Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 2

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்.... வல்வை, வயசுக்கு வந்த படியால்....
இனிப் பள்ளிக்கூடம் போக வேண்டாம் என்று,

வீட்டில் மறித்து விட்டார்களாம்... என்று சொல்லிக் கவலைப் பட்டிச்சு.

  • Replies 106
  • Views 36k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் செய்யுள் விகாரங்களுக்கு ஒவ்வொரு செய்யுளை உதாரணம் காட்ட முடிந்தால் இன்னும் இலகுவாக விளங்கக் கூடியதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி தட்டியைக் காட்டினதுதான். அதன்பிறகு பாஞ்சை வகுப்பில காணேல்லை. தட்டையோட யார் வீட்டுக்கு முன்னால்  நிக்கிதோ??
சிறி ஒருக்கா அவரைக் கண்டால் ஒழுங்கா பள்ளிக்கூடத்துக்கு வரச்சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்.... வல்வை, வயசுக்கு வந்த படியால்....

இனிப் பள்ளிக்கூடம் போக வேண்டாம் என்று,

வீட்டில் மறித்து விட்டார்களாம்... என்று சொல்லிக் கவலைப் பட்டிச்சு.

 

யாயினி தட்டியைக் காட்டினதுதான். அதன்பிறகு பாஞ்சை வகுப்பில காணேல்லை. தட்டையோட யார் வீட்டுக்கு முன்னால்  நிக்கிதோ??

சிறி ஒருக்கா அவரைக் கண்டால் ஒழுங்கா பள்ளிக்கூடத்துக்கு வரச்சொல்லுங்கோ.

 

உயர்திணைக்கும், அஃறிணைக்கும் சுமேரியருக்கு வித்தியாசம் தெரியவில்லைப் போலிருக்கிறது வாத்தியார். <_<   ஒருக்கா வடிவாச் சொல்லிக்குடுங்கோ. :blink: 

வல்வை, வயசுக்கு வந்ததென்று தமிழ் சிறி எனக்குச் சொன்னவர், :(  அந்தக் கவலையிலை மூன்று நாள், நான் வகுப்புக்கு வரவில்லை என்று விடுப்பெழுதி குமாரசாமிப் பெரியப்பாட்டைக் கொடுத்துவிட்டனான் வாத்தியார், :unsure: உங்களுக்குக் கிடைக்கவில்லையே?. குமாரசாமியரும் வல்வை வயசுக்கு வந்ததை அறிந்த கவலையிலை, :(  இராப்பகல் தெரியாமல் புளிச்ச கள்ளை அடிச்சுவிட்டு மப்பிலை கிடக்கிறார் என்று உங்கை சுமேரியர்தான் சொல்லித்திரியிறாவாம். :huh:  :o  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பஞ்சாச்சரத்துக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாச்சரத்துக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது... :lol:

 

எல்லாமும் நீங்கள் என்னை வாத்தியாரிம் போட்டுக்கொடுத்து, :o  உங்களுடன் பின் வாங்கில் சேர்த்துக்கொண்டதால் வந்த வினை. :D  :D 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூவகை மொழிகள்

 

 

1. ஒரு மொழி

 

பிரிக்கப்படாத பகாப்பதமாகவோ அல்லது பிரிக்கக் கூடிய பகுபதமாகவோ இருந்து

ஒரு கருத்தைத் தரும் அல்லது பெரு பொருளைத்தரும்

சொற்களை ஒரு மொழியென அழைப்பர்.
 

உதாரணம்
வா,போ,மான் தேன் என்பன இவை பிரிக்க முடியாத பகாப்பதங்கள்
வந்தான் , சென்றான் ,நடந்தான், படித்தான் என்பன் இவை பிரிக்கக் கூடிய பகுபதங்கள்.

 

 

 

2.தொடர் மொழி

 

ஒரு சொல்லாக வராமல்
பகுபதச் சொற்களும் பகாப்பதச் சொற்களும் மாறி மாறி

முன் பின்னாக பொருள் தரும் வண்ணம் அமைந்து இரண்டு சொற்களாக 

வரும் போது அவற்றைத் தொடர்மொழி எனக் கூறுவர்.
 

உதாரணம்
மகிழ்ச்சி கொள், ஏழனம் செய்யாதே, வீதியைக் கடந்தான்
என்பனவாகும்

 

3. பொது மொழி

 

ஒரு சொல்லாக வரும் போது ஒரு பொருளைத் தந்தாலும்
அச்சொல்லைப் பிரிக்கும் போது வேறு பொருளைத் தரும்

 

உதாரணம்

தாமரை என்பது தாமைரையையும்
தா + மரை தாவுகின்ற மானையும் குறிக்கும்

 

அத்திக்காய் ஒருவகை காயையும்
அ + திக்காய் என வரும்போது அந்தத் திசையால் எனவும் வரும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சொற்களில் விகுதி என்றால் என்ன என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம்.
இன்று பெயர் விகுதிகள் என்பன எவை எனவும் அவற்றின் குணங்களையும் பார்ப்போம்

 

பெயர் விகுதிகள்

 

அனேகமான பெயர்கள் விகுதிகளுடன் தான் முடிவடையும்.
பெயர்கள் முடியும் எழுத்தை வைத்து அந்தப்பெயர் என்ன பாலைக் குறிக்கும் என அறிந்து கொள்ளலாம்.
இந்த விகுதிகளைக் கொண்டு பெயர்களின் திணை , பால் , எண் ஆகியவற்றையும் கூறிவிடலாம்

 

ஆண்பாற் பெயர் விகுதிகள்
 

அன், ஆன்,மன்,மான்,ன் என்பனவாகும்.
உதாரணம்
மலையன் , வானத்தான், அதியமான்

 

 

பெண்பாற் பெயர் விகுதிகள்

 

அள் ஆள் ள் இ ஐ என்பன

உதாரணம்
இவள் குழலாள் பிறள் பொன்னி கோதை

 

பலர்பாற் பெயர் விகுதிகள்

 

அர் ஆர் மார் ர் என்பனவாகும்

உதாரணம்
வீரர் தேவிமார் பிறர்

 

 

ஒன்றன்பாற் பெயர் விகுதிகள்

 

து என்ற விகுதி  மட்டும்

அது யாது அஃது
 
 

பலவின்பாற் பெயர் விகுதிகள்
வை கள் அ என்பனவாகும்

மான்கள் அவை சிறியன கரியன

 

கள் என்ற விகுதியால் சிலர் மயக்கமுற்று :D  தேவையற்ற இடத்தில்

பெயர்களோடு  கள் என்ற விகுதியைச் சேர்த்து விடுகின்றார்கள்

 

அனேகமானவர்கள் என எழுதிய இந்தச் சொல் கள் விகுதியுடன் முடிவடைகின்றது.

இங்கே கள் விகுதி தேவையற்றது.

 

அனேகமானவர் என்பதே சரியானதும் இலக்கணப்பிழையற்றதும் ஆகும்

 

ஆனாலும் பலரும் கள் விகுதியை உயர்திணைப் பன்மையிலும்

அஃறிணைப் பன்மையிலும் சேர்க்கின்றோம்
 

இதனை விகுதிமேல் விகுதி  என்று ஏற்றுக்கொள்கின்றனர்.
 

நாம் உயர்திணைப் பன்மை
 

நாங்கள் விகுதி மேல் விகுதி வந்த உயர்திணைப்பன்மை

 

அவர் / அவர்கள்
அவை / அவைகள்

 

இதைப்போலவே
அவன் வந்தான் என்பதை அவர் வந்தார் எனக் கூறுகின்றோம்
 

இது மரியாதைப் பன்மை எனப்படுகின்றது.
 

தகப்பன் / தகப்பனார்
கணவன் / கணவர்

 

இவையும் மரியாதைப் பன்மையாகும்

 

இலக்கணத்தில் வழக்கு என ஒன்று இருக்கின்றது
அந்த வழக்கின்படி இலக்கணபிழைகளையும் ஏற்றுக் கொள்கின்றனர். 

எங்களுக்குச் சொல்லாமல் எப்பிடி உவ்வளவையும் வாத்தியார் படிப்பீச்சனீங்கள்???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்குச் சொல்லாமல் எப்பிடி உவ்வளவையும் வாத்தியார் படிப்பீச்சனீங்கள்???

பாடசாலையில் எப்போது பாடம் தொடங்கும் என எதிர்பார்க்காமல்

வேறு என்ன வேலை :D

 

வாத்தியார் சுகயீன விடுமுறையில் சில நாட்கள் பாடசாலைக்கு வராவிட்டால் பாடம் இனிமேல் நடக்காது என நினைக்கக்கூடாது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் இனிமேல் பள்ளிக்கு வரமாட்டார். நானும் இனிமேல் போகமாட்டன். சுமே நீரும் போக வேண்டாம் எண்டு பாஞ்ச் சொன்னதாலதான் நான் ரண்டுநாளா பள்ளிக்கூடத்துக்கு வரேல்லை வாத்தியார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் இனிமேல் பள்ளிக்கு வரமாட்டார். நானும் இனிமேல் போகமாட்டன். சுமே நீரும் போக வேண்டாம் எண்டு பாஞ்ச் சொன்னதாலதான் நான் ரண்டுநாளா பள்ளிக்கூடத்துக்கு வரேல்லை வாத்தியார்.

அங்கு தான் பாஞ்ச் நிற்கின்றார்

உங்களைத் திசை திருப்பிவிட்டு அவர் நன்றாகப் படித்து முன்னேறிவிடுவார் .

 

எச்சரிக்கை  :D  :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் இனிமேல் பள்ளிக்கு வரமாட்டார். நானும் இனிமேல் போகமாட்டன். சுமே நீரும் போக வேண்டாம் எண்டு பாஞ்ச் சொன்னதாலதான் நான் ரண்டுநாளா பள்ளிக்கூடத்துக்கு வரேல்லை வாத்தியார்.

 

'அடிக்'.... எண்டு அலை கடிச்சதோடை பாஞ்ச பாஞ் என்னும் வீட்டுக்கே வரல்லை. பாவம்! எங்கை நிண்டு துண்டெலும்புக்கு அலையுதோ!. :(  அதற்கிடையில் இப்படி ஒரு அபாண்டமா.....? வைரவா பொறுக்கல்ல.. <_<  :blink: 

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு தான் பாஞ்ச் நிற்கின்றார்

உங்களைத் திசை திருப்பிவிட்டு அவர் நன்றாகப் படித்து முன்னேறிவிடுவார் .

 

எச்சரிக்கை  :D  :lol:  :lol:

 

படிப்பதற்கு பணிவு வேண்டும் என்றுதான் எனக்கு முந்திப் படிப்பித்த வாத்திமார் சொன்னவை. படிப்புக்கு அரசியலும் வேண்டுமென்று எச்சரித்த வாத்தியார் நீங்கள்தான். :lol: நீங்கள் வாத்தியாருக்கும் வாத்தியார்... வாத்தியாரே. :wub:  :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் நான் அலையை வெருட்டி வைக்கிறன். வகுப்புக்கு வெளியில நடந்த சண்டைக்குப் பயந்து வகுப்புக்கு வராமல் இருக்கக் கூடாது. உங்களுக்கு சகாராவுக்குப் பக்கத்தில இருக்கவேணும் எண்டாலும் இருங்கோ. ஆனா அவதான் இப்ப வகுப்புக்கே வாறதில்லையே. அதுக்காகக் கோவிச்சுக்கொண்டு பள்ளிக்கூடத்துக்குமட்டும் வராமல் நிக்கக் கூடாது சொல்லிப்போட்டன். போட்டிக்கு ஆள் இருந்தாத்தானே படிக்கலாம்  :lol: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வழக்கு
 

 

தமிழ் மொழியில் எண்ணற்ற சொற்கள் இருக்கின்றன
ஆனால் எல்லாச் சொற்களையும் நாம் எம்  விருப்பத்திற்கேற்றவாறு

விரும்பிய இடங்களில் பயன்படுத்தமுடியாது.
இன்ன இன்ன இடத்தில் இன்ன இன்ன சொற்கள் தான் பயன்படுத்தப்பட வேண்டும்

என்று ஒரு வழக்கு உள்ளது.

 

சில சொற்களை உலக வழக்கிலும்
சில  சொற்களை செய்யுள் வழக்கிலும்
சில சொற்களை இவ்விரண்டு வழக்குகளிலும்
பயன்படுத்த வேண்டும்

 

இவ்வாறு பயன்படுத்தப்படும் சொற்களை எம்முன்னோர்கள்
எவ்வாறு பயன்படுத்தினரோ அவ்வாறு தொடர்ந்தும் பயன்படுத்துவதையே

வழக்கு என்பர்

 

வழக்கு இரு வகைப்படும்
 

1. இயல்பு வழக்கு
2, தகுதி வழக்கு

 

 

இயல்பு வழக்கு

 

ஒவ்வொரு பொருளைக் குறிப்பதற்கும் ஒவ்வொரு சொல்லைக் குறித்து வைத்துள்ளனர் எம்முன்னோர்.
அந்தப் பொருளைக் குறிப்பதற்கு அதற்கென்று குறிக்கப்பட்ட சொல்லைத்தான் வழங்க வேண்டும்

அதாவது எந்தப்பொருளுக்கு  எந்தச் சொல் அமைந்ததோ
அந்தப் பொருளை அந்தச் சொல்லால் அழைப்பதே
இயல்பு வழக்கு எனப்படும்.

 

இயல்பு வழக்கு மூன்று வகைப்படும்.

 

1. இலக்கணம் உடையது.
 

அதாவது இலக்கணப்பிழை எதுவும் இல்லாமல் இலக்கணத்திற்குட்பட்டுப் பிழைகள் இல்லாமல் வருவது.

 

2. இலக்கணப்போலி

 

இலக்கணத்திற்குட்பட்ட இரண்டு சொற்கள் நாளடைவில் மாறி முன் வரவேண்டிய சொல் பின்னும்
பின் வரவேண்டிய சொல் முன்னுமாக வந்திருக்கும்
இலக்கணப் பிழைகள் இருந்தாலும் இலக்கணம் உள்ளது போல முன்னோரால் இவையும் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் இலக்கணப்போலி எனப்படும்.

 

 

இலக்கணம் உடையவை      இலக்கணப்போலி

 

இல்முன்                                     முன்றில்
நகர்ப்புறம்                                    புறநகர்
இல்வாய்                                    வாயில்
வாய்க்கடை                              கடைவாய்
கண்மீ (கண் மீது)                     மீகண் (மீது கண்)

3. மரூஉ

 

சில சொற்கள் எழுத்துக்கள் விடுபட்டு அல்லது எழுத்து அதிகமாகச் சேர்க்கப்பட்டு

அல்லது எழுத்து மாறி  உருமாறி வழங்கப்படும்
அப்படியான சொற்களையே மரூஉ என்பர்.

 

 

சோழநாடு  சோணாடு
கோவன்புத்தூர்(கோயம்புத்தூர்)   கோவை
பூந்தமல்லி    பூனமல்லி
திருநெல்வேலி   நெல்லை

 

தகுதி வழக்கைப்பற்றிப் பின்னர் பார்ப்போம் 
 

  • கருத்துக்கள உறவுகள்

மரூஉ

தமிழ்நாட்டில் திருநெல்வேலி எழுத்து மாறி நெல்லை (நெல் + = நெல் அழகு) என்று அழகாக அழைக்கின்றனர். :wub:

ஈழத்தில் நான் பிறந்த ஊர் திருநெல்வேலி எழுத்து மாறி தின்னவேலி என்று அழைக்கின்றனர். அங்கு ஆட்டுக்கு வேலியில் குழை பறித்ததை தவறாக விளங்கிக்கொண்டனரோ? :o 

ஆண்பாற் பெயர் விகுதிகள்

 

அன், ஆன்,மன்,மான்,ன் என்பனவாகும்.

உதாரணம்

மலையன் , வானத்தான், அதியமான்

 

 

ஏன் ஆண்பாற் பெயர் விகுதிகள் அன், ஆன்,மன்,மான் என்று முடிய வேண்டும்? காரணமின்றி விதிகள் இருக்காதே!! ஏதும் குறிப்பிட்ட காரணம் உண்டா வாத்தியார்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தகுதி வழக்கு

 

 

ஒரு பொருளைக் குறிக்கும் சொல்   மக்கள் பேசுவதற்குத்

தகுதியுடையதாக இருத்தல் பேண்டும்
மரியாதையின் நிமித்தம் நாங்கள் சில சொற்களைப் பாவிப்பதில்லை.

சில சொற்களைப் பேசக் கூடாது என எம் முன்னோர்களும் 

சான்றோர்ககளும் கூறுகின்றார்கள்
 

அவ்வாறு தகுதியற்ற சொற்களைப் பேசாமல் அதற்குப் பதிலாக
அதன் கருத்து மாறாமல் வேறு சொற்களைப் பயன்படுத்தி
அந்தப் பொருளையோ அல்லது செயலையோ குறிப்பிடுதல்
தகுதி வழக்கு எனப்படும்

 

இவையும் மூன்று வகைப்படும்

 

1. இடக்கரடக்கல்
 

இடக்கர் என்பது பெரியோர்கள் முன்னிலையில் பேசத்தகாத சொற்கள் எனப்படும்
அடக்கல் என்பது மறைத்தல் எனப்படும்.

 

இப்படியான பேச்சுக்கள் இடத்திற்கு இடம் வேறுபடலாம்

 

ஒண்டுக்குப் போய்விட்டான்
வளவிற்குப் போகின்றேன்
அம்மா குழந்தைக்கு அடிக் கழுவுகின்றாள்
என்பன சில உதாரணங்கள்

 

2. மங்கலம்
 

மங்கலம் என்பது துக்கமான நிகழ்வுகளையும் மங்கலமாகக் கூறுவது.

 

ஒருவரின் இறப்பை அவர் இறந்து விட்டார் எனக்கூறாமல்
அவர் இறைவனடி சேர்ந்தார் எனவும்
இயற்கை எய்தினார் எனவும் கூறுவது உதாரணங்கள்

 

3. குழூஉக்குறி
 

ஒரு குழுவினர் மற்றவர்களுக்குப் புரியாமல் தங்களுக்குள்ளேயே
விளங்கும் வண்ணம் பேசும் சொற்கள் குழூஉக்குறி எனப்படும்

 

வியாபாரிகள் பொருட்களின் விலைகளைத் தங்களுக்குள்

பேசிக் கொள்வதும் இந்த வகையில் அடங்கும்
சில பொருட்களின் மேல் சில எழுத்துக்களை எழுதியிருப்பார்கள்
அந்த எழுத்து அதன் விலையைக் குறிக்கும் அத்துடன்

எந்தத் தொகைவரை வாடிக்கையாளர்களுக்கு

சலுகை காட்டலாம் எனவும் இருக்கும்
 

அல்லது நாடுகளுக்கிடையிலான போர்களில் வீரர்கள் தங்களுக்கிடையில் 

சில சங்கேத மொழிகளைப் பயன்படுத்துவார்கள் அது எதிரிகளுக்கோ

சாதாரண மக்களுக்கோ விளங்காது.
 

இப்படியான ஒரு குறிப்பிட்ட குழு மட்டும் தங்களுக்குள்

பேசி விளங்கிக்கொள்ளும் சொற்களை குழூஉக்குறி என்பர்.
   

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப காதலன் காதலி, கணவன் மனைவி, நண்பர்கள், மற்றவர்க்கு விளங்காது தமக்குத்தானே பேசிக்கொள்வதும் குழுஉக்குறி இக்குள் அடங்கும்தானே. 

  • கருத்துக்கள உறவுகள்

தகுதி வழக்கு

 

1. இடக்கரடக்கல்

 

இடக்கர் என்பது பெரியோர்கள் முன்னிலையில் பேசத்தகாத சொற்கள் எனப்படும்

 

 

வாத்தியார் உங்களைப்போன்ற பெரியவர்களை இங்கு சிலர் பேசத்தகாத சொற்களால் பேசுவதைத் தாங்கமுடியலில்லை. இவர்களைக் கல்லால், அதுவும் சொறிக்கல்லால் அடிக்கவேண்டும். எனக்கு இடக்கரத்தை விடவும் வலக்கரம் நன்றாக வழங்கும். வலக்கரடக்கல் எங்கே கிடைக்கும். <_< 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூவிடம்

 

இலக்கணத்தில் மூவிடம் என்பது என்ன?

 

 

ஒரு மனிதன் தான் நினைப்பதைத் தானாகவே பேசிக்கொள்வதுண்டு
 

இன்னொருவனுக்கு எதைப்பற்றியாவது எடுத்துக்கூறி

இருவரும்   பேசிக்கொள்வதும் உண்டு

 

இந்த இரண்டு பேரும் மனிதர்களானாலும் சொற்கள் அவர்களிடத்தில் இருந்து

இலக்கணத்தை எழுதியவர்கள் அதை இடம் எனக் கூறினர்.

 

சொல்பவன் இருக்கும் இடம் தன்மை எனவும்
 

கேட்பவன் இருக்கும்  இடம் முன்னிலை எனவும்
 

இவர்கள் இருவரும் பேசிக்கொள்வது இவர்களுக்குள்ளேயே

நின்று விடாது பக்கத்தில் இருப்பவர்களைப்பற்றி இருந்து

அவர்களை நோக்கிப் படர்வதனால் படர்க்கை எனவும்
 

எமது சான்றோர் வகுத்து வைத்துள்ளனர்.
 

இவற்றையே மூவிடம் என்பர் இலக்கணத்தார்.

 

"நான் தம்பியுடன்  பேசியதை நீ கேட்டாய் "

 

இங்கே
 

நான் சொல்பவன் தன்மை
நீ கேட்பவன் முன்னிலை
தம்பி பக்கத்தில் இருப்பவன் பேசப்படுபவன்  படர்க்கை

 

மூவிடத்திற்கும் ஒருமை பன்மை உண்டு

 

யாருக்குத் தெரியும்
 

தன்மையில் யான், நான் என்பவற்றின் பன்மைகள்  எவை ?
 

முன்னிலையில்  நீ என்பதற்கு உங்களுக்குத்  தெரிந்த பன்மைகள் எவை ? 
 

 

அறிந்தவர்கள் கூறுங்கள் பார்க்கலாம் :D  :D

 
 

வாத்தியார், வாத்தியார் எங்களுக்கு ஒரு டவுட்டு. இதை கிளியர் பண்ணுங்கோ. டவுட்டு இந்த லிங்கில் இருக்கு வாத்தியார். ஓடிப்போய் பாருங்கோ!!!!!

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=131498&p=953540

  • கருத்துக்கள உறவுகள்

மூவிடம்

 

தன்மையில் யான், நான் என்பவற்றின் பன்மைகள்  எவை ?

 

முன்னிலையில்  நீ என்பதற்கு உங்களுக்குத்  தெரிந்த பன்மைகள் எவை ? 

 

அறிந்தவர்கள் கூறுங்கள் பார்க்கலாம் :D  :D

 

 

வாத்தியார், வாத்தியார் எங்களுக்கு ஒரு டவுட்டு. இதை கிளியர் பண்ணுங்கோ. டவுட்டு இந்த லிங்கில் இருக்கு வாத்தியார். ஓடிப்போய் பாருங்கோ!!!!!

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=131498&p=953540

 

ஷ்ஷ்ஷ்ஷ்.......அலைமகள், வாத்தியார் கேட்டதற்குப் பதில் சொல்வதே மாணவன், மாணவி அதாவது மாணவர்கள், மாணவியர்களுக்கு அழகு. என்னைப் பாருங்கள்.

 

ஒருமை                          பன்மை

 

யான்                                   யாம்

 

நான்                                    நாம், நாங்கள்

 

நீ                                             நீவிர், நீங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ என்ற முன்னிலை ஒருமைக்கு நீர்,நீவிர், நீயிர், எல்லீர்,
நீங்கள்
( இது பிந்திய வழமை நீ + கள்  = நீங்கள் )
என்பன பன்மையாக இருக்கின்றன.

 

பாஞ்ச் பாடத்தில் வலு கவனமாக இருக்கின்றார். :D 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.