Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவிபிள்ளையின் இலங்கை குறித்த அறிக்கையால் மனித உரிமை பேரவையில் பிளவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
UN-session-seithy-150.jpg

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கை தொடர்பில் மனித உரிமை பேரவை இன்று இரண்டாக பிளவுப்பட்டிருந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் பிள்ளையின் அறிக்கைக்கு ஆதரவு வழங்கியதுடன் இலங்கை அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தன. இந்த நிலையில் பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, வெனிசுவேலா ஆகிய நாடுகள் இலங்கையை கடுமையாக ஆதரித்து கருத்துக்களை முன்வைத்தன. அதேவேளை இலங்கை அரசாங்கம், மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்துடன் மனித உரிமைகள் தொடர்பில் தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற ஊக்குவிப்பதாக இந்தியா தெரிவித்தது. புனரமைப்பு, கண்ணிவெடி அகற்றல், மீள்குடியேற்றம் உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்தின் சாதனைகள் தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் போதுமான அங்கீகாரத்தை வழங்கவில்லை என இந்திய பிரதிநிதி குறிப்பிட்டார்.

இலங்கையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்திய இலங்கை அரசு சர்வதேசத்திற்கு தனது அர்ப்பணிப்பை வெளிகாட்டியுள்ளது எனவும் அவர் கூறினார். வடக்கு மாகாண மக்களின் அவசர தேவைகளை உணர்ந்து இலங்கை அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பரஸ்பர புரிந்துணர்வுடன் ஆக்கபூர்வமாக கூட்டாக பணியாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதே வேளை இங்கு கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி, இலங்கையின் மூத்த பிரமுகர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் குறைமதிப்புக்கு உட்படுத்த முயற்சித்து வருவதாக கவலை வெளியிட்டார். ஆணையாளரின் கடந்த மாத இலங்கையில் மேற்கொண்ட விஜயம் தொடர்பிலான அறிக்கை குறித்து கலக்கமடைந்துள்ள இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகள் மற்றும் ஏனையோர் இழிவுப்படுத்தும் அல்லது திசைத்திருப்பும் முயற்சியாக தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் தொழில்நுட்ப உதவிகளை இலங்கை பெற்று கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அமெரிக்க பிரதிநிதி, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனிடையே வடக்கு மாகாண சபை தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டமையை வரவேற்ற அவுஸ்திரேலிய பிரதிநிதி, இலங்கையை தனிமைப்படுத்தாது மனித உரிமை கவலைகளை சீர்செய்ய அந்த நாட்டை ஊக்கப்படுத்த வேண்டியதே சிறந்த வழியாகும் என தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=93815&category=TamilNews&language=tamil

 இலங்கை அரசாங்கத்தின் சாதனைகள் தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் போதுமான அங்கீகாரத்தை வழங்கவில்லை என இந்திய பிரதிநிதி குறிப்பிட்டார்.

என்னப்பா இது...??   எப்பிடி இருந்த இந்தியா இப்பிடி ஆயிட்டான்... ?? 

அரசாங்க சாதனைகளை கண்டுகளிக்க தான் வரவில்லை மனித உரிமை சம்பந்தமாகவே தான் வந்ததாக அறிக்கையிலேயே  நவ்வி அம்மை சொல்லி இருக்கிறாரே...??  இந்தியா என்ன இப்பிடி உளறுகிறார்கள்... ?? 

எய்தது இந்தியா

வெறும் அம்பு தான் சிறீலங்கா

அம்பை இப்படி   தாக்கினால்

எய்தவனுக்கு குலப்பன்  வருவது நியாயம் தானே?? :(  :(  :(

இன்னும் நாம் இந்தியாவை நம்ப வேண்டும் என்று சொல்பவர்களின்  பார்வைக்கு இது.

  • கருத்துக்கள உறவுகள்

அணு குண்டு போட்டும் ஜப்பான் திருந்தல்ல. அப்பட்டமாக மனித உரிமைகளை மீறி நின்று இனப்படுகொலை செய்யும் சிறீலங்காவிற்கு ஜப்பான் நீண்ட காலமாக முண்டு கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஜப்பானின் ஏற்பாட்டில் அகாசியை வன்னிக்கு தூதனுப்பியதும் அன்றி இணைத்தலைமை நாடுகள் என்ற அமைப்பையும் உருவாக்கினார்கள்.

முள்ளிவாய்க்காலின் பின் இவை எங்கே போனது என்று யாருக்கும் தெரியாது. ஜப்பான் இவற்றை எல்லாம் எப்படிக் கைவிட்டு விட்டது. இது குறித்த எந்தக் கண்டனத்தையும் தமிழர் தரப்பும் ஜப்பான் மீது வைக்கவில்லை. அமெரிக்கா.. இந்தியா மீது வைக்கப்படுகிற அளவிற்கு ஜப்பான் மீது தமிழர் தரப்பு எதிர்ப்பை பதிவு செய்யவில்லை. அமெரிக்கா.. இந்தியா செய்யக் கூடிய சூழ்ச்சிகள் குறித்த விழிப்புணர் ஜப்பான் மீது எமக்கில்லை.

ஆனால்.. சீனா போன்றே ஜப்பானும்.. தமிழர்களுக்கு எதிரான சிங்களத்தின் இராணுவ மேலாதிக்கத்தை விரும்புகின்ற ஒரு கொடிய தேசம்... என்பதை மீண்டும்.. அது பறைசாற்றியுள்ளது..! இதனை தமிழ் மக்கள் பகிரங்கமான கண்டனத்தோடு பதிவுசெய்ய வேண்டும். :icon_idea:

Edited by nedukkalapoovan

அதனால்தான் நெடுக்ஸ் அண்ணா ஜப்பானில் அடிக்கடி சூனாமி, நிலநடுக்கம் என்று இயற்க்கை தண்டிக்குது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.