Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பப்ளிக் பத்மினியின் கடிதம் - கனடாக் கனகத்துக்கு கந்தர்மடக் கனகம் எழுதின கடிதம்.

Featured Replies

கனடாக் கனகத்துக்கு கந்தர்மடக் கனகம் எழுதின கடிதம்.

 

பட்சமுள்ள கனகத்திற்கு! பாசத்துடன் கனகமக்கா எழுதிக் கொள்வது. நான் நலம் அதுபோல் நீயும் குடும்பமும் நல்லாயிருக்க நல்லூர்க் கந்தன் துணையிருப்பார்.

 

 

உன்ரை கடிதம் கிடைச்சது. என்னடா இவள் மறந்து போனாளோ எண்டு நினைச்சுக் கொண்டிருந்தனான். அட அப்படியே சீமைக்குப் போனதும் மறக்கிற மாதிரியே நாங்கள் பழகினனாங்கள். என்ரை கலியாண வீட்டுக்கு ஒரு கிழமைக்கு முதலே நீ சுன்னாகத்திலை இருந்து வந்து நிண்டு ஒவ்வொரு பலகாரமாச் சுட்டு வன்னமா அடிக்கி வைச்சது இண்டைக்கு மாதிரி கண்ணுக்குள்ளை நிக்குது. என்ன செய்யீறது ஒண்டுக்குள்ளை ஒண்டாப் பழகின எங்களைக் காலம் இப்படித் திக்குக்கு ஒராளா பிரிச்சுப் போட்டிட்டது, என்ன செய்யிறது எல்லாம் அவன் விட்ட வழி எண்டு பாரத்தைப் போட்டிட்டு அலுவலைப் பாக்க வேண்டியது தான்.

 

 

நல்லூர்த்திருவிழாவும் நடந்து முடிஞ்சிட்டுது. என்ன இப்ப எல்லாம் பக்திக்குப் பதிலாப் பகட்டுத் தான் நிறைஞ்சு போய்க் கிடக்குது. எல்லாம் காசு பண்ணிற வேலை. பொம்பிளைகள் சாமியைப் பாக்கப் போகினமோ இல்லையோ தங்களிட்டை இருக்கிற நகை நட்டைடயெல்லாம் மற்றவை பாத்திட வேணும் எண்டு நினைச்சுக் கொண்டு போற மாதிரி சாமிக்குச் சாத்திற மாதிரி சாத்திக் கொண்டு போகினம். இதுக்குள்ளை நாங்கள் என்ன குறைவோ எண்டு போட்டு ஆம்பிளைகளும் தங்கடை வண்டி மட்டும் நீட்டா பதக்கஞ்சங்கிலி ஒண்டை மாட்டிக் கொண்டு வந்து நிண்டு சோக் காட்டுகினம். இது தான் தருணம் எண்டு போட்டு கொழும்பிலை இருந்து சங்கிலிக் கள்ளர் எல்லாம் ஒரு மாதம் இங்கை வந்து தங்கி நிண்டு கொழுத்த வேட்டையோடை திரும்பிப் போயிட்டாங்கள். ஆனால் நகை நட்டைப் பறி குடுத்த ஆக்களும் இதைப் பற்றி வெளியிலை மூச்சு விட இல்லை. அவைக்கு மரியாதைக் குறைவெல்லே. மற்றது கஸ்ரப் பட்டு உழைச்ச பொருள் காணாமல் போனால் தானே கவலை வரும். இது வெளிநாட்டுக்குக் கோலடிக்க அங்கை இருந்து பிள்ளைகளும் சகோதரங்களும் அனுப்பின காசு தானே! அவைக்கென்ன அடுத்த நாளே இன்னொரு செற்றை வாங்கிப் போட்டுக் கொண்டு காவடியாடத் தொடங்கீட்டினம்.

 

 

இங்கை கோயில் திருவிழா எண்டு ஒரு பக்கம் சனம் அள்ளுப்பட எலக்சன் திருவிழா எண்டும் கொஞ்சப் பேர் ஆர்ப்பாட்டப் படுகினம்.

அடியடா வெட்டடா எண்டு ஒரு கூட்டம் சண்டித்தனத்தோடை வெளிக்கிட்டுச் சனத்தைப் பயப்படுத்த அஞ்சாம் கட்டப் போர் அது இதெண்டு இன்னொரு கூட்டம் சனத்தை உசுப்பேத்திக் கொண்டிருக்குது. உவையின்ரை பேச்சைக் கேக்க எனக்கு 77ம் ஆண்டு எலக்சன் கூட்டங்கள் தான் ஞாபகம் வந்தது. உனக்கு ஞாபகம் இருக்கே நான் நீ பக்கத்து வீட்டு வீசாலம், உவள் மனோன்மணி எண்டு எல்லாரும் கூட்டமா கார் பிடிச்சு முத்தவெளிக்குக் கூட்டம் பாக்கப் போனது.

 

 

அதிலை பட்டு வேட்டி சட்டையோடை அமிர்தலிங்கம் வந்து நிண்டு பேசின பேச்சைக் கேட்டுப் போட்டு  அவ்வளவு நாளும் கட்டினா எஞ்சியார் மாதிரி ஒராளைத் தான் கட்டுவன் எண்டு சொல்லிக் கொண்டு திரிஞ்ச உவள் மனோன்மணி கட்டினால் அமிர்தலிங்கத்தை மாதிரி ஒராளைத் தான் கட்டுவன் எண்டு அடம்பிடிச்சுக் கொண்டு திரீஞ்சவள்.

 

 

அது மட்டுமே அவற்றை பெண்சாதி மங்கையர்க்கரசி தன்ரை பங்குக்கு அகப்பை பிடிக்கிற கையாலை வாளேந்துவம் எண்டு பொம்பிளைகளைப் பாத்துச் சத்தமாச் சொன்னதிலை இருந்து நாங்கள் சமைக்கேக்குள்ளை ஏப்பை பிடிக்கிற ஸ்ரைலே மாறிப் போனதெல்லோ.

 

 

 

ம்ம்ம் உப்பிடிப் பேசிப் பேசி சனத்தின்ரை வோட்டையெல்லாம் வாங்கிப் போட்டு அவை கொழும்புக்குப் போயப் பண்ணின கூத்தை நிண்டைக்கு நினைச்சாலும் பத்திக் கொண்டு வருகுது.

 

 

நாங்களும் என்ன செய்யிறது இருக்கிற பேக்குள்ளை திறம் பேய் எது எண்டு பாத்து வோட்டைப் போட்டுப் போட்டு ஆ எண்டு பாத்துக் கொண்டு இருக்க வேண்டியது தான்.

 

எண்டாலும் நானும் கட்டாயம் வோட்டுப் போடப் போவன். இல்லாட்டி முந்தி முந்தி நடந்தது மாதீரி கண்டது நிண்டது எல்லாம் எங்கடை பிரதிநிதிகள் எண்டு சொல்லிக் கொண்டு அட்டகாசம் பண்ணத் தொடங்கிடுங்கள்.

 

 

கனக்க எழுத வேணும் எண்டு நினைச்சனான். இப்ப இதிலை கொஞ்ச நெரம் குந்தியிருந்து எழுதவே முதுகுக்குள்ளை விண்விண்ணெண்டு வலிக்குது, சரி ஆறுதலா திரும்ப ஒரு கடிதம் எழுதிறன். மறந்து போடாமல் பதில் போடு என்ன . உங்கடை கடிதங்களைக் கண்டால் கடவுளைக் கண்ட மாதிரிக் கிடக்குது.

 

 

சரி என்ன..

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பழைய புதினங்கள் எல்லாம் வெளில எட்டிப் பார்க்குது போலக் கிடக்கு!  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வாழ்த்துகள் ,தொடருங்கள் 
ஏன் இரண்டு பேருக்கும் கனகம் என்று பெயரிட்டீர்கள் 
 

எணோய் கனகமக்கோய்! அமுதலிங்கத்தாரையும் மங்கையக்காவையும்பற்றி கனக்க எழுதுவியள் எண்டு நினைச்சன்.. அவுக்கெண்டு அமுக்கிப் போட்டியள்.. உது நல்லாயில்லை கண்டியளே... அடுத்தமுறையாலும் அந்தளத்தையும் அவுட்டுவிடுங்கோ... அப்பத்தான் இஞ்சை கொஞ்சப் பேருக்காலும் அந்தச் சீமான் அமுதலிங்கத்தாற்றை அருமைபெருமையள் விளங்கும்.. சரி என்ன..!! :icon_mrgreen:

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு கெதியாக் கனகம்மாவின்ர கடிதம் காட்டுவியல் என்று நினைக்கவே இல்லை. தொடருங்கள். 

  • தொடங்கியவர்

பழைய புதினங்கள் எல்லாம் வெளில எட்டிப் பார்க்குது போலக் கிடக்கு!  :D

 

ஓம் சுவி

 

அந்தக் காலத்து ஞாபகங்களை மறக்க முடியுமே

 

வாழ்த்துகள் ,தொடருங்கள் 
ஏன் இரண்டு பேருக்கும் கனகம் என்று பெயரிட்டீர்கள் 

 

 

வணக்கம் லீயோ. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

 

ஏன் ஒரே பேரோ? வாசிக்கிற ஆக்களைக் குழப்பத்தான் :D  :D

எணோய் கனகமக்கோய்! அமுதலிங்கத்தாரையும் மங்கையக்காவையும்பற்றி கனக்க எழுதுவியள் எண்டு நினைச்சன்.. அவுக்கெண்டு அமுக்கிப் போட்டியள்.. உது நல்லாயில்லை கண்டியளே... அடுத்தமுறையாலும் அந்தளத்தையும் அவுட்டுவிடுங்கோ... அப்பத்தான் இஞ்சை கொஞ்சப் பேருக்காலும் அந்தச் சீமான் அமுதலிங்கத்தாற்றை அருமைபெருமையள் விளங்கும்.. சரி என்ன..!! :icon_mrgreen:

 

 

வணக்கம்  சோழியண்ணை!

 

பொறுங்கோவன். இப்ப தானே பழைய ஆக்கள் கதைக்கத் தொடங்கியீருக்கினம். இனி வாற கடிதங்களிலை அதுகளைப் பற்றி இன்னும் கதைப்பினம்.

இவ்வளவு கெதியாக் கனகம்மாவின்ர கடிதம் காட்டுவியல் என்று நினைக்கவே இல்லை. தொடருங்கள். 

 

எல்லாம் உங்களாலை தான் உவான்ரை வாய்க்கு கட்டாயம் எழுதிக் காட்ட வேணும் எண்டு தான் மளமளவெண்டு எழுதீப் போட்டனான்.  :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கடிதாசி இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக இருந்திருக்கலாம் என்பது என் கருத்து

  • தொடங்கியவர்

கடிதாசி இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக இருந்திருக்கலாம் என்பது என் கருத்து

 

வருகைக்ககும் கருத்திற்கும் நன்றி ரதி!

 

உண்மை தான் எனக்கு இப்போது வாசிக்கும் போதும் அதே உணர்வு தோன்றியது. அவரசத்தில் எழுதியதாலிருக்கலாம். அடுத்த முறை இந்த விடயத்தில் கவனமெடுக்கிறேன்.

 

மீளவும்  உங்கள் கருத்திற்கு நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சுவி

 

அந்தக் காலத்து ஞாபகங்களை மறக்க முடியுமே

 

வணக்கம் லீயோ. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

 

ஏன் ஒரே பேரோ? வாசிக்கிற ஆக்களைக் குழப்பத்தான் :D  :D

 

 

வணக்கம்  சோழியண்ணை!

 

பொறுங்கோவன். இப்ப தானே பழைய ஆக்கள் கதைக்கத் தொடங்கியீருக்கினம். இனி வாற கடிதங்களிலை அதுகளைப் பற்றி இன்னும் கதைப்பினம்.

 

எல்லாம் உங்களாலை தான் உவான்ரை வாய்க்கு கட்டாயம் எழுதிக் காட்ட வேணும் எண்டு தான் மளமளவெண்டு எழுதீப் போட்டனான்.  :lol:  :lol:

 

பதில் கடிதமும் வந்தால் எல்லோ உது பொருந்தும் :icon_idea:

 

  • தொடங்கியவர்

பதில் கடிதமும் வந்தால் எல்லோ உது பொருந்தும் :icon_idea:

 

என்ன அக்கா உசுப்பேத்திறியளோ!

 

உங்கடை கதையைக் கேட்டு அவசரமா எழுதிப் போட்டு விட உந்த ரதி வந்து பேசு பேசு எண்டு பேசிப் போட்டுப் போட்டுது :(  :(

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்
சாவகச்சேரி பொது சந்தையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் (1977ல்) அமிர்தலிங்கத்துக்கு இரத்தபோட்டு வைக்க ஒரு இளைஞன் மேடையில் பாய்ந்தேறி கையை சடக்கெட்டு வெட்டி இரத்தப்பொட்டு வைத்த கையோடு மயங்கி விழுந்து விட்டாராம். உணர்ச்சியில் கை நரம்பை வெட்டி விட்டாராம். 
 
கனகத்தின் கடிதத்துக்கு நன்றி.தொடருங்கள், மணி.
  • தொடங்கியவர்

77ம் ஆண்டுத் தேர்தலின் போது தமிழ் மக்கள் அமிர்தலிங்கத்தின் மீதும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மீதும் அளவகடந்த நம்பிக்கை வைத்திருந்தமை தொடர்பில் இது போன் றபல கதைகளை நானுமு; எனது அப்பா வாயிலாக அறிந்திருக்கிறேன். 

 

ஆனால் அற்த நம்பிக்கைகளை எல்லாம் அவர்கள் தவிடுபொடியாக்கியது வரலாறு.

 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நுணாவிலான்..

நாங்களும் என்ன செய்யிறது இருக்கிற பேக்குள்ளை திறம் பேய் எது எண்டு பாத்து வோட்டைப் போட்டுப் போட்டு ஆ எண்டு பாத்துக் கொண்டு இருக்க வேண்டியது தான்.

 

:D :D  இந்த வரி போதும் .... கனக்க தேர்தல்களினைப்பற்றிச் சொல்லி நிற்கின்றது.  :)

 

கடிதம் நல்லா இருக்கு....!

இனி வாற கடிதங்களில்.... இன்னும் கொஞ்சம் காரசாரமாக எதிர்பார்க்கிறம்! :)

  • தொடங்கியவர்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிதை.

 

வரும் கடிதங்களில் நீங்கள் கூறிய விடயங்களைக் கவனத்தில எடுக்கிறேன். நன்றி

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.