சிலர் இருப்பது ஒன்றும் புதிதல்ல யாழ் அன்பு. நாங்கள் தமிழர்கள் விடுதலை அடையனும் என்ற இலட்சியத்தில் உறுதியாக இருந்தாலும்.. இவ்வாறான பிரச்சாரங்களை ஆட்சியாளர்களின் அவர்களின் அடிவருடிகளின் நகர்வுகளை எல்லாம் தாண்டித்தான் அடைய முடியும்..! இவற்றைக் கண்டு மனம் பேதலிப்பது தான் ஆட்சியாளர்களுக்கு வெற்றியே தவிர இந்த 3 வகை பிரச்சாரங்களும் நம்மை நோக்கி வீசப்படுகின்றன என்ற தெளிவே மக்கள் போராட்டம் பற்றிய நல்ல தெளிவில் இருக்கிறார்கள் என்று இனங்காட்டப் போதுமானது.

 

தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் ஆக்கிரமிப்புக்களுக்குள் இருந்தும் போராடிய நீண்ட வரலாற்றைக் கொண்டவர்கள். அவ்வளவு இலகுவில்.. ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகளுக்கு பலியாகமாட்டார்கள். அதுவும் வகையான இப்படியான சூழ்ச்சிகளுக்கு..! :icon_idea:

 

நன்றி   நெடுக்கு

அத்தனையும்  உண்மை

முகங்கள்  தெரியும் காலமது

நாமே   எதிர்பாராத பல முகங்களை  நாம்  தற்பொழுது சந்தித்து பார்த்து எதிர்  கொண்டு நிற்கின்றோம்

சிலர்  முகம் தெரிந்ததும  ஓடியும்  விட்டனர்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

 

தொடர்பாடலை ஒற்றுக் கேட்ட அமெரிக்க உளவாளிகள்

 

 

இங்கே மறைமுகமாக மிக முக்கியமான ஒரு விடயத்தை அமெரிக்கா சொல்கின்றது. சில வாரங்களிற்கு முன் உளவு வேலைகள் பற்றி அனல்பறக்கும் விவாதங்கள் நடந்தன. அத்தோடு நிற்காமல் Snowden விவகாரமும் கிளம்பியது. 

 

இதற்கு உள்நாட்டிலயே எதிர்புகள் வெளிவந்தன. இந்த நடவடிக்கைக்கு பின்னர் எதையும் அமெரிக்கா ஒட்டுக்கேட்கலாம் என்பதையே மறைமுகமாக சொல்லியுள்ளது. ஓட்டுக்கேட்டதால் தான் இப்படியான சம்பவங்களை நிறுத்தமுடிந்தது என்ற ஒரு மாயையை உருவாக்கிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரையில் இன்னொரு முக்கியமான இடத்தை விட்டு விட்டனர். அது அப்கானிஸ்த்தான். ரெட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா மிகப் பெரும் எடுப்புடன் உள்நுழைந்த நாடு அப்கானிஸ்த்தான். இன்று ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் வந்த வேலை முடியுமுன்னரே அங்கிருந்து போதுமடா சாமி என்று வெளியேறத் தொடங்குகிறது. சுமார் 7 ஆயிரம் படைவீரர்களையும் பில்லியன் கணக்கான டொலர்களையும் செலவிட்டு எதுவுமே சாதிக்கமுடியாமல் அமெரிக்கா இன்று வெறுங்கையுடன் நாடு திரும்புகிறது. அது அழிக்க வந்த தலிபானும், அல்கொய்தாவும் (ஒசாமாவையும் இன்னும் சில தளபதிகளையும் தவிர) இன்னும் உயிர்ப்புடனிருக்க அமெரிக்கா புறமுதுகு காட்டி வெளியேறுகிறது.

 

அண்மையில் ஆப்கானிஸ்த்தான் தேர்தல் பற்றிக் கருத்து வெளியிட்ட தலிபான் தலைவர் முல்லா ஓமார் தமது நோக்கம் பற்றி மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். அதாவது அமெரிக்கா முறாக வெளியேறியவுடன் முழு ஆப்கானிஸ்த்தானும் தமது பூரண் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படும் என்றும், இஸ்லாமிய மத அடிப்படையில் ஒரு ஆட்சி ஸ்தாபிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். இதில் இன்னொரு அர்த்தமும் அடங்கியிருக்கிறது. அதாவது எந்த அல்கொய்தாவுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள் என்று கூறி தலிபான்களை அழிக்க அமெரிக்கா வெளிக்கிட்டதோ அதே தலிபான்கள் மீண்டு அங்கே வரப்போகிறார்கள். அவர்களுன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் அங்கே முகாம் அமைக்கவிருக்கிறார்கள். ஆக, ஆப்கானிஸ்த்தான் மீண்டும் ஒருமுறை உலக இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் விதை நிலமாக மாறப்போகிறது. 2001 இல் இருந்ததைக் காட்டிலும் மிகவும் பலமாக, ஆக்ரோஷமாக அது அங்கே வளரப்போகிறது.

 

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கிற போர்வையில் முட்டாள்த்தனமாக அனைத்து போராட்ட இயக்கங்களையும் அழித்த புஷ் என்கிற உலக முட்டாளின் செய்வினை இப்போது மிகப்பலத்துடன் அவனது நாட்டுக்கெதிராகவும் அவனை நம்பிய அமைப்புகள் அரசுகளுக்கெதிராவும் திரும்பப்போகிறது.

அமெரிக்கா வெளியேறும் முதல் நாள் மே 19,2009 மாதிரி வெடி கொழுத்துவார்கள். பின்னர்  வெலவேரியா, ஆகஸ்டு 2013 மாதிரி இங்கே இப்படி என்றால் வடக்கில் எப்படி என்பார்கள். 

 

புஸ் போன நோக்கத்தை விட்டுவிட்டு ஈராக்கில் உள்ளட்டு எல்லாவற்றையும் பழுதாக்கினார். ஆனால் அமெரிக்க பொருளாதரம் ஓரளவு இப்போது நிலை நிறுத்தபட்டுவிட்டது. ஒபாமா பதவி விலக முதல் அது பழைய நிலைமைக்கு திரும்பும்.  மத்திய கிழக்கில் வசந்தம் இனி பல ஆண்டுகள் தொடர்ந்து ஓடும்.  அது ஓடி அடங்க அமெரிக்கா திரும்ப தயாராகிவிடும். 

 

அதன்பின்னர் ஐரோபாவில் அல்லது அமெரிக்காவில் புகுந்து அலகைடா எதையாவது செய்தால் அந்த நாடுக்கு அடிவிழும். இனி எல்லாவற்றிலும் ஒரேயடியாக கைவைத்து பிழை விட மாட்டார்கள். 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தலிபான்களின் மீள் எழுச்சி எங்களுக்குக் கூறும் செய்தி ஒன்றிருக்கிறது. அதாவது ஆக்கிரமிப்பிற்குள் வாழ்ந்துவரும் ஒரு சமூகம் காலப்போக்கில் அந்த ஆக்கிரமிப்பிற்கெதிராக போராடும், அந்த ஆக்கிரமிப்பை எதிர்க்கும் அமைப்பிற்கு உதவும் என்பது. 

 

அதேபோல இந்த மீள் எழுச்சிக்கும் எமது போராட்டத்திற்குமிடையே பல வேறுபாடுகளும் உள்ளன. இவை உள் மற்றும் புறக் காரணிகளில் பெரிதும் தங்கியிருக்கின்றன என்பதுதான் அது. 

 

தமிழ் இயக்கங்களை தனது ஆதாயத்திற்காக இந்திய அரசு அன்று பாவித்து அவர்களுக்கு ஆயுத, பயிற்சி மற்றும் தார்மீக ஆதரவு என்று கொடுத்ததைப் போல, ச்சொவியத் - அப்கான் போரின் போது அமெரிக்காவின் ஆசியுடம் பாக்கிஸ்த்தான் முஜாகிதீன்களுக்கு ஆயுத, பயிற்சி, தார்மீக ஆதரவென்று வழங்கிவந்தது. இதற்கு பாக்கிஸ்த்தானுடனான ஆப்காணிஸ்த்தானின் நிலத்தொடர்பும், இஸ்லாம் என்கிற மதமும், எல்லையின் இரு மருங்கிலும் வாழும் ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தைப் பேணும் மக்களின் செல்வாக்கும் காரணமாகவிருந்தது.ஆனால் சோவிய ராணுவம் 88 இல் அங்கிருந்து வெளியேற பிரிந்துபோன முஜாகிதீன்கள் தங்களுக்கு மோதிக்கொண்டார்கள். இதில் குல்புடீன் ஹெக்மட்யார் எனும் தளபதி தலமையிலான குழுவுக்கு ஆதரவு வழங்கிய பாக்கிஸ்த்தான்,ளாகமத் ஷா மசூத் எனும் மேற்குலகின் செல்லப்பிள்ளையான வடக்கு முண்ணனியின் தளபதிக்கு எதிராக போரிடும்படி வேன்டிக்கொண்டது. இறுதியில் தனது முயற்சியில் தோற்றுவிட்ட பாக்கிஸ்த்தான், சோவியத் போரில் அகதிகளாக வெளியேறி பாக்கிஸ்த்தானில் தங்கியிருந்த் பல லட்சக்கணகான மக்களிடமிருந்து தனக்கு விசுவாசமான அமைப்பொன்றை உருவாக்க நினைத்தது. பள்ளிகளிலும், மதராசாக்களிலும் இஸ்லாமிய அடிப்படைசவாதம் ஊட்டப்பட்டு வந்த இளைய தலைமுறையொன்றைத் தேர்ந்தெடுத்த பாக்கிஸ்த்தானிய இராணுவமும் அதன் உளவுத்துறையும் "தலிபான்கள்" எனும் முல்லாக்காரர்களை உருவாக்கியது. அப்போது பாக்கிஸ்த்தானின் இராணுவ புலநாய்வுத்துறையின் அதிபராகவும் பின்னர் இராணுவத்தளபதியாகவும், இறுதியில் ரெட்டைக் கோபுரத் தாக்குதல் காலத்தில் பாக்கிஸ்த்தானின் சனாதிபதியாகவுமிருந்த ஜெனரல் முஷாரப்பே தலிபான்களின் உருவாக்கத்திற்கு முக்கியமானவராக இருந்தார். 

 

2001 இற்குப்பின்னர் அமெரிக்காவுக்கு வெளிப்படையாக ஆதரவு வழங்கினாலும் கூட பாக்கிஸ்த்தான் தொடர்ந்தும் தலிபான்களுக்கும் அல்கொய்தா அமைப்பிற்கும் தொடர்ந்தும் ஆதரவும் அடைக்கலமும் கொடுத்து வந்தது. அமெரிக்க ஆக்கிரமிப்பின்போது பல்லாயிரக்கணக்கான தலிபான் தளபதிகள் போராளிகள் பாக்கிஸ்த்தானின் பாதுகாப்பில் அடைக்கலம் புகுந்தனர். இவர்களுடன் அல்கொய்தா தலைவர்களும் (ஒஸாமா உற்பட) அங்கே முகாமிட்டனர். இவை அனைத்தையும் தெரிந்துகொண்டே பாக்கிஸ்த்தான் செய்தது. இதனால் பலமுறை அமெரிக்க அதிகாரிகளுக்கும் பாக்கிஸ்த்தான் இராணுவத்துக்குமிடையே கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 

 

தற்போது அமெரிக்காவின் நிழலின்பின்னால் இந்தியா காபூலில் முகாமிட்டிருக்கிறது. அமெரிக்காவின் ஆசியோடு அது தற்போதைய ஹமிட் கர்ஸாயின் அரசுக்கு இராணுவ உதவியும் பொருளாதார உதவியும் செய்துவருகிறது. இதனாலேயெ பலமுறை இந்தியத் தூதரகம் தலிபான்களின் தாக்குதலுக்கு உள்ளானது. அதுமட்டுமல்லாமல் சோவியத் காலத்தில் முஜாகிதீன்களுக்கு எதிராக சோவியத்தின் பொம்மையாக செயற்பட்ட அன்றைய அதிபர் நஜிபுள்ளா தான் கொல்லப்படுவதற்கு முன்னலர் தன்னை இந்தியாவுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டதும் நினைவிருக்கலாம்.  

 

இந்தியா ஆப்கானிஸ்த்தானில் தலையெடுப்பதை பாக்கிஸ்த்தான் பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. அதனால் அமெரிக்க வெளியேறியவுடன் நிச்சயமாக பாக்கிஸ்த்தானும் அங்கே காலூன்றும். இந்தியாவுக்கு கடையைப் பூட்டுவதைத்தவிர வேறு வழியில்லை.

 

ஆனால் எமக்கு அடைக்கலம் புகுவதற்கோ அல்லது உலக ஆதரவைப் பெறுவதற்கு அடிப்படைவாத மதமோ இருக்கவில்லை. 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

இங்கே மறைமுகமாக மிக முக்கியமான ஒரு விடயத்தை அமெரிக்கா சொல்கின்றது. சில வாரங்களிற்கு முன் உளவு வேலைகள் பற்றி அனல்பறக்கும் விவாதங்கள் நடந்தன. அத்தோடு நிற்காமல் Snowden விவகாரமும் கிளம்பியது. 

 

இதற்கு உள்நாட்டிலயே எதிர்புகள் வெளிவந்தன. இந்த நடவடிக்கைக்கு பின்னர் எதையும் அமெரிக்கா ஒட்டுக்கேட்கலாம் என்பதையே மறைமுகமாக சொல்லியுள்ளது. ஓட்டுக்கேட்டதால் தான் இப்படியான சம்பவங்களை நிறுத்தமுடிந்தது என்ற ஒரு மாயையை உருவாக்கிவிட்டார்கள்.

 

தலிபான்களின் மீள் எழுச்சி எங்களுக்குக் கூறும் செய்தி ஒன்றிருக்கிறது. அதாவது ஆக்கிரமிப்பிற்குள் வாழ்ந்துவரும் ஒரு சமூகம் காலப்போக்கில் அந்த ஆக்கிரமிப்பிற்கெதிராக போராடும், அந்த ஆக்கிரமிப்பை எதிர்க்கும் அமைப்பிற்கு உதவும் என்பது. 

 

கான்சி மாமூத் போன்றவர்களில் ஆரம்பித்து வட இந்தியா 1000 வருடங்களாக அடிமையாக இருந்திருக்கு. அந்த சரித்திரத்திரத்தில் இந்திய சுதந்திர போர் ஒன்றுதான் அங்கு நடந்த விடுதலைப் போராட்டம். நாங்கள் போதுக்கீசரால் கைப்பற்றப்பட்டோம். பின்னர் வெள்ளைகள் வந்து 1900களில் நாம் அடக்கு முறைய உணராமல் வாழ அரம்பித்துவிட்டோம். இது சிங்களவர் ஆட்சிக்கு வந்த போது பலத்த அபத்தத்தை உண்டாகியது. ஜி.ஜி. பொன்னம்பலம் பிரபாகரனாக இருந்திருந்திருந்தால் சரித்திரத்தில் பாரிய மாற்றம் இருந்திருக்கும். ஆனாலும் சமுதாயம் அடக்கு முறையை எதிர்த்துப் போராடுகிறது என்பதிலும் பார்க்க தனிமனித புரட்சிப் போராட்டம் தான் இங்கே நடந்தது. நாம் தமிழரசுக்கு கட்சிக்கு (அதாவது விடுதலைக்கு)வாக்களிப்பதை ஒரு போதும் நிறுத்தியது கிடையாது. அதாவது ஆக்கிரமிப்பை எதிர்த்தோம். நமது பண்பாடு எதிர்பார்ப்பது அல்லாமல் போராடுவது குறைவு.  நமது சரித்திரங்களில் இராசாக்களின் உண்மையான  அடக்கு முறைகள் இருந்ததில்லை. நாம் முல்லைக்கு  தேர்கொடுத்த பாரி கதை, மனுநீதி கண்டவனின் கதை, சிபியின் புறாக் கதை, ஆராச்சி மணி கட்டி வைத்திருந்த எல்லாளனின் கதைகளைதான் அரச குமாரர்களுக்கும் படிப்பவர்கள்.  நாம்  நமது பண்பாடாக அதைத்தான் ஆட்சியாளர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். இதில் புலிகள் ஒரு வித்தியாசமான சிந்தனை கொண்ட இயக்கமாக உருவெடுத்திருந்தது. கட்ட பொம்மன், பண்டாரவன்னியன் பொன்ற சில தனிப்பட்டவர்களின் ஆர்வத்தால் அது விளைந்தது. அண்ணா, பெரியார் கூட இப்படி தனிப்பட்ட மக்கள். இது அடக்கு முறையை எதிர்த்து போராடும் உண்மையான சமூதாயம் அல்ல. 

 

தலிபான் உண்மையான அடக்குமுறையை எதிர்த்துப் போராடும் மக்கள் அமைப்பு அல்ல. இவைகள் எல்லாமே தீவிரவாதங்கள். 1/100 முஸ்லீம் பெண்கள் தன்னும் தலிபான் அடக்குமுறையை வேண்டி அமெரிக்க அடக்குமுறையை எதிர்த்து போராடமாட்டார்கள். இந்த இடத்தில், கவனிக்கத்தக்கது,  நாம் வெள்ளைகள் அரைகுறை நீதியாக ஆண்ட போது எதிர்த்துப் போராடவில்லை, பதிலாக உத்தியோகம்தான் கேட்டுப் பெற்று வந்தோம். அதை விட எத்தனையோ மடங்கு நீதியான ஆட்சியை அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் ஏற்படுத்த முயன்றும் தலிபான்கள் போராடுகிறார்கள்.  இது அடக்குமுறையை எதிர்த்து மக்களால் நடத்தப்படும் போராட்டமல்ல. இது நடத்தப்படுவது தீவிரவாதிகளால் மட்டுமே. திரும்பவும், இதையும் புலிகள் காலத்தையும் ஒப்பிட முடியும். மேற்குநாடுகள் இந்த தீவிரவாதங்களை கண்ட அதே அனுபவக் கண்ணால் புலிகளை பார்த்துக்கொண்டு எங்களைப் பயங்கரவாதிகள் என்றார்கள். அவர்களுக்கு, புலிகள், தமிழர் சரித்திரத்தில் எப்பவாவது ஒருதடவை தோன்றும் விடுதலை இயக்கம் என்பதை உணரமுடியவிலை. அதேநேரம் நாம் அரைகுறை நீதியாக ஆண்ட பிருத்தானியர் ஆட்சியில் வேலை மட்டும்தான் கேட்டோம், ஆட்சியை எதிர்த்துப் போராடவில்லை என்பது பிளெக் போன்ற இலங்கை சரித்திரம் அறியாதவர்களுக்கு பிடிபடவில்லை. நாம் அறிய, 5000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியக்காடைகள் ரூசியாவிலிருந்து ஆப்கானிஸ்த்தான் வழியாக வந்த நாளில் இருத்து இன்றுவரை ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம்தான் இருக்கிறது. பிள்ளைகளும், பிள்ளைகள் போல வளர்க்கப்பட்ட தத்து அடிமைகளும் தகப்பன்மாரிடமிருந்த்து அரசுகளை புரட்சிகளில் பெற்றார்கள். இது ஆப்கானிஸ்த்தானில் இருந்து நாவாப்புகள் வரை வந்தது. பாரதக் கதையில் கூட கௌரவர்கள், பாண்டுவிடமிருந்த அரசைப்பெற  இதையேதான் செய்தார்கள். பாண்டவர்கள் நீதியாக காட்டப்பட்டாலும், கௌரவர்களிடமிருந்து அரசை பெற புரட்சிதான் செய்தார்கள். இது ஆப்கானிஸ்தானிலிருந்து தொடர்ந்து வெளியேறிக்கொண்டிருக்கும் தீவிரவாதம். இவர்கள் பல நாகரீகங்களை வேரோரடு சாய்த்த காடைகள் மட்டுமே. இவர்களேதான் மெசொபெத்தோமியா, எகிப்து, சிந்து எல்ல நாகரீகங்களுயும் அழிய காலாக இருந்த்திருக்க கூடும். சிந்து வெளியை முழுவதாக அழித்து 5000 ஆண்டுகளாக அந்த மண்ணில் பழைய தளும்பு எதுவும் இல்லாமல் துடைத்து இன்று பாகிஸ்தான் என்ற காடை இராச்சியத்தை தொடங்கியிருக்கிறார்கள்.  அடக்கப்பட்ட சிந்து வெளி நாகரீகம் இந்தியாவில் சில இடங்களில் அதன் தளும்புகளை கொண்டிருக்கு. ஆனால் அதன் சொந்த மண்ணான பாகிஸ்தானின் எள்ளவும் இல்லை.   

 

எனவே அடக்கப்பட்ட இனம் போராடி வெல்லும் என்பது, பிளெக் மாத்திரி கீழைத்தேச அரசியலை அறியாதவர்கள் ஏற்படுத்திய மேற்குநாட்டு  தத்துவம்.  அதே மாதிரி தலிபான் போன்றவர்களின் செயல்ப்பாடுகள் தீவிரவாதம், அதிகாரவெறி போன்றவற்றால் வருவது. உண்மையாக அடக்கு முறைக்கு எதிராக போராடும் மக்கள் இயக்கம் அல்ல. 

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டுவும் தலைவராகலாம் யார் கண்டது :lol::icon_idea:

தலைவர் தந்த மோட்டார் சைக்கிளையும் போட்டிட்டு தலைவரையும் போராளிகளையும் மக்களையும் விட்டிட்டு இடைநடுவில் ஓடிவந்த ஆக்கள் எல்லாம் நாளைய தலைவரை பற்றி பேசக்கூடாது..... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.