Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெட்ராஸ் கபே - தடுத்து நிறுத்த தமிழக, புலம்பெயர் அமைப்புக்கள் முடிவு

Featured Replies

madras%20cafe%20murasu.jpgதமிழர்களுக்கு எதிரான ‘மெட்ராஸ் கபே’ திரைப்ப படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என தமிழக அமைப்புகளும், கட்சிகளும் தமது எதிர்ப்பை காட்டமாக வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் எடுக்கப்பட்ட மெட்ராஸ் கபே என்ற திரைப்படம் தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய தமிழக உணர்வாளர்களும் தமிழ் அமைப்புகளும், அப்படம் வெளியிடப்படுவதற்கு முன்னர் தங்களுக்குப் போட்டுக்காட்ட வேண்டும் என வலியுறுத்தியதுடன், இது தொடர்பாக தமிழக காவல்துறை ஆணையாளரிடம் மனு ஒன்றையும் கொடுத்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பதில் அளித்த படத்தை இயக்கி, நடித்த ஜோன் ஆபிரகாம், தமிழ் அமைப்புகள் விரும்பினால் நாங்கள் படத்தை முன்கூட்டியே காட்டுவோம் என்று தெரிவித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இப்படம் போட்டுக் காண்பிக்கப்பட்டது.

திரைப்படக் குழு, ம.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, தமிழர் முன்னேற்ற கழகம், திராவிட விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு  மற்றும் சில தமிழ் அமைப்புகள் மற்றும் இயக்குநர் கௌதமன், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் சீமான் ஆகியோர் உட்பட பலரும் இப்படத்தை பார்த்தனர். படத்தைப் பார்த்த இவர்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர்.

படத்தை பார்த்து வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்டபோது, மிகவும் கோபத்துடன் ‘மெட்ராஸ் கபே’ திரைப்படத்தை தமிழகத்தில் எங்கும் வெளியிடக் கூடாது என்றும் அதனை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். இத்திரைப்படம் குறித்து கருத்துவெளியிட்ட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, “மெட்ராஸ் கபே திரைப்படம் ராஜபக்ச பணம் கொடுத்து, சோனியா காந்தி இயக்கி, இந்திய றோ உளவுத்துறை கதை, வசனம் எழுதியது போல் உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் “காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பற்றியும், இந்திரா காந்தியை கொன்ற சீக்கியர்கள் பற்றியும் படம் எடுக்க இந்திய அரசு சம்மதிக்குமா? அப்படி இருக்கும்போது இவ்வளவு பெரிய இனவழிப்பு நடந்து முடிந்த பிறகு, ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னணியில் விடுதலை புலிகள் உள்ளனர் என்பதை பற்றி பொய்யான பல தகவல்களை திரட்டி படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலை புலிகளை கெட்டவர்களாகவும், இந்திய அமைதிப் படையும், சிங்கள அரசும் நல்லவர்களாகவும் காட்டியுள்ள இந்த படத்தை தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கும் தடை செய்ய வேண்டும் என்று இப்படத்தைப் பார்த்த பலரும் வலியுறுத்தியுள்ளனர். உலகில் எங்கு திரையிட்டாலும் தமிழர்கள் அங்கு போராட்டம் செய்வார்கள். தமிழகத்தில் எந்த திரையரங்கிலும் இந்தப் படத்தைக் காண்பிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர்.

இதேவேளை, இத் திரைப்படம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கையன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை மறைத்து, அவர்களின் ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையை நியாயப்படுத்தி ‘மெட்ராஸ் கபே’ என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை பார்த்த எல்லோருக்கும், இது சிறீலங்க அரசு தயாரித்து மகிந்த ராஜபக்ச இயக்குனராக இருந்து எடுக்கப்பட்டத் திரைப்படமோ என்று நினைக்கின்ற அளவிற்குத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

முதலில் ‘ஜப்னா’ என்று பெயரிடப்பட்டு எடுக்கப்பட்டு, பிறகு ‘மெட்ராஸ் கபே’ என்று பெயர் மாற்றம் செய்து, இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள ஜோன் ஆப்ரகாம், யாழ்ப்பாணத்தில் தமிழின மக்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரச படைகளும், இந்திய அமைதிப் படையும் நடத்திய கொலை வெறித் தாண்டவத்தை மறைத்துவிட்டு, ஏதோ ராஜீவ் காந்தியைக் கொல்வதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது போல் சித்தரித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரசு நடாத்திய ஒரு திட்டமிட்ட இன அழித்தலை நியாயப்படுத்த, 1980-90 ஆண்டுகளுக்கு இடையிலான ஒரு காலகட்டத்தை கதைக்கு அடிப்படையாக்கி, தமிழின போராட்டத்தை பயங்கரவாதமாகவும், தமிழின விடுதலைக்குப் போராடிய தமிழர்களை கொலைகாரர்களாகவும் சித்தரித்து எடுக்கப்பட்ட இந்தப் படம், சிங்கள இனவெறி அரசின் தமிழின அழித்தலை நியாயப்படுத்தவே எடுக்கப்பட்டது என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, தமிழினத்தை தீவிரவாத மனப்போக்கு கொண்டவர்களாகச் சித்தரிக்கும் அதே வேளையில், ராஜீவ் காந்தியைக் காப்பாற்ற மலையாள அதிகாரிகள் சிரத்தையுடன் செயலாற்றியதாகவும் சித்தரிக்கிறது.

மெட்ராஸ் கபே திரைப்படத்தைப் பார்க்கும் எந்த தமிழனுக்கும் மலையாளிகள் மேல் கோபம் ஏற்படும். அந்த அளவிற்கு மலையாளிகளை தூக்கி வைத்தும், தமிழர்களைத் தாழ்த்தியும் படத்தை எடுத்துள்ளார்கள். எனவே, இந்த திரைப்படத்தின் பின்னணியில் தமிழினத்தை கேவலப்படுத்தும், தமிழர் - மலையாளிகளிடையே மோதலை உண்டாக்கும் உள்நோக்கம் அப்பட்டமாகத் தெரிகிறது. இலங்கையில் வரும் நவம்பரில் கொமன்வெல்த் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரிக்கும் இத்திரைப்படம், சிங்கள பௌத்த இனவெறி அரசின் போரை நியாயப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகும்.

ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராடத்திற்கான நியாயத்தைப் பற்றி ஒரு வரி கூட பேசாமல், தமிழினம் அங்கு திட்டமிட்ட இன அழித்தலுக்கு ஆளாக்கப்படுவதை மறைத்து, தம் இனத்தைக் காக்க தமிழர்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தை கண்மூடித்தனமான தீவிரவாதமாக சித்தரிக்கும் இத்திரைப்படத்தைத் தமிழர்களால் சகித்துக்கொள்ள முடியாது. இத்திரைப்படம் தமிழர்களின் உணர்வுகளை திட்டமிட்டு கேவலப்படுத்துகிறது. இதனைத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் திரையிடக் கூடாது என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

இதேவேளை, இப்படத்தைத் தடை செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நீண்டதொரு காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது,

‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படத்தில், ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரனை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தத் திரைப்படத்தினை தமிழகத்தில் தடை செய்யாவிட்டால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம்.

ஈழத்தின் விடுதலைக்காக ஈடு சொல்ல முடியாத வீரச்சமர் புரிந்து, உன்னதமான உயிர்த்தியாகம் செய்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தி, அபாண்டமான பழி சுமத்தி, நீதியை நிரந்தரமாகக் குழி தோண்டிப் புதைக்க, இலங்கை அரசு பல முனைகளிலும் தனது அக்கிரமச் செயலை முடுக்கி விட்டு உள்ளது.

எண்பதுகளின் பிற்பகுதியில் இருந்தே ஈழத்தமிழருக்கு வஞ்சகமும், துரோகமும் செய்த இந்தியாவின் காங்கிரஸ் தலைமை, 2004 ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைத் தன் தலைமையில் அமைத்த நாளில் இருந்து, விடுதலைப்புலிகளை அழிக்க, இலங்கை அரசோடு இணைந்து செயல்பட்டது. முப்படைத் தளபாடங்களையும் தந்தது யுத்தத்தை முழுக்க முழுக்க இயக்கியது. அந்த முயற்சியில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களையும் கொன்று குவித்தனர். ஈழத்தமிழர் இனப்படுகொலையின் கூட்டுக் குற்றவாளிதான் இந்திய அரசு. அதனால்தான் உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவவும், சிங்கள அரசைப் பாதுகாக்கவும் திட்டமிட்டது.

தற்போது பொதுநலவாய மாநாட்டை கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்து இருக்கிறது. இதயங்களில் இரத்தத்தைக் கொட்டச் செய்யும், தமிழ் இனக்கொலைக் காட்சிகளை, செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டபோதுதான் நடந்த கொடூரம் உலகுக்குத் தெரிந்தது. குறிப்பாக, எட்டு ஈழத் தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாக கண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சியும், இசைப்பிரியா மிகக் கொடூரமாக இராணுவத்தால் கொல்லப்பட்ட காட்சியும், மனித மனங்களை உலுக்கின.

ஈழத்தில் நடத்திய படுகொலைகளை மறைப்பதற்காக சிங்கள அரசும், செய்த துரோகத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் இந்திய அரசும், திட்டமிட்டு, இந்தியாவில் உள்ள ஒரு திரைப்பட நிறுவனத்தைப் பயன்படுத்தித் தயாரித்த படம்தான் ‘மெட்ராஸ் கஃபே’ எனும் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், பிரதானப் பாத்திரத்தில் நடித்துள்ளவனுமான, கேரளத்தைச் சேர்ந்த ஜான் ஆபிரகாம், இரகசியமாக கொடியவன் மகிந்த ராஜபக்சவை, இருமுறை சந்தித்து உள்ளான். இலங்கையிலும் படப்பிடிப்பு நடத்திவிட்டு, தற்போது, இல்லை என்று மறுக்கவும் செய்கிறான். இந்தப் படத்தை, சூஜித் சர்கார் என்பவன் இயக்கி உள்ளான்.

1987 இல், இந்திய அமைதிப்படை, இலங்கைக்குச் சென்றதைப் பின்புலமாகச் சித்தரித்து, இப்படத்தை எடுத்து உள்ளனர். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைக் கொடூரமானவர்களாகவும், இந்திய இராணுவத்தினர் பலரை அவர்கள் கொன்றதாகவும், அமைதிப்படை இந்தியா திரும்பிய பின்னர், இந்தியாவின் உளவு நிறுவனமான றோ அமைப்பின் அதிகாரியாக, கேரளத்தைச் சேர்ந்தவராக, இலங்கைக்கு படத்தின் கதாநாயகன் ஜான் ஆபிரகாம் சென்று, அங்கு உள்ள நிலைமையை அறிவதாகவும், பின்னர் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதாகவும், இப்படம் சித்தரிக்கிறது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், பாஸ்கரன் என்ற பெயரில், படத்தில் ஒரு பாத்திரமாக்கி, ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பதே, அன்றைய ராஜீவ் காந்தி அரசு, ஈழத்தமிழர்களுக்குச் செய்த மன்னிக்க முடியாத, துரோகம் ஆகும்.

நயவஞ்சகமாகப் பொய் சொல்லி, தலைவர் பிரபாகரன் அவர்களை இந்தியாவுக்கு அழைத்துக் கொண்டு வந்து, அவரது விருப்பத்துக்கு எதிராக, கட்டாயப்படுத்தித் திணித்த ஒப்பந்தம்தான் ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என்பதை, ஓகஸ்ட் 4 ஆம் நாள் சுதுமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பிரபாகரன் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

‘பிரபாகரன் தலைக்குப் பத்து இலட்சம் பரிசு’ என்று இந்திய இராணுவ அமைச்சர் கே.சி.பந்த் அருகில் இருக்க, ஜெயவர்த்தனா அறிவித்தார். தியாக தீபம் திலீபன், துளி நீரும் பருகாமல் உயிர்ப்பலி ஆனதற்கும் இந்திய அரசே காரணம். குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட, 12 புலிப்படைத் தளபதிகள், நச்சுக்குப்பி கடித்து மடிவதற்கும், இந்திய அரசே காரணம். 1987 அக்டோபரில், பிரபாகரனைக் கொலை செய்ய, இந்திய இராணுவ கொமாண்டோக்களை ஏவினர். புலிகளின் செய்தித்தாள் அலுவலகங்கள், தொலைக்காட்சி அலுவலகத்தை, இந்திய இராணுவம் தாக்கி அழித்தது.

எண்ணற்ற தமிழ்ப் பெண்களைக் கற்பழித்தனர். யாழ்ப்பாண மருத்துவமனையின் மீது குண்டுகளை வீசினர். ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்தனர். ‘தமிழர்களின் சடலங்கள், சாலை ஓரங்களில் கிடக்கின்றன. நாய் நரிகளும், காக்கை கழுகுகளும் தின்னுகின்றன’ என்று, இலண்டனில் இருந்து வெளியாகின்ற கார்டியன் பத்திரிகை தெரிவித்தது.

இந்திய இராணுவத்தின் இக்கோரத் தாண்டவத்தைப் பற்றி, ஒரு வினாடி காட்சி கூட இத்திரைப்படத்தில் கிடையாது. இந்திய உளவுத்துறை நிறுவனமான றோ, பிரபாகரனைக் கொலை செய்யப் பலமுறை திட்டமிட்டது. அதற்காக, மாத்தையா, கிருபன் போன்ற துரோகிகளைப் பயன்படுத்தியது. போரை நிறுத்துமாறும், பேச்சுவார்த்தைக்குத் தான் தயார் என்றும், பிரபாகரன், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எழுதிய எட்டுக் கடிதங்கள் எழுதியும், அவற்றை ராஜீவ் காந்தி குப்பைத் தொட்டியில் போட்டார்.

இந்திய உளவு நிறுவனம் றோ, விடுதலைப் புலிகளின் முன்னாள் யாழ் தளபதி ஜொனியை, சென்னையில் இருந்து வன்னிக்காடுகளுக்கு அருகில் சேர்த்து, பிரபாகரனைச் சந்தித்து வருமாறு அனுப்பி வைத்தது. அவர் திரும்பி வருகையில், இந்திய இராணுவமே அவரைச் சுட்டுக் கொன்றது. இப்படி ஒரு துரோகத்தை உலகில் எந்த நாடும் செய்தது இல்லை. 1993 யாழ்ப்பாணத் தளபதி கிட்டுவை, இந்தியக் கடல் எல்லையில் இருந்து பலநூறு கிலோ மீட்டர்களுக்கு அப்பால், பன்னாட்டுக் கடல் பரப்பில், இந்தியக் கடற்படை முற்றுகை இட்டுத் தாக்கிக் கொன்றது.

இந்திய இராணுவம் ஈழத்தில் இழைத்த கொடுமைகளை, மனதில் ஆறாத இரணமாகிப் போன ஈழத்தமிழர் துயரத்தை, இந்திய அரசின் துரோகத்தை, நான் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் முன்னிலையிலேயே, நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டாகப் பதிவு செய்து இருக்கிறேன். 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சோனியா காந்தி இயக்குகின்ற காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பெருந்துரோகத்தால், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த துரோகத்தை மறைக்கவும், கொடிய இந்திய அரசுக்குத் தொடர்ந்து உதவவும், இலங்கை-இந்திய அரசுகளின் திட்டமிட்ட ஏற்பாடுதான், ஜோன் ஆபிரகாமின் மெட்ராஸ் கஃபே திரைப்படம் ஆகும். என்ன கொழுப்பு இருந்தால், நம்மை யார் என்ன கேட்க முடியும் என்ற திமிர் இருந்தால், படத்துக்கு ‘மெட்ராஸ் கஃபே’ என்று பெயர் சூட்டுவான்? ஈழத்தமிழர்களுக்குப் பெருங்கேடு செய்த ஜே.என். தீட்சித், இந்திய அரசின் துரோகத்துக்குக் ஆலோசனைகள் கூறிய எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன், கொடியவன் ராஜபக்சவுக்கு ஆலோசகரான சுதீஷ் நம்பியார் போல, கேரள மண்ணில் இருந்து மற்றொருவன் ஜான் ஆபிரகாம். மெட்ராஸ் கஃபே திரைப்படத்தைத் தயாரிப்பதற்கு, இந்திய அரசும், சிங்கள அரசும், பெருமளவுக்கு உதவி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

1984 இல், புதுடில்லியில் நடைபெற்ற பிரதமர் இந்திரா படுகொலையைப் பின்புலமாகக் கொண்டு, சீக்கிய இன மக்களை இழிவுபடுத்தித் திரைப்படம் தயாரிக்கும் துணிச்சல், பாலிவுட் திரை உலகுக்கு உண்டா? அப்படி ஒரு படம் தயாரித்து, பஞ்சாபில் திரையிட முனைவானா? தமிழர்கள் சொரணை அற்றுப் போய் விட்டார்களா? சோற்றால் அடித்த பிண்டங்களா? தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள், இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டபோது, நெஞ்சு கொதித்ததால்தான், கொழுந்து விட்டு எரிந்த மரண நெருப்புக்கு, முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்கள், தங்கள் உயிர்களைப் பலியிட்டனர். தமிழனுக்கு நீதி கேட்டு நாம் போராடுகிறோம். நீதியை அழிக்க, வல்லாண்மை சக்திகள், வேகமாக வேலை செய்கின்றன.

இந்தக் கூட்டுச் சதியை, தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், உலக நாடுகளில் வசிக்கின்ற தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும். உலகின் எந்தப் பகுதியில் இப்படம் திரையிடப்பட்டாலும், அங்கு உள்ள தமிழர்கள், தங்கள் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்ய வேண்டும். ஓகஸ்ட் 23 ஆம் திகதி படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் திரைப்படத்தை இந்திய அரசு தடை செய்ய வேண்டும். இதனை மீறி படம் திரையிடப்பட்டால், மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களில் உள்ள தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தடுப்பதற்கு அறப்போர் நடத்திட வேண்டும்! தமிழகத்தில் திரையிடுவதற்கு, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது திரை அரங்குகளின் உரிமையாளர்கள் திரையிடக் கூடாது என வேண்டுகிறேன். தமிழகத் திரை உலகத்தினர்,

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையிடுவதைத் தடுப்பதற்கு முன்வர வேண்டுகிறேன். இதற்கு மேலும் இப்படம் தமிழ்நாட்டில் திரையிடப்படுமானால், அதனைத் தடுப்பதற்கு, திரை அரங்குகளை முற்றுகை இடும் அறப்போரை நடத்துவோம்’ என்று வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதேவேளை, புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் இந்தப் படத்தை திரையிட்டால் அந்தத் திரையரங்குகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த புலம்பெயர்ந்த அமைப்புக்கள் பலவும் தயாராகிவருவதாக தெரியவருகின்றது. குறிப்பாக ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் தற்போது இப்படத்திற்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்றுள்ளன.

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/32428/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் அவலத்தை , முள்ளிவாய்க்கால் அவலத்தை , விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்பதை எடுத்துக் காட்டும் ஒரு ஆங்கில படத்தை அல்லது சர்வதேச அரங்கில் எமது போராட்ட நியாயத்தை எடுத்துக் காட்டும் ஒரு படத்தை சீமான் , வைகோ ,  இயக்குநர் கௌதமன், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் சீமான் ஆகியோர்  ஏன் எடுக்கவில்லை.

 

 

 

மேலே உள்ள கட்டுரையை எழுதியவர் பணம் போட்டால் சீமான், செல்வமணி போன்றவர்கள் படம் எடுப்பார்கள்..! :D ஏனென்றால் அந்தப் படம் தியேட்டருக்கே வராது.. தணிக்கைக்குழுவுடன் நின்றுவிடும்.. இதுதான் அங்குள்ள ஜனநாயகம். :unsure:

 

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இது தவறான அணுகுமுறை.. இறுதி நோக்கம் என்ன என்பதை மட்டும் பார்க்கவேண்டும்.. ராஜபக்ச இனக்கொலையாளன் என்று சொல்வதற்கு அமைப்புகளின் அனுமதி தேவையில்லை.. "Our issue" என்று நீங்கள் பிரித்து சொல்லப்போனால் தமிழ்நாடு ஒதுங்கிக் கொள்ளும் பரவாயில்லையா..

 

உலகத் தமிழினம் என்பது ஒன்றுபட்ட இனமாகக் கருத வேண்டும்.. ஈழ தமிழ், தமிழக தமிழ், மலேசிய தமிழ் என்று பிரிவினை காட்டக் கூடாது.. நோக்கம் ஒன்றாகவும், செயற்பாடுகள் பலவாறாகவும் இருக்க வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள கட்டுரையை எழுதியவர் பணம் போட்டால் சீமான், செல்வமணி போன்றவர்கள் படம் எடுப்பார்கள்..! :D ஏனென்றால் அந்தப் படம் தியேட்டருக்கே வராது.. தணிக்கைக்குழுவுடன் நின்றுவிடும்.. இதுதான் அங்குள்ள ஜனநாயகம். 

 

அதையும் மீறி தமிழக திரைகளுக்கு வந்தாலும், "உச்சிதனை முகர்ந்தால்.." படத்திற்கு நேர்ந்த கதிதான் ஏற்படும். (ஏதாவதொரு அரசியல் கட்சியின் பின்புலம் இல்லாவிடின் அப்படித்தான்,இதுவும் இங்குள்ள சனநாயகம்! )

  • கருத்துக்கள உறவுகள்

 

உது தம்பி குழப்பல் வாதம் . உவனுகள் எல்லாம் டைரட்டர் மார் எண்டுறானுகள், அவன் ஆர்.கே.செல்வமணி, நடிகர்  சங்க செயலாளர் எண்ணுறான் . 
 
தம்பி எங்களை நாங்களே ஏமாத்த விதண்டாவாதம் செய்யக் கூடாது .
மனமிருந்தால் எல்லாத்துக்கும் இடம் உண்டு . சயிக்கிளிலை புறப்பட்ட புலிகளை விமானம் வாங்க வைத்த சனம் எங்கடை தமிழ் சனம் .
 
 
 
சனம் காசு தர இல்லை எண்டால் சனம் நம்பக் கூடியளவுக்கு நாங்கள் செயல்படவில்லை .
 
நான் நல்லதுக்கு தான் சொன்னென். என் இனம் நல்லா இருக்க வேன்டும் எண்டுதான் சொன்னேன் .
யாரையும் திட்டும் நோக்கம் இல்லை . 
உணமையை சொன்னேன் 

who told you produce it in India ? 

 

Madras Cafe was produced in Thailand because India did not allow real machine gun use. 

 

 

மதுரைக்காரரே மேலே கருத்து சொல்லியுள்ளார்.. உங்களுக்கு, எனக்கு தெரிந்ததை விட இந்திய நிலமைகள் அவருக்கு நன்றாகவே தெரியும்..

 

இந்தியாவுக்கு வெளியே தயாரிக்கலாம்.. பிரச்சினையில்லை.. எங்கே வெளியிடுவீர்கள்? ஆங்கிலத்திலா? இந்தியிலா? தமிழிலா?

 

அவன் இந்தியரைக் கைக்குள் வைத்திருக்க படமெடுத்து இந்தியாவில் வெளிவிடுகிறான்.. சீமான், செல்வமணி போன்றவர்களால் தமிழருக்குத்தான் படம் பண்ண முடியும்.. அதை இந்தியாவில் வெளியிட முடியாதென்றால் அதை எடுத்து ஒரு பிரியோசனமும் இல்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

who told you produce it in India ? 

 

Madras Cafe was produced in Thailand because India did not allow real machine gun use. 

 

 

Oh... I am extremely sorry sir,  I thought that you are requesting us to produce, direct  that movie and release the same in Tamil Nadu. 

 

Please pardon me.

 

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தடித்த எழுத்தில் எழுதினாலும் பதில் ஒன்றுதான்..:D தனி ஈழம் இறுதி இலட்சியம்.. அதற்கு சிறு அணில்போல யார் குரல் கொடுத்தாலும் தட்டி உற்சாகப்படுத்த வேண்டும்.. நயவஞ்சகம் செய்பவர்களை ஓரமாக தள்ளிவைக்க வேண்டும்.. அனுமானங்களின் அடிப்படையில் சந்தேகங்களை தொடுத்து முடிவுகள் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்..!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்துக்கும் சீமானும். செல்வமணியும் தான் போராட வேண்டும்.. மிச்ச எல்லாரும் சும்மா குந்தியிருந்தாலும் ஆட்சியில் இருக்கலாம்.. இது நல்ல நியாயம்.. :D

 

முல்லைப் பெரியார் விவகாரத்துக்கு முதலில் வருகிறேன்.. இறுதியாக கேரள அரசு நீதி மன்றத்தில் சொன்னது என்ன? இது தெரிந்திருந்தால் இந்தக் கேள்வியே எழுந்திராது..

 

நிற்க, திமுக, அதிமுக, காங்கிரஸ் என்று தமிழகத்தை ஆண்டவர்கள் உள்ளார்கள்.. ஆனால் முல்லைப் பெரியார் பிரச்சினையை தீர்க்க வேண்டியது சீமான் என்பதுபோல் இருக்கு நீங்கள் சொல்வது.. ஒரு தேர்தலைக் கூட சந்திக்காதவருக்கு இது அதிகப்படி இல்லையா? :D

அவர்கள் எங்களுக்காக குரல் கொடுப்பதிக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். குறை அல்ல. நாங்கள் தான் பாதிக்கப்பட்டவர்கள் . அவர்கள் எங்களுக்கு உதவுபவர்கள். எங்கள் போராட்டத்தை நாங்கள்தான் செய்யணும். நாங்கள் ஏன் இப்படி ஒரு படத்தை எடுக்கக் கூடாது. அதையும் அவர்களிடம்  இருந்தா எதிர்ப்பார்க்ககணும்?அவர்களிடம் இருந்து உதவி வரும் (அல்லது வராது). நாங்க ஒற்றுமையாக இல்லாமல் எப்பவுமே யாரையும் குறை சொல்ல பழகிவிட்டோம் :(

 

குறை சொல்லாமல் வழி காட்டுங்கோ. நல்ல வழியாக இருந்தால் வருகிறோம்

  • கருத்துக்கள உறவுகள்
சீமானும் , வைகோவும் , ......மட்ராஸ் கபேயை தடை செய் என்று கதைவிடுகினம் . அதை பலர் துக்கிப் பிடிச்சு ஆடுகினம் .

 

 

ம் நாங்கள் மேற்கு நாடுகளுக்கு தப்பி வந்து குடிச்சு கும்மாளம் அடிப்போம். சீமானும் வை.கோவும்  எமக்காக ஏன் குரல் கொடுக்க வேண்டும்??. அப்படி குரல் கொடுத்தாலும் ஏதோ சுயநலநோக்கில் தான் செய்கிறார்கள் என்று குற்றச்சாட்டுக்களுக்கும் குறைவில்லை.

நாங்கதானே நீங்க சொல்கிற public . நாங்க தெளிவாக இருக்கிறம். சுயபுத்தி இருக்கிறவனை  திசை திருப்ப முடியாது. இந்த நான்கு விடயங்களை அவர் முன் தள்ளவிட்டால் என்ன?

நாங்கள் முன் தள்ளுவமே!

 

A bad workman blames his tools.

Edited by கா ளா ன்

  • கருத்துக்கள உறவுகள்

Sostamils,

உங்கள் முன் அனுமதியைப் பெற்ற புலம்பெயர் அமைப்புகளின் பட்டியல் உள்ளதா? :D இருந்தால் நாம்தமிழர் முகப்புத்தகத்தில் ஒட்டிவிடலாம்.. :o:D

you stated that  ////அவர்கள் எங்களுக்காக குரல் கொடுப்பதிக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். ////

 

வன்னித் தலமைப் பீடம் இருந்த பொழுது இப்படி நடந்திருக்குமா ? ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர் யாராய் இருந்தாலும் தமிழீழ அரசியல் தலமையுடன் கலந்தாலோசித்து அவர்களின் இரகசிய  அரசியல் வேலைத் திட்டத்துக்கு அமையவே போராட்டங்கள் முன் எடுக்கப்பட்டன .
 
இன்று சீமான் & கோ,
 
தமிழீழ அமைப்பிடமும் அறுவுறுத்தலுக்கும் காத்திராது தான் தோன்றித் தனமாக செயல்படுகின்றார்கள் .
ஈழத் தமிழர் அமைப்புக்கள் அத்தனையும் நிராகரிக்கப்பட வேண்டியவை என்கிறாரா சீமான் .  
ஒரு கப்பலுக்கு ஒரு கப்டன் தான் இருக்க முடியும் .

I looked  at the title of this post it stated that I quote  "

"மெட்ராஸ் கபே - தடுத்து நிறுத்த தமிழக, புலம்பெயர் அமைப்புக்கள் முடிவு"

 

Now can anybody tell me which diaspora organisation had a meeting discussed about this matter and made a decision .

I will give up politics if any one can the leader of that Eelam Tamils organisation

and justify his authority to decide so on behalf of Eelam Tamils..

I looked  at the title of this post it stated that I quote  "

"மெட்ராஸ் கபே - தடுத்து நிறுத்த தமிழக, புலம்பெயர் அமைப்புக்கள் முடிவு"

 

Now can anybody tell me which diaspora organisation had a meeting discussed about this matter and made a decision .

I will give up politics if any one can the leader of that Eelam Tamils organisation 

and justify his authority to decide so on behalf of Eelam Tamils..

 

 

இப்பவும் யாரையும் சொல்ல சொல்லி கேக்கிறீர்களே தவிர நீங்கள் செய்யவில்லை! :o

உங்களுக்கு தெரியவேனும் என்றால் செய்தியை சங்கதி வெளியிட்டு உள்ளது. தொடர்பு கொண்டால் அவர்கள் உங்களுக்கு விபரம் தருவார்கள்

 

நான் உங்களுக்கு பதில் எழுதியது. நீங்கள் அவர்கள் படம் எடுக்கவில்லை என்று குறை சொன்னதிக்கு

 

  • தொடங்கியவர்

அன்பிற்கினிய இனியோருவின் கருத்தாளர் சந்திர மௌலி அவர்களே நீங்க ஆதரிக்கும் குழுவும் ஐநாவில் எதோ வெட்டி புடுங்கு கின்றோம் என்றாகள் அவர்கள் என்ன செய்தார்கள் என்று கூர முடியுமா? 

வெறுமனே எமக்காக உதவுபவர்களையும் வெளியில் கலைக்காமல் கருத்து எழுதுங்கள்  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நான் IGTC (Inter-Galactical Tamil Congress) இல் உறுப்பினராக உள்ளேன். பால்வீதி உட்பட ஏனைய கலக்சிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டது இந்த அமைப்பு.. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இங்கு தேர்தல் நடத்தப்படும்.. அதற்கு பிரபஞ்சம் முழுவதும் வாக்குச்சீட்டு அனுப்பப்படும்.. ஆனால் வெளியார் யாரும் வந்து வாக்களிக்கவில்லை.. :( ஜனநாயக உரிமையை அவர்கள் பயன்படுத்தாமைக்கு நாம் என்ன செய்ய முடியும்? :unsure::(

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து சுதந்திரம்

--------------------------

நாள் முழுக்க கடுமையாக உழைக்கும் மக்களுக்கு நிச்சயமாக ஒரு பொழுதுபோக்கு தேவை. அதிலும், தங்கள் ரத்தத்தையே வியர்வையாக பெருக்கெடுத்து ஓடவைத்து, சுட்டெரிக்கும் வெயிலையோ, கொட்டோ கொட்டு என்று பெய்யும் மழையையோ பொருட்படுத்தாமல், பணியாற்றும் உழைப்பாளிகளுக்கு அவர்கள் களைப்பு தீர, இனிமையாக தங்கள் நேரத்தை செலவழிக்க, ஒரு வடிகால் நிச்சயமாக தேவை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பொழுதுபோக்கை நாடிச்செல்கிறார்கள். சிலருக்கு விளையாட்டுத்தான் பொழுதுபோக்கு, சிலருக்கு புத்தகம் படிப்பது பொழுதுபோக்கு, சிலருக்கு பாட்டுக்கச்சேரிகளுக்கு சென்று பாட்டுக்கேட்பது பொழுதுபோக்கு.

ஆனால், பெரும்பான்மையான ஏழை–எளிய, பாட்டாளி மக்கள், நடுத்தர மக்கள் போன்றவர்களுக்கு குறைந்த செலவில் கிடைக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமாதான். சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க செல்பவர்கள், ஒரு புனித தலத்துக்கு செல்லும் உணர்வோடோ, பயபக்தியோடோ செல்வதில்லை. ஒரு ஜாலியான உணர்வோடுதான் செல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், சினிமா என்பதையோ, அல்லது சினிமாவில் வரும் காட்சிகளையோ ஒரு நீதி போதனைகளாகவோ, மறைபொருளாகவோ யாரும் நினைப்பதில்லை. கொஞ்ச நேரம் மகிழ்வோடு பொழுதை கழிக்க உதவும் ஒரு சாதனமாகவே எண்ணுகிறார்கள். மக்களின் பேராதரவு இருப்பதால்தான் சினிமா அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. புது புது டெக்னிக்குகள் வந்துள்ளன. மக்களின் ரசனையும் பெருமளவில் மாறிவருவதால்தான், இப்போதெல்லாம் வித்தியாசமான கதைகளில் படம் எடுக்கப்படுகிறது. அதிலும் யதார்த்த வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள், மக்கள் பார்த்த, பார்க்கும் நிகழ்வுகள் படமாக எடுக்கும்போது, அத்தகைய படங்கள் பெரும் வரவேற்பைப் பெறுகிறது.

இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, ஏன் உலகம் முழுவதும் மக்களிடம் உள்ள மனோபாவம் இதுதான். அந்த வகையில்தான், சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஒரு ஜனாதிபதியின் மரணம் என்று ஒரு படம் வெளிவந்தது. ஓகோ என்று ஓடிய படம் அது. அந்த படத்தின் கதையைக் கேட்டால், இந்த அளவுக்கு கருத்து சுதந்திரமா? என்று வியக்க வைக்கிறது. ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் கொலை செய்யப்படுவதுபோல காட்சி வரும், அந்த படத்திலேயே டெலிவிஷனில் ஜார்ஜ் புஷ் கொலை செய்யப்பட்டார் என்று செய்தி ஒளிபரப்பாவது போலவும் காட்சி இருக்கும். இந்த படத்தை ஜார்ஜ் புஷ் முதல், அமெரிக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒரு சினிமா படமாகத்தான் பார்த்து ரசித்தார்களே தவிர, அங்கு இந்த படத்தை யாரும் திரையிடக்கூடாது என்றோ, தடை செய்ய வேண்டும் என்றோ போராடவில்லை.

ஆனால், சமீபகாலங்களாக தமிழ்நாட்டில் அடிக்கடி இந்த படத்தை திரையிடக்கூடாது, அந்த படத்தை தடை செய்யவேண்டும், படம் ஓடினால் வெடிகுண்டு வைப்போம் என தேவையற்ற அச்சுறுத்தல்கள் என பல குரல்கள் எழும்புகிறது. இந்தியாவில் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் இருக்கிறது. ஆனால், அந்த சுதந்திரங்கள் எல்லை மீறாமல் இருக்கவும், கட்டுப்பாடு செய்யும் அரசு இயந்திரங்கள் இருக்கின்றன. அந்த பட்டியலில் இப்போது ‘மெட்ராஸ் கபே’ என்ற படம் வந்து இருக்கிறது. இது இந்தியில் தயாரிக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள படம். ராஜீவ்காந்தி படுகொலை, இலங்கையில் விடுதலைப்புலிகள் நடத்திய போர், அங்கு சென்ற அமைதிப்படை போன்ற பல விவரங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது. மத்திய அரசாங்கத்தின் சென்சார் போர்டு இந்தப் படத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டது.

இந்த நிலையில், இந்த படத்தை ஓடவிடமாட்டோம் என்று சில கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளனர். தமிழ் நாட்டில் தடை செய்துவிட்டு, இந்தியா முழுவதும் ஓடுமே, அப்படியானால் அதற்கு என்ன செய்யப்போகிறார்கள்? இப்போதுள்ள இளைஞர்கள் இண்டர்நெட்டில் உலகையே சுற்றிவிடுகிறார்களே, அவர்களை தடை செய்துவிட முடியுமா? மேலும், ஒரு படம் வெளியிடப்பட தகுதி இல்லையென்றால் அதை முறையிட அரசாங்கம் இருக்கிறது, கோர்ட்டு இருக்கிறது. அதை விட்டுவிட்டு, சினிமா தியேட்டரை முற்றுகையிடுவோம் என்பது சரியல்ல. தற்போது ‘மெட்ராஸ் கபே’ பட விவகாரம் ஐகோர்ட்டு முன்பு இருக்கிறது. கோர்ட்டு தீர்ப்பே வழிகாட்டட்டும்.

(தினத்தந்தி தலையங்கம் 21.08.2013)

  • கருத்துக்கள உறவுகள்

தடை என்று கேட்பதின் அடிப்படை ஒரு விழிப்புணர்வை (awareness) உருவாக்குவது.. படத்தை நஷ்டப்படுத்துவது இரண்டாம் பட்சம்.. அரசியல் நிலைப்பாடுகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் இன்னொரு வாய்ப்பு..

you stated that  /////நாங்கதானே நீங்க சொல்கிற public .////   could you tell me which organisation you belongs to ? how your organisation came to the decision ? by voting in a committee? or like sheep walking as per shepherd,s instruction . SORRY I AM NOT INSULTING YOU . I MEAN ANY DEMOCRATIC PROCESS. 

 

:D :D நான் தெளிவாகத்தானே எழுதிஉள்ளேன் Public(பொதுசனம்) என்று. நான் எங்கே சொன்னேன் ஒரு organisation ஐ represent  பண்ணுகிறேன் என்று. நீங்கள் தான் சொன்னீங்க public திசை திருப்பிறாங்க என்று. அதுக்கு நான் பதில் தந்ததை இப்படி திரிச்சு கேட்கக்கூடாது. :unsure: சுயபுத்தி உள்ளவனுக்கு shepherd இன் தேவை இராது. :unsure:

 

மன்னிப்பு கேட்க தேவை இல்லை சகோதரனே. என்னை insult  பண்ணினால் அது உங்களை insult பண்ணுவதுபோல. ஏன் என்றால் நாங்கள் எல்லோரும் தமிழர்

Edited by கா ளா ன்

நான் IGTC (Inter-Galactical Tamil Congress) இல் உறுப்பினராக உள்ளேன். பால்வீதி உட்பட ஏனைய கலக்சிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டது இந்த அமைப்பு.. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இங்கு தேர்தல் நடத்தப்படும்.. அதற்கு பிரபஞ்சம் முழுவதும் வாக்குச்சீட்டு அனுப்பப்படும்.. ஆனால் வெளியார் யாரும் வந்து வாக்களிக்கவில்லை.. :( ஜனநாயக உரிமையை அவர்கள் பயன்படுத்தாமைக்கு நாம் என்ன செய்ய முடியும்? :unsure::(

 

:D :D

 

 

I feel sorry for you ,

 

do you know the word HALLUCINATION 

 

there are many types ,

Auditory , visual etc 

 

God bless you !!!!

//////////// ஏன் என்றால் நாங்கள் எல்லோரும் தமிழர்//////  

 

தமிழனுக்கு காளான் என்று பெயரா ? 

அழுக்கு இடங்களில்
முளைக்கும்
அசிங்கமான தாவரம் அல்லவா அது !!

 

 

காளான் உணவு கூட சகோதரனே :D :D இது பொது அறிவு

 

 

 

 

 

 

we know about ODD too!!!

 

Edited by கா ளா ன்

:D :D

 

 

காளான் உணவு கூட சகோதரனே :D :D இது பொது அறிவு

 

:lol:  :D என்னப்பா நடக்கு .........இங்கிலீசு விளங்குதில்ல.......... :D

மெத்த படித்த மேதைகளே கருத்துகளை தமிழில் எழுதுங்கள் உங்கள் ஆங்கில புலமைய வேணும் என்றால் ஒரு ஆங்கில இணையம் தொடக்கி  அங்கு எம் இனத்தின் பிரச்சனைகளை உலகறியச் செய்யுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட வீட்டில பிரச்சனை இருக்கிறது. எங்கட பக்கத்து வீட்டில் இருக்கும் உறவினர் எங்கட பிரச்சனைக்காக எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார். ஆனால் எங்க வீட்டில இருக்கிற ஒன்றிரண்டு பேர் பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து எப்படிக் கொடுக்கவேண்டும், எப்ப குடுக்கவேண்டும் என்று சொல்லலாமா?. இதனால் யாருக்கு நட்டம். யாருக்கு இலாபம். எதிர்க்குத்தான் இலாபம் என்பது சின்ன பிள்ளைகளுக்கே தெரியும்.

கருத்து சுதந்திரம்

--------------------------

நாள் முழுக்க கடுமையாக உழைக்கும் மக்களுக்கு நிச்சயமாக ஒரு பொழுதுபோக்கு தேவை. அதிலும், தங்கள் ரத்தத்தையே வியர்வையாக பெருக்கெடுத்து ஓடவைத்து, சுட்டெரிக்கும் வெயிலையோ, கொட்டோ கொட்டு என்று பெய்யும் மழையையோ பொருட்படுத்தாமல், பணியாற்றும் உழைப்பாளிகளுக்கு அவர்கள் களைப்பு தீர, இனிமையாக தங்கள் நேரத்தை செலவழிக்க, ஒரு வடிகால் நிச்சயமாக தேவை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பொழுதுபோக்கை நாடிச்செல்கிறார்கள். சிலருக்கு விளையாட்டுத்தான் பொழுதுபோக்கு, சிலருக்கு புத்தகம் படிப்பது பொழுதுபோக்கு, சிலருக்கு பாட்டுக்கச்சேரிகளுக்கு சென்று பாட்டுக்கேட்பது பொழுதுபோக்கு.

ஆனால், பெரும்பான்மையான ஏழை–எளிய, பாட்டாளி மக்கள், நடுத்தர மக்கள் போன்றவர்களுக்கு குறைந்த செலவில் கிடைக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமாதான். சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க செல்பவர்கள், ஒரு புனித தலத்துக்கு செல்லும் உணர்வோடோ, பயபக்தியோடோ செல்வதில்லை. ஒரு ஜாலியான உணர்வோடுதான் செல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், சினிமா என்பதையோ, அல்லது சினிமாவில் வரும் காட்சிகளையோ ஒரு நீதி போதனைகளாகவோ, மறைபொருளாகவோ யாரும் நினைப்பதில்லை. கொஞ்ச நேரம் மகிழ்வோடு பொழுதை கழிக்க உதவும் ஒரு சாதனமாகவே எண்ணுகிறார்கள். மக்களின் பேராதரவு இருப்பதால்தான் சினிமா அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. புது புது டெக்னிக்குகள் வந்துள்ளன. மக்களின் ரசனையும் பெருமளவில் மாறிவருவதால்தான், இப்போதெல்லாம் வித்தியாசமான கதைகளில் படம் எடுக்கப்படுகிறது. அதிலும் யதார்த்த வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள், மக்கள் பார்த்த, பார்க்கும் நிகழ்வுகள் படமாக எடுக்கும்போது, அத்தகைய படங்கள் பெரும் வரவேற்பைப் பெறுகிறது.

இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, ஏன் உலகம் முழுவதும் மக்களிடம் உள்ள மனோபாவம் இதுதான். அந்த வகையில்தான், சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஒரு ஜனாதிபதியின் மரணம் என்று ஒரு படம் வெளிவந்தது. ஓகோ என்று ஓடிய படம் அது. அந்த படத்தின் கதையைக் கேட்டால், இந்த அளவுக்கு கருத்து சுதந்திரமா? என்று வியக்க வைக்கிறது. ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் கொலை செய்யப்படுவதுபோல காட்சி வரும், அந்த படத்திலேயே டெலிவிஷனில் ஜார்ஜ் புஷ் கொலை செய்யப்பட்டார் என்று செய்தி ஒளிபரப்பாவது போலவும் காட்சி இருக்கும். இந்த படத்தை ஜார்ஜ் புஷ் முதல், அமெரிக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒரு சினிமா படமாகத்தான் பார்த்து ரசித்தார்களே தவிர, அங்கு இந்த படத்தை யாரும் திரையிடக்கூடாது என்றோ, தடை செய்ய வேண்டும் என்றோ போராடவில்லை.

ஆனால், சமீபகாலங்களாக தமிழ்நாட்டில் அடிக்கடி இந்த படத்தை திரையிடக்கூடாது, அந்த படத்தை தடை செய்யவேண்டும், படம் ஓடினால் வெடிகுண்டு வைப்போம் என தேவையற்ற அச்சுறுத்தல்கள் என பல குரல்கள் எழும்புகிறது. இந்தியாவில் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் இருக்கிறது. ஆனால், அந்த சுதந்திரங்கள் எல்லை மீறாமல் இருக்கவும், கட்டுப்பாடு செய்யும் அரசு இயந்திரங்கள் இருக்கின்றன. அந்த பட்டியலில் இப்போது ‘மெட்ராஸ் கபே’ என்ற படம் வந்து இருக்கிறது. இது இந்தியில் தயாரிக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள படம். ராஜீவ்காந்தி படுகொலை, இலங்கையில் விடுதலைப்புலிகள் நடத்திய போர், அங்கு சென்ற அமைதிப்படை போன்ற பல விவரங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது. மத்திய அரசாங்கத்தின் சென்சார் போர்டு இந்தப் படத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டது.

இந்த நிலையில், இந்த படத்தை ஓடவிடமாட்டோம் என்று சில கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளனர். தமிழ் நாட்டில் தடை செய்துவிட்டு, இந்தியா முழுவதும் ஓடுமே, அப்படியானால் அதற்கு என்ன செய்யப்போகிறார்கள்? இப்போதுள்ள இளைஞர்கள் இண்டர்நெட்டில் உலகையே சுற்றிவிடுகிறார்களே, அவர்களை தடை செய்துவிட முடியுமா? மேலும், ஒரு படம் வெளியிடப்பட தகுதி இல்லையென்றால் அதை முறையிட அரசாங்கம் இருக்கிறது, கோர்ட்டு இருக்கிறது. அதை விட்டுவிட்டு, சினிமா தியேட்டரை முற்றுகையிடுவோம் என்பது சரியல்ல. தற்போது ‘மெட்ராஸ் கபே’ பட விவகாரம் ஐகோர்ட்டு முன்பு இருக்கிறது. கோர்ட்டு தீர்ப்பே வழிகாட்டட்டும்.

(தினத்தந்தி தலையங்கம் 21.08.2013)

 

கருத்துச் சுதந்திரம் தேவை. ஆனால் இந்தச் செய்தியை இணைத்த உங்களைப் பார்த்து யாராவது பிழையான தகவல்களைச் சொன்னால் நீங்கள் பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருப்பீர்களா சுண்டல்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில என்ன சொல்ல வருகிறார், என்ன நடக்குது என்றே புரியவில்லை!  vil-cherche.gif

இப்புரியா நிலை, எனக்கு மட்டும்தானா...? இல்லை, ஏனையோருக்குமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.