Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிப் போரில் இந்தியக் கொடிதாங்கிய கப்பலில் இருந்து மக்கள் மீது குண்டுத்தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதிப் போரில் இந்தியக் கொடிதாங்கிய கப்பலில் இருந்து மக்கள் மீது குண்டுத்தாக்குதல்'

 
130320123654_vavunia_high_court_304x171_

இறுதி யுத்தத்தின் போது இந்தியக் கொடி தாங்கிய கப்பலில் இருந்து கரையில் பொதுமக்கள் பகுதி மீது குண்டுகள் வீசப்பட்டதாக வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு ஒன்றில் கூறப்பட்டிருந்ததாக சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் திங்களன்று நடைபெற்ற அதேவேளை, மேலும், புதிதாக 7 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவைகள் நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட்டவர்கள் சார்பிலான முதல் ஐந்து ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பில் எதிர் மனு தாக்கல் செய்வதற்கு எதிரணித் தரப்பினருக்கு கடைசி சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், இன்னும் இரண்டு தினங்களில் அந்த எதிர்மனு தாக்கல் செய்யப்படும் என்று அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்ததையடுத்து, நீதிமன்றம் இந்த வழக்குகளை வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்திருக்கின்றது.

புதிதாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்களில் பல புதிய விடயங்கள் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்ருப்பதாக இந்த வழக்குகள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.

''பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த சுதந்திரபுரத்தினுள் தாங்கள் இருந்தபோது, விமானத்திலிருந்து அந்தப்பகுதி மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், கடலில் நிறுத்தப்பட்டிருந்த இந்தியக் கொடி பறக்கவிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றிலிருந்தும் கரையில் மக்கள் இருந்த பகுதிகளை நோக்கி குண்டுகள் எறியப்பட்டன என்றும் இந்த மனுக்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயுள்ளவர்களின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்'' என்றார் சட்டத்தரணி ரட்னவேல்.

'அது மட்டுமன்றி, கொத்துக்குண்டுகளும் இரசாயன குண்டுகளும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள மனுதாரர்கள் தங்களின் கண் முன்னாலேயே இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய முகங்கள், உடல்கள் விகாரமடைந்து, துன்பமடைந்து அவர்கள் மரணமடைந்ததைக் கண்டதாகவும் முதன் முறையாகத் தெரிவித்திருக்கின்றார்கள்' என்றும் சட்டத்தரணி ரட்ணவேல் தெரிவித்தார்.

இந்த வழக்குகள் யாவும் வரும் செட்படம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/08/130826_vavuniacourt.shtml

 

  • கருத்துக்கள உறவுகள்

பூனைக்குட்டி சாடையா வெளியே எட்டிப் பார்க்குது..

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவம் 1989 களில் ஈழத்தில் புரிந்த போர்க்குற்றங்களுக்கே ஒன்றையும் காணவில்லை !!!!!

தனக்கு பிரச்சினை வரும் போது இந்தியாவை இலங்கை உள்ளை இழுத்து விடும் என்பது  தெரிந்தது தானே... ??? 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஏன் இவ்வளவு அடங்கிப்போக வேண்டி உள்ளது என்பதற்கான காரணி இதில் புதைந்துள்ளது.. தெற்காசிய வல்லரசின் குடுமி தற்போது இலங்கையின் கையில் உள்ளது.. :D அதே சமயம், மாட்டிக்கொள்ளும் நிலை வந்தால் நைசா போட்டுத்தள்ளும் கலையும் இந்தியா அறிந்ததே.. :unsure::rolleyes:

தமிழ் தரப்பை பொறுத்தவரைக்கும் இந்தியா ஆர்வக்கோளாறான ஆக்களுக்கு  தனித்தனிய கூப்பிட்டு பயிற்ச்சியும் குடுத்து அவர்களுக்கை அடிபட ஆயுதமும் கொடுத்து தனக்கு விசுவாசமானவர்களுக்கு  பெரிய எலும்பு எனும் சித்தாந்தத்தை உருவாக்கி  முரண்டு பிடிப்பவர்களை மற்றவர்களை முன்னே விட்டு அழிக்க முடியாமல் போனதால்  நாறடிக்கும் வேலையை செய்ய வைத்ததில் இந்தியாவின் திறமை  எல்லாருக்கும் தெரியும் ... 

 

தமிழர்களுக்கு எப்போதும் இருந்த பலவீனம்  எங்கை அடியை போட்டாலும்  ஓடி ஒளிய எப்போதும் இடம் இருக்கும்...  அது தமிழ்நாடாகவோ இல்லை மேற்கு, கிழக்கு நாடுகளோ இருக்கலாம்...   தமிழர்கள் திரும்பி நிண்டு முறைக்க சந்தர்பமே இல்லாமல் போனது... ( ஓடுகிற நாயை கண்டால் துரத்துற நாய்க்கு கொண்டாட்டம் தானே...??)

 

இந்த இந்திய பச்சா சிங்களத்திடம் செல்லுமா....??    

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

வானில் இந்திய மிக் குண்டு போட்டிச்சுது. கடலில் இருந்து இந்திய கடற்படை தாக்குதல். தரையில் இந்திய டாங்கிப் படை ஆதரவு. மொத்தத்தில் ஈழ இறுதிப் போரை நடத்தியதே இந்தியா தான். இதனை சீமான்..வை.கோ போன்ற தலைவர்கள் எத்தனை தடவைகள் சொல்லிவிட்டார்கள்.

 

இதில்.. சந்தேகம்.. இப்போ கருணாநிதிக்குக் கூட இல்லை. ஆனால் நம்மவருக்கு உள்ளது. இப்போதும் சிங்களவன் நல்லவன் என்று சொல்லும் மேற்கில்.. அசைலம் அடித்த எம்மவர்கள் கணிசமான அளவில் உள்ளனர். இப்படியான அறிவாளிகள் உள்ள சமூகத்திற்கு விடுதலை என்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல..! :rolleyes::(

Edited by nedukkalapoovan

வானில் இந்திய மிக் குண்டு போட்டிச்சுது. கடலில் இருந்து இந்திய கடற்படை தாக்குதல். தரையில் இந்திய டாங்கிப் படை ஆதரவு. மொத்தத்தில் ஈழ இறுதிப் போரை நடத்தியதே இந்தியா தான். இதனை சீமான்..வை.கோ போன்ற தலைவர்கள் எத்தனை தடவைகள் சொல்லிவிட்டார்கள்.

 

 

 

 

இதை புலிகள் சொல்லி, பதில்தாக்குதலும் நடாத்தியிருந்தால், இண்டைக்கு தமிழீழம் தனிநாடாக இருந்திருக்கும்..

 

கிழமைக்கு ஒரு டப்பாங்குத்து பாடல் வெளியிடுவதை விட, கடைசி 8/9 வருசமா என்ன செய்தார்கள் என்பது ஆண்டவனுகுத்தான் வெளிச்சம்..

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் அதைச் செய்தார்கள்.. என்றால்.. தமிழீழம் மீட்க.... நாங்கள் என்ன செய்தம்.......???! முதலில அடுத்தவனைக் கேள்வி கேட்க முதல் எங்களை பார்த்து நாங்களே கேட்டுக்கனும்.. ???! அதை நம்மில் எவருமே செய்வதில்லை. எல்லாம் ஒரு சிலரின் தலையில்.... அவர்கள் என்ன.. சுமை தாங்கிகளா..???!  :rolleyes::(


புலிகள் சிங்களத்தை எதிர்கொள்ள தயார்படுத்தலோடு தான் இருந்தார்கள். 24 நாடுகளை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்கவில்லை. அதற்கு தயார்ப்படுத்தி இருக்க வேண்டியவர்கள்.. வெளியில் இருந்த நாங்கள் தான்..! ஆனால்...?????! :icon_idea:

அவர்கள் அதைச் செய்தார்கள்.. என்றால்.. தமிழீழம் மீட்க.... நாங்கள் என்ன செய்தம்.......???! முதலில அடுத்தவனைக் கேள்வி கேட்க முதல் எங்களை பார்த்து நாங்களே கேட்டுக்கனும்.. ???! அதை நம்மில் எவருமே செய்வதில்லை. எல்லாம் ஒரு சிலரின் தலையில்.... அவர்கள் என்ன.. சுமை தாங்கிகளா..???!  :rolleyes::(

 
 
எங்கட மோனைக்கு, குத்தமுள்ள மனம் குறுகுறுக்குதுபோல.. வந்துட்டார் இன்டெர்நெட்டில கேள்வி கேக்க.. :lol:
 
இருந்தாலும் உங்கட இன்போர்மேஷனுக்கா சொல்லுறன்..
 
எனது நெருங்கிய உறவினர்கள் 7 பேர் போரிட்டு இறந்திருக்கிறார்கள். எனது சொந்தக்குடும்பம் புலிகளுக்கு 2 கோடி ரூபாய்க்குமேல் தமிழீழ மீட்பு நிதியாக குடுத்திருக்கிறது. என்னை விட, புலிகளை பார்த்து கேள்வி/கணக்கு கேக்கக்கூடியவர்கள் மிகச்சொற்பம். :rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை...இப்ப எப்படியும் எடுத்து எறியலாம்...ஆனால் உண்மையான புலி ஆதரவாளர்கள்...ஒரு  நாளும் புலிகளை தூற்ற மாட்டார்கள்...இதுதான் அண்ணை உண்மை...

தனக்கு பிரச்சினை வரும் போது இந்தியாவை இலங்கை உள்ளை இழுத்து விடும் என்பது  தெரிந்தது தானே... ??? 

 

இந்தியா சிங்களக் காடையர்களின் காலடியில் இருந்து விடுபட நினைத்தால் இதைத் தவிர்க்கவே முடியாது!

 

இந்தியாவுக்கு இருக்கும் ஒரே வழி அதன் பாவங்களுக்கு ஓரளவு பரிகாரமாக  தமிழீழத்தை உருவாக்குவதே!

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட மோனைக்கு, குத்தமுள்ள மனம் குறுகுறுக்குதுபோல.. வந்துட்டார் இன்டெர்நெட்டில கேள்வி கேக்க.. :lol:
 
இருந்தாலும் உங்கட இன்போர்மேஷனுக்கா சொல்லுறன்..
 
எனது நெருங்கிய உறவினர்கள் 7 பேர் போரிட்டு இறந்திருக்கிறார்கள். எனது சொந்தக்குடும்பம் புலிகளுக்கு 2 கோடி ரூபாய்க்குமேல் தமிழீழ மீட்பு நிதியாக குடுத்திருக்கிறது. என்னை விட, புலிகளை பார்த்து கேள்வி/கணக்கு கேக்கக்கூடியவர்கள் மிகச்சொற்பம். :rolleyes:

 

 

நீங்கள் என்ன செய்தீர்கள் என்றால் சொந்தக்காரர் என்ன செய்திச்சீனம் என்று எழுதும் நிலைதான் பல தமிழர்களின் நிலை. இதனால் தான் நாம் தோற்றோம். தோற்றுவிட்டு களத்தில் நின்றவனைப் பார்த்து கேள்வி கேட்கிறம்..??!

 

2 கோடி காசிடம் கேட்கிறது.. தந்தம் ஏன் போராடவில்லை என்று. 2 கோடி.. 10 ஆட்லறி ஷெல் வாங்கி அதனை அங்க கொண்டு போகக் கூடக் காணுமோ தெரியாது. 20,000 கோடி பஜெட்டோட 200,000 ஆளணியோட.. வாற ஒரு சர்வதேசப் படைப்பலத்தை.. 200 கோடியை வைச்சு.. வெல்லனும்.. வெற்றி விழாக்காணனும் என்று.. வெளிநாட்டில் வதிவிட உரிமைக்காக ஓடிவந்திட்ட நாங்கள்.. எதிர்பார்க்கலாம். ஆனால் அதில் சாத்தியப்பாடு அறவே இல்லை.. என்பதை முதலில் எங்க சொந்த புத்தியைப் பாவிச்சு விளங்கிக் கொண்டிருந்தால்.. புலிகளை.. களத்தில் நின்றவர்களிடம் ஏன் தோற்றீர்கள் என்று கேட்கவோ.. பழி முடியவோ.. நிச்சயம் முனைய மாட்டம்..! :rolleyes::(

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு பிரச்சினை வரும் போது இந்தியாவை இலங்கை உள்ளை இழுத்து விடும் என்பது  தெரிந்தது தானே... ??? 

 

உண்மை தயா. இதற்கு இந்தியா என்ன... பதில் கொடுக்கப் போகின்றது என்பது தான்... அனைவரின் எதிர்பார்ப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தயா. இதற்கு இந்தியா என்ன... பதில் கொடுக்கப் போகின்றது என்பது தான்... அனைவரின் எதிர்பார்ப்பு.

இந்தியாவின் ஆணித்தரமான பதில்..

manmohan-singh-was-a-better-finance-mini

:D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஆணித்தரமான பதில்..

manmohan-singh-was-a-better-finance-mini

:D

 

அந்தாள்... அலவாங்கை, முழுங்கின மாதிரி நிக்குது...... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.