Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானும் கணணியும் நாடும் ..!

Featured Replies

நாட்டில் இருந்து வெளிக்கிட்டு ஐரோப்பா வந்து ஒரு ஆறுமாதம் வெளிஉலகம் தெரியாது இருந்தன். அங்க போகாத இங்க போகாத அவனோட சேராத இவனோட சேராத அவங்கள் குறுப் பெடியள் இவனுகள் இவங்களுக்கு எதிர் பெடியள் எண்டு என்னை வெருட்டி வீட்டில இருத்தி போடுவாங்க. வீசா போடு அப்புறம் போய் வரலாம் எண்டு சொல்லி டிகெட் காசு போயிடும் எண்டு என்னை கூட்டி போறது இல்லை. சரி எண்டு வேலைக்கு போறவங்களுக்கு சமைச்சு கொடுப்பன். நல்லா தூள் அள்ளி போட்டு கறி வைப்பன். யாருக்கு தெரியும் அளவு.. என்ன சிவக்கவில்லை எண்டு போட்டு போட்டு கடைசியா கூடி போடும் பாவம் பேசி பேசி சாப்பிட்டு போவாங்கள் பெடியள்..

படமும் நான் பெரிதா பார்ப்பது இல்லை. அதோட இருந்த வீட்டில் தமிழ் சனல் வராது. வீட்டில் இருந்த ஒருத்தன் மட்டும் ஒரு சிறிய மடிக்கணணி வைத்து இருந்தான். மற்றவர்கள் எதிலும் பெரிய ஆர்வம் இல்லை. வேலை வீடு நித்தா என ஓடியபடி இருப்பார். இந்த சின்ன கணணி வைத்து இருந்த அண்ணணும் இரவுதான் வருவார். வந்து சாப்பிட்டு ஒரு கொஞ்ச நேரம் இணையங்கள் பார்ப்பார். நானும் வந்த புதுசு அவர் பார்க்கும் போது எட்டி எட்டி பார்க்குறது என்ன செய்திகள் எண்டு. அவர் எவருக்கும் தனது கணணி கொடுக்க மாட்டார் (அவர் தந்தாலும் அதை இயக்கி பார்க்கும் அறிவு நமக்கு இல்லை .) பிறகு பேஸ்புக் ...டுவிட்டர்...ஜிமெயில் ...யாகூ ..எண்டு எல்லாம் கதைப்பார். தானே படங்களை பார்த்து சிரிப்பார். இந்த ஸ்கைப் எப்பபாரு நொன நொன எண்டு அடிக்கும். அதிலும் கதைப்பார். ..போனிலும் கதைப்பார். கடும் அலுவலா இருப்பார்.. நமக்கு கடுப்பாகும் பயல் போடுற சீனை பார்த்து .

இரடி மகனே வேலைக்கு போக கணனிக்கு ஒரு வேலை வைக்கிறன் எண்டு நினைப்பான். ஆனால் ஒன்றும் செய்வது இல்லை. காதால இரத்தம் வர கதை நடக்கும். சிலவேளை அரசியல் அத்துப்படி. இப்பவும் யாழ் மாவட்ட தளபதி கிட்டு தான் இருக்குறார் என்று எல்லாம் நடக்கும். நானும் பல்லை கடிச்சுட்டு கிடப்பன். ஏன் வம்பு.. திருப்பி கேள்வி கேட்டா வீட்டால இறங்கு எண்டுவான் என்கிற பயம். எங்க போறது ஆக்களையும் பெரிசா தெரியாது.. கொண்டுவந்து விட்டவன் சொல்லிட்டு போனது உனக்கு வாயில சனி வெளிநாடு விளங்கும் வரை சும்மா மூடிட்டு இரு என்றுதான்... அதுக்கா இவனின் அரசியல் அறிவை கண்டு நான் வியந்து கதைப்பேன்.. அவரும் எடுத்து விடுவர் எப்படா நமக்கு வீசா கிடைச்சு இவன் மாதிரி சீன் போடுறது எண்டு நமக்கு மனதில ஒரு ஏக்கம் .

காலம் கூடி வந்துது போலிஸ் கூப்பிட்டு விசாரணை.. எழுதி கொடுத்தது ஒன்றும் விடாமல் சொன்னேன்.. சொல்லிட்டு வீட்டுக்கு வந்தா இங்க இவங்க விசாரணை என்ன கேட்டன், எத்தின கேள்வி, விசாரிச்சது பெட்டையா பெடியா கிழவனா கிழவியா..? இதை அறிஞ்சு இவங்க என்ன செய்ய போறாங்க எண்டு எனக்கு தெரியா.. ஆனாலும் சொன்னான் எல்லாம் ..அப்ப கணணி பார்த்தபடி அரசியல் அண்ணை சொன்னார் செய்திகள் இப்ப நல்லமாதிரி போடுறாங்கள் நாடு பிரச்சினை முடிஞ்சுது என்று.. கஷ்டம் தான் கிடைப்பது என்று.. எனக்கு கடுப்பாகிட்டு.. கள்ளக்கோழி பிடிக்க கம்பி வேலி புகுந்தவன் கீறின காயத்தை காட்டி ஆமி அடிச்சது எண்டு வீசா எடுக்குறான் எனக்கு காயம் எல்லாம் இருக்கு முதுகில் பீஸ் வேற இருக்கு எனக்கு தருவான் நீங்க இருங்க என பேசிட்டு இருக்க இன்னொரு குண்டு போட்டான்.. காயம் பீஸ் இருந்தா உங்களை தீவிரவாதியா பார்ப்பான் உடனும் வீசா மறுத்து பதில் வரும் என்று.. அட நாதாரி பயலே நல்ல வார்த்தை உனக்கு வராதா வெங்காயம் எண்டு மனசில நினைச்சுட்டு போயிட்டன் .

இரண்டு கிழமை கழிந்து வீசா கிடைச்சுது கடிதம் வந்துது.. நேர வேலையால வந்தவருக்கு பாருங்க மாஸ்டர் நாங்க எவ்வளவு கதை சொல்லி இருக்குறம் எங்க ஆக்களுக்கு வெள்ளை தோளுக்கு சொல்லாமல் இருப்பமா என்று ஒரு வாய் சவடல் விட்டுட்டு வேலை இருந்தா சொல்லுங்க இப்ப வீசா இருக்கு எனக்கு எண்டு அவரின் தன்மானத்தை ஒருக்கா சுரண்டி விட்டு பார்த்தன்.. மனுஷன் நாலாம் நாள் வேலை எடுத்து தந்துது.. முதல் மாத சம்பளம் வாங்கி முதல் வேலையா மடிக்கணணி வாங்கினான்.. வாங்கி வந்து எப்படி அதை இயக்குறது எண்டு தெரியாது உடனும் பெரியம்மாவின் மகன் ஒருத்தன் இத்தாலியில் இருக்குறான் அவன் அங்கயே சரியான கெட்டிக்காரன் யப்புனா ஹிந்துவில படிச்சவன் பாருங்கோ.. அவனின் நம்பர் இல்லை.. உடனும் யாழ்ப்பாணம் பெரியம்மாக்கு ஒரு பேனை போட்டு நம்பர் வாங்கி இவனுக்கு போனை போட்டேன்.. அவன் ஓம் எப்படி இருக்குறியல் கனகாலம் கதைச்சு அம்மா சொன்னவா வெளிநாடு வந்திட்டியள் எண்டு வீசா எல்லாம் ஓகே யா என குசலம் விசாரிச்சு போட்டு கேட்டான் உங்களிட்ட ஸ்கைப் இல்லையா அதில கதைக்க ப்ரீ அண்ணா என்று.. ஓமடா அதுதான் இண்டைக்கு ஒரு மடிக்கணணி வாங்கினனான் எனக்கு துப்பரவா ஒன்றும் தெரியாது உன்னட்ட கேட்பம் எண்டு எடுத்தனான் என்று சொல்ல.. அவன் ஓகே அண்ணா நல்லம் அது ஒன்றும் பிளேன் ஓடுற வேலை இல்லை நான் சொல்ல சொல்ல செய்யுங்கோ கையிலையா இருக்கு கணணி..? ஓம் சரி ஒன் பண்ணுங்கோ

நான் .பொறு

என் வலது முலையில் சின்னனா ஒரு பட்டின் இருக்கு பாருங்கோ..

அட அதுக்கு பெட்டி உடைக்காமல் எப்படி பார்க்கிறது பொறன்..

சிவணே இன்னும் பெட்டி உடைக்க வில்லையா உடையுங்கோ வேகமா..

சரி ஓகே சொல்லு ரெயிபோம் வைக்கவா வேணுமா..? மூடி வந்த பொலித்தின் கிழிக்கவா..?

போங்க சும்மா இது என்ன ஊரா எல்லாம் எறியுங்கோ..

சரி சரி கோவப்படாத சொல்லு..

ஓகே அமத்திட்டன் மூனு லைட் எரியுது இனி என்ன செய்யா..?

ம்ம் அது தானா எல்லாம் வரும் பொறுமையா இருங்கோ..

ஒரு ஐந்து நிமிடம் சரி வந்திட்டு ஒரு பெட்டி வந்து நிக்கு ..........

ஓகே நிக்கா..? அதில அம்பு குறிய கொண்டுபோய் விடுங்க.. இப்ப இடது பக்கம் கிளிக் பண்ணுங்க .....

சரி..

கன மொழி வந்து நிக்கும் நிக்கா ...

ஓம் ஓம் en,fr எண்டு காட்டுது..

அதில en கிளிக் பண்ணுங்க .

ஓகே..

இப்ப இங்கிலிஸ் மொழியில் இனி வரும் ...

நான் என் தமிழ் வராதா எல்லாரும் தமிழில செய்தி எல்லாம் பார்க்கினம் ...

அடிக் அது செய்தி இணையம் அண்ணா சொல்லுறத செய்யுங்கோ முதல் .. சரி இப்ப கூகுளுக்கு போங்கோ ஜிடவுளோ எண்டு அடிச்சு பாருங்க

ஓம் வருது ம்ம் ..

அதில டிம் விபர் எண்டு அடியுங்கோ ...எழுத்து ச்பளின்க் பண்ணு

ஓம் ஒரு சீனுவா பிள்ளை ஒரு கொப்பிய செங்கல்லுக்கு மேல பிடிச்சு நிக்கு....

ஓம் அதுதான் அதில டவுன் லோட் எண்டு இருக்கும் அதை அமத்துங்கோ

ம்ம் பச்சையா ஓடுது .

சரி விடுங்க அதுதானா வரும் ..

வந்திட்டு..

இப்ப இரண்டு நமபர் தெரியும் அதை எனக்கு சொல்லுங்க ..

ஓம் எழுத்து எண்டு நான் சொல்லிக்கொண்டு இருக்க நான் கை வைக்காமலே அம்புக்குறி ஆடுது திகைச்சு போனன் பழுதா போட்டுது போல எண்டு ..

அவன் சொன்னான் அதுநான் நீங்க சும்மா இருங்க உங்களுக்கு என்ன வேணும் எல்லாம் இறக்கி விடுறன்..

சரி பேஸ்புக் முதல் வேணும் ...

ஓகே ஒரு பெயர் சொல்லுங்க பேஸ்புக் திறக்க உண்மையான பெயரா அல்லது வேற பெயரா எண்டான்

நான் ஏன் வேறு பெயர் என் உண்மை பெயரை போடு என்றேன் அதுக்கு அவன் இல்லை கணனியில் நாடு பிடிக்கிறது எண்டால் எதாவது தமிழ் மறவன் ....ஈழ புதல்வன் இப்படி பெயர் போட்டா காண லைக் விழும் உங்களுக்கு அதுக்குதான் கேட்டேன் என்றான் .

அட பாவி இது வேறையா வேணாம் நீ நோமலா திற..

ஓகே அண்ணா இது உங்க ஐடி இது உங்க பாதுகாப்பு எண் என தந்தான் நானும் இருந்து உள்ள நாட்டு பெயருகள் எல்லாம் அடிச்சு தேடுறது ஆக்களை.. மூனாவது நாள் தம்பி ஸ்கைப்பில் கால் பண்ணுறான் எங்க உங்க பேஸ்புக்கில கானம் என்று.. வாங்கோ எதாவது பதிவு போடுங்கோ தமிழில கூகள் போய் எழுதுங்க அப்புறம் கொப்பி பண்ணி கொண்டுவந்து இங்க போடுங்க என விளக்கம் தந்தான்.. நானும் ஆத்திசூடி ..திருக்குறள் ..தத்துவம் கண்னதாஷன் எண்டு போடுவன்.. ஒருநாள் அவன் எனக்கு செம பேச்சு என்ன உங்களுக்கு பிரபலம் ஆக்கி வாரா பிளான் இல்லையோ எதாவது போராட்டம் பற்றி எழுதுங்க நீங்க வன்னியில் பார்த்த நிகழ்வுகள் எல்லாம் எழுதலாம் .. அப்படியா இனி எழுதுறன் எண்டு அடுத்த நாள் தொடங்கி போராட்ட பதிவுகள் தலைவரின் படம் ஊர்வலம் எண்டு எல்லாம் போட்டு எழுத லைக்கும் கொமன்சும் குவியுது எனக்கு தலைகால் புரியா சந்தோசம் பாருங்கோ...

நான் அந்தசண்டையில் நிண்டன் அங்க ஆமியை பிடிச்சான் இங்க காயப்பட்டன் எண்டு எழுத எழுத நாளுக்கு நாள் கூட்டம் கூடிக்கொண்டு போகுது.. ஒருநாள் காணாட்டி உள் பெட்டியில் தேடி செய்திகள் என்ன ஆச்சு எங்க போட்டியல் என்ன நடந்தது எண்டு.. ஒரு பெரிய அளவில நாமக்கு கவனிப்பு பாருங்கோ.. நாம இரண்டு வேலை அதால இருப்பது குறைவு எண்டு சொல்ல முடியுமா.. அடிச்சு விடுறது ஒரு முக்கிய சந்திப்பு அதுதான் வரவில்லை அப்படி இப்படி கதையா விடுறது.. அவனுகளும் அதை நம்பி நம்ம பெரிய ஆள் போல அண்ணை எண்டு நினைக்குறது.. நாள் போக போக பேஸ்புக் சலிச்சு போக நமக்கு நாமே கேள்விகேட்டு எதுக்கு இந்த பிழைப்பு ஏன் ஊரை ஏமாற்றுவான் எமக்காக மடிந்தவர் தியாகங்களில் நான் ஏன் சினிமா காட்டவேணும் நாலு லைக்குக்கு ஆக அவர்கள் சாதனைகளை எனது என சொல்வது எவ்வளவு ஒரு கொடுமையான விஷயம்...

அன்று முடிவு எடுத்தேன் இனி பேஸ்புக் போவது இல்லை கணக்கை செயல் இழக்க பண்ணிட்டு நிமிந்த போது என்னும் ஒரு மன நிறைவு எதோ ஒரு பாரம் குறைந்த மாதிரி இருந்துது பின்னர் புத்தகங்கள் வாசிக்க என்னை பழக்கி கொண்டேன் பொழுதை வேறு வழிகளில் செலவு செய்வது எப்படி என என்னை தயார் படுத்தி கொண்டு வந்து இருந்த தேசத்தின் மொழியை படிக்க கிளம்பினேன்...

Edited by அஞ்சரன்

என் வலது முலையில் சின்னனா ஒரு பட்டின் இருக்கு பாருங்கோ..

அட அதுக்கு பெட்டி உடைக்காமல் எப்படி பார்க்கிறது பொறன்..

சிவணே இன்னும் பெட்டி உடைக்க வில்லையா உடையுங்கோ வேகமா..

சரி ஓகே சொல்லு ரெயிபோம் வைக்கவா வேணுமா..? மூடி வந்த பொலித்தின் கிழிக்கவா..?

போங்க சும்மா இது என்ன ஊரா எல்லாம் எறியுங்கோ..

சரி சரி கோவப்படாத சொல்லு..

ஓகே அமத்திட்டன் மூனு லைட் எரியுது இனி என்ன செய்யா..?

ம்ம் அது தானா எல்லாம் வரும் பொறுமையா இருங்கோ..

ஒரு ஐந்து நிமிடம் சரி வந்திட்டு ஒரு பெட்டி வந்து நிக்கு ..........

ஓகே நிக்கா..? அதில அம்பு குறிய கொண்டுபோய் விடுங்க.. இப்ப இடது பக்கம் கிளிக் பண்ணுங்க .....

சரி..

கன மொழி வந்து நிக்கும் நிக்கா ...

ஓம் ஓம் en,fr எண்டு காட்டுது..

அதில en கிளிக் பண்ணுங்க .

ஓகே..

இப்ப இங்கிலிஸ் மொழியில் இனி வரும் ...

நான் என் தமிழ் வராதா எல்லாரும் தமிழில செய்தி எல்லாம் பார்க்கினம் ...

அடிக் அது செய்தி இணையம் அண்ணா சொல்லுறத செய்யுங்கோ முதல் .. சரி இப்ப கூகுளுக்கு போங்கோ ஜிடவுளோ எண்டு அடிச்சு பாருங்க

ஓம் வருது ம்ம் ..

அதில டிம் விபர் எண்டு அடியுங்கோ ...எழுத்து ச்பளின்க் பண்ணு

ஓம் ஒரு சீனுவா பிள்ளை ஒரு கொப்பிய செங்கல்லுக்கு மேல பிடிச்சு நிக்கு....

ஓம் அதுதான் அதில டவுன் லோட் எண்டு இருக்கும் அதை அமத்துங்கோ

ம்ம் பச்சையா ஓடுது .

சரி விடுங்க அதுதானா வரும் ..

வந்திட்டு..

இப்ப இரண்டு நமபர் தெரியும் அதை எனக்கு சொல்லுங்க ..

ஓம் எழுத்து எண்டு நான் சொல்லிக்கொண்டு இருக்க நான் கை வைக்காமலே அம்புக்குறி ஆடுது திகைச்சு போனன் பழுதா போட்டுது போல எண்டு ..

அவன் சொன்னான் அதுநான் நீங்க சும்மா இருங்க உங்களுக்கு என்ன வேணும் எல்லாம் இறக்கி விடுறன்..

சரி பேஸ்புக் முதல் வேணும் ... /////

இங்கை நிக்கிறியள் அஞ்சரன் :D :D . அனுபவக் கதைகள் எழுதுவதானால் நாடு அடிபட்டு எழும்பினால்தான் எழுதலாம் . அது உங்களிடம் சிறிது தூக்கலாக இருகின்றது என நினைகின்றேன் . புலப் பெயர்வின் ஆரம்பக் காலகட்டங்களில் உங்கள் அறை நண்பரைப் போன்ற  பார்ட்டியள்   ஊரில் வந்து பிளைட் ஒட தாங்களும் அதோடை ஓடி சூட்கேசைப் போட்டுவிட்டு எறினதாகப் பீலா விட , நாங்களும் அதை உண்மை என்று நம்பிய காலம் ஒன்று உண்டு :lol: :lol: . அதை மீளக் கொண்டுவந்ததிற்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் .தொடருங்கோ :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

 முதல் மாத சம்பளம் வாங்கி முதல் வேலையா மடிக்கணணி வாங்கினான்.. வாங்கி வந்து எப்படி அதை இயக்குறது எண்டு தெரியாது உடனும் பெரியம்மாவின் மகன் ஒருத்தன் இத்தாலியில் இருக்குறான் அவன் அங்கயே சரியான கெட்டிக்காரன் யப்புனா ஹிந்துவில படிச்சவன் பாருங்கோ.. அவனின் நம்பர் இல்லை.. உடனும் யாழ்ப்பாணம் பெரியம்மாக்கு ஒரு பேனை போட்டு நம்பர் வாங்கி இவனுக்கு போனை போட்டேன்.. அவன் ஓம் எப்படி இருக்குறியல் கனகாலம் கதைச்சு அம்மா சொன்னவா வெளிநாடு வந்திட்டியள் எண்டு வீசா எல்லாம் ஓகே யா என குசலம் விசாரிச்சு போட்டு கேட்டான் உங்களிட்ட ஸ்கைப் இல்லையா அதில கதைக்க ப்ரீ அண்ணா என்று.. ஓமடா அதுதான் இண்டைக்கு ஒரு மடிக்கணணி வாங்கினனான் எனக்கு துப்பரவா ஒன்றும் தெரியாது உன்னட்ட கேட்பம் எண்டு எடுத்தனான் என்று சொல்ல.. அவன் ஓகே அண்ணா நல்லம் அது ஒன்றும் பிளேன் ஓடுற வேலை இல்லை நான் சொல்ல சொல்ல செய்யுங்கோ கையிலையா இருக்கு கணணி..?

ஓம்

சரி ஒன் பண்ணுங்கோ

நான் .பொறு

என் வலது முலையில் சின்னனா ஒரு பட்டின் இருக்கு பாருங்கோ..

அட அதுக்கு பெட்டி உடைக்காமல் எப்படி பார்க்கிறது பொறன்..

சிவணே இன்னும் பெட்டி உடைக்க வில்லையா உடையுங்கோ வேகமா..

சரி ஓகே சொல்லு ரெயிபோம் வைக்கவா வேணுமா..? மூடி வந்த பொலித்தின் கிழிக்கவா..?

போங்க சும்மா இது என்ன ஊரா எல்லாம் எறியுங்கோ..

சரி சரி கோவப்படாத சொல்லு..

ஓகே அமத்திட்டன் மூனு லைட் எரியுது இனி என்ன செய்யா..?

ம்ம் அது தானா எல்லாம் வரும் பொறுமையா இருங்கோ..

ஒரு ஐந்து நிமிடம் சரி வந்திட்டு ஒரு பெட்டி வந்து நிக்கு ..........

ஓகே நிக்கா..? அதில அம்பு குறிய கொண்டுபோய் விடுங்க.. இப்ப இடது பக்கம் கிளிக் பண்ணுங்க .....

சரி..

கன மொழி வந்து நிக்கும் நிக்கா ...

ஓம் ஓம் en,fr எண்டு காட்டுது..

அதில en கிளிக் பண்ணுங்க .

ஓகே..

இப்ப இங்கிலிஸ் மொழியில் இனி வரும் ...

நான் ன் தமிழ் வராதா எல்லாரும் தமிழில செய்தி எல்லாம் பார்க்கினம் ...

அடிக் அது செய்தி இணையம் அண்ணா சொல்லுறத செய்யுங்கோ முதல் .. சரி இப்ப கூகுளுக்கு போங்கோ ஜிடவுளோ எண்டு அடிச்சு பாருங்க

ஓம் வருது ம்ம் ..

அதில டிம் விபர் எண்டு அடியுங்கோ ...எழுத்து ச்பளின்க் பண்ணு

ஓம் ஒரு சீனுவா பிள்ளை ஒரு கொப்பிய செங்கல்லுக்கு மேல பிடிச்சு நிக்கு....

ஓம் அதுதான் அதில டவுன் லோட் எண்டு இருக்கும் அதை அமத்துங்கோ

ம்ம் பச்சையா ஓடுது .

சரி விடுங்க அதுதானா வரும் ..

வந்திட்டு..

இப்ப இரண்டு நமபர் தெரியும் அதை எனக்கு சொல்லுங்க ..

ஓம் எழுது எண்டு நான் சொல்லிக்கொண்டு இருக்க நான் கை வைக்காமலே அம்புக்குறி ஆடுது திகைச்சு போனன் பழுதா போட்டுது போல எண்டு ..

அவன் சொன்னான் அதுநான் நீங்க சும்மா இருங்க உங்களுக்கு என்ன வேணும் எல்லாம் இறக்கி விடுறன்..

சரி பேஸ்புக் முதல் வேணும் ...

ஓகே ஒரு பெயர் சொல்லுங்க பேஸ்புக் திறக்க உண்மையான பெயரா அல்லது வேற பெயரா எண்டான்

நான் ஏன் வேறு பெயர் என் உண்மை பெயரை போடு என்றேன் அதுக்கு அவன் இல்லை கணனியில் நாடு பிடிக்கிறது எண்டால் எதாவது தமிழ் மறவன் ....ஈழ புதல்வன் இப்படி பெயர் போட்டா காண லைக் விழும் உங்களுக்கு அதுக்குதான் கேட்டேன் என்றான் .

அட பாவி இது வேறையா வேணாம் நீ நோமலா திற..

ஓகே அண்ணா இது உங்க ஐடி இது உங்க பாதுகாப்பு எண் என தந்தான் நானும் இருந்து உள்ள நாட்டு பெயருகள் எல்லாம் அடிச்சு தேடுறது ஆக்களை.. மூனாவது நாள் தம்பி ஸ்கைப்பில் கால் பண்ணுறான் எங்க உங்க பேஸ்புக்கில கானம் என்று.. வாங்கோ எதாவது பதிவு போடுங்கோ தமிழில கூகள் போய் எழுதுங்க அப்புறம் கொப்பி பண்ணி கொண்டுவந்து இங்க போடுங்க என விளக்கம் தந்தான்.. நானும் ஆத்திசூடி ..திருக்குறள் ..தத்துவம் கண்னதாஷன் எண்டு போடுவன்.. 

:lol: எனக்கு சிரிச்சு வயிறு நோவுது அஞ்சரன் அண்ணா.. செம காமடிதான்.. கிகிகி.. நல்ல கதை.. நன்றி அண்ணா பகிர்விற்கு..

  • கருத்துக்கள உறவுகள்

கலக்கல்.. :lol: :lol:

அஞ்சரன் அண்ணா மனங்கனிந்த பாராட்டுக்கள் .தொடருங்கோ 

  • தொடங்கியவர்

கலக்கல்.. :lol: :lol:

மிக்க நன்றி அண்ணா உங்களிடம் கருத்து பொறுவது மிக்க மகிழ்ச்சி :)

என் வலது முலையில் சின்னனா ஒரு பட்டின் இருக்கு பாருங்கோ..

அட அதுக்கு பெட்டி உடைக்காமல் எப்படி பார்க்கிறது பொறன்..

சிவணே இன்னும் பெட்டி உடைக்க வில்லையா உடையுங்கோ வேகமா..

சரி ஓகே சொல்லு ரெயிபோம் வைக்கவா வேணுமா..? மூடி வந்த பொலித்தின் கிழிக்கவா..?

போங்க சும்மா இது என்ன ஊரா எல்லாம் எறியுங்கோ..

சரி சரி கோவப்படாத சொல்லு..

ஓகே அமத்திட்டன் மூனு லைட் எரியுது இனி என்ன செய்யா..?

ம்ம் அது தானா எல்லாம் வரும் பொறுமையா இருங்கோ..

ஒரு ஐந்து நிமிடம் சரி வந்திட்டு ஒரு பெட்டி வந்து நிக்கு ..........

ஓகே நிக்கா..? அதில அம்பு குறிய கொண்டுபோய் விடுங்க.. இப்ப இடது பக்கம் கிளிக் பண்ணுங்க .....

சரி..

கன மொழி வந்து நிக்கும் நிக்கா ...

ஓம் ஓம் en,fr எண்டு காட்டுது..

அதில en கிளிக் பண்ணுங்க .

ஓகே..

இப்ப இங்கிலிஸ் மொழியில் இனி வரும் ...

நான் என் தமிழ் வராதா எல்லாரும் தமிழில செய்தி எல்லாம் பார்க்கினம் ...

அடிக் அது செய்தி இணையம் அண்ணா சொல்லுறத செய்யுங்கோ முதல் .. சரி இப்ப கூகுளுக்கு போங்கோ ஜிடவுளோ எண்டு அடிச்சு பாருங்க

ஓம் வருது ம்ம் ..

அதில டிம் விபர் எண்டு அடியுங்கோ ...எழுத்து ச்பளின்க் பண்ணு

ஓம் ஒரு சீனுவா பிள்ளை ஒரு கொப்பிய செங்கல்லுக்கு மேல பிடிச்சு நிக்கு....

ஓம் அதுதான் அதில டவுன் லோட் எண்டு இருக்கும் அதை அமத்துங்கோ

ம்ம் பச்சையா ஓடுது .

சரி விடுங்க அதுதானா வரும் ..

வந்திட்டு..

இப்ப இரண்டு நமபர் தெரியும் அதை எனக்கு சொல்லுங்க ..

ஓம் எழுத்து எண்டு நான் சொல்லிக்கொண்டு இருக்க நான் கை வைக்காமலே அம்புக்குறி ஆடுது திகைச்சு போனன் பழுதா போட்டுது போல எண்டு ..

அவன் சொன்னான் அதுநான் நீங்க சும்மா இருங்க உங்களுக்கு என்ன வேணும் எல்லாம் இறக்கி விடுறன்..

சரி பேஸ்புக் முதல் வேணும் ... /////

இங்கை நிக்கிறியள் அஞ்சரன் :D :D . அனுபவக் கதைகள் எழுதுவதானால் நாடு அடிபட்டு எழும்பினால்தான் எழுதலாம் . அது உங்களிடம் சிறிது தூக்கலாக இருகின்றது என நினைகின்றேன் . புலப் பெயர்வின் ஆரம்பக் காலகட்டங்களில் உங்கள் அறை நண்பரைப் போன்ற  பார்ட்டியள்   ஊரில் வந்து பிளைட் ஒட தாங்களும் அதோடை ஓடி சூட்கேசைப் போட்டுவிட்டு எறினதாகப் பீலா விட , நாங்களும் அதை உண்மை என்று நம்பிய காலம் ஒன்று உண்டு :lol: :lol: . அதை மீளக் கொண்டுவந்ததிற்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் .தொடருங்கோ :) :)

உங்களை போன்றோரின் ஊக்கமே எனது எழுத்து வளர்வதுக்கு முக்கியம் நன்றி அண்ணா :)

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன், கணணியை வாங்கிய ஆரம்பத்தில் நம்மளை கணணி வித்துவான்கள் படுத்திய பாடு...யப்பா தாங்க முடியாக் கொடுமை. அவ்வளத்தையும் பிள்ளை எங்கள் சார்பிலும் எழுதியிருக்கிறீங்கள். மிக்க நன்றி தம்பி.

13வருடம் முதல் இந்த கணணி வல்லுனர்களால் பாதிக்கப்பட்ட தன்பத்தை ஒரு நகைச்சுவை நாடகமாக நானும் எனது பிள்ளைகள் கணவரும் சில நண்பர்களும் சேர்ந்து ஒலிப்பதிவு செய்து இணையத்தில் உலவவிட்டோம். அதன் ஒலிப்பதிவையும் விரைவில் இதில் இணைக்கலாமென இருக்கிறேன். நீங்களும் ஒருக்கா கொம்பியூட்டர் கோதண்டபிள்ளையின் அனியாயத்தை கேட்டுப்பாருங்கோ. நாளைக்கு நாடகம் கொண்டு வாறன்.

அனுபவத்தை அப்பிடியே நகைச்சுவையோடு தந்தமைக்கு மீண்டும் நன்றிகள்.

  • தொடங்கியவர்

நன்றி கே கரன் ..சுபேஸ் ..சாந்தி அக்கா . :)

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவப் பகிர்வு அருமை. இன்னும் இருப்பதை எழுதுங்கோ.

  • தொடங்கியவர்

அனுபவப் பகிர்வு அருமை. இன்னும் இருப்பதை எழுதுங்கோ.

நன்றி அக்கா உங்கள் வரவுக்கு .

அஞ்சரன்.... கலகலப்பாக, இரசித்து படிக்கும்வகையில் எழுதியிருக்கின்றீர்கள்.

பாராட்டுக்கள்...!

கொஞ்சம் எழுத்துப்பிழை, வாங்கினான்~ வாங்கினேன் என்பதுபோன்ற வார்த்தைப் பிரயோகங்களில் வாசிக்கும்போதுசட்டென்று ஒரு குழப்பம் வருது - இவைகளைக் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள். மற்றும்படி... பேச்சு வழக்கினைக் கலந்து பாவிப்பது எல்லாம் மிக நன்றாகவே இருக்கு! :)

தொடர்ந்து எழுதுங்கள்...! :)

நன்றி கவிதை கவனத்தில் எடுக்கிறேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.