Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போப் பிரான்சிஸ் இலங்கைக்கு விஜயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
pope-140313-seithy-150.jpg

போப் பிரான்சிஸ் இலங்கைக்கு வருகிறார் என்பதை கொழும்பு ஆயர் அலுவலகம் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டு முன்னதாக இலங்கை ஜனாதிபதி புதிய போப்பை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருப்பதாக ஜனாதிபதி அலுவலகம் கூறியிருந்தது. கொழும்பு ஆயருக்காகப் பேசவல்ல அருட்தந்தை பெனெடிக்ட் ஜோசப், பிபிசியிடம் பேசுகையில், " திருத்தந்தை இலங்கைக்கு வருகிறார் என்பதை வத்திக்கான் உறுதிப்படுத்தியிருக்கிறது. இது வரை எங்களுக்கு அவர் விஜயம் குறித்த நாட்கள் அல்லது வேறு விவரங்கள் தரப்படவில்லை.

  

அவர் வருகிறார் என்பது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை மட்டும்தான் என்னால் சொல்ல முடியும். அவரது விஜயம் குறித்த மேல் விவரங்களை நாங்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறோம். இந்த விஜயம் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் நடக்கிறதா என்பதையும் என்னால் சொல்ல முடியாது. இந்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை",என்றார்.

1970ல் அப்போதைய போப் , பிலிப்பைன்ஸ் செல்லும் வழியில் , இலங்கையில் இரண்டு மணி நேரங்கள் தங்கியிருந்தார். அதற்குப் பின்னர் 1995ல் போப் ஜான் பால், இலங்கைக்கு வந்தார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=92209&category=TamilNews&language=tamil

 

  • கருத்துக்கள உறவுகள்

போப் பிரான்சிசை... கலியாணம் கட்ட, அங்குள்ள சிங்களவர் கேட்டால்.....
பாவம்... போப்.

ஏன்... அங்கை.. போனன், எண்டு இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

போப் இந்த ஆண்டு இறுதியில் வருவதாக இருந்ததாகவும் தற்சமயம் அது சாத்தியமற்றது எனவும் அறிக்கை வெளியாகியுள்ளதாக அல்லவா காலையில் செய்தி கேட்டேன்... 2015  ஆண்டின் நடுப்பகுதியில் வருவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதாகவும்  அதில் தெரிவித்தார்கள்.

போப் பிரான்சிசை... கலியாணம் கட்ட, அங்குள்ள சிங்களவர் கேட்டால்.....

பாவம்... போப்.

ஏன்... அங்கை.. போனன், எண்டு இருக்கும்.

நூறு அல்ல ஆயிரம் தடவை ஆமோதிக்கிறேன் .காட்டுமிராண்டி கூட்டம் ......................ஆனாலும் சாத்தான்களை தேடி யேசுகிறீஸ்து செல்லமாட்டார் ...........எனக்கு புரியவில்லை ஒரு கிறிஸ்தவன் என்ற வகையில் .................அல்லா இரட்சிக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்

போப் இந்த ஆண்டு இறுதியில் வருவதாக இருந்ததாகவும் தற்சமயம் அது சாத்தியமற்றது எனவும் அறிக்கை வெளியாகியுள்ளதாக அல்லவா காலையில் செய்தி கேட்டேன்... 2015  ஆண்டின் நடுப்பகுதியில் வருவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதாகவும்  அதில் தெரிவித்தார்கள்.

 

அப்ப... இன்னும், இரண்டு வருடம் உள்ளது.

புதிய பாப்பாண்டவருக்கு, இலங்கையில்... நடந்த இன அழிப்பைப் பற்றித் தெரிந்திருக்காது என்று நினைக்கின்றேன்.

அவருக்கும்.... நாங்கள், விளங்கப்படுத்திச் சொன்னால்.. தீர்வை பெற்றுத் தரக்கூடிய.... கால அவகாசமும், சக்தியும் அவரிடமுள்ளது.

"மனமிருந்தால்.... மார்கமுண்டு."

  • கருத்துக்கள உறவுகள்

நூறு அல்ல ஆயிரம் தடவை ஆமோதிக்கிறேன் .காட்டுமிராண்டி கூட்டம் ......................ஆனாலும் சாத்தான்களை தேடி யேசுகிறீஸ்து செல்லமாட்டார் ...........எனக்கு புரியவில்லை ஒரு கிறிஸ்தவன் என்ற வகையில் .................அல்லா இரட்சிக்கணும்.

 

சிவன், இயேசுவுக்குள்..... என்ன பிரச்சினை இருந்தாலும்..., நாம பேசி தீர்த்துக் கொள்ளுவம்.

ஆனால்... அல்லாவை, இதுக்குள்ளை... வம்புக்குள்ளை, இழுக்காதீங்கப்பா...

அல்லாவுக்கு... பகிடியும் தெரியாது... வெற்றியும்... தெரியாது.

தானாசூனா..... :D

சிவன், இயேசுவுக்குள்..... என்ன பிரச்சினை இருந்தாலும்..., நாம பேசி தீர்த்துக் கொள்ளுவம்.

ஆனால்... அல்லாவை, இதுக்குள்ளை... வம்புக்குள்ளை, இழுக்காதீங்கப்பா...

அல்லாவுக்கு... பகிடியும் தெரியாது... வெற்றியும்... தெரியாது.

தானாசூனா..... :D

:D  :D நான் அல்ல என்று குறிப்பிட்டேனுங்கோ.............. :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

:D  :D நான் அல்ல என்று குறிப்பிட்டேனுங்கோ.............. :D  :D

 

நான்... சாப்பிடுகின்ற... அல்வா என நினைத்தேன். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பாப்பரசரும் ஓர் அரசியல்வாதிதான். பன்னாட்டு விவகாரங்களைக் கவனிக்க அவருக்கென ஒரு தனிப்பிரிவு உண்டு. அந்தவகையில் இலங்கையில் நடந்த அனைத்துமே அவருக்குத்  தெரிந்திருக்கும் என்பதில் சிறிதும் அய்யமில்லை. இதை இரண்டு அரச தலைவர்களின் அரசியல் சந்திப்பாகவே நான் கருதுகின்றேன்.

 

என்னிடமுள்ள ஒரே கேள்வி பாப்பரசர் கடவுளின் தூதுவர் என்றால், இலங்கையில், ஓர் அப்பட்டமான இனப்படுகொலையை இந்திய, இலங்கை அரசுகள் உலகநாடுகளின் துணையுடன் நிகழ்த்தியிருந்தன என்பதனை இலங்கையில் வைத்துக் கூறுவார?

ஏன் ஆள்பிடிக்க வருகிறாரோ   :D

Pope says Asia trip is top priority

Published: 02 August 2013
0208francisasia_14989artthumb.jpg
Asian trip priority

Pope Francis could travel to Asia in 2014, after receiving invitations from the Philippines and Sri Lanka. The Argentine pontiff confided his plans to journalists who were flying with him back to Italy with him after his trip to Brazil, reports Vatican Insideron Ucanews.

 

 

http://www.cathnews.com/cathnews/61-archive/14989-pope-says-asia-trip-is-top-priority

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே  சுயநலம்

அதில் மதங்களும் தாளம் போடுகின்றன

மதங்களும் அரசியலாகிவிட்டன............... :(

  • கருத்துக்கள உறவுகள்

மதத் தலைவர்கள் எல்லோரும்  அரசியல்வாதிகளாகி
நாடுகளுக்கும் மக்களுக்கும் சேவை செய்வது

எப்போதோ ஆரம்பமாகி விட்டது
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.