Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் பெருவெற்றியின் அர்த்தம்தான் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் பெருவெற்றியின் அர்த்தம்தான் என்ன?

தாமரை காருண்யன்

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியிருக்கிறது. கிடைத்திருக்கும் வெற்றியினைக் கூட்டமைப்பு எதிர்பார்த்ததை விட அதிகமான பெருவெற்றி எனத்தான் கூறவேண்டும். இக் கட்டுரை எழுதப்படும்போது தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகியிருக்கவில்லை. எனினும் இதுவரை வெளிவந்திருக்கும் முடிவுகளை அவதானிக்கும்போது குறைந்தது மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான ஆசனங்களை கூட்டமைப்பு தம்வசப்படுத்தும் என்பதில் ஜயம் ஏதும் இல்லை.

கூட்டமைப்பின் இந்த வெற்றியினை நாம் எவ்வாறு அர்த்தப்படுத்துவது?

இந்தப் பெருவெற்றி மாகாணசபை முறைமைக்கோ, கூட்டமைப்பின் அரசியல் பாதைக்கோ அல்லது கூட்டமைப்பின் இயங்குதிறனுக்கோ கிடைத்த வெற்றியாக எவரும் எடுத்துக் கொள்ள முடியாது. அவ்வாறு எடுத்துக்கொள்ளின் அது பெரும் அரசியல் தவறாகவே இருக்க முடியும்.

மாகாணசபை அதிகாரங்கள் அற்றதொன்று என்பதும், இது ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சினைக்கான அரசியல்தீர்வுக்கு ஆரம்பப்புள்ளியாகக்கூட இருக்க முடியாது என்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமைக்கும், இத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கும், மக்களுக்கும் தெளிவாகத் தெரிந்ததொரு விடயம்தான். பலர் இதனை வெளிப்படையாகத் தேர்தல் காலத்தில் வெளிப்படுத்தியும் உள்ளனர். இதனால் இத் தேர்தல் வெற்றியினை மாகாணசபை முறைக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாகவோ அல்லது வடக்கு கிழக்கு பிரிந்த நிர்வாக அலகை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்றோ எவரும் அர்த்தம் காண முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைப்புரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒரு பலவீனமான நிறுவனமாவே உள்ளது. இதனால் இதன் அரசியல்பாதையும் தெளிவற்றதாகவே உள்ளது. பல கட்சிகளின் ஒரு தேர்தல்கூட்டா அல்லது ஓர் அரசியல் இயக்கமா என்பதில் ஒரு தெளிவான முடிவை இதுவரை எடுக்க முடியாத தடுமாற்றத்துடன்தான் கூட்டமைப்பு செயற்பட்டு வருகறது. கூட்டமைப்பின் அரசியல் செயற்திட்டம் (political working programme) என்ன என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. கூட்டமைப்பு எம்மை எங்கே அழைத்துச் செல்கிறது என்பதுகூட தெளிவாகத் தெரியாத நிலைதான் இருந்து வருகிறது. இதனால் இத்தகைய குழப்பங்கள் நிறைந்த கூட்டமைப்பின் அரசியல் பாதைக்கு தமது வாக்களிப்பின் மூலம் அங்கீகாரம் வழங்கும் அளவுக்கு நமது மக்கள் முட்டாள்கள் அல்ல. இதனால் மக்கள் அளித்த வாக்கை கூட்டமைப்பின் அரசியல் பாதைக்கு கிடைத்த அங்கீகாரமாகக் கொள்ள முடியாது.

கூட்டமைப்பு மிகுந்த செயற்திறன் கொண்ட அமைப்பு அல்ல என்பது ஒன்றும் இரகசியமான விடயம் அல்ல. இது கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கே நன்கு தெரிந்த விடயம்தான். செயற்திறன் என்று பார்த்தால் கூட்டமைப்பை விட டக்ளஸ் முன்னணியிலேயே நிற்கக் கூடியவர். இருந்தபோதும் சிங்கள அரசை நமது மக்கள் மத்தியில் 'விற்கும்' அரசியலில் ஈடுபட்டிருக்கும் அவரால் ஒருபோதும் நமது மக்களின் மனங்களை வெல்ல முடியாது என்பதனைத் தேர்தல் முடிவுகள் மிகத் தெளிவாகக் காட்டி நிற்கின்றன. இதனால் மக்களின் வாக்கு செயற்திறன் தொடர்பான மதிப்பீட்டில் இருந்து எழுந்ததும் அல்ல.

அப்படியானால் இத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் செய்திதான் என்ன? நமது மக்கள் எதற்காக வாக்களித்துள்ளனர்?

மக்களின் இந்த வாக்குகள் மிகத் தெளிவான, சிங்கள அரசுக்கு எதிரான வாக்குகள். சிங்கள இராணுவ ஆக்கரமிப்புக்கு எதிரான வாக்குகள். ஈழத் தமிழர் தேசத்தின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற பெருவிருப்பின்பாற்பட்டு கிடைத்த வாக்குகள். அனைத்துலக சமூகத்திடம் நமது குரலை ஓங்கி ஒலிக்க வைக்க வேண்டும் என்பதற்காக மக்கள் அளித்த வாக்குகள். சிங்கள அரசாங்கத்தின் கைகளில் மாகாணசபை நிர்வாகம் சென்றடையக்கூடாது என்பதற்கான வாக்குகள். சுயநிர்ணய உரிமைக்கான நமது அரசியல் போராட்டத்தை தொடர்வதற்கு இத் தேர்தலையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தும் எண்ணம் கொண்டு எழுந்த வாக்குகள்.

தமிழர் தேசம் தன்னவராய்க் கருதி வாக்களிப்பதற்கு கூட்டமைப்பைத் தவிர எவ்விதத் தெரிவும் மக்களுக்கு இருக்கவில்லை. இத்தகையதொரு பின்னணியிலேயே கூட்டமைப்பின் பலவீனங்கள் பற்றி நன்கு தெரிந்திருந்தும் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

இதனைத் தமிழத் தேசியக் கூட்டமைப்பு நேர்மையாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

இத் தேர்தல் முடிவுகள் கூட்டமைப்பின் பொறுப்புகளை மேலும் அதிகரித்திருக்கிறது என்றே கூற வேண்டும். மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக கூட்டமைப்பு நடந்து கொள்ள வேண்டும். சிங்கள அரசிடம் இருந்து நமது மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பும் கூட்டமைப்பின் கைகளில் உள்ளது. 'மக்கள் ஆணை கிடைத்தால் வடக்கில் இருந்து சிங்கள இராணுவத்தை வெளியேற்றுவோம்' எனக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் மக்கள் மத்தியல் சூளுரைத்திருந்தார். இப்போது மக்கள் உயரியதொரு ஆணையினை வழங்கியுள்ளனர். இராணுவத்தை எவ்வாறு வெளியேற்றுவது என்றதொரு தந்திரோபாயத்துடன் செயற்படவேண்டியதும் தற்போது கூட்டமைப்பின் முன்னால் உள்ள பொறுப்பாக இருக்கிறது.

வடக்கு மாகாணசபையினை முடக்குவுதற்கு சிறிலங்கா அரசும் சிங்கள பௌத்த இனவாதமும் சட்டரீதியாகவும் நிர்வாகரீதியாவும் பல்வேறு இடையூறுகளை வழங்கும். இவற்றைக் கடந்து மாகாணசபை எதனையும் நமக்குச் சாதித்துத் தரப்போதில்லை. ஆனால் இத் தேர்தல் மூலம் வெளிப்பட்டிருக்கும் மக்கள் ஆதரவினை ஓர் அரசியல் மூலதனமாக திரளடைய வைக்கக்கூடியதொரு வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கிறது. இதனைக் கூட்டமைப்பு நன்கு உள்வாங்கிக் கொண்டு பலமானதொரு மக்கள் அமைப்பினைத் தாயகத்தில் கட்டி எழுப்ப வேண்டும். இந்த மக்கள் அமைப்பின் பலத்தில் நின்றுதான் அனைத்துலக சமூகத்தைக் கையாள வேண்டும்.

மாகாணசபையால் எதையும் செய்ய முடியாமல் இருக்கிறது என 4 வருடங்களின் பின்னர் கைவிரிப்பதற்காக கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. மாகாண சபையினைக் கடந்து தமிழர் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள் என்பதற்காகவே வாக்களித்திருக்கிறார்கள். மாகாணசபையை எப்படிக் கடப்பது என்பது குறித்துச் சிந்திப்பதே கூட்டமைப்பின் முன்னால் தற்போது உள்ள முக்கிய பணி!

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=74cbea15-cefb-4a4b-8048-fef2bdf6c411

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அர்த்தமும் இல்லை.மக்களுக்கு கூட்டமைப்பை விட்டால் வேறு யாரும் இல்லை.கூட்டமைப்பு மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

அர்தமே இல்லாத கட்டுரை.

 

தேர்தலின் முடிவு தெரியவில்லையாம், ஆனால் கூட்டமைப்பு எதிர்பார்க்காத வெற்றியாம். அது எப்படி?

 

கூட்டமைப்பின் செயல் திட்டங்களை யாரும் அறியவில்லையாம். ஒரு தடவை தேர்தல் விஞ்ஞாபனத்தை படித்திருக்கலாமே. இலங்கையின் இந்த தேர்ததில் மிகவும் அடிபட்ட ஆவணம் அது.

 

தேவானந்த செயல் திறம் மிக்கவராம். பாவம். வாழ்நாள்பூராக கணவு கண்ட முதல் அமைச்சர் பதவிக்கு தேரதலில் நிற்க அனுமதியை கேட்டுப்பெற முடியவில்லை. அது மட்டுமல்ல. அடுத்த தேர்தலில் தவராசா இவரைவிட மேலே போய்விடுவார்.  டக்கி பதவி இல்லாமால் பிள்ளையான் மாதிரி வெறுமனே திரிய தவராசா மாகாண எதிர்க்கட்சி தலைவராக இருந்து தனக்கு ஒரு அரசியல் நிலம் வாங்கிடுவார்.

 

செயல் திட்டம் தெரியாதவர் கண்டுபிடித்தது: "'மக்கள் ஆணை கிடைத்தால் வடக்கில் இருந்து சிங்கள இராணுவத்தை வெளியேற்றுவோம்' எனக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் மக்கள் மத்தியல் சூளுரைத்திருந்தார். இப்போது மக்கள் உயரியதொரு ஆணையினை வழங்கியுள்ளனர். "

 

தேர்தல் விஞ்ஞாபனத்தை படித்திருந்தார் என்றால் கூட்டமைப்பு இதற்கு அடுத்த படியில் இருக்கிறது என்பது தெரிய வந்திருக்கும். அதாவது மாகாண சபைக்கு மேலாக அரசிடம் கேட்பது. அரசு தராவிட்டால் சர்வதேசத்திடம் போவது: :"மாகாணசபையை எப்படிக் கடப்பது என்பது குறித்துச் சிந்திப்பதே கூட்டமைப்பின் முன்னால் தற்போது உள்ள முக்கிய பணி!"

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகள் தமிழீழம் எங்கள் நாடு, அந்த நாட்டைச் சிங்கள இனவாத தேசத்திலிருந்து பிரித்து எம்மை நாமே ஆள விரும்புகின்றோம்.

சர்வதேசமே அதற்கான சர்வ சன வாக்கெடுப்பு ஒன்றை நடத்து என ஓங்கி ஒலிப்பதாகவும்
அப்படி ஒரு வாக்கெடுப்பு வந்தால் மக்களின்  நிலை எப்படி இருக்கும் என்பதனையும்

எடுத்துக்காட்டுவதாகவும் இருக்கின்றது.
 

சம்பந்தர் சுமந்திரன் ஆனந்த சங்கரி போன்றவர்கள்
மக்கள் மனதில் ஜடங்களாகி விட்டார்கள்.

அவர்கள் கண்முன்னே இன்று இருப்பது இழந்த உரிமையை

நாட்டையும் மீட்கும் வேட்கை ஒன்றுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூத்தமைப்பு இத்தேர்தல் வெற்றியினை, தங்களது இந்தியாவுக்குக் காவடிதூக்கும் திருகுதாளத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் என நினைத்தால் அதைவிட முட்டாள்த்தானம் எதுவுமில்லை. ஒழுங்காக களவேலைகளைப்பாருங்கோ அன்றேல் இன்னும் சில வருடங்களில் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவீர்கள். தவிர வினேஸ்வரன் தேர்தல் முடிவுகள் வந்தவுடனேயே இராணுவத்தை அகற்றும்வண்ணம் நாங்கள் அரச்சங்கத்துக்குக் கோரிக்கை விடுப்பம் என்ன செய்யினம் எண்டு அவ்வளதான் எங்களால் செய்யமுடியும் எண்டு சொல்லியிருக்கிறார். இப்பவே அப்புக்காத்துத் தள்ளம்பாட வெளிக்கிட்டுட்டார். கூடிய விரைவில் அனந்தி தலைமையில் ஒரு சிலர் வெளியேறலாம். அன்றேல் அதிருப்திக்குழுவாக இயங்கலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்

யார் யார் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றார்கள்.
யார் யார் நாளை மகிந்தவுடன் இணைவார்கள் .
என்பதற்கு அப்பால் சிங்கள அரசுடன் பேரம்பேசுவதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனர்.

அரசியல் தீர்வொன்றிற்கான ஆணையை கூட்டமைப்பிடம் ஒப்படைத்துள்ளார்கள்
தவறும் பட்சத்தில் அடுத்த தேர்தலில் இவர்களைத் தூக்கியெறியவும்  மக்கள் தயாராக இருக்கின்றார்கள்.
இன்றைய நிலையில் தெளிவாக மக்கள் இருப்பது போன்று அரசியல்வாதிகளும் இருப்பார்களா

என்பது மட்டும் கேள்விக்குறிதான்  

  • கருத்துக்கள உறவுகள்

கூடிய விரைவில் அனந்தி தலைமையில் ஒரு சிலர் வெளியேறலாம். அன்றேல் அதிருப்திக்குழுவாக இயங்கலாம்.  

 

பிறகு எங்கட முன்னாள் எம்பீக்கள் சிலபேர் காணாமல் போனதுபோல காணாமல் போயிடுவினம் :D

ஓட்டு மொத்தத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் எமக்கு என்ன தேவையோ அந்த தேவைக்காக எம் நாம் என்ன என்ன எல்லாம் செய்தோம்  .......அந்த தேவையை பூரித்தி செய்யும் முகமாக இன்றும் எப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் ................இது பெரிய ஒரு சாதனை .................எனனில் 30 வருசத்துடன் ஒரு சந்ததி எதை எதிர்பார்த்து எதை கேட்டு நின்றதோ ..........30 வருடங்கள் முடிந்த பின்னும் அந்த இனத்தை சார்ந்த அடுத்த அடுத்த சந்ததி அதே தேவையை கேட்டு நிற்பது என்பது தற்போதைய உலகில் எங்கும் காணமுடியாத ஒரு நிலை . இன்று ஒரு சிறு துளியான தேர்தல் வெற்றியினால் முழுத்தமிழினமுமே மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்குது ................எம்மிடம் ஒன்றுமே இல்லை என உளவியல் ரீதியாக குழப்பப்பட்டு குழம்பிப்போன எங்களுக்கு எமக்குள் இருந்த ஒற்றுமை ,நெருப்பு மீண்டும் ஒரு தடவை பற்றி எரிந்து எம்மை துயிலெழுப்பியுள்ளது ....ஆகவே இவர்ரிற்கெல்லாம் வித்திட்ட எம் தேசியத்தலைவர் மாண்புமிகு பிரபாகரனின் நெறிப்படுத்தலை மேலும் மேலும் நாம் உள்வாங்கி எம் தேவைகளை நிறைவு செய்வோம் எமக்காக இல்லாவிட்டாலும் எம் எதிர்கால சந்ததியினர்க்கு .................அவர்களுக்கு இருக்க வேண்டிய தேவை மலர்ந்துள்ள தமிழீழத்தை முதல்தர உன்னத சொர்க்க பூமியாக்குவதாக மட்டும் இருக்கவேண்டும் .....இதுவே எமக்காக தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு நாம் செய்யும் அளப்பரிய கடமை .

மாகாண சபையை வைத்து என்ன செய்யலாம் என்பது அதை வைத்து செய்து முடித்த பின்னர்தான் விவாத்திக்க தக்க தலைப்பு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.