Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

(உடனடி செய்திகள்). தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வுதுறைபொறுப்பாளர் பொட்டுஅம்மானின் சகோதரர் சடலமாக மீட்பு

Featured Replies

தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வுதுறைபொறுப்பாளர் பொட்டுஅம்மானின் சகோதரர் சடலமாக மீட்பு
இவர் சில தினங்களுக்கு முன்னர் இராணுவபுலனாய்வாளர்களால்
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று அரியாலையில் உள்ள அவரின் வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இது இராணுவபுலனாய்வாளர்களின் திட்டமிட்டசதி என்று அஞ்சப்படுகிறது.
மேலதிக விபரம் விரைவில் அறியத்தரப்படும்
  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமானவர்களின் உறவினர்கள் இவ்வாறு செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.. ஆனால் என்ன தேவையோ..

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலகட்டத்தில் தமிழ்மக்களை மிகவும் அச்சுறுத்துவதற்கு மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கை போல தெரிகிறது இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் நீதி தேவதையின், இன்னுமொரு முகம்! :o

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

புலிபோராளிகளை சமுகத்துடன் இணைக்கிறோம் என்று ஐ.நா வுக்கு....சொல்லுகிறார்கள்....மறுபக்கம் போராளிகளின் சகோதரனை கொலை செய்கிறார்கள் இதுதான் சிறிலங்கா ஜனநாயகம்....

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

பொட்டு எங்கே என்று கேட்டும் சித்திரவதை பண்ணி இருக்கலாம்

ஆழ்ந்த இரங்கல்கள்!

ஆழ்ந்த இரங்கல்கள்!
பொட்டு எங்கே என்று கேட்டும் சித்திரவதை பண்ணி இருக்கலாம்

ஏன் சுண்டு பொட்டு தான் ஏற்கனவே அவர்களுடன் என்று  ஒருவர் சந்தேகத்தை கிளறுகிறார் இங்கு அப்புறம் எப்பிடி? 

ஆழ்ந்த இரங்கல்கள்!

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

பொட்டு அம்மானின் சகோதரர் சிறீலங்கா இராணுவத்தால் அடித்துப் படுகொலை!!

ஜேர்மனி பிரேமனில் வசித்து வந்த ஜேர்மன் பிரஜையான சண்முகலிங்கம் சிவஞானம் என்பவர் கடந்த வாரம் சிறீலங்கா சென்றிருந்தார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரான பொட்டு அம்மானின் சகோதரர் ஆவார்.

யாழ்ப்பாணம் சென்றிருந்த இவர் சிறீலங்காப் புலனாய்வத்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணைக்குக் கொண்டு சென்ற வேளை அவர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு அழைத்துச் சென்றதே இவரைப் படுகொலை செய்யும் நோக்கிலேயே இவர் புலனாய்வுத் துறையினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இவர் ஜேர்மன் பிரஜையாகையால் அவரது உடலத்தைக் குடும்பத்தினர் தரும்படி கேட்டுக் கொண்டுள்ளபோதும் சிறீலங்கா அரசாங்கத்தால் அது மறுக்கப்பட்டுள்ளது. அவரது உடலம் எரிக்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்ட போதும் பின்னர் உடலம் தரப்பட மாட்டாது என சிறீலங்கா அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த விதமான சர்வதேச இராஜதந்திர அழுத்தங்களிற்கும் பணியாது அராஜகம் செய்யும் சிறீலங்கா அரசு இந்த விடயத்திலும் அராஜகத்தையே காட்டுகின்றது.

மேலும் சிறீலங்கா சென்றிருந்த ஒரு ஜேர்மன் தமிழ்ப்பிரஜை நேற்று சிறிலங்கா விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு விசாணைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவரின் நிலைமை பற்றிய மேலதிகத் தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. சிறீலங்கா இனவெறி அரசின் பொய்ப் பிரச்சாரங்களை நம்பி சிறீலங்கா செல்லும் எம்மக்கள் இப்படியாக அடித்துக் கொல்லப்படுவதும் கடத்தப்படுவதும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

அதுவும் முக்கியமாக ஜேர்மனியில் உள்ள சிறீலங்காத் தூதரகம் தமிழ் மக்கள் மீதான உளவு ஸ்தாபனமாகவே இயங்குகின்றது. இதுவே ஜேர்மனியில் இருந்து சிறீலங்கா நோக்கிச் செல்லும் எமது தமிழ் மக்களின் விபரங்களைத் தொகுத்து வழங்குவதுடன் அவர்களின் உயிர்களிற்கு அச்சுறுத்தல் விளைவித்துக் கொண்டும் உள்ளது. இதனை எமது மக்கள் புரிந்து மிகவும் விழிப்புடன் இருத்தல் வேண்டும்.

https://www.facebook.com/thamilmaran.kri?hc_location=stream

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • தொடங்கியவர்

Thamilmaran Kri Vaakai Livetvஇங் புகைப்படம்வை பகிர்ந்துகொண்டார்
 
ஜேர்மனியிலிருந்து சென்றவர் சிறீலங்கா இராணுவத்தால் படுகொலை!!

வாகை TV 22.08.2013 http://www.livestream.com/vaakai

ஜேர்மனி பிரேமனில் வசித்து வந்த ஜேர்மன் பிரஜையான சண்முகலிங்கம் சிவஞானம் என்பவர் கடந்த வாரம் சிறீலங்கா சென்றிருந்தார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரான பொட்டு அம்மானின் சகோதரர் ஆவார்.

யாழ்ப்பாணம் சென்றிருந்த இவர் சிறீலங்காப் புலனாய்வத்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணைக்குக் கொண்டு சென்ற வேளை அவர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு அழைத்துச் சென்றதே இவரைப் படுகொலை செய்யும் நோக்கிலேயே இவர் புலனாய்வுத் துறையினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இவர் ஜேர்மன் பிரஜையாகையால் அவரது உடலத்தைக் குடும்பத்தினர் தரும்படி கேட்டுக் கொண்டுள்ளபோதும் சிறீலங்கா அரசாங்கத்தால் அது மறுக்கப்பட்டுள்ளது. அவரது உடலம் எரிக்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்ட போதும் பின்னர் உடலம் தரப்பட மாட்டாது என சிறீலங்கா அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த விதமான சர்வதேச இராஜதந்திர அழுத்தங்களிற்கும் பணியாது அராஜகம் செய்யும் சிறீலங்கா அரசு இந்த விடயத்திலும் அராஜகத்தையே காட்டுகின்றது.

மேலும் சிறீலங்கா சென்றிருந்த ஒரு ஜேர்மன் தமிழ்ப்பிரஜை நேற்று சிறிலங்கா விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு விசாணைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவரின் நிலைமை பற்றிய மேலதிகத் தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. சிறீலங்கா இனவெறி அரசின் பொய்ப் பிரச்சாரங்களை நம்பி சிறீலங்கா செல்லும் எம்மக்கள் இப்படியாக அடித்துக் கொல்லப்படுவதும் கடத்தப்படுவதும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

அதுவும் முக்கியமாக ஜேர்மனியில் உள்ள சிறீலங்காத் தூதரகம் தமிழ் மக்கள் மீதான உளவு ஸ்தாபனமாகவே இயங்குகின்றது. இதுவே ஜேர்மனியில் இருந்து சிறீலங்கா நோக்கிச் செல்லும் எமது தமிழ் மக்களின் விபரங்களைத் தொகுத்து வழங்குவதுடன் அவர்களின் உயிர்களிற்கு அச்சுறுத்தல் விளைவித்துக் கொண்டும் உள்ளது. இதனை எமது மக்கள் புரிந்து மிகவும் விழிப்புடன் இருத்தல் வேண்டும்.

598476_423135087805754_999651159_n.jpg

இரண்டு நாட்களுக்கு முன்னர் பொட்டம்மானின் கதை பிரபலமாக அடிபட்டபோது அவரின் இருப்பு/இல்லமை பற்றி யாரோ தெரிய முயல்கிறார்களா என்று நினத்தேன். இது தான் சமாரம். உண்மை. இப்பதான் வெளியே வருகிறது. எந்த புத்துக்கை எந்த பாம்போ?

செய்தி இவ்வாறு உள்ளது. ஏனோ தெரியவில்லை.. அவரது வீட்டிலுள்ளவர்கள் சிலமணி நேரம் முன்புவரை அவர் மாரடைப்பினாலேயே மரணமடைந்ததாகவே கூறிக் கொண்டு இருக்கிறார்கள். நாளை என்ன கூறுகிறார்கள் என நாளை எழுதுகிறேன்.

இது அவரது தாயகத்துக்கான முதல் பயணம் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது..

மல்லையூரான் யாரைப்பற்றி கூறுகிறார்.. என்னைப்பற்றி என்றால் நேரடியாகவே கேட்கலாம்.. நான் பாம்பல்ல.. சாதாரண மனிதன். :)

Edited by sOliyAn

செய்தி இவ்வாறு உள்ளது. ஏனோ தெரியவில்லை.. அவரது வீட்டிலுள்ளவர்கள் சிலமணி நேரம்வரை அவர் மாரடைப்பினாலேயே மரணமடைந்ததாகவே கூறிக் கொண்டு இருக்கிறார்கள். இது அவரது தாயகத்துக்கான முதல் பயணம் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது..

மல்லையூரான் யாரைப்பற்றி கூறுகிறார்.. என்னைப்பற்றி என்றால் நேரடியாகவே கேட்கலாம்.. நான் பாம்பல்ல.. சாதாரண மனிதன். :)

யாராவது குடும்பம் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும் போது செய்தி இப்படி வந்திருக்கிறது என்றும் அதை மறுத்து அறிக்கை விடுவதான் முறை என்றும் அந்த குடும்பத்துக்கு அறுவுரை வழங்கினார்களா? அல்லது அந்த குடும்பம் இந்த செய்தியை மறுப்பதாகத் தன்னும் சொல்லிக்கொண்டிருக்கா?

ஏன் சிலர் அந்த குடும்பம் சொல்வதை மட்டும் வெளியே சொல்ல வருகிறார்கள். வெளியே என்ன சொல்கிறார்கள் என்பதை அந்த குடும்பத்திற்கு சொல்ல முன் வரவில்லை?

Edited by மல்லையூரான்

யாராவது குடும்பம் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும் போது செய்தி இப்படி வந்திருக்கிறது என்றும் அதை மறுத்து அறிக்கை விடுவதான் முறை என்றும் அந்த குடும்பத்துக்கு அறுவுரை வழங்கினார்களா? அல்லது அந்த குடும்பம் இந்த செய்தியை மறுப்பதாகத் தன்னும் சொல்லிக்கொண்டிருக்கா?

தெரியவில்லை.. ஒரு சில மணி நேரத்துக்கு முன்னர் அங்கிருந்து வந்தவருடன் உரையாடி தெரிந்ததையே எழுதினேன்.. அநேகமாக நாளை நானோ அல்லது எனது மனைவியோ நேரடியாக செல்வோம்.. நாளை எனக்கு தெரிய வருபவற்றை பதிகிறேன்.

தெரியவில்லை.. ஒரு சில மணி நேரத்துக்கு முன்னர் அங்கிருந்து வந்தவருடன் உரையாடி தெரிந்ததையே எழுதினேன்.. அநேகமாக நாளை நானோ அல்லது எனது மனைவியோ நேரடியாக செல்வோம்.. நாளை எனக்கு தெரிய வருபவற்றை பதிகிறேன்.

நான் யாரவது பதிவதை எதிர்பார்க்க வில்லை அந்த குடும்பம் நேர்மைக்க கருத்தும் அரசைக் காப்பற்ற முன்னல் வந்து மறுப்பு அறிக்கை வெளிவிட வேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு. இல்லையேல் அவர்களும் இந்த கொலையில் உடந்தை அல்லது, அரசுக்கு அங்கிருப்பவர்கள் இரையாகலாம் என்று பயப்படுகிறார்கள் என்று மட்டும்தான் எடுத்துக்கொள்ளலாம். 

இது விளையாட்டல்ல. பல பத்திரிகைகள் கொலை என பிரசுரிக்கின்றன. இதை யாழில் ஒருவர் கருத்து எழுத்தி ஏமாற்ற முடியுமா?

எதற்கா அரசு பிரேதத்தைக்கூட காட்டாத போது அந்தக் குடும்பம் அது Heart Attack என்று பிரேத பரிசோதனை முடித்து அறிக்கை கொடுத்தது? குடும்பத்தின் வாக்கீல்களிடம் அப்படித்தான் சொல்லும் படி அரசு சொல்லிக்கொடுத்ததா?

Edited by மல்லையூரான்

ஆமி அந்த ஆளை விசாரணைக்கு அழைத்து போனது அந்த குடும்பத்திற்க்கு தெரியுமா தெரியாத?

ஒரு சில மணி நேரத்துக்கு முன்னர் அங்கிருந்து வந்தவருடன் உரையாடி தெரிந்ததையே எழுதினேன்.

அந்த ஆள்த்தான் குடும்பம் அப்படி பேசுகின்றது உங்களிடம் சொன்னாரா? 

அந்த ஆள் எப்படிப்பட்டவர் என்றதை நீங்கள் தெரிந்து வைத்திருக்கிறிகள்தானே?

மல்லையூரான் யாரைப்பற்றி கூறுகிறார்.. என்னைப்பற்றி என்றால் நேரடியாகவே கேட்கலாம்.. நான் பாம்பல்ல.. சாதாரண மனிதன்.  :)

இப்போது பார்த்தால் உங்களை நேரடியாக கேட்டு எதுவும் தெரிந்து கொள்ள உங்களிடம் இல்லை என்கிறீர்கள். நீங்களெ Hear Say தான். அந்த ஆள் யாழில் எழுதுபவரா? அவரிடம் நேரடியாக ஏதாவது கேடக முடியுமா?

நான் யாரவது பதிவதை எதிர்பார்க்க வில்லை அந்த குடும்பம் நேர்மைக்க கருத்தும் அரசைக் காப்பற்ற முன்னல் வந்து மறுப்பு அறிக்கை வெளிவிட வேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு. இல்லையேல் அவர்களும் இந்த கொலையில் உடந்தை அல்லது, அரசுக்கு அங்கிருப்பவர்கள் இரையாகலாம் என்று பயப்படுகிறார்கள் என்று மட்டும்தான் எடுத்துக்கொள்ளலாம். 

இது விளையாட்டல்ல. பல பத்திரிகைகள் கொலை என பிரசுரிக்கின்றன. இதை யாழில் ஒருவர் கருத்து எழுத்தி ஏமாற்ற முடியுமா?

எதற்கா அரசு பிரேதத்தைக்கூட காட்டாத போது அந்தக் குடும்பம் அது Heart Ataack என்று பிரேத பரிசோதனை முடித்து அறிக்கை கொடுத்தது? குடும்பத்தின் வாக்கீல்களிடம் அப்படித்தான் சொல்லும் படி அரசு சொல்லிக்கொடுத்ததா?

என்னுடன் ஒருவர் வேலை செய்கிறார்.. அவரது மகன் இவருடைய நெருங்கிய உறவினராகப் போகிறார்.. நேற்று வேலையில் உள்ளபோது.. இன்னார் மாரடைப்பால் இறந்துவிட்டார் லீவு வேணும்.. சொல்லிவிடு என்று போன் செய்தார்.. அதை நேற்று திண்ணையில்கூட போட்டேன்.. இன்று காலை செய்தி என்ற இணையத்தில் பார்த்து..  போனில் விசாரித்தேன்.. மாரடைப்பு என்றுதான் கூறினார்.. சிலவேளை யேர்மன் அரசுதான் தனக்கு தப்ப இப்படி சொல்லென சொன்னதா என்றும் சந்தேகிக்கலாம்.. எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

598476_423135087805754_999651159_n.jpg

மாரடைப்பு வந்தவர் எப்படி புதருக்குள் விழுந்து கிடக்கிறார்?

என்னுடன் ஒருவர் வேலை செய்கிறார்.. அவரது மகன் இவருடைய நெருங்கிய உறவினராகப் போகிறார்.. நேற்று வேலையில் உள்ளபோது.. இன்னார் மாரடைப்பால் இறந்துவிட்டார் லீவு வேணும்.. சொல்லிவிடு என்று போன் செய்தார்.. அதை நேற்று திண்ணையில்கூட போட்டேன்.. இன்று காலை செய்தி என்ற இணையத்தில் பார்த்து..  போனில் விசாரித்தேன்.. மாரடைப்பு என்றுதான் கூறினார்.. சிலவேளை யேர்மன் அரசுதான் தனக்கு தப்ப இப்படி சொல்லென சொன்னதா என்றும் சந்தேகிக்கலாம்.. எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.

அடேயப்பா இதற்குள் ஜேர்மன் அரசும் குருவி நுளைவார்கள் என்று எனக்கு நீங்கள் சொல்லவே இல்லையே.

சரியான கில்லாடிகள்கள்தான் இந்த ஜேர்மன் அரசு. இருந்து பாருங்கள் இந்த ஜேர்மன் அரசு ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் வலு லாவமாக சொல்லப் போகிறார்கள். 

ஆமியை காப்பாற்ற குடும்பம். குடும்பத்தை காப்பாற்ற நீங்கள். உங்களை காப்பாற்ற நண்பர். நண்பரை காப்பாற்ற ஜேர்மன் அரசு. ஜேர்மன் அரசை சிறிலங்கா அரசு காப்பாற்றமலா விடப் போகிறது?

Edited by மல்லையூரான்

ஆழ்ந்த இரங்கல்கள்!

ஆமி அந்த ஆளை விசாரணைக்கு அழைத்து போனது அந்த குடும்பத்திற்க்கு தெரியுமா தெரியாத?

அந்த ஆள்த்தான் குடும்பம் அப்படி பேசுகின்றது உங்களிடம் சொன்னாரா? 

அந்த ஆள் எப்படிப்பட்டவர் என்றதை நீங்கள் தெரிந்து வைத்திருக்கிறிகள்தானே?

இப்போது பார்த்தால் உங்களை நேரடியாக கேட்டு எதுவும் தெரிந்து கொள்ள உங்களிடம் இல்லை என்கிறீர்கள். நீங்களெ Hear Say தான். அந்த ஆள் யாழில் எழுதுபவரா? அவரிடம் நேரடியாக ஏதாவது கேடக முடியுமா?

இப்ப நான்போய்.. இவருடைய மனைவியிடம.. அல்லது அந்த 3 பிள்ளைகளிடம்.. 'அப்பாவை அடிச்சுத்தானே கொண்டவங்கள்.. ஏன் மாரடைப்பு எண்டு சொல்லுறியள்..' எண்டு கேட்டால்.. 'நாங்கள் இருக்கிற கவலைக்கை நீ விடுப்பா கேக்கிறாய்?' எண்டு கேக்காதுகள்..? பக்கத்தில பாத்துக் கொண்டிருக்கிறவங்கள் என்ன நினைப்பாங்கள்.. றோட்டில கண்டு தலையாலும் ஆட்டுறவங்கள்.. இது ஆரடமா விசுக்கோத்து எண்டு தெரியாதமாதிரி எல்லே போவாங்கள்.. ஆக நேரடி றிப்போர்ட் எல்லாம் அந்தந்த இடத்துக்கு தகுந்தபடி அந்தந்த ஆட்களாலதான் எடுக்க ஏலும்..

 ஹியா சேயோ.. இப்போதைக்கு அதுதான்.. அரசியல் விசயங்களைப் பொறுத்தளவில யாழ் களத்தில நூறு வீதமும் செவிவழிச் சேதிகள்தானே..?!

அடேயப்பா இதற்குள் ஜேர்மன் அரசும் குருவி நுளைவார்கள் என்று எனக்கு நீங்கள் சொல்லவே இல்லையே.

சரியான கில்லாடிகள்கள்தான் இந்த ஜேர்மன் அரசு. இருந்து பாருங்கள் இந்த ஜேர்மன் அரசு ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் வலு லாவமாக சொல்லப் போகிறார்கள். 

ஆமியை காப்பாற்ற குடும்பம். குடும்பத்தை காப்பாற்ற நீங்கள். உங்களை காப்பாற்ற நண்பர். நண்பரை காப்பாற்ற ஜேர்மன் அரசு. ஜேர்மன் அரசை சிறிலங்கா அரசு காப்பாற்றமலா விடப் போகிறது?

மல்லையூரான் உங்களுக்கு பைத்தியமா பிடித்துவிட்டது.. நான் ஏன் அந்த குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்.. நீங்கள்தானே இராணுவம் அப்படி சொல்ல சொன்னதா என எழுதினீர்கள்.. அதற்குத்தான் யேர்மன் அரசும் ஏன் சொல்லச் சொல்லக்கூடாது என கேட்டிருந்தேன்.. காரணம் யேர்மன் பிரசை அவர்.. அதனால் நடந்தது கொலை ஆனால் யேர்மன் அரசு சிறிலங்கா அரசை கேட்கணும்.. அதைத் தவிர்க்க யேர்மன் அரசு இப்படியும் சொல்ல சொல்லலாம்.. இந்த யேர்மன் அரசு சாதாரணப்பட்டதல்ல.. நீதிக்குப் புறம்பாக வெளிநாட்டினருக்கு எத்தனையோ பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்காங்க.. அதை குமாரசாமி போன்ற ஏனைய யேர்மன் உறவுகள் ஒப்புக் கொள்ளுவாங்க என நினைக்கிறேன்.

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.