Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவநீதம்பிள்ளையின் அறிக்கைக்கு அமெரிக்கா, இந்தியா, நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Navaneetham-pillai-150.gif

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் நேற்று முன்தினம் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கைக்கு உறுப்பு நாடுகள் ஆதரவாகவும் எதிராகவும் நேற்றைய தினம் பேரவை அமர்வில் கருத்துக்களை முன்வைத்துள்ளன. இதன்போது மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் இரண்டு தரப்புகளாக பிரிந்து இலங்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

  

அமெரிக்கா, நோர்வே, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என்பன இலங்கை குறித்த நவநீதம் பிள்ளையின் அறிக்கையை வரவேற்றுள்ள நிலையில் நவநீதம் பிள்ளையின் அறிக்கைக்கு ஆதரவாகவும் கருத்துக்களை முன்வைத்துள்ளன.

 

எனினும் பாகிஸ்தான், பிலிப்பின், ஜப்பான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தை வரவேற்றுள்ள இந்த நாடுகள் யுத்தத்தின் பின்னரான இலங்கையின் முன்னேற்ற நிலைமை குறித்து கவனம் செலுத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

 

நவநீதம்பிள்ளை தனது இலங்கை குறித்த அறிக்கையில் இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சுயாதீன நம்பகத்தன்மையான உள்ளக செயற்பாட்டை முன்னெடுக்காவிடின் சர்வதேச சமூகம் சுயாதீன மற்றும் நம்பகமான விசாரணை பொறிமுறையை முன்னெடுக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

 

எனினும் இதற்கு பதிலளித்திருந்த இலங்கை தூதுக்குழுவின் தலைவர் ரவிநாத ஆரியசிங்க சர்வதேச சமூகம் சுயாதீன மற்றும் நம்பகமான விசாரணை பொறிமுறையை முன்னெடுக்கும் என்று கூறுவதற்கான உரிமை நவநீதம்பிள்ளைக்கு இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

 

இந்நிலையிலேயே நேற்றைய தினம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இடம்பெற்ற விவாதத்தின்போது இலங்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் உறுப்பு நாடுகளினால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இடத்தில் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் இரண்டு குழுக்களாக பிரிந்து நின்றே கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

 

 

http://seithy.com/breifNews.php?newsID=93806&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சரியோ

பிழையோ

 

இரு பகுதியாகத்தம்மை   இனம்  காட்டுவது வரவேற்கத்தக்கது

ஆனால் இதற்குள்  ஒரு குள்ளநரி

எம் பக்கம் போல் நடித்து  நிற்பது

எம்மை படுகுழிக்குள் தள்ளத்தான்.

அதை மட்டும் நாம் புரிந்து எச்சரிக்கையாக இருக்கணும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரியோ

பிழையோ

 

இரு பகுதியாகத்தம்மை   இனம்  காட்டுவது வரவேற்கத்தக்கது

ஆனால் இதற்குள்  ஒரு குள்ளநரி

எம் பக்கம் போல் நடித்து  நிற்பது

எம்மை படுகுழிக்குள் தள்ளத்தான்.

அதை மட்டும் நாம் புரிந்து எச்சரிக்கையாக இருக்கணும்

அது எப்போதும் நல்லது செய்கின்றதுபோல நடித்து தரணம் வரும்போது கழுத்தறுக்கும் இதுதான் கடந்த காலங்களில் கிடைத்த அனுபவம் எதற்கும் கவனமாக இருப்பம்  

  • கருத்துக்கள உறவுகள்

பொந்தியாவை நம்ப வேண்டாம். தன் கையே தனக்குதவி என்பது போல் கவனமாக செயல்படுதலே நலம்.

  • கருத்துக்கள உறவுகள்

பொந்தியாவை நம்ப வேண்டாம். தன் கையே தனக்குதவி என்பது போல் கவனமாக செயல்படுதலே நலம்.

 

இந்த  சனியனை 

நாங்கள் கூப்பிடுவதுமில்லை

சேர்ப்பதுமில்லை

அரவணைப்பதுமில்லை..

 

சனியன் விடுகுதில்லை எங்களை..

புடுங்கி  எறிஞ்சாலும் தொடருது.......

  • கருத்துக்கள உறவுகள்

603501_406403316094340_185426931_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த  சனியனை 

நாங்கள் கூப்பிடுவதுமில்லை

சேர்ப்பதுமில்லை

அரவணைப்பதுமில்லை..

 

சனியன் விடுகுதில்லை எங்களை..

புடுங்கி  எறிஞ்சாலும் தொடருது.......

கிந்தியாவுக்கு சனியன் சரியான பெயர்தான் பெயர் வைத்த விசுகுக்கு நன்றி .....  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.