Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மும்பையில பணத்தை தொலைச்சா பத்திரமா கிடைச்சிரும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மும்பை: உலகில் நேர்மையான நகரங்களில் பட்டியலில் மும்பை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. மும்பையில் பணப்பையோ, விலை உயர்ந்த பொருளையோ தொலைத்து விட்டால் நமது கைக்கு கண்டிப்பாக கிடைத்து விடுமாம்.
 
உலகின் நேர்மையான நகரங்கள் என்ற குறியீட்டைப் பெற்றிருந்த சூரிச், லண்டன் போன்ற நகரங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மும்பை இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாகக் கருதப்படுகின்றது.
 
ஊழல் குறித்த கணக்கீடுகள் வெளியிடப்படும்போது இந்தியா பெரும்பாலும் முன்னிலை இடங்களில் இருக்கும் இக்கட்டான நிலைமை ஏற்படும். ஆனால், சமீபத்தில் நகரங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் மும்பை வித்தியாசமான முடிவைக் காண்பித்தது.
 
26-1380168580-wallet09-600-jpg.jpg
16 நகரங்கள்
உலக நாடுகளின் முக்கிய நகரங்கள் 16 தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு தெருவில் கைவிடப்படும் பணப்பைகளில் எத்தனை திருப்பி ஒப்படைக்கப்படுகின்றன என்ற சோதனை சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது.

 

26-1380168597-wallet-money-600-jpg.jpg

பணத்தோடு பர்ஸ்
ரூ.3,000, செல்போன் நம்பர், வர்த்தக அட்டைகள், குடும்ப போட்டோ போன்றவை அடங்கிய சிறிய பணப்பைகள் வணிக வளாகங்கள், நடைபாதைகள், பூங்காக்கள் போன்ற இடங்களில் வைக்கப்பட்டன. மற்ற நாடுகளில் இந்தப் பணத்திற்கு ஈடான தொகை அமெரிக்க டாலராகவோ, அந்தந்த நாட்டு பணமாகவோ வைக்கப்பட்டிருந்தது.
 
192 பைகள்
ஒவ்வொரு நகரத்திலும் 12 பைகள் வீதம் மொத்தம் 192 பைகள் இதுபோல் கீழே விடப்பட்டன. கைவிடப்பட்ட பைகளில் 47 சதவிகிதம் பைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.
 
26-1380168661-finland3-600.jpg
பின்லாந்து ஹெல்சிங்கி
பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்கியில் 12ல் 11 திரும்ப ஒப்படைக்கப்பட்டு அந்த நகரம் நேர்மையான மக்களுக்கான முதலிடத்தைப் பெற்றது.

 

26-1380168719-mumbai876-600-jpg.jpg

மும்பை
அடுத்து மும்பையில் 9 பைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
26-1380168755-newyork-600.jpg
நியூயார்க்
புடாபெஸ்ட் மற்றும் நியுயார்க் நகரங்களில் 8 பைகள் திரும்பக் கிடைத்தன.

26-1380168824-london12-600.jpg

லண்டன்
இங்கிலாந்து தலைநகர் லண்டன் மற்றும் ஆம்ஸ்டர்டாம் நகர்களில் 7 பைகள் ஒப்படைக்கப்பட்டன.
 
பெர்லின்
பெர்லினில் ஆறும், வார்சாவில் ஐந்தும், சூரிச்சில் நான்கு பைகளும் ஒப்படைக்கப்பட்டன.

26-1380169025-rio-de-janeiro-statue-600-

ரியோ டி ஜெனிரோ
புகாரெஸ்ட் மற்றும் ரியோ டி ஜெனிரோவில் மூன்றும் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. கனடாவின் மாட்ரிட் நகரில் இரண்டு பைகள்தான் திரும்பக் கிடைத்தன.
 
போர்ச்சுகள்
அதுபோல் போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரில் ஒரு பை மட்டுமே திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அதுவும் நெதர்லாந்திலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த தம்பதியர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

http://tamil.oneindia.in/news/india/mumbai-world-s-second-most-honest-city-184160.html

  • கருத்துக்கள உறவுகள்

என்ன

பொண்ணைத்துலைத்தால்தான்

கந்தலாகக்கிடைக்கும்............... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில திருப்பி தந்தாங்களா, :(  இருக்காதே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில திருப்பி தந்தாங்களா, :(  இருக்காதே

சில ஆண்டுகளுக்கு முன் எனது நண்பர் ஒருவர் தனது வொலட்டை  தொலைத்துவிட்டார் அதனுள் £35 ம் மற்றும் சில வங்கி அட்டை ஓட்டுனர் அனுமதி பத்திரம் ஆகியன இருந்தது இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய ஒரு தலையாக காதலிக்கும் பெண்ணின் புகைப்படமும் இருந்தது தொலைத்தபின்னர் அவர் சொன்னார் வொலட் தொலைந்தது கவலை அதைவிடக்கவலை அவரின் காதலியின் படம்போனது என்று ....  பின்னர் அவரின் வொலட்டை றோட்டில் எடுத்த ஒருவர் அதனை அவருக்கு அனுப்பி இருந்தார் அதனுள் அத்தனை பொருட்களும் இருந்தது    

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி உலகத்திலேயே பேரிணவாதம் கொண்ட முதலாவது நாட்டில் சிறீலங்காவில் இந்த சோதினை செய்யவில்லையா? செய்திருந்தாலும் கிடைச்சிருக்காது :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன

பொண்ணைத்துலைத்தால்தான்

கந்தலாகக்கிடைக்கும்............... :(  :(  :(

 

:)

மும்பையில்... இந்தப் பையும் கிடைச்சிருக்காது.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் போட்ட பையாக இருக்குமோ... என நினைத்து, குண்டு, கிண்டு வெடிச்சுத் தொலைச்சிடும் என்ற பயத்திலை சனம் கிட்டவும் போயிருக்காது. :D

  • கருத்துக்கள உறவுகள்
எல்லாத்திற்கும் கனடா முன்னுக்கு நிற்கும் இதிலை காணோம் :lol:
 
  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையானவர்கள் அதிகம் உள்ள நகரமாக ஃபின்லாந்தில் உள்ள ஹெல்சிங்கி முதலாவதாக வந்துள்ளது. எனக்குப் அதிகம் பிடித்த நாடும் நகரமும் (உறைபனிக் குளிராக இருந்தாலும்!). நடுநிசிக்குப் பின்னர் தனியாக அலைந்தாலும் ஒரு போதும் பாதுகாப்பற்று உணரவில்லை.

 

அண்மையில்  ஃபின்லாந்தில் வசிக்கும் ஒரு நண்பர் முகநூலில் பகிர்ந்த படம். தவறவிடப்பட்ட 20 யூரோ எங்கு கண்டு எடுக்கப்பட்டது என்ற விபரத்தோடு விளம்பரத்துண்டுகள் உள்ள இடத்தில் "பின்" குத்தப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர்களைத் தவிர பிறர் எடுக்கமாட்டார்கள் என்பது உண்மைதான்!

 

-PAXP-deijE.gif

9727495092_8476e31a61_z.jpg

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையானவர்கள் அதிகம் உள்ள நகரமாக ஃபின்லாந்தில் உள்ள ஹெல்சிங்கி முதலாவதாக வந்துள்ளது. எனக்குப் அதிகம் பிடித்த நாடும் நகரமும் (உறைபனிக் குளிராக இருந்தாலும்!). நடுநிசிக்குப் பின்னர் தனியாக அலைந்தாலும் ஒரு போதும் பாதுகாப்பற்று உணரவில்லை.

 

அண்மையில்  ஃபின்லாந்தில் வசிக்கும் ஒரு நண்பர் முகநூலில் பகிர்ந்த படம். தவறவிடப்பட்ட 20 யூரோ எங்கு கண்டு எடுக்கப்பட்டது என்ற விபரத்தோடு விளம்பரத்துண்டுகள் உள்ள இடத்தில் "பின்" குத்தப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர்களைத் தவிர பிறர் எடுக்கமாட்டார்கள் என்பது உண்மைதான்!

 

-PAXP-deijE.gif

9727495092_8476e31a61_z.jpg

 

ஃபின்லாந்து மக்களிடம், மிதமிஞ்சிய நேர்மை ஏற்பட...

சமூககப் பின்னணி,

அரசியல் தலைமை,

மதத் தலைவர்களது அறிவுரை,

ஆசிரியர்களின் அறிவுரை,

பொருளாதார மேம்பாடு... போன்ற இவற்றில், எது காரணமாக இருக்கும் என்று நம்புகின்றீர்கள் கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்திற்கும் கனடா முன்னுக்கு நிற்கும் இதிலை காணோம் :lol:

நாங்கள் 12 க்கு 12 எடுத்திடுவம் என்கிற பயமே காரணம்.. :D ஆனால் கடனட்டையில் பில் வரப் பண்ணுவோமில்ல.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஃபின்லாந்து மக்களிடம், மிதமிஞ்சிய நேர்மை ஏற்பட...

சமூககப் பின்னணி,

அரசியல் தலைமை,

மதத் தலைவர்களது அறிவுரை,

ஆசிரியர்களின் அறிவுரை,

பொருளாதார மேம்பாடு... போன்ற இவற்றில், எது காரணமாக இருக்கும் என்று நம்புகின்றீர்கள் கிருபன்.

நேர்மை அவர்களின் இரத்தில் ஊறியது. அத்தோடு கல்வியிலும், பொருளாதாரத்திலும் சிறந்து விளங்குவதாலும் நேர்மையாக இருப்பது சாத்தியமாக இருக்கலாம்.

என்ன, அதிகம் பேசமாட்டார்கள். தாமுண்டு தம் வேலையுண்டு என்று இருப்பார்கள். அதிகம் பேசாததால் சுற்றி வளைத்து பேசத் தெரியாது. எதையும் நேரடியாகச் சொல்வார்கள். பல வருடங்கள் ஃபின்லாந்துக்காரருடன் பணியாற்றிய அனுபவும், எனது மேலாளார்களாக ஃபின்லாந்துக்காரர்களே தொடர்ந்து இருந்ததாலும் பல நல்ல விடயங்களைக் கற்கக் கூடியதாக இருந்தது!

Lasse Luomakoski, a 27-year-old businessman, found our wallet downtown. "Finns are naturally honest," he said. "We are a small, quiet, closely-knit community. We have little corruption, and we don't even run red lights." In the working-class area of Kallio, a couple in their sixties said, "Of course we returned the wallet. Honesty is an inner conviction."

Read more: http://www.rd.com/slideshows/most-honest-cities-lost-wallet-test/#ixzz2g5KRlgXk

ஆனால் கன்னிப் பெண்கள் தனியே வீதியில் போனால் கற்ப்பு இல்லது போகும் நாடுகள் வரிசையில்  முதன்மை இடம் வகிக்கும் இந்தியா   :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.