Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்.....

Featured Replies

யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி

[ ஞாயிற்றுக்கிழமை, 22 செப்ரெம்பர் 2013, 01:14.40 AM GMT ]

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 213,907

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 35,995

ஐக்கிய தேசியக் கட்சி - 855

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 253,542

நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 20,279

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 273,821

பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 426,813

இலங்கை தமிழரசுக் கட்சி - 14 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2 ஆசனங்கள்

செய்தி, லங்காசிறீ.

இலங்கைத் தமிழரசுக் கட்சி

1.சி.வி. விக்கினேஸ்வரன் - 132,255 வாக்குகள்

2.அனந்தி சசிதரன் - 87,870 வாக்குகள்

3.தர்மலிங்கம் சித்தார்த்தன் - 39,715

4.பாலச்சந்திரன் கஜதீபன் - 29,669 வாக்குகள்

5.இ.ஆர்னோல்ட் - 26,888 வாக்குகள்

6.கந்தையா சிவஞானம் - 26,747 வாக்குகள்

7.எம்.கே.சிவாஜிலிங்கம் - 22,660 வாக்குகள்

8.பொன்னுத்துரை ஐங்கரநேசன் - 22,268 வாக்குகள்

9.எஸ்.சுகிர்தன் -20,541 வாக்குகள்

10.கே.சயந்தன் -20,179 வாக்குகள்

11.விந்தன் கனகரத்தினம் -16,463 வாக்குகள்

12.ஏ.பரம்சோதி -16,359 வாக்குகள்

13.கந்தையா சர்வேஸ்வரன் -14,761 வாக்குகள்

14.வி.சிவயோகம் - 13,479 வாக்குகள்

ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

1. கந்தசாமி கமலலேந்திரன் - 13,632 வாக்குகள்

2. அங்கஜன் இராமநாதன் - 10,034 வாக்குகள்

ஓர் வாக்காளர் எத்தனை வேட்பாளர்களிற்கு தனது விருப்பு வாக்குகளை இடலாம்?

ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்த மொத்த வாக்குகள், அதன் வேட்பாளர்களிற்கு கிடைத்த விருப்பு வாக்குகள் ஆகியன ஒன்றுக்கொன்று பொருந்தி தென்படவில்லையே?

இதன் காரணம் வாக்காளர்களா அல்லது மோசடியா/(கள்ளவோட்டு?)?

அல்லது எனக்குத்தான் விளக்கம் குறைவோ?

  • Replies 392
  • Views 31.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

63926_10202355872964727_2121387665_n.jpg

நன்றாயுள்ளது யாழ்அன்பு 

  • தொடங்கியவர்

ஓர் வாக்காளர் எத்தனை வேட்பாளர்களிற்கு தனது விருப்பு வாக்குகளை இடலாம்?

ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்த மொத்த வாக்குகள், அதன் வேட்பாளர்களிற்கு கிடைத்த விருப்பு வாக்குகள் ஆகியன ஒன்றுக்கொன்று பொருந்தி தென்படவில்லையே?

இதன் காரணம் வாக்காளர்களா அல்லது மோசடியா/(கள்ளவோட்டு?)?

அல்லது எனக்குத்தான் விளக்கம் குறைவோ?

ஒருவர் மூன்று விருப்பு வாக்குகளை அளிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெற்றிபெற்றது மிகவும் மகிழ்ச்சியானவிடயம். விகிதசாரப் பிரதிநித்துவத்தின் அடிப்படையில்லாது இந்தியா முறையில் அல்லது வெளினாட்டுமுறையில் முடிவுகள் கணிக்கப்பட்டிருப்பின் 38 தொகுதிகளிலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பே வெற்றி பெற்றிருக்கும்.

1989ல் இந்திய இராணுவகாலத்தில் நடைபெற்ற சிறிலங்கா பாராளுமன்றத்தேர்தலில் ஈரோஸ் அமைப்பினர்(விடுதலைப்புலிகள் ஆதரவு பெற்ற) யாழ் மாவட்டத்தில் அமோக வெற்றி பெற்றது. ஈரோசுக்கு எதிராக  தமிழர்விடுதலைக்கூட்டணி,ஈபிஆர் எல் எவ், ஈஎன்டிஎல் எவ், ரெலோ ஆகியவை தமிழர்விடுதலைக்கூட்டணி அமைப்பின் கீழ்ப் போட்டியிட்டன. அக்கூட்டமைப்பில் ஈபிஆர் எல் எவ் அமைப்பு விவேகத்துடன் தங்களது குழுவைச் சேர்ந்த 3 பேரை மட்டுமே போட்டியிட அனுமதித்தது. இந்தியப்படையுடன் கள்ளவோட்டுக்கள் தமிழர்விடுதலைக்கூட்டணிக்கு விழுந்தது. அத்துடன் ரெலோ, தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈபிஆர் எல் எவ், ஈ என்டி எல் எவ் ஆதரவாளர்களும் இக்கூட்டமைப்புக்கே வாக்குகளை வழங்கினார்கள். அத்தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளர் கட்சிக்கும் வாக்களித்து விரும்பிய 3 வேட்பாளார்களுக்கும் கட்டாயம் வாக்களிக்கவேண்டும். ஈபிஆர் எல் எவ்வினர்  கூட்டணிக்கு கட்சிக்கு வாக்களித்துவிட்டு விரும்பிய 3 வாக்களார்களாக தங்களது 3 போட்டியாளார்களுக்கும் வாக்களித்தனர்.  அத்தேர்தலில் ஈரோஸ் அதிக இடங்களை யாழில் பிடிக்க, தமிழர் விடுதலைக்கூட்டணி 3 இடங்களைப்பிடித்தது. அக்கூட்டணியில் அதிக விருப்பு வாக்குகள் ஈபிஆர் எல் எவ்வுக்கு கிடைத்தது. அதாவது அவர்களின் வாக்குகள் பிரிபடவில்லை. ஆனால் தமிழர் விடுதலைக்கூட்டணியில் 3க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டியிட்டதினால் அவர்களின் விருப்பு வாக்குகள் பிரிவு பட்டன. அதே போல புளட் இயக்கத்தினைச் சேர்ந்தவர்களில் இம்முறை சித்தார்த்தனே போட்டியிட்டதினால் புளட் ஆதரவாளர்கள், மானிப்பாய் தொகுதியில் அவரின் குடும்பத்துக்கு விருப்பமானவர்களினால் அவர் 3ம் இடத்துக்கு வந்திருக்கலாம். 2004ம் ஆண்டில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதின் பின்பு சிட்னிக்கு சிவாஜிலிங்கம் அவர்கள் கோம்புஸ் உயர்தரப்படசாலையில் ஒரு கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தினார். இதற்கு நான், யாழ்கள உறுப்பினர் புத்தன் உட்பட பலர் கலந்து கொண்டோம். விடுதலைப்புலிகளுக்கு அதரவாக இக்குழுவில் முன்பு எதிராகச் செயல்பட்ட ஈபிஆர் எல் எவ்வினர்(சுரேஸ் பிரமச்சந்திரன்), ரெலோ போன்றவர்களையும் சேர்க்கமுடியுமென்றால் ஏன் ஈபிடிபியையும் பிற்காலத்தில் சேர்க்க முடியாது என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு சிவாஜிலிங்கம் அவர்கள் யாரையும் நம்பலாம் ஆனால் டக்லசினை நம்பமுடியாது. பிற்காலத்தில் சித்தார்த்தன் போன்றவர்களை சேர்த்தாலும் சேர்ப்போமே ஒழிய டக்லசினைச் சேர்க்க மாட்டோம் என்று சொன்னார். 2004ல் ஆனந்தசங்கரியையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவரின் வறட்டுக் கெளரவத்தினால் சங்கரி சேர்க்கப்படவில்லை.

தென்பகுதியில் சீறுபான்மையீனரின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்காகவே மூன்று விருப்பு வாக்கு முறை அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. காரணம் தென்பகுதி மாவட்டங்களில் (நுவரெலியா தவிர்ந்த) ஒன்று அல்லது இரண்டு சிறுபான்மையீன வேட்பாளர்களே கட்சிப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். ஆனால் சிங்களப் பிரதிநிதிகள் தமக்குள் கூட்டமைத்து மூன்று விருப்பு வாக்குகளையும் பகிர்ந்து கொள்ள இவர்கள் தமது வாக்குகளை வைத்துப் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதென்பது சிரமமான காரியம். 

  • கருத்துக்கள உறவுகள்

2000 ஆண்டில் தமிழர் விடுதலைக்கூட்டணி வடக்கு கிழக்கில் 5 இடங்களை மட்டுமே பெற்றது. அதில் மாமனிதர் ஜோசப் பராஜசிங்கம்.எஸ் சிவமகராஜா, மாவை சேனாதிபதி , நிர்மலன் செளந்தரநாயம் ஆகியோருடன் ஆனந்த சங்கரியும் வெற்றி பெற்றார்.

சங்கரி 2004ல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் போட்டியிட விரும்பாமால் தனியாகப் போட்டியிட்டு படு தோல்வியடைந்தார்.

Ethnic Tamils in Sri Lanka's war-ravaged north have resoundingly voted for greater regional autonomy.

The country's elections commission announced Sunday that the Tamil National Alliance will form the first functioning provincial government in the northern Tamil heartland after securing 30 seats out of 38 in Saturday's election. President Mahinda Rajapaksa's coalition won eight seats.

The polling comes four years after the military crushed a 26-year separatist Tamil conflict. The fighting resulted in more than 100,000 deaths. 

The international community has been pressuring Sri Lanka's government to reconcile with the former rebels. Saturday's voting is seen as a crucial test of reconciliation between the Tamils and the majority ethnic Sinhalese, who control Sri Lanka's government and military.

http://www.voanews.com/content/sri-lankas-tamils-vote-for-greater-autonomy/1754602.html

  • கருத்துக்கள உறவுகள்

2004க்கு முதல் 2001ல் தேர்தல் நடைபெற்றது. அதில் கூட்டணி, ரெலோ, ஈபிஆர் எல் எவ், தமிழ்காங்கிரஸ் ஆகியவை ஒரே கூட்டணியில் போட்டியிட்டு 15 இடங்களை வடக்கு கிழக்கில் பெற்றன. ஆனந்தசங்கரி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரவிராஜ், ஜோசப் பராஜசிங்கம், சம்பந்தன்,சிவாஜிலிங்கம் போன்றோர் வெற்றி பெற்றார்கள்.

2001 Parliamentary General Election

In the first parliamentary election contested by the Tamil National Alliance, the 5 December 2001 election, the TNA led by Rajavarothiam Sampanthan won 3.88% of the popular vote and 15 out of 225 seats in the Sri Lankan parliament.

Votes and seats won by TNA by electoral district

Electoral

District

Votes % Seats Turnout TNA MPs Ampara 48,789 17.41% 1 82.51% Ariyanayagam Chandra Nehru (TULF) Batticaloa 86,284 48.17% 3 68.20% G. Krishnapillai (ACTC)

Joseph Pararajasingham (TULF)

Thambiraja Thangavadivel (TELO) Colombo 12,696 1.20% 0 76.31%   Jaffna 102,324 54.84% 6 31.14% V. Anandasangaree (TULF)

Gajendrakumar Ponnambalam (ACTC)

Nadarajah Raviraj (TULF)

Mavai Senathirajah (TULF)

M. K. Shivajilingam (TELO)

A. Vinayagamoorthy (ACTC) Trincomalee 56,121 34.83% 1 79.88% R. Sampanthan (TULF) Vanni 41,950 44.39% 3 46.77% Selvam Adaikalanathan (TELO)

Sivasakthy Ananthan (EPRLF)

Irasa Kuhaneswaran (TELO) National List     1   M. Sivasithamparam (TULF), died 5 June 2002

K. Thurairetnasingam (TULF) (replaces M. Sivasithamparam) Total 348,164 3.88% 15 76.03%  

http://en.wikipedia.org/wiki/Tamil_National_Alliance

கந்தப்பண்ணை வாங்கோ!

புள்ளிவிபரங்களைப் பிரிச்சு மேயுறதுக்கு உங்களை அடிக்க ஆளில்லைப் பாருங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பண்ணை வாங்கோ!

புள்ளிவிபரங்களைப் பிரிச்சு மேயுறதுக்கு உங்களை அடிக்க ஆளில்லைப் பாருங்கோ!

கன காலத்துக்கு பின்பு உங்களை யாழில் கண்டது மகிழ்ச்சி, இரசிகைக்கும் சுகம் சொல்லிவிடவும்.

  • கருத்துக்கள உறவுகள்

Ethnic Tamils in Sri Lanka's war-ravaged north have resoundingly voted for greater regional autonomy.

The country's elections commission announced Sunday that the Tamil National Alliance will form the first functioning provincial government in the northern Tamil heartland after securing 30 seats out of 38 in Saturday's election. President Mahinda Rajapaksa's coalition won eight seats.

The polling comes four years after the military crushed a 26-year separatist Tamil conflict. The fighting resulted in more than 100,000 deaths. 

The international community has been pressuring Sri Lanka's government to reconcile with the former rebels. Saturday's voting is seen as a crucial test of reconciliation between the Tamils and the majority ethnic Sinhalese, who control Sri Lanka's government and military.

http://www.voanews.com/content/sri-lankas-tamils-vote-for-greater-autonomy/1754602.html

விகிதசாரப்பிரதினித்திவம் காரணமாகத்தான் 20க்கும் குறைவான விகித வாக்குகளைப் பெற்ற கட்சியில் இருந்து 7 பேர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் வெளினாட்டு ஊடகங்களுக்கு இது தெரியுமா? செய்திகளைப் பார்க்கும் போது 7 தொகுதிகளில் இக்கட்சி வெற்றி பெற்றது போல இருக்கிறது.

தற்பொழுது மகிந்தா அரசு நாட்டினை ஆள்வதினால் அவர்களின் கட்சிக்கு 7 இடங்கள் கிடைத்திருக்கிறது. ஐதேகட்சி ஆண்டிருந்தால் அவர்களுக்கு இந்த இடங்கள் (கள்ளவோட்டின் அடிப்படையில்) கிடைத்திருக்கும். டக்லசும் கட்சி தாவியிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பண்ணை வாங்கோ!

புள்ளிவிபரங்களைப் பிரிச்சு மேயுறதுக்கு உங்களை அடிக்க ஆளில்லைப் பாருங்கோ!

சிறுவயதில் இருந்தே எனக்கு தேர்தல் என்றால் விருப்பம். எனக்கு நினைவு தெரிந்து 6 வயதில் எனதுவீட்டில் வானொலிப் பெட்டிக்கு முன்பாக எனது அப்பா, பெரியப்பா, அப்பாப்பா ஆகியோர் கடதாசியில் வாக்குகளின் விபரங்களை எழுதுவார்கள். தற்பொழுது இந்தியத் தேர்தல் ,அவுஸ்திரெலியாத்தேர்தல் எனத் தொடர்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியாவில் நடைபெறும் செனட் தேர்தலும் கிட்டத்தட்ட சிறிலங்காவின் விகிதச்சாரப் பிரதிநிதித்துவம் போன்றது. நான் பல தமிழர்களுக்கு பாராளுமன்றத்தில் எமக்காகக்குரல் கொடுக்கும் பசுமைக்கட்சிக்கு வாக்களியுங்கள் என்று சொல்லிக் களைத்துப் போய்விட்டேன். அவர்கள் பசுமைக்கட்சிக்கு வாக்களித்தால் வாக்குகள் வீணாகிவிடும் என்று நினைத்து பெரிய கட்சிகளுக்கே வாக்களிக்கிறார்கள்.

இந்த துணுக்கை இணைக்க இது பொருத்தமான இடமல்ல கந்தப்பு. தேர்தல் முடிவை போட்டிருந்ததால் இங்கே இணைத்தேன்.

இலங்கை தேர்தல் நடைமுறை,  பாராளுமன்றத் தேர்தலில் தொகுதியும் அடுத்த நிலைகளில் பிரதித்துவத்தையும் பிரயோக்கிக்கப் பார்கிறது. உண்மையில் அது எப்போதும் கடையாக தேர்தல் சட்டங்களை மாற்றிய கட்சிக்கு சார்பான முறையாக மட்டும்தான் இருக்கிறது.

அந்த துணுக்கில் இருக்கும் தகவல் "முன்னை நாள் போராளிகளுடன் சமரசம் பேசும் படி சர்வதேசம் இலங்கையை கேட்கிறது" என்று இருக்கிறது. ஆனால் சமரசம் பேச மிஞ்சியிருப்பது கூட்டமைப்பு. கூட்டமைப்பை விரும்பாத பத்திரிகைகள் புலிகளின் புறொகிசியாக செய்திகள் போட்டிருந்தன. மற்றவைகள் சாதாரண அரசியல் கட்சியாகத்தான் கணக்கு போட்டிருந்தன. முன்னர் கூடமைப்பை புலிகள் என்று பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா தடுத்தது. ஆனால் இன்று அதனுடன் ஒத்து போகிறது.

இந்த துணுக்கை போட்டிருப்பது அமெரிக்காவின் ஆபிசல் செய்தித்தளம் VOA.GOV. அதாவது இந்த தள கருத்தின் படி , கூட்டமைப்பை புலிகளாகத்தான் கருத்திக்கொண்டு பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுகிறது அமெரிக்கா என்றுதான் எடுக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

உங்கள் இணைப்பினை நான் குறை சொல்லவில்லை. கட்டாயம் இணையுங்கள். நான் சொல்லவந்தது சிறிலங்கா தேர்தல் முறையினால் தோற்ற கட்சியில் இருந்தும் 7 பேர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இது உலகத்துக்கு தெரியுமா?

  • தொடங்கியவர்

சிறுவயதில் இருந்தே எனக்கு தேர்தல் என்றால் விருப்பம். எனக்கு நினைவு தெரிந்து 6 வயதில் எனதுவீட்டில் வானொலிப் பெட்டிக்கு முன்பாக எனது அப்பா, பெரியப்பா, அப்பாப்பா ஆகியோர் கடதாசியில் வாக்குகளின் விபரங்களை எழுதுவார்கள். தற்பொழுது இந்தியத் தேர்தல் ,அவுஸ்திரெலியாத்தேர்தல் எனத் தொடர்கிறது.

வீரகேசரியில் வரும் தேரததல் முடிவுகளை எழுதும் பக்கத்தை எடுத்து வைத்துக் கொண்டு இரவிரவாக இருந்து எழுதினது இப்பவும் ஞாபகம் இருக்குது. 

அடுத்த நாள் முழு முடிவும் பேப்பரிலை வரும். ஆனாலும் ராவு ராவா இருந்து எழுதிறதிலை ஒரு சந்தோசம்..

பழைய நினைவுகளை மீட்ட உதவியதற்கு நன்றி...

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி ஈட்டிய அந்த தமிழ்தேசிய நட்சத்திரங்களின் படங்களை இங்கே போட்டால் நாங்களும் அறிந்துகொள்வோமில்லையா? :(

மலேசியா தமிழ் செய்தித்தாள்களில் "வெற்றி செய்தி "

http://tamilepaper.blogspot.in/2013/09/23-09-2013.html

மலேசியா நண்பன்    :

1289888_10202144960575259_1468024286_n.j

2_ தினக்குரல் :

1373742_10202144960735263_1399799426_n.j

தமிழ் தேசியம் என்பது எந்த அடக்குமுறைக்கும் அடிபணியாது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.இந்தத் தேர்தல் தமிழ் மக்களுக்கு உருப்படயான தீர்வு எதையும் பெற்றுக்கொடுக்க உதவாது என்றாலும் தமிழர்களுடைய உரிமைக்குரல் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட வில்லை விதைக்கப்பட்டதென்பதையும் மகிந்த சிந்தனையையும் கோத்தபாய போர்முலாக்களையும் தாண்டி அது வீறுகொண்டு எழும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஆம்...நிச்சயமாக..! நாம் வீழ்ந்தது உண்மைதான், ஆனாலும் வீழ்ந்து கிடக்கமாட்டோம் என்று மக்கள் நிரூபித்துவிட்டார்கள்... இனி...?

மகிந்தர் இனி டக்கி மாமாக்கு நல்ல பேச்சு விழ போகுது உங்க நிண்டு என்னத்த............எண்டு

இனி அந்தத் தாடியை அகற்றிவிடுங்கள் செயலாளர் நாயகமே... உங்கள் தோல்விக்கு அதுவும் ஒரு காரணமோ? நியூ லுக்கில வாங்கோ அடுத்தமுறை. நெடுகவும் ஒரே முகத்தைப் பார்த்துப் பார்த்து எவ்வளவு நாளைக்குத்தான் கவர்ந்திளுக்க முடியும்... :icon_idea:  :)

தனது ஆயுதக் குழுவை   கலைத்து ஜனநாயக அரசியலில் டக்கி இறங்கனும் . இல்லை என்றால் அடிச்ச காசுகளோடை பரிவாரங்களையும்  கூட்டிக் கொண்டு  வெளிநாடுகளில் தஞ்சம் கேட்கலாம். அல்லது ஒரிசா பக்கம் போனால் பழைய கூட்டாளிகலுடன் இருக்கலாம் எது வசதியோ அதை செய்யட்டும்  :icon_idea:

யாரது ஒரிசாவில இருக்கிறது? வரதர் அவுஸ்திரேலியாவில இருகிறாராம்...

இன்று கருத்துக்களால் வேறுபட்டிருந்தாலும்  ஒவ்வொரு தமிழனதும் பதிவுகளை ,ஆதங்கத்தை இங்கே பார்க்கும்போது உண்மையில் ஓர் உண்மை மட்டும் தெரிகிறது .எமக்கு வெற்றி தேவை ..........நாம் தோற்றுபோனவர்கள் என்று எதிரி உளவியல் மூலமாக குழப்பினான் .நாமும் குழம்பியிருந்தோம் ....ஆனால் அது எவ்வளவு தவறு என்பதை இந்த பிரியோசனம் இல்லாத தேர்தல் காட்டி நிற்கிறது .......இந்த சிறு துளியை  பேரு வெள்ளமாக மாற்றுவது எம் ஒவ்வொருவர் கரங்களிலும் தங்கியுள்ளது .............

மெத்தச் சரியான கண்ணோட்டம் அண்ணா. நன்றிகள்.

பல விடயங்கள் அளவுக்கதிகமாக ஊதிப் பெருப்பிக்கப் படுகின்றன போல் தெரிகிறது. வடக்கு மாகாணத்தின் தேர்தல் முடிவுகள் இப்படித்தானிருக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. அதனை மாற்றுவதற்கு அரச தரப்புகள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றன. என்ற விடயம் ஒன்று மட்டுமே இதில் வெற்றி.

கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் இப்போது கவலைப்படுவார்கள்.............

கிழக்குவாழ் மக்கள் என்னவெனக் கவலை கொள்வார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

பல விடயங்கள் அளவுக்கதிகமாக ஊதிப் பெருப்பிக்கப் படுகின்றன போல் தெரிகிறது. வடக்கு மாகாணத்தின் தேர்தல் முடிவுகள் இப்படித்தானிருக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. அதனை மாற்றுவதற்கு அரச தரப்புகள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றன. என்ற விடயம் ஒன்று மட்டுமே இதில் வெற்றி.

இந்த மாகாணசபைத் தேர்தலினால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. என்றாலும் தமிழர் தரப்பு வெற்றிபெற்றது மகிழ்ச்சியே.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர் குப்பிளான் மண்ணைச்சேர்ந்தவர்கள்.

மகாண சபை தேர்தலும் தமிழர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடும்.

தமிழர்களின் இருப்பு அவர்களின் எதிர் காலம் என்பன எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தான் தீர்மானிக்கப்பட போகின்றது. இந்த தேர்தலில் மக்கள் யாரை தெரிவு செய்ய போகின்றார்கள் என்று சர்வதேசம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருக்கின்றது. இலங்கை அரசு சொல்வது போல் தமிழர்கள் தம் பக்கம் என்று நிரூபிக்கப்பட்டால் சர்வதேசம் தமிழ் மக்களை இலங்கை அரசிடம் விட்டு விட்டு விலகி விடும். அதன்பின் இலங்கை அரசு தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும். அதே நேரம் சர்வதேசத்தால் அங்கிகரிக்கப்பட்ட திரு விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தால் சர்வதேசம் என்றுமே எமக்கு பாதுகாப்பு அரணாக நிற்கும். இதை தீர்மானிப்பது தமிழ் மக்களாகிய நீங்கள் தான். உரிமை தான் முக்கியமா சலுகைகள் தான் முக்கியமா என்பதை நீங்கள் தான் சிந்திக்க வேண்டும். இதில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பும் மிக அவசியமானது. அவர்கள் தமது உறவுகளுக்கு சரியான தெளிவுபடுத்தல்களை செய்து தமிழர் சார்பு நிலையை எடுப்பதற்கு முன்வர வேண்டும். இந்த தேர்தலில் தமிழர் தரப்பு தோற்றால் மீண்டும் ஆயுத கலாச்சாரம் தோன்றி எமக்கு மேலும் இன்னல்களை கொடுக்கும். இதுவரையில் ஆயுத கலாச்சாரத்தால் நாம்பட்ட இன்னல்கள் போதும். மீண்டும் அந்த இருண்ட யுகம் வேண்டாம். மூன்று தசாப்த காலமாக நடந்த யுத்தத்தில் ஊரை இழந்தோம் உறவை இழந்தோம் இன்று எல்லா நாடுகளிலும் சிதறி வாழ்கின்றோம். ஊருக்கு வந்தால் ஊர் இருக்குதே தவிர உறவுகள் இல்லை. நாம் பிறந்து வளர்ந்த ஊர் எமக்கு அன்னிய தேசம் போல் உள்ளது. அன்னிய தேசம் ஊர் போல் உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுபவர்கள் மத்தியில் தனிப்பட்டரீதியில் விமர்சனங்கள் இருந்தாலும் அவர்களை ஆதரிப்பதே தமிழர்களின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும். நாம் ஒரு சக்தியாக நிற்கின்றோம் என்பதை வெளி உலகத்திற்கு காட்ட வேண்டும். இந்த வகையில் எமது கிராமத்தில் இருந்து இரண்டு பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுகின்றார்கள். ஒவ்வொரு இனப்பற்று, ஊர்பற்றுள்ள எமது ஊர் உறவுகள் திருமதி அனந்தி சசிதரன், திரு கந்தையா சர்வேஸ்வரன் அவர்களை ஆதரிக்குமாறு வேண்டுகின்றோம்.

ananthy.jpg

sarweswaran.jpg

http://www.kuppilanweb.com/extra/election.html

  • கருத்துக்கள உறவுகள்

 சிறிலங்கா தேர்தல் முறையினால் தோற்ற கட்சியில் இருந்தும் 7 பேர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இது உலகத்துக்கு தெரியுமா?

சற்று விளக்கமாக கூற முடியுமா கந்தப்புஅண்ணோய்

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.