Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெர்லின் நோக்கி ஓர் பயணம். மயூரபதியின் தரிசனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது, உங்கள் பகிர்வு!

 

இரண்டு கேள்விகள்!

 

உயரக்கட்டிப்பாடு காரணமாகக் கொடிமரத்தின் தண்டுகளுக்குள்ள இடைவெளியைக் குறைத்து விட்டார்கள் போல உள்ளது! பார்த்துப் பழகப் பழகச் சரிவரும் என நினைக்கிறேன்!

 

ஜெர்மனியில் கருங்கல்லுக் கிடைப்பது கடினமா? சிலைகளைச் சீமந்தில் செய்து, வர்ணம் அடித்தது போல உள்ளது!

 

இருந்தாலும், ஊர்க்கோவில் கும்பாபிசேகத்துக்குப்  போய் வந்த திருப்தி ஏற்பட்டது! :D

  • கருத்துக்கள உறவுகள்

-----

ஜெர்மனியில் கருங்கல்லுக் கிடைப்பது கடினமா? சிலைகளைச் சீமந்தில் செய்து, வர்ணம் அடித்தது போல உள்ளது!

 

இருந்தாலும், ஊர்க்கோவில் கும்பாபிசேகத்துக்குப்  போய் வந்த திருப்தி ஏற்பட்டது! :D

 

1238226_652194924799566_1342977632_n.jpg

 

புங்கையூரான்....

ஜேர்ம‌னியில் பெரும்பாலான‌ இட‌ங்க‌ள் ம‌லையும்.. ம‌லை சார்ந்த‌ இட‌மும் (குறிஞ்சி), அங்கு க‌ருங்க‌ல்லுக்கு த‌ட்டுப்பாடு வ‌ர‌வே... வ‌ராது.

இங்குள்ள‌ சிலைக‌ள், எண்ணைக் காப்பு சாத்த‌ முத‌ல் எடுத்த‌ ப‌டியால்... கொங்கிரீட் க‌ல் போல் உள்ள‌து.

அடுத்த‌ ப‌திவில்.... சுவி, எண்ணைக்காப்பு சாத்திய‌ பின் எடுத்த‌ ப‌ட‌ங்க‌ளை இணைக்கும் போது.... விக்கிர‌க‌ங்க‌ள் புதிய‌ ச‌க்தி பெற்று, த‌க‌த‌க‌வென‌.... மின்னுவ‌தை பார்க்க‌த்தானே... போகின்றீர்க‌ள். :rolleyes:  :)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்திருந்த உறவுகள் எல்லோருக்கும் பாசத்துடன் சுவி....!

 

புங்கை , சிறி சொல்வது மெத்தச் சரி. எல்லாமே சுத்தமான கருங்கல்லு விக்கிரகங்கள். அநேகமாய் எல்லாம் இந்தியாவிலிருந்து தருவிக்கப் பட்டவை. மகாபலிபுரத்தில் செய்யப்பட்டவை. விசெசமாகச் செய்யப்பட்ட  தொட்டிகளில் தண்ணீர்  நிறைத்து  அதற்குள் சிற்பங்களை வைத்திருந்தார்கள். அவ்வளவு நாட்களும் பக்தர்கள் அவ விக்கிரகங்களுக்கு மலர்கள் தூவி தண்ணீரால் அபிசேகம் செய்ய வசதியாய் நிர்வாகத்தினர்  ஏற்பாடு செய்திருந்தனர். இப்பொழுது அவைகள் வீபூதி சாத்திய படியால் நீறு பூத்து உள்ளது.

 

1236966_652194888132903_1650284697_n.jpg

 

1238118_652194934799565_163056097_n.jpg

 

 

13012_652195091466216_162858591_n.jpg

 

 

543949_652195278132864_846878896_n.jpg

 

 

1239763_652195234799535_1255499137_n.jpg

 

 

1234916_652195388132853_1637043270_n.jpg

 

 

1273968_652196114799447_2076903300_o.jpg

 

இந்தப் படத்தில்  கோவில் முன் பிரகாரத்தில் இருக்கும் தற்காலிகப் பந்தலில் நிறையக் கும்பங்கள் வைத்து ஒவ்வொரு கும்பத்துக்கும் முன் ஒவ்வொரு ஐயர் இருந்து பிரதான குருக்கள்மார் மந்திரம் ஓத இவர்கள் ஒரே நேரத்தில் மலர்களால் அர்ச்சித்து ஒரே நேரத்தில் தூப தீபங்கள் காட்டி பூசைகள் செய்து வெளியில் விரவிக் கிடக்கும் மின்காந்த அலைகளை கும்பத்துக்கும் பின் கும்பத்திலிருந்து தரப்பைத் திரி (படத்தைப் பாருங்கள்.) மூலமாக கற்பக்கிரகத்த்தில் இருக்கும் விக்கிரகத்துக்கு செலுத்துகின்றனர். ஒவ்வொரு மந்திரங்கள்,செயல்கள் எல்லாவற்றிற்கும் அவர்கள் தமிழில் விளக்கங்கள் கொடுத்தது நன்றாக இருந்தது. இளைஞர்கள்  ஜெர்மானியருக்கு அவர்கள் மொழியில் சொல்லிப் புரிய வைத்துக் கொண்டிருந்தனர்.

 

ஆராதனை தொடரும்:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

1238226_652194924799566_1342977632_n.jpg

 

புங்கையூரான்....

ஜேர்ம‌னியில் பெரும்பாலான‌ இட‌ங்க‌ள் ம‌லையும்.. ம‌லை சார்ந்த‌ இட‌மும் (குறிஞ்சி), அங்கு க‌ருங்க‌ல்லுக்கு த‌ட்டுப்பாடு வ‌ர‌வே... வ‌ராது.

இங்குள்ள‌ சிலைக‌ள், எண்ணைக் காப்பு சாத்த‌ முத‌ல் எடுத்த‌ ப‌டியால்... கொங்கிரீட் க‌ல் போல் உள்ள‌து.

அடுத்த‌ ப‌திவில்.... சுவி, எண்ணைக்காப்பு சாத்திய‌ பின் எடுத்த‌ ப‌ட‌ங்க‌ளை இணைக்கும் போது.... விக்கிர‌க‌ங்க‌ள் புதிய‌ ச‌க்தி பெற்று, த‌க‌த‌க‌வென‌.... மின்னுவ‌தை பார்க்க‌த்தானே... போகின்றீர்க‌ள். :rolleyes:  :)

 

நீங்களும் போய் உள்ளீர்கள் இல்லையா :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களும் போய் உள்ளீர்கள் இல்லையா :)

 

இவளொருத்தி எப்ப பாத்தாலும்????????  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலும் சில படங்கள்:  நிறையக் கும்பங்கள் வைத்துப் பூசை நடக்கின்றது.

 

1240416_652195574799501_1370061573_n.jpg

 

பிரதான குருக்கள்மார்  ராஜ கோபுரத்துக்கு , கலசங்களுக்கு புண்ணிய தீர்த்தங்களில் இருந்து தருவிக்கப் பட்ட  புனித தீர்த்தங்களினால் அபிஷேகித்து கும்பாபிஷேகம் செய்கின்றனர்.

 

1275061_652196368132755_1122321567_o.jpg

 

1277192_652196234799435_817417419_o.jpg

 

பாரிய கிரெனின்  உதவியுடன் கும்பாபிஷேகம் நடக்கின்றது.

 

1270920_652196198132772_1779014505_o.jpg

 

ஸ்ரீ முருகனின்  கருவறை விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடக்கின்றது.

 

 

1277901_652196444799414_884540298_o.jpg

 

 

1269749_652196661466059_39211329_o.jpg

 

நவக்கிரக  சன்னதி.

 

1278164_652196704799388_1952470813_o.jpg

 

ஸ்ரீ  பைரவர் மூர்த்தி.

 

1239765_652197014799357_1399514583_n.jpg

 

ஸ்ரீ  நாகபூசணி அம்மன்.

 

1186199_652196931466032_1015527021_n.jpg

 

மலர் அலங்காரம் , சந்தனக் காப்பு அலங்காரத்துடன் வள்ளி தெய்வானை சமேத  சுப்பிரமணியர்.

 

1276495_652197254799333_231758373_o.jpg

 

 

946387_652197371465988_1741959149_n.jpg

 

ஆராதனை தொடரும்:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பெர்லின் முருகனுக்கு அரோகரா....சுவே ஆராதனை தொடர சிட்னி முருகனின் அடியாளின் பிராத்தனைகள் ... :D

இதென்னப்பா முருகனுக்கு மக்டோனல்ட்ஸ் கண்டைனர் இல் சாப்பாடு வைச்சிருக்கு

 

கண்ணப்ப நாயனாரின் திருவிளையாடல்....

இதென்னப்பா முருகனுக்கு மக்டோனல்ட்ஸ் கண்டைனர் இல் சாப்பாடு வைச்சிருக்கு

 

கண்ணப்ப நாயனாரின் திருவிளையாடல்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கும்பாபிஷேகத்தன்று  அவ்வூர் நகர பிதாவும், வேறுபல அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்.அவர்கள் எல்லோருக்கும் தலைப் பாகை சூட்டி  சிறப்பான  மரியாதையும், கௌரவமும் அளிக்கப் பட்டது. மேலும் ஏராளமான ஜெர்மானியர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் சிறப்பாகத் தரிசனம் செய்யும் பொருட்டு எமது மக்கள் எல்லோரும் உள் கோவிலில் இருந்து  வெளியில் வந்து நின்று கொண்டு அவர்கள் நெரிசல் இல்லாமல் தரிசனம் செய்ய உதவினார்கள்.ஒரு ஜெர்மன் பெண்மணி கால் ஊனத்திற்கு  விஷேசமாகச் செய்த சப்பாத்துடன் வந்திருந்தா.அவ  உட்கோவிளுக்குள் செல்ல முடிய வில்லையே என மனவருத்தப் பட்டா. ஆயினும் நிர்வாகத்தினர் அவவுக்கு ஒரு சக்கர நாற்காலியில் உள்ளே சென்று தரிசித்து வர ஆவன செய்தனர். இளஞ்ர்களும்,ஜெர்மானியர்களுக்கு பலவற்றையும் விளங்கப் படுத்திக் கொண்டிருந்தனர். எல்லாமே மனதுக்கு நிறைவாய் இருந்தது.

 

கோவிலுக்கு வெளியே அன்னதானமும், தண்ணீர்ப் பந்தலும் காண ஜோராய் நடந்து கொண்டிருந்தது.

 

1233165_652197238132668_2042965400_o.jpg

 

 

1276495_652197254799333_231758373_o.jpg

 

1238889_652197748132617_1650124400_n.jpg

 

 

1262863_652197514799307_940635812_o.jpg

 

 

1234134_652197581465967_2102569759_n.jpg

 

மலர் அலங்காரங்களுடன் சில விக்கிரகங்கள்.

 

ஆராதனை தொடரும்:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இவளொருத்தி எப்ப பாத்தாலும்????????  :D

அண்ணற்ற வளர்ப்பு சரியில்லை  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்தில் கோவிலின்  திரு வாயிற் கதவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டும் . சுவாமியின் கருவறைக்கு வாயிலுக்கு ஒரு சோடிக் கதவு. சிறப்பான வேலைப் பாடுகளும், புராணக் கதைகள் கூறும் சிற்பங்களும், நடை சாத்தும் போதும், திறக்கும் போதும் ஒலிக்கும் மணிகளுமாய் அழகிய கதவுகள்.

அடுத்ததாய் உள்வீதிக்கு பெரியதாய் ஒரு சோடிக் கதவுகள்.அவற்றிலும் நிறையச் சிற்பங்களும், சதுரங்களுக்கு ஒரு மணியாக நிறைய மணிகள்.

மற்றும் வெளி வாசல் கதவு.மிகப் பெரிய சோடிக் கதவுகள்.அவற்றிலும் நிறைய வேலைப் பாடுகள்.

 

1381853_671727296179662_1067802111_n.jpg

 

கருவறையின் வாசல் கதவுகள்.

 

1006369_671727329512992_858144175_n.jpg

 

உள்பிரகாரக் கதவுகள் .

 

1377351_671727282846330_2128820848_n.jpg

 

வெளி வாயிற் கதவுகள்.

 

ஆராதனை தொடரும்:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களே கோவிலுக்கு போன மாதிரி இருக்கு. கந்த சஷடி முன்பு நல்ல பதிவு, தொடர்ந்து வணஙுவோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மயூராபதி முருகனின் கோவில் கும்பாபிஷேகம் நிறைவுற்று பின் சுவாமி வள்ளி தெய்வானை சமேதராய் உள்வீதி சுற்றி வருகிறார்.

 

1268381_652197904799268_999006325_o.jpg

 

சுவாமி உள்வீதி சுற்றி வருதல்.

 

1234378_652197978132594_1471570113_n.jpg

 

வெளி வீதி சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தல்.

 

1236922_652198028132589_1888299673_n.jpg

 

வெளி வீதி சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தல். எல்லோருக்கும் தீபாவளி நல வாழ்த்துக்கள். :D  :D

 

ஆராதனை தொடரும்:

 

 

 

 

 

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்

மயூராபதி முருகனின் கோவில் கும்பாபிஷேகம் நிறைவுற்று பின் சுவாமி வள்ளி தெய்வானை சமேதராய் உள்வீதி சுற்றி வருகிறார்.

 

1268381_652197904799268_999006325_o.jpg

 

சுவாமி உள்வீதி சுற்றி வருதல்.

 

1234378_652197978132594_1471570113_n.jpg

 

வெளி வீதி சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தல்.

 

1236922_652198028132589_1888299673_n.jpg

 

வெளி வீதி சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தல். எல்லோருக்கும் தீபாவளி நல வாழ்த்துக்கள். :D  :D

 

ஆராதனை தொடரும்:

 

முதலாவது படத்தில் வலது பக்கம் சாமி தூக்குவது சுவியண்ணா,இடது பக்கம் தூக்குவது தமிழ்சிறியோ :lol:
 
தொடருங்கள் சுவியண்ணா
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்தில் கோவிலின்  திரு வாயிற் கதவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டும் . சுவாமியின் கருவறைக்கு வாயிலுக்கு ஒரு சோடிக் கதவு. சிறப்பான வேலைப் பாடுகளும், புராணக் கதைகள் கூறும் சிற்பங்களும், நடை சாத்தும் போதும், திறக்கும் போதும் ஒலிக்கும் மணிகளுமாய் அழகிய கதவுகள்.

அடுத்ததாய் உள்வீதிக்கு பெரியதாய் ஒரு சோடிக் கதவுகள்.அவற்றிலும் நிறையச் சிற்பங்களும், சதுரங்களுக்கு ஒரு மணியாக நிறைய மணிகள்.

மற்றும் வெளி வாசல் கதவு.மிகப் பெரிய சோடிக் கதவுகள்.அவற்றிலும் நிறைய வேலைப் பாடுகள்.

 

1381853_671727296179662_1067802111_n.jpg

 

கருவறையின் வாசல் கதவுகள்.

 

1006369_671727329512992_858144175_n.jpg

 

உள்பிரகாரக் கதவுகள் .

 

1377351_671727282846330_2128820848_n.jpg

 

வெளி வாயிற் கதவுகள்.

 

ஆராதனை தொடரும்:

 

கோவிலை அமைப்பதில், அதிக சிரத்தை எடுத்து... அழகாகக் கட்டியுள்ளார்கள்.

அதிலும்... அந்தப் பெரிய கதவுகள், ஊர்க்கோவிலை ஞாபகப் படுத்தியது.

கதவு எல்லாம்... தமிழகத்திலிருந்து தருவிக்கப் பட்டவையா... சுவி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம்  சிறி ,  மகாபலிபுரத்தில்  இருக்கும் ஆசாரிமார்  அங்கேயே செய்தது.

 

அதாகப் பட்டது இப்படியாகத்தானே  பெர்லின் மயூராபதி முருகனின் புத்தாலயக் கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்று நிறைவடைந்தது.

 

1266505_652198188132573_561257356_o.jpg

 

841148_652195741466151_1593218270_o.jpg

 

1268373_652195828132809_1377783662_o.jpg

 

1273638_652195854799473_912305949_o.jpg

 

812662_652195931466132_2145963431_o.jpg

 

 

1264369_652196031466122_429704078_o.jpg

 

 

1265824_652196008132791_1534254417_o.jpg

 

1231293_652198384799220_805496632_n.jpg

 

1265850_652198428132549_1813951059_o.jpg

 

1235050_652198574799201_1599183955_n.jpg

 

1268669_652198571465868_659811826_o.jpg

 

1266732_652198608132531_378277181_o.jpg

 

1234125_652198654799193_1895487056_n.jpg

 

 

பின்பு சில பல கடைகளுக்குப்  போய்வந்தோம் , அப்படியே சில வீதிக் காட்சிகளையும் கிளிக் பண்ணிக் கொண்டேன்.

 

இதுவரை இந்தக் கோவில் கும்பாபிஷேகத்தை  பார்த்துப் பாராட்டி ஊக்குவித்த அனைத்து உறவுகளுக்கும் மயூரபதி  முருகனின்  திருவருள்  கிட்டுவதாக. 

வணக்கம்!

 

 

 

  • 2 years later...

நல்லதொரு பதிவு , இன்று தான் வாசிக்கக் கிடைத்தது., நன்றி சுவி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.