Jump to content

எமது வரலாற்றின் கறைகள் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

எமது கடந்த காலத்திலிருந்த பாடம் கற்காவிட்டால், எமக்கு வருங்காலம் ஒன்று, வளமாக இருக்காது என்பது எமது கருத்து! இப்படியான துன்பியல் கதைகளை, நீங்கள் வாசிக்க நேர்ந்தால், இந்தத் திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்!

 

 971789_460454707395330_363836983_n.jpg

பெண்கள் மார்பகத்தை மறைப்பதற்கு உரிமை கேட்டு போராடிய கொடுமை! தோள் சீலைப் போராட்டம்!

திருவாங்கூர் சமஸ்தானத்தில் கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இருந்தன. அப்போது மனுதர்ம அடிப்படையில் ஆட்சி நடந்து வந்த இந்து நாடாக இருந்தது திருவாங்கூர் சமஸ்தானம். தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட "18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம்."

இந்த ஜாதிப் பெண்கள் தங்கள் மார்பகத்தை உயர் சாதியினருக்கு எப்பொழுதும் காட்டி மரியாதை செய்யவேண்டும். பிறந்த குழந்தையிலிருந்து இறக்கும் வரை எல்லா பெண்களும், இந்த 18 ஜாதிகளில் பிறந்திருந்தால், எவனுடைய மனைவியாக, மகளாக, சகோதரியாக, தாயராக, பாட்டியாக, இருந்தாலும் "மார்பகத்தை காட்டிக் கொண்டு தான் இருக்கவேண்டும்."

மேலாடையில்லா கீழ் சாதிப்பெண்
இந்த அசிங்கத்தை அவமானத்தை அவலத்தை அடக்குமுறையை எதிர்த்து நாடார் சாதியைச் சேர்ந்த மக்கள் "கிருத்துவத்திற்கு மாறினார்கள்." அவர்கள் ஜாதிப் பெண்கள் மார்பகத்தை அன்னியரின் பார்வையில் இருந்து மறைக்க போராடினர். இது 'தோள்சீலைப் போராட்டம்' எனப்பட்டது.

இந்த அசிங்கத்தை, அவமானத்தை, அவலத்தை, அடக்குமுறையை நீக்க '37 ஆண்டுகள்' போராட வேண்டியிருந்தது. அப்படியும் நாடார் 'கிருத்தவ பெண்களுக்கு' மட்டும் தான் தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது; அப்ப ஹிந்து நாடார் பெண்கள்? ஏனைய ஜாதி பெண்கள்? நம்பூதிரிகளின் அடிமையான திருவிதாங்கூர் அரசா கொக்கா? நம்பூதிரி உக்கார சொன்னா திருவிதாங்கூர் அரசன் படுத்துக்குவான்!

மார்பகம் அளவுக்கு ஏத்தா மாதிரி வரி; பெரிய மார்பகளென்றால் வரி அதிகம். வரி கட்ட முடியாவிட்டால், முலைகள் அறுத்து எறியப் பட்டது. என்ன கொடுமை! மிஸ்டர் நம்பூதிரி தனக்கு கீழுள்ள ஜாதியில் இருக்கும் பெணகளை எப்போதும், முக்கியமாக அந்தப் பெண்களின் திருமணத்திற்கு முன், புணர பரி பூரண உரிமை பெற்றவர்கள்.சில ஜாதி ஆண்கள் அது தெய்வ பாக்கியம் என்று சந்தோஷமாக மிஸ்டர் நம்பூதிரி-ஐ புணர வைத்தார்கள்.

கன்யாகுமரியில் மேலாடையில்லா கீழ் சாதி குமரிப்பெண்ணும் சீலை ரவிக்கையுடன் மேல் சாதிப் பெண்ணும் சந்தையில். கீழ் சாதி ஆண்களும் சட்டை போடத் தடை! 18 ஜாதியில் பிறந்ததைத் தவிர இந்த பெண்கள் என்ன பாவம் செய்தார்கள்? இந்த அவலம் வீட்டிற்குள்ளேயே; அப்போ வெளியில்?

இவ்வளவு பெரிய அயோகித்தனத்தை, கடவுள் பேரை சொல்லி, நாட்டில் உள்ள எல்லா பெண்களையும் 'செய்தவன்' எப்படி உண்மை பேசுவான்? அவன் கடவுளைப் பற்றி சொல்வது எல்லாமே பொய்; அவை யாவும் அவன் வயிறு வளர்க்க! மேலும், தன் உடலை வளர்க்க; பிறன் மனைவிகளை வளைக்க! ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்!

மேலாடை அணிய வழங்கிய ஆணை

உடை உடுத்த உரிமை
1829-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் நாள் திருவிதாங்கூர் அரசு வெளியிட்ட நீட்டில் (அரசு ஆணையில்) இந்து மதத்தில் நீடிக்கின்ற சாணார் பெண்டிர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சாணார் பெண்டிர் போன்று குப்பாயம் அணியலாம் என்று கூறப்படவில்லை. இந்த உத்தரவுப்படி இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கு தங்களது மார்பகங்களை மறைப்பதற்கு உரிமை வழங்கவில்லை என்பது வெட்ட வெளிச்சம். இதனால் கிறிஸ்தவர்களுக்கு கிடைக்கப் பெற்ற உரிமையும் பறிபோயிற்று. சுருக்கமாகக் கூறின்
“ “… As it is not reasonable on the part of the Shanar women to wear cloths over their breasts, such custom being prohibited, they are required to abstain in future from covering the upper part of their body. An order (circular) had been issued on the 7th Edavam 989, to all places prohibiting the Shanar women of the families of such Sanars as may have embraced Christianity from wearing cloths, over their breasts, and requiring them to substitute for these the Kuppayam (a kind of short bodice used by their Christians and by Mohamadan native females) but with regard to their (the Shanars) allegation as an authority for wearing clothes over their breasts, that a decree has been passed subsequently by a law court, permitting the Shanar women on the contrary the use of clothes on the upper part of their body. Such a decision since if it be admitted as establishing a rule, it would be a direct contravention of the order alluded to, cannot but be considered as invalid. Therefore the order referred to is hereby republished to be held as a document (or authority) in their respect”

மிஷனறிகள் அல்ல குப்பாயத்தை வடிவமைத்தது. அவர்களின் மனைவிகளே இதை உருவாக்கி கையால் தைத்துக் கொடுத்தனர். இதை உருவாக்கிக் கொடுப்பதற்கான காரணத்தை அவர்கள் கூறும் பொழுது
“ “… that the Shanars and such other castes women, as have embraced Christianity ought to wear an upper cloth for the sake of decency when they go to church, the fairs, markets and similar places, and they were instructed to do so and that it ought to be ordered agreeably to Christianity...” No doubt at this fag end of the nineteenth century it passes strange a government should make restrictions and laws as to the domestic economy and dress of individuals; but the Travancore Govt. was so unenlightened in those days that it made such indecent restrictions regarding the dress of inferior women”. 

இதற்கான அரசாணை 26, சூலைத் 1859 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் உயர் சாதி பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த உரிமை மற்ற கீழ் சாதியினருக்கு அரசு வழங்கவில்லை. எனினும் கிறித்தவப் பெண்கள் அனைவரும் மேலாடை அணிந்தனர்.

இதனால்தான் மீண்டும் போராட்டம் தொடர்ந்தது. இப்பேராட்டத்தை மிஷனறிகள் பொறுப்பேற்று நடத்தினர். ஆனால் இப்போராட்டத்தைப் பூனூல் அணிந்த சத்திரிய நாடார்கள் எதிர்த்தனர். ஆனாலும் சாணார் கிறிஸ்தவர்கள் சற்றும் சளைக்காமல் நாயர்களை எதிர்த்துப் போராடி 1859-ல் வெற்றிவாகை சூடினர். “அதன் பயனாக 1859 ஆம் ஆண்டு ஜுலை 26-ம் நாள் அதிகாரபூர்வ அரசு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அனைத்து சமயத்தைச் சேர்ந்த நாடார் பெண்களும், கிறிஸ்தவப் பெண்களைப் போன்று குப்பாமிட்டுக் கொள்ளவோ, மீனவப் பெண்களைப் போன்று கட்டிச் (Coarse) சீலை உடுத்திக் கொள்ளவோ செய்யலாம் என்றும், ஆனால் உயர் சாதிப் பெண்கள் (நாயர், நம்பூதிரிகள், வெள்ளாளர்கள்) மேலாடை அணிவது போன்று அணியாமல் வேறு எவ்விதத்திலாவது மார்பை மறைத்துக் கொள்வதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என அந்த அறிக்கை தெரிவித்தது”.இந்த நீட்டுப்படித்தான் இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கும் புனூல் பூண்ட நாடார் பெண்களுக்கும் சேர்த்து குப்பாயம் அணியும் உரிமை கிடைத்தது. ஆயினும் இவ்வுரிமை தாழ்ந்த சாதிப் பெண்களுக்குக் கிடைக்கவில்லை. தாழ்த்தப்பட்ட பிற சமுதாயத்தினருக்கு இவ்வறிப்பால் உரிமை கிடைக்கவில்லை.

எனவே இந்த ஆணையைக் கண்டித்து மிஷனறிகள் ஆங்கில அரசிடம் மீண்டும் மேல்முறையீடு செய்தனர். சென்னை மாகாண ஆளூனர் சார்லஸ்ட்ரெவிலின் திருவிதாங்கூருக்கான ஆங்கிலப் பிரதிநிதி மால்ட்பியை நேரடியாக அழைத்துப் பேசினார். திருவிதாங்கூரில் பெண்கள் உடை அணிவதில் இருக்கின்ற எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்க ஆங்கிலப் பிரதிநிதி மகாராஜாவிடம் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மால்ட்பி இதனைக் குறித்து மகாராசாவிடம் (ஆயில்லியம் திருநாள் ராமவர்மா – 1860 – 1080) பேசினார்.

ஆங்கில அரசின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காவிட்டால் ஆங்கில அரசுடனான தங்களது உறவு பாதிக்கப்படும் என்றுணர்ந்த மகாராஜா 1865-ம் ஆண்டு மற்றோரு அறிவிப்பு வெளியிட்டார். இதன் மூலம் இந்து கிறிஸ்தவ நாடார் பெண்களுக்கு மேலாடை அணிவதற்குக் கொடுக்கப்பட்ட உரிமை அனைத்து சாதியைச் சேர்ந்த பெண்களுக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால் நாயர் பெண்களைப் போன்று ஆடை அணியும் உரிமை மட்டும் அனைவருக்கும் மறுக்கப்பட்டிருந்தது”.

ரவிக்கை அணிவதற்கான உரிமையை கர்னல் மன்றோ (Resident) 1813-ல் வழங்கப்பட்டு கிறிஸ்தவப் பெண்கள் அன்று முதல் பகிரங்கமாக அணிந்து கொண்டனர்.

இப்போராட்டத்திம் விளைவாகவும் ஆங்கிலேயர்களின் நெருக்கடியின் காரணமாகவும் திருவிதாங்கூர் அரசரும், திவானும் அனைத்து நாடார் பெண்களும் மத வேறுபாடு இல்லாமல் குப்பாயம் என்கின்ற மேலாடை அணியலாம் என்று உரிமை அளித்தனர்.

ஆதாரம்: http://ta.wikipedia.org/wiki/தோள்_சீலைப்_போராட்டம்
 
 
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படி எல்லாம் செய்தார்களா கொடுமை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவ்வாறான கொடுமைகள் ஈழத்திலும் இருந்துள்ளன என்று சில நூல்களில் வாசித்த ஞாபகம். கோவில்களில் இருந்த.."தேவதாசி" முறை "தேவடியாள்" முறை எல்லாம்.. எங்களுக்கு இரண்டு தலைமுறைகளுக்கு முந்திய காலத்திலும் இருந்துள்ளது..! கோவில்களில் பெண்களைக் கொண்டு "தேவடியாள்" ஆட்டம் எல்லாம் போட்டிருக்கிறார்கள். எமது விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகும் சிறிது முன்னைய காலத்திலும் இந்த நிலைமை யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர்கள் வாழ்ந்த வடக்குக் கிழக்கில் இருந்துள்ளது.

 

யாழ்ப்பாணத்தில் கீழ் சாதி ஆண்கள் சட்டை போடாத நிலை விடுதலைப் புலிகள் தோற்றம் பெற்ற காலத்திலும் இருந்ததாம். அதேபோல் கீழ் சாதி பெண்களும் மேற்சட்டை அணிய முடியாது. சேலையால் தான் மூடிக் கொள்வார்களாம். அதேபோல்.. யாழ்ப்பாண மேட்டுக்குடி.. முதலியார்.. உடையார்.. போன்றவர்களைக் கண்டால் ஆண்கள் மேல்துண்டையும் பெண்கள் மேல் சேலையையும் இறக்க வேண்டுமாம். இப்படியான நிலைகள் இருந்துள்ளன. இதற்குக் காரணம்.. அந்த மக்கள் இவர்களின் விவசாயக் கூலிகளாக இருந்து பொருள் ஈட்டி வாழ்ந்ததால்.. முதலியார்.. உடையார் போன்றவர்கள் அதிகாரம் செய்து அந்த மக்களைப் பணிய வைத்துள்ளனர்.

 

குறிப்பாக இதற்கு எதிராக.. சில முற்போக்கான சிந்தனை கொண்ட முதலியார்களே பின்னர் தோற்றம் பெற்றதும் அவர்கள் தமிழ் புலவர்களாக இருந்ததாகவும் எங்கள் மூதாதையோர் எழுதிய சில நூல்களில் படித்துள்ளேன்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவ்வாறான கொடுமைகள் ஈழத்திலும் இருந்துள்ளன என்று சில நூல்களில் வாசித்த ஞாபகம். கோவில்களில் இருந்த.."தேவதாசி" முறை "தேவடியாள்" முறை எல்லாம்.. எங்களுக்கு இரண்டு தலைமுறைகளுக்கு முந்திய காலத்திலும் இருந்துள்ளது..! கோவில்களில் பெண்களைக் கொண்டு "தேவடியாள்" ஆட்டம் எல்லாம் போட்டிருக்கிறார்கள். எமது விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகும் சிறிது முன்னைய காலத்திலும் இந்த நிலைமை யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர்கள் வாழ்ந்த வடக்குக் கிழக்கில் இருந்துள்ளது.

 

யாழ்ப்பாணத்தில் கீழ் சாதி ஆண்கள் சட்டை போடாத நிலை விடுதலைப் புலிகள் தோற்றம் பெற்ற காலத்திலும் இருந்ததாம். அதேபோல் கீழ் சாதி பெண்களும் மேற்சட்டை அணிய முடியாது. சேலையால் தான் மூடிக் கொள்வார்களாம். அதேபோல்.. யாழ்ப்பாண மேட்டுக்குடி.. முதலியார்.. உடையார்.. போன்றவர்களைக் கண்டால் ஆண்கள் மேல்துண்டையும் பெண்கள் மேல் சேலையையும் இறக்க வேண்டுமாம். இப்படியான நிலைகள் இருந்துள்ளன. இதற்குக் காரணம்.. அந்த மக்கள் இவர்களின் விவசாயக் கூலிகளாக இருந்து பொருள் ஈட்டி வாழ்ந்ததால்.. முதலியார்.. உடையார் போன்றவர்கள் அதிகாரம் செய்து அந்த மக்களைப் பணிய வைத்துள்ளனர்.

 

குறிப்பாக இதற்கு எதிராக.. சில முற்போக்கான சிந்தனை கொண்ட முதலியார்களே பின்னர் தோற்றம் பெற்றதும் அவர்கள் தமிழ் புலவர்களாக இருந்ததாகவும் எங்கள் மூதாதையோர் எழுதிய சில நூல்களில் படித்துள்ளேன்..! :icon_idea:

 

உதிலை கொஞ்ச ஓவர் வசனங்கள்  பொய்யை சொல்லுது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உதிலை கொஞ்ச ஓவர் வசனங்கள்  பொய்யை சொல்லுது.

 

அந்த வசனங்களை இனங்காட்டினால்.. பொய்யா.. வரலாற்றில் இருந்ததா.. என்பதை கிடைக்கக் கூடிய ஆதாரங்களோடு தர வசதியா இருக்கும்..! இப்படிப் பொத்தாம் பொதுவாகச் சொன்னால்.. நாங்கள் அறிந்தது பொய்யா என்ற வினவலோடு.. இருக்க வேண்டிய நிலையே உள்ளது..! அதுமட்டுமன்றி வாசிப்பவர்களுக்கு எம்மைப் போன்ற ஒரு குழப்பம் ஏற்படும். எது பொய்.. எது நிஜமுன்னு..!

 

காரணம்.. எங்கள் பிறப்பும் வாழ்வும் போராட்ட காலத்தோடு.. அதிகம்.. நகர்ப்புறமாக இருந்ததால் சிலவற்றை நேரில் தரிசிக்கும் போக்கு இருக்கவில்லை.. அல்லது கிடைக்கவில்லை எனலாம்..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்ப்பாணத்தில் கீழ் சாதி ஆண்கள் சட்டை போடாத நிலை விடுதலைப் புலிகள் தோற்றம் பெற்ற காலத்திலும் இருந்ததாம். அதேபோல் கீழ் சாதி பெண்களும் மேற்சட்டை அணிய முடியாது. சேலையால் தான் மூடிக் கொள்வார்களாம். அதேபோல்.. யாழ்ப்பாண மேட்டுக்குடி.. முதலியார்.. உடையார்.. போன்றவர்களைக் கண்டால் ஆண்கள் மேல்துண்டையும் பெண்கள் மேல் சேலையையும் இறக்க வேண்டுமாம். இப்படியான நிலைகள் இருந்துள்ளன. இதற்குக் காரணம்.. அந்த மக்கள் இவர்களின் விவசாயக் கூலிகளாக இருந்து பொருள் ஈட்டி வாழ்ந்ததால்.. முதலியார்.. உடையார் போன்றவர்கள் அதிகாரம் செய்து அந்த மக்களைப் பணிய வைத்துள்ளனர்.

 

 

 

 

இவைகளில் சில நடவடிக்கைகள் ஒருகாலத்தில் இருந்தது உண்மைதான். அதற்க்காக கீழ்ச்சாதி பெண்கள் சேலையை இறக்கியகதை ஒரு பொதும் நடந்ததில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவைகளில் சில நடவடிக்கைகள் ஒருகாலத்தில் இருந்தது உண்மைதான். அதற்க்காக கீழ்ச்சாதி பெண்கள் சேலையை இறக்கியகதை ஒரு பொதும் நடந்ததில்லை.

 

யாழ் குடாவில் கூட.. சில ஊர்களில்..சில முதலியார்களும் உடையார்களும் தங்கள் அதிகாரத்தின் மூலம்..அப்படி ஒரு வழக்கத்தை வைத்திருந்ததாக நாங்கள் அறியக் கேட்டிருக்கிறோம். ஆதாரங்கள் கிட்டும் போது தருகிறேன்.

 

ஆண்கள் துண்டை அக்குளிலும்.. பெண்கள் கொய்யகத்தை அவிழ்த்து விடவும் வேண்டுமாம். கொய்யகம் என்பது மாராப்புச் சேலையை பின்புறமாக முடியும் இடம் என்பதாகச் சொல்லப்பட்டது. :icon_idea::)

 

p386-full.jpgp10-full.jpg

 

கொய்யகம் வைத்து மேற்சட்டை போடாமல்.. சேலை அணியும் பண்டைய தமிழ் பெண்கள்.

 

http://www.imagesofceylon.com/ioc-people.htm

 

Posted

இணைப்பிற்கு நன்றி புங்கை.

இன்னும் பல அடக்கு முறைகள்.. சாணார் சாதியை சேர்ந்த ஒருவன் நம்பூதிரியிடமிருந்து 36 அடி தூரத்திலும், நாயரிடமிருந்து 12 அடி தூரத்திலும் இருக்க வேண்டும்.புலையர் இனத்தைச் சேர்ந்தவன்  நம்பூதிரியிடமிருந்து 96 அடி தூரத்திலும், நாயரிடமிருந்து 60அடி தூரத்திலும் இருக்க வேண்டும். இதை மீறுபவர்கள் கொல்லப்படுவார்கள்.
தாழ்ந்த சாதியை சேர்ந்தவர்கள் குடை, செருப்பு, மாடு, தங்கம் வைத்திருக்க கூடாது. சொத்து வாங்கும் உரிமை இவர்களுக்கு கிடையாது.

இந்த விக்கிபீடியா கட்டுரை சில விடயங்களை தெளிவுபடுத்தாமல் உள்ளது.

எல்லாரையும் பொதுவாக நாடார் என்று குறிப்பிடப்படுகிறது. போராட்டம் நடந்த காலத்தில்மூன்று வகையான பிரிவு இருந்தது. நாடார்(சொந்தமாக பண்ணை வைத்திருந்த சாணார்கள்), இந்து சாணார்,  கிருத்துவ சாணார். இதில் நாடார்களுக்கு விலக்கு இருந்தது. அவர்கள் உடை அணியலாம்.

இதில் மற்றுமொரு உண்மை என்னவெனில், வெள்ளாளர் வீட்டுப் பெண்கள் நாயர் மற்றும் நம்பூதிரி வீட்டு ஆண்கள் முன் திறந்த மார்புடன் இருக்க வேண்டும். நாயர் வீட்டுப் பெண்கள்  நம்பூதிரி வீட்டு ஆண்கள் முன் திறந்த மார்புடன் இருக்க வேண்டும். நம்பூதிரி வீட்டு பெண்கள் இறைவன் முன் திறந்த மார்புடன் இருக்க வேண்டும். ஒருவர் முன் திறந்த மார்புடன் இருப்பது அவருக்கு மரியாதை செல்வதாக கொள்ளப்படும்.

இவ்வளவு கலவரம் நடக்கும்போது மற்ற சமஸ்தானங்களின் நிலை என்ன? மற்ற சமஸ்தானங்களில் ஏதாவது போராட்டம் நடந்ததாக பெரிய குறிப்பு எதுவும் இல்லையே ?

சங்க காலத்தில் மேலாடை கிடையாது. மார்க்கோபோலோ இந்தியா வரும்பொழுது பாண்டிய மண்டலத்தில் இளவரசியாக இருந்தாலும், படை வீரனாக இருந்தாலும் யாரும் மேலாடை அணிவதில்லை என்று எழுதியிருக்கிறார்.அப்ப இந்த  மேலாடை அணியும் பழக்கம் எப்பொழுது வந்தது என்று தெரியவில்லையே?

திருவாங்கூர் சமஸ்தானமானது பல வினோத செயல்முறைகளுக்கு பெயர் போனது.  அவற்றுள் சில

- நாயர் வீட்டுப் பெண்கள் எத்தனை கணவர்களை வேண்டுமானாலும் கல்யாணம் செய்து கொள்ளலாம்.
 very remarkable caste of Nairs, whose women enjoy the privilege of possessing several husbands, is to be found anywhere but in Travancore.(book : Hindu manners, custom and ceremonies)

- நம்பூதிரி வீட்டுப் பெண்கள் யாரவது பூப்படைந்து உடலுறவு கொள்வதற்கு முன் இறந்து விட்டால், யாரவது ஒரு வறியவனை கொண்டு பிணத்துடன் பாலியல் சடங்கு செய்வார்களாம்.( book: Indian Caste System , page no 97)
 

Posted

நம்பூதிரிகள் பற்றி பல கதைகள் வெளியானதுண்டு. ஆனால் நெடுகர் சொல்வதை யாழ்ப்பாணத்தில் கேள்விப்பட்டு இல்லை. குறுக்குகட்டு பல சமூகங்களில் வழமை. 

 

சுண்ணாகம் சந்தையில் மாதிரி பொது இடங்களில் தாராளாமாகப் பார்க்க முடிந்தது. 

 

ஆனால் ஊரில் நான் சிறுவனாக இருந்த போது இரண்டு ஆச்சிகள் சீலைத் தாவணி மட்டும் அணிவார்கள். மல்லாகம், அளவெட்டி, மாதிரி இடங்கள் அடிமை குடிமை வழக்கங்கள் இருந்த ஊர்களாக சொல்வார்கள். இதனால் ஒரு சின்ன வட்டாரத்திலேயே சகல மக்களையும் காண முடியும். பழைய பண்பாடாக ஒரு முறைதலை இருந்து எங்கள் பக்கங்களில் இருக்க வில்லையாயின் அது பொது பண்பாடாக இருக்க முடியாது. சில ஊர்களில் ஐயக்கோன், வியாளி மாதிரி அடக்கு முறைகள் இருந்திருக்கலாம். இவை பண்பாடு அல்ல. சண்டித்தனமே.

 

சில ஊர்களில் சில சிறுவர்களுக்கு கதிரை மேசை கொடுப்பதில்லை என்று அம்மா சொல்லியிருக்கிறா. ஆனால் தான் படித்த போது எந்த வகுப்பில் தன்னும் அப்படி ஒரு முறை இருந்ததாக சொல்லவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மல்லை நாங்க இங்கு சில வயதானவர்களிடமும் விசாரிச்சம். முன்னர் அப்படி இருந்ததாகவே அவர்களும் சொல்லுறார்கள். இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னரல்ல.. அதற்கும் முன்னர். முதலியார்.. உடையார்கள்.. ஊர் பஞ்சாயத்துப் பண்ணிய காலங்களில்.. அவர்களின் சொந்த அதிகாரங்கள் சில ஊர்களில் இவ்வாறான அத்துமீறல்களோடு இருந்திருக்க வாய்ப்புள்ளது என்பதை நம்ப முடிகிறது. இருந்தாலும்.. இதற்கு எழுதப்பட்ட வரலாற்று ஆதாரம் இருந்தால் இங்கு கொண்டு வர முயற்சிக்கிறோம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

yarl12.jpg

 

http://www.ujiladevi.in/2010/08/blog-post_19.html

 

மேற்படி கட்டுரையில் எழுதப்பட்டுள்ள சாதி வழக்கங்கள் ஈழத்திலும் இருந்துள்ளது.  மேல்சாதி முதலியார் உடையாரைக் கண்டால் மாராப்பை இறக்கும் வழக்கம் இங்கிருந்து வந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பலரும்  நெடுக்கின்  கருத்துக்கு  விமர்சனம்  வைப்பதால்

அவரது கருத்துக்கு

எனக்கு தெரிந்ததை

நான்  கண்டதை  எழுதுகின்றேன்

 

இவ்வாறான கொடுமைகள் ஈழத்திலும் இருந்துள்ளன என்று சில நூல்களில் வாசித்த ஞாபகம்.

 

கோவில்களில் இருந்த.."தேவதாசி" முறை "தேவடியாள்" முறை எல்லாம்.. எங்களுக்கு இரண்டு தலைமுறைகளுக்கு முந்திய காலத்திலும் இருந்துள்ளது..!

 

எனக்குத்தெரிந்த  ஒரு கோயிலில் (பெயர் வேண்டாம்)

இப்படி  ஒருவர்  இருந்தார்

அவரது காலம் முடிய அவரது மகளையும்  அதில்  ஈடுபடுத்தியதை  அறிவேன்.

அவரது மகன்  வளர்ந்து இயக்கத்தில்  இணைந்தபின்  இவை இல்லாது போயின.

 

கோவில்களில் பெண்களைக் கொண்டு "தேவடியாள்" ஆட்டம் எல்லாம் போட்டிருக்கிறார்கள்.

 

இது  சின்ன மேளத்தை  குறிக்கின்றார்  என  நினைக்கின்றேன்.

இவர்கள் ஆடி முடிய

அதே திருவிழாவுக்கு வரும் நாதசுவர மற்றும்  மேள  சக்கரவர்த்திகளுடன் அறைகளில் இருந்ததை  மறைந்திருந்து பார்த்துண்டு

(நேரடிச்சாட்சி  நானே)

 

 

எமது விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகும் சிறிது முன்னைய காலத்திலும் இந்த நிலைமை யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர்கள் வாழ்ந்த வடக்குக் கிழக்கில் இருந்துள்ளது.

 

யாழ்ப்பாணத்தில் கீழ் சாதி ஆண்கள் சட்டை போடாத நிலை விடுதலைப் புலிகள் தோற்றம் பெற்ற காலத்திலும் இருந்ததாம்.

 

இதை  முன்பும்  இங்கு எழுதியுள்ளேன்.

எனது அப்பர் வரும்போது பலரும் சட்டையைக்களட்டி  கமக்கட்டுக்குள்  வைத்ததைக்கண்டுள்ளேன். 

அப்படி  வைக்காதவர்கள்  கவனிக்கப்பட்டு வீடேறி  அடித்ததையும்  கண்டுள்ளேன்

 

அதேபோல் கீழ் சாதி பெண்களும் மேற்சட்டை அணிய முடியாது. சேலையால் தான் மூடிக் கொள்வார்களாம்.

 

இதுவும் இருந்தது

ஆனால் இதுவும்  எழுதாத  சட்டமாக  இருந்தா  என்பது தெரியவில்லை.

 

அதேபோல்.. யாழ்ப்பாண மேட்டுக்குடி.. முதலியார்.. உடையார்.. போன்றவர்களைக் கண்டால் ஆண்கள் மேல்துண்டையும் பெண்கள் மேல் சேலையையும் இறக்க வேண்டுமாம். இப்படியான நிலைகள் இருந்துள்ளன. இதற்குக் காரணம்..

 

அந்த மக்கள் இவர்களின் விவசாயக் கூலிகளாக இருந்து பொருள் ஈட்டி வாழ்ந்ததால்.. முதலியார்.. உடையார் போன்றவர்கள் அதிகாரம் செய்து அந்த மக்களைப் பணிய வைத்துள்ளனர்.

 

இதுவும்  உண்மை

எனது வீட்டுக்கு

காலையில் மீன்

கள்ளு

குறித்த நாளில் தலைமயிர் வெட்ட சேவ் எடுக்க ஆள்

கிழமையில் 2 தரம் உடுப்பை எடுத்து தோய்த்துவர ஆள்

வேலைக்கு  ஆள் .........

என்று  வரவேண்டும்

அதில்  எந்த  மாற்றமும  இருக்கக்கூடாது

இருந்தால்  தண்டனை

கண்ட  இடத்தில்

அல்லது வீடேறி.....

 

இவர்கள்  வீட்டுக்கு  வந்தாலும் வீட்டுக்குள் வரமுடியாது

சாப்பாடு

மற்றும் தண்ணீர்  எல்லாவற்றிற்கும் வேறு பாத்திரங்கள் இவர்களுக்காக  ஒதுக்கப்பட்டிருக்கும்

 

குறிப்பாக இதற்கு எதிராக.. சில முற்போக்கான சிந்தனை கொண்ட முதலியார்களே பின்னர் தோற்றம் பெற்றதும் அவர்கள் தமிழ் புலவர்களாக இருந்ததாகவும் எங்கள் மூதாதையோர் எழுதிய சில நூல்களில் படித்துள்ளேன்..! :icon_idea:

 

இவை நான்  கண்ணால்  கண்டவை

இவர்களுடைய  பிள்ளைகள்  எனது நண்பர்கள்

அவர்களுடன் இதுபற்றி  விவாதித்ததுண்டு.

ஆனால்  பரம்பரை பரம்பரையாக எனது தகப்பனார்  குடும்பத்துக்கு  வேலை  செய்து வருவதாகவும்

எனது தகப்பனாரை சிறு வயதில்  வளர்த்ததே தங்கள்  பெற்றோரும் தாங்களும்  தான்  எனவும்   சொல்வார்கள்.

 

ஆனால்  இதில் பெரும  மாற்றங்களை  எனது தலைமுறை  செய்ததே  

இன்றைய  தலைமுறை  அதைக்காணாது இருக்க  காரணம்

அந்தவகையில் பெருமையாக இருக்கு.

அடுத்த தலைமுறை மீதியையும் அழிக்கணும்

அழிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தத் திரியில் கருத்து எழுதிய உறவுகள், சுமே,நெடுக்கர், குமாரசாமி அண்ணர்.மல்லை, ஆதித்ய இளம்பிறையன், விசுகர் ஆகியோருக்கு நன்றிகள்! உங்கள் கருத்துக்களுக்கு நிச்சயம் பதில் கருத்து எழுதுவேன், இதில், இந்த நம்பூதிரிகளினதும், நாயர்களினதும் கூட்டமைப்பால், இந்த வருணாச்சிரம தர்மத்தின் விளைவான சாதியமைப்பின் விளைவுகளை, இங்கு இணைக்கிறேன். நான், மலையாளத்தில் இருந்து இந்த ஆய்வை, ஆரம்பிப்பதற்கு மிகவும் முக்கியமான காரணங்களும் இல்லாமலில்லை!

நேரமுள்ளவர்கள், ஆர்வமுள்ளவர்கள், நேரம் கிடைக்கும் போது வாசித்துப்பார்க்கவும்!

 

ஆடு நனைகிறது என ஓநாய் அழுது வடிப்பதாக கிராமங்களில் பழமொழி ஒன்று உண்டு. இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைமுறை, தெய்வங்கள் அனைத்தையும் விழுங்கிவிட்டு பார்ப்பனீயம் ஓநாயாக அழுது புலம்புகிறது. ஓநாய்களிடமிருந்து ஆடுகளுக்கு விடுதலை தானாக வருவதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையும் அது போல தானாக கிடைப்பதில்லை. நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவாகவே ஒடுக்கப்பட்ட மக்கள் விடியலைப் பெற முடியும்.

பாதிக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வழிமுறைகள் அந்த மக்களிடமிருந்தே உருவாகின்றன. விடுதலைக்கான சமூக இயக்கங்களின் துவக்கம் மக்களின் பிரச்சனைகளிலிருந்தே பிறந்திருக்கிறது. தென்தமிழகத்தில் பார்ப்பனீய அடக்குமுறையிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாற்ற அய்யாவழி தோன்றியது. பிரச்சனையின் உச்சநிலையில் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்தே அய்யாவழி பிறந்தது. எந்த பார்ப்பனீயத்தை எதிர்த்து அய்யாவழி பிறந்ததோ அதே பார்ப்பனீயம் இன்று அய்யாவழியை விழுங்கி ஏப்பம் விட துடிக்கிறது. அய்யாவழி மதம் தோன்றிய காரணத்தை புரிந்துகொள்ள அன்றைய திருவிதாங்கூர் பற்றி அறிவது அவசியம்.

திருவிதாங்கூர் சங்ககாலத்தில் ஐந்திணைகளாக பிரிக்கப்பட்டு சமஉரிமை படைத்த திராவிடர்களின் பூமியாக இருந்துள்ளது. கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் திருவிதாங்கூரில் துவங்கிய ஆரிய பண்பாட்டு படையெடுப்பு கி.பி 8ம் நூற்றாண்டில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது (தமிழக வரலாறும் பண்பாடும்: டாக்டர் A.சாமிநாதன்). இந்த காலகட்டத்தில் சாதி அமைப்பை உருவாக்க துவங்கியது. "சாதி அமைப்பில்லாத சமத்துவ சமுதாயத்தில் குடியேறிய ஆரியர்கள் சதுர்வர்ண அடிப்படையில் ஆரிய சித்தாந்த சாதி அமைப்பை உருவாகினர்" (மேற்கோள்: வரலாற்றாசிரியர் திரு. ஸ்ரீதரமேனன்). 19ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் பார்ப்பனீய கொடுங்கோன்மையின் உச்சநிலையில் இருந்தது. பார்ப்பனீயவாதிகளால் விதிக்கப்பட்ட இந்துமத விதிகள் ஒடுக்கப்பட்ட மக்களை தீண்டாமை தீயில் வேக வைத்தது.

கன்னியாகுமரியில் அடக்குமுறையாளர்கள் பெரும்பாலும் நாயர் சாதியினர். திருவிதாங்கூர் அரசகுடும்பத்திற்கு விசுவாசமாக இருந்ததற்காக, போரில் அபரிதமாக செயலாற்றியதற்காக நாயர்களுக்கு பிள்ளை, பணிக்கர், நம்பியார், மேனன், கர்தா, கைமால்... என பட்டங்களை மன்னன் வழங்கியிருந்தான். இந்த பட்டங்களை நாயர் குடும்பங்கள் நிரந்தரமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த பட்டங்கள் துணைசாதிகளாக அடையாளம் காணப்பட்டன. நம்பூதிரிகளின் நிழல் அதிகார மையங்களாக நாயர் குடும்பங்கள் விழங்கியது. திருவிதாங்கூரில் சாதி அடுக்கில் நம்பூதிரிகளுக்கு அடுத்த இடம் நாயர்களுக்கு இருந்தது. நம்பூதிரிகளின் ஆதரவு நாயர்களுக்கு தடையில்லாமல் கிடைக்க முக்கிய காரணம் அவர்களுக்கிடயிலான morganatic மணஉறவுகள். சிலநேரங்களில் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக, நிலவுடமையாளர்களாக இருந்த நம்பூதிரிகளின் செல்வத்தை பெற இந்த மண உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. நாயர் பெண்ணின் வீட்டிற்கு நம்பூதிரி "வரலாம்"; அந்த வேளை அவளது கணவனை விட நம்பூதிரிக்கே முதலிடம் என்ற வழக்கம் இருந்தது. இவ்வகை உறவுகளினால் நம்பூதிரிகளின் நிழலில் நாயர்கள் பதவி, அதிகாரம், சொத்து, படைபலம் என அனைத்தையும் அனுபவித்தனர். மன்னனின் படைகளில் முக்கிய பதவிகளில் நாயர்கள் இடம்பெற்றனர். விளைநிலங்களான வயல், தென்னந்தோப்புகள் நாயர்களிடமிருந்தது. வழிபாட்டு முறைகளிலும் நாயர்கள் சூரியவணக்கம் முதல் பெரும்பாலும் நம்பூதிரிகளின் வழிபாட்டுமுறைகளை தழுவியே இருந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நாயர்களை நேரில் காணும் போதும், பேசும் போதும் அழைக்க "ஏமானே (எஜமானே)" என குறிப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. 'எஜமான்' நிலையில் இருந்த இவர்களை அப்படி அழைத்த சொல் யாமான், ஏமான் என்று மருவி சொல் வழக்காக இருக்கிறது. அதே நாயர் நேரில் கண்ணில் படாத வேளை சூத்திரன் என திட்டுவதும் உண்டு. அடக்குமுறையை அனுபவித்த வலியின் வெளிப்பாடு சூத்திரன் என நாயரை ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்குள் சொல்ல வைத்தது. பண்ணையார்களாக இருந்த நம்பூதிரிகளும், நாயர்களும் ஒடுக்கப்பட்ட மக்களை அடிமைகளாக வைத்திருந்தனர்.

கொல்லம் திவான் எழுதிய மடலில் திருவிதாங்கூரில் 1,64,864 பேர் அடிமைகளாக இருந்துள்ளனர் என்பதை குறிப்பிடுகிறார். அடிமைகளாக இருந்த மக்கள் ஆங்கிலேய காலனியாத்திக்க பிரதிநிதிக்கு எழுதிய கடிதத்தில் "பரம்பரை பரம்பரையாக நாங்கள் விவசாய கூலிகள், வேலையும் சமூக அடக்குமுறையும் சேர்ந்து எங்களை விவசாய கூலி அடிமையாக பண்ணையார்களிடம் வைத்திருக்கிறது. நாங்கள மன, வாழ்வு அடிப்படையில் சுதந்திர மனிதர்களாக பண்ணையார்கள் எதிராக உள்ளனர். ஆதிக்க சாதியினர் அனுபவித்து வருகிற உரிமைகள் எங்களுக்கு மறுக்கப்படுகிறது. நில உரிமையாளர்களின் பிடியில் சிக்குண்டு மழையிலும், வெயிலிலும் மிருகமாக உழைத்து எஜமானர்கள் சொத்தை பெருக்க நாங்கள் அரை வயிற்றில், அழுக்கு சாக்கில் அவதிப்பட வைக்கப்பட்டுள்ளோம்" என எழுதினர். அடிமைகளை வாங்குவதும், விற்பதும் ஆதிக்கசாதி நில உடமையாளர்களுக்கு உரிமையாக இருந்தது. இரணியல், தொடுவெட்டி, படந்தாலுமூடு போன்ற பகுதிகளில் அடிமைகளை விற்க சந்தைகள் இருந்துள்ளன. அடிமைகளை சக்கையாக பிளிந்து வேலை வாங்கிய பின்னர் வதைப்பதும், கொலைசெய்வதும், மீண்டும் விற்பது என கொடுங்கோன்மையின் உச்சகட்டம் நிலவியது. திருவிதாங்கூர் பார்ப்பனீய அரண்மனை, கோட்டைகளின் அழகிலும், கோயில்களின் சுவர்களிலும் இந்த அடிமைகளின் இரத்தமும் சதையும் கலந்த வரலாறு செல்வ செழிப்பாக கலந்திருக்கிறது.

பார்ப்பனீயம் உச்சநிலையில் ஈடுபட்ட அரசுகளில் நம்பூதிரிகளும், நாயர்களும் இணைந்து ஆதிக்கம் செலுத்திய திருவிதாங்கூர் மன்னராட்சி குறிப்பிடத்தக்கது. நம்பூதிரிகளும், நாயர்களும் சேர்ந்து கோவில்கள், வீதிகள் எங்கும் கட்டுப்பாடுகள் அமைத்து தங்களுக்கு சாதகமான அமைப்பை உருவாகி வைத்திருந்தனர். அதிகார மையங்களில் தங்களுக்கு சாதகமான சட்டங்களை உருவாக்கி வைத்திருந்தனர். ஈழவ சாதியில் பிறந்தவர்கள் நம்பூதிரிகளிடமிருந்து 32 அடி தூரம் விட்டும், நாயர்களிடமிருந்து 16 அடி தூரம் தள்ளியும் நடக்கவேண்டும் என்ற சட்டங்கள் நடைமுறையில் இருந்தது. கண்ணால் பார்த்தாலே தீட்டு என சில சாதிகளை ஒதுக்கி வைத்திருந்தனர். ஒடுக்கப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேல் உடையணிய தடையும், அபராதமும் விதித்திருந்தனர். நாயர் வீடுகளின் அருகில் பிற சாதியினர் செல்லக்கூடாது. நாயர்கள் குளிக்கும் பொது இடங்களில் பிற சாதியினர் குளிக்கக்கூடாது. நாயர்கள் போல மேலாடை அணியக்கூடாது. கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது. கோவிலில் நுழையக்கூடாது. இருபதாம் நூற்றாண்டு வரையிலும் இப்படியான கொடுமைகள் தொடர்ந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த கொடுமைகளை அதிகம் அனுபவித்தவர்கள் பள்ளர், பறையர், சாணார், முக்குவர் சாதி மக்கள்.

இந்த கொடுமைகளை எதிர்த்து ஒவ்வொரு காலகட்டத்திலும் பல இடங்களில் கிளர்ச்சிகள் எழுந்து கலவரங்களாக வெடித்தது. அந்த போராட்டங்களில் மூழ்கி எழுந்த முத்தாக சமூகப்புரட்சியாளர்கள் பலர் உருவாகினர். திருவிதாங்கூரில் உருவான வீரம் செறிந்த மாமனிதர்களில் அய்யங்காளி, நாராயணகுரு, அய்யா வைகுண்டர் (முத்துக்குட்டி சாமிகள்) என பலர். அன்றைய வர்ணாஸ்ரம சாக்கடையான திருவிதாங்கூரை சீர்படுத்திய இந்த மாமணிகளின் வரலாறு இன்றைய தலைமுறை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தெரியவில்லை. பள்ளிப்பாடங்களிலும், வரலாற்று புத்தகங்களிலும் இவற்றை அறியாமல் வளர்ந்துவிட்டோம்.

மன்னர் ஆட்சியில் நம்பூதிரிகளும், நாயர்களும்அனுபவித்து வந்த பதவி சுகங்கள், அதிகாரம் அனைத்தும் காலனியாதிக்கத்தில் இடம் மாற துவங்கியது. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய மக்கள் தங்களது உரிமையை அனுபவிக்க ஆரம்பித்தனர். மேலாதிக்கத்தின் பிடி மெல்ல நழுவ துவங்கியது. பார்ப்பனீய மதத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் மதம் மாறினால் கிடைக்குமென நம்பி அதிக எண்ணிக்கையில் மக்கள் மதம் மாற துவங்கினர். வாழ்வுரிமையையும், கலாச்சாரத்தையும், வழிபாட்டு உரிமையையும் மீட்டெடுக்க தெற்கு திருவாங்கூரில் சமூகநீதி போராட்டங்கள் மதத்தை மையமாக வைத்து உருவானது.

ஈழவ மக்களுக்கு கோவிலில் வழிபட, சாலைகளில் நடமாட தீட்டு என தள்ளி வைத்தனர் ஆதிக்க சாதியினர். வைணவ இந்துகோயில்களில் ஒடுக்கப்பட்ட மக்களை தீட்டாக வைத்து வழிபாட்டு உரிமையை மறுத்ததை எதிர்த்தநாராயணகுரு ஈழவ மக்களுக்காக தனியாக கோயில்களை உருவாக்கினார். நம்பூதிரிகளும், நாயர்களும் அதை எதிர்த்தனர். எதிர்த்த நம்பூதிரி ஒருவனிடம் "இது நம்பூதிரி சிவனுக்கான கோயிலல்ல, இது ஈழவ சிவன் கோவில்" என்றாராம் நாராயணகுரு. எங்களை எங்கள் வழியில் வாழவிடு என்பதாக அமைந்த நாராயணகுருவின் பாதை அணுகுமுறை பார்ப்பனீயத்தை உலுக்கியது.

பார்ப்பனீய கொடுங்கோன்மையில் சாலையில் நடக்க கூட உரிமையில்லாதவர்களாக புலையர் சாதி மக்கள் நடத்தப்பட்டனர். கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின்னரும் தங்களது பொருளாதாரமும், வாழ்க்கையும் முன்னேறாமல் இருந்த புலையர் சாதி மக்கள் சாலைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பொது வசதிகளுக்காக இயக்கமாக போராட்ட துவங்கினர். 1893ல் புலையர் சாதியினர் வெங்கனூர் என்னும் இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை துவங்கினர். இந்த பள்ளிக்கூடம் ஆதிக்கசாதியினரால் தகர்க்கப்பட்டது. புலையர் சாதி மக்களிடமிருந்து பிறந்த ஒருவர் அதை எதிர்த்து கடுமையாக போராடினார். ஆதிக்க சாதியினர் நிலங்களில் விவசாய வேலைகள் செய்வதை புறக்கணிக்க அழைப்பு விடுத்தார் அந்த மனிதர். மாட்டு வண்டியில் பொது சாலையில் சென்று போராட்டம் துவங்கினார். 1898ல் அவர் தலைமையில் பொது சாலையில் புலையர்கள் நுழையும் போராட்டத்தை நடத்தினார். புலையர் சாதி மக்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் மோதல்கள் வெடித்தன. கன்னியாகுமரி, நெய்யாற்றின்கரை, வைக்கம் முதலான இடங்களில் வெடித்த போராட்டங்களை அரசு அடக்கியது. இந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய மாபெரும் மனிதர் தான் அய்யன்காளி. அய்யன்காளி, வலிக்கர சோதி முதலிய தலைவர்களின் போராட்டங்களின் பலனாக புலையர் சாதி மக்களுக்கு கல்வி உரிமைக்கான சட்டத்தை 1914ல் திருவிதாங்கூர் அரசு உருவாக்கியது. இந்த சட்ட உரிமையை ஆதிக்க சாதியினர் கடுமையாக எதிர்த்தனர். புல்லத்து என்ற இடத்தில் புலையர் சாதி குழந்தைகள் படித்த பள்ளிக்கூடத்தை நாயர்கள் தீவைத்து கொழுத்தினர். இந்த பிரச்சனையில் காலனியாதிக்க அரசு தலையிட்டது.

நாடு முழுவதும் கலனியாதிக்கத்தின் பிடி அழுத்தமாக இருந்த வேலையிலும் பார்ப்பனீய கொடுங்கோன்மை ஆதிக்க சாதிகளால் நடத்தப்பட்டே வந்தன. குறுநில மன்னர்கள் போல திருவிதாங்கூரின் பல பகுதிகளின் பல கிராமங்களை நம்பூதிரிகள், நாயர்கள் கூட்டணி ஆட்சி செய்து வந்த அதிகார மையங்களே இதற்கு அடிப்படை காரணம். இந்த அதிகார மையங்கள் மன்னனுடன் தொடர்பை வைத்திருந்தது. கோவிலை சுற்றி அமைந்த பல கிராமங்களை உள்ளடக்கி ஆளப்பட்ட இந்த பகுதிகள் சங்கேதம் என்று அழைக்கப்பட்டன. சட்டம் ஒழுங்கை கவனிக்க தனியாக படைகள் எதுவும் இல்லாமல் இருந்தாலும் இவை அதிகார மையங்களாக விளங்கியது (தகவல்: கொச்சி இராச்சியம், K.P.மேனன், 1911)

நாடார் பெண்கள் தங்கள் உடலின் மேல்பகுதியில் (இடுப்புக்கு மேலே) மார்பை மறைக்க இடுப்புக்கு மேல் துணி அணிய உரிமை மறுக்கப்பட்டது. மீறி ஜாக்கட் அணிந்த பெண்கள் கொடும் துயரத்துக்கு ஆளாயினர். நாடார் சாதி மக்களின் போராட்டங்களும், ஐரோப்பிய மிஷனரிகள் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு கொடுத்த அழுத்தத்தின் விளைவாகவும் 1829-ம் ஆண்டு திருவிதாங்கூர் அரசு நாடார் பெண்கள் குப்பாயம் எனப்படும் ஒருவித ரவிக்கையை மட்டும் அணியலாம் என்று அனுமதித்தது. ஆனால் அவர்கள் மேல்சாதி பெண்களைப் போல நல்ல உடை அணியக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாயர்களின் எதிர்ப்பு காரணமாக அந்த உத்தரவை நடைமுறைபடுத்த முடியவில்லை. 1859ல் தெற்கு திருவிதாங்கூரில் (குமரிமாவட்டம்) இரணியல், கோட்டார், திட்டுவிளை, தொடுவெட்டி மற்றும் பல ஊர்களில் நாடார் சாதி மக்களை நாயர்கள் கடுமையாக தாக்கி வீடுகளை எரித்தனர். அவர்களது ஜாக்கெட்களை நாயர்கள் கிழித்தெறிந்த கொடுமை தொடுவெட்டி (மார்தாண்டம்), அருமனை என கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்தது.1870ல் குமாரகோவில் திரு.வெள்ளையன் நாடார் தலைமையில் 12000 சாணார் சாதி மக்கள் கோவிலில் நுழைந்தனர். ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலில் அனுமதிக்காது நாயர்கள் தாக்கியதில் 150 சாணார் சாதியினர் கொல்லப்பட்டனர். இதுபோல பார்ப்பனீய இந்து கோவில்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நுழையவிடாத நிலை திருவிதாங்கூர் முழுவதும் இருந்தது.அய்யாவழி இப்படியான காலச்சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்துதாழக்கிடப்பாரை தற்காப்பதுவே தர்மம் என அந்த மக்களின் உரிமைக்காக அய்யாவழி தனி மதமாக பிறந்தது. இல்லறமே உயர்ந்த அறமாக போதித்த அய்யா வைகுண்டர் இல்லறத்தையே கடைபிடித்தார். இயற்கையான வழியும், வாழ்வுமே அய்யாவழியின் அடிப்படை என்பதற்கு துறவறமின்மை, கண்ணாடியில் தன்னையே கண்டு வணங்குதல், சுயமரியாதைக்கு அடையாளமான தலைப்பாகை, ஒரே கிணற்றில் எல்லோரும் சமமாக தண்ணி அருந்துவது, சாதி பாகுபாடின்மை என பல அடையாளமாக உள்ளன (அய்யாவழி பற்றி முந்தைய பதிவுகள் இங்கே: அய்யாவழி மதத்தின் வரலாறு,பார்ப்பனீய பிடரியை உலுக்கிய அய்யாவழி!). ஒடுக்கப்பட்ட மக்களின் மாமனிதர்களில் அய்யாவும் ஒருவர்..பார்ப்பனீய கொடுங்கோன்மை திட்டங்களையும், கொள்கைகளையும் அறவே எதிர்த்து பல தளங்களில் போராடியவர்கள் தான் அய்யா, நாராயணகுரு, அய்யன்காளி போன்ற எண்ணற்ற மாவீரர்கள். இன்று அவர்களை பார்ப்பனீய இந்துவெறி ஆர்.எஸ்.எஸ் சொந்தமாக்க முனைவது ஓநாய் அழுவதை தான் நினைவுபடுத்துகிறது. நம்பூதிரிகளும், நாயர்களும் நடத்திய கொடுங்கோன்மை கோரத்தாண்டவத்தை திருத்தி எழுத பார்ப்பனீயவாதிகள் முயல்கிறார்கள். இதன் பின்னணியில் சமகால சமூக அரசியல் காரணங்கள் இருக்கின்றன. கன்னியாகுமரியிலும், கேரளாவிலும் சங்பரிவாரங்களை 1970, 1980 களில் உருவாக்கி களம் அமைத்ததும், கலவரங்களை தூண்டியதும் நாயர்கள். தங்களது இழந்த அதிகாரம் ஆர்.எஸ்.எஸ் வழியாக கிடைக்குமா என அலையும் ஆதிக்கசாதிகளுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய தலைமுறை பலிக்கடாவாக ஆக்கப்படுகிறது காலத்தின் சுழற்சி. ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை அழிப்பது, திருத்துவதன் வழி பார்ப்பனீயவாதிகள் தங்கள் தவறுகளை ஆங்கிலேயர்கள், கிறிஸ்தவ மிசனரிகள் மீது போட்டு தப்பிக்க முயல்கிறார்கள். இதற்காக ஒடுக்கப்பட்ட மக்களின் வழிபாட்டு முறைகளில் சங்கப்பரிவாரங்களின் ஊடுருவலும், ஆர்.எஸ்.எஸ் கிளைகளும் உருவாக்கப்படுகின்றன. மாற்றத்தை உருவாக்கும் அமைப்புகளின் தனித்தன்மையை அதிக்கசக்தியினர் அழித்து, வரலாற்றை திரித்து            உதவிய நூல்கள் A Caste and Social Change in Colonial Kerala - essay by: D.Damodaran Namboodiri. Perspectives on Kerala History - The Second Milennium, P.J.Cherian (Ed)

  1. Religion and Sub-altern Agency - Dr. G.Patrick : University of Madras
  2. Slavery in Travancore, 1973, K.K. Kusuman
  3. Dr. Sobhanan, Temple Entry Movement and Sivakasi Riots, K.Kesavan, கோவில் நுழைவுப் போராட்டங்கள்

குற்றப்பழியிலிருந்து தப்பிக்க பார்ப்பனீயம் துடிக்கிறது.  

 

 http://www.thiruvalluvar.in/2007/02/blog-post.html                                                                                

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீட்டில் செயற்கையாக தேனீ/தேன்கூடு வளர்ப்பவர்கள் தேனீக்கு சீனிப்பாணி கொடுக்கின்றார்கள் என கேள்விப்பட்டேன். கடையில் விற்பனை செய்யப்படும் தேன் எப்படிப்பட்ட தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதோ யார் அறிவார். உண்மையான தேன் குளிர்காலத்தில் கட்டியாகாது என நினைக்கின்றேன்.
    • இசை அரசனும்..... நடிப்பு அரசனும்....  
    • திண்ணையில் ஒரு நாளைக்கு பத்து கருக்கு மட்டைக்கு மேல் வைக்க முடியாது என்ற கட்டுப்பாடுடன் திண்ணையை துறப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை 😄
    • பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.  
    • முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில்  பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.